அத்தியாயம்-11-
மருத்துவமனையில் சாரதா மற்றும் டேவிட் நோயாளி அறையில் தங்கிருந்ததை நோக்கி கதைக் காட்சி விரிய…
மருத்துவமனையின் அந்த நார்மல் வார்டில், வெளிச்சம் மங்கிய ஒரு மெல்லிய நீல நிற விளக்கின் வெளிச்சத்தில், சாரதா அமைதியாகப் படுத்திருந்தாள்…. கையில் குளுக்கோஸ் டியூப் பொருத்தப்பட்டிருக்க…, அவளது முகத்தில் இருந்த களைப்பு இன்னும் முழுமையாக விலகியிருக்கவில்லை….
அருகிலிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்திருந்த டேவிட், தன்னுடைய கண்களை இமைக்கக் கூட மறந்து, அவளையே பார்த்துக் கொண்டிருக்கவும்…. தன் மனைவி கிருபாவை இழந்த அந்தப் பழைய வலி அவர் மனதிற்குள் ஒரு பக்கம் இருந்தாலும், இப்போது தன் கண்முன்னே உயிரோடு மூச்சு விடும் சாரதாவைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற உறுதிதான் அவரிடம் மேலோங்கியிருந்தது….
இரவு மணி பதினொன்றைத் தாண்டியிருக்க…. ஏ.சி காற்றின் குளிர்! அறைக்குள் மெல்லப் பரவத் தொடங்கியிருந்தது…. சாரதா தூக்கத்திலேயே லேசாக நடுங்குவதைக் கவனிக்கவும் டேவிட், உடனே எழுந்து அருகிலிருந்த மெல்லிய போர்வையை எடுத்து, அவளது கழுத்து வரை குளிர் காற்று நுழையாதபடி மிகக் கவனமாகப் போர்த்தி விட்டு , அப்படியே ஒரு சின்ன அசைவு கூட சாரதாவின் தூக்கத்தைக் கலைத்துவிடக் கூடாது என்பதிலும் அவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தவர்,
அடுத்ததாக குளுக்கோஸ் பாட்டிலிலிருந்து சொட்டும் நீரின் வேகத்தையும் கவனிக்கச் செல்லவும்…. பாட்டில் காலியாகும் தருவாயில் இருப்பதைப் பார்த்துவிட்டு, உடனேயும் நர்ஸுக்குக் கால் பெல்! அழுத்திக் கூப்பிட்டவர்…. நர்ஸ் வந்து புதிய பாட்டிலை மாற்றும் வரையிலுமே அங்கேயே நின்று, சாரதாவின் கையில் ஊசி குத்திய இடத்தில் வலி ஏதும் இல்லையா…?, என்று லேசாக அவளின் கையை தொட்டுப் பார்த்து டேவிட் உறுதி செய்து கொள்ளவும்….
பிறகு, நள்ளிரவு இரண்டு மணி இருக்கும், சாரதாவுக்கு லேசாக வியர்த்திருந்தது…. டேவிட் மெதுவாக ஒரு சுத்தமான, ஈரமான துணியை எடுத்து, அவளது நெற்றியில், கன்னங்களில், கழுத்தில் என மிக மென்மையாக ஒரு பூவைப் போலக் கையாண்டு, துடைத்து விடவும்… அதிலே, காமமில்லாத ஒரு தாயைப் போல நினைத்துக் கொண்டு , சாராதாவின் முகத்தில் படர்ந்திருந்த அந்தச் சின்னஞ்சிறு வியர்வைத் துளிகளைக் கூட அவர் துடைத்த விதத்தில், ஒரு தாய்தகபனுக்க்குரிய அன்பும், பாசமும் இழையோடியதை காண முடிந்தது…
அப்போது சாரதா மெல்லக் கண் விழிக்கவும்…. வெளிச்சம் குறைவாக இருந்ததால் முதலில் எதுவும் புரியாமல் குழம்பியவள், அருகில் கண் விழித்து அமர்ந்திருந்த டேவிட்டின் முகத்தைப் பார்க்கவும்…, அப்படியே ஒரு வினாடி திகைத்துப் போனவள்,
”நீங்க… இன்னும் தூங்கலையா…? மணி என்ன ஆச்சு…?”
