• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 41

Joined
Jan 15, 2026
Messages
83
விவாதம் - 41


"ஜீவா சார் நீங்க மியூச்சுவல் டிவோர்ஸ் பண்ண பேப்பர்ஸ் ரெடி பண்ணிட்டு என்னோட கேண்டீன் நம்பருக்கு கால் பண்ணுங்க. நானே வந்து பேப்பர்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிக்கிறேன். இவர்கிட்ட எப்படி கையெழுத்து வாங்கணும்னு எனக்கு தெரியும்" என்று மகிழினி நம்பிக்கையாக சொல்ல,

"சித்ரா, முதல்ல நான் உன்னையும் அவரையும் கோவில்ல பார்க்கும் போதே, உங்க ரெண்டு பேர்குள்ள என்னமோ ஒன்னு இருக்குன்னு நினைச்சேன். இப்போ பாரு யாருமே எதிர்பார்க்காம உனக்கு அவர் கூடவே கல்யாணமும் நடந்திருக்கு. இதெல்லாம் கண்டிப்பா கடவுளோட செயல் தான். அதனால நீ உனக்கு அமைந்த வாழ்க்கையை நல்லபடியா வாழ முயற்சி பண்ணு" என்று தன் தோழிக்கு அறிவுரை கூறினாள் மீனா.

"அவரு என்கூட வாழ்ந்தா அவரோட வாழ்க்கையில எந்த நல்லதும் நடக்காது. அதனால தான் நான் இந்த விவாகரத்து ஏற்பாடே பண்ணுறேன். அதனால நீ எனக்கு அறிவுரை சொல்றதை விட்டுட்டு, சீக்கிரம் உன் மாமாகிட்ட சொல்லி எங்களுக்கு டிவோர்ஸ் வாங்கி தரச்சொல்லு" என்றவள் ரேஷ்மாவை பார்த்தபடி ஆட்டோவில் ஏற, அடுத்த சில நிமிடங்களில் மகிழினி கேண்டீன் வாசலை சென்றடைந்தது.

வழியெல்லாம் ஒரு வார்த்தை கூட பேசாமல் வந்த கொடிவீரனின் மனதை படிக்கத் தெரியாமல், மகிழினியும் அதே அமைதியை கடைபிடித்தாள். ஆட்டோவுக்கு பணம் தந்தவன் தன் பைக்கில் ஏறி கிளம்பத் தயாராக,

"கேவி சார் வந்து சாப்பிட்டுப் போங்க" என்று மகிழினி அழைக்க,

தன் ஆத்திரத்தை வெளி காட்டாத கொடிவீரன் மலர்ந்த முகத்துடன், "நீங்கதான் ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க மேடம். நீங்களே வயிறு நிறைக்க உண்டு மகிழுங்கள். நான் வரேன்" என்றவன் பைக்கை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தான்.

மகிழினியோ அவன் மனநிலையை புரிந்து கொள்ள முயலாது, தன் அன்றாட வேலைகளை செய்யத் தொடங்கினாள்.

கொடிவீரன் தன் அலுவலக பையை எடுப்பதற்காக, மீண்டும் மகிழினியின் வீட்டுக்கு செல்ல, வாசலிலேயே வழி மறித்தாள் அவனின் அத்தை கீதா.

"என்ன மருமகனே உங்க பொண்டாட்டிக்கு என்னதான் வேணுமாம்?" என்று கீதா கேட்க,

"ம்... வேற என்ன டிவோர்ஸ் தான்" என்றவன் வேகமாக மாடிக்கு சென்று அலுவலகப் பையை தூக்கிக்கொண்டு கீழே இறங்க, அவனிடம் சின்ன லஞ்ச் பாக்ஸ் ஒன்றை நீட்டினார் கீதா.

"என்ன அத்தை மதிய சாப்பாடா?" என்று கேட்க,

"ம்... உன் பொண்டாட்டி அவங்க பாட்டிக்கு போன் பண்ணி, நீ காலையில் இருந்து சாப்பிடல. அதனால லஞ்ச் பேக் பண்ணி கொடுத்துடுங்கன்னு சொல்லிருக்கா."

