Stories that touch hearts

Home  /  26. கெளரி மது (பச்சோந்தி பாவனா)  /  Chapter 3

CHAPTER 3

பாவனா – 3

By Gowri Madhu · October 10, 2026

0

ஹலோ குகா ஏண்டா வரல நீவருன்னு தாலிகட்டுரவரைக்தும் காத்திருநீதேன் தெரியுமா..? ஏன் வரல
எல்லார் முன்னாடியும் காதலிக்குறேன்னு ஒருவார்த்தை சொன்னா நான் உன்பககம் நிக்கமாட்டேனா ஏண்டா வரல ..
இவன்கூட என்னால வாழமுடியாது ..
தயவு செஞ்சு என்னை கூட்டிட்டுபோயிரு
பாவனா அழுதுவடிக்க ..

எல்லாம் முடிஞ்சுருச்சு ..
இன்னொருத்தன் பொண்டாட்டி ஆகிட்ட உன்னை நான் கூட்டிட்டுபோனா எல்லாரும் காறி துப்ப மாட்டாங்களா..
என் அப்பா அம்மா தூக்குமாட்டி செத்துருவாங்க  குகன் கூற.

” இந்த பயம் இருந்துருந்தா நீ காதலிச்சுருக்ககூடாதுல ..
அன்னிக்கி எனன்டா சொன்ன .? எ
உனக்காக வருவேன் யாருக்கும் விட்டு தரமாட்டேன்  சொன்னியா இல்லையா.?
இப்பொ என்னடா சீன் போடுற…
குடும்பம் முக்கியம்னு நினைச்சுருநீதா அவங்களுக்கு புடிச்சபொண்ணா பாத்து கட்டிருக்கனும் எனனை ஏண்டா காதலிச்ச என் மனசை ஏண்டா கெடுத்த நீ ஈசியா மனசைமாத்திகிட்ட அதுமாதிரி என்னால்  முடியலயே இயலாமையாக அழுதவளை பார்க்க பாவமாகவே இருந்தது..

” பாவனா முடிஞ்சதை மாத்தமுடியாது
நடக்கபோற தவறை மாத்திக்கலாம்
உன்  மனசைமாத்திக்கோ இதைத்தவிர வேறு எதுவும் சொல்லமுடியாது சாரி பாவனா இனிமே எனக்கு போன்பன்னாத குகன் சாதாரணம் கூற பாவனாவுக்குதான் அழுகை தாக்கவில்லை…
இரண்டு மூன்றுநாள் சோகமாகதிரிந்தாள் ..
அமரனும் மனைவிக்காக அங்குமிங்கும் நடந்தான் ….
போனும் கையுமாக சுற்றிய மகனைபார்த்த  பெற்றவர்கள் அவள் போன்போடுகிறாளோ என்று அக்கம்பக்கம் இருந்தவர்களிடம்  புலம்ப அது கணண்துசனின் காதுக்கும்போக

” மறுவீடு வந்தாச்சு எல்லாம் முடிச்சாச்சு கிளம்புமா நீ ஊருக்குபோ நாங்கஅடிக்கடி வர்றோம் கூறி வலுக்கட்டாயமாக அவளை அமரனோடு அனுப்பினார் …
பிறந்தவீடுகூட எனக்கு சொந்தமில்லயா நாயை துரத்துறமாதிரி துரத்திட்டு இருக்காங்க அழுதபடிதான் சென்றாள்..

