அத்தியாயம்-10-
“என்ன மம்மி… நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா….?, ஏன் இப்புடி சிரிக்கிறீங்க நீங்க….?”
என்று கேள்வியாக தன் வில் போன்ற ஒற்றை புருவத்தை உயர்த்தியபடியே, வருணி கேட்கவும்…. அதற்குப் புன்னகை மாறாத முகத்துடன் சாரதா சொன்னவள்,
“அதுவா வருமா… சமையலை பொறுத்தவரைக்கும் என்னைவிட டேவிட் ரொம்ப வல்லவர் தெரியுமா…?, அவர் செமயா சமைப்பாருடி….”
இப்படி அம்மா சொன்னதைக் கேட்டதும் வருணியின் கண்கள் ஆச்சிரியத்தில் விரிய…. அப்படியே உடனே, தன் வழக்கமான நக்கல் குரலில் டேவிட்டைப் பார்த்துக் கேட்கிறவள்,
”அப்புடியா சங்கதி அங்கிள்..?, அப்போ மம்மிக்கு சமையல் செஞ்சு போட்டுத்தான் இம்பரஸூம், லவ் ப்ரோபோஸூம் பண்ணி வீழ்த்தினீங்களா என்ன…?”
என்று வருணி நக்கலாகக் கேட்ட அந்தக்கேள்வியைக் கேட்கவும், அங்கே நின்றிருந்த டேவிட் லேசாக புன்னகைக்க, சாரதாவோ பதறிப்போய் அவளை இடைமறித்துத் தடுத்தவள்,
” இல்ல…. இல்லவே இல்ல… அப்படியெல்லாம் ஒண்ணுமே இல்ல வருமா…!”
என்று அவசரமாக மறுத்த சாரதாவோ, தன் கடந்த கால நினைவுகளான அன்று டேவிடுடன் நடந்த அந்த சுவாரஸ்யமான சம்பவத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கவும்…. அவர் சொன்ன அந்த ரகசியத்தைக் கேட்க வருணியின் கண்கள் அதிர்ச்சியிலும் வியப்பிலும் இன்னும் பெரிதாக விரிந்தன….
“அன்னைக்கு விடியற்காலை… நான் எப்பவும் போல இந்த வீட்டு வாசல்ல கோலம் போடறதுக்காக வீட்டை விட்டு வெளியில வந்து , வாசல்ல பெருக்கிட்டிருந்தப்போ லேசா தலை சுற்றவே, சுதாரிச்சுக்க முடியாம நான் தடுமாறிக்கிட்டிருக்க…. அதுவரைக்குமே இந்த தெருவுல யார்கிட்டயும் பெருசா நான் பழகாததால, வழக்கம் போலவே எனக்கெதிராக போறவங்க வர்றவங்கன்னு யாரும் என்னய பாத்து ஏன் தடுமாறுகிறேன்னு பொருட்படுத்தவேயில்லல, என்னாச்சு …?, ஏதாச்சுன்னும் என்ட்ட வந்து கேட்கவுமில்ல…. அப்படியே கண்டுக்காமவே போயிட்டாங்க…!, அப்போலாம் டேவிட்டுக்கும் எனக்குமாக எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எந்த நட்பு! பழக்கமும் கிடையாது…. ஆனா, நான் தடுமாறுவதை பாத்துட்டு சும்மா இருக்க முடியாம அவரு என்கிட்ட ஓட்டமும் நடையுமாக ஓடோடி வந்து என்னாச்சுன்னு அக்கறையா விசாரிக்க…. அப்பவும் நான் அவரை கொஞ்சம் கூட மதிக்கல …!!! மாறாக,
” இது உங்களுக்கு தேவையில்லாத வேலை…? , இந்த தெருவுல யாருக்கும் இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன் வந்தது..?”ன்னு…
அவரு முகத்துல அறைஞ்ச மாதிரி ரொம்ப கடுமையா பேசினேன்… அதுக்கு அப்புறமுமே அவர் என்னை விடாது அக்கறை காமிக்கவும்… நான் இன்னும் என்னவெல்லாம் சொன்னேனோ, எனக்கே சரியா ஞாபகம் இல்லை வருமா… ஆனா, ரெம்பவும் கடுமையாக பேசினேன்னு தான் நினைக்குறேன்… !”
