Stories that touch hearts

Home  /  46. மோ.நித்யா சபரி (இளவேனில் சாய்ந்தாட ஒரு தோள்)  /  Chapter 12

CHAPTER 12

“இளவேனில்🍀🫂 சாய்ந்தாட ஒரு தோள்…!!!”

By மோ.நித்யா சபரி · November 25, 2026

1

அத்தியாயம்-12-

சாரதாவும் டேவிட்டுமாக      மருத்துவமனையின் அந்த  நினைவுகளைப் பகிர்ந்து முடித்த அந்தக் கணத்தில், சாரதாவின் கண்ணில் சுவரில் தொங்கிய கடிகாரம் பட்டதும் அவள் சட்டென்று  பதறி,  

  “அய்யோ… நேரமாயிடுச்சு! டின்னர் சமைக்கணுமே…!”  

எனவும் பரபரத்தவளிடம் அடுத்த நொடியே டேவிட் , அவளுக்கு உதவி செய்வதாக கூறிக் கொண்டே தயாராக முன்வரவும்…. அப்போது சாரதா,  

  “இப்படித்தான் மருத்துவமனையிலிருந்து நாங்க எங்களின் வீட்டுக்கு வந்த பிறகுமே, இவர் வீட்டிலிருந்து எனக்காக வேண்டி இவரே தன் கையால சமைச்சு, சத்தான உணவாக கொண்டு வந்து எனக்கு கொடுப்பார் வருமா…,”  

என்று பெருமையாக சாரதா சொன்னதைக்   கேட்ட உடனே, வருணிக்கு வழக்கம் போலக் குறும்பு பொங்கி,   

“ஓஹோ… அங்கிள், ஒரு கிட்சன் குயீனை…! நீங்க சமையல் சாம்பியனாகி வீழ்த்திட்டீங்க…! சூப்பர் அங்கிள் குட் ஜாப்…!”    

என்று கிண்டலடித்தாள்… .​அதைக் கேட்கவும் சின்னஞ்சிறு ஜோவிகா பாப்பா,

   “என்ன அத்தை… ?,  இத செஸ் கேம்ல வர மாதுரி கிங்! க்யூன் ஃபைட்ன்னு சொல்றிங்களா…?”ன்னு   

அப்பாவியாகக் கேட்க, அங்கிருந்த அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர்….பிறகு, ​நேரம் ஆகிவிட்டதால், எல்லோருமாகவே சேர்ந்து சமையலறையில் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்ளவும்…. அப்படியாக எல்லோரும் ஒன்றிணைந்து  உழைத்ததால்தான் டின்னரும் அவர்களால் சீக்கிரமாக செய்து முடிக்க முடிந்தது…. அப்புறமுமே அனைவருமாக ஒன்றுச் சேர்ந்தே  அமர்ந்து   உணவருந்தவும்….​சாப்பிட்டு முடித்த நிம்மதியில் சாரதா ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவள், 

   ” நாம எல்லாருமா இப்புடி ஒண்ணா, ஒத்துமையா உட்காந்து சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு…???”      

  

அப்படிச் சொல்லவும், டேவிட்டுக்குத் திடீரென்று புரை ஏறிவிட்டது….!, ​உடனே சாரதா பதறிப்போய்த் தண்ணீர் எடுத்து வந்துக் கொடுக்க… வருணியோ பின்னால் நின்று அவர் தலையைத் தட்டிக் கொடுத்தாள், குமரனோ அவரது முதுகைத் தடவிக் கொடுக்க…. ஜோவிகாவும் யாழினியுமாக சேர்ந்துக்கொண்டு,  

“ஒண்ணுமில்லல்ல அங்கிள்…?”

   என்று அக்கறையோடு விசாரித்தனர்…. ஒருவழியாக டேவிட்டுக்கு வந்த ​ அந்த புரை அடங்கியதும், சாரதா ஒரு சின்னச் சிரிப்புடன்,   

“யாரோ உங்கள தீவிரமா நினைச்சுக்கிட்டிருக்காங்க டேவிட்…!”  

