• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
டெல்லி :

தனது அருகிலிருக்கும் பி.ஏ வை பார்த்த மினிஸ்டர் அமர்நாத்,நம்ம குழந்தைக்கு ஆபரேஷன் பண்ணிய டாக்டரோட அட்ரஸ் விசாரி...

அப்படியே நம்ம நகை கடைக்கு போன் பண்ணி,விலையுயர்ந்த டைமண்ட் செட் ஒன்று அனுப்ப சொல்லு சேது.நேர்ல போய் கொடுத்துட்டு வரலாம்.

சரிங்க சார் என்ற சேதுவும அமர்நாத்தின் நகை கடைக்கு போன் பண்ணி டைமண்ட் செட்டை ஆர்டர் பண்ணி விட்டு, ஹாஸ்பிடலின் ரிசப்ஷனுக்கு சென்று ருத்ரனின் அட்ரஸை கேட்டார்.

மினிஸ்டர் அமர்நாத்தின் பி.ஏ என்பது தெரியுமென்பதால் குழந்தைக்கு ஆபரேஷன் பண்ணிய டாக்டர் ருத்ரன் என்பதாலும் அது சம்பந்தமாக தான் விசாரிக்க கேட்கிறார்களென்று ரிசப்ஷனிலிருந்த பெண்ணும் ருத்ரனின் அட்ரஸை எழுதி கொடுத்தாள்.

அதை வாங்கிக் கொண்டு மேலே வந்தவன் சார் நம்ம பில்ரோத் அபார்ட்மெண்ட்ல தான் தங்கி இருக்காங்க என்கவும்,அப்படியா சரி...
பாப்பா கண்ணு முழிக்கட்டும் என்றவர் தனது அருகில் உட்கார்ந்திருக்கும் மனைவியிடம்,நம்ம வீட்டிற்கு கிளம்பலாமா?.அதான் குழந்தைக்கு நல்லபடியா ஆப்ரேஷன் முடிந்துவிட்டதே..வீட்டுக்கு போய் ஒரு பூஜையை பண்ணலாம் என்க,அவருக்கும் அது சரி என்று பட்டது. பின்னர் குழந்தையின் அப்பா அம்மாவை தவிர மற்றவர்கள் அங்கிருந்து சென்றனர்.

மினிஸ்டர் வந்திருப்பதால் அந்த ஹாஸ்பிடலுக்கு பாதுகாப்பும் கொஞ்சம் கெடுபடியாக இருந்தது.அவர் அங்கிருந்து போன பிறகுதான் பொதுமக்களும் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தனர்.

காலையிலிருந்து ஏழாவது ப்ளோருக்கு பேஷண்டை பார்க்க வருபவர்களுக்கு எல்லாம் பலவித சோதனை செய்த பிறகே உள்ளே அனுப்பினர்.அரசியல் ரீதியாக யாராவது எதிரிகள் தாக்ககூடும் என்ற முன்னெச்சரிக்கையாக இந்த ஏற்பாடு நடந்தது.

ருத்ரன் வீடு:

சரி நான் ஜிம்முக்கு போயிட்டு வரோனென்று ருத்ரன் சொல்ல,இருடா நானும் வரேனென்ற தீபன்,வீட்டு சாவினு மனைவியிடம் கேட்க,இருங்க நைட் டின்னர் பண்ணனும் நானும் வரேன்.நாங்க போயிட்டு காலையில் வரோமென்று ரூபா சொல்....தீபா...நான் ஒரு விஷயம் சொல்லுவேன் ரெண்டு பேரும் கேட்பீர்களா?.

சொல்லுங்கம்மா என்ன விஷயம்?.

நம்ம அஞ்சு பேரு தானே இருக்கோம்.
இதில் நீங்க ரெண்டு பேரும் மட்டும் எதுக்கு தனியாக சமைச்சு சாப்பிடணும்? நானே நம்ம எல்லாருக்கும் சமைக்கிறேனே... பிள்ளைகளுக்கு ஆக்கி போடுவது எனக்கும் மன திருப்தியாக இருக்கும்.

