அத்தியாயம்-9-
பெரியவர்களின் சுயநலமும் குற்ற உணர்ச்சியும் அந்த இடத்தை மௌனமாக்கியிருந்த வேளையில், தன் மழலை மொழியால் அந்தச் சூழலையே குட்டி ஜோவிகா மாற்றவும்.…. தன் அம்மா யாழினியையும் அப்பா குமரனையும் மாறி மாறிப் பார்த்தவள், கொஞ்சும் குரலில் தன் ஆசையை வெளிப்படுத்தி,
”மம்மி… டாடி… நாம சாரதா பாட்டி வீட்டுக்கே போவோம்! அது நம்ம குணா தாத்தா(சாரதா முன்னால் கணவன் ) வீடுதானே…?, நீங்க என்னைய அங்கே கூட்டிட்டு போகவே மாட்டேன்றிங்க… இனியாவது நாம எஎல்லாருமா ஒண்ணாவே அங்கேயே இருக்கலாமே…, ! நான் குணா தாத்தாவை நேரில் பார்த்ததே இல்ல… ஆனா, டேவிட் தாத்தாவ நான் பாக்குறேனே, அவர் ரொம்ப குட் கிராண்ட்பா போல தானே தெரியுறாரு…!, அப்புறம் என்ன …?, நாம எல்லாருமா ஒண்ணா…., அந்த ஒரே வீட்லயே இருக்கலாமே…., ப்ளீஸ்…!”
என்று தன் மழலைத் கொஞ்சலோடு ஜோ கெஞ்சவும்…..அதைப் பார்த்துக் கொண்டிருந்த வருணி, ஒரு பெருமூச்சுடன் தன் தம்பியைப் பார்த்து உறுதியான குரலில் கூறினவள்,
“பார்த்தீங்களா… உங்களுக்கெல்லாம் புரியாத ஒரு விஷயம்…, இந்த பச்சை குழந்தைக்கு கூட நல்லா புரியுது…! மம்மி , டேவிட் அங்கிள் அவங்களுக்கு எது சரின்னு அந்த மழலைக்கு தோணுச்சோ..?,, அதைத்தான் இப்புடி வெளிப்படையா சொல்லுது…. நீங்களும் உங்க கண்களை மட்டும் திறக்காம, உங்க மனசையும் கொஞ்சம் திறங்கப்பா… உங்கள பார்த்தாலே ஒன்னு புரியுது …. இப்போ உங்க மனசாட்சி உங்களை லெப்ட் அண்ட் ரைட் வாங்குதுல்ல சரிதானே…?, நான் சொல்றதுதானே நிஜம் …? , இனிமேலாவது உங்களோட இந்த சுயநல தனத்த திருத்திக்கோங்க… இதுதான் உஙகளுக்கு கடவுளா பாத்து உங்க மக மூலமா கொடுக்கிற லாஸ்ட் சான்ஸ்…!”
என்கிற வருணியின் அந்த வார்த்தைகள் குமரனையும் யாழினியையும் முற்றிலுமாக முடக்கிப்போடவும்…. தங்கள் சுயநலத்தின் மறுபக்கத்தை ஒரு குழந்தையின் சொல்லே அவர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதில், தலைகுனிந்து நின்றிருந்தனர் அந்தத் தம்பதிகள்….
அந்த சமயம் சரியாக தன் பிஞ்சுக் கைகளில் ஆள்காட்டி விரலை தன் பெற்றோரின் முகத்துக்கு நேராக நீட்டி ஜோ பாப்பா தன் சாரதா பாட்டிக்காக நியாயம் கேட்க ,
“நீங்கதானே டாடியும் மம்மியுமா சொன்னீங்க… எனக்கு தம்பியோ தங்கச்சியோ வந்தால் எல்லாரும் ஒத்தாசையா, ஒற்றுமையா ஒன்னா இருக்கணும்னு…? , அப்போ அதே ஒற்றுமையோடு பாட்டியும் டேவிட் தாத்தாவும் நாமளுமா ஒண்ணாவே குணா தாத்தா வீட்ல சேர்ந்து வாழலாமே… ப்ளீஸ் மம்மி…. ப்ளீஸ் டாடி….!”
