• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 52

Joined
Jan 15, 2026
Messages
105
விவாதக் காதல் - 52

அடுத்து வந்த இரண்டு நாட்களும் கொடிவீரன் இதேபோல தன் மனைவியை கடைக்கு அழைத்துச் செல்வதும், வீட்டுக்கு அழைத்து வருவதுமாக இருந்தான்.

ஊரில் இருந்து அவர்களுக்கு தேவையான பொருட்கள் சிலவற்றை ஜெயா கேட்க, அன்றைய தினம் மாலை நேரம் கொடிவீரனும் மகிழினியும் துணி கடைக்கு சென்றனர்

“நான் சசி அக்காவுக்கு சேரி எடுக்குறேன். நீங்க உங்க மாமாவுக்கு டிரஸ் எடுத்துடுங்க.”

“அதெல்லாம் முடியாது. நான்தான் என் அக்காவுக்கும் உங்களுக்கும் டிரஸ் எடுப்பேன்.”

“எனக்கா? எனக்கு ஏன்?”

“என்னங்க நீங்க. சண்டே உங்களுக்கும் தான் பங்க்ஷன்.”

“அதுக்கு ஏன் புதுப்புடவை?”

“அப்போ மாடர்ன் டிரஸ் போட போறிங்களா?” கொஞ்சம் கிண்டலாக கேட்டான்.

“எனக்கு அதெல்லாம் போட்டு பழக்கம் இல்ல.” என்று முறைக்க,

“ம்... பழக்கம் இல்லையா? இல்ல பிடிக்காதா?”

“உண்மையை சொல்லனும்னா எனக்கு சின்ன வயசுல சுடிதார் போடணும்னு ஆசை. ஆனா, இந்த பாட்டி தான் பாவாடை தாவணி, புடவன்னு ரெண்ட தவிர வேற எதையும் போட விடமாட்டாங்க. எப்போவாது நயிட்டி போட்டா கூட திட்டுவாங்க.”

“ம்... அப்போ நீங்க பங்க்ஷன்கு சாரீயும் இன்னும் ரெண்டு, மூணு சுடிதாரும் எடுத்துக்கோங்க. நம்ம நாளைக்கு ஊருக்குப் போகும்போது நீங்க சுடிதார் போட்டுக்கிட்டு வரலாம்.”

“ஐயையோ அதெல்லாம் வேணாம்” என்று சத்தமாகவே சொன்னாள் மகிழினி.

“ஏன் வேணாம். உங்களுக்கு சுடிதார் போட பிடிக்கும்னா, நீங்க அதை போட்டுக்க வேண்டியது தானே?”

“ஹ்ம் நான் மாட்டேன்பா. பாட்டி என்னை கொன்னுடும்.”

“ஏங்க நமக்கு பிடிச்ச துணியை போட மத்தவங்க சம்மதத்தை நீங்க ஏன் எதிர்பார்க்குறீங்க?”

“இல்ல வேணாமே. பாட்டி எதாவது சொல்ல போறாங்க. அதுவும் இல்லாம ஜெயா அம்மா எதாவது சொல்லிட்டா எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கும்.”

“எங்க அம்மால்லாம் எதுவும் சொல்ல மாட்டாங்க. அதுவும் உங்கள அவங்க எதுவுமே சொல்ல மாட்டாங்க.”

“இல்ல எனக்கு சங்கோஜமா இருக்கு. நான் வேணும்னா ஒரு சேரி மட்டும் எடுத்துக்குறேன்.”

“ப்ச்... இங்க பாருங்க சிஎம். உங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்குதுன்னா அதை சந்தோசமா பண்ணுங்க. அவங்க அதை சொல்லுவாங்க. இத சொல்லுவாங்கன்னு எல்லாம் நீங்களா இமாஜின் பண்ணிக்காதிங்க. அப்படியே யாராவது எதாவது சொன்னா...” என்று நிறுத்தினான்.