வீட்டில் நான் மட்டும் சும்மா தானே இருக்க போகிறேன்.காலையிலே நீங்களும் ஹாஸ்பிடல் போறீங்க ஸ்கூல் ஆரம்பிச்சிட்டால் ஜூலியும் ரூபாவும் போயிடுவாங்க...நான் தனியா தான் இருப்பேன் அப்போது எதாவது துணி தைக்குறேனேப்பா என்று எஸ்தர் சொல்லவும் நால்வருக்கும் பேச்சின்றி கண்ணீர் தான் பதிலாக வந்தது..

எதுக்குப்பா அழறீங்க?உங்க நாலு பேருக்கும் நான் அம்மாவா இருந்தாலும் ஜூலிக்கும் தீபனுக்கும் தான் முதல்ல அம்மா.

ரூபாக்கும் ருத்ரனுக்கும் நான் மாமியார் தானென்க,ஹேய் எங்களுக்கு அம்மா கிடைச்சிட்டாங்க.. இனி மாமியார் கொடுமையை எப்படி காட்றாங்க பாரென்று ஜூலி சொல்லவும் வாலு பொண்ணுனு அவள் கன்னத்தை கிள்ளினார்.

அப்பொழுது ஜூலிக்கு சிறுவயதில் தனது தாயும் இப்படி தானே கன்னத்தை கிள்ளி சொல்லுவாரென்று இறந்து போன தாயை நினைத்து கண் கலங்கினாள்.

மனைவியின் அழுகையை புரிந்தவர் வேண்டாமென்று தலையை அசைக்க சிரித்துக் கொண்டே கண்ணே துடைத்தாள்..

நால்வரும் அமைதியாக இருப்பதை பார்த்த எஸ்தர் என்ன அம்மாவா ஏத்துக்கிட்டன்னு சொன்னதெல்லாம் அப்ப பொய்யா?.

சரி என்ன கொண்டு போய் ஏதாவது ஒரு ஆசிரமத்தில் விடுங்க இல்லனா இந்த வீட்டுக்கு நான் வேலைக்காரியாவது இருக்கிறேன் அதுக்காவது சம்மதிங்கள் என்க...ஐயோ அம்மா இனி ஒரு வார்த்தை நீங்க அப்படி எல்லாம் பேசக்கூடாது என்றனர்...

கண்ணுங்களா அம்மாவுக்கு கொஞ்சம் நல்லாவே சமைக்க தெரியும்பா சாப்பிட்டு நாலு பேரும் 10 10 கிலோ எடை போடுற அளவுக்கு கொஞ்சம் சுமாரா சமைக்க தெரியும்.

அவர் சொன்ன தொணியை கேட்டு நால்வரும் சிரித்து விட்டனர்.

இத்தனை நாளா உங்க மருமகள் கையால சாப்பிட்டு சாப்பிட்டு இங்க பாருங்க என் நாக்கு செத்து போய் கிடக்கென்ற தீபன் தனது நாக்கை நீட்டினான்...

அட பாவி புருஷா நேத்து தானே அந்த பன்னீர் பட்டர் மசாலா நல்லா இருக்குன்னு 30 சப்பாத்திய வழிச்சு நக்குன...இன்னைக்கு அத்தை கிட்ட இப்படி சொல்றியானு ரூபா முறைக்க,

அடப்பாவி...30 சப்பாத்தியை நீயே தின்னுட்டு என் தங்கச்சியை பட்டினி போடுறியாடா?சமைக்கிறது எல்லாம் உன் வயித்துல தான் போயிட்டு இருக்கா?.

அப்பவே நினைச்சேன் வர வர என்ன என் தங்கச்சி வெயிட்டு கொறஞ்சிட்டு இருக்காளென்று ருத்ரன் கேட்க...அடேய் யப்பா உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையாடா...மனசாட்சி தொட்டு சொல்டா என்ன பாத்தா 30 சப்பாத்தி சாப்பிடுறவன் போலயாடா இருக்கு.உன் தங்கச்சி சுடுவது 10 சப்பாத்தி.