  “யார் சாருமா என்னை இன்னேரத்துல நினைக்க போறா…? , எனக்கு வேண்டப்பட்ட நீங்கதான் இங்க என் பக்கத்துலயே தானே இருக்கீங்களே…!”   

டேவிட் புன்னகையுடனே,  அன்பாக அப்படி  சொல்லவும்… எல்லாருமாக அதையே ஆமோதித்து   சிரித்து முடித்தனர்…. ​

பிறகு,  அவர்கள் அவரவர் அறைகளுக்குச் சென்று தூங்கவதற்காகத் தயாராகினர்…. டேவிட்டும் தன் வீட்டிற்குக் கிளம்பிச் சென்றுவிட…. அப்படியாக அந்த இரவு அவர்களுக்கு  அமைதியாகக் கடந்தது…

    ஆனால், விடிந்தால் ஒரு சிக்கல் காத்திருக்கிறது என்பது யாருக்கும் அப்போது  அங்கே தெரிந்திருக்கவில்லை…. குடும்பத்துடனே நிம்மதியாக  உறங்கிக்கொண்டிருக்க … ​மறுநாள் காலை ​விடியலுமே அழகாய்  அங்கே விடிந்தது.… 

குமரன் வழக்கம்போலவே வேலைக்குக் கிளம்பிப் போய்விட….வருணியோ அவளாகவே  முன்வந்து,   

​“நான் போய் அங்கிளுக்கு சாப்பாடு தர்றேன்ம்மா…,”  

    “இல்ல…வருமா…, நானே போய் எப்பவும் போல அவர கவனிச்சுக்கிறேன்…. இல்லன்னா…. அவர் ஒழுங்கா சாப்பிட மாட்டார்..”ன்னு    

மகள்  சொல்லவும், சாரதா இவ்வாறு அக்கறையாகச் சொன்னவளிடம், வருணியும் விடாது  கிண்டலடித்து,    

“இப்பவே அக்கறையைப் பாரு!”

என்றதும் ​அப்போது யாழினியும் இடைமறித்துக் குறுக்கிட்டு ,  

  “ஆண்டி… உங்க ரெண்டு பேரின் திருமணத்திற்கப்புறமா டேவிட் அங்கிளும் நம்ம கூடதானே இந்த வீட்டுக்கு வந்துடுவார்ல…?”  

​”அது அவர் இஷ்டம்…”

   என்று சாரதா கேள்வி கேட்கும்  மருமகளுக்கு பதில் சொல்ல,

“யாழு… நாம வர வச்சுடுவோம்…!”  

என்று  அதற்கும் கிண்டல் தோரணையிலே வருணி உற்சாகமாகச் சொன்னவளிடம் , அதே போல தானும் ​சிரித்துக் கொண்டே  சாரதா,   

“அதுசரி வருமா… அடுத்த எந்த ஃபாரினுக்கு  ரேப்! சாங் பாட போற நீ…?” ​

” ஆஸ்திரேலியா மம்மி!…”

என்று விசாரிக்கும் அம்மாவிடம்  வருணி  இந்த பதிலை சொல்ல…, எப்போ, எந்தத் தேதி என்றெல்லாம் சாரதா மகளிடம் கேட்கவும், எல்லாவற்றையும் விவரமாக பொறுமையுடனேச் சொன்னவளிடம் மேலும் சாரதா,  

  “ஹாரிஸ் உன்னுடைய பாடலுக்கெல்லாம் கிட்டார் பிளேயராக இருப்பானே… அவனும் வருவானா…?”

  ​(ஹாரிஸ்!  ஒரு திறமையான கிட்டார் பிளேயர் மட்டுமல்லமால் இசையமைப்பாளராகவும் இருக்கிறான்!)   