அந்தச் சின்னஞ்சிறு குழந்தையின் வாயிலிருந்து வந்த அந்த ஆழமான வார்த்தைகளைக் கேட்டு அங்கிருந்த அத்தனை பேரின் நெஞ்சமும் ஒரு கணத்தில் நெகிழ்ந்து உருகிப்போனதும்….தன் மருமகளின் அந்தப் பேச்சைக் கேட்டு வருணியின் முகத்திலுமே, ஒரு நிம்மதியான பெருமிதப் புன்னகை மலரவும்…. கண்ஜாடையிலே பாருங்க பாப்பாவும் நான் சொன்னதையே தான் அவளும் பெரியவர்கள் கூட யோசிக்கத் தவறிய அந்த அழகான நியாயத்தை ஒரு குழந்தை தன் மழலை மாறாத குரலில் சுட்டிக் காட்டிவிட்டாள்… என்று எடுத்துரைக்கவும்…
தம்பதியர்கள் அவர்களுக்குள்ளாக ரகசியமாகப் பேசிக்கொண்டுவிட்டு, புத்தி வந்தவர்கள் போல சாரதாவின் விருப்பத்திற்கேற்பவே,
‘ அந்த வீட்டுக்கே நாங்கள் வருகிறோம்… ‘
என்று சம்மததித்தோடு, டேவிட்டையும் சாரதா கல்யாணம் செய்துக்கொள்ளவும் சரி என்றுவிட்டனர்…. உடனேயும் , ஜோ பாப்பாவுமே பெரியவர்களின் அந்த முக மாற்றத்தை எல்லாம் கவனித்துவிட்டுத் தன் மழலை மொழியில் குதூகலமாகக் கத்தி,
“ஐ!… நாம எல்லோருமா ஒண்ணா, குணா தாத்தா வீட்ல இருக்க போறோமா…?!,,, ஐ ஜாலி… ஜாலி….!”
என்று சொல்லிக்கொண்டே ஓடிவந்த அந்தப் பாப்பா, சட்டென்று தன் பாட்டி சாரதாவைக் கட்டிப்பிடித்துக்கொள்ளவும் … அவ உயரத்துக்கு தன் உயரத்தை குறைத்தவாறே, முழங்காலை மடக்கி முட்டிப் போட்டு அமர்நது பாப்பாவை அவளும் கட்டிக்கொள்ள… உடனே பாப்பா அடுத்ததாக அவளின் கன்னத்தில் முத்தமும் தருகிறவளை கண்டு கண்களை ஆச்சரியத்தில் விரித்த சாரதாவும்… அவ்வாறே முத்தங்களை வைத்து முடிதத அடுத்த வினாடியே, அங்கே பாட்டிக்கு அருகாமையில் நின்றுகொண்டிருந்த டேவிட்டின் சட்டையையும் பாப்பா இழுத்தவளுக்காக, அவனுமே பாப்பா உயரத்துக்கு முழுங்காளை மடக்கி முட்டிப்போட்டு அமரவும்… ஒரு மழலை முத்தத்தை அவனுக்கும் பரிசளித்தாள்… பாப்பா ஜோவிகா…!
அப்படியாக அந்தப் பிஞ்சு செய்த இந்தச் செயல்களால் அங்கு நின்ற அத்தனை பேரின் மனதும் கரையச் செய்தபோதும், குமரனும் யாழினியும் மட்டுமாக மீண்டும் ஏதோ ஒரு இக்கட்டான நிலையில் இருப்பது போலவும் …. முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்றிருந்தனர்…
அந்த சமயம்…. இவர்களது நீண்ட முகத்தைப் பார்த்து என்னவென்று யோசித்த வருணி, அருகில் சென்று,
“என்னப்பா முகமெல்லாம் ஒரு மாதிரி. இருக்கே …?, இன்னும் என்ன பிரச்சினை ….?”
என்று உரிமையோடு அவ விசாரிக்கவும்…. அதற்குத் தயக்கத்துடனும் கவலையுடனும் குமரன் பதில் சொன்னவன்,
“அதுவாக்கா…, எங்க வீட்ட இப்பவே காலி செஞ்சு…, அங்க இருக்கிற திங்ஸ் எல்லாம் இந்த வீட்டுக்கு கொண்டுவரணுமே… வீட்டை சிஃப்ட் பண்றது தான் இப்போ பெரிய வேலையாச்சே அக்கா…., அதான் அதைபத்தி கொஞ்சம் டென்சனா யோசிக்கிறோம்…நானும் யாழினியுமா….”
“ஹேய் ப்ரோ … இதுக்கெல்லாம் போய் இவ்வளவு யோசிக்கிற..? , அதெல்லாம் ஒரு பிரச்சினையா ப்ரோ…?, ஆன்லைன்லயே இப்போ வீட்டை ஷிப்ட் பண்றதுக்குன்னு பேக்கர்ஸ் … மூவர்ஸ் …அண்ட் ஆர்கனைசர்ஸ்ன்னு இருக்காங்களே….! அவங்ககிட்ட உதவி கேட்கலாமே ப்ரோ…!”
