அத்தியாயம-11-
மிக்சர் மாமனார் , பசியில் மயங்கி வழியும் குரலில் பாவமாக மங்கலத்திடம் வந்து புலம்பி,
“அம்மாடி மருமவளே… உங்க வீட்டு துணிய துவைச்சு…. துவைச்சு… மயக்க கிரக்கமா இருக்குமா….! , காலையிலயே உங்க வீட்ல சாப்பாடு கிடைக்கும்னு சொல்லி இந்த பேச்சி என்னை இழுத்து வந்துட்டா…. காலையிலதான் சாப்பாடு கிடைக்கல, மதியமாவது சாப்பாடு போடு தாயே… அம்மா தாயே…!”
என்று கெஞ்சவும்…. இதை, அருகில் இருந்து பார்த்த வேலனோ தன் மைண்ட் வாய்ஸில்,
‘அய்ய….! ஊருல தாத்தா பெரிய ஆளுன்னு சொன்னாங்க… ஆனா இப்போ ஒரு பெக்கர் மாதிரி வந்து, ‘அம்மா….! தாயே …! சாப்பாடு போடுங்க’ன்னு கெஞ்சுறாரே…!’
என்று நினைத்துச் சிரித்துக் கொண்டான்…. ஆனால் , மங்கலத்திற்கோ இவர்களின் கடந்த காலக் கொடுமைகள் நினைவுக்கு வந்தாலும்,
“பாவம்… சொந்தங்க எல்லோருமா கொலப்பட்டினி! கிடக்கிறாங்க…., காலையில வந்ததுக மதியம் வரையிலுமே யாரும் ஒன்னும் சாப்பிடலயே…!”
என்று ஒரு சின்ன இரக்கம்! தோன்றியது … அதன் விளைவாக, மாமானாரை மட்டுமல்லாமல் பஞ்சாயத்துக்காக வந்திருந்த இரண்டு வீட்டு சொந்தகளையும் சேரத்தே பார்த்து ,
”சரி, சரி… மாணிக்கம் சமைச்சு வச்சிருக்கான்….. போய் அத சாப்பிடுங்க….. ஆனா…. எல்லாருக்குமா ஒன்னு சொல்லிடுறேன்… சாப்பிட்டு முடிச்சதும் கையோடு, கொலு பொம்மை மாதுரி இந்த மாடிப்படியில வந்து நின்னு போஸ் கொடுக்க வந்திரணும், சரியா…?”
என்றுவிட்டு, போலீஸ் எண்ணையும் கைப்பேசியில் காட்டி மங்கலம் அவர்கள் எல்லோரையுமாக மிரட்டவும்…..!!!, அடி வாங்கிய கலைப்பிலும், பசி மயக்கத்திலும் இருந்த அந்த கூட்டத்தினர்…, அடுத்தது என்ன செய்யலாம்…?, என்று யோசிக்கக் கூடத் தெம்பில்லாமல் உடனே சாப்பாட்டை நோக்கி ஓடியதுகள்…! தங்கள் தட்டுகளில் தாங்களே வாரி, ஆக்கி வைத்த சுட …சுட….!!!, உணவை இறைத்துக் கொண்டு,
“எனக்கு… எனக்கு…”
என்றவாறே, அடித்து பிடித்து பஞ்சத்தில் அடிப்பட்ட பரதேசிகள் போலவும், சாப்பாட்டையே இதுவரை கண்ணில் கண்டிராதது போலவும் , பசியின் உச்சத்தில் கிடைத்ததை அப்படியே வாயினுள் வாரித் திணித்தனர்….
”பொறுங்கடா… பொறுமையா இருங்க…! சமைச்சதே நான்தானே….? , நான்தான் முதல்ல சாப்பிடுவேன்…!”
