பகுதி 6
மோகன் வெளியே செல்லவும் செல்வம் அங்கு வரவும் நேரம் சரியாக இருக்க.. அதைக் கண்ட இருவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
ஹேமா உள்ளே நின்றிருந்ததால் அவளை கவனிக்காத செல்வம்… “என்னப்பா இங்க என்ன பண்ற, அதுவும் இந்த நேரத்துத்துல” என மோகனிடம் கேட்க…
“ அது.. அது…” ஒரு நிமிடம் திணறியவன், “ஹா.. பால் வாங்க போலாம்னு வந்தேன்… உங்க சந்துக்குள்ள இரண்டு தெரு நாய் போனதை பாத்தேன், அதான் துரத்தி விட்டுட்டு வரேன்” என சமாளித்தான்.
“ ச்சே.. இந்த தெரு நாய்களோடு ஒரே தொல்லையா இருக்கு.. சந்து ஓப்பனா இருக்கறதால உள்ளே வந்துருதுங்க.. ஓனர்கிட்ட பல தடவை சொல்லியாச்சி, இதுக்கொரு கேட்டாவது போடுங்கன்னு. அவரு கேட்கவே மாட்டேங்கிறாரு” என புலம்பியவர், “ரொம்ப தேங்க்ஸ் தம்பி, நீ மட்டும் துரத்தி விடலேன்னா உள்ள அசிங்கம் பண்ணியிருக்கும்” என்றார்.
“பரவால்லைங்க..” என்றவன், வேகமாக வீட்டிற்கு சென்றுவிட.. இவர்களின் உரையாடலின் போதே ஹேமாவும் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்திருந்தாள்.
பிறகு அம்முவும் செல்வமும் வீட்டிற்குள் வர… ராணியும் அப்போது வந்திருந்தார்.
“ சரி நாங்க கிளம்பறோம், நேரமாச்சி.. தம்பிய ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, இரண்டு பேரும் பத்திரமா இருங்க.. நாங்க வர சாயங்காலம் ஆகிடும். ஏதாவது வேணும்னா கடையில வாங்கிக்கங்க நான் சொல்லிட்டு போறேன்” என்ற செல்வம்.. மனைவியை அழைத்துக் கொண்டு புறப்பட…
“ நீ போய் படு அம்மு.. நான் வாசல் கூட்டிட்டு வந்து உனக்கு டீ வச்சி கொடுக்குறேன்” என்றாள் ஹேமா அம்முவிடம்.
உடனே அவள்.. “ ஏன் இன்னும் முழுசா பேசி முடிக்கலையா” எனக் கேட்க…
“ஹே.. என்ன சொல்ற நீ” என்றாள் அவள்.
“ம்ம்ம்.. நீங்க ரெண்டு பேரும் திருட்டு முழி முழிச்சதை பாத்துட்டேன்னு சொல்றேன்… ஒழுங்கா உண்மையை சொல்லுடி.. அவன் எதுக்கு இங்க வந்துட்டு போறான்” அம்மு கேட்க…
“ எப்படியும் இவகிட்ட சொல்லித் தானே ஆகணும்” என எண்ணிய ஹேமா..
“நானும் மோகனும் லவ் பண்றோம்டி” என்றாள்.
அவள் கூறியதை கேட்டு திடுக்கிட்ட அம்மு, “ஏண்டி ஏற்கனவே ஒருத்தி பண்ணிட்டு போன கலவரம் பத்தலையா… அடுத்த கலவரத்தை நீ பண்ணனும்னு முடிவு பண்ணிட்டியா” என்றாள் கோபமாக.
“ஹே.. கத்தாதடி, தம்பி முழிச்சுட போறான்..” என்ற ஹேமா.. “அதெல்லாம் ஒன்னும் ஆகாது அம்மு” என்றாள் தைரியமாக.
