கண்ணதாசன் கலைவாணி கண்ணதாசனின் அண்ணன் கருணாகரன் மனைவி லட்சுமி
பாவனா பெரியம்மாவிடம் தன் காதலைகூறி திருமணத்தை நிறுத்தசொல்லி அழுதாள் …
” நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை வளர்த்து படிக்கவச்சோம் .
ஆனால் நீ என்ன காரியம் பண்ணிட்டுவந்திருக்க..
நீ செஞ்ச காரியத்தால இத்தனைவருஷ வளர்ப்பை ஒரு நிமிஷத்துல அசிங்கப்படுத்திட்டான்ல உன் அப்பா ..
நீ பெத்தபொண்ணு இருந்தா இப்படி ஊருசுத்தவிடுவியானு கேட்கிறான் நாக்கை புடிங்கிட்டு சாகலாம்போலஇருக்கு ..
நீ அவங்களைமட்டும் இல்ல எங்களையும் சேர்த்துதான் அசிங்கப்படுத்திருக்க …
பெத்தபிள்ளைய தவிர மத்தபிள்ளைங்களை எவ்வளவு தூக்கிவளர்த்தாலும் ஒரு எல்லைக்குமேல உரிமைகொண்டாடகூடாதுன்னு இப்போதான் எங்களுக்கு புரிஞ்சுச்சு …
இதுவே உன்அப்பா கிட்ட வளர்ந்திருந்தா இப்படி காதல் கத்திரிக்காயனு வெளியேபோய் சுத்துறதுக்கு தைரியம்வந்திருக்குமா. ?
வளர்த்தவளா இருக்கபோய் உன்இஷ்டத்துக்கு சுத்திருக்க .
எங்களை கிள்ளுகீரையா நினைச்சுட்டல்ல பெரியம்மா கண்ணீர்வடிக்க அவளுக்கும் அழுகைதான் வந்தது….
” உண்மையிலேயே பெரியம்மா பெரியப்பாமேல் பயமெல்லாம் இல்லை சமாளித்துவிடலாம் என்று நினைத்தே தைரியமாக ஒரு சுற்றினாள்..
இதுவே அப்பனிடம் இருந்திருந்தால் பயந்துபோகாமல் இருந்திருப்பாள் …
ஆதரவுக்கு இருந்த பெரியம்மா பெரியப்பாவும் கைவிட்டனர்….
அவள் கையிலிருந்த மொபைல் பிடுங்கபட்டது…
மொபைலை புடிக்கினாலும் வேறுயாரிடமோ மொபைல்வாங்கி அவனுக்கும் தகவல் அனுப்பிவிட்டாள்
” காதலர் சீக்கிரம் வருவான் ஓடிபோகலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தாள்..
வீட்டுக்கு வரும் போகும் யாரிடம் அவளிடம் மொபைலை கொடுக்கவிடாமல் பாதுகாப்பாகவே கவனித்துக்கொண்டனர்…
இதோ விடிந்தால் திருமணம் அவளும் அழுதுஅழுது பார்த்தாள் யாரும் மனமிறங்கவில்லை குகனும்வரவில்லை அவளுக்கு வாழ்க்கையே வெறுத்துபோனது …..
” மணவறையில் அமரன் அமர்ந்திருந்தான்..
பெயருக்கு தகுந்ததுபோல் அமைதியானவனாகவே இருந்தான் அவன் அப்பா இல்லாதவன் அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட்டதாலேயே அவன் அம்மா பள்ளியில் சமையல்வேலை செய்து மூன்றுபிள்ளைகளையும் வளர்த்தார் மூன்று பிள்ளைகளும் குணத்தில்சிறந்தவர்கள் தான் அமைதியானவனாக அப்பாவியாக இருக்கும் அமரனை அவளுக்கு பிடிக்கவில்லை ….
இதற்குமேல் என்ன செய்வதென்றே அவளுக்கும் தெரியவில்லை கடனேஎனறு அமர்ந்திருக்க அமரரன அவள் கழுத்தில் தாலியும் கட்டிவிட்டான் ..