அதுல நாலு எனக்கு கொடுப்பா மூணு அவ சாப்பிடுவாள்.மீதி மூணு மறுநாள் காலையில எண்ணெயில் பொறிச்சு டீ கூட கொடுத்திடுவாள் பிரேக் பாஸ்ட் என்று.கேட்டாக்க சிக்கனமாக குடும்பம் பண்றாளாம்.ஒரு கிலோ கோதுமை மாவு எங்களுக்கு ஒரு வாரத்திற்கு மேல் வருது தெரியுமாடானு தீபன் சொல்லுவதை கேட்டு எஸ்தருக்கு சிரிப்பு வந்துவிட்டது .

அம்மாடி ரூபா என் பையன் சாப்பிடறதை இப்படி எல்லாம் கண்ணு வைக்காதே புரியுதா என்க சரிங்கத்தை என்க,ஹம் மாமியார் அந்த பயம் இருக்கட்டும்...நாலு பேரும் எங்க போகணுமா தாராளமா போயிட்டு வாங்க என்கவும் எங்களுக்கு ஒன்னும் இப்போதைக்கு வெளியில வேலை இல்லைங்கம்மா...

அதனால நாங்க படம் பாக்குறோமென்று ஜூலி சொல்ல,இத்தனை நாள் இதுதானே பண்ணிக்கிட்டு இருக்கீங்க புதுசா என்னடி பண்றீங்கனு ருத்ரன் கேட்கவும் ஹலோ சார்...ஒரு மாசம் லீவ் என்கிறதால தான் நாங்களும் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கிறோமே.

யாருக்கு தெரியும் டான்ஸ் சொல்லிக் கொடுக்கிறேன்னு தப்பு தப்பா ஒருத்தி சொல்லிக் கொடுத்துட்டு இருப்பாள்.நீயோ உன் ஓட்ட ஹிந்தியை வச்சுக்கிட்டு புள்ளைங்களுக்கு பாடம் நடத்துற..

எத்தனை புள்ளைங்க பெயில் மார்க் வாங்கி இருக்கோ உன் ஸ்கூலுக்கு வந்தாதான் உங்க ரெண்டு பேரு வக்கனையும் தெரிய போகுதென்று ருத்ரன் சிரித்தான்...

அப்பொழுது எஸ்தரோ எப்படிப்பா நாலு பேரும் இவ்வளவோ அருமையா தமிழ் பேசுறீங்க என்கவும்,எங்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது ஒரு தமிழ் ஃபேமிலி தான் என்றனர்.

சரி மத்த கதையெல்லாம் பிறகு பேசலாம் ஜிம்முக்கு போக நேரமாயிட்டுனு அவர்களும் கிளம்பிவிட்டனர் இவளுங்க ரெண்டு பேரும் டிவி ஆன் பண்ணி புதுசாக வந்த தமிழ் படத்தை netflixனு பார்க்க,எஸ்தரோ பாதியில் விட்ட தையல் வேலையை கம்ப்ளீட் பண்ண போனார்...

வனிச்சூர்:

சிறிது நிமிடங்கள் தண்ணீரில் விளையாண்டு கொண்டிருந்த ஷமீராவோ திரும்பி கணவனை பார்த்து தனது வலது கையை நீட்டி வாங்க என்கவும்,பாறையின் மேல் நின்றவனும் மனைவியின் அழைப்பில் வேகமாக இறங்கி அவளிடம் வந்து நெருங்கி நிற்க,மல்லிகை பூவின் வாசமோ அவன் நாசிக்குள் நுழைந்து இம்சித்தது..

தண்ணீரில் கைகளை அடித்து விளையாடும் போது சிதறிய நீர் துளிகளோ ஷமீராவின் உடையை நனைத்து அவள் உடலோடு ஒட்டி இருக்கவும் அதை பார்த்தவனுக்கு உணர்ச்சிகள் ஆட்டம் காண ஆரம்பித்தது...

இளா அந்த அருவியில் போய் நிற்கலாமா?,இவ வேற நம்மளை சோதிக்கிறாளேயென்று முணுமுணுத்தவன் வேணாம் டி இன்னொரு நாளைக்கு வரலாமென்க,ப்ளீஸ் இவ்வளவு தூரம் வந்துட்டோம்ல....

இன்று போல் வராது இல்லையா அதனால் வாங்களென்று கணவனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு முன்னேறி செல்ல,அவனும் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல் மனைவியை பார்த்துக் கொண்டே சென்றான்.