“நம்ம வீட்டை பத்தி தெரிஞ்சுமா இப்படி சொல்ற.. ஏற்கனவே அம்ரி விஷயத்துல எல்லாத்தையும் பார்த்தவதானே நீ.. சொல்லப்போனால் என்னைவிட உனக்கு தான் அதுல பாதிப்பு அதிகம்.. அவ விஷயத்துக்கே அப்படினா.. உன் விஷயத்துல என்ன ஆகுமோ…” என பயந்த அம்மு.. “இதெல்லாம் வேணாம்டி.. ஒழுங்கா இதையெல்லாம் விட்டுடு” என்றாள் கண்டிப்பாக.
“ அப்படியா சொல்ற” ஒரு நொடி யோசித்த ஹேமா.. “சரி நான் விட்டுடுறேன்.. அப்போ நீயும் கிருஷ்ணாவ லவ் பண்றதை விட்டுடு” என்றாள் சாதாரணமாக.
உடனே அம்மு.. “என்னடி லூசு மாதிரி பேசிட்டு இருக்க..” எனக் கேட்க…
“ஏண்டி.. இப்ப நீ கூடத்தான் என்னை லவ் பண்ண வேணாம், விட்டுடுன்னு சொன்னே.. நான் என்ன உன்னை லூசுனா சொன்னேன்” என்றாள் ஹேமா.
“ பைத்தியம் பைத்தியம்.. கிருஷ்ணா நம்மளோட அத்தை பையன்.. அவனுக்கும் எனக்கும்தான் கல்யாணம்னு ஏற்கனவே பேசி வச்ச விஷயம் தானே.. அதனால அவனை லவ் பண்றதுல எந்த பிரச்சினையும் வராது.. ஆனா உன் விஷயத்துல அப்படியா ஆகும்” என அம்மு அவளை மடக்க…
“என்னோட விஷயத்துலயும் அம்ரித்தா அளவுக்கு எந்த பிரச்சினையும் வராது” என்றாள் ஹேமா.
“அது எப்படி இவ்ளோ கான்ஃபிடன்ட்டா சொல்ற” என்றவளிடம்…
“அது அப்படித்தான், நீ வேணா பாரு” என்றாள் ஹேமா.
“என்னமோ பண்ணு.. ஆனா தயவு செஞ்சு இந்த விஷயத்துல என்னை மட்டும் கோர்த்து விட்டுடாதடி, நீ வாங்கின அளவுக்கு எல்லாம் என்னால வாங்க முடியாது.. ஏன் உடம்பு தாங்காது தாயே” என கெஞ்சினாள் அம்மு.
“சரி.. அப்படி உன்னை கோர்த்து விடக்கூடாதுன்னா நான் சொல்ற மாதிரி நீ பண்ணனும்” என ஹேமா கூற..
“என்ன பண்ணனும்” என்றாள் அவள்.
உடனே ஹேமா விஷயத்தை கூற..
“ஏண்டி இப்பதான் என்னைக்கு கோர்த்து விட மாட்டேன்னு சொன்னே.. ஆனா அதுக்குள்ள எனக்கு சமாதி கட்டுற அளவுக்கு ஒரு வேலைய பாக்குற பாத்தியா” எனறவள். “முடியாது முடியாது முடியாது.. என்னால் கண்டிப்பா உங்கூட வர முடியாது…. அதே போல நீயும் எங்கெயும் போகக்கூடாது” என்றாள் திட்டவட்டமாக.
உடனே ஹேமா.. “அடியேய், இப்போ மட்டும் நீ வரலை.. நீயும் கிருஷ்ணாவும் மெசேஜ்ல பேசிகிட்டு இருக்கீங்கன்னு உங்க அம்மாகிட்ட போட்டு கொடுத்துடுவேன்.. எப்படி வசதி” என மிரட்ட…
“ஐயோ… கட்டிக்கு போற பையன்கிட்ட கூட ஃபோன்ல பேசக்கூடாதுன்னு சொல்ற குடும்பத்துல பொறந்துட்டு… எவனோ ஒருத்தனா லவ் பண்றதுக்கு என்னையே காவலுக்கு கூப்டுறாளே.. நான் என்னதான் பண்ணட்டும்” என கண்ணீர் வராமலே கண்ணை கசிக்கினாள் அம்மு.
