Stories that touch hearts

Home  /  46. மோ.நித்யா சபரி (இளவேனில் சாய்ந்தாட ஒரு தோள்)  /  Chapter 2

CHAPTER 2

“இளவேனில் 🍀🫂 சாய்ந்தாட ஒரு தோள்♥️💛…!!!”

By மோ.நித்யா சபரி · October 27, 2026

0

அத்தியாயம் -2-

அந்த நட்சத்திர ஹோட்டலின் பிரம்மாண்ட பார்ட்டி ஹாலில் அங்கே மின்னும் சரவிளக்குகளின் வெளிச்சத்தில், மினுமினுக்கும் டைனிங் டேபிளைச் சுற்றிலும் சாரதாவும் , அவளின் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்திருந்தனர்….

      அங்கே கைம்பெண்ணான சாரதா, தன் மகள் ‘ரேப்பர்’ வருணியோடு ஒருபுறம் வீற்றிருக்க, எதிரே இளையவன் குமரனும் அவன் மனைவி யாழினியும் மகள் ஜோவிகாவுடன்  உற்சாகமாக அமர்ந்திருந்தனர்….   அந்த சமயம்…. ,  

   ​”நாங்களுமே இன்னைக்கு ஒரு சர்ப்ரைஸ் சொல்ல போறோம்..!”        

என்று குமரனும் யாழினியும் ஒரே நேரத்தில் குதூகலமாக பேச்சை தொடங்க…,  

  ​”சரி, சொல்லுங்க கேட்கலாம்…”       

என்றுவிட்டு  , எதிர்பார்ப்புடன் தயார் நிலையில் தாயும் மகளுமாக எதிர்புறம் அமர்ந்திருந்தனர்…. .     

   ஆனால், தம்பதியர்களோ சொல்ல வந்த விஷயத்தை அவசரமாய்  தங்கள் வாய்வரை வார்த்தையை கொண்டு வந்துவிட்டு பிறகு,  சட்டென்று என்னத்தையோ நினைத்தவர்களாக இருவருமே அந்த வார்த்தையை  தொண்டைக்குழிக்குள்ளாக எச்சிலை விக்கி… விக்கி…!, விழுங்குவது போல அந்த வார்த்தையையும் அப்படியே உள்ளுக்குள்ளாக விழுங்கிவிடவும்….. 

      ​”ம்ம்ம்ம்ம்… சொல்லுங்க…, என்ன விஷயம்…?”    

     என்று தாய் மகள் இருவருமாக அலுத்துக்கொண்டே சலிப்பாக அவர்களை கேட்கவும்…,   

   “நீ சொல்லு…”       

      என்று குமரனும்,

“நீங்க சொல்லுங்களேங்க…”  

   என்று யாழினியும் மாறி… மாறி….  தம்பதியருக்குள்ளாக ஒருவருக்கொருவர் இப்படி பேசிக்  கொண்டவர்களை பார்த்து,  

    ​”அய்யோ….! யாராவது ஒருத்தராவது வாயை திறந்து சொல்ல வந்த விஷயத்தை எங்ககிட்ட சொல்ல போறீங்களா இல்லையா….?, இல்லைன்னா என்னய இப்புடி உங்க வாயையே மாறி …மாறி….  பாக்க வச்சு சோதிக்க போறீங்களா என்ன…?”

என்று சாரதா எரிச்சலோடு அதட்டவும்…, குமரனுக்கும் யாழினிக்கும் சட்டென்று தன்மானம்  தட்டிட,       

    “இவங்க மட்டும் என்னவாம்….?, நாங்க  மட்டுமா ஒரு சர்ப்ரைஸ் சொல்ல போறோம்ன்னு சொன்னோம்…?, இவங்களும் தானே சர்ப்ரைஸ் வருது அது இதுன்னு சொன்னாங்க என்னமோ…?, ஆனா அது என்னங்கிறத பத்தி டீட்டைலா  சொல்லவே இல்லயே… அப்புறம் எதுக்கு  பெரிய கொம்பை சுத்தின மாதுரி எங்களமட்டும் அதட்டுறது என்ன நியாயம்….?”     

  என்று கணவன் மனைவி அவர்களுக்குள்ளாக கிசுகிசுத்துவிட்டு, பிறகு அவர்களே ஒருமித்த குரலில்,   

    “நீங்க சொல்லுங்க முதல்ல….! அப்புறம் நாங்க சொல்றோம்…!”  

   என்று தங்கள் பங்கிற்கு குரலை உயர்த்தினவர்களை  பார்த்து…. , ​இந்த முறை சாரதா வாயடைத்துப் போய் உட்கார்ந்திருக்கவும்….  