என்று மாணிக்கம் குரல் கொடுக்க,
”அடப் போடா…! சாப்பாடுன்னு வந்துட்டா ….என் பேச்ச நானே கேட்க மாட்டேன்…. இதுல என் வவுறு தான் கேட்குமா என்ன…?, போவியா… ??, ஏற்கனவே, என் வவுறு வேற சாப்பாடு… சாப்பாடு..ன்னு கூப்பாடு போடுது…!”
என்றுவிட்டு, பஞ்சாயத்துக்கு வந்த சொந்தங்கள் யாவும் அவனைத் தள்ளிவிட்டு, உணவு பாத்திரத்திலே உணவு இன்னும் கிடைக்குமா…?, என்று வாரிக் குடைந்து துலாவினவர்கள், அப்படியே…, அடித்துப்பிடித்துச் சாப்பிடுவதையும் பார்க்கும் மங்கலபாட்ஷா!சோபாவில் பாட்ஷா படத்தில் ரஜினி அமர்ந்திருப்பது போலவே அவளும் கம்பிரமாக அமர்ந்து, ரஜினியை போலவே ஸ்டைலான ஒரு சிரிப்பை வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தாள்…. அப்படியே, அந்த படத்தில் ரஜினி கூடவே நிற்க்கும் கார்ட்ஸ் போலவே அவள் பக்கத்திலே நின்றிருந்த அவளின் குழந்தைகளுமே அதை வேடிக்கைப் பார்த்து சிரிக்கவும்….. அப்போது , வேலன் மட்டும் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு ,
“அம்மா… எங்களுக்கும் பசிக்குது…, ஆன்லைன்ல ஏதாவது ஆர்டர் போடுறியா…?”
“ஏய்! அடி வாங்குவ… உங்கப்பா சமைச்சதுல உங்களுக்குன்னு தனியா ஒதுக்கி ஒரு பாத்திரத்துல எடுத்து வச்சிருக்கேன்…, ஒழுங்கா அதைத்தான் சாப்பிடணும்….! ஆமா…. சும்மா… சும்மா… ஆன்லைன்ல ஆர்டர் போடுவேன்ன்னு நினைச்சீடியா வேலன்…?”
”போம்மா மங்கலபாட்ஷா…!”
என்று தாய்மையோடும் கண்டித்தவளிடம், வேலன் செல்லமாகச் இப்படி சிணுங்கவும்…..
“அடி வாங்குவ….! நான் மங்கலஜாக்கிஜானும் கூட தெரியும்தானே…? ஒழுங்கா … அந்த ஆளு சமைச்சத மிச்சம் வைக்காம சாப்பிடணும், போங்க..!”
என்றுவிட்டு , தன் பிள்ளைகளுக்காக மறைத்து வைத்திருந்த அந்த உணவு பாத்திரத்தை தனது ஆள் காட்டி விரலால் சுட்டி காட்டினாள் மங்கலம்…. உடனே, பிள்ளைகளோ,
‘மாட்டோம்..!’
என்பதைப் போல முகத்தை சிலுப்பி வைத்துக் கொள்ள,
” அந்த ‘பாட்ஷா!’ மட்டுமில்ல… இந்த ‘மங்கலபாட்ஷா!’வுமே சளைத்தவள் அல்ல…!, நான் ஒரு தடவை சொன்னா…., நூறு தடவை சொன்ன மாதிரி….!”
என்று அந்த அறை அதிர உரக்கச் சிரித்தப்படியே, ரஜினி ஸ்டைலில் சொன்னவள்…. அப்படியே, தன் கூலிங் கிளாஸை சுழற்றி ரஜினியை போலவே ஸ்டைலாக மங்கலம் மாட்டவும்…! அப்படியே, கண்ணாடியை லேசாகக் கீழே இறக்கி, ஒரே புருவத்தை உயர்த்தி கண்ணடித்தும் சிரிப்பை உதிர்த்தவள்… !, சண்டையில் கலைந்த தன் கூந்தலையுமே ரஜினியைப் போலவே ஸ்டைலாக பின்னுக்குத் தள்ளி நீவி விடவும்….
