Stories that touch hearts

Home  /  33. நித்யா சபரி (இது மங்கலத்தின் மறுமணம்)  /  Chapter 18

CHAPTER 18

” இது மங்கலத்தின் மறுமணம்♥️💛…!!!”

By மோ.நித்யா சபரி · November 8, 2026

0

அத்தியாயம்-18-

     தங்களிடம்  விடைப்பெறும் தாய்  மங்கலத்திடம் குழந்தைகள் க்யூட்டாக,

  “பை… பை…”

சொல்லிக் கொண்டிருக்க, மங்கலமும் அப்படியே எல்லாரிடமும் கொஞ்சமும் சற்றும் குறையாத திமிரோடும் மாஸ் ஸ்டைலோடும் பாய் காமித்துவிட்டு அந்த வீட்டை வெளியேறினவளின் முகத்திலோ கூலிங் க்ளாஸ் சும்மா கெத்தாக அமர்ந்திருக்க…! நந்தாவுடன் கைக்கோர்த்தப்படியே அந்த வீட்டை விட்டு வெளியேறியவள்,  வீட்டு வாசலிலே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவனது விலையுயர்ந்த சொகுசு காரை நோக்கி கம்பீரமாக நடைபோட்டுக் செல்லவும்….

அதை வீட்டினுள்ளே இருந்தப்படியே  பார்த்துக் கொண்டிருந்த அவளின் குழந்தைகளை தவிர்த்து வீட்டிலிருந்த மற்றவர்களான  பாண்டியன், பேச்சியம்மாள், மாணிக்கம் மற்றும் வள்ளி ஆகியோர் அதிர்ச்சியில் வாயடைத்துப் போய், என்ன நடக்கிறது என்று புரியாமல் சிலையாகி நின்றிருக்கவும் …  கார் அருகே வந்தவளோ , அவர்கள் யாரையும்  திரும்பிப் பார்க்கக் கூட இல்லை! டிரைவர் மரியாதையாக அவளுக்கு கதவைத் திறக்க…., ஸ்டைலாகப் பின்சீட்டில் நந்தாவுடன் ஏறி அமர்ந்துகொண்டாள் மங்கலம்….  நடப்பதைக் கண்ட பேச்சி தன் மகனை உலுக்கி,  

    “டேய் மாணிக்கம்! என்னடா இது கூத்து…? , கையில விவாகரத்து பேப்பர கொடுத்துட்டு, கூலாக கூலிங் கிளாஸையும் போட்டுக்கிட்டு, கோர்ட்டுல மீட் பண்ணலாம் பாய்ன்னும் சொல்லிட்டு,   வேற ஒருத்தன்  கூட காரேறி போறாளே இவ….! ஓடி போய் அவள வழியுல மறிச்சு என்ன ஏதுன்னு கேளுடா…கெஞ்சியாவது வீட்டுக்குள்ளாக கூட்டி வாயேன்டான்னு!” 

    பேச்சி  கத்தவும்…..மாணிக்கம் ஒரு பெருமூச்சுடன் தலையைச் சொரிந்துவிட்டு,  

   “அட போம்மா…  அவ கால்ல கையுல விழுந்து கெஞ்ச சொல்றியா …. போட்டும் எல்லாம் முடிஞ்சு போச்சு….!”

    என்றான் விரக்தியிலும்  மங்கலத்தின் மேல் இருக்கும் கோபத்தின் உச்சத்திலும்…. அப்படியே​அவன் மனதிற்குள் பழைய நினைவுகளும் வந்து அலைமோதவும்…

   ‘தினமும் அவ மேலிருந்த கோபத்துல, “நான் உன்னய விட்டு எங்கேயாவது எவ கூடயாவது  போய்டுவேன் பாய் காமிச்சுட்டு…, அப்படியே நான் உன்னைய டைவர்ஸும் பண்ணிடுவேன்”னு கெத்தாச் சொன்னேனே… இன்னைக்கு  என்னடான்னா அவ முந்திக்கிட்டு டைவர்ஸ்  நோட்டீஸை என் கையில் கொடுத்துட்டு, நந்தாவோட காரில் பறந்துட்டாளே…!’      

