Stories that touch hearts

Home  /  33. நித்யா சபரி (இது மங்கலத்தின் மறுமணம்)  /  Chapter 17

CHAPTER 17

“இது மங்கலத்தின் மறுமணம்♥️💛…!!!”

By மோ.நித்யா சபரி · November 5, 2026

0

அத்தியாயம்-17-

மங்கலம் வழக்கமாக உடுத்தும் ஆடைக்களுக்குப் பதிலாக, இதுவரை அவள் வாழ்நாளிலேயே  உடுத்திடாத அலுவலகத்திற்குச் செல்வது போன்ற நேர்த்தியான ஃபார்மல் உடையிலே நின்றுகொண்டிருந்தாள்…. அதைக் கண்ட அவள் குடும்பத்தினர், குழந்தைகளைத் தவிர மற்ற அனைவரும் ஆச்சரியத்தின் எல்லைக்கே செல்லவும்…..சற்றும் தயங்காத மங்கலமோ அனைவரையும் பார்த்து,   

     “பாய், சீ யூ சூன்… சீக்கிரமாவே கோர்ட்டுல சந்திப்போம்….!”  

   என்று கூறி விடைபெற முயல…, அதிர்ச்சியிலிருந்து இன்னுமே மீளாது என்ன செய்வதென்றும் தெரியாமலும் குடும்பத்தினர் மழுங்க மழுங்க விழித்துக் கொண்டிருந்தனர்…..         

    கொஞ்ச நேர இடைவேளைக்குப் பிறகு, வீட்டின் அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒரு அதிகாரத் தோரணையான குரல்! மங்கலத்தை தடுத்தது…..  

    ​”ஏய்! காலை உடைச்சு போட்டுருவேன்… ஒழுங்கா இந்த வீட்டுக்குள்ளயே கிட…!”    

  ​ அப்படிச் சொன்னது வேறு யாருமில்லை…. மங்கலத்தின் தாய் வள்ளிதான்…. அவர் அப்படிக் கூறியதும், மங்கலம் அவர்களைப் பாவமாக, அப்பாவியைப் போலவே பார்க்கவும்…. அதைப் பார்த்த வள்ளி மேலும் சீறி,   

     “பழைய ஞாபகம்லாம் இருக்குல்ல…?, சொன்ன பேச்ச கேட்கலன்னா விளக்குமாத்து அடி கொடுத்தது…, தலையைச் சுவத்துலயோ, கேட்டுலயோ வச்சு இடிக்க வச்சது…., கைய கடிச்சு வச்சது…, சூடு வச்சது….,  மரக்கட்டை ஸ்கேல் இரண்டா பிளக்குற மாதிரி அடி வாங்குனது… இதெல்லாம் மறந்துருச்சாடி….?”   

    என்றவாறே, மங்கலத்தின் தலைமுடியைக் கொத்தாகப் பிடிப்பதற்காக அவளது கை நீண்டது….ஆனால், அந்த கை மங்கலத்தின் முடியைத் தொடுவதற்குள், ஒரு வலிய கரம்! அதை இடைமறித்துத் தடுக்க…!, அது நந்தாவின் கை இல்லை… மங்கலத்தின் கை!யே தான்…   

    எப்பவும் ஹீரோ!  தான் ஆக்ஷ்ன்ல  இறங்கவேண்டும் என்று அவசியமில்லை … சில இல்லத்தரசிகளே  லேடி சூப்பர் ஸ்டார் தான் என்பதை போலவே மங்கலம் கலமிறங்கினாள்…  

   அப்படியாக மங்கலம் தன் தலை முடியை கொத்தாக பிடிக்க வந்த தன்  தாயின் கையை அப்படியே வளைத்துத் திருப்பி, ஒரு கையால் இறுக்கிப் பிடித்துக்கொண்டவள்…. மறு கையில் இருந்த பையை அப்படியே ஸ்டைலாக  சுழற்றி வீசி எறிந்துவிட்டு, தாயின் கழுத்தை இறுக்கமாகப் பிடித்து, தரதரவென அவர்களை நகர்த்திச் சென்று, சுவரோரம் தலை முட்டும் படி நிறுத்திவிட்டு!, அவளது கண்கள் கோபத்தில் கனலாகக் கொதிக்க,  

    ​”என்ன… அதெல்லாம் பழைய மங்கலம்னு என்னை பாட வைக்காதீங்க….! ஏன்னா, நான் இப்போ பழைய மங்கலமே இல்ல… டார்லஸ், போதுமா….?”

