Stories that touch hearts

Home  /  33. நித்யா சபரி (இது மங்கலத்தின் மறுமணம்)  /  Chapter 10

CHAPTER 10

“இது மங்கலத்தின் மறுமணம்♥️💛…!!!”

By மோ.நித்யா சபரி · October 18, 2026

3

அத்தியாயம்-10-

பேச்சியம்மாள் மங்கலத்தை அடிக்க கையை ஓங்கிப் பாயவும்…. அந்த விநாடி… ஏற்கனவே மாணிக்கம் அடிக்கப் பாய்ந்தபோது பளிச்சிட்டதே, அதே பிளாஷ் லைட்! வெளிச்சம் மீண்டும் அந்த அறையை வெளிச்சமாக்கியதும்​…. திடுக்கிட்டு தாயும் மகனுமாக வெளிச்சம் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்க்கவும்….          

           ​அங்கே சாருலதா கையில் கைப்பேசியோடு கெத்தாக நின்று கொண்டிருந்தவள்,  இவர்கள் இருவரும் மங்கலத்தை அடிக்கக் கை ஓங்குவது போலவும், அதற்கு மங்கலம் பயந்து நடுங்குவது போலவும் கச்சிதமாகப் புகைப்படங்களை எடுத்து வைத்திருந்தாள்….. விஷயம் புரியாமல் பேச்சியம்மாள் தன் மகனைப் பார்த்து முழிக்கவும்….!!!    

     ​”அம்மா! உனக்குப் புரியலையா…?  பாப்பா நம்மள கையும் களவுமா போட்டோ பிடிச்சு வைச்சிருக்கா…!”       

            ​”நாம என்னடா தப்பு பண்ணோம்….?”     

என்றுவிட்டு,   ஒன்றும் அறியாதவர் போல பதறும்  மாணிக்கத்தை பார்த்து, பேச்சியம்மாள் விழிக்க….. 

    ​“அய்யோம்மா…! நாம இவள அடிக்க கை ஓங்குனத போட்டோ எடுத்திருக்கா பாப்பா….. அத வச்சு மங்கலம் போலீஸ்ல ‘வரதட்சணை கொடுமை!’னு புகார் கொடுத்தா போதும்… நாம ஜெயிலுக்கு போய் கம்பி எண்ண வேண்டியதுதான்…!”                

என்று மாணிக்கம் புலம்பினதை ஆமோதிப்பது போல, மங்கலமும் வாய்விட்டு சிரிப்பாக  சிரித்து வைக்கவும்….. ​தாயும் மகனுமாக சேர்ந்து  அவள் பக்கமாக திரும்பிப் பார்த்தவர்களிடம், அவள் இன்னமும் அமைதியாக, அப்பாவியைப் போல அமர்ந்திருக்கவும்……          ​

“இன்னாடா இது… இவ அப்பாவியாத்தானே உக்காந்து இருக்கா….?”    

   “அம்மா….! அவளை நல்லா உத்து பாரு….!” 

   என்று மகன் சொல்லவும்​…. பேச்சியம்மாள் ஊர்ந்து கவனித்தார்…. அடுத்த கணமே, மங்கலத்தின் அப்பாவி முகம் மெல்ல மாறி, ஒரு கெத்தான வில்லியின் முகமாக உருவெடுக்கவும்….!,  

     “ம்ம்ம்…. சாரு!”   

   என்று மங்கலம் கம்பீரமாகக் கூப்பிட…., சாருலதா ஓடிவந்து தாய் கையில் அந்த புகைப்படம் பிடித்த கைப்பேசியை  கொடுக்கப் பார்த்தவளை  மாணிக்கம்  குறுக்கிட்டு தாவி தடுக்கப் பாயவும்…., மங்கலம் ஓங்கி ஒரே அடி! அவன் முதுகில் வைத்தாள்…!                     ​‘டமால்…..!’    என்ற  அந்த அதிரடி அடியில் மாணிக்கம் அலறித் துடிக்கவும்…..       

   ​’ஆத்தி! என்னா அடி….?, நல்லவேள நமக்கு அடி விழல தப்பிச்சோம்…  ஏன்னா …?, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நானும் தான் அவள அடிக்க கை ஓங்குனேன்….. அதே போல நினைச்சுக்கிட்டு தடுக்க பாய்ந்திருந்தோம் இவ பொம்பள பொன்னம்பலம்! போல  வந்து என்னய  தூக்கி அடிச்சிருப்பாளே பாவத்த…!’  

    என்று  யுகித்தப்படியே, பேச்சியம்மாள் நெஞ்சில் கை வைத்து வாயைப் பிளந்து நின்றாள்….​அப்போது அந்த சமயம் மாணிக்கமோ தன் முதுகைத் தடவியபடியே,   

   “நீயா இது….? உன் கையில இவ்ளோ பலம் இருக்கும்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலயே மங்கலம்…..!”         

