Stories that touch hearts

Home  /  33. நித்யா சபரி (இது மங்கலத்தின் மறுமணம்)  /  Chapter 21

CHAPTER 21

“இது மங்கலத்தினன் மறுமணம்♥️💛…!!!”

By மோ.நித்யா சபரி · November 16, 2026

1

அத்தியாயம்-21-

நீதிமன்றத்தின் வளாகத்துக்குத் தனி ஆளாக கம்பீரமாகவும் வந்து இறங்குகிறான் மாணிக்கம்….. அந்த நீதிமன்றத்தின் மெயின்  கேட்டைத் தாண்டி  உள்ளே நுழையும்போதே அவனுக்குள்ளே ஒரு மகா கெத்து ஓட ஆரம்பித்து விட,

”  அப்பாடா….! இந்த புள்ளங்கள….. பக்கத்துல வச்சுக்கிட்டு ஒவ்வொரு முறையும் பல்பு! வாங்குனது போதும்…!, இன்னைக்கு எவனுக கிட்டயும் மாட்டாம, சிங்கிளா நான் மட்டுமா வந்து நிக்கிறதுதான் எனக்கு பலம்….!, இன்னைக்கு மங்கலத்தை எப்படி சமாளிக்க போறேன்னு மட்டும் பாரு…!”     

என்று தனக்குத்தானே மார்பை நிமிர்த்திக் கொண்டு சபதம் செய்கிறவனின் கண்ணுக்கு முன்னே அதே நேரத்தில், அதே பிரம்மாண்ட நந்தா தமிழின் சொகுசு கார் கோர்ட் வாசலிலின் முன் வந்து நிற்கவும்…..  அந்த காருக்கு  அருகில் நெருங்கும் போதே ,  மாணிக்கத்தின் புருவங்கள் கோபத்தில் முடிச்சாகிக் கொள்கின்றன….      ​

‘கண்டிப்பா அந்த நந்தா பயலோட காராதான் இருக்கும்….! , அன்னைக்கு பசங்க முன்னாடி என்னால இவங்கள ஒன்னும்  செய்ய முடியல… இன்னைக்கும் கோர்ட் வாசல்லயே என் பொண்டாட்டி அவன்கூடத்தான் கைக் கோர்த்துக்கிட்டு இறங்கின  அவ்ளோ தான் உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன் ரெண்டு பேரையும்….!’  

   என்று அவன் உள்ளுக்குள்ளேயே  ஆத்திரத்தில் கங்கணம் கட்டிக் கொள்ளவும்… எரிமலையாக வெடிக்க காத்திருக்கிறான் மாணிக்கம்…. அப்படியாக, காருக்குள்ளிருந்து இறங்குபவர்களில் ஒரு  உருவம்! மங்கலத்தின் பின்னால் மறைந்திருக்கவும்…., புருவ முடிச்சுக்களுடனே மாணிக்கம்,

‘யார் அது…?, ‘  

என்று கூர்ந்து கவனித்தும் வெளிப்படையாகத் தெரிவது அந்த மர்ம நபரின் ஒரு கை மட்டும்தான்….! , அப்படியாக மங்கலம் யாருடைய கையையோ கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, கைக் கோர்த்தப்படி இறங்குவது மட்டுமாக தான் மாணிக்கத்தின் கழுகு பார்வைக்கு தெளிவாகத் தெரிகிறது…..

      ​’எவ்வளவு திமிர்! இருந்தா கோர்ட் வாசலிலயே இவுங்க  ரெண்டு பேருமா  இந்த அலுச்சாட்டியம் பண்ணுவாங்க… !, கோர்ட்டுல ஜட்ச் முன்னாடி  இதை அவுங்க இனிமே  செய்யக்கூடாதுன்னு நான்  சொல்லி …. நீதிபதியும்  அவுங்களுக்கு வார்னிங்! கொடுத்து தொலைஞ்சாலும்,  இவ  அதை எதையுமே  கேக்காம அவனுடனே இப்புடி கை கோர்த்துக்கிட்டு இறங்குறாளே இந்த பாவி மங்கலம்…!’  

  என்று அவன்  நினைக்கவும்….  இதைக்குறித்து அவனுக்கு ரத்தம் கொதிக்கிறது….  அப்படியாக, காரிலிருந்து அந்த மர்ம உருவம்! முழுமையாக வெளியே வந்து காலடியை எடுத்து வைக்க…. மாணிக்கம் நினைத்தது போல அது நந்தாவா….? ,இல்லை….!, மங்கலத்துடன் கைக் கோர்த்து இறங்குவது ஒரு பெண்மணி!,,, ​    அதைப் பார்க்கவும் மாணிக்கத்தின் முகம் அப்படியே மாறி….. ஒரு நிமிஷம் அவன் மனசுக்குள் சம்மட்டி! அடி வாங்கியது மாதிரி ஆகிறது….     ​

‘ஓஹோ… அந்தப் பயம் இருக்கட்டும் மங்கலம்  நீ கடைசியில ஒரு  பொண்ணு கூடவா வந்து இறங்குற…?’ 