அருவியின் அருகே சென்றவள் யாகூஊஊஊஊ என்று கத்தியவாறு இரண்டு கைகளை விரித்துக் கொண்டு கீழே விழும் தண்ணீரில் நின்றாள்...

முழுவதுமாக நனைந்து நிற்கு மனைவியின் வரி வடிவமோ அந்த நிலவொளியில் செழியனுக்கு தெரியவும் மனைவியை இமைக்க மறந்து ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

கணவன் சற்று தள்ளி நிற்பதையே பார்த்தவள் வாங்கனு கையை அசைத்து கூப்பிட்டபடியே தன் மேல் விழும் தண்ணீரில் சுத்தி சுத்தி விளையாண்டு கொண்டிருக்க அய்யோஓஓஓ இவள் வேற நம்மை படுத்துறாளே..

அடேய் அறிவுகெட்டவனே அவசரப்பட்டு இங்கு கூட்டிட்டு வந்துட்டியேடா.உனக்கு இது தேவை தானென்று முணுமுணுத்துக் கொண்டவன் மனைவியின் அருகில் போய் நிற்க இப்பொழுது இருவரும் தண்ணீரின் கீழே நின்று கொண்டிருந்தனர்...

நேரமும் கடந்து சென்றது...

நிலவின் வெளிச்சத்தில் அந்த ரம்மியமான இரவு இருவருக்கும் புதிதாக இருக்கவும் ஷமீராவோ அந்த இயற்கையை ரசித்தபடியே தண்ணீரில் குதித்தும் நீந்தியும் மகிழ்ந்து கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்தில் போதுமென்று நினைத்த செழியன் ஏ வாடி உள்ள போகலாம் என்க,அந்த நேரம் பார்த்து காலில் ஏதோ குத்தியது போலிருக்கவும் ஆஆ என்றவாறு வலது கால் தூக்கவும் தண்ணீரின் வேகத்தில் தடுமாறி விழப்போன மனைவியின் வயிற்றில் கை கொடுத்து விழாமல் தன்னோடு இறுக்கி பிடித்தவன் பின் வழியாக நகர உள்ளே சிறு குகை இருப்பது தெரிந்தது.

கணவன் அணைத்த உடனே அவன் பக்கமாய் திரும்பவும் மனைவியின் அங்கங்கள் நெஞ்சில் மோதியதால் தீப்பிடித்த போல் உணர்ந்தவன் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.பிறகு தான் ஷமீராவும் இருக்கும் சூழ்நிலையை உணர்ந்தாள்.

அந்த இடத்தை சுற்றி பார்க்க அங்கே சிறு சிறு பாறைகள் இருந்தது.இரண்டு பேர் தாராளமாக தங்கும் அளவுக்கு குகையும் சுத்தமாக இருக்க,ஒரு இடத்தில் மட்டும் ஓடை போல் நீர் ஓடிக் கொண்டிருந்தது...

பின்னர் தன்னிடமிருந்து மனைவியை விலக்கியவன் சற்று தள்ளி நிறுத்திப் பார்க்க தலையிலிருந்து விழுந்த நிறுத்துளிகளோ அவள் நெற்றி தாண்டி மூக்கு வழியாக உதட்டில் போவதை பார்த்து தனது உதட்டை மனைவின் உதட்டோடு பொருத்தினான்.

இவ்வளவு நேரம் உணராத குளிரை இப்பொழுது அவளால் உணர முடிய அதன் தாக்கத்தால் அவளும் கணவனை முதுகு பக்கம் இருக்கி அணைத்துக் கொள்ளவும்,சிறுது நிமிடங்கள் அமைதியாக இருந்தவன் பின்னர் ஒரு முடிவோடு மனைவியை கையில் ஏந்தியவன்...

