அத்தியாயம்-20
மங்கலம் மாணிக்கத்திடம் இருந்து விவாகரத்து கோரி நீதிபதியிடம் தயவுகூர்ந்து கெஞ்சவும் நீதிபதியோ ,
“இல்லம்மா… நீங்க ஒருமுறை மாணிக்கத்தின் கூட கவுன்சிலிங் சென்று மனம் விட்டு பேசி பாருங்க…”
என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பப் பார்க்கிறார்…. இந்தச் சமயத்தில் மங்கலம் நீதிபதியிடம் பல்பு வாங்கியதாக கருதிக்கொண்டு, மேலும் அவளுக்கு இடைஞ்சுறு! விளைவிக்கலாம் என்ற மனப்பான்மையில், மாணிக்கம் தன் கடைசித் தந்திரத்தையும் கையில் எடுக்கிறவன்…. டக்கென்று குறுக்கிட்டு,
“ஐயா …. இந்த குழந்தைகள…. அவங்க தாயிடமே விட்டுவிடுங்க…!”
என்று கோர்ட்டில் ஜட்ஜிடம் சென்டிமென்டாகக் கெஞ்சவும்…. உடனே நீதிபதி நேரடியாகக் குழந்தைகளிடமே அவர்களின் விருப்பத்தை இம்முறையும் கேட்கிறார்…. ஆனால், அங்கேதான் செம ட்விஸ்ட்! காத்திருக்கு என்று மாணிக்கம் அறியாதிருக்கவும்..! , வழக்கமாய் அம்மா பின்னாடி ஓடும் அவனின் குழந்தைகளான வேலனும் சாருலதாவும், இந்த முறை அப்பாவைக் கட்டிக்கொண்டு,
“நாங்க அம்மாவோட போக மாட்டோம்… அப்பாகிட்டதான் இருப்போம்…!“
என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்…. குழந்தைகளின் இந்த அதிரடி முடிவைக் கேட்டதும் நீதிபதியே ஒருகணம்! அதிர்ச்சிக்குள்ளாகவும்…. பிறகு தன் மூக்குக் கண்ணாடியை தூக்கிச் சரிச் செய்தப்படியே குழந்தைகளை கூர்ந்து கவனித்துவிட்டு , அதுகளின் சூட்சும புத்தியை உணர்ந்து புரிந்துக் கொண்டவராக நீதிபதியும் இறுதியான தீர்ப்பை அதுகளுக்கு சாதகமாகவே வழங்குகிறவர்…,
“குழந்தைகளின் விருப்பப்படி, பிள்ளைகள் மாணிக்கத்தின் வசமே இருக்கட்டும்…!”
என்று உத்தரவிட்டு வழக்கை முடிக்கவும்…. அந்த நீதிபதியின் அறிவுறுத்தலின்படி, கோர்ட் வளாகத்திலேயே இதற்காகத் தனி அறைகள் இருக்கும்…. அந்தக் கவுன்சிலிங் அறைக்குள்ளாக மங்கலமும் மாணிக்கமும் மட்டுமே தனியாக அனுப்பப்படுகிறார்கள்….. அங்கே அவர்களுக்குச் சமரசம் பேசுவதற்காகவும் ஒரு பெண் வக்கீல் அமர்ந்திருக்கிறார்…. அவளது பெயர் வாசுகி! என்று தன்னை அவள் அறிமுகப்படுத்திக் கொள்ளவும்… அப்படியே, கணவன் மனைவி அவுங்க இருவர் மட்டுமே தனியாக அங்கே உட்கார்ந்து பேசுவதற்கும் அந்த பெண் கவுன்சிலரே போதிய நேரமும் அவர்களுக்கு ஒதுக்கிக் கொடுத்தார்…..
ஆனால் அந்த சமயமுமே மாணிக்கத்தின் ஈகோ துளிக்கூடக் குறையவில்லை….! , அப்படியே மங்கலத்திடம் ஒரு சின்ன சாரி! கேட்பதற்குக் கூட அவன் தயாராக இல்லை….. அதுமட்டுமில்லாமல், சமரசம் பேச வந்த அந்தப் பெண் வக்கீலையும் மதிக்காமல் அலட்சியமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு மாணிக்கம் உட்கார்ந்திருக்கவும்….
மறுபக்கம் மங்கலமோ, அந்தப் பெண் வக்கீலிடம் மிகவும் மரியாதையாகவும் ,
“வாசுகி மேடம்…!!!”
