அத்தியாயம்-4-
அந்த பார்ட்டி ஹாலில் ஒரு நிமிடம் ஊமையாய் உறைந்திருந்தது அந்தச் சூழல்…. காரணம் , சாரதா டேவிட்டை பற்றி சொல்லியிருக்கவும்….
அங்கே விளாசமாய்.அலங்கரிக்கப்பட்டிருந்த டைனிங் டேபிளில் அமர்ந்தப்படியே குழுமியிருந்த சாரதா குடும்பத்து உறுப்பினர்கள் யாவருமே அவரவர் தங்கள் கணிப்புக்கேற்ப சாரதா சொன்னதை வைத்து யுகித்திருக்க….,
அப்படியாக தாங்கள் சொல்ல நினைக்கும் சொந்த விஷயத்திற்கு சாரதா சம்மதிப்பாரா…?, இல்லையா …?, என்றும் தங்களுக்குள்ளேயே ரகசியமாய் விவாதித்துக் கொண்டிருந்தனர் குமரனும் யாழினியும்…. மறுபுறம், ரேப்பர் வருணியோ ,
‘மம்மி தன்னைத்தான் டேவிட்டுக்கு வரனாக பார்க்கிறாளோ’…?
என்று முற்றிலும் திசைமாறி தன் கற்பனையில் மிதந்து கொண்டிருக்கவும்….. அவர்களையெல்லாம் கவனித்த சாரதாவோ, அவர்களின் முகப்பாடத்தை எல்லாம். படித்தவளாக , அவர்களின் எந்தவித எதிர்பார்ப்புகளுக்கும் தன் மனதிலே இடம் தராமலும்…., தன் நெஞ்சில் தேங்கியிருந்த அத்தனை தயக்கங்களையும் உதறித் தள்ளிவிட்டு, ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்துப்பிடித்துத் தன் முழுத் தைரியத்தையும் வரவழைத்துக் கொள்ளவும்… சாரதாவின் கண்கள் நேர்கோட்டில் நிலைக்க, உறுதியான குரலிலே ,
“நான் இவரைத்தான் மறுமணம் செய்து கொள்ள போகிறேன்!”
என்றவள் உதிர்த்த வார்த்தைகள் அந்த அறையை அதிரச் செய்த விநாடி, தாங்கள் மனசுக்குள் நினைத்த ஒரு விஷயத்தை வெளிப்படையாக இங்கே சொல்லத் தயங்கின நேரம் பார்த்து , சாரதா இப்படி அவர் சொல்ல நினைத்த விசயத்தை வெளிப்படையாக முந்திக் கொண்டு சொல்லிவிட்டாரே…. என்று அதிர்ந்து போய் விழித்தனர் சாரதாவின் மகனும் மருமகளுமாக சேர்ந்து…
அதே சமயம், தன் புரிதலில் ஏற்ப்பட்ட தவறை எண்ணி! நாக்கைக் கடித்துக் கொண்டு நின்றிருந்த வருணிக்குத் தான் செய்த முட்டாள்தனத்தை தன் மனசாட்சி எடுத்துரைக்க…..
’எப்ப பார்த்தாலும் அம்மா என்கிடட , ” நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கோங்கம்மா”னு போன் போட்டு பேசித் தொந்தரவு செய்றதுனால, இதுவும் அந்த மாதுரி ஒரு விஷயம் தான்னும், என்ட்ட சொல்லாமலே அம்மாவ எடுத்த முடிவுனும் நான் சுயநலமா தப்பா நினைச்சுட்டேனே…!,
என்று கூனிக்குறுகிறவளுக்கு மேலும்,
‘அம்மாவுக்கும் ஒரு இதயம்! உண்டு, அதில் அன்பும் காதலும் இருக்கிறது…. என்பதையுமே நாம் சிந்திக்கத் தவறிவிட்டோமே…. ‘
என்றும் அவளது மனம் குற்றவுணர்வில் துடிக்கவும்…. அதே நேரம், அவளின் தம்பி குமரனும் அவனது மனைவி யாழினியுமாக சேர்ந்துக் கொண்டு, ஏதோ பெரிய தப்பு! செய்துவிட்டு மாட்டியவர்களைப் போலவே, ஒருவருக்கொருவர் அவர்களுக்குள்ளாக பேசி கிசு கிசுத்துக்கொண்டும், திருட்டு முழி விழித்தும் கொண்டிருந்தனர்…. அவர்களின் அந்த விசித்திரமான பதற்றத்தை சாரதா, டேவிட், வருணியுமாக ஒரே கணத்தில் கவனித்துவிடவும்…..