 

என்கிற எண்ணம் அவன் மூளையைக் குடைந்தது….. அவன் பக்கத்திலேயே நின்றிருந்த வள்ளியோ வயிற்றைப் பிடித்துக்கொண்டே புலம்பவும் ஆரம்பித்து,  

“அய்யோ போச்சு…. போச்சு….! எனக்கு வவுறெல்லாம் கலக்குதே…! , இவ பாட்டுக்கு ஸ்டைலா எவன் கூடவோ போயிட்டா… இனிமே இந்த வீட்டு பிள்ளைகள மெய்க்கிறதும்… இந்த தம்பிய பாத்துக்கிறதும்…. இந்த வீட்டு  வேலை என  முழுக்க ..முழுக்க …. எல்லாமே  நம்ம தலைமேலதான் விடியப்போகுது போலயே….!”

என்றுவிட்டு வள்ளி சோபாவில்  சரிய….இதற்கிடையில், நந்தாவின் சொகுசு காரோ மாணிக்கத்தின் வீட்டைத் தாண்டி  மின்னலெனச் சென்று மறைந்தது….அந்த ​காருக்குள்ளே  தன் பக்கத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் தன் பாஸ் நந்தாவிடம் மங்கலம் ,

“தேங்க்ஸ் தமிழ்…”   

    என்றதும் மங்கலத்தை பார்த்து சிரித்துக்கொண்டே நந்தா,

“நண்பர்களுக்குள்ளே என்ன நன்றியெல்லாம்….? , அதிலும் உனக்கு  கோர்ட்டில் டைவர்ஸ்  கொடுத்ததுமே லைஃப் பார்ட்னராகவும் ஆக போறோமே…., அப்புறம் எதுக்கு இந்த நன்றியெல்லாம் நமக்குள்ளாக டார்ல்ஸ்…?”     

        “அதுவும் சரிதான்….!, ஆனா நீண்ட நாளா எனக்குள்ள ஒரு ஆசை இருந்தது… இந்த மாணிக்கத்துக்கு முன்னாடி நாம டைவர்ஸ் பேப்பரை கொடுத்துட்டு அங்கிருந்து கெத்தா வெளிய வரணும்னு…. அதை சாதிச்சுட்டேன்…, வந்தும் விட்டேன்…!, அந்த மகிழ்ச்சியிலதான் உனக்கு தேங்க்ஸ் சொன்னேன்….”

என்றவள் கண்கலங்க முயற்ச்சிக்கவும்….   உடனே நந்தா அவளது கைகளைப் பற்றி,

“ஹேய் டார்ல்ஸ்… இனிமே கண் கலங்கக் கூடாதுன்னு நான் சொல்லியிருக்கேனே! கலகலப்பான சிரிப்பு மட்டும் தான் நம்மிடையே இருக்கணும் சரியா…”     

   என்று செல்லமாகச் சொன்னவனின் அந்த வார்த்தைக்கு அவளும் செவிச் சாய்க்கவும் ….!, அதற்கடுத்தாக காரில் அவர்களுக்குள்ளாக பேசும்போது இருவரின் சிரிப்பொலி மட்டுமே நிரம்பி வழிந்தது…..   

   அப்படியாக நந்தா கார் ஓட்டுனர் இயக்க …. காரில் சிறிது நேரத்திலே அவர்கள் வந்து சேர்ந்தார்கள் நந்தாவின் வீட்டுக்கு… அது ஒரு பிரம்மாண்டமான பளிங்கு மாளிகை….!, ஆகையால் , ​அதைப் பார்த்து மங்கலம் வாயைப் பிளந்து நிற்கவும்…., நந்தா சிரித்துக்கொண்டே,

      “இதுக்கே இப்புடியா…? , இதுபோல இன்னும் பல வீடு இருக்கு…, ஆபீஸூம் இருக்கு… எல்லாம் உனக்கும் எனக்கும் தான் டார்ல்ஸ்….!”        

என்றதும், அவனின் முகத்தைப் பார்த்தவளுக்கு கண்ணில் ஆனந்தக் கண்ணீர் தேங்கவும்…. நந்தா ஏற்கனவே இனி நீ அழகூடாதுன்னு சொன்னதின்  விளைவாக அவனின் தோளில் மட்டுமே ஆனந்தமாக சாய்ந்துகொண்டாள்….,     

  பிறகு அங்கே அந்த வீட்டில்  மாலைநேரத்தையும் ஒன்றாக கூடியிருந்து, அவர்களுக்குள்ளாக உற்சாகமுமாக பேசி மகிழவும்…. அப்படியே   அவர்களின் பொன்னான நேரம்  களிந்ததில் மகிழ்ச்சியும் மட்டுமே  அங்கே நிறைந்திருந்தது….. 

