• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
387
வனிச்சூர்:

பால் டம்ளரோடு ரூமிற்கு வந்தவள் கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு கணவனை தேட செழியன் அங்கில்லை.பால்கனியில் இருக்காரோ என்று பார்க்க அங்கும் இல்லாமல் போக,இந்த மனுஷன் இந்த நேரத்தில் எங்கே போனார்?

ஒரு வேளை அண்ணனுங்க கூட பேசிட்டு இருக்கிறாரா என்று யோசித்தவள்,இல்லையே அவங்க நால்வரும் ரூமிற்கு போனதை நாம பார்த்தோமே.

திரும்ப இந்த மனுஷன் எதாவது கேஸை இழுத்துக் கிட்டு அலையுறார் போலவே என்று முணுமுணுத்தவள், எதுக்கும் மாடியில் போய் பார்க்கலாமென்று பால் டம்ளரோடு படியில் ஏறி வரும் போதே செழியன் அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து நிற்பது தெரிந்தது.

எந்த கோட்டையை புடிக்க இந்த ஐயா இப்படி கையை கட்டிக்கிட்டு நிக்கிறாரு என்றவாறு வர,கொலுசு சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவன் ஏன் டி மணி என்ன ஆகுது இப்ப தான் வருவியா?

மாமா வேலை ஆரம்பிக்கனும் இல்ல, காலையில சீக்கிரமா கிளம்பனும் கமான் கமான் என்க..எதேஏஏஏ என்று திருத்திருவென்று ஷமீரா முழிக்க, என்னடி முழிக்கிற?எத்தனை வாட்டி சொல்லிருக்கேன் சாப்பிட்டு சீக்கிரமா மேல வந்துருனு?

டைம் வேஸ்ட் பண்ணாதே வா வா என்று அவளை அழைத்துக்கொண்டு குடிலுக்குள் போனான்.

அடக்கடவுளே நானா தான் வந்து மாட்டிக்கிட்டேனா என்று ஷமீரா சொல்ல,அதுல என்ன சந்தேகம் இந்த புள்ளிமான் இந்த வேங்கைக்கு தான டி என்று மனைவியை தூக்கி சுத்த,யோவ் கையில பால் இருக்குயா என்ன பண்ற என்று கத்தினாள்.

அட ஆமா இதை நான் மறந்துட்டேனே!

பாதாம் பிஸ்தா எல்லாம் போட்டு நல்லா சுண்ட காச்சிய பால் தானே எடுத்துட்டு வந்த?சக்கரை போடல தானே என்கவும் ஷமீராவோ கணவனை முறைத்து பார்க்க,என்ன டி லுக்? தெம்பா இருந்தா தானே எல்லாத்துக்கும் நல்லது என்றான்.

அது இருக்கட்டும்,அப்படி ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தீங்களே,புதுசா ஏதாச்சும் கேஸ்ல போய் தலையை விடுகிறீர்களா என்க...பார்த்தியா போலீஸ்காரன் பொண்டாட்டி எப்படி யோசிக்கிறாளே என்று மனைவியின் தோளின் மேல் கையை போட்டவாறு அங்கிருந்த பெட்டியில் உட்கார்ந்தவன் செல்லம் செல்லம் இப்போதைக்கு மாமாவோட டூட்டியே வேறு டி..

அதனால கேஸ் பற்றிய சிந்தனைகள் எல்லாம் எனக்கு கிடையாது என்க...ஓஓஓ அப்படி என்ன ஐயா யோசிக்கிறீங்க சொல்லுங்க பாக்கலாம் என்றாள்.

நிஜமாகத்தான் கேட்குறியா?சொல்லலாமா டி? சொன்ன பிறகு ஐயோ ஐயோன்னு நீ சொல்ல கூடாது என்க,அது நீங்க சொல்றதை பொறுத்து தான் இருக்கு என்றாள்.

"இப்படி சொன்னா என்ன டி அர்த்தம்"

இப்ப நான் சொல்லனுமா?வேண்டாமா?என்று மனைவியின் தோள்பட்டையில் மெல்லியதாக கடித்துக் கொண்டு கேட்க,கணவனின் ஸ்பரிசங்களோ கிச்சுகிச்சு மூட்டுவது போல் இருக்க வலம் புறம் அசைந்தாள்.