இதை நமுட்டுச் சிரிப்புடன் பார்த்த சாருலதா, தன் அண்ணன் வேலனைப் பார்த்து,
“ப்ரோ… இதிலிருந்து என்ன தெரியுது…?”
“ஆஹான்… ம்ம்ம்… அம்மா ரஜினி, ஜாக்கிசான் ஃபேன்னு தெரியுது…! , வாடி பேசாம போய் சாப்பிடலாம்… இல்லன்னா நம்மளயும் சேத்து டின் கட்டிடுவா…!”
”ஏய் வேலன்….! மரியாத… மரியாத…! ”
என்றுவிட்டு, தன் விரலை நீட்டி எச்சரித்த மங்கலம், அப்படியே முகத்திற்கு நேரே தன் காலை நீட்டி, கால் மேல் கால் போட்டுக் கம்பீரமாக அமர்ந்தாள்…. அதை பார்க்கவும் வேலன்,
”ஆத்தி! அம்மா ‘நிலாம்பரி’ ஃபேன்-னாவும் இருப்பாங்களோ…? வா தங்கச்சி, ஓடிடலாம்…!”
“அப்படியே ரெண்டு பேருமா …. எனக்கும் ஒரு தட்டுல சாப்பாடு எடுத்து வச்சு கொண்டு வாங்க …. நானும் என் ஆளு சமமைச்ச சாப்பாட்டை சாப்பிட்டு பாக்கனும்…”
என்று அதிகாரத் தோரணையோடு கொஞ்சலாக சொன்னவளை பார்த்து, பயந்துபோய் குழந்தைகள் அடித்துப்பிடித்துச் சாப்பாட்டை நோக்கி ஓட்டம் பிடிக்க…. அங்கே தட்டுகளில் பரிமாறப்பட்ட அந்த உணவின் வாசனையே அந்த ஹால் முழுவதும் தூக்கியது…! நெய் மணக்கும் சூடான சாதம், நாவில் கரையும் மட்டன் குழம்பு, மணக்கும் மீன் வறுவல் என்று களைகட்டியது….. அப்படி ரசித்து ரசித்து மாணிக்கம் சமைத்து வைத்திருக்கவும்….பசியில் இருந்த சொந்தங்கள்,
“ஐயோ… இது என்னடா செம்ம வாசனையே தூக்குதே….!”
என்று ஆச்சரியத்துடனே அந்த உணவை ஒரு வாய் எடுத்து வாயில் போட்டவர்கள்…. எல்லோருமே அவ்வளவுதான்! அந்த ருசி நாவில் பட்ட அடுத்த விநாடி, அத்தனை பேரின் கண்களும் சொக்கிப்போயின…..!.ஆனால், ரசித்துச் சாப்பிடலாம் என்றால்… அங்கே திடீரென என்ட்ரி கொடுக்கிறாள் மங்கலபாட்ஷா…!, கையில் ஒரு கடிகாரத்தை நீட்டி,
“என்ன சொந்தங்களே… சாப்பாடு ருசியா இருக்குதா…? நல்லா ரசிச்சு ருசிச்சே சாப்பிடுங்க தப்பில்ல…, ஆனா… சாப்பாடு தொண்டைக்குழிக்குள்ளாக அறக்க பறக்க உள்ளே இறங்கணும்…! ஏன்னா இன்னும் அஞ்சு நிமிஷத்துல எல்லாரும் போய் அந்த படியில கொலு பொம்மையா நிக்கணும், சொல்லிட்டேன்….!”
என்று கெத்தாக ஹிட்லரை! போலவே மிரட்டினாள்…. கூட்டத்தினருக்கோ அந்த சுவையான சாப்பாடு அவ்வளவு ருசியாக நாவில் கரையவும்… ரசித்துச் சாப்பிடக் மனசு ஆசைப்படுகிறது…., ஆனால் ஹிட்லர்! மங்கலத்தின் பார்வையோ சுட…! அடி வாங்கிய பயத்தோடே சேர்த்து, நேரத்தையும் காட்டி அவ விரட்டுவதால் உணவை உண்ணும் கைகள் அதிவேகமாக சாப்பிடும் வேலையை சிறப்பாக செய்கின்றன….
