• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
463
வனிச்சூர்:

நள்ளிரவு மூன்று மணிக்கு எல்லாம் மதுரை ஏர்போர்ட்டுக்கு வந்து சேர்ந்தான்.

பின்னர் மற்ற பார்மாலிட்டிசை முடித்துக் கொண்டு வெளியே வர கண்ணனும் செழியனுக்காக காரில் காத்துக் கொண்டிருக்க அதில் ஏறி உட்கார்ந்தவன், எப்படி இருக்க?

வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?

நலம் நலம்..

நீ எப்படி இருக்க?

போன வேலை நல்லபடியா முடிஞ்சுதா என்கவும்,ஆச்சி ஆச்சி.அந்த பரதேசி பயலை உள்ள தள்ளிட்டு தானே வரேன்.

காலம் சென்று நீதி கிடைத்திருக்கு இருந்தாலும் அவனுக்கு இந்த தண்டனை தேவை தானா மாப்பி என்று கண்ணன் கேட்க,ஆமாடா.அந்த இடத்தை சுத்தம் பண்றதுக்கு எப்படியும் ஒரு மாசத்துக்கு மேலாகும்.அடுத்தவங்க உழைப்பை சுரண்டி சுரண்டி சாப்பிட்டு வளர்ந்தான்.

இனி வாழ்நாள் முழுவதும் ஜெயில்ல உழைச்சு சாப்பிடனும் என்று செழியனும் சொல்ல,இருந்தாலும் இன்னும் அவனுக்கு கடுமையாக தண்டனை கொடுத்துருக்கலாம்..

கடுமையாக தண்டனைனா எப்படி அரபு கன்ட்ரி போல கை கால வெட்டுறதா? அதெல்லாம் காயம் ஆறிடும்.ஆனால் இந்த தண்டனை இவனுக்கு ரொம்ப மன உளைச்சலை கொடுக்கும் டா.ஒரு செடியை நட்டு உருவாக்குவது என்ன சாதாரண விஷயமா டா?

ஆமா மாப்பி நீ சொல்றதும் சரிதான் .

சரி டீ குடிக்கலாமா என்கவும் ஆமாண்டா என்ற இருவரும் ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்தவர்கள் அவர்கள் வழக்கமா குடிக்கும் கடைக்கு போக அந்த நேரத்திலும் கடையில் கூட்டமாகவும் இருந்தது.

சிலர் அன்றைய செய்தித்தாளை படித்துக் கொண்டு,நடந்த வழக்கை பற்றி தான் பேசிக் கொண்டிருக்க, அவர்களுக்கு செழியனை அடையாளம் தெரியவில்லை.அதுவும் நல்லது என்று நினைத்துக் கொண்டான்.

நீ தள்ளு நான் கார் ஓட்டுறேனென்ற செழியன் டிரைவர் சீட்டில் உட்கார்ந்தான்.விடியற்காலை நேரம் என்பதால் அவ்வளவாக டிராபிக் இல்லாமல் போக, ஏழு மணி நேரத்தில் வர வேண்டிய ஊருக்கு 4 மணி நேரத்திற்குள் வேகமாக வந்து சேர்ந்தான்.

ஊருக்குள் போகும் வழியில் காரை திரும்பும் போது வழக்கமாக ஒலிக்கும் எட்டு மணி பாங் சத்தம் கேட்டது.

பின்னர் ஒரு வழியாக வீட்டிற்கு முன்னால் வந்து காரை நிறுத்த, இருவரும் கீழே இறங்கி வீட்டிற்குள் போக, அங்கே ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த வானதியும் செல்லதுரையும் மகனை பார்த்து விட்டு இளா என்றவாறு எந்திரிச்சு போய் மகனை அணைத்துக் கொண்டனர்.