ஏய் மனுஷனுக்கு மூடு ஏத்தாதடி இப்படியெல்லாம் அசையாதே என்று இறுக்கமாக பிடித்து தனது நெஞ்சோடு சாய்த்தவன்,நான்தான் சொன்னேன்ல ஹனிமூன் போகப் போறோம்னு.அதுக்கு ட்ரெஸ் எல்லாம் இங்கிருந்து எடுத்துட்டு போகலாமா இல்ல அங்க போய் புதுசா வாங்கலாமானு யோசனை.

ஏன்னா நமக்குதான் ஒன்றுமே தேவைப்படாதே என்க..கணவன் வேறு எதுவோ சொல்ல வரான்னு நினைத்து கேட்டுக் கொண்டிருந்தவள்,இதை காதில் வாங்கிட்டு வேகமாக திரும்பி செழியனின் முடியை பிடித்து குளுக்கினாள்.

ஹா ஹா என்று சிரித்தவன் அடியே என்ன டி பண்ற?.என்ன பேச்சு பேசுறீங்க இப்படி எல்லாம் பேசுவீங்களா பேசுவீங்களா என்று இன்னும் வேகமாக குளுக்க உன்கிட்ட பேசாம வேற யார்கிட்ட பேச போறேன்?

நீயே நல்லா யோசிச்சு பாரு டி. ஹனிமூன் போன இடத்துல நமக்கு இதெல்லாம் தேவைப்படுமா அந்த அறிவு கூட இல்லையே நீ எல்லாம் என்னடி பிஜி படிச்ச என்றான்.

இதெல்லாம் பி ஜி படிக்கிற இடத்துல சொல்லி கொடுக்குறாங்களா என்று ஷமீரா முறைக்க,இதெல்லாம் ஜென்ரல் நாலேஜ் டி.ஒரு வயசு வந்த பிறகு இதெல்லாம் தானாவே தெரிஞ்சுக்கணும்.யாரும் சொல்லிக் கொடுக்கிற விஷயமில்லை.

ஒரு தத்தியை போய் காதலிச்சு கல்யாணம் பண்ணிருக்கேனே கடவுளே என்று பின்பக்கமாக மெத்தையில் சரிய அவன் முடியை பிடித்திருந்ததால் ஷமீராவும் கணவன் மீது விழுந்தாள்.

தன் மேல் விழுந்தவளை ஒரு கையால் இறுக்கிப்பிடித்து அந்த மெத்தையில் உருண்டவன்,செல்லம் உண்மையிலேயே சீரியஸான ஒரு விஷயம் நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன் நீ என்ன சொல்ற என்க...

எது இந்த ஃபர்ஸ்ட் நைட் கதையா என்கவும்,மனைவியின் முகத்தோடு உரசி கொண்டே வேற ஒன்னு டி என்றான்...

அப்படியா..!

"சரி விஷயத்தை சொல்லுங்க" என்க..நம்ம குழந்தை பெற்றுக் கொள்ளலாமா என்றான்.திடீரென்று கணவன் இப்படி ஒன்றை கேட்பான் என்பதை எதிர்பார்க்காதவளோ அதிர்ச்சியாக பார்க்க,என்னடி இப்படி பாக்குற?என்னமோ தெரியல நமக்கு ஒரு குழந்தை வேணும் போல எனக்கு தோணுது.

உன்கிட்ட கொஞ்ச நாள் போகட்டுமென்று சொல்லிட்டேன் தான். ஆனா எனக்கு ஒரு குட்டி ஷமீராவை பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு டி.நீ என்ன சொல்ற என்கவும்,அவளோ எதுவும் சொல்ல முடியாமல் வேறு பக்கம் திரும்பிக்கொள்ள,வெட்கத்தில் தன்னவளின் முகம் சிவப்பது செழியனுக்கு நன்கு தெரிந்தது.

