Stories that touch hearts

Home  /  33. நித்யா சபரி (இது மங்கலத்தின் மறுமணம்)  /  Chapter 22

CHAPTER 22

“இது மங்கலத்தின் மறுமணம்♥️💛…!!!”

By மோ.நித்யா சபரி · November 20, 2026

1

அத்தியாயம்-22

“மாணிக்கம், நீங்க என்ன செய்யணும்னா…”  

என்று கவுன்சிலர் வாசுகி இழுக்க…  மாணிக்கமோ, பரீட்சையில் கேள்வித் தாளைப் பார்த்தவுடன் விடை எழுதும் முதல் பெஞ்ச்! மாணவனை போல பாய்ந்து வருகிறவன்,  

​”நான் மங்கலத்துகிட்ட சாரி கேட்கணும், கரெக்ட்தானே மேடம்…?”

  என்றதுமே,  ​வாசுகியின் தலையை சுற்றி  குருவிகள் கிவிங்…!!!, என சுத்தவும்… அவளுக்கு தலை பாரமாகவிடுகிறது…., அதன் விளைவாக, அவளின்  நெற்றியை ஒருவாறு கைவைத்து தடவிக்கொண்டே,….!,

   ‘அட பாவத்த…!!!,போன தடவை மூஞ்சிய திருப்பிக்கிட்டு திமிரா உட்கார்ந்திருந்த  அந்த ஆணாதிக்கம் பிடித்த ஆசாமியா இவன்….?!    

   என கண்களையும் அதிர்ச்சியில்  அகல விரித்து  பார்த்தவாறே வாசுகி நினைக்கவும்…., மாணிக்கத்திடம் அடுத்த வார்த்தையும், 

“ஆமாம்…”

என்று  அவள் சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்பே, முந்தி அடித்துக்கொண்டே , மங்கலத்தின் பக்கமாக  அவன் திரும்பி, ஒரு ஆஸ்கார்  ஆவராட்டு  இல்ல…. ஒன்பது ஆஸ்கார் ஆவார்ட் கூட வாங்கிடும் அளவுக்கு ஓவர் ஆக்டிங்! செய்து,   பப்புனை போல சில பல வித்தைகளையும்   செய்துக்காட்டி, ஒருவழியாக மனைவியிடம் சாரியைக் கேட்டு முடித்து விடுகிறான்…!, ஆனால் மங்கலத்தின்  முகத்தில் எள்ளளவும் ரியாக்ஷன் இல்லை…. மாறாக,  

   ‘ஆடுறா ராமா ஆடு… ஆடுறா ராமா ஆடுன்னு .. இவன் எப்பவும் இப்படித்தான்…   வேஷங்கள் பல போடுறவன் ஆயிற்றே….!’   

என்று  அவள் மனசுக்குள் நினைத்துக்கொண்டே,

    “இப்பவும் எனக்கு டைவர்ஸ் தான் வேணும்…!”

என்று வாசுகியிடம் தன் முடிவாக இறுதி பாயிண்ட்டை மங்கலம் முன் வைக்க…. மாணிக்கமோ கண்ணில் கிளிசரின் தடவாத குறையாக,  

    “ஐயோ மேடம்… டைவர்ஸ் தந்துராதீங்க, அவ இல்லாம நான் செத்து போயிடுவேன் பாத்துக்கோங்க…!”  

   என்று சில பல  ரீல்களை  அள்ளி விடுகிறான்…. ஆகையால் அவற்றையெல்லாம் காதுக் குடுத்துக்  கேட்க  முடியாமல்   தன் கைகளை வைத்து காதுகளைப் போத்திக்கொண்டே , வாசுகி சில மணி நேரம் வரையிலும் தாக்குபிடிக்க… அதற்கு மேலும்  பொறுத்துக் கொள்ளமுடியாது  என அவ  தீர்மானிக்கவும் …. ஒரு பேப்பரில் எதையோ கிறுக்கிக்  கொண்டிருக்கிறவளைப் பார்த்து….

‘என்ன இந்த மேடம்  தீபாவளிக்கு சுட்டு  மீந்து போய் கார்த்திக்கை வரை வைத்திருக்கும் முறுக்கு போல….  இந்த கிறுக்கு கிறுக்குதே அந்த பேப்பருல  அப்புடி  என்னத்ததான் எழுதுதோ தெரியலையே… அனேகமாக இது டாக்டராகியிருக்க வேண்டியது… ஏன்னா பேசண்ட்டுக்கு  மருந்துச்சீட்டு எழுதுறாப்புள எழுதுதே.. எதுக்கும் இதுக்கிட்ட நமக்கு வர முட்டி வலிக்குமே மருந்து கேட்கலாமா …?’   