“சொன்னா?” என்று இவள் கேட்க,

“நீ யாருடா என்னை சொல்லன்னு கேட்டுட்டு, நம்ம நமக்கு பிடிச்சதை பண்ண வேண்டியது தான்.”

“இல்ல நான்...”

“நீங்க இப்படி எல்லாம் சொன்னா கேட்கமாட்டீங்க நீங்க வாங்க நம்ம முதல்ல உங்களுக்கும் அக்காவுக்கும் சேரி எடுத்துட்டு அப்படியே உங்களுக்கு சுடிதார் எடுக்கலாம்” என்றவன் மகிழினியின் ஆசையை புரிந்து அவளுக்கு ஆடைகளை எடுத்து கொடுக்க.

“நீங்க ஷர்ட் பேண்ட் எடுக்கலையா?”

“ம்... எனக்கும் மாமாவுக்கும் வேஷ்டி சட்டை எடுத்தாச்சு. பில் பே பண்ணிட்டு வந்ததும் கிளம்பலாம்” என்று சில நிமிடத்தில் அங்குள்ள வேலையை முடித்து கிளம்பினார்கள்.

“நாளைக்கு காலையில மூன்று மணிக்குக் கார் எடுத்தா, வெயிலுக்கு முன்னாடி ஊருக்கு போயிடலாம். உங்களுக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் பேக்ல எடுத்து வச்சிக்கோங்க. நான் இந்த புதுத் துணியை எல்லாம் என் பையில வச்சிக்கிறேன்” என்று கொடிவீரன் சொன்னதும்,

அவன் முன் பணத்தை நீட்டிய மகிழினி, “பங்க்ஷன்கு புடவை ஜெயா அம்மா எடுத்து கொடுத்தாவே இருக்கட்டும். ஆனா, சுடிதார்கு எல்லாம் நானே பணம் கொடுத்துடுறேன் இந்தாங்க” என்றவள் கையில் இருந்த பணத்தை முறைத்து பார்த்தவன் பெருமுச்சுடன் அதை வாங்கிக்கொள்ள,

“சரி. நீங்க நேரத்தோடு படுங்க. நம்ம வேற மூன்று மணிக்குக் கிளம்பணும்னு சொன்னிங்க இல்ல. குட் நைட்” என்றவள் தன் அறைக்குள் செல்லும் முன்,

“மேடம் ஒரு நிமிஷம் இருங்க” என்றவன் அவள் கொடுத்த பணத்தை திருப்பி அவளிடமே தந்து, “இது இந்த மாசம் நான் உங்களுக்கு கொடுக்க வேண்டிய வாடகை பணம்” என்று மீண்டும் தன் சட்டை பையில் இருந்து சில நூறு ரூபாயை கையில் எடுத்து அவள் முன் நீட்டி, “இது நீங்க எனக்கு போடுற சாப்பாட்டுக்கு உண்டான காசு” என்றதும் மகிழினி அவனை பார்வையால் எரிக்க, அவனோ அவளை கண்டுகொள்ளாமல் சோபாவில் அமர்ந்து கைபேசியைப் பார்க்க ஆரம்பித்தான்.

அவன் அருகில் வந்து, “இப்போ எதுக்கு நீங்க சாப்பாட்டுக்கு எல்லாம் பணம் தரிங்க? போதாக்குறைக்கு இங்க தங்குறதுக்கு வேற பணம் தரிங்க? ஓ... அப்போ நீங்க வெறும் டெனன்ட் தானா?” என்று கோபத்தில் கேட்க,

“அப்படின்னு நீங்க நினைக்கிறதால தானே, நான் எடுத்து கொடுத்த துணிக்கு எல்லாம் கணக்கு பார்த்து பணம் தரீங்க.”