ஆக என் பொண்டாட்டி ரெடி அப்படித்தானே என்கவும் நான் ஒன்னும் அப்படியெல்லாம் சொல்லவே இல்லையென்றாள்...

ஹா ஹா என்று சிரித்தவன் அது உன் முகமே சொல்லுது டி நாம குழந்தை பெத்துக்கலாம் என்க,அய்யோ போதும் வாயை மூடுங்கள் என்றாள்.

அடி கள்ளி..! என்றவாறு தன் பக்கமாய் வேகமாய் திருப்பியவன் மனைவியின் உதட்டோடு தனது முரட்டு இதழால் மூட, அடப்பாவி நான் என்ன சொல்றேன் நீ என்னய்யா பண்ற என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

விடியல் முழுதாய் ஆரம்பிப்பதற்கு முன்பே பொள்ளாச்சி போவதற்காக கிளம்பினானுங்கள்.

பின்னர் செல்லதுரை வானதியிடம் சொல்லிக் கொண்டு செழியன் ஷமீரா ஒரு காரிலும் ருத்ரன் தீபன் ஒரு காரிலும் வெற்றி கபிலன் அவர்கள் மனைவியோடு வந்த காரிலும் அங்கிருந்து புறப்பட்டார்கள்.போகும் வழியில் தன்ராஜ் அவர் காரில் இவர்களோடு ஜாயின் பண்ணிக் கொண்டார்.

ஓய் உனக்கு கார் ஓட்ட தெரியும் இல்ல, ஓட்டேன்டி என்க...தெரியும் தான்.காலேஜ் படிக்கும் போது லைசன்ஸ் எடுத்தது.அதுக்கப்புறம் பிராக்டீஸ் பண்ணல டச்சு விட்டு போயிடுச்சு என்றாள்.

ஊப் இவ்வளவு தானா...மாமா நானிருக்க நீ ஏண்டி செல்லம் கவலைப்படுற,இங்க வா நான் உனக்கு கற்றுக் கொடுக்கிறேன் என்று செழியன் கூப்பிட,உங்களுக்கு என்ன மண்டையில் ஏதாச்சும் அடிபட்டுருச்சா?

என் ஹச் ரோட்டில் போய் கத்து தரேன் கித்து தரேனு ஒளரிக்கிட்டு இருக்காமல் ஒழுங்கா வண்டியை ஓட்டுயா என்றாள்.

மதியம் 2 மணிக்கு எல்லாம் பொள்ளாச்சியில் இருக்கும் வெற்றி வீட்டிற்கு நான்கு காரும் வந்து சேர்ந்தது.அவர்களுக்காக ரூபாவும் ஜூலியும் வாசலிலே காத்திருந்தனர்.

பின்னர் கீழே இறங்கி வந்தவர்களிடம் நலம் விசாரித்து விட்டு வீட்டிற்குள் அழைத்து போய் தன்ராஜை சித்தப்பா என்றும் செழியன்-ஷமீரா தம்பி,தம்பி மனைவி என்று ருத்ரன் அறிமுகப்படுத்தி வைக்க,ரூபாவோ தனது சித்தப்பா பையனை பார்த்து கண் கலங்கினாள்.

இருவரும் ஒத்த வயது என்பதால் அழாத ரூபா.மச்சான் ஏதாச்சும் பண்ணுனா சொல்லு முட்டிக்கு முட்டி லாடம் கட்டிடுறேன் என்று அவள் கண்ணை துடைத்துவிட,அடப்பாவி நீங்க பாசமலர் படம் ஓட்டுவதற்கு எதுக்குடா என்னை வம்புக்கு இழுக்குறீங்க என்று தீபன் முறைத்து பார்த்தான்.

தம்பி இது யாரு வீடு என்று தன்ராஜ் கேட்க நம்ம வெற்றியோட வீடு தான் பா. வெற்றி நானு கபி மூணு பேரும் ஒன்னாதா டெல்லியில் வேலை பார்க்கிறோம் என்று செழியன் சொல்ல, அப்படியா என்றவர் அந்த வீட்டை ரசனையோடு பார்த்தார்.