“சும்மா வழவழன்னு பேசிட்டு இருக்காதடி, ஏற்கனவே மணி 6:30 ஆயிடுச்சி. எங்க அம்மா வேற நான் வீட்ல வெட்டியா இருக்கேன்னு, ஒரு லிஸ்டே கொடுத்துட்டு போயிருக்கு.. இந்த வேலையெல்லாம் செஞ்சிட்டு.. என் தம்பியையும் ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, 11 மணிக்கெல்லாம் பார்க்குக்கு போகனும். இல்லேன்னு வை, அவன் கிளம்பி வீட்டுக்கு வந்துருவான்.. அப்புறம் என்ன நடக்கும்னு உனக்கே தெரியுமில்ல.. ஒழுங்கா என்கூட சேர்ந்து வேலை செய்ய ஆரம்பிடி” என்றாள் ஹேமா.
“அடிப்பாவி.. இதுல இது வேறயா… ஏற்கனவே எனக்கு உடம்பு முடியல, அதோட உன் கூட சேர்ந்து நான் வேலை வேற செய்யணுமா” என அம்மு புலம்ப…
“நான் போய் வாசல் தெளிச்சி கோலம் போட்டு வந்துடறேன், நீ அவனை எழுப்பி குளிக்க அனுப்பிவிட்டு, டீயை அடுப்புல வைடி” எனக் கூறிச் சென்றாள் ஹேமா.
பிறகு இருவரும் சேர்ந்து வீட்டு வேலை அனைத்தையும் முடித்து, ஸ்ரீநிவாசனையும் பள்ளிக்கு அனுப்பியிருந்தனர்.
“ஹே அம்மு, நான் குளிக்கப் போறேன்” என சென்றவள், உடனே நின்று.. “நீ குளிச்சியா இல்லையாடி..” என அம்முவிடம் கேட்க…
“ ஆமா, எனக்கு இன்னைக்கு கல்யாணம் பாரு.. காலையில் அஞ்சு மணிக்கே எந்திரிச்சு குளிக்க.. போடி, நீ போய் குளிச்சிட்டு வா.. நான் ஃபேஸ் வாஷ் மட்டும் பண்ணிட்டு வந்து தொலையறேன்” என எரிந்து விழுந்தவள், முகம் கழுவி தயாரானாள்.
நேரம் சரியாக 11 மணியாக…
இருவரும் வேகவேகமாக வீட்டிலிருந்து கிளம்பினர்.
அப்போது இருவரின் பின்னே அவர்களின் வேகத்திற்கு ஏற்ப வாகனத்தில் வந்த மோகன்.. “ஹேமா, வந்து வண்டியில ஏருடி” என்றான்.
உடனே அம்மு அவனை முறைக்க.. அதை கவனித்த ஹேமா.. “எங்க பின்னாடி வராதடா.. நாங்களே வரோம் நீ போ” என்றாள் நடந்தபடி.
உடனே அவன் வேகமாக சென்றுவிட.. “இவனை எப்படிடி நீ லவ் பண்ண” என்றாள் அம்மு.
“ஏண்டி அப்படி கேக்குற”… என சிரித்த ஹேமாவிடம்…
“இல்ல இவன் சிரிச்சு நான் பார்த்ததே இல்லை.. ஆனா நீ சிரிக்காம இருக்கவே மாட்ட.. அதே போல இவன் அவங்க வீட்டிலகூட யார்கிட்டயும் பேச மாட்டேங்கிறான், ஆனா நீ தெருவுல போறவங்ககிட்ட கூட பேசுவ..” என்ற அம்மு.. “உனக்கும் இவனுக்கும் செட் ஆகணும்னு நீ நினைக்கிற” என்றாள் சந்தேகமாக.