   என்று தன்னைத்தானே மாணிக்கம் மனசுக்குள்ளாக பேசிச் சமாதானப்படுத்த முயலவும்….அடுத்ததாக,  அந்தப் பெண்! யார்…?,, என்றும் அவன்  உற்று நோக்க… மாணிக்கத்தின் கண்கள் இரண்டும் வெளியே தள்ளாத குறையாக விரிந்து கொள்கின்றன…!, அப்படியாக  ​அந்தப் பெண் நிற்பது, நடப்பது, முகவெட்டு, ஏன் அந்த ஹேர் ஸ்டைல், கோட் சூட் டிரஸ் வரைக்கும்… அச்சு அசலாகவும் அப்படியே நந்தா போலவே இருக்கிறாள்…! , ஆகையால் , அவளையே உற்றுப்பார்த்து தன் கழுகு பார்வையை செலுத்தும் ​மாணிக்கத்திற்கு தன் கண்களைத் தன்னாலேயே நம்பா முடியாமல் போகவும்…., தன் உள்ளங்கையால் கண்களைக் கசக்கிவிட்டப்படியே மீண்டும் கழுகு பார்வையால் அவளை உற்றுப் பார்க்கிறவனுக்கு, அப்போதும் அந்தப் பெண்மணி அச்சு அசலாகவும் நந்தாவின் லேடீஸ் வெர்ஷன் போலவே இருக்கிறாள்….     

‘ இது என்னடா சாமி! புதுவிதமான சஸ்பென்ஸா இருக்கு…?, ஒருவேளை நந்தாவோட ட்வின் சிஸ்டரோ  இந்த பொண்ணு…????!’    

  என்று மாணிக்கம் மண்டையைப் பிய்த்துக்கொள்ளாத  குறையாக யோசனையில் ஆழ்ந்திருக்க…. இப்படியே அவன் பைத்தியமாகாத குறையாக யோசித்துக் கொண்டிருக்கும்போதே, கைக் கோர்த்து வந்த மங்கலமும் அந்த மர்மப் பெண்ணும் நேராக மாணிக்கம் நின்றுகொண்டிருக்கும் இடத்திற்கே வந்து சேர்ந்து , அப்படியே அவன் பக்கத்திலும் நிற்கிறவர்களில் அந்த பெண்ணை மட்டுமாக பார்த்து , உடனே மாணிக்கம் தன் பில்டப்பைக் கொஞ்சம் குறைத்துவிட்டு சைகையிலேயே ,  

  “உஸ்… உஸ்…ஸ்ஸ்ஸ… ஏய் பொண்ணு…. உன்னை தான்….??? ”   

என்று தன் பக்கமாக முகத்தை திருப்பச்  சொல்லி ஜாடை செய்தவாறே  ஹஸ்கி வாய்ஸில் அந்த பெண்ணை அவன் கூப்பிடவும்…. அவனது அந்த இம்சையால் ​அவன் பக்கமாக பார்த்த  அந்த பெண்ணும் தீயாக அவனை  முறைத்துக்கொண்டே,   

  “ஏய் வாயை மூடு…!, செருப்பு பிஞ்சிடும் படவா… இது கோர்ட் ஆச்சே, பாக்குறேன்…. இல்ல இங்க நடக்குறதே வேற….!”  

  என்று அவனுக்கு அந்த பெண் எச்சரிக்கை கொடுக்கிறாள் ….ஆனால் ​மாணிக்கமோ மனசுக்குள்ளாக  முணுமுணுத்து,    

  ‘ ஹூம்…  பொண்ணு குரல் தான் பேசுறா சோ இவ பொண்ணு தான் …. ஆனா இந்த பொண்ணு ரொம்பத்தான் வாய் பேசுறா மங்கலம் இவளுக்கு  தேவைல…!”  

  என்று அவன்  நினைத்துக்கொள்ள…, ஆனாலும், மாணிக்கத்திற்கு ஆர்வம் தாங்க முடியாமல் அந்தப் புதுப் பெண்ணைப் பார்த்து விசாரிக்கிறவன், 

   ​“இல்லங்க மேடம்… உங்க பேரு என்னன்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?”   

என்றதும், ​அந்தப் பெண்ணோ வெடுக்கென்று வெறுப்பாக தன்  முகத்தை வேறொரு திசைக்குத் திருப்பிக் கொள்ளவும்….. இதைப் பார்த்த மாணிக்கம் நக்கலாக,  

   “அச்சச்சோ மேடம்…. பாத்து ….பாத்து….  கழுத்து சுழுக்கு பிடிச்சுக்க போகுது பாத்துங்க மேடம் …!”    