” பாவனா நாய திருப்பூர்போகனும் அங்கதான் எனக்கு வேலை அடிக்கடி இங்க வரமுடியாது
அதனால் உன்னையும் சேத்து கூட்டிட்டுபோறேன் வீடு எல்லாம் பார்த்தாச்சு அமரன் கூற
இவளுக்கு தலையாட்டுவதைதவிர வேறுவழியில்லை ..
பொறுப்பில்லாத பொறம்போக்கை லவ்பன்னி என் வாழ்க்கை நாசமாகிருச்சு இதுதான் என் வாழ்க்கைனை ஆனபிறகு ஏத்துக்குறதைதவிர வேற‌வழியில்ல
ஆனா என்னை ஏமாத்துனவனை சும்மாவிடமாட்டேன்  சூளுரைத்துகொணடு கணவனோடு திருப்பூர் போனாள்‌..
ஒரு பனியன் கம்பெனியில் வேலைசெய்கிறான்
இருவருக்கும் போதுமான சம்பளம் கேட்பதெல்லாம் வாங்கிகொடுத்தான் வெளியே சுற்றிப்பார்க்க அழைத்துபோனான் ..
கொஞ்சம் கொஞ்சமாக அவன் பக்கம் திரும்பினாள் ..
இயல்பாக ஏற்றுகொண்டு அவனோடு வாழ ஆரம்பித்தாள் ….
இளம்ஜோடிகள் தனிமையில் உல்லாசமாக உலா வந்தது‌..
தன்னை திருப்திபடுத்தும் மனையை இன்னும் இன்னும் பாசமாக பார்த்துகொண்டான்…
சக்தியின்றி சிவனில்லை என்பதுபோல் பாவனா இன்றி அவனால் ஒருநாளும் இருக்கமுடியாதென்ற நிலைக்கு வந்துவிட்டான் ….

” மூன்று மாதத்தில் வாந்தாயெடுத்தாள் .
ஆஹா பொண்ணு சந்தோஷமா இருக்கா
சேந்துவாழ ஆரம்பிச்சுட்டா பெற்றவர் வளர்த்தவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம் ..
அவளுக்கு பிடித்த அத்தனையும் பார்த்துபார்த்து செய்தனர் ..
வளைகாப்பு போட்டு அழைத்துவந்தனர்
மறுநாளே கணவனும் வந்துவிட்டான் ..
இருவரும் ஒற்றுமையோடு தான் இருந்தனர் …
வாரத்தில் இரண்டுநாள் தங்கிவிட்டுபோவான்..
அடிக்கடி மாமாவின் போனில் பேசிகொள்வான ..
சாதரண கணவன்மனைவியாக வாழ ஆரம்பித்தனர் ..
குழந்தையும் பிறந்துவிட்டது  இரண்டுமாதம் பெற்றவர்கள் பார்த்துக்கொள்ள மூன்றாம் மாதம் அமரன் அழைத்துபோனான்
பொண்டாட்டி இல்லாமல் அவனால் இருககமுடியவிவ்லை ..
உடலுறவுக்காக இல்லை
அவள் இல்லாமல் வீடே களையிழந்துபோய் இருக்கும்..
வீட்டில் சமைப்பதைதவிர அவள் எந்த வேலையும் செய்வதில்லை..
எல்லா வேலையும் அமரன் தான் செய்வான் ..
தங்கதட்டில் தாங்கும் கணவனை ஆசையோடு பார்ப்பாள் …
எல்லாம் சிலகாலம் என்பதுபோல் அயரனின் வாழ்க்கையும் அதேகாலமென விதி மொபைல் முலம் உணரவைந்தது …

” தான் சம்பாதித்து சேர்த்துவைத்த பணத்தில் அவள் மொபைல் கேட்டதும் வாங்கி கொடுத்துவிட்டான்..
தன் மனைவி தன்னைத் விர யாரிடம் பேசபோகிறாள் என்ற நினைப்புதான்..
மொபைல் வந்ததுல் இருந்து அவள்நடவடிக்கை மாறிவிட்டது பேஸ்புக் இன்ஸ்டா என அவர் போட்டோக்கள் பேசும் வீடியோக்கள் அத்தனையும் போஸ்ட் செய்தாள்..
ஆரம்பத்திலேயே அதட்டிவைத்திருந்தால் அவள் தப்பான வழிக்கு போயிருக்க மாட்டாள் ..
வெறும் போஸ்ட்தானே இதில் என்னஇறக்கிப்போகிறததென அசால்ட்டாக விட்டுவிட்டான் ..