சரி கைகால் கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்.அம்மாவும் ஆன்ட்டியும் தோட்டத்துல வாழை இலை பறிக்க போயிருக்கிறார்கள் என்று சொல்ல,
அப்படியா என்றனர்.

செழியன்-ஷமீராவுக்கும், தன்ராஜுக்கும் மேல இருக்கும் இரண்டு ரூமை காட்டி இதை எடுத்துக் கொள்ளுங்கள் என்க சரி என்று அவர்களும் ரூமிற்குள் போய் பிரஷ் ஆகிட்டு கீழே வந்தனர்.

கபிலனின் குழந்தை ரியான் அழுவதால் ரியா மேலே இருக்க மற்றவர்கள் மற்றும் கீழே வந்தனர்.எல்லாரும் உட்கார்ந்துக்கலாம்.தேவையானதை எல்லாம் எடுத்து போட்டுக்கலாம் என்க ஹம் என்று சாப்பிட்டு முடித்தவர்கள் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று மேலே ரூமிற்கு போனவர்கள் காரில் வந்த அசதியில் படுத்ததும் தூங்கிவிட்டனர்.

திடீரென இதய துடிப்பு அதிகமாவதை உணர்ந்த தன்ராஜ் கையிலிருந்த புத்தகத்தை மூடி வைத்தவர் ஜன்னல் வழியாக தெரியும் தூரத்து இயற்கையில் கவனத்தை செலுத்த மனம் ஏனோ ஒருவித அலைப்புறுவதை கண்டு ஏன் நமக்கு இப்படி இருக்க?

சரி கொஞ்ச நேரம் வெளியே நடந்துட்டு வரலாமென்று தானாக சொல்லிக் கொண்டவர் தனது போனை எடுத்துக் கொண்டு கதவை சாற்றி விட்டு படியிலிறங்கி கீழே வந்தார்.

ஹாலில் உட்கார்ந்து கொண்டு எஸ்தரோடு பேசிக் கொண்டிருந்த ஜனனி காலடி சத்தம் கேட்டு திரும்ப, தன்ராஜ் வருவது தெரிந்தது.

அப்பா காபி எடுத்துட்டு வரட்டுமா என்க,இருக்கட்டும் மா.வாக்கிங் போய்ட்டு வந்துடுறேனே என்கவும் சரிங்கப்பா என்றவள் எஸ்தரிடம் சொல்லிக் கொண்டிருந்த அவளின் கல்யாண கதையை மீண்டும் தொடர்ந்தாள்.

மற்றவர்களும் தூங்கி எழுந்து கீழே வந்தனர்.அவர்களுக்கு காபி, டீ என்று ஜனனி போட்டுக் கொடுக்க செழியனும் ஷமீராவும் மேலே இருந்தனர் இன்னும் வரவில்லை.

சரி புதுசா கல்யாணம் ஆனவங்க அவர்களை தொந்தரவு பண்ண வேண்டாம் என்று இவர்கள் இருந்தனர்.

ரூமில் இருந்த பாயலும் ஹாலில் வந்து அவர்களோடு பேசிக் கொண்டிருக்க, வாக்கிங் போயிட்டு வீட்டுக்குள் வந்த தன்ராஜ் அங்கே உட்கார்ந்திருந்த உருவத்தை பார்த்து பாயல் என்றவாறு மயங்கி விழுந்தார்.

அவரின் குரலைக் கேட்டு இவர்கள் எல்லாம் ஓடிப் போக பாயலோ ஆணியடித்த போல் அதே இடத்தில் நிற்க,அவர் கண்ணில் இருந்து கண்ணீரோ ஆறாய் வடிந்து ஓடியது.

தண்ணீரை தெளித்து தன்ராஜை எழுப்ப எனக்கு ஒன்னும் இல்லப்பா என்று எழுந்தவர் வேகமாக போய் அங்கிருந்த பாயலை அணைத்துக் கொண்டு பாயல் நீ உயிரோடு தான் இருக்கியா டி நீ இல்லாம 25 வருஷமா நடைபிணமா வாழ்ந்துட்டு இருந்தேன் டி.