அவன் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு அவளுக்கு தாலி கட்டியதுதான்..
” பொறுக்கி நாய் இனனொருத்தனை காதலிக்கிறேன் தெரிஞ்சும் கூட எப்படிஇவனால தாலி கட்டமுடிஞ்சது எல்லாரும் சேர்ந்து என் வாழ்க்கைய கெடுத்துட்டாங்க..
இவங்களுக்கு நான் உண்மையாஇருக்கனுமா..!.
கண்டிப்பா நடக்காது…
திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டுக்குபோக வாழ்க்கையே வெறுத்துபோனது…
” ஒரே அறைதான் அதிலேயே சமையலறை பூஜையறை படுக்கையென ஓட்டுவீட்டுக்குள் ஒரு அறைக்குள் எல்லாம் அடங்கியிருந்தது
பாவனாவுக்கு பார்ப்பதற்கு பிடிக்கவில்லை…..
” ஐயோ கடவுளே இந்த ஓட்டு வீட்ட்உலதான் குடித்தனம் நடத்தனுமா என்று வெறுப்பாக இருந்தது…
எதிலும் இவனுக்கு தம்பி வேறுஇருக்கிறான் அடிக்கடி வருவான் போவான் இந்த வீட்டில் எப்படி இருக்குறது ..
இவங்களுக்கு கொஞ்சம் கூட அறிவேஇல்லை ..
புதுவீட்டை வகட்டிட்டு அதுக்கப்புறம் கல்யாணத்தைவச்சுக்க என்னகேடுவந்துச்சு..
என்னை பெத்த குடிகாரனும் தொல்லைதொலஞ்சுதுனு தூக்கியறிஞ்சுட்டாரு நினைக்கநினைக்க வெறுப்புதான் வந்தது ..
அந்த சின்னஞ்சிறிய ஓட்டுவீட்டில் இருக்குறதுக்கு இப்படியே ஓடிபோலாமா என்றுதான் நினைத்தால் ஆனால் தைரியம்தான் வருவேனா என்று அடம்பிடித்தது..
இவன்கூட இருக்கிறதுக்கு பேசாம தனியாவே இருந்திருக்கலாம்..
ஒரு வீடு கட்ட துப்பில்ல இவனுக்கு கல்யாணம் ஒரு கேடு.
தன் வீட்டில் கொஞ்சமாவது வசதியோடுஇருந்தது ..
தன் வீட்டை ஒப்பிடுகையில் இந்தவீடு தீப்பெட்டி சைஸ்தான்..
தன் வீடு வசதியான வீடாக அவளுக்குதோன்றியது …
ஆனால் அதை அவள் அப்பா பெரியப்பா சித்தப்பா யாரும் சொந்தமாககட்டவில்லை…
தாத்தா பாட்டி மகன்களுக்காக கட்டிக்கொடுத்தது என்பதை அறியாமல்போனாள்…
” திருமணம் முடிந்து சொந்த பந்தங்கள் கிளம்ப என்னையும் கூட்டிட்டுபோங்களேன் உள்மனம்அழுதுகெஞ்சியது.
திருமண வீடு என்பதால் சொந்தங்கள் வருவதும் போதுமாக இருக்க மாப்பிள்ளையின் சித்தப்பா வீட்டில் முதலிரவுக்காக ஓர்அறைஒதுக்கப்பட்டது இவர்கள் வீட்டுக்கு பின்பக்கம்தான் அந்த அறையும் இருக்க வசதியாகிபோனது …
ஆனால் அவளுக்குசுத்தமாகபிடிக்கவில்லை அவனை முறைத்துக்கொண்டு முகத்தை திருப்பிகொண்டு படுத்துவிட்டாள்…
மறுநாள் காலையில் மறுவீடுபோகவெண்டுமென எழுந்தவள் பிறந்தவீட்டுக்குவந்தபிறகு தான் நிம்மதியாக இருந்தது…
எப்போதும் போல் பெரியம்மா வீட்டில்தான் இருந்தாள்..
