அத்தியாயம்-13
பஞ்சாயத்துக்கு வந்த சொந்தங்கள் அனைவரும், வேறு வழியின்றி வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கொலு பொம்மைகளாக அந்த மாடிப்படியில் ஏறி நிற்கவும்…. .
அவர்களைத் தொடர்ந்து, சிலம்பாட்டத்தால் அடித்தே நிமித்தியபடியே தன் கணவன் மாணிக்கத்தையும் அந்த படியிலேயே ஏற்றினாள் தேவர் வீட்டு பொண்ணு மங்கலம்….
அடுத்த நொடியே , அந்த கூட்டத்தினர் எல்லாரிடமும் அவளின் அதிரடி உத்தரவுகள் பறக்கவும்….. அம்மா வள்ளியின் கையில் துடைப்பக்கட்டை!!, கணவன் கையில் சமையல் கரண்டி!, மாமியார் பேச்சியம்மாள் கையில் பாத்திரம் விளக்கும் பஞ்சு!, மாமனார் பாண்டியன் கையில் துணி துவைக்கும் சோப்பு!, இவ்வாறாக பாத்துரூம்! கழுவும் தொடப்பைகட்டை,பிரஸ், வீடு துடைக்க உதவும் துணி மாப், மோரம், ஓட்டடைக் குச்சி , என வீட்டின் வேலைகளுக்குப் பயன்படும் ஒவ்வொரு பொருட்களையும் மற்ற கூட்டத்தினரிடமும் ஆளுக்கொரு கையில் எடுக்கச் சொன்னாள் அந்த ‘ஹிட்லர்’ மங்கலம்….
அவள் சொன்னபடியே, அவர்களும் பயந்துபோய் அந்தப் பொருட்களைக் எல்லாம் எடுத்து கையில் ஏந்தி நிற்கவும்…. அடுத்து, அந்தப் படியின் நடுவே மாணிக்கம் கம்பீரமாக எப்பவும் உட்காரும் ராஜசோஃபாவைக் கொண்டுவந்து போடுமாறு வேலனிடம் கட்டளையிட்டாள் மங்கலம்….
வேலனும் அதை ஓடோடி வந்து போட, அதில் மங்கல பாட்ஷாவாக அவள் அமர்ந்து கொண்டவளின் பக்கத்திலே, வழக்கம்போல கார்ட்ஸாக மகனும் மகள்களும் விசுவாசமாக நின்று கொண்டிருக்கவும்…, அந்த மகன் மகள் மூலமாகவே செல்பேசியை ஒருவாறு நீட்டிப்பிடித்துச் செல்ஃபிக்கள் பல கோணங்களிலே எடுக்கப்பட்டுகின்றன…
. அந்த சமயம் , அங்கே நிற்பவர்களில் நடுவில் யாராவது ஒழுங்காக கொலு பொம்மைகள் போல் நிற்காமல் சற்றே அசைந்தால் கூட, வாத்தியார் மங்கலம்! அவர்களுக்குத் தோப்புகரணம்! போடவும் வைத்துத் தண்டனை வழங்கி அச்சுறுத்தப் வைத்திருந்தாள்…. அதன் விளைவாக சொந்த்ததில் ஒருத்தர் ,
‘எங்க ஒன்னாப்பு டீச்சர் சுந்தரியை ஓவர் டேக் பண்ணிட்டா இந்த வாத்தி மங்களம் ரெம்ப தான் ஸ்டீரிட் ஆபிசரா இருக்கா … ‘
என்று மலரும் நினைவுகளை அசைப்போட்டு ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே ..!. பாடலை மனதுக்குள்ளாக அவர் பாடி முடிக்கவும் …. தவறு! செய்த மாணவர்களைப் போல சொந்தங்கள் அனைவரையும் சுமார் இரண்டு மணி நேரம்! அதே படியிலே பொம்மைகளாகவே நிற்க வைத்தாள் மங்கலம்வாத்தி….!!!,.