அலோ சீரியல் குடும்பமே வீட்டுக்கு வந்தவனுக்கு ஒரு வாய் டீ குடுக்க மனசு வருதா என்கும் சத்தம் கேட்டு சிரித்தனர்

சரி கண்ணு நீ போய் குளிச்சிட்டு வா என மகனிடமிருந்து விலகிய செல்லதுரை சோபாவில் போய் உட்கார வானதியோ டீ போடுவதற்கு சென்றார்.

வேகமாக படியில் ஏறி ரூமிற்கு வர அங்கு மனைவி இல்லை.எங்கே போனாள் என் சண்டி ராணி என்றவனோ பேகை வைத்து விட்டு ரெஸ்ட் ரூம் கதவை திறக்க அங்கும் இல்லை.

சரி முதலில் ஒரு குளியலை போடுவோம் என்றவன் டவலோடு ரெஸ்ட் ரூமிற்குள் சென்றான்.

இன்று ஆடி முதல் வெள்ளி என்பதால் அதிகாலையிலே எழுந்து குளித்து தயாரானவள்,புவனா ரஞ்சனியோடு குல தெய்வ கோயிலுக்கு சென்றவள் அங்கு அம்மனுக்கு பூஜையை முடித்து விட்டு பேசிக் கொண்டே வீட்டிற்கு வந்து கொண்டிருந்தவளுக்கு இதய துடிப்பு கொஞ்சம் வேகமாக துடிப்பது போல இருந்தது..

என்னவாக இருக்கும் என்ற யோசனையோடு வீட்டிற்குள் வர அங்கே கண்ணன் வானதி செல்லதுரை டீ குடிப்பது தெரிந்தது.

கோயிலில் இருந்து எடுத்து வந்த விபூதி குங்குமத்தை அவர்களிடம் நீட்ட நான் இன்னும் குளிக்கலை டா என்று கண்ணன் சிரிக்க மற்ற இருவரும் அம்மனை வேண்டி எடுத்து பூசிக் கொண்டனர்.

பின்னர் பூஜை கூடையை சாமி ரூமில் வைத்தவள் துவைத்து வைத்த துணியை காய வைக்கலாமென பொறுமையாக படியில் ஏறி மாடிக்கு போகும் போது,அம்மாடி நானும் உன் மாமாவும் கண்ணனோடு வீட்டுக்கு போயிட்டு வந்துடுறோம்..

கதவை சாத்திட்டு ஜன்னல் வழியாக சாவியை உள்ளே போட்டு போறேனென்க,சரிங்கத்தை என்றாள்.

பின்னர் படியிலேறி மேலே வந்தவள் கதவை திறந்து உள்ளே வர,செழியனும் குளித்து விட்டு வெளியே வர கணவனை பார்த்தவள் என்னங்க என்று அதிர...

இரண்டே எட்டில் மனைவியை வந்து இறுக்கி அணைத்தவன் அப்படியே மெத்தையில் சரிந்தான்.

ஒரு வார பிரிவை மொத்தமாக தீர்த்து விட்டு மனமின்றி விலகி படுத்து தன்னவளை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டவன் எப்படி டி இருக்க?

மாமாவை மிஸ் பண்ணியா?

ஷமீராவோ வாயை திறந்து எதுவும் சொல்லாமல் தன்னவன் கரத்தை எடுத்து வெறுமையான வயிற்றில் மேல் வைக்க,ஏதோ புரிந்து பட்டென்று எழுந்து உட்கார்ந்தவன் ஏய்ய்ய்ய்...

நிஜமாவா?

ஆமாம் என்று முகத்தை மூடிக் கொண்டாள்..

யாகூஊஊஊ என்று கத்தியவன் தனது குழந்தை இருக்கும் வயிற்றில் மீசை முடி பதிய எண்ணற்ற முத்தங்களை பரிசளித்தவன் மனைவியை அள்ளி தனது மடியில் உட்கார வைத்து விட்டு அடியேய்...

இதை முன்னாடியே சொல்லிருக்கண்டியது தானே டி. இவ்வளவு நேரம் உன் புருஷன் பண்ணிய வேலையில் குழந்தைக்கு என்று அடுத்தது சொல்ல முடியாமல் சங்கடமாக மனைவியை பார்க்க...