“இதுக்கும் அதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. இந்தாங்க. இந்த பணத்தை பிடிங்க. சாப்பிடுறதுக்கும், தங்கறதுக்கும் எல்லாம் பணம் தந்திங்கனா நான் செம்ம டென்சன் ஆகிடுவேன் சொல்லிட்டேன்.”

“நானா எதையும் பண்ணலைங்க. நீங்கதான் எல்லாத்தையும் பண்ண வைக்கிறிங்க” என்று சொன்னான்.

“இப்போ என்ன சொல்ல வரீங்க?”

“நான் வாங்கி கொடுத்த துணிக்கு நீங்க பணம் கொடுத்தா, நானும் இங்க சாப்பிடறதுக்கும், தூங்குறதுக்கும் பணம் தருவேன்” என்று அழுத்தமாக உரைத்தான்.

“இப்போ என்ன நீங்க எனக்கு வாங்கிக்கொடுத்த துணிக்கு நான் பணம் தந்தது உங்களுக்கு பிடிக்கல. அதானே. சரி நான் கொடுத்த பணத்தை நான் எடுத்துக்குறேன். ஆனா, இனி நீங்க இந்த மாதிரி வாடகை. சாப்பாடுன்னு கணக்கு எல்லாம் பார்த்து பணம் தராதீங்க.”

“நான் மறுபடியும் சொல்லுறேன். நானா எதையும் பண்ணல. நீங்க என்ன பண்ணுறீங்களோ அதை பொறுத்து தான் என் செயல் இருக்கும்.”

“ப்ச்... இந்தாங்க பிடிங்க மீதி பணம்.”

“ஏங்க அது என் சம்பள பணம் தான்ங்க. நீங்களே வச்சிக்கோங்க.”

“உங்க சம்பள பணம் எனக்கு எதுக்கு?”

சேத்த பணத்த சிக்கனமா

செலவு பண்ண பக்குவமா

அம்மா கையிலே கொடுத்து போடு

சின்னக் கண்ணு.

உங்க அம்மா கையிலே கொடுத்து போடு

சின்னக் கண்ணு

அவங்க ஆற நூறு ஆக்குவாங்க

செல்லக் கண்ணு🎶

என்ற பாட்டை நீங்க கேட்டது இல்ல” என்று கேட்டான்.

“கேட்டு இருக்கேன். ஆனா, இப்ப என்ன அதுக்கு?”

“இத கேட்டுட்டு தான் என் அம்மா சொன்னாங்க, இனிமே உன் பொண்டாட்டிக்கிட்ட பணத்தை கொடுத்து வையுடா. குடும்பத்தை அவ பார்த்துப்பான்னு.”

“என்ன விளையாடுறிங்களா” என்றாள் கோபத்தில்.

“இப்போ மணி 10 ஆகுது. இந்த நேரத்துல விளையாட வேண்டிய விளையாட்டு ஒண்ணே ஒன்னு தான். ஆனா, அதை விளையாட இன்னும் ஒரு வருஷம் காத்து இருக்கனும் போல” என்று தாடையைத் தடவினான்.

“என்ன பேச்சு இதெல்லாம்?”

“ஏங்க நீங்க பரமபதம் விளையாட மாட்டிங்களா?”

“என்ன பரமபதமா? நீங்க அந்த விளையாட்டை தான் சொன்னிங்களா?” அவன் மாற்றிப் பேசுவதை உணராது கேட்க,

“நான் அதை தான் சொன்னேன். நீங்க வேற எதாவது விளையாட்டை நினைச்சுகிட்டா அதுக்கும், இன்னும் ஒரு வருஷம் வெயிட் பண்ணுங்க. பிகாஸ் மாமா இப்போ ஒன்லி லவ் மூட் தான். நோ டச்சிங் ஓகே.” அவள் முறைக்க, “சரி சரி ரொம்ப நேரமெல்லாம் என்னை நம்பி இப்படி முறைச்சுகிட்டு நிக்காதீங்க. அப்புறம் பரமபதம் ஆட முடியலைன்னா கூட, கில்லி ஆட மனசு ஏங்கிடப்போகுது.”