என்றுவிட்டு நகைக்கிறவன்….. ஆனாலும் தன் வாயை மூடாமலே மேலும்,       

   “சும்மா நீங்க யாரு, என்ன எதுன்னு தெரிஞ்சுக்கலாம்தான் கேட்டேன் மேடம் ப்ளீஸ் சொல்லுங்களேன்….!”  

என்று தானகவே வலியப் போய் மீண்டும் மீண்டும்। அவளைத் தொந்தரவுச் செய்துக் கேட்கவும்….. ​பொறுமை இழந்த அந்தப் பெண்ணோ எரிச்சலோடு அவன் பக்கமாக திரும்பி,   

” இப்போ தெரிஞ்சு என்ன பண்ண போற…?, என் கூட  சுயம்வரம் வைக்க போறது மாதிரி விசாரிக்கிறியே….?” 

என்று கோபமாகக் கேட்கிறவளிடம் மாணிக்கமும் சளைக்காமல்,  

“அப்படியும் வச்சுக்கலாமே…!”

  என்றுவிட்டு கிண்டலாக அவன் சிரிக்கவும்….​​கோபத்தின் உச்சிக்குச் சென்ற அந்தப் பெண்ணோ, 

“ஏய்! நான் நந்தினி! என்கிட்ட இப்படியே பேசிட்டு இருந்தன்னுவை… நான் மனுஷியா இருக்க மாட்டேன்…!” 

என்று மிரட்டுகிறவளை ​மாணிக்கமும் விடாமல் பற்களை நர நரவென்று  கடித்தவாறே,  

  “என்ன செய்வ…?, மகிஷாசுரமர்த்தினியா நின்னு என்ன வதம் பண்ணுவியா என்ன….?” 

என்றுவிட்டு அரக்கத்தனமாகச் சத்தமாக அவன் சிரிக்க….​உடனே அந்தப் பெண் கடுப்பாகி, மங்கலத்திடம் புகார் மனு வாசிக்கிறவள், 

   “ஏய் டார்ல்ஸ்… இந்த மாமா ரொம்ப ஓவராத்தான் பண்றாரு பாரேன்..!”    

  என்று அவள் தன்னை ‘மாமா!’ என்று கூப்பிட்டதுமே, உடனே மாணிக்கத்திற்கு ஏழாவது வானத்தில் தாளம் தப்புகிறது…..! அவனது கண்களில் ஹார்ட்டின் பறக்க…,  

   “ஹேய்… என்னது…  நான் மாமாவா உனக்கு….??!”  

  என்றுவிட்டு, மாணிக்கம் அந்த பெண்ணைப் பார்த்து  ஏகத்துக்கும் எக்கச்சக்கமாக ஜொள்ளு விட ஆரம்பித்துவிடுகிறவனின்  ​ ஓவர் பில்டப்பைக் பார்த்துவிட்டு மங்கலம், நக்கல் சிரிப்போடு அவனுக்கு பிரேக் போடுகிறவள்,  

   ​”ஏய் மாமே… மூடிட்டு சும்மா இருயா…!, நீ வேற ….   பூமர் அங்கிள்! என்பதைத்தான் அவ அப்படி சுருக்கமா மாமான்னு சொல்லுறா…! , இதுக்கு  போய் ஏதோ காதல் மன்னன் அஜித்! ரேஞ்சுக்கு உன்னைய நீயே கற்பனை பண்ணிக்காத…!”  

என்று மங்கலம் அவன் முகத்தில் கரியைப் பூசவும்…. அப்படியாக அங்கே ​எல்லாருடைய கேலிக்கும் கிண்டலுக்குமாக ஆளாகிறான் மாணிக்கம் … ஆகையால், அவர்கள் எல்வாருமாக மாணிக்கத்தை விவரிக்க முடியாத கோபத்திற்குள்ளாக்கினாலும், அவனுக்குள் இருக்கும் வில்லன் உடனே ஒரு தந்திரமான யோசனையைத் தட்டி எழுப்பி…!,     

  ​’ இருடி மங்கலம்… உங்க அம்மாவும் எங்க அம்மாவுமா நேற்றுதான் எனக்கு போன் பண்ணி எனக்கொரு ஐடியா கொடுத்தாங்க….!, அதைத்தான் நானும் இப்போ கோர்ட்ல செயல்படுத்த போறேன்….. நான் உன் கிட்ட ரொம்ப நல்லவன் மாதுரி நடிச்சு, மன்னிப்பு கேட்கிற மாதிரி நடிக்க போறேன்….. இதனால கோர்ட்ல டைவர்ஸ் கேன்சல் ஆகி, நீ என் வீட்டுக்கே தான்  வந்தாகணும்…!, அப்புறமா பாருடி இருக்கு உனக்கு கச்சேரி என் வீட்ல… அடியே நான் மட்டும் இல்ல, எங்கம்மா, உங்கம்மா,  ஏன் என்… உன்… அக்கா, தங்கை, அண்ணன் எல்லாரும் களம் இறங்கி உன்னை அடித்து துவைச்சு நரகம்! காட்ட காத்துட்டு இருக்காங்க….!’    