என்றுவிட்டு , அப்படியே தனது தரப்பு நியாயங்களை தெளிவாகவும் எடுத்துச் சொல்கிறாள்….. அப்படியே, ஓரக்கண்ணீல் மாணிக்கத்தின் இந்தத் திமிரான போக்கையும் தன் கண்களிலே ஏற இறங்க அளவெடுத்து பார்த்த அந்த கவுன்சிலிங் பெண் வாசுகி,
‘இவர்களை ஒரே சிட்டிங்கில் வழிக்கு கொண்டு வரவே முடியாது போலயே…!’
என்பதைப் புரிந்துகொண்டு,
“சரி, மங்கலம் அவசரப்பட வேணாம்…. இன்னும் கொஞ்சம் யோசிச்சு பாத்துட்டு வாங்க…..”
என்று அன்றைய தினம் கணவன் மனைவிக்குள்ளாக பேசியதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை …. என வழக்கை அடுத்த தேதிக்குத் தள்ளி வைத்து (வாய்தா கொடுத்து) இருவரையும் வாசுகி வெளியே அனுப்பிவிடவும்…..கவுன்சிலிங் முடிந்து வெளியே வந்தவர்களில். மாணிக்கத்திற்கு மட்டுமாக அங்கே இன்னொரு பகீர்! காட்சி காத்திருக்கிறது!….
கவுன்சிலிங் அறையில் வக்கீல்களோ அல்லது மற்ற குடும்ப உறுப்பினர்களோ உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால், அதுவரை வெளியே நின்றிருந்த மாணிக்கத்தின் பிள்ளைகள் இருவரும், மங்கலத்தின் பாஸும் புதிய பாய் ஃப்ரெண்டுமான நந்தா தமிழுடன் சேர்ந்துக் கொண்டு, விழுந்து விழுந்து கலகலவெனச் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கவும்…!, அதைப் பார்த்ததுமே மாணிக்கத்தின் ரத்தம் கொதிக்கிறது…. ஆகையால், ஆத்திரத்தோடு பசங்களிடம் பாய்ந்து,
”இங்க என்னடா சிரிப்பு கெக்க புக்கன்னு… ச்ச்ச்சீ, வாயை மூடுங்க..!, கண்டவனோட அவ போகலாம்…, நீங்க போய் அவன்கிட்ட சிரிச்சு பேசலாமா தப்புல்ல…?”
என்று கடுமையாக மாணிக்கம் பிள்ளைகளை கண்டிக்கும் விதமாக வசைப்பாடியபடியே மங்கலத்தையும் அவதூறு பேசவும்….. ஆனால், இப்போது இருப்பதோ பழைய பயந்தாங்கொள்ளிப் பிள்ளைகள் கிடையாதே….! , அப்பாவுக்கு எதிராகக் கை ஓங்கவும், எதிர்த்துப் பேசவும் கற்றுக்கொண்ட அடங்காத பசங்களாயிற்றே….! ஆகையால் , அப்பாவின் பேச்சைக் கேட்டதும் பிள்ளைகள் கொஞ்சமும் அசராமல், நேருக்கு நேர் நின்று பதிலடி கொடுக்கிறவர்கள்,
”டாடி… நீங்கதானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஜட்ஜ்கிட்ட எங்களை அம்மா கூட அனுப்ப சொன்னீங்க….?, ஒருவேளை நாங்க அம்மா கூட போயிருந்தா…., இந்த பாஸ் கூடத்தானே நாங்களும் பேசிட்டு, அவர் கூடவே இருந்திருப்போம்….?, அப்போ நீங்க பண்ணது மட்டும் அது நியாயமா…? இப்போ மட்டும் இது தப்புன்னு ஏன் பேச வந்திருக்கீங்க….?”
என்று மாணிக்கத்தின் முகத்தில் அடித்தாற்போல் கேள்வி கேட்கவும்…!, வாயடைத்துப் போனவனாக அவமானத்தில் தலையை குனிந்தவாறு, ஒரு வார்த்தை கூடப் பேச முடியாமல் கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டும், அப்படியே தன் பிள்ளைகளை இழுத்துக்கொண்டும் அங்கிருந்து வேகமாகவும் வெளியேறுகிறான் மாணிக்கம்…!, அதை சிரித்த முகத்துடனே நந்தாவுடன் நின்றப்படியே பார்க்கும் மங்கலமோ,
‘ இது வெறும் ட்ரைலர் தான் மாமே…. நீ இன்னும் மெயின் பிக்சர் பாக்கலையே…. பார்த்திடாதா தாங்க மாட்ட….’
என்று நக்கலாக அவள் மனதுக்குள் மங்கலம் நினைத்துக் கொள்ளவும்….பின்னர் அவளுமே அந்த நிதிமன்றத்திலிருந்து நந்தாவுடன் அங்கிருந்து கிளம்பி வெளியேறுகிறாள்….