 அங்கே ஒரு நீண்ட நிசப்தம் கவ்வியது….!!!,   ​

அந்த தருணத்திலே…..!!! சரியாக ….!!!, அங்கிருந்தவர்களின் மௌனத்தை உடைப்பது போல, அந்த ஹோட்டலின் பிரம்மாண்டமான கண்ணாடிக் கதவுகள் தானாக மெல்லத் திறந்தன…..

அந்தத் திறப்புடன் குளிர்ந்த காற்றொன்று!  நுழையவும் …. அது அப்படியே ஒரு மெல்லிய தென்றலாய் பார்ட்டி ஹாலுக்குள்ளுமாக நுழைந்து  வீசி!, அங்கிருந்த அனைவரையும் வருடிக் கொடுத்து கொண்டிருக்கிற சமயம், சாரதா முகம் மட்டும் தெளிச்சியாக முகம் மலர்ந்து,…..​            

“இதோ… நம்ம சர்ப்ரைஸ் வந்துடுச்சு….!”     

    என்று திறக்கப்பட்ட கதவை நோக்கி காற்றை போல வந்திருப்பதை  தன் ஆள்காட்டி! விரலை நீட்டிச் சுட்டிக்காட்டி சொன்னாள் சாரதா… 

      ​அவள் சொன்னதை  வைத்து , அங்கிருந்தவர்கள் மனதுக்குள்ளாக ஓடிய மனகணக்கோ வேறு….    

      ‘ஓஹோ! சர்ப்ரைஸ்ன்னா என்னவா இருக்க போகுது…?, வழக்கம் போல கேக்காக இருக்கும்… இல்ல…. ஏதாவது ஸ்பெஷல் ஃபுட்!... பின்ன, ஒரு நட்சத்திர ஹோட்டலில் இதையெல்லாம் தாண்டி என்ன சர்ப்ரைஸ் இருக்க முடியும்….? மிஞ்சிப் போனா டேபிளுக்கு வந்திருக்கும் ஹாட் சூப்!ஐட்டமாகத்தான் இருக்கும்….!’        

       என்று ஆளுக்கொரு யோசனையிலேயே திளைத்து இருந்தவர்களுக்கு பிறகுதான் நிதர்சனம் புரிந்து,  அவர்களது எண்ணங்களைச் சுக்குநூறாக்கும் விதமாக… மனிதர்களே கூட சில நேரங்களில் எதிர்பாராத சர்ப்ரைஸாக வந்து நிற்கலாம்…!!!!!, என்பது போல, அங்கே ஒரு உயரமான  மர்ம  உருவம்! வந்து, நுழைந்திருந்தது!      

   அந்த மர்ம உருவத்தின்  கழுத்தில் மின்னிய பிளாட்டினம் சிலுவை செயினும் …!!!,  , காதில் லேசாக அசைந்தபடியே இருந்த தங்க சிலுவை!  அதன் ஒளியைப் பிரதிபலித்த ஒருபக்க காதணியும் அந்த உருவத்தின் ஸ்டைலான தோற்றத்திற்குக் கூடுதல் அழகு சேர்க்க…. வெள்ளை நிற ஃபிட்டான  சட்டை மற்றும் கருப்பு நிற ஃபேண்ட் என மிக நேர்த்தியான உடையில் அந்த உருவம்  முன்னேறி வந்த விதம், பார்ப்பதற்கே ஏதோ ஒரு ஹாலிவுட்! சினிமா ஆட்களை   போல மிரட்டலாகவும் கம்பீரமாகவும் இருந்தது….         

அப்படி அங்கே ஹீரோவாக வந்திருந்தது  ஒரு நடுத்தர வயதுடைய ஆண்…..!!!,அவன்  ஏறக்குறைய ஆறடி உயரம்…! அவன் தோற்றமே அவன் ஒரு கிறிஸ்துவன்! என சொல்லாமல் சொல்லியது .... ஆகையால்,     

  ​”யாருடா இது… நேத்து பெய்த மழையில் முளைத்த ஆறடி அர்னால்ட் மாதிரி….?”           

என்று வாயைப் பிளந்து  ரேப்பர் வருணி….!!! வியக்கவும்….,வந்தவனோ நடுத்தர வயது அல்லவா …. அதனால், அவன் முடிகளெல்லாம் லேசாக வெளுத்து, அங்காங்கே ஒரு சில கருத்த முடிகளும் எட்டிப் பார்த்தாலும்…, அந்த வயதிலும் அவன் முகத்தில் ஒரு காந்த ஈர்ப்பும் ஹேண்ட்சம் தோற்றமும் மிளிர, அவனைக் கண்ட யாழினி சட்டென்று குமரனின் தோளைச் சுரண்டினவள்,      ​

“யாருங்க இந்த ஆறடி அரணால்ட்.டு…? உங்களுக்கு தெரியுமா….?”

