அத்தியாயம்-3-
“ஹாய்!… நீங்க குமரன் தானே…? அதாவது… கடைக்குட்டி சிங்கம்!”
என்று உரிமையாக பேசிச் சிரித்தவாறே குமரனுடன் கை குலுக்க டேவிட் முயன்றுக் கொண்டிருக்கவும்…., குமரனோ, முறைப்பைதான் பரிசாக தந்துவிட்டு , தன் கையையும் பின்னிழுந்து கொண்டவன்,
“யோவ்! அப்புடி செல்லமா என்னய எங்க வீட்டு! ஆளுங்க மட்டும்தான் கூப்பிடணும்…! நீ யாருன்னே இன்னும் மம்மி சொல்லவேயில்லயே…. நீ ஏதோ சர்ப்ரைஸை கொண்டு வந்து கொடுக்க வந்த ஆளுதானே…? , அந்த பொருள் என்னவோ அத மட்டும் கொடுத்துட்டு, வந்த வழியே திரும்பி போயிட்டே இரு…! , உன் மூஞ்சிய பாக்கிறதுக்கே எனக்கு பிடிக்கல….!”
என்று மிகவும் கறாராகவும் கோபமாகவும் பேசினவனை பார்த்த சாரதாவுக்குக் கோபம் தலைக்கேறி,
“ஏய்! என்ன பேச்சு இது…?, ஏன்டா இப்படி பேசுற…நான்தான் நமக்கு வேண்டப்பட்டவர்தான்னு சோன்னேனே அப்புறமும் இப்புடி பேசுறது தப்பு குமரன் சாரி கேளு அவர்ட்ட…?”
என்று மகனைக் கண்டிப்பதற்காகத் சாரதா தன் குரலை உயர்த்த முயற்ச்சிக்கவும்…. அதற்குள் அந்த இடத்தின் அமைதியைக் குலைக்காத வண்ணம் டேவிட் தலையிட்டு , குமரன் அப்படி தன்னைச் சொன்னதுக்காக அவன் முகத்தில் கொஞ்சமும் வருத்தமோ கோபமோ இல்லாதவாறு நடந்துக் கொண்டு , அப்படியே ஒரு அமைதியான புன்னகை மாறாது சிந்தியவன்,
”சாருமா… நோ டென்ஷன்….! நான் யாருன்னு சொல்லாம, நேரே நேரடியா அவன் செல்ல பேரை நான் சொல்லி அவனை கூப்பிட்டது தப்புதான்…. அந்த செயல் யாருக்குத்தான் பிடிக்கும்….? அதனால் அவன் கோபப்பட்டதில் தப்பேயில்லமா விடு…!”
என்று டேவிட் மிகவும் பக்குவமாக சாரதாவிடம் சொல்லவும்… .அவனின் அந்தப் பேச்சும், பக்குவமான அணுகுமுறையும் அங்கிருந்த சூழ்நிலையைச் சற்று லேசாக்கியது…. என்றாலும், குடும்பத்தினரின் குழப்பம் மட்டும் இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை…
ஆகையால், அவர்களின் குழப்ப முகங்களின் மனதைப் படிக்கவும்….. அதைத் தீர்க்க வேண்டியது நம் பொறுப்பு! என்று நினைத்த டேவிட் , அங்கு நிலவும் நிசப்தத்தை உடைக்கு வண்ணம் மீண்டும் தானாக பேசத் தொடங்கியவன்,
“ஹலோ….! என் பேரு டேவிட்… நான் சாருமா இருக்கிற தெருவில் தான் இருக்கேன்…. நான் அவங்க பக்கத்து வீட்டுக்காரனும் கூட…!”
என்று சிரித்தபடியே, அனைவரின் முகத்தை நோக்கி டேவிட் சொல்லவும்…. யாழினியோ,
‘பக்கத்து வீட்டுக்காரன்னா அதுக்காக வேண்டப்பட்டவன் ஆகிவிடுவானா என்ன…?, அதுபோக இவன் இப்புடி சொன்னதும் இவன பாத்து பல்லிழிச்சுட்டு ஹாய்ன்னு கை குலுக்கணும்னு நினைப்போ…?, அதுக்கு அவசியமா என்ன….?’
