Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 105
- Thread Author
- #1
விவாதக் காதல் - 52
அடுத்து வந்த இரண்டு நாட்களும் கொடிவீரன் இதேபோல தன் மனைவியை கடைக்கு அழைத்துச் செல்வதும், வீட்டுக்கு அழைத்து வருவதுமாக இருந்தான்.
ஊரில் இருந்து அவர்களுக்கு தேவையான பொருட்கள் சிலவற்றை ஜெயா கேட்க, அன்றைய தினம் மாலை நேரம் கொடிவீரனும் மகிழினியும் துணி கடைக்கு சென்றனர்
“நான் சசி அக்காவுக்கு சேரி எடுக்குறேன். நீங்க உங்க மாமாவுக்கு டிரஸ் எடுத்துடுங்க.”
“அதெல்லாம் முடியாது. நான்தான் என் அக்காவுக்கும் உங்களுக்கும் டிரஸ் எடுப்பேன்.”
“எனக்கா? எனக்கு ஏன்?”
“என்னங்க நீங்க. சண்டே உங்களுக்கும் தான் பங்க்ஷன்.”
“அதுக்கு ஏன் புதுப்புடவை?”
“அப்போ மாடர்ன் டிரஸ் போட போறிங்களா?” கொஞ்சம் கிண்டலாக கேட்டான்.
“எனக்கு அதெல்லாம் போட்டு பழக்கம் இல்ல.” என்று முறைக்க,
“ம்... பழக்கம் இல்லையா? இல்ல பிடிக்காதா?”
“உண்மையை சொல்லனும்னா எனக்கு சின்ன வயசுல சுடிதார் போடணும்னு ஆசை. ஆனா, இந்த பாட்டி தான் பாவாடை தாவணி, புடவன்னு ரெண்ட தவிர வேற எதையும் போட விடமாட்டாங்க. எப்போவாது நயிட்டி போட்டா கூட திட்டுவாங்க.”
“ம்... அப்போ நீங்க பங்க்ஷன்கு சாரீயும் இன்னும் ரெண்டு, மூணு சுடிதாரும் எடுத்துக்கோங்க. நம்ம நாளைக்கு ஊருக்குப் போகும்போது நீங்க சுடிதார் போட்டுக்கிட்டு வரலாம்.”
“ஐயையோ அதெல்லாம் வேணாம்” என்று சத்தமாகவே சொன்னாள் மகிழினி.
“ஏன் வேணாம். உங்களுக்கு சுடிதார் போட பிடிக்கும்னா, நீங்க அதை போட்டுக்க வேண்டியது தானே?”
“ஹ்ம் நான் மாட்டேன்பா. பாட்டி என்னை கொன்னுடும்.”
“ஏங்க நமக்கு பிடிச்ச துணியை போட மத்தவங்க சம்மதத்தை நீங்க ஏன் எதிர்பார்க்குறீங்க?”
“இல்ல வேணாமே. பாட்டி எதாவது சொல்ல போறாங்க. அதுவும் இல்லாம ஜெயா அம்மா எதாவது சொல்லிட்டா எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கும்.”
“எங்க அம்மால்லாம் எதுவும் சொல்ல மாட்டாங்க. அதுவும் உங்கள அவங்க எதுவுமே சொல்ல மாட்டாங்க.”
“இல்ல எனக்கு சங்கோஜமா இருக்கு. நான் வேணும்னா ஒரு சேரி மட்டும் எடுத்துக்குறேன்.”
“ப்ச்... இங்க பாருங்க சிஎம். உங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்குதுன்னா அதை சந்தோசமா பண்ணுங்க. அவங்க அதை சொல்லுவாங்க. இத சொல்லுவாங்கன்னு எல்லாம் நீங்களா இமாஜின் பண்ணிக்காதிங்க. அப்படியே யாராவது எதாவது சொன்னா...” என்று நிறுத்தினான்.
“சொன்னா?” என்று இவள் கேட்க,
“நீ யாருடா என்னை சொல்லன்னு கேட்டுட்டு, நம்ம நமக்கு பிடிச்சதை பண்ண வேண்டியது தான்.”