என்று குரலைத் தாழ்த்தி அவனது காதருகே  விசாரிக்க….,​குமரன் தன் தோளைக் குலுக்கிவிட்டு,      

    “எனக்குமே யாருன்னு தெரியாது யாழு…!”    

  ” சரி….சரி…நம்பிட்டேன்…. உங்க அக்காட்ட விசாரிங்களேன்……???”     

   என்று  யாழினி சொன்னவுடனே குமரன் தன்  அக்காவை பார்க்கவும்…, அக்காவுமே அங்கே  தன் பங்கிற்கு வாயைப் பிளந்து கொண்டு அந்தஆறடி அர்ணால்டயே பார்த்தவாறு சிலையென திகைத்து அமர்ந்திருப்பதைப் பார்த்த குமரனோ,      

“அவளுக்குமே விஷயம் தெரியாதுன்னு தான் நினைக்கிறேன் பாரு… அவளுமே நம்மள மாதிரிதான் அந்த ஆள பாத்து முழிச்சுக்கிட்டு இருக்கா  யாழு…!”   

     என்று முணுமுணுத்தான்…. பிறகு,​மகன், மகள், மருமகள் என அனைவரின் பார்வையும் ஒரே திசையாக… அப்படியே சாரதாவின் முகத்தின் பக்கமாய் கேள்வியாய் திரும்பியது…..

       ​ஆனால்,  அவர்கள் யாரையும் கவனியாத சாரதாவோ, அந்த மர்ம நபரைத் கண்டதும், முகம் மலர்ந்து ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிவது போல பிரகாசிக்க…,       

  “வாங்க டேவிட்!”    

என்று உற்சாகமாய்  இன்முகத்துடனே அவனை வரவேற்றாள்….!​அப்போது, சரியாக அந்த சமயம் பார்த்து, எதார்த்தமாக அங்கே டேவிட்டுக்கு அருகே ஓட்டமும் நடையுமாக ஓடிவந்துவிட்ட சிறுமி ஜோவிகா குட்டியை அவன் பார்க்கவும்…., சட்டென்று அந்த உயர்ந்த மனிதன்  பாப்பாவின் உயரத்துக்கு குனிந்து அவள் முன்  முட்டிப் போட்டுவிட்டு,    

   “அடடா! நீதான் ஜோ குட்டியா…. அழகு….அழகு பொம்மை…..?”     

என்று அவளைத் தூக்கிக் கொஞ்சினவனை பார்த்த யாழினிக்குச் சுள்ளென்று கோபம் தலைக்கேறி,     

‘யார் இவன்…? , உள்ளே இப்புடி தடலடியாக நுழைஞ்சது மட்டுமல்லாம…, என் மகள இப்புடி தூக்கி வச்சு கொஞ்சுறானே….!  நான் அவ அம்மால என்கிட்ட ஒரு வார்த்தை பர்மிஷன் கேட்க வேணாமா.…?’      

என்று யாழினி நினைக்கவும்…. தீயாக! முறைத்தவள், சட்டென்று அவன் பாப்பாவிற்கு முத்தமிடுவதற்கு முன்பாக அவனிடமிருந்து தன் மகளைப் பறித்துத் தன் கையில் தூக்கிக் கொண்டு ,  தன் மார்போடு அணைத்துக் கொள்ளவும்…. ​யாழினியின் அந்தச் செய்கையைக் கண்டு  திடுக்கிட்ட சாரதா உடனே,    

  “ஏய் யாழினி! அவர் யார் தெரியுமா….? இப்படிச் செய்யலாமா நீ….?”      

என்று கண்டிக்க முற்பட்டவளை டேவிட் தடுத்து குறுக்கிட்டு,   சற்றும் கோபப்படாமலே, ஒரு புன்னகையோடே,      

   “இட்ஸ் ஓகே சாருமா கூல்… பேரண்ட்ஸ்ன்னா அப்படித்தான் இருக்கணும், விடு….!”    