என்று பலவீனமான குரலில் கேட்கவும்….
“நான் தூங்கிட்டா உன்னை யாரு பாத்துக்குறது கிருபா…?”
“என்ன கிருபாவா…? , நான் சாராதாங்க…”
“ஓ சாரிங்க மேடம்…உங்கள இந்த நிலைமையில பாத்ததிலிருந்து என் மனைவி கிருபாவோட முகமும் அவளுடைய ஞாபகமும் தான் கண்ணுக்குள்ள வந்து நின்னுது…. ”
என்று சொன்னவர் , மேலும் கிருபாவை குறித்து முழுமையாக சொல்லி முடிக்கவும்தான் டேவிட்டும் தன்னை போலவே மனைவியை இழந்தவர் என்று சாராதாவுக்கும் புரியவும் மெளனமாக இருப்பவளிடம் டேவிட்,
” மேடம் … மணி ரெண்டரை ஆகுது. கொஞ்சம் கஞ்சி குடிக்கிறிங்கீளா…?, நர்ஸ் கொடுத்துட்டு போனாங்க.., அது ஆறி போயிருக்கும்ன்னு நினைக்கிறேன்… நா… வேனா பக்கத்துல ஏதாச்சும் கடை இருந்தா சூடா வாங்கிட்டு வரட்டுமா..?”
என்று அக்கறையோடு கேட்க….
”வேணாம்… எனக்கு பசிக்கல…,”
என்று சாரதா மறுக்க முயன்றவளைடேவிட் விடவில்லை… மாறாக, ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து சென்ற டேவிட்,
“நல்ல கடை எது…?”
என்று அந்த மணி ரெண்டே முக்கால் ஆகிய நேரத்திலும் அங்கே மருத்துவமனைக்கு வெளியே இருந்தவர்களிடம் விசாரித்தப்படியே, தேடி அழைந்து ஒருவழியாக அந்தக் கஞ்சியை சுடச்சுட டேவிட் வாங்கி வந்துமே, சாராதா மறுக்கவும்…,
“அப்படியெல்லாம் சொல்லக் கூடாது சாராதா மேடம்…. நீங்க இப்போ மாத்திரை போடனும்.. அதனால வயித்துல எதுவும் இல்லாம மாத்திரை போட்டா வயிறு எரிச்சல் வந்துடும் உங்களுக்கு… கொஞ்சமாவது கஞ்சிய நீங்க குடிச்சு தான் ஆகனும்…. நான் பக்கத்துலயே இருந்து ஸ்பூன்லயே ஊட்டி விடுறேன் ஓகேவா…,., ”
என்று பிடிவாதமாகக் கெஞ்சினவர் அப்படியே, மெதுவாக அவளது தலையைத் தன் ஒரு கையால் லேசாகத் தூக்கி தன் தோளில் தாங்கிபிடித்தபிடியே, ஸ்பூனால் கஞ்சியை எடுத்து அவளது உதட்டில் வைக்க… அப்படியே சாரதா ஒவ்வொரு வாயாக குடிக்கவும் அப்படியாக ஒவ்வொருமுறையும் ஊட்டும் போதும்,
“மெதுவா… மூச்சு விட்டு குடிங்க மேடம்..”
என்று சொல்லியவர், அப்படியே அவளது வாயோரம் ஒட்டிய கஞ்சியையும் துணியால் ஒத்தி எடுத்து துடைக்கவும், அடுத்ததாக டாக்டர் கொடுத்த மாத்திரைகளையும் தண்ணீரையும் அவளுக்கு அக்கரையாக மறக்காமல் எடுத்துக் கொடுத்து , அதை அவளின் தொண்டைக்குழிக்குள்ளாக விழுங்க வைத்ததும், அவளை மீண்டும் படுக்க வைத்தவர் அவள் அப்படியே மீண்டும் உறங்கிப் போன பிறகும் கூட, டேவிட் அங்கிருந்து ஒரு இம்மி! அளவும் கூட அவளை விட்டு நகரவேயில்லை…. மாறாக, தன் போனில் ஏதோ ஒரு பழைய பாடலை மிகக் குறைந்த சத்தத்தில் ஓடவிட்டு, நாற்காலியில் சாய்ந்தபடியே சாரதாவின் மூச்சுக் காற்றையே டேவிட் கவனித்துக் கொண்டிருக்கவும்…
அப்படியாக அந்த நள்ளிரவில், மருந்துகளும் ஊசிகளும் நிறைந்த அந்த மருத்துவமனை அறையில், சாரதாவுக்குக் கிடைத்த அந்த அன்பும் பாதுகாப்பும், அவள் இத்தனை வருடங்களாகத் தேடிக்கொண்டிருந்த ஒரு நிம்மதியான அடைக்கலமாக மாறியிருந்தது….