    என்று உறுமியவள், தொடர்ந்து பேசவும்,​       

       “நீங்க எனக்கு செஞ்சதையெல்லாம் அன்னைக்கே திருப்பி அடிச்சிருக்க முடியும்… அதுக்கு எவ்வளவு நேரமாகிட போகுது…? , ஆனா…. நான் சின்ன புள்ளயா இருந்தப்போ பண்ணல… ஏன்னா அப்போ அம்மாங்கிற மரியாதைய வச்சிருந்தேன்…! ஆனா….  இப்போ நீங்களா அந்த மரியாதைய கெடுத்துக்கிட்டீங்க… அதான் நான்  இப்போ இப்புடி திருப்பி அடிக்க வேண்டியதா போச்சு…!” 

    என்று சொல்லிவிட்டு,  மங்கலம் அம்மாவின் கழுத்திலிருந்த தனது கையை எடுதது விடுவிக்க, வள்ளி கழுத்தைப் பிடித்துக்கொண்டு பயங்கரமாக இருமத் தொடங்கினார்….    

  அவ ​தாயின் அந்த நிலைமையையும், மங்கலத்தின் அசுரத்தனமான அவதாரத்தையும் கண்ட மாமியார் பேச்சியம்மாளுக்கும் பாண்டியனுக்கும் ஈரக்குலையே நடுங்கி,     

  ‘ஆத்தி அவ அம்மாவுக்கே இந்த நிலைமைன்னா  நமக்கு..??!!!..’

    என்று பயந்தவாறு  நினைத்து  வாயடைத்துப் போய் அமைதிக் காக்கவும்….. கணவன் மாணிக்கமும் பயத்தில் தொண்டைக் குழியில் எச்சிலை விழுங்கியபடியே,   

   “மங்…”    

என்று மெல்ல அழைக்க தொடங்க…., மங்கலம் கழுத்தை சட்டென்று  அவன் பக்கமாக திருப்பினாள்…. உடனே அவளது பார்வையைக் கண்டுவிட்டு மாணிக்கம் முற்றிலும் அரண்டுபோகவுமே….. ​மங்கலம் அவனைக் கண்டு லேசாகப் புன்னகைத்து,  

     “சும்மா சொல்லு மாணி… உன்னை ஒன்னும் செய்ய மாட்டேன்….. பாவம், பச்சப் புள்ள பேச்சி புள்ளன்னு விட்டுறேன்… சொல்லு…!”       

“இல்லம்மா… எதுக்கு இந்த டிரஸ் போட்டுருக்கனு தெரிஞ்சுக்கலாம்னுதான் கேட்டேன்…”   

   என்று ​மாணிக்கம் குரல் நடுங்க வினவ, அந்த வினாடியே,  வீடே அதிரும்படி உரக்கச் சிரிக்கத் தொடங்கினாள் மங்கலம்….! , அந்த அசுரத்தனமான சிரிப்பு, அந்த வீட்டின் நான்கு சுவர்களிலுமே எதிரொலித்து அடங்க சில வினாடிகள் பிடிக்க…. அதுவரையிலும் பயத்தில் உறைந்துபோயிருந்த மாணிக்கம், அந்தச் சிரிப்பைக் கேட்டு இன்னும் ஒரு அடி பின்னாடி நகர்ந்து நின்றவனை  கண்டு, அந்தச் ​சிரிப்பை சட்டென்று நிறுத்திய மங்கலம்,… தன் காலர் கழுத்துச் சட்டையை லேசாகச் சரிசெய்துகொண்டே, கணவன் மாணிக்கத்தைப் பார்த்து ஒருவிதக் கூர்மையான பார்வையோடு ,    

“என்ன மாணி….? ,எதுக்கு இந்த டிரெஸ்ஸுன்னு உனக்கு இன்னும் புரியலையா…?,  இத்தனை வருஷமா இந்த வீட்டுக்குள்ளயும், எங்கம்மா கிட்டயும் அடிவாங்கி, மிதிவாங்கி, அமைதியா சமைச்சுக் கொட்டிக்கிட்டு இருந்தாளே ஒரு மங்கலம்… அவ இறந்துட்டா…! இப்போ உன் முன்னாடி நிக்கிறது அந்த பழைய மங்கலம் இல்ல… ஒரு வொர்க்கிங் வுமன்…!” 