​’ஹாரிஸ்’    

  என்ற பெயரைக் கேட்கவும் வருணி சிறிது நேரம் வரையிலும் மௌனமாக இருந்தவள், பிறகு மெல்லிய குரலில்,   

“ம்ம்ம்…”

என்று மட்டுமே  அம்மாவிடம் பதிலளிக்க…. ​ அவளின் இந்த தாமதமான  பதிலையும் , அவளின் முகவோட்டத்தையும்   கவனித்திருந்தாலும் , சாரதா தனக்கு நேரம் ஆகிவிட்டதாக  மகளிடம் கூறிவிட்டு  , டேவிட்டின் வீட்டை நோக்கி விரைந்துச் சென்று விடுகிறாள்….

   அங்கே டேவிட், தான் ஒரு யூடியூபர்!  என்பதால்  ,  யூடுப்பிலே தான் முன்பு  வங்கியில் வேலை செய்த அனுபவத்தை வைத்து அது சம்பந்தமான  விஷயங்களைப்  பற்றிப் பகிர்ந்து கொண்டிருக்கவும்…. சாரதாவிடமும் அவர்  வீட்டின் ஃபேர் சாவி இருப்பதால்,  அதைப்  பயன்படுத்தித்  திறந்துக் கொண்டு, உள்ளே வந்துச் சேர்ந்தவளோ,    ​

“   போதும், இதை பற்றியெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்…. முதல்ல சாபிட வாங்க டேவிட்.,”

என்று அவனை   நிறுத்த சொல்லிய சாரதா கையோடு அவனை  அழைத்து வந்து , சாப்பிடவும் அமர வைத்து, தன் கையாலேயே உணவளிக்கத் தொடங்கினவளிடம் டேவிட், 

     ​”நீ சாப்பிட்டியா சாருமா…?”  

  “நான் சாப்பிட்டேன்…, நீங்க சாப்பிடுங்க டேவிட்…”  

  என்று அன்பாக கேள்வி கேட்கும் டேவிட்டிடம்  , அதே அன்புடனே  சாரதாவும்   பரிமாறிக் கொண்டே  இவவாறு பதில் அளித்திருந்தாள்….​அந்தச் சமயத்தில் அங்கே காலிங் பெல்! அலறவும்… 

  ​”இது வருமா வேலையாத்தான் இருக்கும்… அவதான் இங்கு வந்திருக்கணும்…!”   

  என்று சிரித்தபடியே சொன்ன சாரதா,  

  “நீங்க சாப்பிடுங்க…., நான் போய் யாருன்னு பாத்து திறக்கிறேன்…,”

  என்றுவிட்டு,  கதவை நோக்கி வந்துத் திறந்தவளுக்கோ பெரும் அதிர்ச்சி…! அங்கே வருணி இல்லை; மாறாக, வேறு இரண்டு ஆண்கள் நின்றிருக்கவும்…. அதிலும்,  வந்தவர்களோ மிரள வைக்கிற தோற்றத்திலே  ஆறடி உயரத்திற்கு வளர்ந்திருந்ததோடு, முரட்டுத் தேகங்களுடனும் நின்றிருந்ததும்…. அந்த ஆட்களை அப்படிப் பார்த்ததும்….  சாரதா மிரட்சி பார்வையுடனே சற்று பயந்து பின்வாங்கினவள்  அப்படியே   பயத்தில் சத்தமும் எழுப்ப தொடங்கவும்….!  ,

   அப்படியாக  அந்த சத்தத்தைக் கேட்ட டேவிட்டோ,  உடனேயே தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்நத் தட்டையும் அங்கேயே விட்டுவிட்டு, உணவின் ஈரம் காயாத தன் கையையும் கூடக் கழுவாமல் பதறி அடித்துக்கொண்டு, ஹாலுக்கு ஓடி வந்தார்….   