எனவும் நினைத்தவனின் முகத்தில் அறைந்தது போல அந்தப் பேப்பரை வாசுகி   நீட்ட …. மழுங்க மழுங்க செய்வதறியாது   மாணிக்கம் விழிக்கவும்…. அப்படியே தனது கிளைன்டாக வந்து அமர்ந்திருக்கும் இந்த கணவன் மனைவி இருவர் கையிலுமாகவே அந்தப் பேப்பரை  கொடுத்து வாசுகி திணிக்கிறவள்,

  ” போங்க…. நீதிபதியை போய் பாருங்க போங்கன்னு….!”    

என்று வாசுகி அங்கிருந்து பத்திவிடாதக் குறையாக அவர்களை  அனுப்பி வைக்க ….​ அதன் விளைவாக, நீதிபதியின் முன்னால் போய்  நிற்கிறவர்களுக்கு  அடுத்த சிட்டிங் நீதிபதியிடம் நடக்கிறது…

    அங்கே அவர்களிடமிருந்து  வாசுகி எழுதியிருந்த தீர்ப்பு பேப்பரை நீதிபதி அவர்  கையில் வாங்கியதும்,  மாணிக்கத்திற்கு தான் ஏழாவது வானத்தில் கால் பதித்தது போலவும்…. அங்கேயும் நடிப்பு அரக்கனாகிய  அவன் நடிக்கும் தன் வேலையைச் சிறப்பாக நடித்துக் காட்டுகிறான்….  ஆகையால் அவை எல்லாவற்றையும் நீதிபதி புருவ முடிச்சுகளுடனே, தன் மூக்குக் கண்ணாடியை சற்று இறக்கிவிட்டு,   அவனையே கூர்ந்து பொறுமையாக பார்த்து கேட்டகவும்…. தன்னுடைய இறுதி தீர்ப்பையும்  எழுதிவிட்டு  இருவரின் கையிலுமாக அவற்றை நீதிபதி கொடுத்துவிடுகிறார்….   

அப்படியாக  அந்தக் காகிதத்தைக் கையில் வாங்கவும் மாணிக்கத்திற்கு தலை கால் புரியவில்லை … அந்திரத்திலே கயிறுக்கட்டி ஊசலாடுகிறது அவனது மனம் அப்படி ஒரு ஆனந்தம் அந்த கரடிக்கு…, அப்படியே,

   ‘அப்பாடா… இந்த பேப்பரை பாத்து மங்கலம் முகத்தை எங்கு வைத்து கொள்கிறாள்ன்னு பாக்கனும்… அப்படியே அவ தன் தலைய கீழே தொங்கபோட்டுட்டு,   ‘சட்…!!!!’ சொல்லி தன் தலையிலும் நெஞ்சிலுமா கைவைத்து அடித்துக்கொண்டு அழுது, ஒப்பாரி ….!!!! வைத்து, அவ வருத்தப்பட்டா போதும்… அத பாக்கவே நம்ம கண்ணுக்கு குளு குளுன்னும் இருக்கும்…,  அப்படியே டைவர்ஸ் கேன்சல் ஆனதால இவ என் வீட்டுக்குத்தானே வந்தாகணும் அப்புறம் இருக்குடி உனக்கு கச்சேரி திமிங்கலம்….!‘

  என்று மாணிக்கம் குதூகலிக்கவும்… அவனின் மனவோட்டத்தை படித்தவராக நீதிபதி,

“முதல்ல அந்த பேப்பரை படிச்சு பாருப்பா…”

என்றுவிட்டு, நீதிபதி அவரின் மனதுக்குள்ளாக,

‘ படி … படிச்சு பாரு…. அப்புறமும் அந்தரத்துல கயிறு கட்டி ஊஞ்சலாடுதா  உன் மனம்ன்னு பாப்போம்… இல்ல உன்னை அப்படியே குணடக்கட்டா  தலைகீழா கால்ல கயிறு கட்டி தொங்கவிட்டு அடிக்குதான்னு பாப்போம்….’   

அப்படி நினைக்கவும் … அது ஏதும் அறியாதவனாக   மாணிக்கம் கண்மூடித்தனமாகப் பார்த்து அசால்டாக அதை  படிக்கிறான்… அவ்வாறு அவன் படித்த அடுத்த நொடியே, 

   “சட்!”    