” அமரனுக்கு சோசியல் மீடியாக்களோடு  எந்த பழக்கமும் அவனுக்கு கிடையாது அதனாலே அவனுக்கு எதுவும்தெரியவில்லை போல..
அவள் போடும் போஸ்டுகள் அதற்குவரும் லைக் கமெண்ட் அத்தனையும் அவனிடம் காட்டிசந்தோஷப்படுவாள் ..
அமரன் படிக்காதவன் எல்லாம் இல்லை பள்ளிபடிப்பு முடித்திருக்கிறான்..
சிறுவயதிலிருந்தே சோசியல்மீடியாக்கலில்  சேராததால் அதில் இருக்கும் ஆபத்துகளை அவனால் புரிந்துகொள்ளமுடியவில்லை

” பாவனா குழந்தை அழுத்திட்டு இருக்கு என்ன பண்ணிட்டு இருக்க ..
மொபைல் பார்த்ததெல்லாம் போதும்
புள்ளய கவனி அதட்டலாக கூறியவன் மககனை துக்கி கொஞ்ச..
இன்ஸ்டாவில் தன்னை ஃபாலோசெய்த ஒருவனிடம் கடலை போட்டுக்கொண்டிருந்தாள் பாவனா..
எங்கே அவன் பார்த்து திட்டிவிடுவானோ என்று பயத்தில் நிறுத்திவிட்டு குழந்தையை பார்த்துக்கொண்டாள்  அவன் வேலைக்குபோனதும் பேண்ட்சட்டை அணிந்து சிங்கிள் பெண்ணாக போஸ்ட்போடுவாள்..
அவரைப பற்றிய விவரம் தெரியாத பலஆண்களும் அவளைவிரும்புவதாகவும் சந்திக்கவிருப்பமுள்ளதாகவும் மெசேஜ் செய்வார்கள்…
அதில் அவளுக்கு அவ்வளவு பெருமை கெத்தாக தன்னை  ராணிபோல் காட்டிக்கொள்வாள்…
திருப்பூரை ஒட்டி உள்ள பகுதிகளில் இருக்கும் ஆண்கள் என்றல்  ஏதாவது ஒரு இடத்திற்கு வரசொல்லி அவனைபோய் பார்த்துவிட்டு வருவாள் ..
இது அத்தனையும் கணவனுக்கு தெரியாமல் இரண்டுமாதம் தொடர்ந்தது

” ஏப்பா அமரு சொந்தஊர் மாதிரி திருப்பூரை நெனச்சிட்டு இருக்கியா..? எதுக்குப்பா பொண்டாட்டிய அனுப்பிட்டுஇருக்க…
கல்யாணமான பொண்ணு புடவைகட்டிட்டு போலாம்ல்ல..
ஆம்பளமாதிரி பேண்ட் சட்டை போட்டுட்டு போயிருக்கு..
என்னப்பா இதெல்லாம் பழக்கம் இதெல்லாம் கண்டிச்சுவைக்க மாட்டியா நான் பாக்கணும்னு பாக்கல என்பொண்டாட்டி ஓட தங்கச்சி அவபுருஷனும் பக்கத்தூர்லதான் வேலை செய்றாங்க சரி பார்த்துட்டு வரலாம்னு போனேன் அப்போதான் உன்பொண்டாட்டி  பேண்ட்சட்டைபோட்டு   தலை முடியெல்லாம் விரிச்சு விட்டுட்டு யார் கூடயோ பேசிட்டு இருந்துச்சு குழந்தையும் பக்கத்துல இல்லை எங்கவிட்டுட்டு வந்துச்சா தெரியல இதெல்லாம் தப்பா படுது  கண்டிச்சுவைப்பா  பக்கத்து வீட்டுக்காரர் கூறிவிட்டு போனபிறகு தான் சம்பாதித்து நிலைமையை  உணர்ந்தான்…..
வேலையில் கவனம் செலுத்தமுடியவில்லை நேரடியாக அவளிடம் சொல்லாமலே வீட்டுக்குவந்துவிட்டான்  பக்கத்து வீட்டில்தான் குழந்தையை கொடுத்துவிட்டு போயிருந்தாள்..