”என்னடா இது இப்புடி திரு திருன்னு முழிக்கிறீங்க …? , அப்படி என்ன விஷயம் இருக்கு உங்கட்ட….?, சொல்லனும்ன்னா சொல்லுங்க….?”
என்று அனைவருமாக ஒரே குரலில் விசாரிக்க.., திக்கித் திணறித் தத்தளித்தார்கள் கணவன் மனைவி இருவருமாக பிறகு கடைசியில் வேறு வழியின்றி ஒருவழியாக, ‘ஜோவிகா பாப்பாவிற்கு ஒரு தம்பியோ தங்கையோ வரப் போகிறது!!!…’ என்கிற செய்தியை மிகச் சூசகமாக தம்பதியர்கள் வெளிப்படுத்தவும்…..அதைக்கேட்டதும் குடும்பதத்னருக்கு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் ஒருசேர எழ,
“ஓகோ! யாழினி ரெண்டாவது குழந்தைக்கு கர்ப்பமா இருக்காளா அவ…?”
என்றுவிட்டு, குதூகலமாய் வாழ்த்துக்களை அள்ளிக் குவித்தது குடும்பம்…. ஆனாலும், இந்தச் சந்தோஷமான விஷயத்தைச் சொல்லும்போது எதற்கு இவ்வளவு பதற்றமும் திருட்டு விழியும் இருந்தது தம்பதியர்களிடம் என்ற கேள்வியுமே அனைவர் முகத்திலும் எழவே, அதை கவனித்துவிட்ட யாழினி மெலிந்த குரலிலே, அவளாகவே உண்மையை ஒப்புக்கொண்டு,
‘தான் உடல்ரீதியாக மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், டாக்டர் தற்போதைய நிலைக்கு முறையான ஓய்வு! அவசியம்‘
என்று எச்சரித்திருப்பதாகவும் கூறினவள்…. அதிலும் குறிப்பாக, அவளைத் கவனித்துக் கொள்ள வீட்டில் ஒரு பெரியவர், அதுவும் இந்த விசயத்தில் கைதேர்ந்த ஒரு பெண்மணியின் அன்பும்! அரவணைப்பும் இருப்பது எவ்வளவு அவசியமானது என்பதைப் பற்றியும் மருத்துவர் தன்னிடம் சொன்னார் என பேசத் தொடங்கினாள் , அப்போது சாரதா இடைமறித்து குறுக்கிட்டு,
“ஏம்மா யாழினி ஒரு நிமிஷம் இரு…., உனக்கு உடல்நிலை சரியில்லன்னும், ரொம்ப வீக்கா இருக்கேன்னும் இவ்வளவு நாளா என்ட்ட ஏன் நீ சொல்லவே இல்ல….?”
என்று பரிவோடு சாரதா கேட்க…அதற்கு யாழினி வெட்கத்துடன் மெல்லிய தயக்கமுமாக,
” ஆண்டி! இப்பதான் டாக்டர் செக்கப் பண்ணிட்டு சொன்னாங்க… அதான் இங்க வரவும் லேட்டாச்சு…. சோர்வா இருக்கறதால டாக்டர் என்னய கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க சொன்னவரு அப்படியே டாக்டர் இதையும் சொன்னாரு….”
என்று மெல்லிய குரலில் கூறினாள்…. உடனே, குமரனும் இடைமறித்து குறுக்கிட்டு, தன் மனைவியை குறித்து,
“ஆமா மம்மி… அவ எப்ப பாத்தாலும் வேலை வேலைன்னு காசு! பணம்! சம்பாதிக்க ஓயமா ஓட்டம் புடிக்குறா….. அதான் இனிமே நீ கொஞ்ச நாளைக்கு எந்த வேலையும் செய்ய கூடாதுன்னு நானும் அவட்ட சொல்லியிருக்கேன் …. அதோடு வீட்டு வேலையும் கடக்கே அதையுமே அவ தானே பாக்குற… அத செய்யவும் அவளுக்கு நான் தடை போட்டுட்டேன்… நான் சொன்னதும் செய்தததும் சரிதானேமா…?”