வாய்தாவுக்காக அதே நீதிமன்றத்திற்கு கணவன் மனைவி அவர்கள் இரண்டு பேருமே வர வேண்டிய அந்த நாளும் வர…!!!,
அன்று கோர்ட் வாய்தா நாள்! சட்டம் தெரிந்து கொண்ட தெம்பில் மாணிக்கம்,
‘ இன்னைக்கு பசங்க தொல்லை இல்லாம சிங்கிள்! சிங்கமா போய்…. அங்கே கெத்தா நின்னு மங்கலத்த சமாளிச்சுட்டு வருவோம்…!’
என்று முடிவெடுத்து, தன் சட்டை காலரை தூக்கிவிட்டுத் கெத்தாக தனி ஒருவனாகக் கிளம்பி ரெடியாகியவன் அவனது அறைக் கதவைத் திறக்கும்போதே வேலனும் சாருவும் ஸ்கூல் பேக் மாதிரி சின்னப் பைகளை மாட்டிக்கொண்டு வாசலிலேயே வழிமறித்து நிற்கிறவர்கள்…!,
“டாடி… நாங்களும் உங்க கூட கோர்ட்டுக்கு வருவோம்…! , எங்களை விட்டுட்டு போகாதீங்க…!“
என்று ஒரேடியாய் அடம் பிடிக்க ஆரம்பிக்கவும்…. மாணிக்கத்திற்குத் தலைசுற்றுகிறது….. கடுப்பாகி அவர்களைப் பார்த்துக் கத்தி,
”ஏய்! உங்கள நீதிபதி கூப்பிட்டா மட்டும்தான் கோர்ட்டுக்கு கூட்டிட்டு போகணும்…. சும்மா …. சும்மா… உங்கள அங்க கூட்டிப்போக அது என்ன உங்களுக்கு பார்க்கா!..?, பீச்சா!..?, இல்லை சினிமா தியேட்டரா…?, சும்மா வண்டியில ஏறி வர்றதுக்கு….! , ஒழுங்கா மரியாதையா வீட்ல கடங்க ரெண்டு பேருமா….!”
இதை சொன்னதும்…. பிள்ளைகள் வக்கீலை போல தங்களின் கைகளைக் கட்டிக்கொண்டு அப்பாவையே குறுக்கு விசாரணை செய்யத் தொடங்கவும்…
“ஏன் டாடி…? , போன தடவை நாங்க வந்தோம்தானே… இப்போ மட்டும் எதுக்கு நாங்க வரக்கூடாது சொல்றீங்க…?”
அதுக்காக மாணிக்கமும் ரொம்பப் பெரிய சட்ட நிபுணர்! போல மூஞ்சியை வைத்துக்கொண்டு பதில் சொல்கிறவன்,
”அதுவா பசங்களா… அப்போ உங்க விசாரனை தேவைப்பட்டது … இன்னைக்கோ கோர்ட்ல எங்களுக்குள்ள ஏதாவது பெரிய சண்டை வந்துட்டா…., அதை பாத்து குழந்தைகளாகிய உங்களோட மனநலம் கெட்டு போயிடும்னு நினைச்சுதான் நீதிமன்றம் இன்னைக்கு உங்கள அங்கே அனுமதிக்கல….! போதுமா புரிஞ்சுதா வழிய விடுங்க….?”
அப்படியாக அப்பா சொன்ன இந்த மனநலன்! என்கிற விளக்கத்தைக் கேட்டதும்…, வேலனும் சாருவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சத்தமாக நக்கலாய்ச் சிரிக்கிறவர்கள்,
” ம்க்கும்… தினம்…. தினம்… இந்த வீட்ல நீங்களும் அம்மாவும் போடாத புது சண்டையாவா அங்க கோர்ட்ல போட போறீங்க…? , இதையெல்லாம் பாத்து… பாத்து… எங்களுக்கு பழகி போச்சு டா…டி! இனிமே கெடுறதுக்கு எங்க மனநலத்துல ஒண்ணுமே இல்ல…!”
என்று மாணிகத்தின் மூஞ்சியில் அடித்தாற்போல் பிள்ளைகள் போட்டு உடைக்கவும்…!,
மாணிக்கத்திற்கு அவர்களை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேச பேச்சு வரவில்லை…..மாறாக,
‘சரிதான்… இவங்க சொல்றதும் உண்மைதானே!’