என்று தன் தலையில் தானே ஓங்கி மாணிக்கம் அடித்துக்கொள்ளவும்…!, அப்பபடியே , அதிர்ச்சியில் நீதிபதியைப் பார்த்தப்படியே பல்லைக் கடித்துக்கொண்டு, ,   

    “ஏன் டைவர்ஸ் கொடுத்தீர்கள்…?!”   

  என்று கத்துகிறவனிடம்  மங்கலமும் சளைக்காமல்   ,

“ஏன்…?, நடிப்பு அரக்கா… உனக்கு மட்டும்தான் நடிக்க தெரியுமா என்ன…?,, எங்களுக்கும் நடிக்க தெரியும் மாமே…!”

என்று நக்கலாக அவ  பதில் கொடுத்து சிரிக்க….. மாணிக்கம் உடனே அங்கே வாலில்லாத  குரங்கை போல துள்ளிக் குதித்து ,     

  “பாத்தீங்களா சார், உங்க முன்னாடியே எப்புடி நடிக்கிறான்னு…. மனசுல பெரிய லேடி சூப்பர் ஸ்டார்ன்னு நினைப்புதான் இவளுக்கு….?” 

   என்று அவன் புகார் கடிதம்  வாசிக்கவும்… நீதிபதி கடுப்பாகி,  

  “சைலன்ஸ்… வில் யூ ஷட் அப் மாணிக்கம்…!”       

என்று  மேஜையின் மீது தன் உள்ளங்கையாலேயே,  டக்!  என்று ஒரு தட்டுத் தட்டி அதட்டுகிறவரிடம் விடாது மாணிக்கமும் திமிராக,   

  “ஏன் சார்… தப்பு அவ செய்திருக்கா, என்ன ஏன் அதட்டுறீங்க….?”     

“ம்ம்ம்… குறும்படம் பாக்குறியா மேன்…?...”

என்று பிக்பாஸ் கமல் பானியில் நீதிபதி நக்கலான சிரிப்போடு கேட்டுவிட்டுத் தன் செல்பேசியிலிருக்கும்  ஒரு வீடியோவை அவன் பக்கமாக திருப்பிக் காட்டுகிறார்…!,  அதிலே, மாணிக்கம் முதலில் தன் அம்மா பேச்சியம்மாளிடம்,  அவனது காஸ்ட்லி.   ஐ-போனிலே  பேசி இதுக் குறித்து திட்டமிட்டதும்…, அடுத்து மங்கலத்தின் அம்மா வள்ளியிடம் பேசி, சாரி! நாடகம் எப்படி போடலாம்…?, எனவும் அவன் அவர்களிடம்  பயிற்ச்சி எடுத்துக் கொண்டதும் கலர்புல்லான  படமாக செல்பேசி திரையில் ஓடிக்கொண்டிருக்க… அப்படியாக,  ‘நடிப்பு அரக்கனின் ஆட்டோபயோகிராபி’ வீடியோ!  சாட்சி மூலமாக அவனது மொத்த நாடகமும் அங்கே அம்பலமாகிறது…! ,     

   இந்த  வீடியோவைப் பார்த்ததும் மாணிக்கத்தின் முகம் பேயறைந்த மாதிரி ஒருகணம்! மாறிப் போயிருக்கவும்… பின்பு  சுதாரித்தவன் பதறிப்போய் உடனே,   

” இது… இது பொய் சார்… இது ஏஐ வீடியோ…!”  

      என்று மாணிக்கம் நீதிபதியிடம் வாதாடவும்….  உடனே நீதிபதி கூலாக,  

  “இல்லை… இதை நாங்க லேப்ல குடுத்து செக்கப் பண்ணிட்டோம், இது ஒரிஜினல் தான்னு கன்பார்மும் ஆகிடுச்சு…! , அதனால இது ஏஐ! அல்ல என்று நிரூபணமாகிவிட்டது.. அதனால நீ தப்பிக்க முடியாது மேன்…!”   

  என்று போட்டு உடைக்கிறார்….​ ஆகையால், மாணிக்கத்திற்கு மண்டை காயவும் , தலையில் சம்மட்டியில் அடிவாங்கியது போல வலிக்க… அவன் தலையை  குருவி  சுத்துகிறது…    

    “இதெப்படி இவர் போனுக்கு போச்சு…?”

என்று யோசிக்கும்போது அதை குறிப்பால் உணரவும் நீதிபதியே , 

“இதை எனக்கு அனுப்பியது வாசுகிதான்…!”   

என்று அவர்  சொல்ல…, மாணிக்கம் அப்படியே  வாயை பிளந்து ஷாக்! ஆகிறான்…!,​ அப்போது அங்கே எட்டிப் பார்த்தப்படியே,

” இதோ  நானே வந்துட்டேன்...”

