Stories that touch hearts

Home  /  33. நித்யா சபரி (இது மங்கலத்தின் மறுமணம்)  /  Chapter 9

CHAPTER 9

“இது மங்கலத்தின் மறுமணம்♥️💛…!!!”

By மோ.நித்யா சபரி · October 16, 2026

1

அத்தியாயம்-9-

வள்ளி வீட்டின் முகப்புப் பக்கத்தில் துடைப்பத்தை வைத்துக் குப்பையை பெருக்கி  கொண்டிருக்கவும்…. அங்கே மங்கலம் திடீரெனத் தோன்றி ,  

    ” ஏம்மா… நீ … பத்தாவது பொது தேர்வுல கணக்கு பாடத்துல  தானே ஃபெயிலு ….”    

என்று விசாரிக்க…. ​அம்மா இவளின் திடீர் வரவை எதிர்பாராது திடுக்கிட்டவள்,   

   ‘நான் பத்தாவது ஃபெயிலுன்னு கரெக்டா கேட்டுப்புட்டாளே…!’ன்னு  

திரு திருவென விழிக்கவும்… அம்மாவை பார்த்து, மங்கலம் தலையில் அடித்துக்கொண்டு,  

     “அதான் தெரியுதே…. நீ வேல செய்யுற இலட்சணத்துலயே…, அப்புறம்…மா நல்லா கூட்டி கழிச்சு  பாருங்க கணக்கு சரியா வரும்…!”   

  அவள் தன்னை தான் கடிந்து பேசுகிறாள் என்று அறிந்தோ … அறியாமையிலோ, இருக்கும் ​அம்மா சிரித்துக்கொண்டே,  

   ” என்னடி … நீ…?, அண்ணாமலை! படத்துல ரஜினி சொல்ற மாதிரி டயலாக்லாம் பேசுற….?” 

    “  அம்மா என்ன கெக்கபுக்க! சிரிப்பு…?, சொன்னது ரஜினி இல்ல ராதாரவி அது கூட தெரியல அய்யோ அய்யோ…. ஒழுங்கா குனிஞ்சு, நெளிஞ்சு, வளைஞ்சு வீட்ட பெருக்க சொன்னா செய்யுறியா பாரு…??, கணக்குதான் வரலைல, இதையாவது ஒழுங்கா செய்ய கூடாதா…?”  

“எனக்கே வாடி….”    

    “ஆமா…ஆமா… கண்டிப்பா உனக்கும் சேர்த்தே தான் ரிவன்ச் … அதுசரி… நீ எந்த காரியத்தையாவது எனனக்குனனு உருப்படியா செய்திருக்கியா…?, போயும் போயும்… இந்த குடும்பத்துல இருந்து வந்தா வாய போளந்து  வீட்டுக்குள்ளாற விட்டுருக்கியே உன்ன என்ன செய்யலாம்…???, பணக்காரவுங்களா இருந்தா போதுமா…????, பன்பு இருக்கா..?, ஒழுக்கமானவனான்னு பார்த்தியா..?, இந்த குடும்பத்த குப்பை மாதுரி நினைச்சு வீட்டுக்குள்ளாக சேர்க்காம அன்னைக்கே  கூட்டித் தள்ளி விட்டிருந்தேன்னா , இப்படி வந்து வீட்ட கூட்டுற நிலமை தான் இன்னைக்கு உனக்கு வந்திருக்குமா ….??, நீ மட்டும் என்னை படிக்க விட்ருந்தேன்னா படிச்சு ஓகோ இல்லாட்டினாலும் ஒன்ன ஓரளவு ராணியாட்டம்  வச்சு காப்பாத்தி இருப்பேன்ல…”   

“அதுசரி இப்ப என்ன குறைச்சல் என்னோட வந்துடு நானே வச்சு காப்பாத்துறேன் …”  

  “அடிங்க அம்மாவாச்சேன்னு பாக்குறேன்….  வேனா வேனான்னு சொன்னா பாழங்கிணத்துல தள்ளுறாப்புல கட்டி குடுப்பாங்களாம்  …. இப்போ வா வான்னு சொல்லு வாங்கலாம்… ஆணியே புடுங்க வேணாம்….  நான் எனக்கு புடிச்ச மாதிரி மறுமணமே! பண்ணிக்க போறேன்… உன்னோட வந்தெல்லாம் உன் வீனா போன சொந்தங்களின்  முகத்த பாத்து…. வாழ வெட்டியா காலத்த தள்ள முடியாது… பேசமா போறியா இல்ல உன் வாய்க்குள்ளாற கத்திய விட்டு சுத்தவா…. ”     