     ஆனால் இங்கே மாணிக்கம் வீடோ சோகத்தில் மூழ்கியிருக்க….,   அதே வீட்டில் சாருலதா – வேலன் மட்டுமாக தீபாவளி வரப்போகிற கொண்டாட்டத்தில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தனர்….

     சாரு  ஹாலில் லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கவும்…, பின்னாலேயே வேலனும் அங்கு வந்து அமர….   அப்படியே சகோதர சகோதரிகள்  சேர்ந்துக்கொண்டு ஆன்லைன் தீபாவளி பர்சேஸ் மாரத்தானில் இறங்கியிருந்தனர்…..  

  “  ப்ரோ…. இந்த லஹங்கா பாரேன், இதுக்கு  மேட்சா கூலிங் கிளாஸூம் சேம் கலர்ல போட்டா   செமயா இருக்கும்ல்ல….?”

    “ம்ம்ம் ..”   

என்று சாருக்கு  வேலன்  பதில் அளிக்கவும்…. இதையெல்வாம் கண்டுவிட்ட வள்ளியோ தலையில அடித்துக்கொண்டு,  

   “அடப்பாவிகளா….! , இங்கே உங்கப்பாவும் அவங்க குடும்பமும் சோகத்துல உக்காந்திருக்காங்க…., நீங்க ரெண்டு பேரும்  என்னடான்னா ஆன்லைன்ல ஜாலியா  ஷாப்பிங் பண்றீங்களே…?”   

      என்று சொல்லியவளின் வார்ததையை மதிக்காது …. அதற்கு சேவியும் சாய்க்காதது போலயிருந்த குழந்தைகளோ  அப்பவுமே தீவிரமாக ஆன்லைன் தீபாவளி பர்சேஸிங்  வேலையிலே இறங்கியிருந்தனர் …. 

     அப்போது  சாருவுக்கு நடுவில் தன் தலையை புகுத்தி லேப்டாப்பை எட்டிப்பார்த்த வேலனோ,

” ஹேய்…. எனக்கு அந்த ‘ஜெயிலர்!’ பட ரஜினி ஸ்டைல்ல குர்தா இருக்குல அந்த ஒன்ன மட்டும் அப்படியே…. கார்ட்ல ஆட் பண்ணிடுடீ எனக்காக ப்ளீஸ்…!”

   “சரி ப்ரோ….  நான் அடுத்ததா சின்ட்ரல்லா ப்ராக் வாங்கிக்கிறேன்….”

“ஹேய் எனக்கு அந்த ஷூ வேணும்…! அப்படியே பட்டாசும்  போடுடீ….. வேட்டு வெடிச்சு  இந்த தெருவையே மிரள வைக்கனும்ல…..”      

என்றப்படி ஆன்லைன் தீபாவளி பர்சேஸ் செய்துக்கொண்டு கத்திக் கூச்சலிட்டனர்…. 

  ​”டேய்… டேய்….இருங்கடா…. ஒரே நேரத்துல எல்லாரும் ஆர்டர் போட்டா கார்ட் காலியாகிடும்…., அப்புறம் உங்க அப்பன் பாக்கெட் காலி ஆயிடும்…. கொஞ்சம் அடக்கி வாசீங்கடா….”   

  என்று மாணிக்கம் அவனைப் பற்றி அவனே சொல்லி அதுகளை  அதட்டவும்…., வீடே கலவரம் பூண்டது…..அப்படியாக நாட்கள் நகர…. எப்பவும் மாணிக்கம் வீடு மட்டுமாக ரெம்பவே இந்த  குழந்தைகளாலே  கலவர பூமியாக மாறியிருந்தன…. ஆகையால் பெரியவர்கள் எல்லாருமாக மன கசப்பில் அங்கே வாழ்ந்து வர…. மங்கலமோ நந்தா வீட்டில் ஹாப்பி அண்ணாச்சியாக வாழ்ந்துவருகிறாள்…

அப்படியாக அந்த தீபாவளி திருநாளும் வர…. வேலன் அவங்க வீட்டு பக்கத் தெருவையே ரெண்டாக்கும்  விதமாக பட்டாசுகளையெல்லாம் விட…. அந்த சத்தத்தால் அந்த தெருவில் இருப்பவர்களின்  காது செவிடாகும் அளவுக்கு அதிரத் தொடங்கியது…..

“டர்… படார்…”

என்று ஒருபக்கம் வெடிக்கும் சத்தத்தைவிட, அங்கே சாருவின் வாய் அடிக்கும் சத்தம்தான் இன்னுமே ஓவராக ஹை வால்யூமில் கேட்டுக் கொண்டிருந்தது….!    