சிரித்துக்கொண்டே, "பாட்டி எங்க" என்று வினவினான்.

"அவங்க உன் பொண்டாட்டி பண்ற பைத்தியக்கார வேலையை நினைச்சு ரொம்ப கவலையா இருக்காங்க. ஏன் உங்க முன்னாடி வரக்கூட சங்கோஜப்படுறாங்க" என்று கீதா சொன்னதும், கொடிவீரன் வாசலில் தன் காலணிகளை கழட்டியவன், பாட்டி இருக்கும் வீட்டுக்குள் நுழைய, பாட்டி சோபாவில் கவலையில் அமர்ந்து இருந்தார்.

"என்ன பாட்டி இப்போ நீங்க கவலைப்படுற மாதிரி இங்க என்ன நடந்துச்சு?" என்று கேட்டு உரிமையாக அவரின் அருகில் அமர்ந்து கொண்டான்.

"என்ன தம்பி இப்படி கேக்குறீங்க? கல்யாணம் முடிந்து முழுசா ஒரு நாள் கூட ஆகல. அதுக்குள்ள இந்த பொண்ணு டிவோர்ஸ் அது இதுன்னு சொன்னா நல்லாவா இருக்கு" என்று முகம் வாடினார்.

"இதுக்கு ஏன் நீங்க இவ்ளோ டென்சன் ஆகுறீங்க?"

"அவளோட சந்தோஷத்தை மட்டுமே நினைச்சு, உன்னைப்பற்றி யோசிக்காம முடிவு எடுத்தா, நான் எப்படிப்பா இதெல்லாம் பாத்துகிட்டு கவலைப்படாமல் இருக்க முடியும்" என்று பாட்டி அவர் மனதில் உள்ள கவலையை சொன்னார்.

“பாட்டி உங்க பேத்தி என் சந்தோஷம் முக்கியம்னு நினைச்சு தான் இந்த விவாகரத்தையே கேக்குறாங்க.” என்றான்.

“என்னப்பா சொல்ற?” என்று பாட்டியும்,

“என்ன மாப்பிள்ள சொல்றிங்க?” என்று கீதாவும் கேட்க,

“ம்... ஆமா அவங்களால எனக்கு எந்த சந்தோஷமும் கிடைக்காதாம். ஏன் இன்னும் கேட்டா, என் மனசுல அவங்க இல்லாம, சூழ்நிலை காரணமா தான், நான் அவங்க கழுத்துல தாலி கட்டினேனேனு நினைச்சுகிட்டு இருக்காங்க. இனிமே அவங்க மேல நான் எந்த அளவுக்கு பிரியம் வச்சிருக்கேன்னு எடுத்துச் சொல்லணும்.”

“நீங்க சொன்னா அவ புரிஞ்சிப்பாளா?” என்றார் கீதா.

“புரியுற மாதிரி சொல்லணும் அத்தை.”

“இவதான் அதுக்கு எல்லாம் அவகாசமே தராமல் விவாகரத்து அது இதுன்னு சொல்லுறாளே தம்பி.”

“பாட்டி கடைக்குப் போய் பணம் தந்து மிட்டாய் வாங்குற மாதிரிலாம், விவாகரத்து பண்ண இயலாது. அதுக்குன்னு ஒரு சட்ட திட்டம் இருக்கு. எப்படி இருந்தாலும் கல்யாணம் முடிந்து ஒரு வருஷம் தம்பதிகளா ஒரே வீட்ல வாழனும். அப்பதான் டிவோர்ஸ் கேட்க முடியும். இதெல்லாம் உங்க பேத்தி நம்ம சொன்னா ஏத்துக்கமாட்டாங்க. அதனால தான் நானே அவங்கள வக்கீல் ஆபீஸ்க்கு அழைச்சிட்டு போனேன்.” என்றான் விளக்கமாக.

“அப்ப ஒரு வருஷத்துக்கு பிறகு என்ன பண்ணப்போறீங்க?”