அம்மா ப்ளீஸ்மா அங்க போகசொல்லாதிங்க ..
எனக்கு அங்க இருக்கவே பிடிக்கல அவனபார்த்தாலே புடிக்கல நம்மவீட்டிலேயே நான் இருக்கேன் என்னைஅனுப்பாதீங்க அழுது வடித்தாள்
” இதோ பாருமா கல்யாணம் ஆயிட்டா என்ன பொண்ணுங்களும் பிறந்தவீட்டைவிட்டுட்டு இன்னொருவீட்டுக்கு போய்தான் ஆகனும் ..
உன்னை மாதிரி நானும் பிறந்தவீடு முக்கியம்னு நினைச்சிருந்தா இப்போ உங்ப்பா கூட இந்த வீட்டில் உனக்கு அம்மாவா இருந்திருக்க மாட்டேன் அம்மா சொல்றதை கேளுடா..
விருப்பமில்லாம பாத்தாதான் பிடிக்காது அவனை விருப்பத்தோட பாரு கண்டிப்பா உனக்கு பிடிக்கும் ..
அவன் ரொம்ப நல்லவன் அதனால்தான் நானும் அமைதியா இருந்தேன் ..
இனி பிறந்தவீட்டை மறந்துவிட்டு இன்னொரு வீட்டில் புருஷன்புள்ளைங்கன்னு வாழ்ந்துதான் ஆகணும் …
அமரன் ரொம்ப நல்ல பையன்
எதையும் நினைக்காம சந்தோஷமா போயிட்டு வா…
நீங்க ரெண்டுபேரும் சந்தோஷமா சேர்ந்துவாழ்ந்தாதான் அடிக்கடி இந்தபக்கம் உங்கப்பா உன்னை கூட்டிட்டு வரசொல்லுவார்…
இல்லாட்டி அந்த ஊரைவிட்டு வெளியேவரமுடியாது.
கஷ்டம் நஷ்டம் எது வந்தாலும் நாங்கஇருக்கோம் எங்ககிட்ட சொல்லு மறந்தும்கூட அடுத்தவங்ககிட்ட உங்களோட அந்தரங்கத்தை சொல்லாத உன் அத்தை புருஷனை பத்தி சொல்லாத லட்சுமி கூற மண்டையைமட்டும் ஆட்டி வைத்தாள்
” அமர் மனைவி எந்த வீட்டில் இருக்கிறாளோ அங்குதான் வந்தான் பெரியஅத்தையும் மாமாவும் மருமகனே நல்லவிதமாகவே கவனித்துக்கொண்டனர் …
விதவிதமாக சமைத்துபோட்டனர் மனநிறையோடு மகிழ்ச்சியாக சாப்பிட்டான்.
அமரனின் தாய்மாமா அத்தை அல்லவா
தயக்கமெல்லாம் இல்லை ..
பாவனாவுக்குதான் சாப்பாடுஇறங்கவில்லை…
அமன் தன்னை இருக்கசொல்லிவிட்டு அவன் ஊருக்குபோவான் என்று நினைத்தாள் …
குகன் ஊருக்கு வந்திருப்பானா .? என்னோட கல்யாண விஷயம் அவனுக்கு தெரிஞ்சிருக்குமா.? என்னைதேடி ஏன் வரல …?
ஒருவேளை போன்பன்றப்போ வேற யாராவது மாத்தி எடுத்துருப்பாங்களோ.?
என்னை தேடுவானோ..?
அவன் என்ன தேடுறத இருந்தா யார்என்ன சொன்னாலும் நமக்கு என்ன அவன்கூடபோய் புடிச்சமாதிரி புடிச்சவாழ்க்கையை ஏத்துக்கிட்டு சந்தோஷமாதான் இருக்கணும் ..
பிடிக்காத இவன்கூட வாழகூடாது என்று நினைத்தவள் எப்படியும் காலையிலிருந்து அவன் இருக்கிறானா என்று பார்த்து விட வேண்டும் நினைத்தாள் ……
ஆனால் அமரன் அன்று இரவு அவளோடுதான் தங்கினான் ..