ஏண்டி என்னை தேடி வரவில்லை?

இத்தனை வருஷமும் எங்க இருந்த?

ஒரு நாள் கூட என் நினைவு உனக்கு வரவில்லையா என்று கத்தி கதறி அழுதார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
387
அங்கிருந்தவர்களுக்கு இருவரையும் பார்த்ததும் அவர்களுக்குள் ஏதோ ஒரு உறவு இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.சரி அவர்களுக்கு தனிமையை கொடுப்போம் என்று அவரவர் ரூமிற்கு சென்று விட்டனர். மச்சி பாயல் சித்திக்கும் இவருக்கும் என்ன தொடர்பா இருக்கும்?

அவங்க ரெண்டு பேரையும் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது என்று ருத்ரன் கேட்க, என்ன அந்த கால காதலர்கள் போல என் மனசுக்கு படுது.

சரி இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்களே விஷயத்தை சொல்லுவாங்க அதுக்குள்ள எதுக்கு நம்ம தலையை போட்டு பிச்சிக்கனும். இந்த ஊர் இயற்கையோடு சேர்ந்து ரொம்ப அழகா இருக்கு இல்லையா பேசாம இங்கே எதாச்சும் பிளாட் வாங்கிட்டு செட்டில் ஆகிடலாம் போல டா.

இன்னும் எத்தனை வருஷம் தான் அந்த பொல்யூஷனில் இருக்கிறது என்று தீபன் கேட்க,எனக்கும் அதே சிந்தனை தான் என்று ஜூலி சொல்ல,அண்ணன் தங்கச்சி இரண்டு பேருக்கும் சுய அறிவே கிடையாதாயென்று ருத்ரன் சிரித்தான்.

"ஒரே போல சிந்தனை டா விளக்கெண்ணெய் என்று தீபன் முறைத்தான்".

சரி சரி நம்ம வந்த விஷயத்தை மறந்துட்டோமே,நாளன்னைக்கு நம்ம வேலையில ஜாயின் பண்ணனும் ஞாபகம் இருக்கா என்று தீபன் கேட்கவும் எப்படிடா இல்லாமல் இருக்கும் என்று அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

தன்னை அணைத்து படுத்திருந்த கணவனை பார்த்து முறைத்தவள் ஏங்க மணி என்ன ஆகுது இப்படியே படுத்திருந்தா என்னதான் அர்த்தம் கீழே இருக்கிறவர்கள் என்ன நினைப்பாங்க என்று ஷமீரா திட்ட,நம்மள பத்தி என்ன நினைக்க போறாங்க டி?

தேவையில்லாம கண்டதெல்லாம் நீ யோசிக்காத,வா குளிக்க போகலாம் என்கவும் அதுக்கு முதல்ல என்ன விடணும் என்றாள்.குளிக்க போகலாம்னு தான் சொன்னேன் நீ போய் குளி என்று நான் சொல்லலடி என்று மனைவியை தூக்கிக் கொண்டு ரெஸ்ட் ரூமுக்கு சென்றான்.அரை மணி நேரத்தில் இருவரும் குளித்து தயாராகி கீழே வந்தனர்.

அங்கே மற்றவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்க வாட செழியா நல்லா தூங்குனியா என்க...ஆமா டா.ரொம்ப தலைவலி என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து சோபாவில் உட்கார்ந்தவன் ஷமீரா டீ எடுத்துட்டு வா என்று மனைவியிடம் சொல்ல,இதோங்க என்றவள் அண்ணி கிச்சன் எங்க இருக்கு என்று ஜனனியிடம் கேட்க நீ உக்காரு நான் போய் எடுத்துட்டு வரேன் என்றாள்.

இருக்கட்டுங்கண்ணி நான் போடுறேன் என்கவும்,அங்கு இடது பக்கத்தில் இருக்கு பாரு என்று சொல்ல ஷமீராவும் அங்கே சென்றாள்.மனைவி போவதை பார்த்த செழியன் டேய் என் மாமியார் எங்கே இருக்கிறார்கள் என்க,கிச்சன்ல தான் என்றனர்.