“அவ்………….வா…….   என்னடி சொல்லுற…?, உண்மைய தான் சொல்லுறியா…???, இந்த வயசுல இந்த முகறைகட்டைய எவன்ட்டி கட்டிப்ப…  சும்மா விளையாடதாடி…?, உம் பெத்தப்பா  போன பிறகு நான் ஒத்தயில நிக்குறேன்…  ஏன்ட்டியே வந்துருடி  … நான் பாவம்ல…” 

  “செல்லாது செல்லாது இந்த செண்டிமெண்ட் பேச்செல்லாம் இப்போ இருக்குற இந்த மங்கலபாட்ஷா விடம் செல்லாது செல்லாது …ஓரம் போ…”   

“எதே மங்கலபாட்ஷா வா…???””ஆமா…. மாணிக்பாட்ஷா! கேள்விப்பட்டிருப்பேல பாட்ஷா படத்துல … இப்போ ஏங்காலங்கிறதால… மங்கலபாட்ஷா போதுமா….”   

    “அடேப்பா… சாமி, போதும் விட்ரு…! இதோ சமையல் கட்டில் கரண்டிய வச்சுக்கின்னு விறைச்சுக்கிட்டு நிக்கிறானே…, உம் புருஷன்… போய் அவன்ட்டயே வம்பை வள..!”    

   

என்று அம்மா கையெடுத்துக் கும்பிட்டு சொன்னாள்.. உடனே, .மங்கலமும் தன் அடுத்த டார்கெட்டைத் தேடிப் புறப்படவும்…!,     

  ‘நான் தப்பச்சேன் சாமி…’! ,

‘இரு…இரு… உன்னய அப்புறமா வைச்சுக்கிறேன்…’     

என்று சந்தோசப்படும் அம்மாவை பார்த்து தீயாக  முறைத்தப்படியே, கண்களால் எச்சரிக்கையை விடுத்தவள், சமையலறையை அடைய… சமையலறையிலிருந்து சீரான நறுமணத்தோடு தாளிக்கும் சத்தம் வந்துகொண்டிருந்தது…. உள்ளே மாணிக்கம், ஏதோ உலகப் புகழ்பெற்ற தலைமைச் சமையல்காரரைப் போல அத்தனை கவனமாக, சின்சியர் சிகாமணியாகக் கரண்டியைச் சுழற்றிக் சமைததுக் கொண்டிருக்கவும்…..   

   மங்கலம்  அங்கே இருக்கும் ஒரு சேரில் அலட்சியமாக கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துக் கொண்டு, ஸ்டைலாக  கூலிங் க்ளாஸை இறக்கி, ஒரு புருவத்தை வில் போன்று வளைத்து , கேள்வியாக பார்த்து , விசில் அடுத்தப்படியே , கணவனை அழைக்கிறவளை அவனோ கண்டுக் கொள்ளவேயில்லை , அவளும் விடுவதாக இல்லை….,  ஆகையால், அவனைத் தன் பக்கம் திரும்ப வைக்க மங்கலம் படாத பாடுபப்பட்டு,         ​

“ஹ்ம்ம்… ஹ்ம்ம்…”   

    என்று தொண்டையை வேறுச் செருமிக் கூப்பிட்டுப் பார்க்க…. ‘ம்ஹூம்… !’, மாணிக்கம் திரும்பிக்கூட அவளைப் பார்க்கவில்லை…!, மாறாக, அவனது கவனம் முழுக்கவும்…. அவன் சமைக்கும் அடுப்பிலும், வாணலிலும்தான் இருந்தது….         அதன் விளைவாக  ,​பொறுமையிழந்தவளாக  சட்டென்று தான் உட்கார்ந்திருந்த நாற்காலியைப் பின்னால் தள்ளிவிட்டு வேகமாய் எழுந்து, அவளது நைட்டியின் கீழ் முந்தானையை எடுத்து, ஆண் பிள்ளைகள் வேட்டியை எப்படி மடித்து கட்டுவாங்களோ…?,அப்படியே, அதே பாணியிலே மங்கலமும் தூக்கிக் கட்டவும்…. நைட்டியில் இல்லாத காலரைத் தூக்கி விடுவது போலத் தன் தோள்களைச் சிலிர்த்துக்கொண்டு, ஒரு மாஸ் ஹிரோயினி போலப் கெத்தாக எகிறினவள், தனது வளைந்த இடையில் கைவைத்துக்கொண்டு,       

“ஏய் மாமே… உன்னய தான்..!”      