அங்கே அகலமாக இருந்த பாறையின் அருகே போனவன்,அதன் மேல் தன்வளை படுக்க வைத்தான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
பஞ்சு மெத்தையில் பூக்கள் தூவி எண்ணற்ற மலர்கள் வாசனைக்கு பரப்பி வண்ண மலர்கள் தோரணமாக தொங்கிக் கொண்டிருக்கும் அறையில் நடக்க வேண்டிய சடங்கோ,இங்கே கற்பாறையே மெத்தையாகவும் மெல்லிய நிலவொளியின் வெளிச்சத்தில் இயற்கையின் ஆசீர்வாதத்தோடு அரங்கேறியது..

கண்களை மூடிக்கொண்டு ஈர உடைகள் உடலோடு ஒட்டியிருக்க,அங்கங்களின் வளைவு நெளிவுகளின் வடிவத்தை பார்த்து திக்குமுக்காடியவனோ நொடியும் தாமதிக்காமல் தன்னவளின் மீது பாய்ந்தான்.

கணவனிடம் விரும்பியே தன்னை கொடுத்துக் கொண்டிருக்க மூன்று வருட காதலை முரட்டுத்தனமாகும் மென்மையாகவும் காட்டிக் கொண்டிருந்தான்...

நேரமும் கடந்து சென்றது..போதுமென்ற மனமின்றி மனைவியை ஆளுகை செய்தவன் ஒரு கட்டத்தில் அவள் சோர்ந்து போவதை பார்த்து பெருமூச்சு விட்டபடியே அவளை இழுத்து தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அந்த கற்பறையின் மேலே கண்ணை மூடினான்.

சிறிது நிமிடங்கள் கடந்திருக்க வீட்டுக்கு போகலாமா?,ம்ம்..விட்டால் தானே போக முடியுமென்றாள்.

சரியென அவனும் கையை விலக்கியதும் வேகமாய் எழப் போனவளுக்கு இருவரும் இருக்கும் கோலம் நினைவுக்கு வர ஐயோ என்று கணவன் நெஞ்சிலே மீண்டும் புதைந்து கொண்டாள்.

ஹா ஹா என்று சிரித்தவன் சற்று தள்ளி கிடக்கும் மனைவியின் ஷாலை எடுத்து அவள் மேல் போட்டுவிட்டு எழுந்து போய் தனது டிரசை போடலானான்.

தற்செயலாக திரும்பிப் பார்த்த ஷமீராவோ அங்கே கணவன் வேஷ்டி பனியனில் நிற்கவும் உழைப்பில் ஏறிய உடம்பு படிக்கட்டு தேகமாக இருப்பதை பார்த்து எச்சில் விழுங்கினாள்.

சட்டையை உதறி போட்டுக் கொண்டவன் என்னடி எழுந்திருக்கிற மனசு வரலையா?.

நீங்க அங்கே போங்கள்.நான் வரேனென்று சொல்லவும், மனைவியின் வெட்கத்தை ரசித்துக் கொண்டே அருவியின் ஓரம் வந்து நின்றவன் வந்தது போல நல்லபடியாக வீட்டிற்குள் போய்விடணுமென்று மானசீகமாக இஷ்ட தெய்வத்திடம் கோரிக்கை வைத்தான்.

வேகமாக எழுந்தவள் எங்கே கணவன் வந்துவிடுவானோ என்ற பதற்றத்தில் டிரசை மாற்றிக் கொண்டு செழியனிடம் வந்தவள் கணவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டு போகலாமென்க...

ம்ம் என்றவன் தன்னவளின் கையை பிடித்துக்கொண்டு அருவியின் ஓரமாய் இருக்கும் இடைவெளி வழியாக நனையாமல் பாறையில் ஏறி மேலே வந்தவன் மனைவியை கையில் ஏந்தி கொண்டு நீ டார்ச் அடி என்க, சரியென்று ஷமீராவும் அந்த ஒத்தையடி பாதையில் டார்ச் அடிக்க மனைவியை தூக்கி கொண்டே வண்டி நிற்கும் இடத்திற்கு வந்து கீழே இறக்கி விட்டவன் யாத்தேஏஏஏஏஏஏ...

ஆளு பாக்க ஒல்லியா தானிருக்குற ஆனா 85 கிலோ இருப்ப போலடி...எலும்பு ரொம்ப எடையா இருக்குமென கேள்வி பட்டிருக்கேன்..