அவளோ கண்களை உருட்டி கணவனை முறைத்தவள் எங்கே என்னை சொல்ல விட்டீங்க?

என்னமோ காஞ்ச மாடு கம்மங்காட்டில் பாய்ந்த போலென்று வேறு பக்கம் திருப்பிக்கொண்டு ஷமீரா சிரிக்க,மனைவியின் முகத்தில் தெரியும் வெட்கம் எதிரிலிருந்த கண்ணாடி வழியாக நன்கு தெரிந்தது.

இறுக்கமாக அணைத்து மனைவியின் முதுகில் முகத்தை புரட்ட அய்யோ கூசுதுங்க விடுங்க என்றாள்

சரி சரி இப்பொழுது கோட்டா இது போதும் இனி நைட் பாத்துக்கலாம் என்கவும் ஐயோ என்று அவள் அலற கண்டிப்பாக சம்பவம் உண்டு டி உண்டு டி என்று சிரித்தான்.

கணவனை முறைத்துக் கொண்டே எழுந்தவள் மீண்டும் குளித்துவிட்டு இருவரும் தயாராகி கீழே வந்தவர்கள் மணியை பார்க்க காலை 11 என்று காட்டியது.

உக்காருங்க டிபன் எடுத்துட்டு வரேன் என்றவள் தோசை போட்டு காலையிலயே தயார் பண்ணி வைத்திருந்து சட்னி சாம்பார் எடுத்துட்டு வந்து கணவனுக்கு பரிமாற,அவளை இழுத்து மடியில் உட்கார வைத்தவன் நீ முதல்ல சாப்பிட்டு தெம்பா இரு டி.

அப்பதான் புள்ளையும் ஆரோக்கியமா இருக்கும் என்றவாறு அவளுக்கும் ஊட்டிக் கொண்டு இவனும் சாப்பிட்டு முடித்தான்.

பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு பக்கத்து தெருவில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு போக அங்கே பேரனை கட்டி அணைத்து உச்சி முகர்ந்தவர்கள் கேசை பற்றி சில விஷயங்கள் பேசிவிட்டு ஜூலிக்கு வளையல் போட வேண்டும் என்பதைப் பற்றி செழியனிடம் சொல்ல தாராளமா பண்ணிடலாம் .

அவங்க அப்பாவுக்கு யார் சொல்றது?

ருத்ரனும் சொன்னான்.சித்தப்பாவும் சொன்னாருப்பா என்று செல்லதுரை சொல்ல,அடுத்த வாரம் புதன் கிழமை தானே அப்ப இங்க இருந்து எல்லாரும் பிளைட்ல போயிடலாம் டிக்கெட் நான் போட்டு விடுறேன் என்ற செழியன் அதேபோல் எத்தனை பேர் என்று கணக்கு பண்ணி அவர்களுக்கு பிளைட்டில் டிக்கெட் புக் பண்ணினான்.

அப்பு,புள்ள மாசமா இருக்கு இந்த நேரத்துல அவ்வளவு தூரம் வேணாம் அதனால நீ கூட இருந்து பார்த்துக்க என்று தம்புசாமி தாத்தா சொல்ல சரி என்றான்.

மதிய உணவு அங்கே சாப்பிட்டுவிட்டு நால்வரும் வீட்டிற்கு வந்தவர்கள் சரி கொஞ்ச நேரம் படுக்கலாம் என்று மனைவியோடு ரூமிற்கு வந்தவன்,என்ன டி ரெடியா?

கணவன் கேட்பது புரிந்தாலும் கண்டுகாமல் பெட்டில் படுத்தவள் ஹம் தூங்குங்கள் என்றவாறு திரும்பி படுக்க,கொய்யால...

அவ்வளவு அதப்பு என்றவனோ மனைவியோடு நெருங்கி படுத்தவன்,ஒரு வாரமாக பேச வேண்டிய கதை எல்லாம் அவளிடம் பேசிக்கொண்டே அசதியில் இருவரும் தூங்கி விட்டனர் .