இருவருக்கும் தனியறை வசதியாகவே இருந்தது ..
அமரன் ஆசையாக அவளை பார்க்க அவளோ எரிச்சலாக பார்த்துவைத்தாள் ..
” பாவனா அவன் நல்லவன் இல்லையாம் அவனை நம்பி குடுத்தா பொண்ணு வாழ்க்கை நாசமாகிரும்னு மாமா ரொம்ப கவலையாசொன்னாரு
வேற வழியில்லாம ஏத்துகிட்டேன் ..
நல்லதோ கெட்டதோ நம்ம ரெண்டுபேரையும் விதி சேத்துருச்சு ..
பிடிக்குதோ இல்லயோ சேந்துவாழந்துதான் ஆகனும்
அவள் கைபிடிக்க..
” இதப்பாரு உனக்கு வேணும்னா இது விருப்பப்பட்ட வாழ்க்கையா இருக்கலாம் எனக்கு அப்படி இல்லை..
நிஜமாவே உன்னை எனக்கு பிடிக்கல சின்ன வயசிலருந்து பேசிபழகுனதால அத்தை மகன்ங்குற மரியாதை இருக்கு மத்தபடி உன்னை புருஷனா என்னாலமுடியல..
உனக்கு வேற யாரையாவது புடிச்சிருந்தா தாராளமா கல்யாணம் பண்ணிக்கோ கண்டிப்பா நான் குறுக்கநிக்கமாட்டேன்..
என்னை எந்த தொல்லையும் பண்ணாத சத்தியமா எனக்கு புடிக்கல பாவனா முகத்திலடிப்பதுபோல் கூறிவிட
அமரன் மனம் உடைந்தது..
எழுந்து வெளியேறிவிட்டான்….
இரவுமுழுவதும் அவன்வீட்டுக்குவரவில்லை அவன் ஊருக்கு போயிட்டான்போல போய்தொலையட்டும் நிம்மதியாக படுத்தாள் ..
மறுநாள் எழுந்ததும் அகக்ம்பக்கத்து திருமணமானவர்கள் பாவனாவை கூட்ட்டிகொண்டு மந்தைபக்க்ம் செல்ல
நடக்கும்போதே அவள் திருமண இரவுகளை பற்றி கேட்க …
” வாழ்க்கையே வெறுத்துபோச்சு புகுந்தவீடு எப்படி இருக்கனும் ..
புருஷன் எப்படி இருக்கனும்னு எவ்வளவு கனவுகண்டுவச்சேன் தெரியுமா..?
எல்லாம் நாசமாபோச்சு அவனை சுத்தமா புடிக்கல..அழுதவாறே கூற..
” அடிப்பாவி என்னடி இது அவன் உன் அக்தைமகன்டி..
சின்னவயசுலருந்தே பழக்கமானவன் தங்கமான பையன் தெரியுமா..
அவனோட இடத்துலே வேற எவனாவது இருந்துருந்தா உன்னை குத்திகாட்டிபேசி சந்தேகப்பட்டு நாலு அறைவிட்ருப்பான் ..
ஆனா அமரு அப்படிபன்னல உன் மனசுக்கு விருப்பத்துக்கு மதிப்புகுடுத்து விலகிருக்கான் ..
காதலிச்ச எல்லாருக்கும் அந்தவாழ்க்கை கிடைககும்ங்குறது தப்பான எண்ணம் ..
நம்ம யாரை விரும்புனாலும் நம்மளோட பயணம் யார்கூடனு ஆண்டவன் முடிச்சுபோட்ருக்கோ அவங்களோட தாலிதான் கழுத்துல ஏறும் அதுதான் நம்மளோட வாழ்க்கை…
நாங்களும் உன்னைமாதிரி மனசுல ஒருத்தனை நினைச்சுட்டு சேரமுடியாம வந்து தாலிகட்டுனவங்ககூட வாழ்ந்துட்டு இருக்கோம் ..
