அத்தியாயம் -15-
மாணிக்கம் லட்டைக் நெஞ்சோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு மங்கலத்தை நோக்கி காதல் பக்தி! பரவசத்துடன் முன்னேறவும்….
”மூடிட்டு இருடா… குணா கமலுன்னு நினைப்போ…! , ஒழுங்கா அந்த லட்டை உன் வாயிலயே போட்டுரு… இல்லனா மண்டையிலேயே பலமா இன்னொரு கொட்டு விழும்….!”
என்று பேச்சியம்மாள் மிரட்டி மகனை நிற்க வைக்க…, அதே நேரத்தில் சரியாக, உள்ளே வக்கில் தந்திருந்த பேப்பர்களையெல்லாம் சரிபார்த்து முடித்துவிட்டு , கையெழுத்தும் போட்டும் முடித்திருந்தாள் மங்கலம்…, அதனால், அந்த அறையிலிருந்த இருக்கையிலிருந்து சட்டென வக்கில் எழுந்துக்கொண்டு , தான் வந்த வேலை முடியவும் அங்கிருந்து வெளியேறினார்! வெளியே மாணிக்கமோ லட்டைக் கையில் வைத்துக்கொண்டு,
” அபிராமியே என் மங்கலம் …!!!”
என்று உருகியப்படி நிற்க… அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு வெளியேறும் வக்கிலோ,
“என்னப்பா நீ தானே மாணிக்கம்… லட்டெல்லாம் பலமா இருக்கே…?, மங்கலம் சொல்ல போற விஷயத்த நீ கேட்டா லட்டு உன் தொண்டையில சிக்கும், பாத்து…பாத்து…!”
என்று ஒரு செல்ல மிரட்டல்! விடுத்து சிரித்துவிட்டு , அப்படியே எல்லோரின் முகத்தையும் பார்த்தும் அவ்வாறே அவர்களுக்குமே அதனை உணர்த்தும் பொருட்டு சிரித்துக் கொண்டே, அங்கிருந்து அந்த வீட்டைவிட்டும் வெளியேறினவரையே மற்றவர்கள் நின்று வேடிக்கை பார்க்கவும்…. மாணிக்கம் மட்டும் அந்த அறைக்குள்ளாக லட்டுவுடன் பிரவேசித்து, மங்கலத்தின் பார்வை படும்படி அவளின் எதிர்முனையில் நிற்க…. அவனை அங்குக் கண்டதுமே…! மங்கலம் தன் ஒற்றை புருவத்தை வளைத்து கேள்வியாக உயர்த்தியவள்,
“என்னது இது…?”
என எரிச்சலோடும் அதே நேரம் ஒரு சிறு ஏளனப் புன்னகையோடும் கேட்க…., மாணிக்கம் மார்பை நிமிர்த்தி பந்தாவாகப் பேசினவன்,
“மங்கலம் நீயே என் முன் ஜென்மத்து காதலி அபிராமி! … இந்தா உனக்காக லட்டு !… நம்ம காதலின் சின்னமே இந்த லட்டு தான்!… இந்தா, ஒரு பிட்டு வாயில் போடேன் மங்கலம் … அப்புறம் என்னை விட்டு எங்கேயும் போகாத காதல் உன்னிடமும் பொங்கி வரும் பாரேன்…!”
என்று அவன் பாவனையாகச் சொல்லவும்…., மங்கலம் அவனை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு,
”எதே… லட்டு சின்னமா…? ஹாஹா….ஹாஹாஹா…. ஆமா …. நீ டார்ச் லைட்! சின்னம் தானே…! இதெல்லாம் உனக்கு ரொம்ப ஓவர் மாணி..க்…கம்….”
என்றவள், மேலும் சிரித்துக்கொண்டே கலாய்த்து கிண்டல் செய்ய…, மாணிக்கத்திற்கோ அவள் கிண்டலாக பேசுவது எதுவும் என்ன ஏதென்று புரியாமல் விழித்தவனிடம் மங்கலம் மேலும்,
“சரி, சரி… பிதற்றினது போதும்…!, நானும் உனக்காக ஒரு லட்டு! மாதிரி இனிப்பான செய்தி தான் வச்சிருக்கேன்…. அந்த லட்டை என்கிட்ட கொடு… இந்தா இந்த தாளை நீ படி!”