“அம்மு, எதிரெதிர் துருவங்கள் தான் ஒன்றை ஒன்று ஈர்க்கும்னு சொல்லுவாங்க இல்ல, அந்த மாதிரி தான் நாங்களும்” என அவள் கூற..
“ம்க்கும்” என்றாள் அம்மு.
இப்படி பேசிக்கொண்டே இருவரும் பூங்காவிற்குள் நுழைய…
“ ஓய்… இங்க வாங்க” என்றான் மோகன்.
உடனே இருவரும் அவனை நோக்கி செல்ல…
ஹேமாவின் அருகில் வந்து நின்றவன், “உன்னை தனியா தானடி வர சொன்னேன். இவளை ஏண்டி கூட்டிட்டு வந்தே” என்றான் குரலை தாழ்த்தி.
ஆனால் அப்போதும் அம்முவிற்கு அவன் பேசியது கேட்டு விட… “ஹேமா நான் அந்த பெஞ்சில உக்காந்து இருக்கேன்.. தூரமா எங்கேயும் போயிடாம, என் கண்ணுல படுற மாதிரி கொஞ்சம் பக்கத்துலயே இரு” எனக் கூறியவள், அவர்களிடமிருந்து விலகிச் சென்றாள்.
அவன் கூறியதில் ஹேமாவுக்குமே சற்று கோபம் வந்துவிட.. “ டேய் எருமை.. ஏன்டா இப்படி பேசுற.. அவள் மட்டும் முடியாதுன்னு சொல்லியிருந்தா, இந்நேரம் நான் இங்க வந்திருக்கவே முடியாது தெரியுமா..” என்றாள் கோபமாக.
“ஏன் அவதான் உனக்கு பொண்ணு தோழியா, அவ இல்லாம நீ வரமாட்டியா” அவன் நக்கலாக கேட்க…
“சொன்னாலும் சொல்லைன்னாலும் அவ எனக்கு பொண்ணு தோழி தான்” என்றாள் அவள்.
“சரி சரி ஃபர்ஸ்ட் டைம் வெளில வந்திருக்கோம், சண்டை வேண்டாம்… வா அப்படி உக்காந்து பேசுவோம்” என்றவன், சற்று மறைவான இடத்திற்கு அவளை அழைக்க…
“அங்கெல்லாம் என்னால வர முடியாது.. அம்மு தனியா இருப்பா..” என்றவள், “எங்க அக்கா சொல்லிட்டு தான போனா.. அவளுக்கு தெரியிற மாதிரி பக்கத்துல தான் இருப்பேன்” என்றாள்.
“ச்சே.. ஆசையா கொஞ்ச நேரம் பேசலாம்னு முடியுதா..” சலித்துக் கொண்டவன்.. “வந்து தொலை” என அருகிலிருந்த பெஞ்சில் சென்று அமர… அவன் அருகே சற்று இடைவெளி விட்டு அமர்த்த ஹேமா.. “எதுக்கு இப்போ திடீர்னு என்னை இங்க வர சொன்ன” என்றாள்.
“ம்ம்ம்.. சச்சின் டெண்டுல்கர் அடுத்த வருஷம் ரிட்டேராக போறாராம்.. அதபத்தி நீ என்ன நினைக்கிறேனு கேட்கலாம்னு வர சொன்னேன்” என்றான் அவன் கடுப்பாக.
அவன் நிலை புரிந்தும்.. “நான் கிரிக்கெட்டே பார்க்க மாட்டேன்.. அதனால அதபத்தி எனக்கு ஒன்னும் தெரியாது… உனக்கு கிரிக்கெட்னா ரொம்ப பிடிக்குமா?” என்றாள் அவள் வேண்டுமென்றே.
உடனே அவளின் கழுத்தை நெரிப்பது போல் கையை தூக்கியவன்… “ஏண்டி உனக்கு என்ன நக்கலா… எதுக்கு வர சொன்னேனு ஒண்ணுமே தெரியாதா” என்றான்.