வனிச்சூர்-தம்புசாமி வீடு:

எலே சின்னவனே என்று தாத்தா கூப்பிட,போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த கண்ணன் சொல்லு தாத்தா என்றவாறு அவரிடம் வந்தான்.

உனக்கு பொண்ணு பார்த்துருக்கு.

"ரெண்டு பேருக்கும் சாதகம் பொருத்தலாம் நல்லா இருக்கு"

முடிஞ்சா கையோடு தட்டு மாத்திக்குற போல இருக்கும்.நமது சொந்த பந்தங்க எல்லார்கிட்டயும் சொல்லியாச்சு, செழியனால் தான வர முடியலை என்கவும்,என்ன தாத்தா திடீர்னு இப்படி சொல்ற என்று அதிர்ந்து போனான்.

"ஓஓஓ,உன் அண்ணனுங்க,அத்த மவன் போல நீயும் யாரையாவது இழுத்துட்டு வர நினைச்சியோ"அப்படி ஒரு எண்ணம் இருந்துச்சு விளக்கமாறு பிஞ்சிடும் என்றவாறு தாத்தா தனது மீசையை முறுக்க,மனசுல இருக்குற விஷயத்தை எப்படி வீட்டில் சொல்றது என்று கண்ணன் யோசனையாக,அங்கு வந்த கனலரசன் என்ன டா சின்னவனே, உனக்கு வேற எதாச்சு யோசனை இருந்தா சொல்லிடு.

கடைசி நேரத்தில் நீ எதாச்சும் கோல் மால் வேலை பண்ணுன மகன்னு பார்க்க மாட்டேன் என்ன நடக்கும்னு தெரியாது என்றார்.

அப்பா அது வந்து பா என்று கண்ணன் தயங்க,அப்போது அங்கு வந்து கவிதா அண்ணா பொண்ணு யாருன்னு தெரியுமா?என்று ஆர்வமாக கேட்டாள்.

தெரியாதுடா??

யார் என்று கடுப்பாக கேட்க,நம்ப பத்மா அத்தை பொண்ணு மலர் அக்கா தான் என்று கவிதா சிரிக்க,என்னடா சொல்ற என்று அதிர்ந்து போய் தங்கச்சியை பார்க்க, ஆமா ணா..

நேத்து நம்ம கோயில்ல இருக்கும் போது அத்தை மாமா கிட்ட தாத்தா தான் பேசி முடிச்சாங்க.நீ பந்தி நடக்கிற இடத்தில் இருந்ததால் உனக்கு இது தெரியலை என்று சிரித்தாள்.

ஏன் தாத்தா நம்ப மலரா பொண்ணு என்கவும்,ஆமா டா மலர் தான் பொண்ணு.உன் அம்மாவோட சின்னம்மா பேத்தி தானே..மலர கட்டுறதுல உனக்கு எங்க வலிக்குது??

படிச்ச புள்ள,டீச்சரா இருக்கு நம்ம சொந்தக்காரப் புள்ளை.இன்னும் உனக்கு என்ன வேணும்?அவனுங்க போல இழுத்துட்டு வரலன்னு பார்த்துட்டு இருக்கியா என்று மீண்டும் தாத்தா கோவமாக கேட்க...

ஐயோ தாத்தா அப்படி எல்லாம் எனக்கு எந்த எண்ணமும் கிடையாது.நீங்களா பார்த்து எந்த கழுதையை கட்டி வைத்தாலும் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் போதுமா என்றான்.

சும்மா வாய் சவடால் எல்லாம் வேணாம் அதை செய்து காட்டு.போய் நல்ல துணியா போட்டு சிங்காரிச்சிட்டு கீழ வா.பத்து மணிக்கு இங்கிருந்து கிளம்பனும் என்றார்.

நல்லா சிங்காரிக்கனும்னா இப்ப மட்டும் நான் என்ன நரிக்குறவன் போலயா நிக்கிறேன் என்று தாத்தாவை முறைக்க, யாருக்குடா தெரியும்???நம்ம பண்பாடு என்ன,"வேஷ்டி சட்டை".