       என்றுவிட்டு , அப்படியே நந்தாவைப் பார்த்தும் ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு, மீண்டும் மாணிக்கத்தை நோக்கவும்… அவனோ அங்கிருந்த சுவரோரம் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை நிமிர்ந்து பார்த்தவன்,   

​’ஆமா… நாமதானே நம்ம வீட்ட சுத்தி  கேமரா வச்சிருக்கோமே…! இவ இந்த வீட்ட தாண்டி எப்போ ஆபீஸுக்கு போனா…? , ஒருவேளை ஒர்க்கிங் வுமன் இவ சொல்றாப்புல ! வேலை எல்லாம் ஆன்லைன்ல ஸ்கைப் மூலமாவோ, இல்ல வீட்ல இருந்தபடியே வொர்க் ப்ராம் ஹோம்ன்னு ஏதும் பார்த்தாளோ…?’   

   என்று தனது குறுகிய மூளைக்கு எட்டியவரை யோசித்துத் திகைக்கவும்….  மங்கலம் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே ஒரு நக்கல் புன்னகையுடன் கூறினவள்,    

  ​”ஹேய் மாணி… யோவ், நீ நினைச்சது சரிதான்! அந்த வொர்க் ப்ராம் ஹோம் வேலைதான் பார்த்துட்டு இருந்தேன்…”     

       ” ஹேய்… எதே…? , நீயா ….ஏதோ கிளார்க்! வேலை ஏதும் பார்த்தியாடி…? , பின்ன உனக்கு அவ்ளோ அறிவு தானேடி இருக்கு….!”   

   “ஏய்! மாணி…. மைண்ட் யுவர் வேர்ட்ஸ்…”         

       ​”இருடி… உன்னை மட்டும் சொல்லல…, அந்த நந்தா பயலுக்கும் சேர்த்துதான் சொல்லபோறேன்….! அடேய்… நீ இவ வேலை பாக்குற ஆபீஸுக்கு ப்யூன் வேலைதானே பார்க்கிற….? இல்ல இல்ல… செக்யூரிட்டி வேலைதானே….?”    

என்று  மாணிக்கம் தன் பழைய திமிருடனே மங்கலத்தையும்  நந்தாவை  ஒரு நமட்டுச் சிரிப்புடன்   எள்ளிநகையாடவும்…..​நந்தாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது….. அப்படியே, ஒரு கூர்மையான லுக் ஒன்று விட்டு மாணிக்கத்தை பார்த்து முறைக்க….!, அந்தப் பார்வையின் தீவிரம் மாணிக்கத்தின் முதுகில் ஒரு சிலிர்ப்பை ஓட விட்டது….  இருந்தாலும் ஏளனமாகச் சிரித்துக் கொண்ட மாணிக்கம்,   

   ” என்னடா முறைக்குற…. ஒருவேள  நீதான்  அந்த ஆபீஸுக்கே பாஸ்ன்னு சொல்லிடபோறியா….?’ ”   

  ​”ஆமாண்டா… நான் தாண்டா அந்த ஆபீஸுக்கே பாஸ்!…”       

ஆனால், மாணிக்கம் வெறும் கற்பனைக்காகத் தான் அப்படி கிண்டலாக சொல்லி சிரித்திருக்கவும்…. அந்த வார்த்தையையே, நந்தா உண்மை என  உடைக்கப் போகிறான் என்று அவன் துளியும்  அப்போ எதிர்பார்க்கவில்லை…! அதனால் தற்போது ,நந்தா தமிழ் ….!  அதான் அவனது முழுப் பெயர்…!,      

  டார்ல்ஸ் பேசட்டும் என அவளுக்காக ஸ்பேஸ் கொடுத்து அமைதியாக ரெம்ப நேரம்வரை நின்றிருந்த நந்தா, திடீரென ஒரு இரும்புப் பெட்டி போல உறுதியான குரலிலே கம்பீரமாக  ,

    ‘நான் தான்  பாஸ்”ன்னு   

      பேசவும்…. அந்த வார்த்தைகள் அந்த வீட்டின் சுவர்களில் மோதி எதிரொலிக்க…!!!!, அந்த அதிர்ச்சியில் மாணிக்கமும் அங்கிருந்தவர்களும் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தனர்….     