”காலையில வந்தோம்… அடுத்த டீ குடிக்கும் நேரமே வந்துடும் போலிருக்கே….! இன்னும் அவ வீட்லயே நம்மள ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வச்சிருக்காளே…”
எனச் சொந்தங்கள் தங்களுக்குள் புலம்பத் தொடங்கவும்…..அவர்களின் புலம்பலைக் கேட்ட மங்கலம்,
” என்னது இது…?, சின்ன புள்ள தனமா இருக்கே…??!, சரி சரி, சின்ன புள்ளங்க மாதிரி அழாதீங்க…அழாதீங்க… எல்லாரும் இங்கிருந்து போகணும், அப்படித்தானே…? போகலாம்…”
இவ்வாறு, சொன்னதைக் கேட்டதும் சொந்தங்களின் முகம் சட்டென மலர்ந்து, பாட்ஷா படத்தில் நாற்காலியில் ரஜினிகாந்த் கம்பீரமாக உட்கார்ந்திருப்பதைப் போலவே வீற்றிருந்த மங்கலத்தின் கைகளைப் பிடித்து, தங்கள் கண்களில் ஒற்றி முத்தம் தந்து பணிவாக விடைபெறத் தொடங்கினவர்கள் ஒவ்வொருவருமே வரிசையில் ஒருவர் பின் ஒருவராக இப்படி வந்து இதையே செய்துவிட்டு நகரவும்…..
“சரி சரி, வேலன்… நம்ம வீட்டு சாவிய வச்சு கதவ திறந்து விடுப்பா…. அவங்க போகட்டும் …. ”
என்றவளின் கூற்றை ஏற்று, சாவியை வீட்டினில் ஓரிடத்தில் மறைத்து வைத்திருந்த வேலனும் , அதை எடுத்துக் கொண்டு வந்துவிட்டு, தன் வீட்டுக் கதவைத் திறக்கச் செல்லவும்…. அவன் பின்னுக்கே தாங்கள் இங்கிருந்து உடனடியாக வெளியேறுவதற்காக வேண்டி சென்ற சொந்தங்கள் அனைவரும்,
“அப்பாடா… தப்பிச்சோம்… பிழைச்சோம்….!”
என்று கிசுகிசுத்தபடியே அவனுக்குப் பின்னாலேயே ஓட்டமும் நடையுமாக செல்கின்றவர்களையே நிலைக்குத்தி பார்க்கும் மங்கலத்தின் மனசாட்சியோ சிரித்துக் கொண்டிருந்தப்படியே,
‘போங்க… போங்க! அங்கேயும் ஒரு தீபாவளி சர்ப்ரைஸ்! காத்துட்டிருக்கு உங்களுக்கு…. அத தெரிஞ்சுக்கிட்டா நீங்களா சிலர் திரும்பவும் இங்கே உள்ளே வரத்தானே போறீங்க பாப்போமே அதையும்…’
என்றப்படி மைண்ட் வாாஸில் பேசிக் கொண்டே மங்கலம் சிரித்து வைக்கவும்…. படாரென அந்த வீட்டுக் கதவு வேலன் மூலமாக திறந்து வைக்கப்பட்டது….! அந்த சமயம் சரியாக அந்த வீட்டின் வாசலில் ஒரு வெள்ளை நிற இன்னோவா கார்! ஒன்று அதிரடியாக அங்கு வந்து பந்தாவாக நிற்கவும்…..!!!!!!!,. அதிலிருந்து வெள்ளைச் சட்டை, வெள்ளை பேண்ட் என டிப்டாப்பாக உடை அணிந்த ஒரு நபர் இறங்கினார்…. அவர் ஒரு கையில் கருப்பு நிற கோட்டும் மறுகையில் சில கோப்பைகளும், ஆவணங்களும் மின்னல் வெட்டாக மின்னிக் கொண்டிருக்கவும்…..
’யார் இவர்…?, இங்கதான் வர்றாரா….?’
என ஆச்சரியமாக இவ்வளவு நேரம் வரையிலும் வெளியேற துடியாய் துடித்துக் காத்துக் கொண்டிருந்த சொந்தங்கள் அனைவரும் யோசனையாக வாயை பிளந்து இந்த வீட்டை நோக்கி அடிமேல் அடியேடுத்து கம்பீரமான நடையுடனே வரும் அவரையே பார்த்தனர்…., அவர்களோடே வழியனுப்ப வந்த மாணிக்கம், பேச்சி, வள்ளி, பாண்டியன் ஆகியோரும் அவ்வாறே அந்த நபரை நிலைகுத்திப் பார்த்தபடி வாயை பிளந்து திகைத்து நிற்கவும்….
எதிர் நோக்கி! வீட்டிற்கு வரும் அந்த நபரோ, தன்னை இவ்வாறு வாயை பிளந்து பார்க்கும் யாரையும் பொறுப்படுத்தாமலும், சட்டைச் செய்யாமலும் நேராக அந்த வீட்டை நோக்கியே நடந்து வந்தவரை மேலும் பீதியுடனே,
”போலீஸ் வரும்னு நினைச்சோமே… ஆனா வக்கீல் வர்றாரா…?!”