அது உண்மை என்பது இப்பதானே தெரியுது...என் உடம்புல பாரு எங்க எங்க காயம் இருக்கென்று விஷமமாக சொல்லவும் நீங்க பண்ணிய வேலையால் எவ்வளவு காயம் என்பது எனக்கு தானே தெரியுமென்று சொல்ல வந்தவள் ஐயோ என்று வாயை மூடிக்கொண்டாள்...

மனைவியை பார்த்து சிரித்தவன் நீதான் தைரியமாக ஆளாச்சே சொல்லுடி...

அப்படி எங்கே காயம் இருக்கென்று தோள்பட்டை காட்டியவன் இங்கையா,. இல்லை இங்கிருக்கானு முதுகில் கையை வைத்தான்.இல்லை இங்க இருக்கானு இடுப்பில் கை வைக்க அய்யாசாமி எனக்கு எங்குமே காயமில்லை...

நான் பர்பெக்ட்லி ஆல்ரைட் வண்டியை எடுங்க யாராவது பாக்கறதுக்கு முன்னாடி சீக்கிரம் வீட்டுக்கு போகலாம் என்கவும் ஆமா ஆமா சீக்கிரம் போகலாம் அடுத்த ரவுண்டு ஆரம்பிக்கனுமென்று சிரித்துக் கொண்டே வண்டியை ஸ்டார்ட் பண்ண, சீ போங்களென்று சிரித்துக் கொண்டே அவளும் வண்டியில் ஏறி உட்கார்ந்தாள்.

சற்று தூரத்தில் வரும்போதே வண்டியை ஆஃப் பண்ணிவிட்டு தள்ளிக் கொண்டே வந்தவன் மாடிப்படி வழியாக ரூமிற்கு வந்து மணியை பார்க்க அதுவோ அதிகாலை 3 என்று காட்டியது.

கடுமையாக வேலை செஞ்சிருக்கேன் பசிக்கிறதே என்றவாறு சொம்பிலிருந்த பாலில் பாதியை குடித்துவிட்டு மனைவிக்கு நீட்ட அவளும் குடித்தாள்....

அப்புறம் பொண்டாட்டி என்று சிரிக்கவும் அங்கிருந்த தலகாணியை எடுத்து கணவனை அடித்தாள்...ஏய் என்று எட்டி தன்னவளின் கையை பிடித்தவன் மனைவியோடு பெட்டில் சரிந்தவன் விட்ட வேலையை மீண்டும் தொடங்கினான்.

சரி பாவம் இன்னைக்கே இவளை ரொம்ப வாட்ட கூடாதென்று நினைத்து மனைவியிடமிருந்து விலகி படுத்தவன் சிறிது நிமிடத்தில் தூங்கி விட்டான்.

தன்னை அணைத்து படுத்திருக்கும் கணவனை பார்த்தவள் அவன் மீசை முறுக்கி விட்டு லவ் யூ மாமா என்கும்போது சிரிப்பு வந்தது...

எத்தனையோ முறை அவன் கேட்டிருக்கிறான் ஒருமுறையாவது மாமானு சொல்லுடியென்று.ஆனால் ஷமீராவோ அப்படி கூப்பிட்டதேயில்லை.

பெல் சத்தத்தில் பார்க்க காலை 5 மணி என்று கடிகாரமும் காட்டியது.இதற்கு பிறகு என்னத்த தூங்குகிறதென்று நினைத்தவள் கணவனின் கையை லேசாக விலக்கி வைத்துவிட்டு துணிகளை எடுத்துக்கொண்டு ரெஸ்ட் ரூமிற்குள் சென்றாள்...

குளித்து முடித்தவள் துண்டை கட்டிக்கொண்டு கதவை திறந்து எட்டிப் பார்க்க அங்கே செழியனோ நன்கு துக்கத்தில் இருப்பது தெரியவும் வேகமாய் வந்து கபோர்டை திறந்தவள் போட்டுக் கொள்ள வேண்டிய துணியை எடுத்துக் கொண்டு அங்கே ஸ்கிரீன் மறைவிற்கு பின்னால் போய் புடவை கட்டிக் கொண்டாள்.