அதன் பின்னர் வழக்கம் போல் செழியனும் பகலில் வேலைக்கு போக இரவில் மனைவியிடம் சேட்டைகள் பண்ணி,அவளிடம் செல்லமாக அடி வாங்கவும் மறக்கவில்லை.

அதோ இதோ என்று ஒரு வாரமும் கடந்து செல்ல டெல்லிக்கு செல்ல வேண்டிய நாளும் வரவும் ஷமீராவை அழைத்துப் போய் பத்மாவிடம் விட்டவன்,ஏர்போர்ட் வரைக்கும் போயிட்டு வரேன் சித்தி உன் மருமகள் இங்கு இருக்கட்டும்.

பத்மாவிற்கு பல்லு வலியால் டெல்லிக்கு போக முடியவில்லை.நீ போயிட்டு வா கண்ணு நான் இருக்கிறேன் நீ என்றார்.

அதன் பின்னர் எல்லாரையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு வந்தவன் டெல்லி செல்வதற்கான பிளைட் வந்ததும் தனது வீட்டினரை அனுப்பி வைத்துவிட்டு வனிச்சூருக்கு புறப்பட்டான்

டெல்லி:

காலை டிபனை செய்து முடித்த எஸ்தர் தனக்கு தேவையானதை டிபன் பாக்ஸில் எடுத்துக் கொண்டு ரெடியாகி கீழே வந்தவரின் முன்பு கேப் வந்து நிற்கவும் அதில் ஏறியதும் அவரது ஆபிஸை நோக்கி காரும் ஓடலானது.

55 வயதில் தனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று ஆண்டவர் குறித்திருக்கிறார் போல.அது இப்பொழுது தான் நடந்திருக்கிறது என்று யோசித்துக் கொண்டே வந்தவர்,தான் வரைந்த டிசைன்களை மறக்காமல் ஹிரோஷி மேடத்திற்கு மெயில் அனுப்ப வேண்டும் என்பதை மனதிற்குள் குறித்துக் கொண்டார்.

அருணும் ஊருக்கு தயாராகிவன் சரி கா நான் கிளம்புறேன்.எதா இருந்தாலும் எனக்கு கால் பண்ணுங்க என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்னை நோக்கி புறப்பட்டான்.

நாட்களும் வேகமாக கடந்து சென்றது. விடிந்தால் ஜூலிக்கு வளையளணிவிழா நடக்க இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை தீபனும் ருத்ரனும் பார்த்துக் கொண்டனர்.

வனிச்சூரிலிருந்து வருபவர்களை ரிசீவ் பண்ணுவதற்காக பாயலும்-தன்ராஜும் ஏர்போர்ட்டிற்கு வந்திருக்க, வருபவர்களுக்கு கிப்ட் பொருள் கொடுக்க வேண்டும் என்பதால் அதற்கானதை வாங்குவதற்கு எஸ்தர் ரூபா இருவரும் பஜாருக்கு சென்று விட,வீட்டில் தனியாக இருக்க ஜூலிக்கு தான் போரடித்தது.

மதுரையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானமும் வந்து சேர்ந்தது. சிறிது நிமிடத்தில் வனிச்சூரிலிருந்து தனது சொந்த பந்தங்கள் எல்லாம் வருவதை பார்த்த தன்ராஜ்,நலம் விசாரித்துவிட்டு அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்...
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
463
வனிச்சூர்:

இரவு 9 மணிக்கு எல்லாம் வனிச்சூருக்கு வந்து விட்டான்.மலர் வீட்டின் முன்பு காரை நிறுத்திவிட்டு கதவை திறந்து உள்ளே வர அப்பொழுதுதான் மலரும் ஷமீராவும் சாப்பிட்டுக் கொண்டிருக்க அவர்களுக்கு பத்மா தோசை சுட்டு கொடுத்துக் கொண்டிருந்தார்.

