Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 387
- Thread Author
- #1
வனிச்சூர்:
பால் டம்ளரோடு ரூமிற்கு வந்தவள் கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு கணவனை தேட செழியன் அங்கில்லை.பால்கனியில் இருக்காரோ என்று பார்க்க அங்கும் இல்லாமல் போக,இந்த மனுஷன் இந்த நேரத்தில் எங்கே போனார்?
ஒரு வேளை அண்ணனுங்க கூட பேசிட்டு இருக்கிறாரா என்று யோசித்தவள்,இல்லையே அவங்க நால்வரும் ரூமிற்கு போனதை நாம பார்த்தோமே.
திரும்ப இந்த மனுஷன் எதாவது கேஸை இழுத்துக் கிட்டு அலையுறார் போலவே என்று முணுமுணுத்தவள், எதுக்கும் மாடியில் போய் பார்க்கலாமென்று பால் டம்ளரோடு படியில் ஏறி வரும் போதே செழியன் அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து நிற்பது தெரிந்தது.
எந்த கோட்டையை புடிக்க இந்த ஐயா இப்படி கையை கட்டிக்கிட்டு நிக்கிறாரு என்றவாறு வர,கொலுசு சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவன் ஏன் டி மணி என்ன ஆகுது இப்ப தான் வருவியா?
மாமா வேலை ஆரம்பிக்கனும் இல்ல, காலையில சீக்கிரமா கிளம்பனும் கமான் கமான் என்க..எதேஏஏஏ என்று திருத்திருவென்று ஷமீரா முழிக்க, என்னடி முழிக்கிற?எத்தனை வாட்டி சொல்லிருக்கேன் சாப்பிட்டு சீக்கிரமா மேல வந்துருனு?
டைம் வேஸ்ட் பண்ணாதே வா வா என்று அவளை அழைத்துக்கொண்டு குடிலுக்குள் போனான்.
அடக்கடவுளே நானா தான் வந்து மாட்டிக்கிட்டேனா என்று ஷமீரா சொல்ல,அதுல என்ன சந்தேகம் இந்த புள்ளிமான் இந்த வேங்கைக்கு தான டி என்று மனைவியை தூக்கி சுத்த,யோவ் கையில பால் இருக்குயா என்ன பண்ற என்று கத்தினாள்.
அட ஆமா இதை நான் மறந்துட்டேனே!
பாதாம் பிஸ்தா எல்லாம் போட்டு நல்லா சுண்ட காச்சிய பால் தானே எடுத்துட்டு வந்த?சக்கரை போடல தானே என்கவும் ஷமீராவோ கணவனை முறைத்து பார்க்க,என்ன டி லுக்? தெம்பா இருந்தா தானே எல்லாத்துக்கும் நல்லது என்றான்.
அது இருக்கட்டும்,அப்படி ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தீங்களே,புதுசா ஏதாச்சும் கேஸ்ல போய் தலையை விடுகிறீர்களா என்க...பார்த்தியா போலீஸ்காரன் பொண்டாட்டி எப்படி யோசிக்கிறாளே என்று மனைவியின் தோளின் மேல் கையை போட்டவாறு அங்கிருந்த பெட்டியில் உட்கார்ந்தவன் செல்லம் செல்லம் இப்போதைக்கு மாமாவோட டூட்டியே வேறு டி..
அதனால கேஸ் பற்றிய சிந்தனைகள் எல்லாம் எனக்கு கிடையாது என்க...ஓஓஓ அப்படி என்ன ஐயா யோசிக்கிறீங்க சொல்லுங்க பாக்கலாம் என்றாள்.
நிஜமாகத்தான் கேட்குறியா?சொல்லலாமா டி? சொன்ன பிறகு ஐயோ ஐயோன்னு நீ சொல்ல கூடாது என்க,அது நீங்க சொல்றதை பொறுத்து தான் இருக்கு என்றாள்.
"இப்படி சொன்னா என்ன டி அர்த்தம்"
இப்ப நான் சொல்லனுமா?வேண்டாமா?என்று மனைவியின் தோள்பட்டையில் மெல்லியதாக கடித்துக் கொண்டு கேட்க,கணவனின் ஸ்பரிசங்களோ கிச்சுகிச்சு மூட்டுவது போல் இருக்க வலம் புறம் அசைந்தாள்.