அப்போது , ​வாசலை தாண்டி வீட்டுக்குள்ளாக வந்து நின்றிருந்த அந்த ஆறடி முரட்டுத் தேகங்களுடன் கூடிய ஆண்களையும், பதறிப்போய் வந்து நின்றிருந்த டேவிட்டையும் மாறி மாறிப் பதட்டத்துடனே  பார்த்த சாரதா  , வந்தவர்களின் முகச் சாயலையும் டேவிட்டின் முக சாயலோடு  ஓப்பிட்டு பார்த்து கவனிக்கவும் தான் ஒரு விஷயத்தைக் கச்சிதமாகப் புரிந்து கொண்டாள்….   

  அதாவது ,  வந்திருக்கும் ஆறடி உயரமும், கட்டுமஸ்தான முரட்டுத் தேகமும் கொண்ட அந்த இளைஞர்களின் முகத்தில் டேவிட்டின் சாயல்! தெளிவாகத் தெரியவும் , 

‘ ஓகோ இவனுக…. டேவிட்டுக்கு சொந்தம் போல…’  

சாரதா இப்படி எண்ணிக் கொண்டிருக்க…அதே சமயத்தில் டேவிட்டோ,  அவனுகளின் அந்தத் தோற்றத்தை பயந்து  பார்த்ததால் மட்டுமல்லாமல் சாரதாவைத் தள்ளிவிட்டுவிட்டும்,  அவனுகள் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்ததில்தான் அவள் இன்னும் அதிகமாகப் பயந்து போயிருந்தாள்….       என அவளின் முகவோட்டத்தை வைத்தே கவனித்துவிட்ட டேவிட்  ஆறுதலாக அவள்ருகே சென்று நிற்க…

அப்படியாக அவன் வந்து தன்னருகே நின்ற பிறகுதான் சாரதா கொஞ்சம் கொஞ்சமாகச் சமாதானமாகி, மூச்சை இழுத்து விட்டுத் தன்னை தானே ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும்…. அப்படியே , ​நிலைமை சற்றுச் சீரானதும், சாரதா டேவிட்டிடம்,  

“இவனுக யாரு டேவிட்…?,  எதுக்கு இப்புடி  உங்க  வீட்டுக்குள்ள அதிரடியா  உள்ள வர்றாங்க…?”   

என்று பொறுமையாகவும் பதற்றத்துடனும் விசாரித்தாள்…​அப்போது, அந்த முரட்டு ஆட்களில் ஒருவன் சாரதாவைப் பார்த்து அலட்சியமாக,       ​

“முதல்ல நீ யாரு சொல்லு…?”

,என்று ஒருத்தனும்,  அப்படியே இன்னொருத்தனோ டேவிட்டிடமும் தனது பார்வையை செலுத்தி , 

” அ….ப்பா……..!!!!, இந்தப் பொம்…பள யாருப்பா…?”  

  எனவும் ​மரியாதையே இல்லாமல், சாரதாவை இந்தப் பொம்பள! என்றும் அவனுக டேவிட் முன்னிலையில்  பேசிய விதம் அந்த அறையின் சூழலை இன்னும் இறுக்கமாக்கியது….      அதன் விளைவாக,​டேவிட்டின் கண்களில் தீப்பொறி பறக்க..., அந்த இரண்டு இளைஞர்களையும் வெறித்துப் பார்த்தார்…. அதைக் கவனித்தபடியே சாரதாவும் மனதிற்குள்,  

  “யார் இவனுக…?”  

என்று சிந்தித்துக்கொண்டிருக்க…. அடுத்த நொடியே,  அவள் மூளையில் ஒரு பொறி தட்டியது…. 

  “ஆகா… இவனுக தான் டேவிட்டின் ரெண்டு மகன்களா…?!”

   என்று உணரவும், உடனடியாக அந்த காரணத்தினாலும் வருத்தமும் கொண்டவள்,    

“பாக்கத்தான் இவனுகளுக்கு டேவிட்டின் சாயல் இருக்கு… ஆனா குணம் அப்படி இல்லயே…!”