​ என்றவள் செய்யும்  அலப்பறையைப் பார்த்து மாணிக்கம் லேசாகக் கடுப்பாகி,    

“என்னடி ரொம்பத்தான் நக்கலா…?”​

“ஆமா மாமே… நக்கல், விக்கல் எல்லாம் தான்…! அதுசரி…., உனக்கு சமைக்கிறது அவ்வளவு பிடிக்குமா என்ன…?”  

     ​”ஆமாண்டி ஆமாம்..! சமையல்ங்கிறது ஒரு ஆர்ட்!… தமிழ்ல சொல்லணும்னா கலைடி… கலை…!”   

      “அதான் என்னய நல்லா சமைக்க சொல்லி  பாடா படுத்தினியா நீ…? அவ்வளவு ஆசை இருக்கிற நீங்களே தினமும் சமைக்க வேண்டியதுதானே…?”

“ஹா…ஹா …ஹா….ஹாஹாஹா….அப்புறம் எதுக்குடி பொம்பளைன்னு ஒருத்தி வீட்ல இருக்குற…?, அப்போ அந்த சமையல் கலைய நல்லா கத்துட்டு வித்தைய காட்ட வேண்டியதானே….?”

     ”  ஏன்… நான் ஒரு நாள் கூட நல்லா சமைச்சதே இல்லையா என்ன…?, நீங்கதான் என் சமையல பாராட்டுறதில்ல… சரி, பிள்ளைகளாச்சும் பாராட்டுறாங்களே…?”   

    ​”ஆமா… அப்புடி உன்னய பாராட்டிட்டா உனக்கு ஓவர் நினைப்பு வந்துடுமே…!,  அதுமட்டுமில்லாம உன்னய பாராட்டாம இருந்தாத்தானே நீஎன் அடிமை போல அமைதியா நிப்ப…!”   

    “ஓஹோ… உங்க அம்மா பாலிசிய நீங்க ஃபாலோ பண்றீங்களோ…?”  

   ​”அப்படிக்கூட வச்சுக்கலாம்…!”     

  என்றுவிட்டு , மாணிக்கம் கெத்தாகத் தலையாட்டவும்…. ​மங்கலம் அலுத்துக்கொண்டவள்,  

  “சரி சரி… எதுக்கு பழய கதயவே பேசிக்கிட்டு…. நீங்கலாம் சரிபட்டு வரமாட்டிங்க எனக்கு….. நான் பேசாம மறுமணமே பண்ணிக்குறேன்….!”    

அதுவரை சமையலில் தீவிரமாக இருந்த மாணிக்கம்…, ‘மறுமணம்!’ என்ற வார்த்தையைக் கேட்டதும் அதிர்ந்துபோய், சுடச்சுடச் எரிந்துகொண்டிருந்த அடுப்பை உடனே ‘ஆஃப்!’ செய்யவும், அதனைப் பார்த்தவள்,    

   ​”இப்போ எதுக்கு நிறுத்தினீங்க…?, சமைக்க வேண்டியதுதானே…?”         

       “ம்ம்ம்….நீ…..தான் மறுமணம்னு சொன்னியே… அதான் நிறுத்தினேன்…!”     

என்றுவிடடு, மாணிக்கம் முறைக்கவும்…. ​மங்கலம் லேசாகச் சிரித்துக்கொண்டே,         

“பாத்தீங்களா….பாத்தீங்களா….? இப்படிதானே எங்களுக்கும் நாலு கவலை இருக்கும்ல…!, அப்போ சமைக்குறப்போ ஏதாச்சும் தப்பு நடக்கும் தானே …. அது இயல்பு தானே… அத நீங்க என்னிக்காவது புரிஞ்சுகிட்டீங்களா…?”      

  “அத விடு… பேச்சை மாத்தாத…!, மறுமணம்னு சொன்னியே, அத பத்தி சொல்லேன் முதல்ல…!”     

      ​”அட அதுவா…?,  ஆமா… நிஜமாவே மறுமணம் தான் பண்ணிக்க போறேன் நான்…!”      