என்று  டேவிட் மிகவும் கூலாகச் சொல்லவும்…. ​குமரனுக்கோ வயிறு எரிந்தது….. அவன் தலையிடுவதற்காக வேண்டி ஒரு அடி முன்னே வந்து,    

   “இந்த  மிஸ்டர்… யார் இவர் உங்களுக்கு மம்மி….?, சர்ப்ரைஸ் கிஃப்ட் எதுவும் கொடுக்க வந்தவரா….?  இல்ல எதுக்கு இவர  இந்த பார்ட்டி ஹாலுக்குள்ளலாம்  விடுறாங்க….?, இத பத்தி போய் இந்த ஹோட்டலின் மேனேஜரிடம் தான் நான்  கம்ப்ளைன்ட் பண்ணனும் நினைக்கிறேன்….! சர்ப்ரைஸ் கொண்டு வர்றவங்கன்னா வெளியிலேயோ ரிசப்ஷன்லயோ நிக்க வச்சு வாங்கிட்டு வந்துல நம்மட்ட அவுங்க ஷோ பண்ணனும்…. அதவிட்டுட்டு, சர்ப்ரைஸ் கொண்டு வந்தவரையே உள்ளே எல்லாம் விடக்கூடாதுல!”

எஎன்பப்டி , அந்த ஹோட்டல் மேலாளரிடம் கத்துவது போலக் பொறிந்து தள்ளினான்…..அதே சமயம், பக்கத்தில் நின்றிருந்த ரேப்பர் வருணியின் மூளையோ வேறு ஒரு கோணத்தில் நினைக்கத் தொடங்கி,   

   ​’ நிச்சயம் இவர் சர்ப்ரரைஸ் கொடுக்க வந்தவர் இல்ல…. இவரே தான் நமக்கெல்லாம் சர்ப்ரைஸ்ன்னு நினைக்கிறேன்…. ஆனா….  எதுக்காக மம்மி இப்புடி இவர போய் சர்ப்ரைஸ்ன்னு சொல்லி காமிக்கணும்….? ,இதுக்காகவா மீட்டிங்கெல்லாம் மம்மி அரென்ஜ் பண்ணாங்க …?, இதுல எதோ  ஒரு உள்குத்து!  கண்டிப்பா இருக்கனும்… ஒருவேள… “எனக்கு கல்யாணமே வேணாம்….” அப்படின்னு நான் சொல்லிக்கிட்டு இருக்கேனே… அதனால, எனக்கு மேரேஜ் ஏஜ்  போயிடிச்சுன்னு அடிக்கடி பீல் பண்ணுற மம்மி! இந்த வயசு கேப் இருக்கிற இவர  கொண்டு வந்துதான் எனக்குக் கட்டி வைக்க ஏதாவது திட்டம் ஏதும் போட்டு இருக்காங்களோ மம்மி….? அதான் அதைச் சொல்லத்தான் இவ்வளவு யோசிச்சு விழிச்சாங்களோ…!‘    

என்று வருணி தனக்குள்ளேயே படபடப்பாக  இப்படி நினைக்கத்  தொடங்கவும்…. !    

  “மம்மி… இவரு யாரு மம்மி…?”     

  என்று  நேரடியாகவே வாய்விட்டும்  தன் கண்களைச் சுருக்கி ஆச்சரியத்தோடும் ஒருவிதக் கேள்வியோடும் ஒரு புருவத்தை  உயர்த்திய வருணி தன் தாயிடம் கேட்டவளோடே, ​அங்கிருந்த மற்றவர்களின் முகத்திலும்  தொங்கும் கேள்விக் குறிகளையுமே  சேர்த்தே பார்க்கவும்… சாரதா,உதட்டோரம் பூத்த ஒரு மென்னகையுடனே,    

   “அவரு…. நமக்கு வேண்டப்பட்டவராக போகிறவர் தான்….!”     

என்று மிகவும் சூசகமாகப் பொடி வைத்து பதிலளித்தவளின் ​வார்த்தைகளைக் கேட்டதும், அங்கே நின்றிருந்த அத்தனை பேரின் புருவங்களும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் உயர்ந்து,    

   ‘எதே…. வேண்டப்பட்டவராக போகிறவரா….? அப்படின்னா என்ன அர்த்தம்… அதையும் நீங்களே விளக்கி சொல்லிடுங்க ….?’      

   என்றுவிட்டு , ‘சாரதா என்ன பதில் சொல்ல போகிறாரோ இதுக்கு…?’ என  குழப்பமான  மனதோடு அனைவரும் ஒரு சேர சாரதாவின் வாய் பார்த்திருக்கவும்…..  

       இதற்கிடையில், வந்திருந்த டேவிட்டோ சற்றும் அசரவில்லை….   அவன் நேராகக் குமரனை நோக்கி நடந்து சென்று உரிமையாகத் தன் கையை நீட்டவும்,      

-🫂தோள் சாய்ந்திடும் தருணம் வரும்…

       🔥டேவிட்! ரேப்பர் வருணிக்கு  பார்க்கப்பட்ட மாப்பிள்ளையா …?, உங்க கெஸ்ஸை சொல்லுங்க பட்டூஸ் ♥️….

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!