” அஞ்சுமாசம் கைக்குழந்தைய வச்சிட்டு உன் பொண்டாட்டி தினமும் போண்ட்சட்டை போட்டுட்டு அப்படி என்னதான் புடுங்கபோறாளாம்..
பெரிய பெரிய  கம்பெனியில வேலைசெய்ற பொண்ணுங்க கூட உன்பொண்டாட்டி மாதிரி சீன்போடமாட்டாங்க ..
நீ ரொம்ப இடம்குடுக்குறபோல ..
என்னமோப்பா நாடுகெட்டுபோயிருக்கு
இந்த காலத்து  பொண்ணுங்கல்லாம் ரொம்ப மோசமா போயிட்டுஇருக்குதுங்க ..
அதையெல்லாம் பார்த்து பயந்துட்டுதான் நான் என் மகள்மகனை   அடிச்சு கண்டிச்சு வளர்த்துட்டு இருக்கேன் .
பச்சபுள்ள எப்ப பார்த்தாலும் அழுதுட்டு இருக்கு பாத்துக்கோ ..
அடுத்த தடவை எல்லாம் என்கிட்ட விட்டுட்டுபோன நான் தூக்கமாட்டேன்
பாத்துக்கோ எதிர் வீட்டு அக்கா குழந்தையை கொடுத்துவிட்டு போக கையில் குழந்தையோடு நின்ற அமரன் அவளுக்கு ரொம்ப இடம்கொடுத்துட்டோம் போல அவளைநம்பி சுதந்திரம் கொடுத்தது ரொம்ப தப்பா போயிருச்சு யோசித்தவன் அவளுக்கு போன்போட அவளோ  வீட்டில் இருப்பதாகத்தான் கூறினாள …

” வந்தேன் செருப்பால அடிப்பேன்..
நான் வீட்லதான் இருக்கேன் பக்கத்துவீட்டுல குழந்தையை குடுத்துட்டு எங்கபோய் டிங்கிட்டுஇருக்க நீ ..
இன்னும்  அஞ்சுநிமிசத்துல நீ வீட்லஇல்லாட்டி  எங்க இருக்கியோ அங்கவந்து செருப்பால அடிப்பேன்  அமரன் கோபமாக கத்த அடுத்த நிமிடம் வீட்டில் இருந்தாள் ..

” ஜீன்ஸ்ம் கருப்பு டீசர்ட்டும் அணிந்து தலைமுடியை ப்ரீஹேராக விட்டிருந்தாள்
வாசலில் அமர்ந்திருந்தவனை பார்த்தவள் பயத்தோடு வந்து கதவை திறக்க உள்ளே போனவன் தொட்டிலில் குழந்தையை போட்டுவிட்டு அவளை பார்த்தான் ..

” உனக்கு சுடிதார் செட்தானே எடுத்தோம்
இந்த ஜீன்ஸ் எப்போ எடுத்தது கைகட்டியவாறு கேட்க ..

” இல்ல….அது… நான்தான் எடுத்தேன் தயக்கமாக கூற …
நம்மளுக்கு குழந்தை வந்துருச்சு வீடுவாசல் இல்ல ..
வீடு எடுக்கணும் அந்த நினைப்புமனசுலஇருக்கா இல்லையா .?
உன்கிட்ட பணம் கொடுத்து வச்சது எல்லாம்சேர்த்துவச்சு கொஞ்சம்கொஞ்சமா வீடு கட்டலாம்னுநெனச்சா நீஊர்சுத்திஇருக்கியா ..?
உன்னை யார் இப்படி டிரஸ் பண்ணி ஊர் சுத்தசொன்னது யார்கூட போன..
வீட்ல போரடிச்சா பக்கத்துவீட்டுஅக்கா கம்பெனி துணிவாங்கி வீட்லஇருந்தபடியே வேலை செஞ்சு கொடுக்கிறாங்க அதுமாதிரி வேலைகத்துக்கலாமே அதைவிட்டுட்டு ஊர்சுத்திட்டு இருக்க ..
யார் கூட போன அமரன் கேட்க ..

” என் கேள்வி இது..?
என்னோட டிரஸ் நான் எப்படிவேணாலும் போடுவேன் அதை யாரும் கேள்வி கேட்கக்கூடாது ..
என்னமோ கண்டவன்கூட  ஊர்சுத்திட்டுவந்த மாதிரி சந்தேகப்பட்டு பேசிட்டு இருக்க நீ பாவனா கோபபட பளாரென்று அறைந்துவிட்டான்..