“இல்ல நான்...”
“நீங்க இப்படி எல்லாம் சொன்னா கேட்கமாட்டீங்க நீங்க வாங்க நம்ம முதல்ல உங்களுக்கும் அக்காவுக்கும் சேரி எடுத்துட்டு அப்படியே உங்களுக்கு சுடிதார் எடுக்கலாம்” என்றவன் மகிழினியின் ஆசையை புரிந்து அவளுக்கு ஆடைகளை எடுத்து கொடுக்க.
“நீங்க ஷர்ட் பேண்ட் எடுக்கலையா?”
“ம்... எனக்கும் மாமாவுக்கும் வேஷ்டி சட்டை எடுத்தாச்சு. பில் பே பண்ணிட்டு வந்ததும் கிளம்பலாம்” என்று சில நிமிடத்தில் அங்குள்ள வேலையை முடித்து கிளம்பினார்கள்.
“நாளைக்கு காலையில மூன்று மணிக்குக் கார் எடுத்தா, வெயிலுக்கு முன்னாடி ஊருக்கு போயிடலாம். உங்களுக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் பேக்ல எடுத்து வச்சிக்கோங்க. நான் இந்த புதுத் துணியை எல்லாம் என் பையில வச்சிக்கிறேன்” என்று கொடிவீரன் சொன்னதும்,
அவன் முன் பணத்தை நீட்டிய மகிழினி, “பங்க்ஷன்கு புடவை ஜெயா அம்மா எடுத்து கொடுத்தாவே இருக்கட்டும். ஆனா, சுடிதார்கு எல்லாம் நானே பணம் கொடுத்துடுறேன் இந்தாங்க” என்றவள் கையில் இருந்த பணத்தை முறைத்து பார்த்தவன் பெருமுச்சுடன் அதை வாங்கிக்கொள்ள,
“சரி. நீங்க நேரத்தோடு படுங்க. நம்ம வேற மூன்று மணிக்குக் கிளம்பணும்னு சொன்னிங்க இல்ல. குட் நைட்” என்றவள் தன் அறைக்குள் செல்லும் முன்,
“மேடம் ஒரு நிமிஷம் இருங்க” என்றவன் அவள் கொடுத்த பணத்தை திருப்பி அவளிடமே தந்து, “இது இந்த மாசம் நான் உங்களுக்கு கொடுக்க வேண்டிய வாடகை பணம்” என்று மீண்டும் தன் சட்டை பையில் இருந்து சில நூறு ரூபாயை கையில் எடுத்து அவள் முன் நீட்டி, “இது நீங்க எனக்கு போடுற சாப்பாட்டுக்கு உண்டான காசு” என்றதும் மகிழினி அவனை பார்வையால் எரிக்க, அவனோ அவளை கண்டுகொள்ளாமல் சோபாவில் அமர்ந்து கைபேசியைப் பார்க்க ஆரம்பித்தான்.
அவன் அருகில் வந்து, “இப்போ எதுக்கு நீங்க சாப்பாட்டுக்கு எல்லாம் பணம் தரிங்க? போதாக்குறைக்கு இங்க தங்குறதுக்கு வேற பணம் தரிங்க? ஓ... அப்போ நீங்க வெறும் டெனன்ட் தானா?” என்று கோபத்தில் கேட்க,
“அப்படின்னு நீங்க நினைக்கிறதால தானே, நான் எடுத்து கொடுத்த துணிக்கு எல்லாம் கணக்கு பார்த்து பணம் தரீங்க.”
“இதுக்கும் அதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. இந்தாங்க. இந்த பணத்தை பிடிங்க. சாப்பிடுறதுக்கும், தங்கறதுக்கும் எல்லாம் பணம் தந்திங்கனா நான் செம்ம டென்சன் ஆகிடுவேன் சொல்லிட்டேன்.”
“நானா எதையும் பண்ணலைங்க. நீங்கதான் எல்லாத்தையும் பண்ண வைக்கிறிங்க” என்று சொன்னான்.