       ​“என்ன…  என்னய திமிங்கலம்ன்னு கூப்ப்டுவிகளே….?,  அப்போ என் கையுல பலம் இருக்காதா என்ன..? , ஏதோ ‘கணவனே கண் கண்ட தெய்வம்’னு இத்தன நாளா விட்டு வச்சிருந்தேன்….. இனிமேலும் அப்புடி விட்டுடுவேனா என்ன….?”

என்று மங்கலம் கெத்தாகக் கேட்கவும்….. ஆச்சரியத்தோடே பார்த்த ​மாணிக்கத்திற்குத் தலை சுற்றியது….    

     ‘ஆத்தே….! முகத்த பார்த்தா அஜித் போலவே அப்பாவி! பாவமா வச்சிருந்தவ…., அப்படியே கெத்தான வில்லியா மாறுறாளே…! , இப்போ பாக்குறதுக்கே ஜாக்கிசான் தங்கச்சி மாதுரி வேற எம்பி எந்திரிச்சு நிக்கிறாளே பாவத்த… இன்னும் என்னென்னலாம் பண்ண போறாளோ தெரியலயே…!’        

        என வெறித்துப் பார்த்தவன், அப்படியே ,  மகள் சாருலதாவையும் பார்த்து,      

  “என்ன பாப்பா… நீ இப்புடி பண்ணிட்டீயே?”               ​

“டாடி! நீங்க அஞ்சு ரூபாய் சாக்லேட் வாங்கி தந்துதான் பாசம் காட்டுறீங்க….. அம்மா எனக்கு ஐந்நூறு ரூபாய் சாக்லேட் வாங்கி தர்றாங்க தெரியுமா…! இந்த அரசியல்ல இதெல்லாம் சகஜம் டாடி….!”   

     என்றாளே பார்க்கனும்  சாருலதா நக்கலாக…. ஃபீல் பண்ணும் மாணிக்கத்திடம், உடனே மங்கலம் தலையிட்டு,    

   ​”பார்த்தீங்களா.. பாசத்த கூட பணத்த காட்டித்தான் வளர்த்திருக்க….! பாப்பா, இன்னொரு காரணமும் இருக்குமே, அதையும் சொல்லு…. அதான் சரி….!”   

    ​“ஆமா டாடி… அம்மா செண்டிமெண்டா ஒன்னு கேட்டாங்க….. ‘நீ பெரிய பொண்ணாகி கல்யாணம் பண்ணிக்கும் போது…, உன் புருஷனும் உன்னய உன் டாடி என்னய அடிச்சு கொடுமைப்படுத்துறது போலவே அப்புடி செஞ்சா என்ன பண்ணுவ….?’னு கேட்டாங்க. ‘ அதுக்கு நானோ … ரொம்ப சிம்பிள் மம்மி…., டைவர்ஸ் பண்ணிட்டு நல்லா வெயிட்டா ஜீவனாம்சம்! வாங்குவேன்’னு சொன்னேன்…. அதுக்கு மம்மி…. ‘அதுல என்ன ரிவெஞ்ச் இருக்கு பாப்பா….? உப்பு சப்பில்லாம இருக்குமே! அரசன் அன்றே கொள்வான், தெய்வம் நின்றே கொல்லும்னு அமைதியா இருந்தா வேலைக்காகாது… ஒழுங்கா ஒத்து வரலைனா மிரட்டுறதுதான் சரியான வழி!’னு சொன்னாங்க….”     

​”விஷம்… விஷம்… குடும்பமே விஷம்….!”     

என்று மாணிக்கம் சலித்துக் கொள்ள…, பேச்சியம்மாளோ அதிர்ச்சியில் மூடிய வாயைத் திறக்கவே முடியாமல் உறைந்து போய் நின்றார்…..!       

   அப்படியாக சமையலறையில் பேச்சியம்மாளும் மாணிக்கமும் மங்கலத்திடம் மாட்டிக்கொண்டதைச் சாக்காக வைத்துக் கொண்டு, பஞ்சாயத்துக்கு வந்த  இருவீட்டாரின் சொந்தங்களும் அங்கிருந்து மெல்லக் நழுவ நினைத்தவர்கள்….. 

      ‘துண்டை காணோம் துணியை காணோம்….’          

என்பது போல, தலைதெறிக்க வீட்டை விட்டு ஓடப் பார்க்கவும்…..​முதலில் ஓடிய ஒரு குண்டு மாமா!, வாசல் கதவை வேகமாத் திறக்க முயன்றார்….. 