என்று சாரதா குற்ற உணர்ச்சியோடு தன் பழைய நினைவுகளை மகளிடம் பகிர்ந்து ஒப்புக்கொள்ளவும்….அதைக் கேட்டுக் கொண்டிருந்த போதே இடைமறித்த வருணி பதறிப்போனவளாக,
“அய்யோ மம்மி….! இப்புடி ஒரு விஷயம் நடந்திருக்கா என்ன…?, எங்ககிட்டலாம் நீங்க இதை பத்தி சொன்னதே இல்லயே ஏன்…!”
என்று வருணி தாங்க முடியாத கோபத்துடனேயும் அக்கறை கலந்த குரலிலும் தன் தாயைக் கடிந்து கொள்ளவும் …சாரதா சற்று கலங்கியவாறு,
“பொறு வருமா… முழுசா கேட்டுட்டு பேசு…, இதெல்லாமே ஒரு காரணத்துக்காகத்தான் நடந்துச்சு…!”
என்று தன் மகளைச் சமாதானப்படுத்த முயன்றாள்….ஆனாலும் விடாப்பிடியாக நின்றிருந்த வருணியோ,
“இல்ல மம்மி…, உங்க மேல எனக்கு கோபம் வரத்தான் செய்யும்…! ,இவ்ளோ பெரிய விஷயம் நடந்திருக்கு…, ஆனா நீங்க என்கிட்ட இதுவரைக்குமே சொன்னதேயில்லயே ஏன்…!”
என்று பிடிவாதமாக சாராதாவை பார்த்து தீயாக வருணி முறைக்கவும்….அப்போது தலையிட்ட டேவிட்டோ, ஒரு தந்தையின் கனிவோடும் அரவணைப்போடும் அவளது தோளைத் தட்டி,
“அம்மா சொல்றதை முழுசா கேட்காம உடனே கோபப்பட்டா எப்படி வருமா…?, கொஞ்சம் அமைதியா கேளு,”
என்று சாந்தப்படுத்தினார்… அப்படியே அவர் சொன்ன கூற்றுக்கு சாரதாவும் ஆமோதிப்பாய் தன் தலையை மென்மையாக ஆட்டினாள்….. உடனே வருணி,
“சரிங்க அங்கிள்… ஆனா அங்கிள்…. மம்மி மேல எனக்கு கோபம் இன்னமும் இருக்கு…, இப்போதைக்கு அதை விட்டுறேன்… ஆனா அங்கிள்! நடந்த மிச்சக் கதையை நீங்க எனக்கு சொல்லுங்க, நான் கேட்கிறேன்… மம்மி என்கிட்ட எதுவும் சொல்ல வேணாம்…,”
எ. ன்று வருணி கோபமாக கண்டிப்புடனே சொல்லிவிடவும்,
“அதுவும் சரிதான்!”
என்று தாயையும் மகளையுமாக சமயானப்படுத்திவிட்டு, புன்னகைத்த டேவிட், அவனே தொடர்ந்து பேசினவன்,
”உங்கம்மா அப்படியே என்னய திட்டிக்கிட்டே தடுமாறியப்படியே என் பக்கமாக கேள்வி கேட்டு கொண்டே வந்து , என தோள்! மேலாகவே மயங்கி சரிஞ்சும் விழுந்துவிட்டாள்…, அதனால அப்படியே நான் உடனேயே அவளுக்கு முதலுதவியும் செய்து பார்க்க… பலனில்லை…. ஆனாலும், நான் அவளை அப்படியே விட்டுட்டு போகவுமில்ல…. அவளை கைதாங்கலாக பிடித்தபடியே உடனேயும் ஆம்புலன்ஸுக்கு கால் பண்ணினேன்… ஆம்புலன்ஸும் வந்ததும், மயக்க நிலையிலே இருந்த உங்கம்மாவை நர்ஸ் உதிவியோடு, நானுமாக சேர்ந்துக்கொண்டு அதிலே ஏற்றி, நானுமே அதிலேயே ஏறிக்கொண்டும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து, அப்பவுமே மயக்க நிலையிலே இருந்த சாராதாவை ஸ்டிரேச்சர் உதவியோடு அவசரப் பிரிவுக்கும் அழைத்துச் சென்று சேர்த்தேன்….!”
என்று டேவிட் சொன்ன அந்த வார்த்தையைக் கேட்டதும், வருணியின் கண்கள் கோபத்தில் இன்னும் சிவக்கவே… அப்படியே நேராகத் தன் அம்மாவை ஒரு கேள்விக்குறிக் பார்வையால் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்…. அப்போது சமையலறையின் அருகில் வந்து சேர்ந்த குமரனுமே, இந்த கதையைக் கேட்டுவிடவும்…, அவனுமே அதிர்ச்சியுடன் குறுக்கிட்டவன்,
“என்ன அங்கிள் சொல்றீங்க..?, இப்புடி ஒரு விஷயம் நடந்ததா…? எனக்கு இது எதுவுமே தெரியாதே…!”
