அத்தியாயம்-14-
மங்கலம் அவ வீட்டிலிருக்கும் ஒரு அறைக்குள்ளாக வக்கிலை அழைத்து சென்று, அங்கே அவரை அமர வைக்கவும் …. அந்த வக்கில் சில பல முக்கியமான பேப்பர்ஸ் எல்லாத்தையும் அவளுக்கு தர…. அதை வாங்கிக்கொண்டவள் தன் கையில் இருந்த அந்த முக்கியமான பேப்பர்களை ஒவ்வொரு தாளாகப் பிரித்து மிகவும் தீவிரமாகச் சரிபார்த்துக் கொண்டிருக்கவும்…..
அந்த அறைக்கு வெளியே இருந்தவர்களோ மங்கலம் உள்ளே என்ன செய்கிறாள்…?, என எட்டிப்பார்க்க…, அப்படியே, அவர்கள் அவள் கையில் வைத்து சரிபார்த்துக் கொண்டிருக்கும் பத்திரங்களையும் பார்த்துவிட…. அந்த பத்திரத்தில் அப்படி என்ன தான் எழுதியிருக்கிறது …?, என்பதையும் அறிந்து கொள்ளவும்…. ஒட்டுமொத்தக் குடும்பமும் துடியாய் துடித்துப் போய் நின்றிருக்கிறது….
அவ்வாறாக பேச்சியம்மாள், மாணிக்கம், பாண்டியன், வள்ளி நால்வரும் எப்படியாவது அந்த அறைக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று எவ்வளவோ முயன்று பார்க்கவும்…. அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காகவே அங்கே களமிறங்கி இருந்தனர் வேலனும் சாருலதாவும்…!, தங்களது இரு கைகளையும் விரித்து, கதவுக்கு குறுக்கே நின்று மகாபலிபுரச் சிற்பங்கள் போலப் பவ்யமாகவும் அதே சமயம் உறுதியாகவும் அவர்களை உள்ளேவிடாது வழிமறித்துக் கொண்டிருந்தனர்….
“ஏய் வேலா….!, வழியை விடுப்பா… உள்ள என்னதான் நடக்குதுன்னு ஒரு தரம் கண்ணால பாத்தாதான் எனக்கு நெஞ்சு அடங்கும்….!”
”அப்படியெல்லாம் உள்ள விட முடியாது பாட்டி….! மம்மி ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டு போயிருக்காங்க… அவுங்க வக்கீல் பேப்பர்ஸ் செக் பண்றப்ப யாருடைய டிஸ்டர்பன்ஸும் இருக்க கூடாதுனு! சோ ப்ளீஸ்… கொஞ்சம் ஒரு அடி பின்னால நகர்ந்து போய் நில்லுங்க பாட்டி….!”
என்றுவிட்டு, வேலன் இவ்வாறு பேசி மார்பை நிமிர்த்தி நின்று வழிமறிக்கவும்…. பேச்சியம்மாள் தன் கைகளை வீசிச் சத்தம்! போடுகிறவளை மேலும் அவன் பேசி சமாளித்து கொண்டிருக்க….
”ஏய் சாருமா… நீயாவது வழி விடுமா செல்லம்…? , நான் என்ன உங்க அம்மாவ கடிக்கவா போறேன்…?, அந்த பத்திரத்துல என்னதான் இருக்குன்னு ஒரு ஓரமா நின்னு பாக்கத்தானே போறேங்குறேன்….!”
என்று வள்ளி கெஞ்சலாகக் குரலை மாற்றி பேத்தியை தன் வசமாக ஐஸ் வைத்து கொண்டிருந்தவளிடம், சாருலதாவோ தன் தோளைக் குலுக்கிவிட்டு,….