என்று சொல்லிவிட்டு, தன் கையில் இருந்த அந்த முக்கியமான பத்திரத்தை மாணிக்கத்திடம் அவள் நீட்டவும்…..அதைப் பெற்றுக் கொண்டவனோ இன்னமும் அந்த ‘குணா!’ கமல் மோடில் தான் இருக்கவும்…
“ஓஹோ… நம்ம காதல கடிதமாகவே எழுதிவிட்டாயா அபிராமி…. அபிராமி…?”
என்று சிலிர்த்துக்கொண்டவன், அந்த முக்கியமான பத்திரத்தை தன் கையில் வைத்தவாறே கமலைப் போலவே கைகளை விரித்து,
“கண்மணி…. அன்போடு காதலன்… நான் இங்கு சௌக்கியமே…”
என்று பாடிக்கொண்டே,
“அப்படியே மானே!, தேனே! பொன்மானேன்னு…. போட்டு எழுதியிருப்ப தானே … ஏன்னா அப்ப தான் படிக்க நல்லாயிருக்கும்…!”
என்றும் குணா கமலைப் போன்றே மாணிக்கமும் பில்டப் கொடுக்கவும்….அந்த சமயம், அவன் முகத்திலே வழியும் அந்த ரொமான்ஸைப் பார்த்த மங்கலம் சத்தமாகச் சிரித்து வைக்க…, அந்தச் சிரிப்பின் போது, அவளிடம் வெளிப்பட்ட ஒருவித வெளிச்சம்! அவள் முகத்தின் முழுவதிலும் ஜாலையாக ஒளி! பரப்பியதும்…. அதுவரை அவனுக்குள் உலவிய அந்த ‘குணா’ அபிராமி காட்சியின் சாயல் முற்றிலுமாக அப்படியே மங்கலத்தின் முகத்தில் மின்னிட…!!!, அவன் திடுக்கிட்டு,
“அபிராமி….அபிராமி…”
என்று கொஞ்சியப்படியே மாணிக்கம். இருக்கவும் …
” அடேய்…..அடேய்….போதும்டா…! , பெரிய ஓலகநாயகன்னு நினைப்பு! … சீரியஸா இருக்க வேண்டிய நேரத்துல நீ வேற சும்மா இருடா…!”
என்று சொல்லிவிட்டு, மாணிக்கத்தின் தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு வைத்தாள் மங்கலம்…. அவ்வளவு தான்!,அந்தக் கொட்டிய வேகம், மாணிக்கத்தின் மண்டைக்குள் இருந்த ‘குணா’ கமலை விரட்டியடித்துவிட்டு, நிஜ உலகத்திற்கு அவனைக் கொண்டுவரவும்….. தெளிந்த மூளையுடன் கையில் இருந்த அந்தப் பத்திரத்தைப் பிரித்துப் படித்து பார்த்தவன்…., அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று,
”என்னது இது…?!”
என்று மங்கலத்தைப் பார்த்து பதற்றத்துடனே கைகள் நடுங்க கதறவும்…..
”ஏன், உனக்கு கண்ணு தெரியலையா….மாணி…க்….கம்…?, நீயே படிச்சு தெரிஞ்சுக்கோ….”
என்று மங்கலம் சற்றும் சலனமின்றிச் சொன்னாள்….. உடனே தன் தலையைத் தாழ்த்தி அந்தப் பத்திரங்களை ஒவ்வொன்றாக வாசிக்கத் தொடங்கவும்…. மாணிக்கம் மனதால் வாசித்த ஒவ்வொரு வரிகளும் கண்களில் படப்பட, அவனுக்கு இதயமே அடைத்தது போன்ற உணர்வு ஏற்பட….. மூச்சு விடத் திணறிப்போனவன், அப்படியே பக்கத்தில் இருந்த சுவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நிலைதடுமாறி நிற்கவும்….