என வருபவரையே கூர்ந்து ஒரு புருவம் உயர்த்தி கேள்வியாக பார்த்த மாணிக்கம் இவ்வாறு நினைத்து பதறினான்…. அவ்வாறே சொந்தங்களிலும் பாதிப்பேர் பதறியப்படியே வக்கிலை பார்க்கவும்,
‘ஆளை விடுங்கடா சாமி….! நாங்க இந்த வீட்டுல உள்ளவங்களுக்கு சொந்தங்களே இல்ல…!’
என்பதைப் போல அங்கிருந்து தெறித்து ஓடினார்கள்…. சிலரோ,
“என்னதான் நாம ஓடி ஒழிஞ்சாலும், மங்கலம் ஏதாவது நம்ம மீது வரதட்சணை கொடுமை அது இதுன்னு வழக்கு போட்டிருந்தா என்ன செய்யறது….? சரி, எதுக்கு வந்திருக்காருன்னு இங்கிருந்தப்படியே தெரிஞ்சுக்குவோம்…”
என்று முணுமுணுத்தபடி தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கவும்….. மாணிக்கமும் அதே காரணத்தை யோசித்தாலும்,
‘இவ திருடி வச்ச நகைகளுக்கும் பணத்துக்கும்… ஒருவேளை திருடியவர் வீட்ல இருந்து இவ மேலயோ,இல்ல நம் மேலயோ கேஸ் போட்டிருப்பாய்ங்களோ…?’
என்றும் தான் அனுமானித்த பயத்தில் உறைந்து சிலையென செய்வதறியாது திகைத்து நின்றிருந்தான் மாணிக்கம்….அந்த வக்கீலோ, சர்வ சாதாரணமாக முகத்தை வைத்துக் கொண்டு ,அங்கே நின்ற கூட்டத்தையெல்லாம் கடந்து, அதிரடியாக வீட்டினுள்ளே நுழைந்து….! , நேராக மங்கலத்திடம் சென்று நின்றிருந்தார்….
அந்தச் சமயத்தில் மங்கலம்! ஒரு புதிய அவதாரமாக, லாங் சார்ட் அண்ட் மிடி! என மாடர்னாக உடை அணிந்திருக்கவவும்….அதைப் பார்த்த மாணிக்கமும் அங்கே எஞ்சியிருந்த கூட்டத்தினரும் திகைத்துப் போய்,
“இது எப்போ நடந்தது….? , நைட்டி தானே போட்டிருந்தா… இப்போ என்னடான்னா மிடி போட்டிருக்காளே… எப்போ போய் டிரஸ் மாத்தினா…?”
என்று தங்களுக்குள்ளாக முணுமுணுத்தனர்….மாமியார் பேச்சியம்மாளோ,
” நம்ம கண்ணுல மண்ணை தூவிட்டு போய் …இவ உடனே டிரஸ் மாத்திட்டு வந்து நின்னாலும்… இன்னுமே அவ போட்டிருக்கும் நகைக்கும் மேக்கப்புக்கும் மட்டும் எந்த குறைச்சலும் வைக்கலயே இவ…”
என்று அலுத்துக் கொள்ளவும்…. ஆம், அப்படித்தான் மங்கலம் வழக்கம்போல அதே நகைகளோடும், மினுமினுக்கும் மேக்கப்போடும் தான் கம்பீரமாக அங்கு வந்து நின்றுகொண்டிருந்தவள்….
”என்ன இங்கயே பார்வை…?, நீங்க யாரும் இன்னும் இங்கிருந்து போகலையா…???, கிளம்புங்க… கிளம்புங்க… காத்து வரட்டும்….!”
என்று இன்னும் எஞ்சியிருந்த சொந்தங்களைப் பார்த்து மங்கலம் அதிகாரத் தோரணையில் அதட்டவும்…அவர்களில் சிலரோ,
“அவளே போன்னு சொல்றா, நாம ஏன் இன்னும் இங்க நிக்கணும்… இவட்ட அவமானபடனும் ?”
என்று தங்களுக்குள்ளாக தன்மானத்தைக் கூட்டிக்கொண்டு, அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டம் பிடித்தனர்….அப்படி இருந்தும் அங்கேயே அசையாமல் நின்ற சிலரைப் பார்த்தும்,
“என்ன… உங்களுக்கு தனியா வெத்தலை பாக்கு வச்சு சொல்லணுமா… போங்க இங்கிருந்து ஓழுங்கா….ஓடுங்க…?”