"பார்க்க எவ்வளவு லட்சணமா இருக்கும்"

எப்ப பார்த்தாலும் இந்த கொழாவை மாட்டிட்டு நிக்கிறியே என்று பேரனை முறைக்க,தாத்தா என்று பல்லை கடித்தவன் இது "டிராக் பேண்ட்"உனக்கு எங்கே இதைப்பற்றி தெரிய போகுது என்று சொல்லிவிட்டு தயாராக மாடிக்கு சென்றான்.

பெண்கள் எல்லாம் தயாராக,அம்மா நான் முன்னாடியே மலர் வீட்டுக்கு போகட்டுமா என்று கண்மணி கேட்க சரி போ என்றதும்,கண்மணியும் கவிதாவும் அங்கிருந்து பின்னாடி தெருவில் இருக்கும் மலர் வீட்டுக்கு சென்றார்கள்.

அம்மாடி மலருக்கு புடவை மத்த நகை எல்லாம் எடுத்து வச்சுட்டீங்களா? எந்த குறையும் இருக்கக்கூடாது என்று சுமதி சொல்லவும் மீண்டும் ஒரு முறை எல்லாம் சரியா இருக்கா என்று பார்த்துக் கொண்டனர்.

அப்பொழுது வீரையன் தாத்தாவும் அவர் மனைவி வீராயியோடு, அவர்கள் மகன் வழி பேரன் நெடுஞ்செழியன் அவன் மனைவி கஸ்தூரி அவர்களின் குழந்தை கவினோடு வந்தனர்.

வா மச்சான் என்கவும்,என்ன மாமா கிளம்பலாமா என்க,சின்னவன் இன்னும் வரலையே என்கும் போது
பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக இறங்கி வரும் பேரனை பார்த்த தாத்தா சிரித்து விட்டு ஏன்டா காசு கிடைக்கலையா???பிளேடு வாங்கி தல முடி வெட்டினா என்ன?தாடியும் மொகரையும் பாரு என்றார் .

தாத்தா என்று முறைத்தவன் இப்போ உனக்கு என்ன பிரச்சனை என்க....சரி ரெண்டு பேரும் ஆரம்பிக்காதிங்க. நல்ல நேரம் வந்துட்டு வாங்க என்று வீரையன் எழ,சீர்வரிசை பொருட்களோடு பக்கத்து தெருவில் இருக்கும் மலர் வீட்டில் சம்பந்தம் பண்ணுவதற்காக அங்கிருந்து புறப்பட்டனர்.

மலர் வீடு:

மலரின் அம்மாவோடு செழியன் அம்மா வானதி,இன்னும் ரெண்டு சொந்தக்கார பெண்மணிகள் வருபவர்களுக்காக வடை பஜ்ஜி மற்றும் மதிய சாப்பாட்டிற்கு தோட்டத்தில் சமைப்பவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்க,அவள் அப்பா பரமுவோ ஒரு முறை மீண்டும் எல்லாம் சரியாக இருக்கா என்று பார்த்துக் கொண்டிருந்தார்.

"மலருக்கு இதை எப்படி தடுத்து நிறுத்துவது என்று தெரியவில்லை".

நேற்று கோயிலில் இருந்து வீட்டிற்கு வரும்போது நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வருகிறார்கள் என்று மட்டும் தான் சொல்லி இருந்தார்கள். யார் வருகிறார்கள் என்பதை சொல்லவில்லை.

தன் மனதில் உள்ள காதலை சொல்லலாம் என்று நினைக்கும் போது தான் காதலிப்பவனுக்கே இந்த விஷயம் தெரியாது.பெற்றோர்களிடம் சொல்லி என்ன பண்ணுவது என்று இரவெல்லாம் தூங்காமல் உள்ளுக்குள்ளே கதறிக் கொண்டிருந்தாள்.

நேரமும் கடந்து செல்ல சீக்கிரம் போய் குளிச்சிட்டு ரெடியாகு.உனக்காக அம்மா புடவை நகையெல்லாம் எடுத்து வைக்கிறேன் என்று கிச்சனிலிருந்து வந்து சொல்லிவிட்டு பத்மா போக..