ஏய் மனுஷனுக்கு மூடு ஏத்தாதடி இப்படியெல்லாம் அசையாதே என்று இறுக்கமாக பிடித்து தனது நெஞ்சோடு சாய்த்தவன்,நான்தான் சொன்னேன்ல ஹனிமூன் போகப் போறோம்னு.அதுக்கு ட்ரெஸ் எல்லாம் இங்கிருந்து எடுத்துட்டு போகலாமா இல்ல அங்க போய் புதுசா வாங்கலாமானு யோசனை.
ஏன்னா நமக்குதான் ஒன்றுமே தேவைப்படாதே என்க..கணவன் வேறு எதுவோ சொல்ல வரான்னு நினைத்து கேட்டுக் கொண்டிருந்தவள்,இதை காதில் வாங்கிட்டு வேகமாக திரும்பி செழியனின் முடியை பிடித்து குளுக்கினாள்.
ஹா ஹா என்று சிரித்தவன் அடியே என்ன டி பண்ற?.என்ன பேச்சு பேசுறீங்க இப்படி எல்லாம் பேசுவீங்களா பேசுவீங்களா என்று இன்னும் வேகமாக குளுக்க உன்கிட்ட பேசாம வேற யார்கிட்ட பேச போறேன்?
நீயே நல்லா யோசிச்சு பாரு டி. ஹனிமூன் போன இடத்துல நமக்கு இதெல்லாம் தேவைப்படுமா அந்த அறிவு கூட இல்லையே நீ எல்லாம் என்னடி பிஜி படிச்ச என்றான்.
இதெல்லாம் பி ஜி படிக்கிற இடத்துல சொல்லி கொடுக்குறாங்களா என்று ஷமீரா முறைக்க,இதெல்லாம் ஜென்ரல் நாலேஜ் டி.ஒரு வயசு வந்த பிறகு இதெல்லாம் தானாவே தெரிஞ்சுக்கணும்.யாரும் சொல்லிக் கொடுக்கிற விஷயமில்லை.
ஒரு தத்தியை போய் காதலிச்சு கல்யாணம் பண்ணிருக்கேனே கடவுளே என்று பின்பக்கமாக மெத்தையில் சரிய அவன் முடியை பிடித்திருந்ததால் ஷமீராவும் கணவன் மீது விழுந்தாள்.
தன் மேல் விழுந்தவளை ஒரு கையால் இறுக்கிப்பிடித்து அந்த மெத்தையில் உருண்டவன்,செல்லம் உண்மையிலேயே சீரியஸான ஒரு விஷயம் நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன் நீ என்ன சொல்ற என்க...
எது இந்த ஃபர்ஸ்ட் நைட் கதையா என்கவும்,மனைவியின் முகத்தோடு உரசி கொண்டே வேற ஒன்னு டி என்றான்...
அப்படியா..!
"சரி விஷயத்தை சொல்லுங்க" என்க..நம்ம குழந்தை பெற்றுக் கொள்ளலாமா என்றான்.திடீரென்று கணவன் இப்படி ஒன்றை கேட்பான் என்பதை எதிர்பார்க்காதவளோ அதிர்ச்சியாக பார்க்க,என்னடி இப்படி பாக்குற?என்னமோ தெரியல நமக்கு ஒரு குழந்தை வேணும் போல எனக்கு தோணுது.
உன்கிட்ட கொஞ்ச நாள் போகட்டுமென்று சொல்லிட்டேன் தான். ஆனா எனக்கு ஒரு குட்டி ஷமீராவை பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு டி.நீ என்ன சொல்ற என்கவும்,அவளோ எதுவும் சொல்ல முடியாமல் வேறு பக்கம் திரும்பிக்கொள்ள,வெட்கத்தில் தன்னவளின் முகம் சிவப்பது செழியனுக்கு நன்கு தெரிந்தது.
ஆக என் பொண்டாட்டி ரெடி அப்படித்தானே என்கவும் நான் ஒன்னும் அப்படியெல்லாம் சொல்லவே இல்லையென்றாள்...