“ம்... ஏங்கும் ஏங்கும். ஆளைப்பாரு. ரொம்ப வாய் அதிகமா ஆச்சு உங்களுக்கு. பேசாம தூங்குங்க.”

“குட் நைட் சிஎம். நீங்களும் சீக்கிரம் படுங்க காலையில 3 மணிக்கு எல்லாம் கார் எடுக்கணும்” என்று சொல்ல மகிழினி இவன் இம்சையை வெறுக்கவும் இயலாமல், ரசிக்கவும் முடியாமல் படுத்தாள்.



சொன்னது போலவே மூன்று மணியளவில் ஆடம்பரம் இல்லாத புடவையில் மகிழினி வர, கொடிவீரன் சிரித்த முகத்துடன் வரவேற்க, பக்கத்து வீட்டில் தன் வீட்டு சாவியை கொடுத்த மகிழினி, காரின் அருகில் வந்து தயங்கியபடி நின்று இருந்தாள்.

“என்னாச்சு சிஎம்? வாங்க வந்து உக்காருங்க. ஹாங் பின்னாடி எல்லாம் வேணாம். என் பக்கத்துல உக்காருங்க. இல்லைனா நான் கண்ணாடில உங்கள மட்டுமே பார்த்து சைட் அடிச்சிகிட்டு வண்டியை போய் எங்காவது மோதிட போறேன்” என்று கேலிக்காகச் சொல்ல, மகிழினி சிறு அச்சதுடனே காரின் முன் இருக்கையில் அமர்ந்து சீட் பெல்ட்டை போட்டுக்கொண்டு கண்கள் மூடி தன் இருக்கையில் சாய்ந்து கொண்டாள்.

மனைவியின் செயலை கண்ட தனக்குள் சிரித்து கொண்டவன் காரை அவன் கிராமத்தை நோக்கி விரட்டினான்.

வழியெல்லாம் கண்களை திறக்காமல் ஒரு வார்த்தை கூட பேசாமல் வந்த மகிழினியை சீண்டி பார்க்க நினைத்து, “ஏன் சிஎம், ஏன் நீங்க சுடிதார் போடல. ப்ச் நீங்க சல்வார்ல வருவீங்கன்னு நினைச்சேன் தெரியுமா?” என்று சொல்ல,

“ஒழுங்கா ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டுங்க. தேவையில்லாத கதையெல்லாம் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” என்று கடுக்கடுத்த மகிழினி மீண்டும் கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள, கார் ஒரு சிக்னளில் நின்றது.

கார் நின்றும் கூட மகிழினி கண்களை திறக்காதவள், “வாவ்! என்ன ஸ்ட்ரெக்சர்? கட்டுனா இப்படி தான் கட்டணும்” என்று ரசித்தப்படி பேசியவனின் குரலை கேட்டு கண்களை திறந்தவள் விழிகளுக்கு முன், நாகரீக உடையணிந்த ஒரு பெண், தன் ஆண் நண்பரோடு இரண்டு பக்கம் காலை போட்டுக்கொண்டு, அவனை கட்டிக்கொண்டு இருந்தாள்.

அதைக் கண்ட மகழினி, “ச்சீ என்ன ஆளு நீங்க? பெண்களை எல்லாம் இப்படிதான் அசிங்கமா கமெண்ட் பண்ணுவிங்களா? இவ்ளோ சீப்பா நீங்க” என்று கோவம்கொள்ள,

“நான் சீப்பும் இல்ல. கீப்பும் இல்ல. முதல்ல நீங்க ஏன் இப்படி என்கிட்ட கோவமா பேசுறீங்கன்னு சொல்லுங்க” என்று சிரிப்புடன் கேட்டான்.