“ம்... நாங்க அம்மா அப்பாவாக மாற என்ன பண்ணணுமோ அதைப் பண்ண வேண்டியது தான்.” என்றதும் கீதா வாயில் கைவைக்க, “ஏன் அத்தை நீங்க வேற. இங்க பாருங்க பாட்டி எனக்குமே நேத்து நடந்த திடீர் கல்யாணத்துல விருப்பம் இல்ல. இத்தனைக்கும் நான் என் சிஎம் மேல அளவுக்கு அதிகமான அன்பை வச்சிருக்கேன். என்னாலையே இந்த கல்யாணம் நடந்த விதத்தை முழுசா ஏத்துக்க முடியல. இப்படி இருக்கும் போது உங்க பேத்தி என்னை அவங்க நண்பனா மட்டுமே பார்த்தவங்க. இப்போ நான் ஒரு கயிறு கட்டினதால, அவங்களோட உடல், பொருள், ஆவி எல்லாம் கொடுத்து என்னை நேசிக்கணும்னு எந்த அவசியமோ, அவசரமோ இல்ல.”

“அப்ப உங்க ரெண்டு பேர் நடுவுல எப்போ தான் இந்த சங்கடம் எல்லாம் நீங்கி, நீங்க அன்னியோனியமா வாழ ஆரம்பிப்பிங்க?” என்றார் பாட்டி.

“ம்... கண்டிப்பா இதெல்லாம் சீக்கிரம் நடக்கும். ஆனா, அதுக்கு முன்னதாக, அவங்க என் அன்பை உணர்ந்து, எனக்காக அவங்க பிடிவாதத்தை விட்டு கீழே இறங்கி வரணும். கண்டிப்பா வருவாங்க. நான் வர வைப்பேன்” என்றான் உறுதியாக.

“அதுவரை?”

“வேற என்ன, அது வரைக்கும் என் பொண்டாட்டியை காதலிக்க வேண்டியது தான்” என்று சிரித்தான்.

“அது சரி.”

“இதுதான் சரி அத்தை. நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, இவங்க கண்ணை பார்த்துதான் இவங்க மேல ஆசைப்பட்டேன்னு தெரிந்தபோதே, அவங்கள அளவுக்கு அதிகமா நேசிக்க ஆரம்பிச்சிட்டேன். ஆனா, என் காதலை அவங்க உணர்ந்து என்னை ஏத்துகிட்ட பின்னாடி தான், நான் இவங்கள மேரேஜ் பண்ணனும்னு நினைச்சேன். பட், சிட்டுவேசன் எங்கள இப்போ கணவன் மனைவியா உங்க முன்னாடி நிக்க வச்சிருக்கு. ஆனா, ஒன்னு மட்டும் நான் சொல்லுறேன். என் அன்பை புரிஞ்சிகிட்டு என் சிஎம் எனக்காக அவங்க மனசை மாத்திப்பாங்க. பட், அதுக்கு கொஞ்சம் டைம் ஆகும். அதுவரை நான் அவங்கள லவ் பண்ணிட்டு மட்டும் இருக்கேன். அவங்க என் அன்பை புரிஞ்சிகிட்ட பின்னாடி, நாங்க ரெண்டு பேருமே சேர்ந்து ஒருவரை ஒருவர் லவ் பண்ணிக்கிறோம். சோ, நீங்க இதெல்லாம் நினைத்து கவலைப்படாம ஜாலியா என் அத்தை கூட ஊர் சுற்றிப் பாத்துட்டு வாங்க” என்று தன்னம்பிக்கையுடனும், தன் காதல் மீதுள்ள நம்பிக்கையுடனும், கொடிவீரன் தெளிவாக அவன் மனதில் உள்ளதை எடுத்து சொன்னான்.

“நீங்க இவ்வளவு நம்பிக்கையா பேசுறதை கேட்க, எனக்கு சந்தோசமா இருக்குபா. உன் அத்தை சொன்னது போல, எல்லாம் அந்த ஈசனின் அருள். சரி நீ பார்த்து வேலைக்கு கிளம்பு.” என்றார் பாட்டி.

“ம்... சரி பாட்டி. ஆமா எங்க சுரேஷ் வேணு?”