    ​“ஏய்! கதவு திறக்க மாட்டேங்குது…! யாரு லாக் பண்ணது…?”     

என்று அவர் கத்த…., அவருக்கு பின்னாலேயே  மெல்லமாக பின்தொடர்ந்து வந்தவர்களோ, அதைக் கேட்டு திடுக்கிட…..    

      ​”அடப்பாவமே….! கதவ பூட்டிட்டு போய் தான் அங்க சண்டை போடறாள….!”ன்னு      

   ஒரு அத்தை அலறவும்…..​         

     ” சரி, வீட்டு மெயின் கதவு திறக்கலன்னா என்ன….?, ஜன்னல் கதவ திறந்து குதிச்சு ஓடிட்டா போச்சு!”ன்னு   

     சிலர் ஜன்னலை நோக்கி ஓடினார்கள்….. ஆனால், ஜன்னல்களுமே  பூட்டப்பட்டிருக்கவும்…..    

    ​”இங்க என்னதான் நடக்குது…?, யாரோ நம்மள உள்ளயே பிடிச்சு வைக்க நினைச்சிருக்காங்க போலயே…!”        

என்றுவிட்டு, எல்லாருமாக பயத்தில் வீட்டின் நாலப்பக்கமுமாக இருக்கும்   சுவற்றையே. சுற்றி ….சுற்றி….. வெறித்துப் பார்த்தப்படியே,  விழிக்கத் தொடங்கினார்கள்….​அப்போது சரியாக, மங்கலமும் கம்பீரமாக நடை  நடந்தப்டடியே, அவ்விடத்தை நோக்கி வந்து,    

  ​”அதுவா… இங்க நவராத்ரி கொலு நடக்குது சொந்தங்களே….!”       

என்று அவள் ஒரு சொடக்கிட்டு, தன் கூலிங் கிளாஸை மெல்ல இறக்கி, கண்களை உருட்டிச் சொல்லவும்…         

        “எதே…!?”   

    என்று சொந்தங்கள் அனைவருமாக  கோரஸாகப் பாடினவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை…..  

      ​”ச்சச்சூ…..சூ…..சூ…..சூ…!சூ…….!!!, வாயை மூடுங்க….. ம்ம்ம்… எல்லோருமா அந்த படிக்கட்டுல போய் நின்னு, அழகா கொலு பொம்மை போல போஸ் கொடுங்க பாப்போம்……”      

என்று மங்கலம் மாடிப்படியை தனது ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டவும்….          ​

“எதுக்கு….?”      

  என்று அதே கோரஸ் பாட்டை பாடினவர்களிடம்,   

     ​”ம்ம்ம்… ‘செல்பி’ எடுக்க…..”   

    என்றதும் மங்கலத்திடம்,    

     “முடியாது!”ன்னு   சொன்ன சொந்தங்ககிட்ட,     

” நான்  ஜாக்கிசான் தங்கச்…..சி!’ நான் சொல்றத கேட்கலைன்னா உங்கள எல்லாத்தையும்  சும்மா விடமாட்டேன்….!”         

என்றுவிட்டு,  மங்கலம்  பாய்ந்து வின்னிலே பறந்து வந்து,  சொந்தக்காரர்கள் எல்லார் மேலும் விழவும்….. ​சண்டை ஆரம்பமானது….! சொந்தங்கள் பத்துப் பேர் என்றாலும் பந்தாடினாள்  ஜாக்கிஜான் தங்கச்சியாக மங்கலம்…     

       குண்டு மாமாவை நோக்கி ஒரு பூசணிக்காயை மங்கலம் தூக்கி விட்டெரியவும்……   அவர் பயந்து நகல,  தவறிப் போய், அருகில் நின்ற ஒரு ஒல்லி அத்தையின் பெரிய கொண்டையில் பலமாகப்பட்டது….

     ‘டமால்!’     

  என்று சத்தத்துடன் அத்தையின் கொண்டை அவிழ்ந்து, தலைமுடி விரிந்து பேய்! போல மாறவும்… கொஞ்சம் எல்லோருமாக அந்த அத்தையைப் பார்த்து பயந்து வைக்க….​அடுத்ததாக மங்கலம் ஒரு பெரிய தட்டை எடுத்து, ஒருவரைத் தாக்கப் பாய்ந்தாள்….. ஆனால், அவள் கை தவறித் தட்டு அவர் முகத்தில் பட்டு, தட்டிலிருந்த மாவு பொடி முகம் முழுவதும் கொட்டி பரவவும்….. அவரது முகமுமே பேய்! போல முகம் வெண்மையாக மாற…, மற்றவர்கள் அதைப் பார்த்து கொஞ்சமாக பயந்தாலும்…. பின்  சிரிக்க முயன்று,    