உலகத்துல எந்த மருமகளுக்கும் இப்படி மாமியார் கிடைக்க மாட்டார்கள் என்றவாறு சோபாவில் வந்து உட்கார்ந்தவன் எங்கே சித்தி சித்தப்பாவை காணோம்?

எள்ளு கொள்ளைக்கு காவல் காக்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கண்ணு போனார்.நல்லபடியாக அவங்களை அனுப்பி வைத்துட்டியா??

ஆமா..உனக்கு பல்லு வலி இப்ப எப்படி இருக்கு சித்தி??

ஹம் பரவால்ல கண்ணு..

சித்தப்பா டவுன்ல இருந்து மாத்திரை வாங்கிட்டு வந்து கொடுத்தாரு போட்ட பிறகு கொஞ்சம் தேவையில்லை.

நீ கை கழுவிட்டு வா கண்ணு என்றவர் ஹாட் பாக்சில் சூடாக இருந்த இட்லியில் இரண்டு எடுத்து தட்டில் வைத்து சட்னி சாம்பார் வைத்து செழியனுக்கு கொடுத்துவிட்டு அவனுக்கும் தோசை சுட்டார்.

சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவர்கள் பின்னர் அவர்களிடம் சொல்லிக்கொண்டு தங்களது வீட்டிற்கு வந்தனர்

அப்புறங்க பொண்டாட்டி வீட்ல நீங்களும் நானும் தான் இருக்கிறோம் இத்தனை நாளும் மாமா அத்தை இருக்காங்கன்னு இல்லாத கதை படிச்சுக்கிட்டு இருந்தீங்க.இப்ப ஒரு வாரமா என் கூட தானே இருக்கணும் என்ன பண்ண போறீங்க என்றவாறு வாசல் கதவை தாழ்ப்பாள் போட்டு உள்ளே வர ஷமீராவோ கணவனை பார்த்து திருதிருவென்று முழித்தாள்.

மனைவியின் முகத்தில் இருக்கும் பயத்தை பார்த்து உள்ளுக்குள் சிரித்தவன்,கொய்யாலே ஒரு வாரமா குழந்தையை காரணம் காட்டி இல்லாத அக்கப்போர் பண்ணுனியே வாடி மவளே நல்லா மாட்டுன என்று சொல்லிக் கொண்டவன்,டைம் ஆகுது சீக்கிரம் பால் எடுத்துட்டு வா என்றவாறு படியில் ஏறி மேலே போனான்.

ஐயோ கடவுளே இந்த மனுஷனை நான் எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலையே செல்லமென தனது வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் சொல்லிக் கொண்டே பால் சூடு பண்ணிவள் இரண்டு பேருக்கும் இரண்டு டம்ளரில் எடுத்துக் கொண்டு லைட்டை எல்லாம் ஆஃப் பண்ணிவிட்டு பொறுமையாக படியில் ஏறி மேலே வந்தாள்.

அங்கே குளித்து வந்து தலையை துவட்டிக் கொண்டிருந்தவனை பார்த்து மிரள,வெரி குட் வெரி குட்.வயித்துல என் செல்லம் இருக்கிறதால் நீ காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டாம் பால் மட்டும் குடு அதை குடிச்சிட்டு மாமா வரேன் என்றான்.


கடவுளே ஒரு வாரம் இந்த மனுஷன் கிட்ட என்ன பாடு பட போறன்னு தெரியல என்று முணவிக் கொண்டே ரெஸ்ட் ரூமிற்கு போனவள் நைட்டியை மாற்றி விட்டு கட்டிருந்த புடவையை துவைக்க போட்டு விட்டு வர,கமான் கமான் தலையில் மல்லிகை பூ குறையுதே செல்லம் என்றவாறு பெட்டில் படுத்தான்.

எனக்கு இருக்கிறது ஒரே ஒரு பொண்டாட்டி டி..