என்று தனக்குள்ளேயே நொந்து கொண்டு ஒரு நீண்ட பெருமூச்சை விடுகிறவன், அடுத்த நொடியே தன் மூளையைக் கறந்து ஒரு மாஸ்டர் பிளான்! ஒன்றைப் போட்டு…!, பசங்களைப் பார்த்து நக்கலான ஒரு சிரிப்போடு வளைந்து கொடுக்காமல் அதுகளை வம்பிழுத்து,
” ஓ…. அப்படியா விஷயம்…? , சரி… சரி… ஒத்துக்கறேன்…! , கோர்ட்டுக்கு வர்றேன்னு இவ்ளோ அடம் பிடிக்கிறீங்களே… இந்த சாக்குல உங்க மம்மியையும், அவளோட அந்த பாய் ஃப்ரெண்டையும் நேரடியா போய் பாத்துட்டு வரலாம்னு ஆசையா இருக்குதுல்ல உங்களுக்கு…?, அதானே மேட்டரு… இப்புடி ஒத்த காலுல நிற்கிறீங்களே உண்மைய சொல்லுங்க அதுக்கு தானே…….?”
என்று அப்பா சீண்டிக் கேட்கவும்…. பசங்கள் என்ன அசரக்கூடிய ரகமா…?, டக்கென்று முகம் சுழித்து,
”ச்சே ச்சே… நாங்கெல்லாம் அம்மாவ பார்க்கவா ஆசைப்பட போறோம்…?, அதெல்லாம் ஒண்ணுமில்ல…!”
என்று உடனடியாக மறுக்கிறவர்களிடம்,
உடனே மாணிக்கமும் பாயிண்டைப் பிடித்து ஒரு செக் வைத்து,
” ஓ… அப்படியா…?, அப்போ உண்மையிலேயே உங்கம்மாவ பார்க்கணும்னு உங்க மனசுல கொஞ்சம்கூட ஆசையே இல்லையா…?, சொல்லுங்க பாப்போம்…!”
என்று அவன் பேசவும் பசங்களும் யோசிக்கிறவர்கள்,
“இல்லையே… உண்மையா … நிஜமா … நாங்க மம்மிய பார்க்க விரும்பியதில்லயே… !”
என்று தலையை இல்லை! என்பது போல, அசைத்துக் கொண்டே பிள்ளைகள் மறுத்து பேசவும்…..
”ஹாஹாஹா…! அப்படி வாங்க வழிக்கு…. அப்போ நீங்க என் கூட வரதுல என்ன பயன் இருக்கு உங்களுக்கு….? , நீங்கதான் அம்மாவை பாக்கவே விரும்பலன்னு சொல்லிட்டீங்களே…!, அப்புறம் என்னத்துக்கு கோர்ட்டுக்கு நீங்க வரணும்…?, உங்க பேச்சு உண்மைன்னா…, வீட்லயே பத்திரமா உட்கார்ந்து விளையாண்டுட்டு கடங்க ரெண்டு பேருமா சரியா…!”
என்றுவிட்டு, மாணிக்கம் தன் வாதத்தில் ஜெயித்துவிட்டதாக கருதிக்கொண்டு, மார்பை நிமிர்த்தி…. கெத்தாகக் அங்கிருந்து கிளம்பப் பார்க்கிறான்…. ஆனால் , அப்படியாக அப்பா தன்னை மடக்கிவிட்டதாக நினைத்து பசங்களோ கொஞ்சமும் கலங்காமல், ரொம்ப கூலாக ஒரு லுக்கு ஒன்றை அப்பாவைப் பார்த்து விட்டப்படியே,
”சரி போங்க டாடி… நாங்க வீட்லயே இருக்கோம்…!”
என்று ஒரே வரியில் சொல்லிவிட்டு பிள்ளைகள் நழுவவும்….. அவனும் நீதிமன்றத்தை நோக்கி சிங்கம் சிங்கிளாய் போய்விட… அப்படியாக பிள்ளைகள் அவர்களும் அங்கே வீட்டில் தனியாக சும்மா ஒன்றும் இருக்கவில்லை…!, அப்பா கிளம்பிப் போனதும், உடனே செல்போனை எடுத்து ஆன்லைனில் தங்களுக்குப் பிடித்த பீட்சா!, பர்கர்! மற்றும் ஐஸ்கிரீம்! என்று பார்த்துப் பார்த்து ஆர்டர் போட்டுவிட்டு, ஒருத்தி டிவி ரிமோட்டைப் பிடித்து கார்ட்டூன் போட, இன்னொருத்தனோ சோபாவில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து செல்பேசியில் கேம் விளையாடத் தொடங்கி விடுகிறான்…!
💒மறுமணமாகும்…
🤔மங்கலத்திற்கு டைவர்ஸ் குடுத்திடுவோமா…?, உங்கள் விமர்சனத்தை இங்கே பதிவிடவும் அல்லது எனக்கு தனிப்பட்டு என் Facebook messenger பதிவிடவும் ப்ளிஸ் உங்கள் ஆதரவு எனக்கு ஊக்கமாக இருக்கும்🙏💛♥️🙏😇பட்டூஸ்