” உன் மேலவச்ச பாசத்துக்காக நம்மகுடும்பத்தை நல்லா பார்த்துப்பானு நெனச்சு  சம்பாரிச்சுகொடுத்தா இஷ்டத்துக்கு கண்டகழுதையும் வாங்கிபோட்டுட்டு கண்டவன்கூட  உனக்கு என்னடிபேச்சு..
நீ உன்னோட நடத்தைய பார்த்தா யாராஇருந்தாலும் சந்தேகப்படதான் செய்வாங்க ..
வீட்டுக்கு வாடகை கொடுக்கணும், தண்ணி கேன்விலை ஏறிபோயிருச்சு மண்ணெனையும் வாங்கணும் இல்லாட்டி ஸ்டவ் யூஸ் பண்ணமுடியாது
மண்ணெண்ணெய் விலையும்  அதிகமாயிருச்சு..
சிலிண்டர் வேற வாங்கணும்
இன்னும் என்னென்ன செலவு இருக்கு
நான் ஒருத்தன் பேசுவது எல்லாத்துக்கும் கொஞ்சம்கொஞ்சமா செலவு செஞ்சு உன்னை எந்த  குறையில்லாம பார்த்துக்கிட்ட நீ சேத்துவச்ச எல்லாத்தையும் அள்ளிட்டுபோய் சுத்திட்டுவருவியா..?
இதைக்கேட்ட சந்தேகப்படுறேனு சத்தம் போடுறியா..?
போடி போய் தெருவுல  நின்னு இந்தவார்த்தையை சொல்லு அவங்கங்க உன்னைபார்த்த அத்தனைபேரும் காறிதுப்பிட்டுபோவாங்க ..
பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ சீன்வேற போட்டுட்டு இருக்கியா..? மறுபடியும் அறைவிழுந்தது .

” ஒழுங்கா  சம்பாதிச்சு கொடுக்கிறதை  சேர்த்துவச்சு அனுசரிச்சு வாழ்றதாஇருந்தா வாழ் இல்லாட்டி உங்கப்பன் வீட்டுக்கு போயிரு ..
கோபமாக கூறிவிட்டு போனவன் அதன்பின்  அவள் கையில் காசுகொடுப்பதை  நிறுத்திஸிட்டான்
வீட்டுக்கு குழந்தைக்கு தேவையான அத்தனைசெலவுகளையும் அவனே பார்த்துக்கொண்டான் …
எந்த குறையும் வைக்கவில்லை நல்லபடியாக சிக்கனமாக செலவுசெய்து பார்த்துக் கொண்டான் ..
மொபைலுக்கு ரீசார்ஜ் செய்யவில்லை மொபைலே தேவையில்லை வேற வேவையிருந்தா  பாரு கூறிவிட்டு செல்ல
கையில் மொபைல் இல்லாமல் அவளுக்கு பைத்தியம் பிடிப்பதுபோல் இருந்தது…

இவன்கல்யாணம் பண்ணிட்டு நல்லாபார்த்துப்பான் நெனச்சா ரொம்ப மிரட்டிட்டு கொடுமைப்படுத்திட்டுஇருக்கான் இவன்கூட எப்படி வாழ்றது..?
கையில காசு கொடுக்கமாட்றான்  இந்த வாழ்க்கை வாழ்றதுக்கு விட்டுட்டுபோய்
வேலைசெஞ்சு சந்தோஷமாவாழலாமே .
பள்ளிக்கூடம் படிச்சிட்டு இந்த ஆட்டம்ஆடிட்டு இருக்கான்‌ நான் காலேஜ்முடிச்சவ  எனக்கு எங்கெங்க வேலை கிடைக்கும்..
இனிமே இவன் வேணாம் முடிவெடுத்தவள் அவனிடம் சொல்லிக்கொள்ளாமல் காதிலிருக்கும் கம்மலை விற்று அப்பாவீட்டுக்கு
கிளம்பினாள் …

கணவன் கொடுமைபடுத்தி அடிப்பதாக அப்பாவிடம் கூற
கண்ணதாசனோ குடித்துவிட்டு மருமகனிடம் சண்டைக்குபோனார்….

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!