அவன் சொன்னதைக் கேட்டு வருணி, ஒரு சின்னச் சிரிப்புடன் இப்படி இயல்பாக சொல்ல…. ஆனாலும், குமரன் முகத்தில் தெளிவில்லை. … மாறாக சோர்வான குரலிலே,
“இல்லக்கா… ஆன்லைன்ல ஆட்கள் வந்தாலுமே…., அந்த வீட்ல இருக்கிற ஒவ்வொரு பொருளையும் பிரிச்சு எடுக்குறதுல இருந்து, என் கூட நின்னு எல்லாவற்றையும் பார்த்து செய்ய நான் ஒருத்தன் மட்டும் தானே இருக்கேன்… அதான் மனச்சோர்வா இருக்கு…”
என்றுவிட்டு அவன் கவலைப்படுவதைக் கவனித்த டேவிட்டோ, ஒரு தந்தையின் பாசத்தோடு தன் கரத்தை அவன் தோளில் வைத்துத் தட்டினவன்,
“என்னப்பா குமரன் இப்படிச் சொல்ற…?, நான் இருக்கேன்ல….! டோன்ட் ஃபீல்… நான் உன்னுடனே வந்து, அந்த வேலைகள் எல்லாத்தையும் உன்னோடு சேர்ந்து பகிர்ந்து பார்க்கிறேன்… இனிமேல் என்ன…?, நம்ம குடும்பத்துல எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணாகிட்டோம்…., சரியா…உனக்கு எதாவது உதவி தேவைப்பட்டா உரிமையா என்னிடமே நேரடியா செய்ய சொல்லி கேளுன்னு முன்னவே சொல்லி இருக்கேன்ல உன்ட்ட… .?”
என்று உற்சாகத்துடனே ஆறுதல் கூறவும்…. டேவிட்டின் அந்தப் பெருந்தன்மையான வார்த்தைகளைக் கேட்டதும், குமரனின் முகத்தில் ஒரு நிம்மதியான புன்னகை அரும்பியது…. அதை உடனே, கவனித்துக் கொண்ட வருணி உற்சாகமாக இடைமறித்தவள்,
“அப்புறம் என்ன ப்ரோ…? இப்பவே அந்த வொர்க்கை ஸ்டார்ட் பண்ணி வீட்டை இன்னைக்கே ஷிப்ட் பண்ணிடுங்க…!, உடனே ஆள் கிடைக்க கஷ்டமா இருக்குமேன்னும் யோசிக்காதீங்க…”
என்றுவிட்டு அவளே, தன் செல்பேசியை எடுக்கவும்…. எதிலுமே கில்லாடியான தன் டிஜிட்டல் திறமையை வெளிப்படுத்தினவள் , அப்படியே, நவீன தொழில்நுட்பத்திலுமே கைதேர்ந்தவளாயிற்றே வருணி…!, ஆகையால் உடனேயும் ஆன்லைன் மூலமாகத் தனக்குத் தெரிந்த ஒரு நம்பகமான பேக்கிங் கம்பெனியின் மேனேஜரைத் தொடர்புகொண்டு, கணப்பொழுதில் அனைத்து ஏற்பாடுகளையும் அவ செய்து முடிக்கவும்….
அப்படியாக அவள் ஆன்லைனில் புக் செய்த சில நிமிடங்களிலேயே, அந்த நட்சத்திர ஓட்டலின் வாசலுக்கு அந்த பேக்கர்ஸ் மற்றும் மூவர்ஸ் அவர்கள் இருக்கும் வாகனம் வந்து நின்றுவிட்டது…!,வேகவேகமாகச் செயல்பட்ட டேவிட்டும் குமரனும் அங்கிருந்த பெண்களிடம் விடைப்பெறவும்…, குமரனின் பழைய வீட்டிற்குச் சென்று அங்கே உள்ள பொருட்களைப் பத்திரமாக எடுத்து வர அந்த வண்டியிலேயே புறப்பட்டுச் சென்றுவிட்டனர்….
மறுபுறம் இருக்கும், பெண்களுக்கோ வேலை எளிதானது அல்லவா…. ஆகையால், சாரதா, யாழினி, வருணி மற்றும் குட்டி ஜோவிகா பாப்பா என அந்த மூன்று தலைமுறைப் பெண்மணிகளும் மகிழ்ச்சியுடனே ஓட்டலில் இருந்து நேராகக் குணாவின் வீட்டிற்குப் புறப்பட்டுச் செல்லவும்…காலம் காலமாகத் தனித்து நின்ற அந்த வீடு, இன்று அத்தனை பேரின் வருகையால் ஒரு புதுப் பொலிவோடும் குடும்பக் குதூகலத்தோடும் அவர்களை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருந்தது….!