“வேணு அவன் அப்பனை அழைச்சிட்டு அவன் அத்தைக்கும் உனக்கும் கல்யாண பரிசு வாங்க போயிருக்கான்.”

“சரி பாட்டி. நான் வரேன். அத்தை நான் கிளம்புறேன். சிஎம் வந்தா நீங்க அவங்கள எதுவும் கேட்டு வைக்காதிங்க. அதேபோல அம்மா அக்காக்கு போன் பண்ணி லைவ் டெலிகாஸ்ட் பண்ணிடாதீங்க.”

“எங்களுக்கு எல்லாம் தெரியும். நீங்க கிளம்புங்க வரும்போது எனக்கு...”

“பஞ்சாமிர்தம் வேணுமா?”

“இல்ல பலூடா வாங்கி வாங்க.”

“ம்... கண்டிப்பா அத்தை” என்றுவிட்டு அலுவலகம் சென்றவன் தன்னோட வேலைகளை எல்லாம் முடித்த பின்னர், மதிய உணவை சாப்பிட நினைத்த நேரம், அவன் கொண்டு வந்த டிபன் பாக்ஸ் நினைவுக்கு வர, ஆசையாக திறந்தவன் வயிறார உண்டான். வேலை முடியும் வேளை, ஜீவாவிடமிருந்து அழைப்பு வந்தது.
 
Joined
Jan 15, 2026
Messages
83
அழைப்பை எடுத்து ஹலோ சொல்ல, “என்ன மச்சான் வேலை முடிஞ்சுடுச்சா?” என்று கேட்டான்.

“ம்... இப்போதான்டா.”

“காலையில என்னால உன்கிட்ட ஃப்ரீயா பேச முடியல. அதான் இப்போ கால் பண்ணேன்.”

“ம்... சொல்லுடா ஜீவா.”

“என்னடா கல்யாணம் முடிந்து ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள என்ன டிவோர்ஸ் அது இதுன்னு?”

“ம்... அவங்க கொஞ்சம் டிஸ்டர்பா இருக்காங்கடா. அதான் இந்த அவசர முடிவு.”

“சரி இப்போ நான் என்ன பண்ணுறது?”

“நீ அவங்கள உன் கிளையன்ட் போலவே ட்ரீட் பண்ணு. உண்மையில் இதே போல உனக்கு ஒரு கேஸ் வந்தா, நீ எப்படி அதை ஹேண்டில் பண்ணுவியோ அப்படியே அவங்கள டீல் பண்ணு” என்றான்.

“என்னடா சொல்லுற?”

“ம்... ஆமாடா. அவங்களுக்கு அப்பதான் ஒரு சின்ன ரிலீப் கிடைக்கும்.”

“எப்படி இருந்தாலும் நீங்க ஒன் இயர் சேர்ந்து வாழ்ந்தா தானேடா கோர்ட்ல டிவோர்ஸ் அப்ளை பண்ண முடியும்.”

“இதெல்லாம் ஏன்டா என்கிட்ட சொல்லுற? நீ உன் கிளையன்ட்கு இந்த விளக்கம் எல்லாம் கொடு.”

“ம்... ஓகேடா. நீ என்னமோ பிளான் பண்ணிட்ட. எதுவா இருந்தாலும் நல்லது நடந்தா சரி.”

“தானா நடக்காது மச்சான். நம்ம தான் நடத்திக்கணும் நடத்துவோம்.”

“ம்... சரி உங்க கண்ணாமூச்சி ஆட்டத்துல எங்க கல்யாணத்துக்கு வராம விட்டுராதீங்கடா."

“ம்... கண்டிப்பா என் பொண்டாட்டி கூட வரேன் மச்சான்.”

“டேய்! என் சிஸ்டர் பேசுனத நீ ஏதும் தப்பா நினைச்சிக்காத.”

“ம்...”

“பட் ஸ்டில் மிஸ் யூ மச்சான்.” என்றான் ஜீவா.

“அது பெயர் காதல் இல்ல மச்சான். அது ஒருவகை ஈர்ப்பு அவ்வளவுதான்.”