கடவுளே....!!!

மலையம்மா ஏன் மா எனக்கு இப்படி ஒரு நிலைமை என்று சத்தம் இன்றி அழுதவள்,தயாராகவில்லை என்றால் கண்டிப்பாக தனது அம்மா உண்டு இல்லை என்று பண்ணி விடுவார் என்று தெரிந்து,வழக்கம் போல் ஏதாச்சும் சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என்ற முடிவோடு குளிப்பதற்கு சென்றாள்.

அத்தை என்றவாறு கவிதாவும் கண்மணியும் வர,கிச்சன்ல தான் இருக்கிறேன் வாங்கடி என்று குரல் கொடுத்தார்.அங்கே போக ஆஹா வாசனை மூக்கை துளைக்குது என்று கவிதா சொல்லவும் இந்தா சின்னகுட்டி உனக்கு இல்லாததா என்று ஒரு தட்டில் சூடாக இரண்டு வாழைக்காய் பஜ்ஜியையும் உளுந்த வடையும் வச்சு சட்னி ஊத்தி கொடுக்க,அத்தைனா அத்தை தான் என்று வாங்கிக் கொண்டவளோ அங்கிருந்த கிச்சன் மேடையில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டாள்.

கண்ணு இந்தாடி என்று பஜ்ஜை நீட்ட,கொஞ்ச நேரம் போகட்டுங்கத்தை.மலர் ரெடியாயிட்டாளா என்க,சொல்லிட்டு வந்திருக்கிறேன் நீ போய் பாரு என்கவும்,ம்ம் அண்ணன் தான் பொண்ணு பாக்க வருதுன்னு சொல்லியாச்சா?

அதெல்லாம் நான் ஒண்ணுமே சொல்லலை என்கவும் அப்படியா சூப்பர் என்றவள் ஆருயிர் தோழியின் ரூம் கதவை போய் தட்ட குளித்து வந்து தலையை துவட்டிக் கொண்டிருந்த மலரோ யாரு என்க நான் தாண்டி என்றாள்.

கதவைத் திறக்கவும் மலர் என்க..கண்மணி உள்ள வந்ததும் வேகமாய் தாழ்ப்பாள் போட்டவள் இந்த வீட்ல என்ன நடக்குதுன்னு பார்த்தியாடி?

இவங்க பொண்ணு பாக்க வர போல தெரியல ஏதோ நிச்சயம் பண்ற போல ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க என்கவும்,அப்புறம் என்ன தாராளமா பண்ணிட்டு போ இதுல உனக்கு என்ன கஷ்டம் என்றாள்.

என்னடி நீ இப்படி சொல்ற? என்று மலர் அதிர,வேற எப்படி சொல்லணும்? நீ எங்கண்ணனிடம் காதலை சொல்ல போறது கிடையாது.அது மனசுல இந்த ஜென்மத்துல உன் மேல காதல் வராது சரியான மண்ணு மூட்டையா இருக்கு என்கும் போது மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க கடவுளே என்று போய் கதவை திறக்க அங்கே பத்மா நின்று கொண்டிருந்தார்.

மலரு சீக்கிரம் ரெடி ஆகு,அவங்க எல்லாம் வந்துட்டு இருக்காங்க என்று சொல்லிவிட்டு வெளியே போனார்.


வீழ்ந்தேனடி...
 
Active member
Joined
May 9, 2025
Messages
110
I like the thatha very much,Edna panninallum correcta kura kandu pudikkararu.update the next part soon want to read Shamira and Esther reaction.please don’t write Payal and Dhanaraj fb now.me pavaaaaaaam.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
387
எப்போதும் எனது பதில் இதுதான் எதிர்பாராததை கண்டிப்பா எதிர்பார்க்கலாம்.அடுத்து இதுதான் வரும்ணு நீங்க கெஸ் பண்ணினால் நிச்சயமா அது இருக்காது😁😁😁🥰🥰🤩🤩🤩🤩🤣🤣😍😍😁🤭🤭🤭🤭
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top