என்று தன் பங்குக்கு அவனுமே அதிருப்தியையும் அம்மாவைக் குறித்த கவலையையும் வெளிப்படுத்தவும்….அப்போதுமே , குமரனையும் சாந்தப்படுத்திய டேவிட் தான் விட்ட பேச்சை மீண்டும் தொடர்ந்தவன்,
”மருத்துவர் உங்கம்மாவ பரிசோதித்துவிட்டு,
‘ இவங்களுக்கு அதிகப்படியான மனவுலைச்சல் இருந்திருக்க …. அதனால முறையான தூக்கமின்மையும் இருந்திருக்கனும், அப்படியே சுகர்! மற்றும் பிபி! மாத்திரைகளை சரியாக எடுத்துக்கொள்ளாமல் இருந்திருக்கனும்… அதான் இந்த மயக்கத்திற்கு காரணம்…. நல்லவேளை, சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்கு அழைத்து வந்துட்டீங்க… நீங்க இவங்க கணவரா? ‘
அப்படின்னு டாக்டர் என்கிட்ட கேட்டார்…. அப்போ நான்,
‘இல்ல டாக்டர், நான் அவங்களோட பக்கத்து வீட்டுக்காரர்தான்…’
அப்படின்னு சொன்னேன்…. அதைக்கேட்ட டாக்டர் இன்னும் அதிப்படியான நல்ல வார்த்தைகளை கூறி என்னை மனதாரப் பாராட்டி வாழ்த்தினார்…”
என டேவிட் பேசி முடிப்பதற்குள், அங்கே சமையலறையின் வாசலை நோக்கி வந்துச் சேர்ந்திருந்த யாழினியும் உரத்த குரலிலே, அதே சமயம் மிகுந்த பாராட்டுடனே டேவிட்டை நோக்கி அவரிடம் ,
“அங்கிள்….! நாங்க உண்மையிலேயே இதுக்காக உங்கள மனதார பாராட்டித்தான் ஆகணும்!”
என்று சொல்லிக்கொண்டே அவ உள்ளே நுழையவும் …. தொடர்ந்து அவள் பேசும்போது,
“பக்கத்து வீட்டுக்காரராக இருந்து கொண்டு, அதுவும் எங்க ஆண்டி உங்கட்ட ஆரம்பத்துல ரொம்ப கடுமையா நடந்துக்கிட்டாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாம அவங்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாத்தியிருக்கீங்களே… யூ ஆர் கிரேட் அங்கிள்…!”
என்று மனமாரப் பாராட்டினவள் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்த சாரதாவோ, அப்படியே உடனே இடைமறித்து ஒரு அதிரடித் திருப்பத்தையுமே சொல்ல…,
”நீ இன்னும் ஆச்சரியப்படுற மாதுரி அதுல மிச்ச சம்பவமும் இருக்கு யாழினி…! அதனால, டேவிட் சொல்றதை நடுவுல மறிக்காம முழுமையா கேளுங்க எல்லோரும்… அப்போதான் உங்களுக்கு முழுமையா நடந்தது என்னான்னு புரியும்…!”
என்று சொல்லிவிட்டுப் புன்னகைத்தாள் சாரதா.
“அப்போ சரி, நாங்களும் கேட்கிறோம்… சொல்லுங்க அங்கிள்…”
என்றுவிட்டு , வருணியும் குமரனும் ஆவலோடும் எதிர்பார்ப்போடும் டேவிட்டைப் பார்க்கவும்…. யாழினியும் எல்லாரையும் தேடிக்கொண்டு சம்யலறைக்கு வந்துச் சேர்ந்த ஜோவிகா பாப்பாவும் கூட அமைதியாக நின்று டேவிட்டின் முகத்தையே உற்று நோக்கினர்…. அப்படியாக எல்லோருடைய பார்வையும் தன் மீது இருப்பதைப் பார்த்துவிட்டு டேவிட், ஒரு மெல்லிய பெருமூச்சுடன் அந்த உணர்ச்சிகரமான பக்கத்தைத் திறகக,
”சாருமா சொல்ற அளவுக்கு அது அவ்வளவு பெரிய விஷயமெல்லாம் இல்லப்பா…”
என்றுவிட்டு, தன் வழக்கமான பெருந்தன்மையோடு ஆரம்பித்தவர்,
”டாக்டர் உங்கம்மாவ பரிசோதித்துவிட்டு, ‘இவங்களுக்கு உடம்பு ரொம்ப பலவீனமா இருக்கு… ரீசன் பல நாளா மன உளைசல்ல சாப்பிடாமலேயே இருந்திருக்காங்க இவுங்க… . சோ இவுங்களுக்கு பர்ஸ்ட் குளுக்கோஸ் ஏத்தனும், அதோடு சில நாள் அப்சர்வேஷன்ல வைச்சு சாப்பாடு , மருந்து, மாத்திரைன்னு ஒலுங்கா எடுக்க வைச்சதான் அவங்க உடம்பு சரிபண்ண முடியும்’னு சொல்லிட்டாரு…. உடனே வார்ட் பாய் ஸ்டிரெச்சரை எடுத்துட்டு வந்து, உங்கம்மாவை நார்மல் வார்டுக்கு மாற்றத் தொடங்கினான்….அப்போ அந்த மயக்க நிலையிலும் கூட… உங்கம்மா திடீர்னு பதறிப்போய், ‘குணா…!!!!!’ அப்படின்னு முனகியபடியே என் கையை பலமா பிடிச்சுக்கிட்டாங்கப்பா…!”