ஓஓஓ..அதுதான் ரொம்ப கவலையா இருக்கு போல வேணும்னா இன்னொருத்தி கட்டிக்க வேண்டியது தானே யாரு வேண்டாம் என்று கோவமாக ஷமீரா சொல்ல,ஏய் உன் அப்பன் புத்தி போல எனக்கு கிடையாது டி..

ஒருவனுக்கு ஒருத்தி பண்பாடு கொண்டவன்டி நானென்று தனது மீசையை முறுக்கி காட்ட ஷமீராவோ அடிபட்ட பார்வையில் கணவனை பார்க்கவும்,அதன் பிறகு தான் சொன்ன வார்த்தையின் வீரியம் புரிந்து சாரி செல்லம் தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சிடு மன்னிச்சிடு என்று கையை கூப்ப உங்க மனசுக்குள்ள இதே போல எண்ணம் இருக்கு.அது தான் வார்த்தைகளா வருது.

ஊர் உலகத்துல எங்க அப்பா மட்டும்தான் இரண்டு கல்யாணம் பண்ணிருக்கிறார?

ரெண்டு கல்யாணம் பண்றதும் 2000 கல்யாணம் பண்றதும் எங்க அப்பாவோட தனிப்பட்ட விஷயம். அதைக் கேட்பதற்கு எனக்கு மட்டும் இல்லை உங்களுக்கும் எந்த உரிமையும் கிடையாது.

உங்களுக்கு இரண்டாம் தரத்தின் பொண்ணை கட்டினது அவ்ளோ கௌரவ குறைச்சலா இருக்குன்னா சொல்லுங்க நான் வேணா உங்க வாழ்க்கையிலிருந்து போயிடுறேன் என்று சொல்லி வாயை மூடுவதற்கு வேகமாக எழுந்தவனோ பளாரென்று அறைந்தவன் என்ன டி பேச்சு பேசுற?

வாழ்க்கையை விட்டு போயிடுவியா?
உன்ன தான் நான் விட்றுவேனா?
நான் இல்லாம தான் நீ வாழ்ந்துடுவியா என்று அவள் தொண்டையை பிடித்துக் கொண்டு அங்கிருந்த சுவற்றில் சாய்த்தபடி கேட்க,ஷமீராவோ எந்த பதிலும் சொல்லாமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

அந்த கோவத்திலும் மனைவியின் அந்த முக சுணக்கங்களை ரசித்தவன் துடிக்கும் உதடுகளை சிறை பிடித்துக் கொண்டு சுவற்றிலே அவளோடு புதைந்தான்.

நிமிடங்களும் கடந்து செல்ல மூச்சுக்காக தன்னவள் ஏங்குவது தெரிந்து தனது மூச்சை அவளுக்கு கொடுக்க,ஒரு கட்டத்தில் அவள் தொய்ந்து போவது தெரிந்து அப்படியே கையில் ஏந்தியவன் மெத்தையில் போய் படுத்துக்கொண்டு எட்டி லைட்டை ஆஃப் பண்ணினான். ..

கண்ணை மூடி தூங்குவது போல் இருந்தாலும் ஷமீராவுக்கு தூக்கம் வரவில்லை.இப்படி ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்துக்காக தந்தையின் இரண்டாவது திருமணம் பற்றி சொல்லிக் காட்டிக்கொண்டே இருப்பது எந்த விதத்தில் நியாயம்.

நீங்க பண்ணிய காரியத்தால் எனக்கு வலினு பாருங்கள் என்று தனது தந்தையை நொந்துக் கொண்டு உள்ளுக்குள்ளே வேதனை பட்டாள்.

மனைவியை அணைத்து படுத்திருந்த செழியனுக்கும் தான் பேசிய வார்த்தைகள் தவறு என்பது புரிந்தது.