என்று அவள் மனம் நொந்து போகவும்….​அந்தத் தருணத்தில், கோபம் பொங்கப் பேசத் தொடங்கிய டேவிட்டோ,  

  ​”‘பொம்பள’ன்னு கேட்டதுக்கு ஒழுங்கா, மரியாதையா சாருமாகிட்ட மன்னிப்பு கேளுங்கடா முதல்ல…!, அதோடு, எதிரே நிக்கறது ஒரு பெண்ன்னு கூட பாக்காமயா அவங்கள தள்ளிவிட்டுட்டு இப்புடியா அநாகரிகமா உள்ளே வருவீங்க…?, உங்களுக்கு மேனர்ஸ்  இல்லயாடா…?”   

என்று கடுமையாகக் கண்டித்தார்…​அதற்கும் அடிபணியாத அந்த முரட்டு ஆண்களோ,

   ” எங்கள ஏன் திட்றீங்கப்பா..?, அந்த பொம்பள  தான் வழி விடாம எங்க பாதைக்கு தடையா  நின்றிருந்தா… அதான் தள்ளிவிட்டு வர வேண்டியதா போச்சு…!”  

  என்று அப்பவும்  அலட்சியமாக அவனுகள்  பதில் சொல்வதைக் கேட்டதும் டேவிட்டின் கோபம்  இன்னுமே அதிகமாகி உச்சத்தைத் தொட்டது….    

“என்னடா அப்பா… அப்பானுட்டு…?, அந்த உறவே நமக்குள்ள இல்ல…! வெளிய போங்கடா முதல்ல…!”    

   என்று அவர்களை அங்கிருந்து வெளியே போகுமாறு கடுமையாக சாடி பேசிவிட்டு,   அப்படியே  டேவிட் தன் ஆள்காட்டி விரலையும்  வீட்டின் வாசறபடியை தாண்டிய இடத்தை நோக்கியும்  நீட்டி சுட்டிக் காட்ட….​ஆனால் அவர்களோ அந்த சமயமுமே,    

  “அ….ப்பா… இந்த பொம்பள முன்னாடிலாம் எங்கள ஏன் இப்புடி பேசுறீங்க…?”ன்னு  

   கோபத்துடன் கைகளை முறுக்கிக் காட்டிக்கொண்டு,  அப்படியே தங்களின் ஆம்ஸையும்  காட்டியவாறே டேவிட்டை நோக்கி முன்னேறி வந்தார்கள்….​நிலைமை கைமீறுவதைக் கண்ட சாரதா உடனே தலையிட்டு, டேவிட்டின் கையைப் பிடித்துச் சமாதானப்படுத்தி அவரை அடக்க முயலவும்…. அப்படியாக டேவிட்டை சாரதா தொடுவதையும் தவறானக் கண்ணோட்டத்தில் பார்த்த அந்த இளைஞர்களில் ஒருவன், அருவருப்பாகப் பார்த்துக்கொண்டே,  

    “ஏய்… ச்ச்சீ! நீ என்ன எங்க அப்பாவ தொட்டு தொட்டு  பேசுற தள்ளி…போ…?”

என்று சீறினான்…. ​உடனே மற்றொருவனும் தன் பங்குக்கு,  

   “என்ன… இவருக்கு யாருமில்லன்னு நினைச்சு அவரை வளைச்சு போட்டிருக்கியா என்ன…? அதானோ அவரு உன்னய பொம்பள சொன்னதுக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு வர்றாரு சண்டைக்கு சண்டியரா…!”  

   என்று கொஞ்சமும் கூச்சமில்லாமல் வார்த்தைகளை வீசினான்….​அந்த வார்த்தைகள் அங்கே நிலவிய பதற்றத்தை இன்னும் பலமடங்கு அதிகரிக்கவும்….

🫂தோள் சாய்ந்திடும் தருணம் வரும்…

😱🤔அச்சச்சோ விவகாரம் புடிச்சவங்களா இருக்காங்களே என்ன நடக்கப்போகுதோ…?, டேவிட் என்ன செய்யப் போறாரோ …?, என்ன கை கலப்பு நடக்க போகுதோ…?!!!! பார்ப்போம்….

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!