     என்று மங்கலம் சாதாரணமாகச் சொல்ல, மாணிக்கத்தின் முகம் கோபத்தில் சிவந்து,​

“என்னடி சொன்ன…? , திமிர பாரு ….!”​

“என்ன…?, எந்த திமிர பாத்தீங்க…?, நீங்க மட்டும் அடிக்கடி ‘இன்னொரு கல்யாணம் பண்ணிப்பேன்’னு சொல்லலாம்… நான் சொன்னா மட்டும் தப்பா என்ன….? ” 

      “ஆமா சொல்லக் கூடாதுன்னா சொல்ல கூடாது.”ன்னு,    

    மாணிக்கம் அவளது தோள்களைப் பிடித்து, ஆணித்தரமாக அழுத்திக் அதிகாரமாக கூறினவன், அப்படியே மங்கலத்தின் முகத்தை பார்க்கவும்… அப்படியே பாவமாக, சோகமாக மாறி இருக்க….          

​ ‘ஆஹா… நாம மிரட்டுனதும் பயந்துட்டா போல..!’    

  என்ற ஆணவத்தில் மாணிக்கம் அப்படியே அவளை அடிக்கக் கையை ஓங்கினான்…. அந்தச் சரியான நேரத்தில், அவன் முகத்தில் பளிச்சென்று ஒரு ‘ப்ளாஷ் லைட்!’ வெளிச்சம் அடிக்கவும்…!!, சுதாரித்த மாணிக்கம்,      

‘யாருடா அது…?’    

என்று திரும்பிப் பார்த்தான்…அங்கே, அவனது அம்மா பேச்சியம்மாள், பாத்திரம் துலக்கி வைக்கும் கூடையை இடுப்பில் தூக்கி வைத்தபடி சமையலறைக்குள் நுழைய…. வாசற்படி வெளிச்சமும், அவள் கையில் இருந்த பித்தளை பாத்திரங்களின் பிரதிபலிப்பும் தான் அந்தப் ப்ளாஷ் லைட்! வெளிச்சம் என்று நினைத்துக் கொண்ட ​மாணிக்கம்  பெருமூச்சு ஒன்றை விட்டுக்கொண்டான்…..     

     ​பேச்சியம்மாள் சமையலறைக்குள் நுழையும்போதே, ‘மறுமணம்!’ என்கிற வார்த்தை அவளது காதில் காற்று வாக்கில் வந்து  விழுகவும்….. ஏற்கெனவே மங்கலம் மீது அவளுக்குக் காரசாரமான ஒரு கடுப்பு இருந்தது…!, காரணம் ,   

     ‘ நாம வெளிய கதவைத் தட்டிக்கிட்டே இருந்தோம்… இவ என்னடான்னா உள்ளிருந்து எவன் கூடயாவது  வெளியே வருவாளோன்னு நம்மல நினைக்க வச்சா…. ஆனா இவ உள்ளே பொறுமையா  வெளிய நடக்கிற கலவரமெல்லாம்  தெரிஞ்சு வைச்சுட்டு,  நைட்டிய பொறுமையா மாத்திட்டு, அப்படியே முகத்தைக் கழுவி, மேக்கப்பும் போட்டுட்டு, சாவகாசமா தலைய வாரி கொண்டைய போட்டு, அதுல கிளிப் எல்லாம் குத்திட்டு நிதானமால்ல வந்தா…!’      

என்று அதே நினைப்பாக கடுப்பில் புகைந்து கொண்டிருந்தவள்.​இப்போது, சமையல்கட்டுக்குள் வந்ததும், நடப்பதைப் பார்த்து நேரடியாக விசாரணைக்கே இறங்கவும்…மாணிக்கமும் தனது ஆள்காட்டி விரலால் மங்கலத்தை சுட்டிக்காட்டி!, குற்றம் சுமத்த…, மாமியார் முன்னாடி பயந்தவள் போல அவ  அமைதியாக இருக்க… அவ்வளவுதான்… இதான் சாக்கு என மாமியாருக்கும் கோபம் தலைக்கேறி…!, இடுப்பில் வைத்திருந்த பாத்திரக் கூடையை ‘படார்!’ என கீழே வைத்து, பாய்ந்து வந்து மங்கலத்தை அடிக்க ஓங்கி உயரக் கையைத் தூக்க…  

      ​அப்போதும் மீண்டும் அதே ‘ப்ளாஷ் லைட்’! வெளிச்சம் பளிச்சென்று  விழுந்தது…!         

💒மறுமணாகும….

🚨அந்தப் ‘ப்ளாஷ் லைட்’ வெளிச்சத்தை உண்டாக்குவது  யார்…?

💔மங்கலம் கணவன் மாமியாரிடமிருந்தும் தப்பிப்பாளா…? பார்ப்போம்…     ​

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!