ஹா ஹா என்று சிரித்தவன் அது உன் முகமே சொல்லுது டி நாம குழந்தை பெத்துக்கலாம் என்க,அய்யோ போதும் வாயை மூடுங்கள் என்றாள்.
அடி கள்ளி..! என்றவாறு தன் பக்கமாய் வேகமாய் திருப்பியவன் மனைவியின் உதட்டோடு தனது முரட்டு இதழால் மூட, அடப்பாவி நான் என்ன சொல்றேன் நீ என்னய்யா பண்ற என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
விடியல் முழுதாய் ஆரம்பிப்பதற்கு முன்பே பொள்ளாச்சி போவதற்காக கிளம்பினானுங்கள்.
பின்னர் செல்லதுரை வானதியிடம் சொல்லிக் கொண்டு செழியன் ஷமீரா ஒரு காரிலும் ருத்ரன் தீபன் ஒரு காரிலும் வெற்றி கபிலன் அவர்கள் மனைவியோடு வந்த காரிலும் அங்கிருந்து புறப்பட்டார்கள்.போகும் வழியில் தன்ராஜ் அவர் காரில் இவர்களோடு ஜாயின் பண்ணிக் கொண்டார்.
ஓய் உனக்கு கார் ஓட்ட தெரியும் இல்ல, ஓட்டேன்டி என்க...தெரியும் தான்.காலேஜ் படிக்கும் போது லைசன்ஸ் எடுத்தது.அதுக்கப்புறம் பிராக்டீஸ் பண்ணல டச்சு விட்டு போயிடுச்சு என்றாள்.
ஊப் இவ்வளவு தானா...மாமா நானிருக்க நீ ஏண்டி செல்லம் கவலைப்படுற,இங்க வா நான் உனக்கு கற்றுக் கொடுக்கிறேன் என்று செழியன் கூப்பிட,உங்களுக்கு என்ன மண்டையில் ஏதாச்சும் அடிபட்டுருச்சா?
என் ஹச் ரோட்டில் போய் கத்து தரேன் கித்து தரேனு ஒளரிக்கிட்டு இருக்காமல் ஒழுங்கா வண்டியை ஓட்டுயா என்றாள்.
மதியம் 2 மணிக்கு எல்லாம் பொள்ளாச்சியில் இருக்கும் வெற்றி வீட்டிற்கு நான்கு காரும் வந்து சேர்ந்தது.அவர்களுக்காக ரூபாவும் ஜூலியும் வாசலிலே காத்திருந்தனர்.
பின்னர் கீழே இறங்கி வந்தவர்களிடம் நலம் விசாரித்து விட்டு வீட்டிற்குள் அழைத்து போய் தன்ராஜை சித்தப்பா என்றும் செழியன்-ஷமீரா தம்பி,தம்பி மனைவி என்று ருத்ரன் அறிமுகப்படுத்தி வைக்க,ரூபாவோ தனது சித்தப்பா பையனை பார்த்து கண் கலங்கினாள்.
இருவரும் ஒத்த வயது என்பதால் அழாத ரூபா.மச்சான் ஏதாச்சும் பண்ணுனா சொல்லு முட்டிக்கு முட்டி லாடம் கட்டிடுறேன் என்று அவள் கண்ணை துடைத்துவிட,அடப்பாவி நீங்க பாசமலர் படம் ஓட்டுவதற்கு எதுக்குடா என்னை வம்புக்கு இழுக்குறீங்க என்று தீபன் முறைத்து பார்த்தான்.
தம்பி இது யாரு வீடு என்று தன்ராஜ் கேட்க நம்ம வெற்றியோட வீடு தான் பா. வெற்றி நானு கபி மூணு பேரும் ஒன்னாதா டெல்லியில் வேலை பார்க்கிறோம் என்று செழியன் சொல்ல, அப்படியா என்றவர் அந்த வீட்டை ரசனையோடு பார்த்தார்.
சரி கைகால் கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்.அம்மாவும் ஆன்ட்டியும் தோட்டத்துல வாழை இலை பறிக்க போயிருக்கிறார்கள் என்று சொல்ல,
அப்படியா என்றனர்.