“அதோ அந்த பெண்ணை பார்த்து இவ்ளோ கேவலமா பேசுறிங்க இல்ல. அதுக்கு தான் இந்த கோவம்” என்றவளின் பார்வையில் உள்ள அனல் கணவனைச் சுடாத குறைதான்.

“ஏங்க நீங்க என்ன ப்ராந்தா? நான் அதோ அங்க ஒரு வீடு கட்டிக்கிட்டு இருக்காங்க பாருங்க. அதை பார்த்து தான் கமெண்ட் பண்ணேன். பேசிக்கலி நான் சிவில் இன்ஜினியர் ஸ்டுடென்ட்ங்க. ஏங்க எப்ப பாரு என்னை ஒரு தப்பாவே பாக்குறீங்க” என்றவனின் குரலில் சுருதி கம்மியாக ஊரை நோக்கிக் காரை விரட்டினான்.
 
Joined
Jan 15, 2026
Messages
105
சில நிமிடங்கள் காரில் அமைதி நிலவ கொடிவீரனின் கைபேசி பாடல் ஒலிக்கும் இசை கேட்டு, காரை ஓரம் கட்டியவன் போன் திரையில் தன் அண்ணன் மாறனின் எண்ணை பார்த்து காரில் இருந்து இறங்கினான்.

“ஹலோ சொல்லுங்க அண்ணா.”

“எங்க இருக்க? உன் பொண்டாட்டி எங்க?”

“கார்ல அண்ணா. வீட்டுக்கு தான் போயிட்டு இருக்கோம்.”

“ம்... சரிடா. நீ பைபாஸ் வழியா போகாதே” என்றான் மாறன்.

“ஏன் அண்ணா? எதாவது ரோடு வொர்க் நடக்குதா?”

“இல்லடா. உன்னையும், உன் பொண்டாட்டியையும் தூக்க பிளான் நடக்குது.”

“என்ன சொல்றிங்க?”

“ம்... உன் காரை பார்த்ததும் தட்டி தூக்க ஒரு லாரி அங்க காத்திருக்கு.”

“ப்ச் யாரு அந்த வனிதாவா?”

“ம்... ஆமாடா. அந்த அப்பாடக்கர் தான்.”

“பட் உங்களுக்கு எப்படி விஷயம் தெரியும்?”

“நம்ம ஸ்டுடென்ட் தேவா இருக்கான் இல்ல. அவன் தான் அந்த டிரைவர்கு கிளீனர். நேத்து நைட்டு அந்த வனிதா ஆளுங்க ரெண்டு பேரு வந்து, உன்னோட வண்டி நம்பர் தந்து, அந்த டிரைவர் கிட்ட பணம் கொடுத்து உன் காரை ஆக்சிடண்ட் பண்ண சொல்லிருக்காங்க.”

“ஐயோ என்ன அண்ணா இது?”

“ம் ஆமாடா. அந்த சீனை பார்த்துட்டு நேத்து நைட்டு தேவா எனக்கு கால் பண்ணிருக்கான். பட், நான் நேத்து நைட்டு உன் அண்ணிக்கு என் போனை ஆஃப் பண்ணிட்டு மலாய் குல்பி எப்படி பண்றதுன்னு கத்து கொடுத்துகிட்டு இருந்தேன். சோ, என்னால தேவாகிட்ட பேச முடியல. அப்புறம் காலையில அவனோட மிஸ்ட் கால் பார்த்துட்டு என்ன ஏதுன்னு விசாரித்தா, அவன் தான் சொன்னான். உன்னை உன் பொண்டாட்டியோட தூக்க பிளான் போட்டு இருக்காங்கன்னு.”

“ரொம்ப சீக்கிரம் சொல்லிட்டீங்க” என்று பல்லைக்கடிக்க,

“சாரிடா நேத்து நைட்டு நாங்க சாப்புடுற பிஸில தான், போனை ஆஃப் பண்ணிட்டேன்.”