  என்று திடீர் என்ட்ரி! கொடுத்து  வந்த வாசுகியும்,   

   “என்ன மிஸ்டர்… என் நடிப்பு எப்புடி இருந்தது…? , உன்னை விட பெட்டரா இருந்ததா…?, அப்போ அந்த  ஆஸ்கர்! அவார்ட் எனக்கு தானே… அந்த லெவலுக்கு இருந்துச்சுல… கப்பு முக்கியம் பிகிலு…??”   

  என்று நக்கல் பேசவும் அவளைப் பொறுப்படுத்தாமலே,  

  ‘இவளுக்குமே இந்த வீடியோ எப்படி கிடைச்சது…?’  

   என்று விழிக்கும் மாணிக்கம், அப்படியே மங்கலத்தைப் பார்க்கிறவன்,

  ‘இல்ல… இது மங்கலமா இருக்காது…!’

  என்று தீர்மானமாக முடிவு செய்துவிட்டு,   

‘அப்போ அது யாரு…?’  

என்றும் மாணிக்கம் அவன் மூளையைக் கசக்கி சிந்தித்து , அப்படியே தன் தலையைப்  பிய்த்துக்கொள்ளாத குறையில் இருக்கவும்…… அப்போதுதான் அவனுக்கு அந்த ஞாபகமும் வருகிறது, வீட்டிலிருக்கு பிள்ளைகள் விதவிதமான ஆங்கிள்களில் அதுகளின்  செல்போன் கேமராவை வைத்து ஏதோ படம் எடுத்துக்கொண்டிருந்தது நினைவுக்கு வர…

     ‘அடப்பாவிகளா… அப்போ …  அந்த பிளாக் ஷிப்!  வேலையைச் செஞ்சது என் புள்ளங்கோ தானா…?!‘

என்று நினைத்து, அதிர்ச்சியில் உறைந்து நின்ற இடத்திலேயே மயங்கி விழாத குறையாக நிற்கிறான் மாணிக்கம்…! , அப்படியே,  

​’ இதெல்லாம் மங்கலத்தின் திட்டம்தான்….! அவதான் என் பிள்ளைகள பின்னாடி இருந்து ஸ்கூரூ குடுத்து ஆட்டி வைக்கிறாள்… அதுகளும் அவ சொல்றபடி கச்சிதமா ஆடுதுகள்…!, அதாவது  அதுகள என்கிட்ட விடுறாப்ல விட்டு, அப்படியே பிள்ளைகளை விட்டே என்னை கொடுமைப்படுத்தி அவ குளிர் காயுறா…!‘

   என்று  அவன் வெளிப்பார்வைக்கு அமைதியாக நின்றாலும், உள்ளுக்குள்ளே அவனது மூளை அப்படியாக அதிவேகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கவும்,        

   ‘அடப்பாவிகளா… கோர்ட்ல போன முறை கூட,  ‘அப்பா கூடத்தான் போவேன்’னு ஒத்தக் காலில் அதுக நின்னதும் இதுக்குத்தானா…?!, எல்லாம்  நடிப்பா  கோபாலுன்னு …?,  சொல்லுற மாதுரி  எல்லாமா சேர்ந்து என்னை இப்புடி பழிவாங்கிடுச்சுகளே…! இப்போ கடைசியில நீதிபதிகிட்ட இப்புடி கையும் களவுமா சிக்கவும் வச்சுடுச்சுகளே…!,’    

அடுத்த கட்டமாக, இந்தச் சிக்கலில் இருந்து எப்படித் தப்பிப்பது என்ற தந்திர யோசனையை உடனடியாகத் தட்டி எழுப்புகிறவன்,   

   ​’இப்போ நான் சத்தம் போட்டா, என் வாயாலயே ஏதாவது உளறி மாட்டிப்பேன்…. இந்தக் கேஸ்ல தண்டனை எதுவும் கிடைக்காம நான் தப்பிக்கணும்னா… இப்போதைக்கு வாய் மூடிட்டு அமைதியா நிக்கிறதுதான் நல்லது…!’    ​

என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, எந்தவித எதிர்ப்பும் காட்டாமல், முகம் முழுவதும் பாவத்தைத் தேக்கிக்கொண்டு கள்ள மெளனமாக நிற்கிறான் மாணிக்கம்…!

💒மறுமணாகும்…

🔥மாணிக்கத்தின் இந்த  மெளனம்! நீதிபதியின் தீர்ப்பில் என்ன மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறது….? மங்கலத்தின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்….?பார்ப்போம்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!