அப்படியாக டேவிட்டின் உதவியோடு குமரன் தன் வீட்டில் இருந்த அத்தனை பொருட்களையும் பத்திரமாக பேக் செய்து, அந்த அத்தனையும் அன்றே புதிய வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்க்கவும்… அந்த வீடே ஒரு புதிய குடும்பக் கொண்டாட்டத்தால் விழாக்கோலம் பூண்டது…!, அனைவரும் ஒன்று சேர்ந்த மகிழ்ச்சியில், அன்றைய இரவு உணவைச் சமைக்கும் பொறுப்பைத் தானே செய்வதாக சாரதா ஏற்றுக்கொள்ளவும் … அத்தனை பேருக்குமாகச் சுடச்சுடச் சமைக்கத் தயாரானவர், அடுப்பங்கழியை நோக்கி நடக்கத் தொடங்கவும்… அப்போது யாழினி அவசரமாக அருகில் வந்து,
“ஆண்டி… நானும் உங்களுக்கு சமையல்ல உதவி செய்யுறேன்…!”
என்று உரிமைக் குரலில் கூறினவளைத் தடுத்த சாரதா, தன் மருமகளின் முகத்தை கனிவாக பார்த்து புன்னகையோடு,
“இல்லம்மா… நீ போய் உட்காரு…. நீ இப்போ இந்த குடும்பத்தோட வாரிசை சுமக்கிறவ…. உனக்கு எங்குமே அலைச்சல் இருக்க கூடாது…. போய் ரெஸ்ட் எடு…, சமைக்கிறத நான் பாத்துக்கிறேன்…!”
என்று அன்போடு அவளை மாமியார் அமரச் செய்துவிட்டுச் சமையலறைக்குள் நுழையவும்… மகள் வருணியும் உடனே தன் அம்மாவிற்கு உதவி செய்யப் பின்னாடியே ஓடி வந்தவவளையும் பார்த்து சாரதா கலகலப்பாகச் சிரித்துக்கொண்டே தடுத்து,
”ஹேய் வருமா… உனக்கும் சமையலறைக்கும் என்னம்மா சம்மந்தம்…?, நீதான் பெரிய லெவல் ரேப்பர்! ஆச்சே…!, கவிதையும் பாட்டுமா எழுதி பாடிட்டு திரியுற உனக்கெல்லாம் இந்த சமையல் வேலை செட்டாகாது…, விடு….!”
என்று செல்லமாக சாரதா விலக்கிவிடவும்… அவர்களுக்குள்ளாக இப்படி கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்த அந்தச் சமயம் பார்த்து, அங்கே சமையலறையின் பக்கமாக வந்து சேர்ந்தார் டேவிட்டடும்…!, அவரை அங்கு கண்டதும் வருணிக்கு வழக்கம் போலவும் குறும்பு தலைதூக்கியது….. உடனே கண்சிமிட்டிச் சிரித்தபடியே,
“அங்கிள்… நீங்க என்ன இந்தப்பக்கம்…?, போச்சு போச்சு… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் யாழினியும் , என்னையும் உள்ளே விடல மம்மி…. உங்களையும் இந்த சமையலறையை விட்டு துரத்த தான் போறாங்க பாத்துக்கோங்க…இவுங்க தான் கிச்சன் க்யூன் சோ அதான் நம்மள ஹிட் பண்றாங்க இங்க இருந்து… !”
?என்று கலகலப்பாக வருணி கேலி செய்ததைக் கேட்ட சாரதாவோ,
“ஹாஹா…”
என்று வாய்விட்டே சிரிக்கத் தொடங்கவும்… அதை வியப்பாகப் பார்த்த வருணியோ, கேள்வியாக தன் வில் போன்ற ஒற்றை புருவத்தை உயர்த்தியபடியே,
“என்ன மம்மி… நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா….?, ஏன் இப்புடி சிரிக்கிறீங்க நீங்க….?”
என்று கேட்டாள்.
🫂 தோள் சாய்ந்திடும் தருணம் வரும்…
🤔சாரதா இதற்காக ஒரு சம்பவத்தை பற்றி வருணியிடம் சொல்லுவார் அது என்ன…? பார்ப்போம்…