டேவிட் அந்த இடத்தைச் சொன்ன அந்த வினாடி, சமையலறையின் மொத்தச் சூழலும் ஒரு கணத்தில் அமைதியாகிப் போக…., காரணம்டேவிட் அவரே தன் கடந்த கால நினைவுகளில் சற்று மூழ்கி, குரல் தழுதழுக்கத் தொடர்ந்தவர்,
“உங்கம்மா என் கைய பிடிச்ச அந்த ஒரு நொடி… எனக்கு என் இமை மூடிப் பிரிந்த என் மனைவி கிருபாவோட ஞாபகம் தான் கண்ணுக்குள்ள வந்து நின்னுது…. எங்களுக்கு கல்யாணமாகி, மூன்றாவது குழந்தைக்கு அவ கர்ப்பமா இருந்தப்போ… இதே மாதிரிதான் ரோட்ல நடந்து போகும்போது திடீர்னு மயங்கி விழுந்தவளை யாரும் கண்டுக்காம விட்டுட்டாங்க…. லாரி ஏறி இறங்கி என் கிருபா பரிதாபமா இறந்துபோன அந்தத் துயரமான ஞாபகம் என் கண்முன்னாடி நிழலாடுச்சு….. கடைசியா அவ மருத்துவமனை ஸ்டிரெச்சரில் படுத்திருந்தபோதும், என் கிருபா! இதே மாதிரிதான் என் கையைப் பலமா பிடிச்சுக்கிட்டாள்…. அதே முகத்தோற்றம், அதே தவிப்போட அன்னைக்கு சாரதா என் கைய பிடிச்சத பார்த்ததும்… எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல… மனசு அப்படியே துடிச்சு போய் நொந்து போயிடுச்சு!… அப்பதான் நான் ஒரு முடிவுக்கு வந்தேன்…
‘ அன்னைக்கு என் கிருபாவ காப்பாற்ற முடியல… ஆனா இன்னைக்கு என் கண்முன்னாடி இருக்குற இந்த பகக்த்துவீட்டு சாரதாவ என் உயிரை கொடுத்தாவது காப்பாத்தணும்…! அவ முழுசா குணமடைந்து இயல்பு நிலைக்கு வரும் வரை அவளுக்குத் துணையா நான் இருக்கணும்’னு
அன்னைக்கே மனசுல உறுதியா முடிவு பண்ணிட்டேன்…!”
என்று டேவிட் பேசி முடித்த அந்த வார்த்தைகள் கேட்கவும்… அந்த இடத்தை முற்றிலுமாக நிசப்தமாக்கின…
அப்படியாக அவர் தன் மனைவியின் இழப்பை நினைத்து உருகிய விதமும், அதே காதலோடும் அக்கறையோடும் அன்று சாரதாவின் கரத்தைப் பற்றிக் காப்பாற்றிய அந்தத் தூய மனிதநேயமும் அவர் வாயலயே சொல்லக் கேட்டு… , அங்கே நின்றிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கவும்…. டேவிட்டின அந்தப் பெருந்தன்மையைக் கேட்டுத் தலைகுனிந்து நின்றனர்….
🫂தோள் சாய்ந்திடும் தருணம் வரும்…
2 comments
அருமையான கதை நகர்வுகள் மா 👌👌👌👌👌👌👌👌👌👌👌 சூப்பர்
நன்றிங்க சகி🙏💛♥️🙏😇😇