என்று பாசத்துடன் அக்கரையாக சுட்டிக்காட்டி குமரன் பேசவும்…. சாரதா சிறுப் புன்னகையுடனே மகன் மற்றும் மருமகளை பார்த்து,
“தம்பி நீ சொல்றதும் சரிதான் நல்லமுடிவு…. அதே போல யாழினிட்ட டாக்டர் இந்த மாதிரி சமயங்கள்ல வீட்டுல ஒரு பெரியவங்களோட கவனிப்பு ரொம்ப முக்கியம்…., அதுவும் கூட கைதேர்ந்த ஒரு பெண் இருந்தா இன்னும் கூடுதல் கவனிப்பு இருக்கும்ன்னு சரியாதான் சொல்லியிருக்காரு…. அதனால யாழினியை நல்லபடியா பார்த்துக்க அவங்கம்மாவை வரவழைக்க வேண்டியதானே ….”
என்று சாரதா அறிவுறுத்த…. வருணியும் தன் பங்கிற்கு யாழினியின் அருகில் சென்றவள், வாழ்த்துக்களோடு அம்மா சொன்னதையே அவளும் சொல்லவும்… யாழினியின் முகம் சுருங்கி! தலையை தொங்கப்போட்டாள்… ‘ஏன்..?’ என எல்லாருமாக விசாரிக்க…. மேலும் , ஊமையாகவே பதில் சொல்லாது நின்றிருந்தாள் யாழினி … அதன் காரணமாக குமரனே தலையிட்டு , யாழினி தன்னை காதல் கல்யாணம்! பண்ணிக் கொண்டதால், அவள் குடும்பத்தில் இன்னுமே அவளை சேர்க்காமலும் , பேசாமலும் இருப்பதாக சொல்லவும்… சாராதா இடைமறித்தவள் ,
“ இரு…இரு…. இத ஏன் என்கிட்ட நீங்க இவ்ளோ நாளா சொல்லவே இல்ல …?”
“அ….து வந்து மம்மி … அவ வீட்டாளுகள எதிர்த்ததால உங்ககிட்டயும் நாங்க லவ் மேரேஜ் பண்ணிக்க போறோம்ன்னு சொல்லாமலே மேரேஜ் பண்ணிக்கிட்டோம் …. அதோடு தனி குடித்தனமும் போய்ட்டோம்ல…. முதல் டெலிவரி எங்களுக்கு ஒரு விசயமா தெரியல….ஏன்னா யாழினி அப்போ நல்ல திடமா இருந்தா … இப்போ இந்த மூனு வருஷத்துல அவளுக்கு ஒரே அலைச்சல் வேலை விசயமா…. அப்புறம் குழந்தை ஜோ அவளையும் அவ தானே பாத்துக்கிற …. வீட்டு வேலையும் செய்யுற …. அதான் வீக் ஆகீட்ட…. நானும் கூட மாட ஒத்தாசை செய்தாலும் அவ கூடவே வீட்ல இருக்க முடியாதுல … நானும் வேலைக்கு போகனும்ல…இதா மம்மி உங்க கிட்ட சொல்லமுடியாத ரீசன்…. ”
“நீங்க லவ் மேரேஜ்! பண்ணிட்டு போயிட்டீங்கனோ … தனிகுடித்தனம்! போயிட்டீங்கனோ நான் என்னக்காவது உங்கள பிரிச்சு பார்த்தானே இல்லயே … உங்களுக்கு ஸ்பேஸ் தானே குடுத்தேன் … ஆனாலும் , பேசிக்கிட்டு தானே இருந்தேன் … உங்க வீட்டுக்கும் நான் வந்தா முகத்தை தூக்கி வச்சுப்பீங்க… எங்க வீட்டுக்கு இந்த மாதுரி மீட் பண்ணி சாப்பிட கூப்பிட்டாலுமே வருவீங்க…. ஆனா… அப்பவுமே முகத்த தூக்கி வச்சுப்பீங்க … ஏன்னு தான் புரியாது … கேட்டாலும் உங்கிட்ட எந்த பதிலும் இருக்காது… அப்பவுமே உங்களுக்கு ஸ்பேஸ் தானே குடுத்துட்டேன்… இப்ப தான் உண்மை உங்கட்ட இருந்து சரியா வெளிய வருது….”