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
இப்போது காட்சிகள் பின்னோக்கி நகர்ந்து இதை பற்றியெல்லாம் அவர்கள் பேசிய சாராதா வீட்டின் சமையலறையில் தற்போது நடக்கும் காட்சிகளாகவும் விரிகிறது…
அப்படியாக அந்தச் சமையலறையில் நிலவிய கனத்த நிசப்தத்தைக் கலைத்தபடி டேவிட் மிக இயல்பாக,
“அதனால தான் சாரதா கூடவே நான் மருத்துவமனையில் இருக்க வேண்டியதா போச்சு…. அப்படியே அவளுக்கு தேவைப்படுற அத்தனையையும் கூடவே இருந்து அந்நாளில் நான் செய்யவும் செய்தேன்…”
என்று சொல்லி முடித்தவன் நிறுத்திய இடத்திலிருந்து சாராதா தன் மனதின் ஆழத்திலிருந்த வலிகளையும், அதிலிருந்து மீண்ட விதத்தையும் உடைத்தெறிந்து பேசத் தொடங்கி,
“நான் ஏன் இதையெல்லாம் உங்களுக்கு சொல்லலன்னா… இப்போலாம் நான் சொல்லுற எதையும் நீங்க யாருமே காது கொடுத்து கேட்கிறதில்லயே…! வருணிய பாரு…, இன்னும் மேரேஜ் பண்ணிக்காம தனியா நிக்கிற… குமரன் நீ, நான் போன் அடிச்சாலே ஏதாவது ஒரு சாக்குப்போக்கு சொல்லி போனை கட் பண்ணிடுவியே… உங்க ரெண்டு பேரை பத்தின கவலையே என்னய சாப்பிட விடாம பண்ணிடுச்சு… இதுல எங்கிட்டு மாத்திரை மருந்து எல்லாம் சாப்பிடறது ஞாபகமிருக்கும்… அதையும் சரி வர நான் எடுத்துக்கல போதுமா… வரு…. குமரன் …உங்களுக்கு காரணம் என்னான்னு இப்போ புரியுதுல்ல…!”
என்று குரல் தழுதழுக்கவும் சொன்னவளுக்கு கண்களில் கண்ணீர் முட்ட, வார்த்தைகள் தடையின்றி மேலும் வெளிவந்தன,
“நான் சிங்கிள் பேரண்டா இருந்தப்போ, உங்கள நல்லா பாத்துக்கணும், உங்கள கரை சேர்க்கணும்ங்கிற ஒரே வெறியிலதான் நான் தெம்பாக இருக்கணும்னு சாப்பிட்டேன்…, என் உடம்பையும் சரிவர பார்த்துக்கிட்டேன்…. ஆனா இப்போ நீங்க எல்லாம் வளர்ந்து ஆளாகிட்டீங்களே… என் பேச்சையும் மதிக்க மாட்டீங்கீறீங்களே, இனிமேல் என் பேச்சு எடுபடவும் செய்யாது…, இனி நான் உங்களுக்குத் தேவைப்பட மாட்டேன்னு எனக்குப் புரிஞ்சு போச்சு…! அதான் எனக்கு இப்புடி ஆனதை பத்தி உங்ககிட்ட நான் மூச்சுக்கூட விடல போதுமா…”
என்றுவிட்டு சாராதா ஒரு கணம் மூச்சு வாங்கவும், தன் பார்வையைத் தன் பிள்ளைகளிடம் இருந்து விலக்கி, டேவிட்டின் பக்கமாக கனிவோடு திருப்பினவள்,
“ஆனா…, எனக்கு இப்புடி ஒரு நிலைமை வந்ததுலதான் என் வாழ்க்கையில ஒரு பெரிய பொக்கிஷத்தை கண்டேன்… அது டேவிட்தான்…! என்னைய மருத்துவமனையில சேர்த்ததுல இருந்து, டாக்டர்கிட்ட பேசினது, மருந்து வாங்கிட்டு வந்தது, இரவு பகலா தூங்காம என்னய கவனிச்சது, எனக்கு ஏசி குளிருதுன்னு போர்வை போத்தி விட்டது, பில்லுக்கெல்லாம் பே பண்ணது, குளுக்கோஸ் சரியா ஏறுதான்னு கண் கொத்தி பாம்பாய் பார்த்தது, என்னய குழந்தைய போல கவனித்து ஊட்டிவிட்டு சாப்பிட வச்சது, மாத்திரை கொடுத்தது, முகத்தை துடைச்சு விட்டதுன்னு… எல்லாமே, அத்தனையுமே அவர்தான் எனக்கு பார்த்தார்…!”