“இப்போ என்ன சொல்ல வரீங்க?”
“நான் வாங்கி கொடுத்த துணிக்கு நீங்க பணம் கொடுத்தா, நானும் இங்க சாப்பிடறதுக்கும், தூங்குறதுக்கும் பணம் தருவேன்” என்று அழுத்தமாக உரைத்தான்.
“இப்போ என்ன நீங்க எனக்கு வாங்கிக்கொடுத்த துணிக்கு நான் பணம் தந்தது உங்களுக்கு பிடிக்கல. அதானே. சரி நான் கொடுத்த பணத்தை நான் எடுத்துக்குறேன். ஆனா, இனி நீங்க இந்த மாதிரி வாடகை. சாப்பாடுன்னு கணக்கு எல்லாம் பார்த்து பணம் தராதீங்க.”
“நான் மறுபடியும் சொல்லுறேன். நானா எதையும் பண்ணல. நீங்க என்ன பண்ணுறீங்களோ அதை பொறுத்து தான் என் செயல் இருக்கும்.”
“ப்ச்... இந்தாங்க பிடிங்க மீதி பணம்.”
“ஏங்க அது என் சம்பள பணம் தான்ங்க. நீங்களே வச்சிக்கோங்க.”
“உங்க சம்பள பணம் எனக்கு எதுக்கு?”
சேத்த பணத்த சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையிலே கொடுத்து போடு
சின்னக் கண்ணு.
உங்க அம்மா கையிலே கொடுத்து போடு
சின்னக் கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க
செல்லக் கண்ணு
என்ற பாட்டை நீங்க கேட்டது இல்ல” என்று கேட்டான்.
“கேட்டு இருக்கேன். ஆனா, இப்ப என்ன அதுக்கு?”
“இத கேட்டுட்டு தான் என் அம்மா சொன்னாங்க, இனிமே உன் பொண்டாட்டிக்கிட்ட பணத்தை கொடுத்து வையுடா. குடும்பத்தை அவ பார்த்துப்பான்னு.”
“என்ன விளையாடுறிங்களா” என்றாள் கோபத்தில்.
“இப்போ மணி 10 ஆகுது. இந்த நேரத்துல விளையாட வேண்டிய விளையாட்டு ஒண்ணே ஒன்னு தான். ஆனா, அதை விளையாட இன்னும் ஒரு வருஷம் காத்து இருக்கனும் போல” என்று தாடையைத் தடவினான்.
“என்ன பேச்சு இதெல்லாம்?”
“ஏங்க நீங்க பரமபதம் விளையாட மாட்டிங்களா?”
“என்ன பரமபதமா? நீங்க அந்த விளையாட்டை தான் சொன்னிங்களா?” அவன் மாற்றிப் பேசுவதை உணராது கேட்க,
“நான் அதை தான் சொன்னேன். நீங்க வேற எதாவது விளையாட்டை நினைச்சுகிட்டா அதுக்கும், இன்னும் ஒரு வருஷம் வெயிட் பண்ணுங்க. பிகாஸ் மாமா இப்போ ஒன்லி லவ் மூட் தான். நோ டச்சிங் ஓகே.” அவள் முறைக்க, “சரி சரி ரொம்ப நேரமெல்லாம் என்னை நம்பி இப்படி முறைச்சுகிட்டு நிக்காதீங்க. அப்புறம் பரமபதம் ஆட முடியலைன்னா கூட, கில்லி ஆட மனசு ஏங்கிடப்போகுது.”
“ம்... ஏங்கும் ஏங்கும். ஆளைப்பாரு. ரொம்ப வாய் அதிகமா ஆச்சு உங்களுக்கு. பேசாம தூங்குங்க.”
“குட் நைட் சிஎம். நீங்களும் சீக்கிரம் படுங்க காலையில 3 மணிக்கு எல்லாம் கார் எடுக்கணும்” என்று சொல்ல மகிழினி இவன் இம்சையை வெறுக்கவும் இயலாமல், ரசிக்கவும் முடியாமல் படுத்தாள்.