செழியன்-ஷமீராவுக்கும், தன்ராஜுக்கும் மேல இருக்கும் இரண்டு ரூமை காட்டி இதை எடுத்துக் கொள்ளுங்கள் என்க சரி என்று அவர்களும் ரூமிற்குள் போய் பிரஷ் ஆகிட்டு கீழே வந்தனர்.
கபிலனின் குழந்தை ரியான் அழுவதால் ரியா மேலே இருக்க மற்றவர்கள் மற்றும் கீழே வந்தனர்.எல்லாரும் உட்கார்ந்துக்கலாம்.தேவையானதை எல்லாம் எடுத்து போட்டுக்கலாம் என்க ஹம் என்று சாப்பிட்டு முடித்தவர்கள் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று மேலே ரூமிற்கு போனவர்கள் காரில் வந்த அசதியில் படுத்ததும் தூங்கிவிட்டனர்.
திடீரென இதய துடிப்பு அதிகமாவதை உணர்ந்த தன்ராஜ் கையிலிருந்த புத்தகத்தை மூடி வைத்தவர் ஜன்னல் வழியாக தெரியும் தூரத்து இயற்கையில் கவனத்தை செலுத்த மனம் ஏனோ ஒருவித அலைப்புறுவதை கண்டு ஏன் நமக்கு இப்படி இருக்க?
சரி கொஞ்ச நேரம் வெளியே நடந்துட்டு வரலாமென்று தானாக சொல்லிக் கொண்டவர் தனது போனை எடுத்துக் கொண்டு கதவை சாற்றி விட்டு படியிலிறங்கி கீழே வந்தார்.
ஹாலில் உட்கார்ந்து கொண்டு எஸ்தரோடு பேசிக் கொண்டிருந்த ஜனனி காலடி சத்தம் கேட்டு திரும்ப, தன்ராஜ் வருவது தெரிந்தது.
அப்பா காபி எடுத்துட்டு வரட்டுமா என்க,இருக்கட்டும் மா.வாக்கிங் போய்ட்டு வந்துடுறேனே என்கவும் சரிங்கப்பா என்றவள் எஸ்தரிடம் சொல்லிக் கொண்டிருந்த அவளின் கல்யாண கதையை மீண்டும் தொடர்ந்தாள்.
மற்றவர்களும் தூங்கி எழுந்து கீழே வந்தனர்.அவர்களுக்கு காபி, டீ என்று ஜனனி போட்டுக் கொடுக்க செழியனும் ஷமீராவும் மேலே இருந்தனர் இன்னும் வரவில்லை.
சரி புதுசா கல்யாணம் ஆனவங்க அவர்களை தொந்தரவு பண்ண வேண்டாம் என்று இவர்கள் இருந்தனர்.
ரூமில் இருந்த பாயலும் ஹாலில் வந்து அவர்களோடு பேசிக் கொண்டிருக்க, வாக்கிங் போயிட்டு வீட்டுக்குள் வந்த தன்ராஜ் அங்கே உட்கார்ந்திருந்த உருவத்தை பார்த்து பாயல் என்றவாறு மயங்கி விழுந்தார்.
அவரின் குரலைக் கேட்டு இவர்கள் எல்லாம் ஓடிப் போக பாயலோ ஆணியடித்த போல் அதே இடத்தில் நிற்க,அவர் கண்ணில் இருந்து கண்ணீரோ ஆறாய் வடிந்து ஓடியது.
தண்ணீரை தெளித்து தன்ராஜை எழுப்ப எனக்கு ஒன்னும் இல்லப்பா என்று எழுந்தவர் வேகமாக போய் அங்கிருந்த பாயலை அணைத்துக் கொண்டு பாயல் நீ உயிரோடு தான் இருக்கியா டி நீ இல்லாம 25 வருஷமா நடைபிணமா வாழ்ந்துட்டு இருந்தேன் டி.
ஏண்டி என்னை தேடி வரவில்லை?
இத்தனை வருஷமும் எங்க இருந்த?
ஒரு நாள் கூட என் நினைவு உனக்கு வரவில்லையா என்று கத்தி கதறி அழுதார்.