எனவும் சாரதா சொல்லச் சொல்ல…, அங்கிருந்த யாழினிக்கும் வருணிக்கும் கண்கள் குளமாகின… குமரன் தலைகுனிந்து தரையை வெறித்தப்படியே பார்த்துக் கொண்டிருக்க…. சாராதா மீண்டும் தன் பேச்சை தொடங்கினவள் ,
“அந்த நிமிஷம்தான் எனக்கு உங்கப்பா குணா ஞாபகம் வந்துட்டார்…”
என்றாள் சாரதா, நெகிழ்ச்சியின் உச்சத்தில் அப்படியே காதல் கணவரின் பழைய நினைவுகளையும் அவள் அசைப் போட,
“என் டெலிவரியின் போதெல்லாம் உங்கப்பா இப்புடித்தான் என்னய தாங்கு தாங்குன்னு தாங்கினார்…. அவர் இறக்கிற தருவாயில கூட,
‘பிள்ளைங்க அவங்கவங்க வழிய பார்த்துட்டு போயிடுவாங்க சாரதா…, நீ தனியா இருக்காத…, யாரையாவது மறுமணம் பண்ணிக்கோ’ன்னு
என்னிடம் சொன்னார்…. நான்தான் அப்போலாம் பிடிவாதமா வேற ஒரு கல்யாணத்த பண்ணிக்கல…. நீங்க எல்லாம் கடைசி வரைக்கும் என்கூடவே இருப்பீங்கன்னு தப்பா நினைச்சுட்டேன்…! , அதுமட்டுமல்ல, உங்கப்பா இடத்தை இந்த உலகத்துல யாராலையும் நிரப்ப முடியாதுன்னும் நினைச்சேன்…. ஆனா… டேவிட்டை முதல் நாள்ல பார்த்தப்பவே எனக்கு உங்கப்பா ஞாபகம்தான் வந்துச்சு…. உங்கப்பாவே எனக்காக மறுபிறவி எடுத்து வந்தது போல இருந்துச்சு…!”
என தன் நெஞ்சிலிருந்த அத்தனை பாரத்தையும் இறக்கி வைத்த நிம்மதியோடு சாரதா பேசி முடிக்கவும், அவளது கலங்கிய கண்களையும் தவிப்பையும் உணர்ந்த டேவிட், எதுவும் பேசாமல் தன் அகன்ற தோளை அவளுக்கு ஆதரவாகக் கொடுத்தான்… அவளுமே எந்தத் தயக்கமும் இன்றி, உலகையே வென்ற நிம்மதியோடு டேவிட்டின் தோளில் மென்மையாகச் சாய்ந்து கொள்ளவும்…. அந்தக் காட்சியைப் பார்த்த வருணியின் முகத்தில் ஒரு நிறைவான புன்னகை மலர, குமரனும் யாழினியும் தங்கள் தாயின் காதலையும் வலியையும் முழுமையாகப் புரிந்துகொண்டவர்களாக அமைதியாய் நின்றிருந்தார்கள்….
🫂 தோள் சாய்ந்திடும் தருணம் வரும்…
இன்னும் பிரச்சனை இருக்கா …? இல்லையா…? இருக்கு ஆன் தி வே கம்மிங் அது யாரு…?, பார்ப்போம்….