“பவுடர் போட்ட மாமா!”ன்னு       

   கிண்டல் செய்துவிட்டு,   சிரிப்பையும் அடக்கினார்கள்….​ அந்த சமயம் சரியாக, மங்கலம் ஒரு பல்டி அடித்துப் பாய முயலவும்….. அவளின் கூலிங் கிளாஸ் கீழே விழுந்துவிட்டது….. அவ அதைத் தேடக் குனிய, ஒரு சொந்தக்காரர்  மங்கலத்தை அடிக்க பாய்ந்தவர் அவளின் முதுகை தாண்டியும் தவறிப்போய் அவர் அப்படியே தடுமாறி படியிலே விழவும்….., அங்கே ஏதேச்சையாக நின்றிருந்தவரும் அந்த அதிர்வால் கீழே ஏற்கனவே விழுந்திருப்பவர் மேலேயே அவரும்  விழ…., அவர்களை காப்பாற்ற வந்த ஒரு பொம்பளையும்  கால் இடறி! ஏற்கனவே விழுந்து  எழுந்திரிக்க முடியாமல் திணறும்  அவர்கள் மேல்  இவளும் விழுந்தாள்…. அப்போது, சரியாக  மங்கலம் மேற்க்கொண்டு  தன் கைவரிசையைக் காட்டி பந்தாடியவர்களையுமே கொண்டு வந்து   இவர்கள் மேல்  போட்டு அடுக்கவும்…. பார்க்க ஒரு டொமினோ எஃபெக்ட்! போல எல்லாரும் வரிசையாகப் படியின் அடியில் அடுக்கடுக்காய் விழுந்து கவுந்து கடந்தனர்…..  உடனே வேலன்,  

” ஐ….யா…. இப்புடி பாக்க  சான்ட் வீச் போல இருக்காங்க …..”  

‘இல்லடா  தாய் மசாஜ்!  நடக்குது….?”

என்று யுகித்த மாணிக்கம்,  அப்படியே,

    ‘ச்சே  நம்ம மைண்ட் ஏன் அங்க போகுது.ன்னு’ம்

அலுத்துக் கொள்ள….சரியாக ஒரு தலைகாணியால் மங்கலம் அவனையும் அடித்து, அந்தத் தலைகாணி கிழிந்து தொங்கி, அதிலிருந்த பஞ்சு! முழுவதும் பறந்து, அந்த இடம் முழுவதுமாக பரவியதும்… அடிவாங்கிய மாணிக்கம் பஞ்சு முகத்தோடு தும்மத் தொடங்கி….!!!        

  “ஹாச்சூ….! ஹாச்சூ….!”         

    என்றவனின் சத்தமும் அவ்விடம்  முழுவதும் கேட்க….. அதற்கெல்லாம் அசராத மங்கலமோ,            ​

“ஏய்! அந்த படியில போய் நில்லு….!”      

என்றப்படி, கணவனையும்  மாடிபடியை நோக்கி பிடித்துத் தள்ளவும்…., அவனோ,   

    “அம்மா! நான் பொம்மை இல்ல…., மனுஷன்! எனக்குத் தும்மல் வருது….!”

என்று  பேச்சியம்மாளை பார்த்து கத்தினவனை,

‘ நமக்கென்ன வந்தது யாரோ.. எவனோ….?‘ போல பாராத்தாள்  தாயுமே…

💒மறுமணாகும்…

🔥 இந்த ரிவன்ச் போதுமா இன்ன கொஞ்சம் வேணுமா….. ? , சொல்லுங்கோ கமெண்ட்டில் இல்ல தீபாவளிக்கு தான் அடுத்த எப்பியோடு வருவேன்…

← Previous All Chapters Next →

2 comments

Sharva Nithya October 18, 2026 - 11:38 pm

செம் செம‌ சிறப்பான தரமான சம்பவம் இன்னும் பத்தாது இன்னும் போடுங்க அந்ந கொலு பொம்மைகளை🫢🫢🫢😮😮😮🥸🥸🥸🤩🤩🤩🤩😍😍😍😍

Shivendr Vel October 19, 2026 - 7:58 am

😄😄😄சூப்பர் மங்கலபாட்ஷா அப்புறம் மங்கலஜாக்கிஜான் பலபரிமானங்களில் அசத்துற மங்கலம் காமெடி சண்டை காட்சிகள் அருமை போன பாகத்துல செண்ட்மெண்டா முடிச்சிங்க இந்த பாகத்துல சேர்த்தி வைச்சு காமெடியை இறக்கிட்டிங்க அதிரடி சரவெடி தீபாவளிக்கு இல்ல இப்பவே இறக்கீடுங்க

Leave a Comment

error: Content is protected !!