பின்னர் பால்கனியில் இருக்கும் படிகளின் வழியாக மாடிக்கு போனவள் துணிகளை காய வைத்து விட்டு சுற்றிப் பார்க்க அங்கங்கே ஒரு சில வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருக்க,சில பெண்களோ வீட்டு வாசலில் சாணம் தெளிப்பதும்,சிலர் வாசலை பெருக்குவதும் தெரிந்தது..

மலைப்பகுதி என்பதால் பனிப் புகையும் போர்வையால் போர்தியதாயிருக்க அதிகாலையில் இதை எல்லாம் பார்க்கவும் ஷமீராவுக்கு திகட்டவில்லை.

தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து ஈரம் போக நன்கு தட்டி காய வைத்து விட்டு ரூமிற்கு வந்தவள் அங்கிருந்த டிரஸிங் கபோர்டிலிருந்து கிளிப்பை எடுத்து இரண்டு பக்கமும் முடி எடுத்து போட்டுக் கொண்டு நெற்றியில் குங்குமத்தை வைத்துக் கொண்டு திரும்ப கதவு தட்டும் சத்தம் கேட்டது.

படுக்கை இருக்கும் இடத்தை சுற்றி ஸ்கிரீன் இருப்பதால் அதை இழுத்து விட்டவள் பின்னர் கதவைத் திறக்க அங்கே வானதிதான் நின்று கொண்டிருந்தார்.

மருமகளின் முகத்திலிருக்கும் மலர்ச்சியும் அவள் குளித்து விட்டாள் என்பதை பார்த்தவர் வேற ஒன்னும் இல்லம்மா. மாமியார் முகத்தில் விழிக்கணும் அது இங்கு சம்பிரதாயம் அதுக்காக தான் வந்தேன.

சரிங்கத்தை இதுக்கு ஏன் தயக்கமென்றவள் வாங்கத்தைக் கீழே போகலாம்

நீ இரு நான் போய் காபிதண்ணி எடுத்து வரேனென்று வானதி சொல்ல,வாங்கத்தை வீட்டு வேலையை பார்க்கலாமென்று கீழே செல்லவும் வானதியோ தனது மருமகளை மெச்சியபடியே கீழே வந்தார்.

அங்கிருந்த விருமாயி பாட்டியும் கஸ்தூரியும் ஷமீராவின் முகத்தை பார்த்துவிட்டு மலையாத்தா என் புள்ளைங்க கூட நீ தான் துணைக்கு இருக்கணும் என்று வேண்டினர்.

அம்மாடி பூஜை ரூம்ல போய் விளக்கேத்து..உன் அக்கா வீடு எல்லாம் சுத்தம் பண்ணிட்டா.

சரிங்க பாட்டி என்றவள்,அதேபோல் சாமியறைக்குள் சென்றவள் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டு விட்டு வெளியே வர,கஸ்தூரியும் ஃப்ரிட்ஜிலிருந்த மல்லிப்பூ சரத்தை எடுத்துட்டு வந்து ஷமீராவிடம் கொடுக்க,நீங்க வச்சுக்கலையாக்கா?.

தம்பிக்கு மாந்தம் வரும்ணு வைக்கிறதில்ல..அவனுக்கு இரண்டு வயசு போகட்டும்..

இப்போதைக்கு நீ வச்சுக்க என்க,வானதியும் மருமகளுக்கு காபியை கொண்டு வந்து கொடுக்க ஆச்சரியமாக பார்த்தாள்..

என்னமா இப்படி பார்க்கிற?.

இல்லை அங்கு ரெண்டு அம்மாக்களும் இப்படித்தான் நான் கீழே வந்ததும் காபியோடு வருவாங்க...

புவனா மா,ரஞ்சு மா ஞாபகம் வந்துட்டு என்கும் மருமகளை பார்த்தவர் புவனாவும்,ரஞ்சனியும் தங்கமான பொண்ணுங்க...

எல்லாருமே ஒன்னுக்குள்ள ஒன்னுதான்...புவனாவும் ரஞ்சனியும் சின்னம்மா பொண்ணு பெரியம்மா பொண்ணு,அதைவிட உன் மாமனாரோட பெரிய அண்ணனுங்க பொண்ணுங்க தான் என்க,தனது மாமியார் சொன்னதை கேட்டவள் அப்படிங்களாத்தை என்றாள்.