“ஏன் அண்ணா இதெல்லாம் நல்லாவா இருக்கு?”

“என்னடா அப்படி கேக்குற. மலாய் குல்பி நல்லா தான் இருந்துச்சு.”

“ஐயோ அண்ணா. நான் அதை சொல்லல.”

“பின்ன என்னடா” என்றான் மாறன்.

“இந்த வனிதா பண்றது நல்லா இருக்கா? அவங்கள என்னதான் பண்ணுறதுன்னு கேட்டேன்.”

“அடேய் நல்லவனே. உன்னால உன் பொண்டாட்டியையே ஏதும் பண்ண முடியல. நீ ஏன் வனிதாவை போய் எதாவது பண்ண போற?” என்று மாறன் கிண்டலடிக்க,

“நக்கல் பண்ணாதீங்கண்ணா.”

“சரி சரி விடுடா விடுடா இருந்தாலும் இந்த வனிதா நான் நினைச்சதை விடவே கொஞ்சம் மோசமான ஆளு தான் போல. இந்த விஷயத்தை நீ உன் மிசஸ்கிட்ட சொல்லி விஷயத்தை பெருசாக்காத.”

“சரி அண்ணியை அழைச்சிட்டு நீங்க சண்டே பங்க்ஷன்கு வருவீங்க தானே?”

“இல்லடா தம்பி. நாங்க வந்தா உன் அத்தை ரொம்ப கோவப்படுவாங்க. சோ, வர வேணான்னு தான் யோசிக்கிறேன்.”

“அட ஏன் அண்ணா நீங்க வேற. அத்தைக்கு உங்க மேல அன்பும் அக்கறையும் அதிகம் தான்.” என்றான் கொடிவீரன்.

“பாருடா.”

“சரி நீங்க கண்டிப்பா அண்ணியை அழைச்சிட்டு பங்க்ஷன்கு வரணும். நான் காத்திருப்பேன்.

“ம்... ட்ரை பண்ணுறேன். சரி நீ எதுக்கும் ஜாக்கிரதையா இரு.” என்று மாறன் சொன்னதும் அவனிடம் சில நிமிடங்கள் பேசியவன், மீண்டும் காரில் ஏறி வேறு வழியில் காரை விரட்டினான்.

“என்னாச்சு? ஏன் வந்த வழியே போறீங்க?” என்று மகிழினி கேட்க,

“அந்த பக்கம் போனா நிறைய ஆண்கள் தான் இருப்பாங்க. அதான் வேற ரூட்ல போறேங்க. அப்போ தானே நிறைய பெண்களை பார்த்து சைட் அடிக்க முடியும்” என்று வண்டியை மீண்டும் அமைதியாக தன் கிராமத்தை நோக்கி விரட்டினான்.

“சாரி நான் அப்படி கேட்டது தப்புதான்” என்றவளின் முகம் மாற,

“அடுத்த பெண்களிடம் தன் புருஷன் பேசுறத பார்த்து, என் பொண்டாட்டிக்கு கோவம் வந்தா கூட சமாளிச்சுடலாம்ங்க. ஆனா, வெறுப்போ, சந்தேகமோ வந்தா அது அவங்களோட இல்லற வாழ்க்கையை தான் பாதிக்கும்” என்றவன் தன் காரை ஒரு இளநீர் கடை அருகில் நிறுத்தினான்.

“சிஎம்... எப்படி காருலயே உக்காந்துருக்க போறிங்களா. இல்ல கீழே இறங்கி இளநீர் குடிக்கப்போறிங்களா என்றவனின் கிண்டலான பேச்சை கண்டு கொள்ளாமல் மகிழினி காரிலேயே அமர்ந்து இருக்க, இரண்டு இளநீரை வாங்கிக்கொண்டு காரை நோக்கி வந்தவன், “இந்தாங்க குடிங்க” என்று தன் கையில் இருந்த இளநீரை அவள் அருகில் நீட்டினான்.