அதை பார்த்துவிட்டு , அந்த அறைக்குள்ளே பதறிப்போனவர்களாக பேச்சி, பாண்டியன், வள்ளி என அனைவரும் ஓட்டமும் நடையுமாக அங்கு உள்ளே வந்து நின்று,
”என்ன மங்கலம் இது…?, அவன் உன் புருஷன் தானே…?, ஏன் இவனை இப்படி கஷ்டப்படுத்துற….?, உன் பக்கத்துல இதயத்த பிடிச்சிட்டு நிக்குறானே, கொஞ்சம் கூட மனசு இரங்காம இருக்கியே…!”
என்று அவனுக்கு ஆதரவாக பரிதாபமாகக் குரல் கொடுக்கவும்…..மங்கலத்தின் முகத்திலோ ஈரம் துளிக்கூட இல்லாமல், மிகவும் அழுத்தமாக,
“உப்பை தின்னவன் தண்ணிய குடிச்சுத்தானே ஆகணும்….?, விதை விதைச்சவன் தானே அவன்….அப்போ வினையுமே அறுத்து தானே ஆகணும்….? , அதெல்லாம் போகட்டும்… இவன் இனி என் புருஷன் இல்ல…, ஒன்லி எக்ஸ் ஹஸ்பண்ட்…! அவ்வளவுதான்…!”
பதில் சொன்னவளின் கூற்றால் , அங்கே நின்ற பேச்சி முதல் பாண்டியன் மாமனார், மங்கலத்தின் அம்மா வள்ளி வரை அனைவருமாக கண் விரித்து, அதிர்ச்சியோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டப்படியே,
“என்னடி சொல்லுற…?, எங்களுக்கு ஒண்ணுமே புரியலயே…!”
என்றுப் பதறினார்கள்….. அப்போது ஒரு குரல் கூட்டத்தின் நடுவிலிருந்து தெளிவாக, “இருங்க… ” என்றுத் தடுத்து ஒலிக்கவும்…. எல்லாருமாக அந்த குரல்! வந்த திசை பக்கம் பார்க்க,
“அவ சொல்றது உண்மை தான்….!” என்று சொல்லியது…. அது வேறு யாருடைய குரலோ இல்லை… அது மாணிக்கத்தின் குரலேதான்….!அப்படியே அதிர்ச்சியில் இருந்து மீண்ட மாணிக்கமாக, ஆத்திரமும் இயலாமையும் குடிக்கொண்டக் குரலாக கத்தியப்படியே ,
”ஏய்! என்னடி இது… விவாகரத்து பத்திரமா இது….?!, அதுச…ரி, ஜீவனாம்சத்துல உனக்கு பணமே வேண்டாம்னு எழுதியிருக்கியே…! ஏன்டி…?, அப்புறம் எப்புடிடீ என்னோட பிள்ளைகள வளர்ப்ப நீ…. அதுகள கூட்டிக்கிட்டு போய் ஏதாவது சத்திரத்தில் உட்கார்ந்து பிச்சை எடுக்க போறியாடீ நீ…? இல்ல…, உன்ன மாதிரியே என் பிள்ளைகளையும் திருட வைக்க போறியாடீ நீ….?!”
“அதான் உன் பிள்ளைகள்னு நீயே வாய் கிழிய சொல்றியே…,!, அப்புறம் என்ன…?, உன் ரத்தம் தானே…?, நீயே அதுகள வச்சுக்கோ…! நான் உன்னோட குழந்தைகள நான் கூட்டிக்கிட்டு போவேன்னு சொன்னேனா என்ன…?, அதுகள பெத்துக்கிற ஒரு மிஷினா தானே என்னய வச்சுக்கிட்ட…?, அதான் என் வேலை முடிஞ்சு போச்சே…!, இனி எனக்கு இங்க என்ன வேலை இருக்குது…?, உன்ட்டயும் உங்க குடும்பத்துக்கிட்டயும் … ஏன் எங்கம்மாவுக்கும் அவுங்க குடும்பத்துக்குமே சேத்தே தான் சொல்றேன்…. உங்களுக்கெல்லாம் ஒரு உப்புக்கு சப்பானி!யாகலாம் இங்க இனி என்னால வாழ முடியாது…! உன் புள்ள… உன் பா…டுன்னு… உனக்கு பாய் காமிக்குற நேரம் வந்துடுச்சு மாணி….க்…கம்…!”