சொன்னது போலவே மூன்று மணியளவில் ஆடம்பரம் இல்லாத புடவையில் மகிழினி வர, கொடிவீரன் சிரித்த முகத்துடன் வரவேற்க, பக்கத்து வீட்டில் தன் வீட்டு சாவியை கொடுத்த மகிழினி, காரின் அருகில் வந்து தயங்கியபடி நின்று இருந்தாள்.
“என்னாச்சு சிஎம்? வாங்க வந்து உக்காருங்க. ஹாங் பின்னாடி எல்லாம் வேணாம். என் பக்கத்துல உக்காருங்க. இல்லைனா நான் கண்ணாடில உங்கள மட்டுமே பார்த்து சைட் அடிச்சிகிட்டு வண்டியை போய் எங்காவது மோதிட போறேன்” என்று கேலிக்காகச் சொல்ல, மகிழினி சிறு அச்சதுடனே காரின் முன் இருக்கையில் அமர்ந்து சீட் பெல்ட்டை போட்டுக்கொண்டு கண்கள் மூடி தன் இருக்கையில் சாய்ந்து கொண்டாள்.
மனைவியின் செயலை கண்ட தனக்குள் சிரித்து கொண்டவன் காரை அவன் கிராமத்தை நோக்கி விரட்டினான்.
வழியெல்லாம் கண்களை திறக்காமல் ஒரு வார்த்தை கூட பேசாமல் வந்த மகிழினியை சீண்டி பார்க்க நினைத்து, “ஏன் சிஎம், ஏன் நீங்க சுடிதார் போடல. ப்ச் நீங்க சல்வார்ல வருவீங்கன்னு நினைச்சேன் தெரியுமா?” என்று சொல்ல,
“ஒழுங்கா ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டுங்க. தேவையில்லாத கதையெல்லாம் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” என்று கடுக்கடுத்த மகிழினி மீண்டும் கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள, கார் ஒரு சிக்னளில் நின்றது.
கார் நின்றும் கூட மகிழினி கண்களை திறக்காதவள், “வாவ்! என்ன ஸ்ட்ரெக்சர்? கட்டுனா இப்படி தான் கட்டணும்” என்று ரசித்தப்படி பேசியவனின் குரலை கேட்டு கண்களை திறந்தவள் விழிகளுக்கு முன், நாகரீக உடையணிந்த ஒரு பெண், தன் ஆண் நண்பரோடு இரண்டு பக்கம் காலை போட்டுக்கொண்டு, அவனை கட்டிக்கொண்டு இருந்தாள்.
அதைக் கண்ட மகழினி, “ச்சீ என்ன ஆளு நீங்க? பெண்களை எல்லாம் இப்படிதான் அசிங்கமா கமெண்ட் பண்ணுவிங்களா? இவ்ளோ சீப்பா நீங்க” என்று கோவம்கொள்ள,
“நான் சீப்பும் இல்ல. கீப்பும் இல்ல. முதல்ல நீங்க ஏன் இப்படி என்கிட்ட கோவமா பேசுறீங்கன்னு சொல்லுங்க” என்று சிரிப்புடன் கேட்டான்.
“அதோ அந்த பெண்ணை பார்த்து இவ்ளோ கேவலமா பேசுறிங்க இல்ல. அதுக்கு தான் இந்த கோவம்” என்றவளின் பார்வையில் உள்ள அனல் கணவனைச் சுடாத குறைதான்.
“ஏங்க நீங்க என்ன ப்ராந்தா? நான் அதோ அங்க ஒரு வீடு கட்டிக்கிட்டு இருக்காங்க பாருங்க. அதை பார்த்து தான் கமெண்ட் பண்ணேன். பேசிக்கலி நான் சிவில் இன்ஜினியர் ஸ்டுடென்ட்ங்க. ஏங்க எப்ப பாரு என்னை ஒரு தப்பாவே பாக்குறீங்க” என்றவனின் குரலில் சுருதி கம்மியாக ஊரை நோக்கிக் காரை விரட்டினான்.