அவனை கோவமே இல்லாத ஒரு பார்வையில் முறைத்தவள் வேண்டுமென்றே அவனை கடுப்பேத்த, “நான் உங்ககிட்ட இளநீர் கேட்டேனா. எனக்கு ஏன் வாங்கி தரிங்க?” என்று கேட்டதும்,

“ம்... தப்புதாங்க. உங்கள கேக்காம வாங்கி இருக்கக்கூடாது தான்” என்றவன் அவள் கண்முன்னே தன் கையில் இருந்த இரண்டு இளநீருக்கும் மாறி மாறி முத்தமிட்டு, இரண்டையும் பருகி முடித்து அதில் உள்ள தேங்காயை முதற்கொண்டு வழித்து சாப்பிட்டவன், கடைக்காரரிடம் பணத்தை கொடுத்துவிட்டு காரில் ஏறியவன், மகிழினியிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் காரை வீட்டை நோக்கி விரட்டினான்.

“மனுஷனா நீங்க. நான் ஒருத்தி இங்க குத்துக்கல்லு மாதிரி இருக்கேன். என்னை விட்டுட்டு ஒண்டி ஆளா ரெண்டு இளநீர் குடிச்சிட்டு, இப்படி கல்லுளிமங்கன் மாதிரி என்னை பட்டினியா நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போறிங்களே. இதெல்லாம் உங்களுக்கே நியாயமா இருக்கா?”

என்றவளின் முகத்தை பார்த்து பதில் ஏதும் சொல்லாமல் மீண்டும் தன் காரை விரட்டுவதிலேயே குறியாக இருந்தான்

சில மணிநேர பயணத்தில் கார் அவன் வீடு அமைந்து இருக்கும் தன் தெருவை வந்தடைய தொடர்ந்து விழிகள் மூடாமல் வழியெல்லாம் வாய் வழியே கணவனை திட்டிக்கொண்டு வந்தாள்.

வீட்டு வாசலில் காரை நிறுத்தியதும், “அம்மா சீக்கிரம் வாங்க. உங்க மருமக பொண்ணு வந்துட்டா” என்று சசி வாசலில் நின்றபடி கூச்சலிட,

கையில் ஆரத்தி தட்டுடன் வெளியே வந்த ஜெயா, காரில் இருந்து இறங்கிய மகனைக் கண்டுகொள்ளாமல் மகிழினியை கட்டி தழுவி “அம்மாடி சித்து எப்படி இருக்க?” என்று கேட்டார்.

“நல்லா இருக்கேன்ம்மா. நீங்க எப்படி இருக்கீங்க? சசி அக்கா நீங்க எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லா இருக்கேன் சித்து. சரி நீ வந்து என் தம்பி பக்கத்துல நில்லு. அம்மா தட்டை என்கிட்ட கொடுங்க. நான் ஆரத்தி எடுக்குறேன்” என்றாள்.

“இங்க என்ன நடக்குது? நான் ஒருத்தன் இருக்குறதயே மறந்துட்டு நீங்க எல்லாம் இவங்கள மட்டும் கொஞ்சிகிட்டு இருக்கீங்க?” என்று கொடிவீரன் கோவமாக பேச,

ஜெயா சிரித்துக்கொண்டே தன் மகன் கன்னத்தில் செல்லமாக அடித்து, “உனக்கு ஏன்டா பொறாமை? சரி சரி. சித்து பக்கத்துல நில்லு. சசி சீக்கிரமா ஆரத்தி எடுத்து இவங்க ரெண்டு பேரையும் உள்ள அழைச்சிட்டு வா” என்று சொல்லி வீட்டினுள் செல்ல, சசி ஆரத்தி எடுத்து முடித்ததும் வீட்டிற்குள் நுழைந்தனர்.


விவாதம் தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top