“அடிப்பாவி…! நண்டு செண்டுமா புள்ளங்கள வெச்சுகிட்டு என்னடி பேச்சு இது…?”
மங்கலத்தின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போன வள்ளியோ, இப்படி தலையில் அடித்துக்கொண்டே சொல்லவும்….. உடனே பேச்சி அவள் பங்குக்குக் குறுக்கிட்டு,
“புள்ளங்களா… நீங்களாவது சொல்லுங்கப்பா…. உங்கம்மாகிட்ட இப்புடி பண்ண கூடாதுன்னு…அப்படியே பேசி அவளுக்கு புரிய வையுங்க…!”
என்று பேரக் குழந்தைகளைப் பார்த்து பேச்சி கெஞ்சினாள்….ஆனால், அங்கே நின்ற பிள்ளைகளின் எதிர்வினை அனைவரையும் உறைந்துபோகச் செய்யுமாறு, மூத்த பையன் வேலன் முன்னோக்கி வந்து,
“ஆமா பாட்டி…! அம்மா சொல்றதுதான் சரி…. எங்கள பெத்து போடுற வேலையதான் அவுங்க முடிச்சுட்டாங்களே…! அப்புறம் என்ன…?, சிறகு முளைச்ச பறவைய போல வெளி உலகத்த நோக்கி சிறகை விரிச்சு பறக்கட்டுமே…தப்பு இல்ல….!”
என்று உறுதியோடு பேரன் சொல்லவும்…பாண்டியன் அதிர்ந்து போய்,
“டேய்! நீ கடந்து பெரிய பையன் ஆயிட்ட…. அதான் இப்படிப் பேசுற… ஆனா…. சின்ன பொண்ணு பச்சமண்ணு, சாருமா அது என்ன செய்யும்…?”
என்று கேட்க…, அங்கே நின்ற சாருலதா நமுட்டுச் சிரிப்புடன் தன் பங்கிற்குக் குரல் கொடுத்தவள்,
“எதே…? நானா சின்ன பொண்ணா…? ஹாஹஹா…!!!, மண்ணு வேறயா…?, நீங்க நினைச்சா நான் சின்ன புள்…ள, அதே சில நேரம் பெரிய பொண்ணு மாதுரி நடந்துக்கம்மான்னும் சொல்வீங்க…! அதையும் தாண்டி… என்னை ‘ரோபோட்!’னு வேற சொல்வீங்க!… இனி அப்படி சொல்ல முடியாதுல!… எங்களுக்கும் கை, கால் நல்லாதான் இருக்…கு..! , நாங்க எங்க டாடி கூடவே இருந்துப்போம்…! , என்ன மை ஸ்வீட் டாடி…!!! நான் உங்க செல்லம் தானே…? , நாங்க உங்ககிட்டயே இருந்துக்கிறோ…ம்!”
இப்படியாக தன் பிள்ளைகளும் அவள் பக்கம் நிற்பதைப் பார்த்த மாணிக்கமும் அங்கிருந்தவர்களும் , குழப்பத்திலே தலை சுற்றிப் போய் நின்றவர்களில், மாணிக்கத்திற்கு மட்டும் மூளையில் ஒரு பொறி! தட்ட,
“அப்போ… உங்கம்மாவும் நீங்களுமா சேர்ந்து எல்லாருமா ஒரு முடிவாத்தான் முன்னாடியே பேசி வெச்சுக்கிட்டு இப்புடி செய்றீங்க… அப்படித்தானே…?!”
என்று விரக்தியோடு கேட்டான் மாணிக்கம்… அதற்கு மங்கலமும் அவளுடைய குழந்தைகளுமாக ஒரே குரலில் உறுதியாகச் சொன்னார்கள்,
“ஆமாம்!”
அந்த தருணத்தில் சரியாக அவர்களது வீட்டின் அழைப்பு மணி! அடிக்கவும்..
💒மறுமணாகும்…..
♥️அடுத்த தீபாவளி சர்பைரஸாக ஒருவர் இந்த வீட்டுக்கு வருகிறார்… அதனால் பெரிய திருப்புமுனை! ஒன்று அதிரடி சரவெடியயாக வெடிக்க காத்திருக்கு🔥🔥🔥…. அவர் யார் …? என்று பார்ப்போம்….