இருந்தாலும் அவள் தன்னை விட்டுட்டு போயிடுவேன் என்று சொன்னது தாங்க முடியாமல் அறைந்தது நினைத்து வருத்தப்பட்டவன் இப்படி அவசரப்பட்டு எதற்கெடுத்தாலும் கை நீட்டுறோமே இனிமே இந்த பழக்கத்தை வச்சுக்க கூடாது..

பாவம் மாசமா இருக்கிறாள் இந்த நேரத்துல போய் இப்படி பண்ணிட்டோம் என்று தன்னையே நொந்து கொண்டான்.

டெல்லி:

அடுத்த பிளைட்டில் வந்து இறங்கிய மகி,மானசா உன்னை வரவேண்டான்னு சொன்னேன்.இருந்தாலும் பிடிவாதமா நான் வந்தே தீருவேன்னு வர.

அங்க வந்து உன்னால ஏதாச்சும் ஒரு சின்ன மன வருத்தமாவது வந்தது உன் கழுத்துல தாலி இருக்காது சொல்லிட்டேன்.அதுக்கு பிறகு நீ என்ன பண்ணனுமோ தாராளமா பண்ணிக்கொள் என்று ஏர்போர்ட்டை விட்டு மகி வெளியே வர,கணவர் பேசிய வார்த்தையிலே இடி விழுந்த போல் ஆன மானசா இனி எந்த காரணத்தை கொண்டும் நாம் வாயை திறக்க கூடாது என்பதை முடிவு பண்ணிக் கொண்டு பின்னாடியே வந்தார்.

பின்னர் இருவரும் டாக்ஸியில் ஏறி அருண் கொடுத்த அட்ரஸை டிரைவரிடம் சொல்ல அவனும் பிருந்தாவனம் வில்லாவிற்கு கூட்டிட்டு போனான்.

வனிச்சூரிலிருந்து வந்தவர்களும் அப்பார்ட்மெண்டுக்கு வந்து சேர்ந்தனர். இரண்டு வீட்டிலும் நான்கு நான்கு அறைகள் இருப்பதால் சொந்த பந்தங்கள் தங்குவதற்கும் வசதியாக இருந்தது.

எஸ்தர் ரூபாவும் பொருட்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு வர அங்கே இருந்த சம்பந்தி வீட்டினரை பார்த்து சந்தோஷப்பட்டவர் எல்லாரிடமும் பரஸ்பரம் நலம் விசாரித்துவிட்டு மகள் எங்கே என்று தேட,ஷீமீரா அங்கு இருப்பது போல் தெரியவில்லை.

எங்கே அண்ணி உங்க மருமகளை காணும் என்று வானதியிடம் விசாரிக்க, என் மருமக உங்களுக்கு ஒரு பரிசு கொடுத்து அனுப்பிருக்கு.அதை பிரிச்சு பாத்தீங்கன்னாக்க உங்களுக்கு தெரிஞ்சிடும் என்றவர் உள்ளே போய் தனது பேக்கில் இருந்த ஒரு பாக்ஸ் எடுத்துட்டு வந்து எஸ்தரிடம் நீட்டினார்.

என்னவா இருக்கும் என்று அதை வாங்கி பிரித்துப் பார்க்கவும் அதில் பத்மினியும் நதியாகவும் பூவே பூச்சூடவா என்ற படத்தில் இருக்கும் போட்டோ இருப்பதை பார்த்து விஷயத்தை புரிந்து கொண்டவர்,
ஷமீ மாசமா இருக்காளா என்று சந்தோஷமாக கேட்க,ஆமாங்கண்ணி.

அதனாலதான் இவ்வளவு தூரம் பயணம் பண்ண வேணாம்னு அப்பா சொன்னாங்க.ரெண்டு பேரையும் விட்டுட்டு தான் நாங்க வந்தோம் என்றார்.

தனது மகள் கர்ப்பமாகிட்டாள்.தான் பாட்டியா ஆயிட்டோம் என்ற விஷயத்தை கேள்விப்பட்ட எஸ்தருக்கு சந்தோஷத்தில் அழுகை வந்தது.ஜீசஸ் என்றவர் உடனே தனது ஹேண்ட் பேக்கிலிருந்த போனை எடுத்து மகளுக்கு கால் பண்ணினார்.