  “கேட்டீங்களா அக்கம் பக்கம் வீட்டுக்காரங்களே… மங்கலம் சும்மா வீட்டைவிட்டு ஓடலையாம்….! , நேரா மாணிக்கம் மூஞ்சியிலயே டைவர்ஸ் நோட்டிஸை தூக்கி வீசி ஏறிந்துட்டு, செம ஸ்டைலா கூலிங் கிளாஸையும் போட்டுக்கிட்டு கெத்தா அவன் கண் முன்னாலயே வெளியேறி போயிட்டாளாம்…!”      

   

என்று  ​மறுபுறம், மாணிக்கத்தின் வீட்டுத் தெருப் பக்கமாக பட்டாசுச் சத்தத்தை விடவும்….  ஊர் மக்களின் இந்த சூடான வதந்தி!தான் காட்டுத் தீ! போல பரவி…. பெறும் சத்தத்துடனே தாறுமாறாக வெடித்துக் கொண்டிருந்தது….  

    அப்படியாக  ஒரு கட்டத்தில் அந்தத் தெருவில் போறவங்க, வரவங்க என எல்லாருமாக மாணிக்கத்தின் வீட்டின் முன்பு போகும்போது,   

“என்ன மாப்பிள்ளே… மங்கலம் உன் முகத்துக்கு நேரே வீசி எறிந்த நோட்டிஸ் ஸ்பீடு எப்புடி இருந்தது…?, ஸ்டைலா வந்துச்சாமே….இல்ல…. இல்ல…. செம மாசா வந்துச்சாமே….?”  

   என்று நக்கலாகக் கிண்டல் அடித்து சிரித்துவிட்டும் சென்று கொண்டிருக்கவும்…. தன் வீட்டு வாசலில் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்த மாணிக்கத்தின் காதுகளிலோ இந்த ஒலிகளே ஈட்டிகளாகப் பாய்ந்தன…. அவன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த பேச்சி,  

   “டேய் மாணிக்கம்! ஊர் வாயை மூட முடியலையேடா…!, நீ வேற  அந்த பழசையே நெனைச்சுக்கிட்டு உக்காந்திருக்கியே டா… அவ அங்க போய் என்னென்ன செய்து தொலைக்கிறாளோ தெரியலையே டா…?, ஒரு எட்டு போய் பாத்து பேசிட்டு வாயேன்….!”      

 

என்று தலையில் அடித்துக் கொள்ளவும்….. கூடவே அமர்ந்திருந்த வள்ளியோ இப்போதே முந்தானையால் கண்ணைத் துடைக்கும் நாடகத்தை முன்கூட்டியே ஸ்டார்ட் செய்திருந்தாள்….

அங்கே நந்தாவின் அந்த பிரம்மாண்டமான பளிங்கு மாளிகையோ ‘தலை தீபாவளி’! போலவும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது…..    

மங்கலத்திற்கு இதுதான் உண்மையான ‘தலை தீபாவளி’!  போலவும்… புத்தம் புது பட்டுப்புடவை, மின்னும் நகைகள், முகத்தில் எக்கச்சக்கக் களை கட்டிய சிரிப்புடன் தேவதையாய் வலம் வந்து கொண்டிருந்தவளின் அருகில் வந்த நந்தாவோ,      

“என்ன டார்ல்ஸ்… புடவை செமயா இருக்கா…?, போன வருஷம் இந்த நேரத்துல நீ எங்கேயோ சமையலறையில முடங்கியிருந்தேல… ஆனா இந்த வருஷம் நம்ம ராஜ்ஜியத்துல ராணியா உக்காந்திருக்க அழகா…!”   

  என்று செல்லமாகச் சொல்லவும்…​மங்கலம் வெட்கப்பட்டுக் கொண்டே அதை ஆமோதித்தாள்….​

மொத்தத்தில், ஒருபுறம் மாணிக்கம் மனக்கசப்புகளுடனும் வதந்திகளுடனும் முழங்காலில் முகத்தை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கவும்…., மங்கலமோ தன் புது வாழ்க்கையின் பிரகாசமான தீபாவளியைக் கலகலப்பாகக் கொண்டாடித் தீர்த்தாள்!…

💒மறுமணாகும்….

♥️🤭அடுத்ததாக நீதிமன்றத்தில் தான் தரமான சம்பவமே இருக்கு வந்திருங்க மறக்காம பட்டூஸ்♥️💛🫂

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!