“ஆமா, மாணிக்கம்… நீ நினைக்குற மாதிரி  இல்ல ….அவ சாதரண  கிளார்க் வேலை ஒன்னும் பார்க்கிறவ இல்ல…. என் கம்பெனியோட சி.இ.ஓ பதவிக்கும், பாஸ் ஆகிய எனக்கும் ஈடுகொடுத்து,   மிக சிறந்த ‘ஈ-காமர்ஸ் மேனேஜராவும்’ ஹெட் ஆஃப் தி டிபார்ட்மென்ட்டாகவும் இருந்துக்கொண்டு என் கம்பெனியோட ஒட்டுமொத்த ஆன்லைன் வர்த்தகத்தையும், டிஜிட்டல் கணக்குகளையும் பார்த்துக்கிற இவ தான்… என்னோட ஆபீஸின் ‘டாப் ஸ்டாப்!”ல ஒருத்தி…!”   

     ‘ நான் கூட இவ ஏதோ சாதாரண கிளார்க் வேலை பாக்குறா போல…, இவன் ஏதோ ப்யூன் இல்ல செக்யூரிட்டி வேலை பார்க்கிறான்னும்  தானே நினைச்சேன்…! ,அதான் ரெண்டு பேருமா சேர்ந்து கூட்டு களவாணியா  கம்பெனி பணத்தையெல்லாம் அடிச்சு… நகையும் பணமுமா ஆக்கி வச்சுக்கிட்டு …. நம்மகிட்ட வந்து இப்புடி திமிரா சவால் விடுறாங்கன்னு தப்பா கணக்கு போட்டேனே… இவன் என்னாடான்னா, இவ ஆபீஸுக்கே இவன் தான் பாஸ்னு சொல்றான்… அதோடு இவளுமே…. அந்த ஆபீஸுல பெரிய அதிகாரியாவும், நல்ல வருமானத்தோடும் இருக்கான்னு வேறு சொல்லி அடுத்தடுத்து ஷாக் மேல ஷாக் கொடுத்து நம்மளையே நடுங்க வைக்கிறானே பாவத்த! …’    

  

  என்று எண்ணிப் பார்த்த மாணிக்கத்தின் முகம் வெறித்துப் போய்விட… அவ்வாறே அவனின் குடும்பத்தினரும் பேய் அறைந்ததை  போல இருந்தனர்…..  

     நடப்பதை மேலும் உறுதிப்படுத்தும் வண்ணம், வீட்டின் பிரதான வாசலை நோக்கி நிற்கும் நந்தாவின்  ஒரு சொகுசு காரிலிருந்து ஹார்ன் சத்தம்! கேட்கவும்…. அடுத்த கணமே, அந்த வீட்டின் கதவையும் தட்டியப்படியே தள்ளிக் கொண்டு, உள்ளே நுழைந்த நந்தாவின் கார் டிரைவர், இரு கைகளையும் கட்டி பவ்யமாக நின்றவன்,  

       “​பாஸ்… இந்த வீட்டுக்குள்ள நீங்க போய் ரொம்ப நேரமாச்சு…. அதான் என்ன விஷயம்னு கேட்க வந்தேன்…. மேடம்! ரெடியா, சார்….? போலாமா வீட்டுக்கு…?”  

  என்று பணிவோடு கேட்டவுடனே நந்தாவும் எவ்விதச் சலனமுமின்றி, தன் கண்களாலேயே மங்கலத்தைப் பார்த்து,  

  ‘போலாமா, டார்ல்ஸ்?’

    என்றதும் …,​ அத்தனை பேரின் அதிர்ச்சியான கண்களுக்கும் நடுவே, செம கெத்தாகத் தன் கைகளை அசைத்து,  

   “பாய்… சீ யூ சூன்!” 

   என்று ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும் இறுதிப் பிரிவுபச்சாரத்தை  மங்கலம் சொல்லவும்……அதைப் பார்த்துக் கொண்டிருந்த அவளது பிள்ளைகளின் முகத்திலோ எந்தவொரு பயமோ, கலக்கமோ இல்லை. மாறாக,​    

“மம்மி! இனி உங்களுக்கு நோ டென்ஷன்… சோ நீங்க செம ஃப்ரீ…! சோ இனிமே ஃபுல் அண்ட் ஃபுல்  ஹாப்பியா இருங்க ஓகேவா….?, பாய் மம்மி…!”

    என்று கியூட்டாகச் சொல்லிவிட்டுக் குதூகலமாக விடைபெற்றனர்…..

💒மறுமணாகும்….

🤔டேய் மாணிக்கம் மங்கலம் போறவளை காலில் விழுந்தாவது தடுப்பியா டா…? பார்ப்போம்….

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!