என்பது போல அவனைத் தீயாக முறைத்தவள், எங்க நமக்கும் ஹாய்னனு கை குலுக்க நம்ம பக்கத்துல வந்துவிடுவானோ…?, என்ற நினைப்பிலும் உடனே, தன் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு, பயத்துடனும் எரிச்சலுடனும் யாழினி ஒரு அடி பின்னால் நகர்ந்து கொள்ளவும்.!
அவள் நினைத்ததை போலவே, யாழினியை நோக்கித் தன் கையை குலுக்குவதற்காக நீட்ட நினைத்த டேவிட்… அவளது அந்தச் செய்கையைக் கவனித்ததும்,டேவிட் சற்றும் பச்சாதாபப்படாமல், தன் கையை மடக்கி லேசாகச் சிரித்துக்கொண்டே,
“பரவாயில்லமா… இன்னும் முழுசா என்ன பத்தி நான் சொல்லல அதானே…”
என்றார் சமாதானமாக… ஆனால், அத்துடன் விடாமல் ,
“நான் ஒரு பேங்க்ல மேனேஜரா வேலை பார்த்தவன்… இப்போ ரிட்டையர் ஆனவன்…!”
என்று தன் அறிமுகத்தைச் சொல்லவும்… இதைக் கேட்டுவிட்டு, ரேப்பர்! வருணியின் மனசுக்குள்ளாக அனல்! தீப்பொறியாக பறந்தது…..
‘அடப்பாவிகளா…! இவர் பேங்க்ல மேனேஜரா வேலை பாத்து ரிட்டையர் ஆனா நமக்கென்ன…? , என் தலையில இவர கட்டி வைக்கத்தான் என் அம்மா ஐடியா பண்ணி இருக்காங்களோ….?, அதான் இப்புடி பார்ட்டி ஹாலுக்கு சர்ப்ரைஸ்ன்னு இவரை கூட்டிட்டு வந்து நிப்பாட்டி என் உதிரத்த கொதிக்க வைக்கிறாங்களா..?’
என்று அவரை நினைக்கவும் அவளுக்கு பத்திக் கொண்டு வர… தன் பல்லை நர நரவெனக் கடித்தாள் வருணி…… இப்படியே ஆளுக்கொரு கற்பனையில் டேவிட்டை உருவகப் படுத்திக் கொண்டு , மகன் குமரன், மகள் வருணி, மருமகள் யாழினி என மூவரின் பார்வையும் ஒரே திசையில்… அதாவது டேவிட்டைக் கொல்லப் பார்ப்பது போலவும்…. ஒரு வெறியோடு முறைத்து பார்த்துக் கொண்டிருந்தது….! , நடுவில் மாட்டிய சாரதாவோ, பிள்ளைகளின் இந்த உக்கிரமான முறைப்பைப் பார்த்துக் கொஞ்சமும் சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கிப் போய் நிற்க….. அதைப்பார்த்துச் சிறிதும் கலங்காத டேவிட்டோ, சாரதாவின் தோளை லேசாகத் தட்டி,
“கூல் சாருமா… எல்லாம் சரியாகும் நான் இருக்கேன்ல….!”
என்று அவளை மீண்டும் கூலாகச் சமாதானம் செய்தவிட்டு, வந்த வேலையில் அன்பு கலந்த அந்தப் புன்னகையோடு அப்படியே நின்று கொண்டிருந்தவனின் அரவணைப்பில் மனம் அமைதிகொண்ட சாரதாவோ, அமைதியின் சொரூபமாகத் திகழும் அவனிடம், கம்பீரமாகவும் நிதானமாகவும் தன் பேச்சைத் தொடர்ந்தவள்,
‘இங்க பாருங்க டேவிட்… இப்படி நாம மெதுவா பேசிக்கிட்டு இருந்தோம்ன்னு வைங்க…., இந்த காலத்துல நீங்க என்ன சொல்ல வரீங்கன்னே இதுகளுக்கு புரியாது….. சோ, என் ரூட் தான் கரெக்ட்…! அப்போதான் இவங்க எல்லாரும் நம்ம வழிக்கு வருவாங்க…..’