டெல்லி

அடேய் எதுக்குடா இவ்வளவு வெயிட் தூக்குறயென்று தீபன் முறைக்க,விடுடா...எனக்கு இருக்கிற ஆத்திரத்தை இப்ப நான் வெளியில துரத்தியே ஆகணும்...

கொலவெறி வந்துச்சு தெரியுமா.

இந்த கையாலே அப்படியே செதில் செதில் வெட்டணும்னு ஆத்திரம் வருதுடா. நம்ம குடும்பத்தோடு பல குடும்பத்தை அழிச்சவன் இன்னைக்கு அவன் குடும்பத்தோட நிம்மதியா இருக்கிறான்.

அவனை ஒண்ணுமே பண்ணாம இப்படி கைய கட்டி வேடிக்கை பார்க்கிறோமே என்கவும்,ஆன்ட்டி சொன்னது நினைச்சு பாருடா ருத்ரா..

இன்னைக்கு அவனை வெட்டிட்டு ஜெயிலுக்கு போறது ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது.அதனால என்ன மாறிட போது சொல்லுடா?அவன் வாரிசுக்காக நம்ம கால்ல வந்து விழுந்திருக்கிறானே இதை விட வேற என்ன வேண்டுமென்று தனது நண்பனை தீபனும் ஆசுவாசப்படுத்தினான்.

ஆஆஆஆ என்று கத்திய ருத்ரன் அந்த சின்ன குழந்தைக்கு தண்டனையை பாரு...நிச்சயமா அவன் குடும்பத்தில் வேறு யாருக்கு இருந்தாலும் நான் ஆபரேஷன் பண்ணி இருக்க மாட்டேன் டா.

ஒரு பாவம் அறியாத குழந்தை என்பதால தான் நான் ஆபரேஷன் பண்ண உள்ளே வந்தேன் என்க,அது என்னால உணர்ந்து கொள்ள முடியுது..
நடந்ததை விடு ருத்ரா...நாமளும் அதிலிருந்து கடந்து வந்துட்டோம் என்பவனை பார்த்தவன் முடியலடா ஒவ்வொரு நாளும் அவன் போட்டோவை எங்கையாவது பார்த்தாக்க எனக்கு அவ்வளவு கொல வெறி வருது தெரியுமா?.

டேய் மனச கண்ட்ரோல் பண்ணுடா. ..இவ்வளவு வெய்ட் வேண்டாமென்று ருத்ரன் தூக்கிக்கொண்டு இருந்தை பிடித்து கீழே இறக்கி வைத்த தீபனுக்கே தோள்பட்டை வலிப்பது போலிருந்தது.

ருத்ரனோ கிட்டத்தட்ட 200 கிலோவிற்கு மேலே உள்ள இரும்பு வளையங்களை தூக்கி எக்சர்சைஸ் பண்ணிக் கொண்டிருந்தான்...

பின்னர் இருவரும் ஜிம்மிலிருந்து வெளியே வர அங்கு அவர்களுக்கு தெரிந்த நண்பர்கள் வரவும் பேச்சு அரட்டையை நோக்கி செல்ல இருக்கும் மனநிலையும் ருத்ரனுக்கு மாறியது...

வேலையெல்லாம் எப்படி போகுதுடா என்க,நண்பர்களில் ஒருவனோ எங்கடா....அவளை கரெக்ட் பண்றது பெரும்பாடா இருக்கென்கவும்,செருப்பு பிஞ்சிடும் நாயே...

நீ ஆபீஸ்ல பாக்குற வேலை எப்படி போகுதுன்னு கேட்டால் சைட் அடிக்கிற வேலையை சொல்றியானு தீபன் முறைக்க,ஹிஹிஹி என்று சிரித்த நண்பனோ நீ மொட்டையா கேட்டால் நான் என்னடா பண்ண...

உன் ஆபீஸ் ஒர்க் எப்படி போகுதுன்னு கேக்கணும் டா என்று திருத்தமாக சொல்ல,அதைகேட்ட தீபனோ எட்டி வாயிலையே மிதிப்பேன்டா என்றான்...

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top