“யெஸ் மம்மி சாரி ….”
என்று குமரனும் அதே போன்றதொரு மன்னிப்பை யாழினியும் கேட்கவும் … வருணியின் மூளையில் ஒரு பொறி தட்டியது,
‘அதாவது ப்ரோவும் அவன் வைஃப்பும் இப்போ வந்து இங்க இத சொல்லறதுக்கு ரீசன் என்ன…?, அம்மாவ அவங்களுடன் வந்து இருக்க சொல்லறாங்களோ ….?’
என்று நினைத்தவளின் கூற்றை போலவே மெல்ல குமரனும் இதையே சொல்லவும்…. இடைமறித்த வருணி ,
“என்ன ப்ரோ இப்புடி சொல்லுற நீ….???, மம்மி இப்ப தான் மனம் திறந்து பேசினாங்க…. அவங்களுக்கும் ஒரு லைஃப் இருக்கு ப்ரோ…. அவங்க உங்களுக்கு எவ்ளோ ஸ்பேஸ் குடுத்தாங்கன்னு எனக்கு நல்லா தெரியும் ப்ரோ…. நம்ம சின்ன வயசா இருக்கும் போதே நம்ம டாடி இறந்துட்டாரு …. ஆனா ப்ரோ அம்மா சிங்கிள் மதரா இருந்துதான் நம்மள வளத்தாங்க… இத்தனைக்கும் கிட்டதட்ட சாவின் விளிம்பில் இருக்கிறப்ப கூட ஒரு நல்ல லவ்வரா ஹஸ்பெண்டா டாடி மம்மிய செகண்ட் மேரேஜ் பண்ணிக்க சொன்னாரு தெரியுமா …. நீ சின்ன பையன் நான் உன்ன விட முத்தவ டாடி அப்புடி சொன்னப்போ, அவர் கூடவே பக்கத்துல நின்றிருந்த நான் அந்த வார்த்தைகளைலாம் கேட்டுருக்கேன் தெரியுமா…. மம்மி அப்போ கூட மாட்டேன்னு மறுத்துட்டாங்க தெரியுமா … அதனால டாடி என் கைய புடிச்சு, ‘ அம்மாவ கை விட்டுட்டாத வருமா… யாரையாவது அவளை மேரேஜ் பண்ணிக்க சொல்லு …. அப்புறம் தனிமரமா ஆயிடுவா …’ ன்னு சொல்லிட்டு என் கையை விடுவித்த டாடி அப்புறம் மூச்சையும் விட்டு இறந்து போயிட்டாரு தெரியுமா ப்ரோ….”
என்றுவிட்டு வருணி மார்டன் மங்கை என்றாலும் செண்டிமெண்டாக கவலையுற்று கண்கலங்கினாள்…. அதனை கேட்டுக் கொண்டிருந்த சாரதாவுக்கும் தன் முந்தைய காதல் கணவன் சிவாவின் ஞாபகமும் அவனின் இறப்பும் ஞாபகம் வர அவளுமே கண்கலங்கவும்…. ஆறுதலாக அவளுக்கு ஒரு தோள்! கொடுக்கும் நண்பனாய் அவள் அருகே நின்றப்படியே டேவிட் அவளைத் தேற்றுகிறார்….
🫂 தோள் சாய்ந்திடும் தருணம் வரும்…
🍀 இப்போ சாரதா என்ன முடிவு எடுப்பாள்…?
,🍀அவருக்கு மறுமணம் சரியா …?,இல்லை மகன் மருமகளுக்காய் அதை தியாகம் செய்துவிடுவது தான் சரியா…?
♥️🫂உங்க கெஸ்ஸை சொல்லுங்க பட்டூஸ்…?