”நோ சான்ஸ் வள்ளி பாட்டி…! ரூல்ஸ்ன்னா ரூல்ஸ்தான்!…”
என்றுவிட்டு , இப்படி மகனும் மகளுமாக இவர்களை ஒவ்வொருவராக இருபுறமும் நின்று தடுத்து சமாளித்துக் கொண்டிருக்கவும்…, மாணிக்கம் மீண்டும் குறுக்கிட்டு,
“டேய் , நீங்க ரெண்டு பேரும் விலகுங்கடா… இஃப் யுவர் பேட்….!!!, ஐம் யுவர் டாட்! டா…. ”
என்று பன்ச் டயலாக் சொல்லிவிட்டு, குனிந்து கதவின் இடுக்கு வழியாகப் பார்க்க முயன்றார் மாணிக்கம்….. உடனே, வேலன் குறுக்குட்டு, தன் கையால் மாணிக்கத்தின் தலையைப் பிடித்து அப்பா என்றும் பாரமல் லேசாகக் கீழே அமுக்கவும்….,
“அடப் பாவி…”
என்றுவிட்டு, அப்படியே அவன் குனிந்தபடியே, உள்ளே நடப்பதை பார்க்க முயன்றான் மாணிக்கம்….. அப்போது,அவன் தலையை வேலன் விடுவிக்கவும், பின்னாலேயே வந்த பாண்டியன் அவர் பங்குக்கு மகன் தலையை அலுத்திப் பிடித்து, அவன் தலைமேல் தன் தலையை வைத்துவிட்டு,
” இரு அப்படியே… நானும் பாக்குறேன்…”
என்றுவிட்டு அவருமே பார்க்க முயல…, அப்போது, அவர் மேலயும் தன் தலையை மிகச் சாமர்த்தியமாக வைத்துவிட்ட பேச்சியம்மாளுமே மருமகள் உள்ளே என்ன செய்கிறாள்…?, என பார்க்க முயல….,
‘என்ன எல்லோருமா உங்க குடும்பத்து கைவரிசைய என் முன்னாடி காட்டுறீங்களா என்ன….?’
என்று நினைக்கும் வள்ளியும் விறைப்பாக ,
‘ ஒருவர் தலை மீது ஒருவரடா….’
என அங்கே இருக்கும் கூட்டாளிகளுடன் தானுமே கூட்டணி வைத்துக் கொள்வதைப் போலவும்….. பேச்சிக்கு அடுத்ததாக, அவள் தலை மீது வள்ளியும் தலை வைத்தவள், மங்கலம் இருக்கும் அந்த அறையை நோட்டமிட , இப்படியாக உள்ளே நடப்பதை வெளியில் இருந்தவாறே பார்ப்பதற்காக அந்த பெரியவர்களான நால்வரும் செய்த சேட்டைகளை கண்டதுமே, சிறியவர்களாகிய வேலனும் சாருலதாவும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்,
அப்படியே சிறிய வாண்டு சாருலதாவுக்கு இவர்களை விலக்கி விட்டே களைப்பு மிகுதியாகவும்….. குட்டி ஸ்நாக்ஸ்! பசி ஏற்படுகிறது…., உடனே, வீட்டில் லட்டு! ஸ்நாக்ஸ் இருப்பதுமே அவளுக்கு ஞாபகம் வர…. அதை உடனேயும், இப்பவே இந்த ரணகலத்திலும் சாப்பிட்டே ஆக வேண்டு்ம்….!!!, என்றும் சிறுமிக்கு ஆசை வந்துவிடவே…, அண்ணன் வேலனிடம் அந்த விருப்பத்தை எடுத்துரைத்தவளிடம் அவனோ ,
“முடியாது…. இந்த ரணகலத்திலும் உனக்கு குதூகலம் கேட்குதோ….???, திண்ணி பண்டாரம்…. குண்டு பண்ணி…. முடிட்டு இருடி…”
“எதே முடியாதா…. ?, அப்போ எனக்கு கண்டிப்பா வேணும்டா …. வெள்ள பண்ணி … நெட்ட கொக்கு போடா….”