“இல்லடா. உன் மேரேஜ் லைஃப்ல பிரச்சனைனு தெரிந்து, அவ மறுபடியும் உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ண வந்தா. நீ அவளை ஹர்ட் பண்ற மாதிரி எல்லாம் பேசிடாத. அவ நல்ல பொண்ணு தான்” என்றான் தங்கைக்காக.

“டேய்! இப்போ ஏன் நீ சம்மந்தமே இல்லாம பேசுற? அவங்க ஏன் மறுபடியும் என்கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ண போறாங்க? நீ ரொம்ப இமாஜின் பண்ற. முதல்ல போனை கட் பண்ணுடா” என்றவன் கைபேசி இணைப்பை துண்டித்தான்.

அதே சமயம், “எக்ஸ்கியூஸ்மி வீரா” என்றபடி ரேஷ்மா வந்தாள்.

“ரேஷ்மா நீங்க இங்க என்ன பண்றீங்க?” என்ற கேள்விக்கு விடையாக,

“இவங்க மறுபடியும் நம்ம ஆபீஸ்ல ஜாயின் பண்ணிட்டாங்க வீரா சார்” என்று ஒருவர் சொல்ல,

“ஆமா வீரா. நான் மறுபடியும் இங்கேயே வந்துட்டேன். பட், நீங்க என்னை நினைச்சு பயப்படாதீங்க. நான் உங்கள டிஸ்டர்ப் எல்லாம் பண்ணமாட்டேன். தூரமா நின்னு உங்கள சைட் மட்டும் அடிச்சிக்குறேன். ஆப்டர் ஒன் இயர், நான் உங்கள மேரேஜ் பண்ணிக்கிறேன்” என்ற ரேஷ்மாவை பார்த்து சிரித்தான் கொடிவீரன்.

“உங்களோட கேரக்டர் இதுநாள் வரை எனக்கு ரொம்ப பிடிக்கும் ரேஷ்மா. நீங்க உங்க பிரியத்தை சொன்ன விதமா இருக்கட்டும், அண்ட் நான் எனக்கு அதுல விருப்பம் இல்லைனு சொன்னதும், நீங்க என்னை டிஸ்டர்ப் பண்ணாம விலகி போனதா இருக்கட்டும், இப்படி உங்களோட கேரக்டர் ரியலி சூப்பர். பட், இப்போ என்னமோ பண்ண ட்ரை பண்றிங்க பாருங்க, இது நல்லா இல்ல. எனக்கு இப்போ மேரேஜ் ஆகிடுச்சி. அண்ட் இன்னோரு முக்கியமான விஷயம், நான் என் மனைவியை ரொம்பவே நேசிக்கிறேன். அண்ட் அவங்கள மட்டும்தான் நேசிக்கிறேன்.” என்றான்.

“பட் அவங்கதான் உங்கிட்ட டிவோர்ஸ் கேக்குறாங்களே?”

“அது எங்க பர்சனல். அதுல நீங்க என்டர் ஆகாதீங்க.”

“லுக் வீரா. ஃபர்ஸ்ட் நான் உங்ககிட்ட ப்ரொபோஸ் பண்ணும்போது, நீங்க உங்க அம்மாக்கு என்னை மாதிரி மாடர்ன் பொண்ணு எல்லாம் பிடிக்காது. எங்க அம்மா யாரை சொல்லுறாங்களோ, அவங்கள தான் மேரேஜ் பண்ணுவேன்னு சொன்னிங்க. இப்போ உங்க அம்மா தலைமையில நடந்த உங்க கல்யாணத்துக்கு, வித் இன் ஒன் டேகுள்ள ஒரு என்ட் கார்ட் போட நீங்க தாலி கட்டுன பொண்ணே நினைக்கும்போது, நீங்க ஏன் ஆப்டர் டிவோர்ஸ் என்னை மேரேஜ் பண்ணிக்கக்கூடாது.?”

“உங்களுக்கு நான் சொல்லுறது புரியலையா? நான் என் மனைவியை நேசிக்கிறேன். அவங்களுக்கும் எனக்கும் டிவோர்ஸ் எல்லாம் ஆகவே ஆகாது.”

“அப்படி ஆனா, நீங்க என்னை மேரேஜ் பண்ணிக்கிறிங்களா?”