நிதர்சனத்தை உணர்ந்து வாழபழகிக்கோ..
புதுபுருஷன் குழைஞ்ச மண்ணுமாதிரி ஆரம்பததுலயே நம்மளுக்கு ஏத்தமாதிரி
உருட்டிக்கனும்..
மண்ணு தீ பட்டு கடினமாகிட்டா அதை மறுபடியும் குழைத்து உருகமுடியாது .
வாழ்க்கை முழுக்க கஷ்டபடனும் பாத்துஇருந்துக்கோ ..அக்கம்பக்கம் பெண்கள் கூறிவிட்டு செல்ல அதெல்லாம் பாவனா காதில் ஏறவில்லை …
வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் .
” அவன் இருக்கானா தெரியல யாராவது போன்கொடுத்தா போன்போட்டு கேட்கலாம் ..
யார் கிட்ட கேட்கலாம் தெய்வமாக யோசித்தவள் அவள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருக்கும் சொந்தக்காரபாட்டிவீட்டுக்கு வந்தாள்
இந்த பாட்டியின் மகளை பக்கத்துஊரில் கட்டி கொடுத்திருப்பதால் அம்மாவை பார்ப்பதற்காக வந்திருந்தாள் ..
” அடடே புது பொண்ணு மறுவீட்டுக்கு வந்தீங்களாக்கும்..
ஊருக்குபோலாம்னு நினைச்சேன் அம்மாதான் இருக்க வச்சுருச்சு நல்லவேளை உன்னையும் பார்த்துட்டேன் ..
அது சரி புது வாழ்க்கையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு சிரித்தவாறே கூற …
” ஏதோ போகுது இது என்னக்கா பெரிய மொபைல் வைச்சுருக்க. இது எப்போ வாங்குன ஆர்வமாக அவள் கேட்க ..
இது மாமாவோடதுடி உடைஞ்சிருச்சுன்னு அவர் புதுசெல் வாங்கிட்டாரு அதான் பழைய செல்ல எனக்கு கொடுத்துட்டாரு ..
அது சரி உன்னோட போன உன்தங்கச்சி வெச்சிருக்கா அவளுக்கு எதுக்கு கொடுத்த.
நீ தான் ரீல்ஸ்போட்டு சாவடிச்சிட்டுஇருப்பனு பார்த்தா உனக்கு துணையா உன் தங்கச்சியும் சேத்துட்ட ..
ஏண்டி வேஸ்ட்டா ரீஸ்ஸ் பாக்குறதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டு காசு போடறிங்க
ரீஸ் பார்த்து டைம்வேஸ்ட் பண்றதுக்கு அதுல வேற ஏதாவது வேலைசெய்யமுடியுமான்னு ஒருபுதியவழிய பாருங்க.. அந்தக்கா கூற ..
இவளோ அவர் என்ன சொல்கிறார் என்பதையெல்லாம் காதில் கேட்டுக்கொள்ளவில்லை..
காதலனின் நம்பரை மனதிற்குகொண்டு வந்து அவன் நம்பக்கு மெசேஜ் போட்டாள் ..
சீக்கிரம் பதில் சொல்வான் என்று படபடப்பாக அமர்ந்திருந்தாள்..
ஏண்டி நான் என்னபேசிட்டுஇருக்கேன் நீ என்னடி போனை பாத்துட்டு இருக்க நீயெஎல்லாம் வெளங்குன மாதிரிதான்
அவர் பேனை பிடுங்க ..
அக்கா அக்கா ப்ளீஷஸ்க்கா கொஞ்சநேரம் மட்டும் பாத்துட்டுகொடுக்கிறேன்..
நான் ரிலீஸ் போட்டுருந்தேன்ல அதுக்கு எத்தனை கமெண்ட் வந்துருக்குன்னுபாக்கணும்.. அவள்கூறியதும் விவரம் தெரியாத பக்கத்துவீட்டு அக்காவும் போனைகுடுத்தார்…
இதோ போன் வந்தது தனியாக ஓடிபோய் மறைந்தவாறேபேசினாள்