என்றுவிட்டு, நிற்காமலே ஸ்நாக்ஸ் இருக்கும் கப்போர்டின் திசைப் பக்கமாக ஓட்டமும் நடையுமாக வேலன் பலமுறை அழைத்தும் கேட்காதவள் போலவும் ஓட்டம் பிடித்து சென்று, அந்த கப்போர்டையும் வேகமாக திறந்து, மங்கலம் உருண்டை பிடிச்சு செய்து வைத்திருந்த அந்த நெய்! லட்டை அங்கேயே நின்றும் வாயினுள் திணித்துவிட்டு,
மேலும் மூன்று லட்டுக்களை தட்டில் ஏந்திக் கொண்டும் மீண்டும் இந்தப் பக்கமாக திரும்பிவந்தவளின் கையிலிருந்த தட்டு அவளின் அலட்சியப் போக்கில் சாய்ந்தவாறே பறக்கவும்….!!!, சரியாக அந்த மூனு லட்டுகளையும் வேலன் கேட்ச்! பிடித்துவிட … லட்டுகள் தப்பித்தது….
ஆனால், ஒருவர் மேலே ஒருவர் தலையை அடுக்கியப்படி அமுக்கி பிடித்துக் கீழே இடுக்கு வழியாக எட்டிப் பார்த்து,
‘ உள்ளே என்ன நடக்கிறது…?, மங்கலம் எதுக்கு அந்த பத்திரத்தில் எல்லாம் கையெழுத்து போடுகிறாள்..?..,’
என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும்…., அவர்களில் வள்ளி சுதாரித்துக் கொண்டு, தட்டு தன் தலை மேல் விழுந்துவிடும் என எண்ணி ! தன் தலையை வேகமாக எடுக்க …
அவளைத் தொடர்ந்து, பேச்சி, பாண்டியன் என வரிசையாகத் தங்களின் தலைகளை வெடுக்கென எடுத்துவிட்டனர்… ஆனால் மாணிக்கம் மட்டும் சுதாரிக்கமால் இருக்கவும்…. மகள் தவறவிட்டத் தட்டுச் சரியாக அவன் தலையில் பட்டு பதம்! பார்த்தது…. அவ்வளவுதான்! மூளை! கலங்கிய மாணிக்கத்தின் மனசுக்குள்ளே திடீரென ‘குணா!’ கமல் போலவும்….. ஆவேசம் தலைக்கேறி, ! மாணிக்கத்தின் கண்ணில்… சட்டென மங்கலத்தின் உருவம் அப்படியே அபிராமியாக பதிந்துவிட்டது!…
உடனே அவனுக்கு, அங்கே சுற்றி நடக்கும் கூச்சலோ, வேலனும் சாருலதாவும் ‘லட்டு!….தட்டு!….’ என சணைடையிட்டுக் கொண்டிருப்பதோ என எதுவுமே மாணிக்கத்தின் காதில் விழவில்லை….. மாறாக, உலகமே ஸ்லோ மோஷனில் நகர…., மாணிக்கத்தின் மனக்கண்ணில் இளையராஜாவின் வயலின் இசை ‘தட….தடவென….. பின்னணியில் அதிரத் தொடங்கியது…..
அதன் விளைவாக, மாணிக்கம் மெய்மறந்து, கதவின் இடுக்கு வழியாக மங்கலத்தையே வெறித்துப் பார்த்தபடியே,
“அபிராமி மங்கலம்…. அபிராமி மங்கலம்….
பார்த்த விழி பார்த்தபடி பூத்திருக்க… காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க… ஊன் உருக உயிர் உருகத் தேன் தரும் தடாகமே…அபிராமி மங்கலம்…என் அபிராமி மங்கலம்…!”
என முணுமுணுக்கத் தொடங்கவும்…,
“டேய் மாணிக்கம்….! என்னடா ஆச்சு உனக்கு….?, லூசு மாதிரி என்னடா பாடிட்டு இருக்க….? , தலையில் தட்டுப்பட்டு கொஞ்சம் அடிப்பட்டதுல கொஞ்சம் மூளை ஏதும் கதிகலங்கிடுச்சோ… ?, சரி முள்ளை முள்ளால் எடுப்பது போல … நான் உன் தலையில ஒரு கொட்டு கொட்டுன்னா எல்லாம் சரியாயிடும்ன்னு நினைக்கிறேன்…..!”