என்றுவிட்டு, ஒரு ஹிஸ்டரி டீச்சருக்கே உரிய ஸ்டிரிக்ட்டான பாணியில் இருக்கவும்…., தன் பேச்சை மேலும் தொடர்ந்தவள்,
”ஏய் எல்லாரும் இங்க பாருங்க… நான் சொல்லுறதா நல்லா காது குடுத்து கேட்டுட்டு எதுனாலும் உங்க முடிவை சொல்லுங்க…. சரியா…. இவர் என் பக்கத்து வீட்டுக்காரர்… இவர் இந்த வீட்டுக்கு வந்து இன்னையோட ஆறு மாசமாச்சு…. முதல்ல அவர் இந்த வீட்டுக்கு வந்த புதுசுல, நானுமே உங்களபோலத்தான் அவர்கிட்ட இப்புடிதான் நடந்துக்கிட்டேன்…. ஏன்னா, நான் தனியா அங்கே இருக்கேன்ல்ல… அதனால என்னை அங்க இருக்கிற யார்கிட்டயும் ரொம்ப ஸ்டிரிக்ட்டா தான் காமிச்சுப்பேன் …. அதனாலயே பயந்துட்டு அங்க இருக்கவங்க யாரும் என்கிட்ட சரியா பேசமாட்டாங்க…. பழகவும் மாட்டாங்க…. நானும் அதான் நல்லதுன்னு தனிமையா இருந்துப்பேன்…. நான் பாட்டுக்கு என் வேலை உண்டு, நான் உண்டுன்னு இருக்கிறதுதான் ஹாப்பினு நினைச்சுக்கிட்டு இருப்பேன்… ஆனா…., அப்பப்போ இறந்துபோன என் காதல் கணவன், அதாவது உங்க அப்பாவோட நினைவும்…., அதனாலயே பிரிந்துபோன எங்க ரெண்டு வீட்டு சொந்தங்களும்… அப்புறமா நீங்க வளர்ந்தக்கப்புறம்,
‘காதல் கல்யாணம், தனிக்குடித்தனம் போறேன்னு…’
போன குமரன் உன்னை நினைச்சும்….
‘நான் ரேப்பர்! ஆகணும், அதான் என் கனவு..’
என தன் கல்யாணத்த பத்தியே சிந்திக்காத வருணி…’ன்னு
உன்னை பத்தியும் நினைச்சு நினைச்சு கவலையாகவும் செய்வேன்….
இப்படியே என் வாழ்க்கை கவலையாவே போயிட்டு இருந்தப்பத்தான் டேவிட்டின் அறிமுகம் கிடைச்சது….. ஆனா… நானுமே அவரை இப்புடி தான் உங்கள போலவேதான் அவாய்ட் பண்ணேன்…. என் ரத்தம் தானே நீங்க அதான் இதுல நாம ஒரே மாதுரி தான் இருக்கோம்… ஆனா, அவரு நம்மள போல ஒருத்தர் இல்ல …. நான் எவ்வளவோ அவாய்ட் பண்ணாலும்…., எப்பவும் போல இப்ப உங்ககிட்ட அமைதியா, சாதுவா, சிரிச்ச முகத்தோட மாறாமல் பேசுனாரே… அதேபோல அப்படியேத்தான்…. அவுரு என்கிட்டனாலும் சரி யார்ட்டனாலும் சரி அன்பா அடக்கமா பேசுகின்ற நல்ல மனிதர் அவர்…”
என்று சாரதா தன் மனதில் இடம் பிடித்த டேவிட்டை பற்றி வெளிப்படுத்தவும் ….
’அது சரி, அதுக்காக என் தலையில கட்ட பாக்குறது என்ன நியாயம் மம்மி….?’
என்பது போல வருணி தன் அம்மாவை முறைத்துப் பார்க்கிறாள்…..அவள் அப்படிப் பார்க்க, மகனோ,
‘தன்னை தனிக்குடித்தனம் போனவன் என முத்திரை குத்துகிறாரே மம்மி…!”