அந்த பக்கம் அட்டென் பண்ணியவள் அம்மா என்க,ஷமி என்று சந்தோஷத்தில் எஸ்தருக்கு அழுகை வந்தது.

நீ பாட்டியாகிட்ட மா நீ ஆசைப்பட்ட போல நல்ல செய்தி சொல்லிட்டேன் என்கவும் இது போதும்டி இது போதும்டி எனக்கு என்று மகளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு ஃபோனை வைத்தவர் பின்னர் வந்தவர்களுக்கு என்னென்ன தேவை என்று பார்த்து பார்த்து கவனிக்கும் போது காலிங் பெல் சத்தம் கேட்க ரூபா போய் கதவை திறக்கவும் அங்கே மகியும் மானசாவும் நின்றனர்.

வாங்க அங்கிள் வாங்க ஆன்ட்டி என்று சொல்ல,வரோமா நல்லாருக்கியா ரூபா என்றவாறு இருவரும் வீட்டுக்குள் வர அங்கே வனிச்சூரிலிருந்து வந்திருப்பவர்களை பார்த்து பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.

இரவு உணவு என்ன பண்ணலாம் என்று எஸ்தரும் சுமதி புவனா எல்லாம் கிச்சனுக்குள் இருந்து பேசிக் கொண்டிருந்ததால் இவர்கள் வந்த விஷயம் தெரியவில்லை.

மகியின் பார்வையோ தனது மனைவியையும் மகளையும் அந்த கூட்டத்தில் தேட,அவர்கள் இல்லாததை பார்த்து எங்கே போனாங்களென்று உள்ளுக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

எங்க ஜூலியை காணும் என்று மானசா கேட்க ருத்ரனும் ஜூலியும் ஹாஸ்பிடலுக்கு போயிருக்காங்க. வழக்கமான செக்கப்பு தான் இன்னும் கொஞ்ச நேரத்துல வருவாங்கள் என்று வானதி சொல்லவும் சரிங்க என்றார்.

அப்பொழுது எஸ்தரின் போனுக்கு கால் வரும் சத்தம் கேட்க அத்தை உங்களுக்கு தான் கால் வருது என்று ரூபா குரல் கொடுக்கவும்,இதோ வரேன் என்றவாறு வெளியே வந்த எஸ்தர்,ரூபாவிடமிருந்து போனை வாங்கி பார்க்க அதுல ஹிரோஷி என்று வரவும் மேடம் தான் பண்றாங்க என்றவாறு அட்டென்ட் பண்ணியவர்,சொல்லுங்க மேடம்.

அந்த பக்கம் ஹிரோஷி என்ன சொன்னாரோ தெரியவில்லை.அதைக் கேட்டு சந்தோஷப்பட்டவர் தேங்க்யூ மேடம் தேங்க்யூ மேடம்.

உடனே ரெடி பண்ணி விடுறேன், கண்டிப்பாக இன்னொரு டூ டேஸ்ல ரெடியாகிவிடும்.முடிச்சிட்டு நான் சொல்றேன் என்று சொல்லி ஃபோனை வைத்தவர்,ரூபா அந்த டிசைன் எல்லாம் அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிருச்சாம்.

அதுபோல பஸ்ட் 50 மெட்டீரியல் ரெடி பண்ண சொல்றாங்க என்கவும் வாவ் சூப்பர் அத்தை என்றவாறு ரூபா எஸ்தரை அணைத்துக்கொள்ள தேங்க்யூ டா செல்லம் என்றவாறு திரும்பியவருக்கு,அங்கே மகியும் மனசாகவும் இருப்பது தெரிந்தது.

யாரோ மூனாவது மனுஷனை பார்ப்பது போல அங்கிருந்து கிச்சனுக்குள் சென்று விட்டார்..

வீழ்ந்தேனடி..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top