  ​என்று  அவன் மனசுக்குள்ளாக கொடூரமான ஒரு பழிவாங்கும் சதித் திட்டத்தை வெற்றிகரமாகத் தீட்டிவிட்டு, உதட்டோரத்தில் குருரமான சிரிப்போடு, மங்கலத்தையே  மாணிக்கம் பார்க்கவும்!…. பின்னர் , எல்லாருமாக கவுன்சிலிங் அறையை நோக்கி நகர்ந்து செல்ல, அந்த அறையைச் சேர்ந்த கவுன்சிலர் வாசுகி,   

“மங்கலம் மற்றும் மாணிக்கம் உள்ளே வாருங்கள்!”    

  என்று பெயரைச் சொல்லி அழைக்கிறாள்…. ​ஆகையால், இருவர் மட்டுமாக உடனேயும்  உள்ளே அந்த அறைக்குள்ளாக நுழையவும்…. மங்கலம் சற்று வாசுகியிடம் பேசத் தாமதிக்க… அவளை முந்திக்கொண்டு அடித்துப்பிடித்து முன்னே பாய்கிறான் மாணிக்கம்!, முகம் முழுக்கப் பவ்யமான சிரிப்போடு, கைகூப்பி குரலை நைசாக மாற்றி, 

   ​”வணக்கங்க மேடம்!”     

என்று படு மரியாதையாக அவன் பேசவும்….வாசுகிக்குத் தலை சுத்துகிறது…! ,கடந்த முறை வந்தபோது முகத்தைத் திருப்பிக்கொண்டு திமிராகவும் உட்கார்ந்திருந்த அதே மாணிக்கமா இது…?, என்று நம்ப முடியாமல் கண்களை அகல விரித்து ஆச்சரியமாகப் பார்க்கிறவள்,   

​”என்னங்க மாணிக்கம் இது…?, அன்னைக்கு வந்தப்போ என் முகத்தைக்கூட பார்க்க விரும்பாது முகத்த வேறுபக்கமா திருப்பி உட்கார்ந்திருந்தீங்க…. இப்ப என்னன்னா… என்னை ரொம்ப மதிச்சு ‘மேடம்’னு மரியாதையா கூப்பிடுறீங்களே….? ,நீங்க அதே மாணிக்கம்தானே? , இல்ல ஆள் மாறிட்டீங்களா…?”   

என்று சந்தேகத்தோடு  வாசுகி விசாரிக்க….மாணிக்கம் சற்றும் குறையாத முகஸ்துதியோடு, ரொம்பவும் பாவம் போல முகத்தை வச்சுக்கிட்டு,    

   ​”அவனேதான் நான் மேடம்… நான்தான் அந்த மாணிக்கம்…!”    

என்றுவட்டு பவ்யமாகத் தலையாட்டுகிறவனின்​ குருரமான மைண்ட்வாய்ஸில்!, ஒரு கொடூரமான வில்லனை போலக் கலகலத்துச் சிரித்து!,,, 

   ‘ ஹாஹாஹா! பார்த்தியா மேடம்… இதெல்லாம் வெறும் நடிப்பு தான்….! என் அம்மாட்டயும்  இதோ இருக்காளே இவ  அம்மாட்டயும் போனில் வாங்கிய மாஸ்டர் பிளான் தான்  இது….  வாசுகி மேடம்….. உன்னை எப்படியாவது மடக்கி  உன் வாயாலேயே  மங்கலத்தை  என் வீட்டுக்குக் கூட்டிட்டு போக சொல்லுறதுக்காகவும் … அப்படியாக அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போய்  பழிவாங்கறதுக்காகவும் நான் போடுற பர்ஸ்ட் ஸ்டெப் நாடகம்தான் இது….. நீங்க என்னை நம்பி ஏமாற போறீங்க வாசுகி மேடம்… அப்புறம் இருக்கு நம்ம வீட்ல மங்கலம் உனக்கு கச்சேரி எப்பவும் போலயே….!’ ​

💒மறுமணாகும் …

🔥 என்று உள்ளுக்குள்ளேயே நயவஞ்சகமாகச் சிரித்துக் கொண்டே, மங்கலத்தை வீழ்த்தப் புது வலையைப் பின்னிவிட்டுக் காத்திருக்கிறான் மாணிக்கம்….!

🤔அது சரி நந்தினி யாரு தெரியுமா காய்ஸ் உங்களுக்கு.….?

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!