என தன் வீட்டின் வெளிக்கதவை தன் ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்டி மங்கலம் முறைக்கவும்….அவமானம் பிடுங்கி தின்ற நிலையில் சொந்தங்கள் மொத்தமாக அங்கிருந்து கிளம்பி அந்த வீட்டை விட்டு உடனடியாக தலைக் கவிழ்ந்தபடியே வெளியேறிச் செல்லவும் …. அந்த வீடு ஒரு வழியாகக் காலியானது….!
ஆனால் அந்த நிதப்த அமைதியிலும், இன்னமுமே மாமியார் , மாமனார் மற்றும் மங்கலத்தின் அம்மா ஆகியோர் அங்கேயே நின்றுகொண்டிருக்கவும்….. அவர்களையுமே மங்கலம் தீயாக முறைத்துப் பார்க்கிறவள் , அப்படியே கண்கள் வழியாக உங்களுக்குமே இதான் போங்க வெளிய என சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்க… அவர்களோ அதைக் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. மாறாக,
‘ இவளோட இந்த திடீர் அவதாரத்துக்கும், இந்த அதிரடி மாற்றங்களுக்கும் பின்னால என்னதான் காரணம்னு இன்னைக்கு ஒரு முடிவா தெரிஞ்சுகிடணும்!’
என்று உறுதியோடு அங்கேயே அமைதியாக நின்றவர்கள் பார்த்துவிட்டு கணவனையும் அவள் முறைத்து பார்க்கவும்….
“என்னடி லுக்கு சட்டமா பாக்குற இது என் வீடு …. நீ வேனா வெளிய போ யாரு வேண்டான்னா ….’
என்ற மாணிக்கத்தின் கூற்றை கேட்டு மங்கலம் கோபித்துக் கொண்டவள் போல அங்கிருந்து வேகமாக எழுந்து, அங்கிருந்த ஒரு அறைக்கு அந்த வக்கீலை அவ அழைத்துச் செல்லவும்…. அவரும் அவளுக்குப் பின்னாலேயே சென்றார்…. அதைப் பார்த்த பேச்சி, அவள் மார்பிலே அடித்துக்கொண்டு,
“அய்யய்யோ…! நம்ம கண்ணு முன்னாடியே இன்னொருத்தனோட தனியா அறைக்குள்ள போறாளே…”
என்று புலம்பவும்….உடனே ,மாணிக்கம் குறுக்கிட்டு,
“அம்மா, பேசாம இருங்க…! அவ அப்படிப்பட்டவ இல்ல…. என்ன ஏதுன்னு பாப்போம்… இதுல கண்டிப்பா ஏதாவது ரகசியம் இருக்கும்…!”
என்று தன் மனைதையும் அம்மாவையும் சமாதானப்படுத்தின மாணிக்கம்! ஒரு பூனை போல மெல்லப் பதுங்கி அந்த அறையை நோக்கி முன்னேறிச் செல்லவும்…, அவனை பின் தொடர்ந்த அவனின் அம்மா, அப்பா மற்றும் மங்கலத்தின் அம்மா மூவருமாக எலிகளைப் போல கூட்டாளிகளாக அவனுக்கு பின்னாலேயே வர ….
ஆனால், அங்கே புலிகளைப் போலக் காவல் நின்ற மங்கலத்தின் மகன் மற்றும் மகளோ, அவர்கள் யாவருமாக அந்த அறைக்கு வெளியே வந்து சேரவும் …. அவர்களை அந்த அறைக்குள்ளாக நுழைய விடாமல் தடுத்துத் தடுத்து வெளியே நிறுத்தினார்கள்….!
இதனால் அந்த அறைக்குள்ளாக என்ன நடக்கிறது…?, என்று அறிந்துக் கொள்ள விளைந்து, உள்ளே செல்ல முடியாமல், வெளியே நின்றபடியே, எட்டி எட்டி உற்று அந்த கூட்டாளிகள் அங்கே நடபப்தை பார்க்க…..
💒மறுமணாகும்..
♥️அங்கே என்ன தெரிகிறது🤣🤣 …?
அபிராமி அபிராமி… ன்னு லட்டு வாங்க போறாங்களா…? பார்ப்போம் காய்ஸ்….
1 comment
ஆமா லட்டு க்காக வெயிட்டிங் போல மாணிக்கம் மற்றும் அவன் குடும்பம் மங்கலம் அபிராமியாக என்ன லட்டு குடுப்பா பாப்போம் 😆😆