என்றுவிட்டு, அவன் பின்னாடியிருந்து பேசிய பாண்டியன் மாணிக்கத்தின் மண்டையிலேயே ஒரு கொட்டு வைத்தார்….. ஆனாலும், மாணிக்கம் அசைவதாயில்லை…. மாறாக, அந்த கொட்டையும் ஒரு ‘அபிராமி!’ தியானமாகவே எடுத்துக்கொண்டு,
” அபிராமி… அபிராமி...”
என்று கமல் காதலோடு உச்சரிக்கும் விதம் தனி அழகு!அல்லவா…. அதே பாணியில் மாணிக்கமும்,
“மங்கலம்… மங்கலம்… என் கண்மணி மங்கலம்! காலங்கள் மாறலாம்… இந்த மாணிக்கத்தோட காதல் மாறுமாடி…?”
என்று அதே குணா கமல் கெட்டப்பில், வாயைப் பிளந்துகொண்டு பரவசத்தின் உச்சத்தில் பாடவும் ஆரம்பித்து,
”கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே…பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே…
மங்கலமே அபிராமியே…தாலாட்டும் சாமியே… நான் தானே தெரியுமா….? சிவகாமியே… சிவனில் நீயும் பாதியே… அதுவும் உனக்குப் புரியுமா… சுப லாலி லாலியே… லாலி லாலியே…மங்கலமே அபிராமியே ……. லாலி லாலி லாலியே…!.?”
” இது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது…. மங்கலமுமானது……”
அப்போது பார்த்து , ஆசையாக தங்கை கொண்டு வந்த நெய் லட்டை வேலன் கையில் வைத்திருக்க…. கீழே விழுந்திருந்த அந்த தட்டையும் எடுத்து அதில் அதை வைத்துவிட்டு, அந்த தட்டை ஏந்திக் கொண்டு வேலன் நிற்கவும்…. சரியாக, பரவசத்தின் உச்சத்தில் பாடிமுடித்த மாணிக்கமோ கண்களை மூடியிருந்தவன், அந்த பரவசத்திலே தன் கைகளை வீசி துள்ளி! திமிறி! குதித்து….!!! அந்த தட்டை மீண்டும் இடித்துவிட்டு….,
“மங்கலம்… நீதானடி என் தடாகமே!”
என்றுரைத்து, திடீரெனக் கையை உயர்த்த, வேலனின் தட்டிலிருந்த லட்டுவும் அப்படியே பறந்து வந்து மாணிக்கத்தின் கையில் கச்சிதமாக விழுந்தது….!, அப்படி நழுவி வந்து கையில் லட்டு விழுந்ததுமே, ‘குணா’ படத்தில் கமல் லட்டைப் பிடித்துக் கொண்டு திகைத்துப் போய் நிற்பாரே… அதே எக்ஸ்பிரஷனை அப்படியே மாணிக்கமும் கொடுக்கவும் …. லட்டைப் பார்த்தவன்… அப்புறம் கதவு இடுக்கு வழியா மங்கலத்தையும். பார்க்கவும்….
மாணிக்கம் லட்டைக் கையில் வைத்துக்கொண்டு, கதவை நோக்கித் துள்ளிக்குதித்தப்படியே அந்த அறையினுள் ஓடப் பார்க்க… உடனே பேச்சி சட்டென மாணிக்கத்தின் சட்டை காலரைப் பிடித்துப் பின்னாடி இழுத்தவர்,
“ஏ…….ய்! என்னடா நடக்குது இங்க…?, லட்டை கையுல வச்சுக்கிட்டு எங்கடா பாயுற…..?”
”விடுங்கம்மா….! என் மங்கலம் உள்ள பத்திரத்தை பாத்துட்டு இருக்கா… நான் போய் இந்த லட்டை குடுத்து என் காதல அவள்ட்ட சொல்லணும்…!”
என்றுவிட்டு, மேலும் மீண்டும்,
“பார்த்த விழி …. !”
என்றப்பாடலை பாடியப்படியே மாணிக்கம் அந்த லட்டைக் நெஞ்சோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு முன்னேறினான்….
💒மறுமணாகும்….
🔥🔥போ போ அப்படியே மங்கலம் ஒரு லட்டு தருவா அது வாங்க போற உன்னுடைய ரியாக்ஷனையும் நாங்க பார்க்கனும்…..