“ம்ஹூம் முடியாது” என்றான் பட்டென்று.

“ஏன்?”

“ஏன்னா, எனக்கும் அவங்களுக்கும் டிவோர்ஸ் ஆகாது. பெட்டர் நீங்க என் விஷயத்துல இருந்து கொஞ்சம் விலகியே இருங்க. நான் எல்லா நேரமும், எல்லா விஷயத்தையும் இப்படி பொறுமையா எடுத்து சொல்லிட்டு இருக்கமாட்டேன்.”

“ம்... ஓகே வீரா பாப்போம். நான் அனாவசியமா உங்கள டிஸ்டர்ப் பண்ணமாட்டேன். பட், எனக்கு ஒரு சான்ஸ் கிடைச்சா, கண்டிப்பா மறுபடியும் உங்கள மிஸ் பண்ணமாட்டேன்” என்றதும் கொடிவீரன் ரேஷ்மாவை முறைக்க, “என்னடா இவளுக்கு வேற ஆம்பளையே கிடைக்கலையான்னு கூட நீங்க நினைக்கலாம். பட், எனக்கு தேவை ஆம்பள மட்டும் இல்ல. அதுக்கு மேல ஏதோ ஒன்னு உங்ககிட்ட எனக்கு பிடித்திருக்கு. அதான் மறுபடியும் நான் உங்கள தேடி வந்துட்டேன். ஓகே வீரா. நம்ம நாளைக்கு மீட் பண்ணலாம். பை டியர்” என்ற ரேஷ்மா, வெளியே சென்றதும், அவள் பேச்சுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தராது நேரத்தோடு வீட்டுக்கு சென்றான்.

மாலை ஆறு மணியை கடந்தும் மகிழினி வீட்டுக்கு வராமல் இருக்க, கொடிவீரன் வந்ததும் வாசலிலேயே, “உங்க பொண்டாட்டி இன்னும் வரல” என்றார் கீதா

“ஆமா தம்பி எப்பவும் 5 மணிக்கு எல்லாம் வந்துடுவா. இன்னைக்கு என்னனு தெரியல. இன்னும் ஆளைக் காணோம்” என்றார் பாட்டி.

“கேண்டீன்கு போன் பண்ணி பாத்திங்களா பாட்டி?”

“ஆங் பாத்துட்டோம்பா. யாருமே போன் எடுக்கல. சுரேஷும் வேணுவும் கூட அவளை தேடி கேண்டீன்கு தான் போய் இருக்காங்க.”

“ம்... சரி பாட்டி. நீங்க உள்ள போங்க. அவங்க வந்துடுவாங்க.” என்றான்.

“ஏன் மருமகனே இந்த பொண்ணு வெளிய போறமாதிரி இருந்தா, ஒரு போன் பண்ணி சொல்லிட்டு போய் இருக்கலாம்ல?”

“அவங்களுக்கு என்ன சூழ்நிலைன்னு தெரியலையே அத்தை.” என்ற கொடிவீரனின் கைபேசியின் அழைப்பில் சுரேஷின் பெயரை பார்த்தவன், “சொல்லு மச்சான்... என்னடா சொல்லுற? எந்த ஹாஸ்பிட்டல்? சரி நீ அவங்கள பார்த்துகோ. நாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வரோம்” என்று வைக்க, பாட்டியும், கீதாவும் ‘என்ன பிரச்சனை?’ என்று அவனைப் பார்த்தார்கள்.

“பாட்டி, அத்தை நான் கார் எடுக்குறேன் வாங்க நம்ம ஹாஸ்பிடல் போகலாம்” என்றவன் அவர்களை அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல, வழியெல்லாம் தன் பேத்திக்கு என்ன ஆனது என்ற கவலையில் பாட்டி தவித்துக்கொண்டு இருந்தார்.

மருத்துவமனை வாசலில் சுரேஷை பார்த்தவன் காரை அதன் இடத்தில் நிறுத்தி வந்து, சுரேஷிடம் விசாரிக்க, அவன் மருத்துவரிடம் அழைத்துச் சென்றான்.


விவாதம் தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top