“அம்மா… இந்தாங்க உங்களுக்கு சாப்பாடு…”
என்றப்படி, ஒருத் தட்டை வேலன் நீட்டவும் , சாப்பாடு எப்படி இருக்கு என அவ விசாரிக்க…. இரண்டு குழந்தைகளுமாக சேர்ந்தே,
“சாப்பாடு செம டேஸ்ட்…! இன்னும் கொஞ்சம் போட்டு சாப்பிட்டிக்கலாமா…?!”
“ம்ம்ம் சாப்பிடுங்க….”
” சரிங்க மம்மி …. இப்படியே தினம் இந்த மாதுரி சாப்பாடே வேணும்…”
” அப்போ… சரிதான்…. உங்கப்பாவையே தினம் சமைக்க சொல்லிட்டா போச்சு….”
என்றுவிட்டு, மங்கலம் வில்லி சிரிப்பு சிரித்துக்கொண்டே பிள்ளைகளிடம் கூறினாள்….அவ்வளவுதான்! அந்த வார்த்தையைக் கேட்டதும், தட்டின் கடைசிப் பிட்டு உணவை அவசரமாய் வாயில் போட்டுக் கொண்டிருந்த மாணிக்கத்திற்கு ‘பொரையேறி’த் தொண்டை அடைத்துக் கொள்ள…!
”ஹோம்… ஹோம்… உஃப்… உஃப்…”
என்று இருமிக்கொண்டே, தன் நெஞ்சைத் தட்டிக்கொண்டவன் அப்படியே, மூச்சு முட்டுவது போல செய்யவும் … அவன் படும் பாட்டைப் பார்த்தவள்,
“போதும் இந்த சிவாஜி! படம் ஓட்டியதெல்லாம்…”
‘அடிப்பாவி …. ஆமா நான் சிவாஜி இவ ராதா அப்படியே,’ நீ தானா அந்த குயில் …. கூ..கூ….க்க்க்கூகூகூ!’..ன்னு, இங்க முதல்மரியாதை படத்தை ஓட்டிட்டாலும்…. ‘
என்று மைண்ட் வாய்ஸில் நினைத்து கொண்டே , விழி பிதுங்க தொண்டையை செறுமும் கணவனை பார்க்கவும் …. முறைத்துக் கொண்டே தண்ணியை நீட்டியவளிடம், அதைப் பெற்றுக் கொண்டு , மடமடவென்று குடித்துவிட்டு இருமலைச் சமாளித்த மாணிக்கம்., பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு ,
“ஐயோ சாமி எனக்கும் வயசாகிடுச்சு… நான் டெய்லி சமைக்க முடியாது…!, அப்புடி டெய்லி சமைக்கிற வேலைய மட்டும் என் தலையில கட்டி வச்சிராதீங்க… அதுமட்டுமல்ல டெய்லி இப்படி டேஸ்டா பொறுமையா என்னாலயுமே சமைக்க முடியாது….”
“அப்படி வா வழிக்கு….”
என்ற மங்கலத்திடம் , முதல்மரியாதை பட சிவாஜியை போலவே கண்ணாலேயே காதலையும் பரிமாறி ‘ஆளை விடும்மா…’. என்பது போல கெஞ்சவும்….,
” அதுசரி அந்த படத்துல சிவாஜிக்கும் ராதாவுக்கும் எத்தனை வயசு வித்தியாசமோ அத்தனை வயசு வித்தியாசம் தானே நமக்கும்…”
💒மறுமணாகும்…
🤔ஆகா அடுத்து ஏஜ் கேப் பிரச்சனை. வேறயா ???
1 comment
Mangalam mattram nice Rajini fan da moment nice funny series nice we want next episode