என்று கூனிக்குறுகிப் போய் நிற்கிறான்…. இதையெல்லாம் பார்த்த யாழினியோ,
‘ அச்சச்சோ… இந்த சிட்டிவேஷன்ல நாம வேற ஒன்னு சொல்லப்போறோமே ஆண்டிகிட்ட…! ஏற்கனவே தனிக்குடித்தனம் கூட்டிப்போனவ என்கிற கெட்ட பெயரு வேற எனக்கிருக்கு…. , இதுல இப்போ இதுவும் சேர்ந்துக்க போகுதா…அப்புறம் நான் சொல்ல போற விசயத்துக்கு சம்மதிப்பாங்களா தெரியலையே?”
என்று அவ பங்குக்கு மனதுக்குள் பதைபதைத்து இந்த நினைப்பில் திகைத்து இருக்கவும்….
“ஏம்மா… நீ பேசி அவங்க தெளிவான மாதிரி எனக்குத் தெரியலம்மா…! பாரு, எல்லாரும் மைண்ட் ரீட் பண்ணா, நீ சொன்னதை தாண்டி வேற ஒன்னு அவங்க திங்க் பண்ணி வச்சிருக்காங்கன்னு தோணுது சாருமா…”
என டேவிட் கூறினதும்…. அதை தானும் கண்ணால கண்டுவிட்டு அவரின் கூற்றை ஆமோதித்த சாரதா,
“ஆமா, சரியாத்தான் சொல்றாரு…! நல்லா கேட்டு திங்க் பண்ணுங்கன்னா, நான் சொன்னத இதுக யோசிக்காம அதுங்களைப்பத்தி மட்டுமே யோசிக்குதுங்க…. நம்ம பாயிண்ட்டை முழுசா புரிஞ்சுக்கவே மாட்டிங்குதுங்க…”
என்று கவலையுடன் மனதுக்குள்ளாக அவ புலம்பிக் கொள்ளவும்… அப்படியே அவளுக்கு மூளையில் ஒரு பொறி! தட்டியது,
‘ஹான்… இப்போ இத சொன்னா கப்புனு கற்பூரமாய் புடிச்சுப்பாங்க என் பிள்ளைங்க…!”ன்னு டீச்சர் பாணியில் நினைத்த சாரதா, சற்று நேரம் எப்படி சொன்னால் இதுகளுக்கு புரியும் என தன் மூளையை சலவை செய்து யோசித்துவிட்டுத் தன் பேச்சைத் தொடர்ந்தவள்,
“இவரும் என்னய போலவே ஒரு விடோவர்! தான்…. இவரோட மனைவி உங்கப்பா போலவே ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க… இவருக்கும் ரெண்டு பையன்கள் இருக்காங்க… ஆனா பையங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு தனிக்குடித்தனம் போயிட்டாங்க… பாவம், இவரும் என்னைப்போலவே பிள்ளைகளுக்காக மறுமணமே பண்ணிக்காம இருந்துருக்காரு”
என்று சாரதா கூறவும் … வருணிக்குள்ளாக அதே பழையப் பாட்டேத் தான் புதுவிதமாக ஓடியது…
‘அடப்பாவமே! மம்மி நமக்கு ஒரு விடோவரை மாப்பிளையா பாத்து வச்சு இருக்காங்களா….?, நான்சன்ஸ்…..!, இதுல அவனுக்கு புள்ளங்க வேற இருக்காங்களாம் கல்யாணமும் பண்ணி குடுத்துட்டானாம்..அப்புறம் என்ன இன்னொரு கல்யாணம் வேண்டிக்கடக்கு அவனுக்கு…..”
என்று அவள் நினைக்க… மகனும் மருமகளுக்கோ சாரதா என்ன சொல்ல வருகிறாள் என ஓரளவு புரிந்துவிடவும்…அவர்களுக்குள்ளாக ‘நாம சொல்ல போகுற விசயத்துக்கு சாரதா இனி ஒத்துப்பாங்களா…? இல்ல மாட்டாங்களா…? ‘என கிசு கிசுத்து பேசினர்….
🫂 தோள் சாய்ந்திடும் தருணம் வரும்🍀…
🔥இப்பவும் டேவிட்! ரேப்பர் வருணிக்கு பார்க்கப்பட்ட மாப்பிள்ளை என்று தான் உங்களுக்குமே தோணுகிறதா …?, உங்க கெஸ்ஸை சொல்லுங்க பட்டூஸ் ♥️….