“இங்க பாரு மோகன், மத்த பொண்ணுங்க மாதிரி.. நீ கூப்பிடுற நேரம் எல்லாம் உன்கிட்ட பேசவோ கொஞ்சவோ நீ நினைக்கிற மாதிரி நடந்துக்கவோ என்னால முடியாது.. வேற யாராவதா இருந்தா சொல்லி புரிய வைக்கலாம். ஆனா உனக்கு அது கூட தேவையில்லைனு நினைக்கிறேன்.. நீ தான் டெய்லியும் எங்க வீட்ல நடக்கிறது எல்லாம் கேட்கிறாயே, அப்புறம் என்ன” என்றாள் ஹேமா.
“ஆமா முகத்தை பார்க்கவே பஞ்சமா இருக்கு… இதுல கொஞ்சறதும் ஒன்னுதான் குறைச்சல்..” என்றவன், “ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது என்கிட்ட பேசு ஹேமா.. உன்கிட்ட பேசாம என்னால இருக்க முடியலடி, ப்ளீஸ்” எனக் கெஞ்சினான்.
“எப்படிடா பேச முடியும்.. எங்க சந்துல தான் எனி டைம் ஆளுங்க இருப்பாங்கன்னு உனக்கு தெரியும்ல… லஞ்ச் டைம் மட்டும் தான் கொஞ்சம் அமைதியா இருக்கும். ஆனா அப்பவும் எங்க அப்பாவோ எங்க அம்மாவோ யாரோ ஒருத்தர் வீட்டுக்கு வந்துருவாங்க…. அப்றம் எப்படி பேச” என யோசித்தவள்…
“ஹஹஹ.. என் பாட்டியோட ஃபோன்ல இருந்து பேசினா யாருக்கும் தெரியாது.. உன் நம்பர் கொடு யாரும் இல்லாதப்போ நானே உனக்கு ஃபோன் பண்றேன்” என்றாள்.
“சூப்பர் டி செல்லம்..” என அவளை கொஞ்சியவன், “ஆமா, அன்னைக்கு உன் அழகை பார்த்த மட்டும் லவ் பண்ணலன்னு சொன்னியே, வேற எதை பார்த்து என்னை லவ் பண்ண” என கேட்க…
“அது.. உனக்கு அம்மா அப்பா யாரும் இல்லனு கேள்விப்பட்டதுல இருந்து உன் மேல ஒரு சாஃப்காட்னர் வந்துருச்சு.. அப்புறம் அப்படியே அது லவ்வா மாறிடுச்சி.. மத்தபடி உன் அழகை பார்த்து ஒன்னும் எனக்கு உன் மேல லவ் வரல” என்றவள், “ஆனா நீ, நான் அழகா இருக்கேனு தானே என்னை லவ் பண்ணின ” என்றாள்.
“ஆமா, ஊர் உலகத்துல உன்னை தவிர வேற அழகியே இல்ல பாரு” என்றவனிடம்..
“அப்போ எதனால என் மேல லவ் வந்துச்சு, சொல்லு” எனக் கேட்டாள்.
“ஒரு இடத்துல நிக்காம, எப்பவும் துரு துருனு ஓடுறது, பேச ஒன்னுமே இல்லன்னாலும் லொடலொடான்னு பேசி சிரிக்கிறது, நீ இருக்கிற இடத்தையே கலகலப்பா மாத்துறது, இதையெல்லாம் பார்த்துதான் உன்மேல் எனக்கு லவ் வந்துச்சி” என்றவன், அவள் கன்னத்தை கிள்ள…
“பார்ரா.. இந்த உம்முனா மூஞ்சிக்கு இப்படி எல்லாம் கூட பேச தெரியுது” எனக்கூறி சிரித்தாள் ஹேமா.
“ ஏய்.. என்னையே ஓட்டுறயா” என்றவன், தன் மனம் கவர்ந்தவளின் கையை பற்றியபடி பேசிக் கொண்டிருக்க..
அதேநேரம் “ஹேமா” என பயந்து அலறினாள் அம்மு.
தொடரும்…