• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

வெரோனிகா

Active member
Joined
Jun 3, 2025
Messages
694
டெல்லி-கமிஷ்னர் அலுவலகம்:

கம்பீர நடையோடு தனது நீண்ட கல்களை எட்டி நடை போட்டு வந்து கொண்டிருப்பவனின் எதிரில் வருபவர்கள்,வயதையும் கணக்கில் கொள்ளாமல் மரியாதை நிமித்தமாக சல்யூட் வைக்க,பதிலுக்கு தலையை அசைத்தபடியே படிகளில் ஏறி மேலே வந்தவன் கமிஷ்னரின் ரூம் கதவை இரண்டு விரல்களால் தட்டிவிட்டு, பின்னர் கதவை திறந்து உள்ளே போய் சல்யூட் அடிக்க,எஸ் என்றவாறு தனது எதிரில் இருக்கும் சேரை காட்டி உட்கார சொன்னார் டெல்லி சிட்டியின் கமிஷ்னர் வேத நந்தன்...

"தேங்க்யூ சார்"

வர சொன்னீங்களே?என்றவனை பார்த்தவர் ஹம்.லிசன் மிஸ்டர் இளமாறன் ஒரு முக்கியமான கேஸை உங்க கிட்ட ஒப்படைக்கதான் வரச்சொன்னேன்.

அப்பொழுது இளமாறனின் செல்ஃபோனிற்கு கால் வர, சாரி சார் என்றவன் மொபைலை சைலண்டில் போட்டு விட்டு அவரை பார்க்க....

ம்ம்....கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் அதாவது எக்ஸாட்டாக சொல்லணும் என்றால் அக்டோபர் 24 ஆம் தேதி 2024ல் ஜெர்மனியில் இருந்து இந்தியாவிற்கு வந்த இவங்களென்று போட்டோவை காட்டியவர்,இதுவரை திரும்ப ஜெர்மனிக்கு போகவில்லை.

"என்ன ஆச்சுணும் தெரியலை? "

இவங்களோட பேரன்ட்ஸும் ஜெர்மனியில் இருந்து இங்கு வந்து தேடி பார்த்துட்டு போலிஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்துருக்காங்க. அவங்களும் மிஸ்ஸிங் கேஸ்னு பைல் பண்ணிருக்காங்கள்.

பட் இதுவரை கேஸ்ல எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லு போல அப்படியே இருக்கவும்,இவங்களோட பேரண்ட்ஸ் இங்கிருக்கும் ஜெர்மனி எம்பசிக்கு போய் விஷயத்தை சொல்லவும் கேஸ் நம்ப கிட்ட வந்திருக்கிறது.

இண்டர்நேஷனல் இஸ்யூஸ் என்பதால் டெல்லி மேலிடம் இதை சி.பி.ஐ கிட்ட ஒப்படைக்கலாமென்று முடிவு பண்ணும் போது,தமிழக ஆளுநர் வெற்றி நந்தன் உங்க கிட்ட இந்த கேஸை ஒப்படைக்க சொல்லி பர்சனலாக நம்ப பிரதமர்கிட்ட சொல்லியிருக்கின்றார்.

சோ....

நீங்கள் உடனே தமிழ்நாட்டிற்கு கிளம்புங்கள்.வழக்கம் போல இந்த கேஸையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு வரணுமென்க,மாமா என நந்தனை மனதிற்குள் வறுத்தெடுத்தவன் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஸ்யூர் சார் என்றவனிடம் உங்ககூட மிஸ்டர் நிலவனும் வருவார்.

ரெண்டு பேரும் சேர்ந்தே இந்த கேஸை ஹேண்டில் பண்ணுங்கள் என்று சொல்லியவர் மௌனமாய் சிரிக்க,ஓகே சார் என்று விறைப்பாப் சொல்பவனை பார்த்தவர்,இந்த வருஷமாவது கல்யாணம் பண்ணுற எண்ணம் இருக்காயென்க...

இதுவரை இருந்த மனநிலை மாறி மாமா என்று அந்த டேபிளின் மேல் தட்டியபடி கத்திக்கொண்டு எழுந்தவன்,என்னைய்யா அண்ணனும் தம்பியும் சேர்ந்து விளையாடுறீங்களா?.

ஏன்...வேற யாருக்காவது இந்த கேஸை கொடுக்க வேண்டியது தானே?

அதை விட்டு தமிழ்நாட்டுக்கு போ தாமிரபரணிக்கு போனு...

உங்க தங்கச்சி கிட்ட சொல்லுங்க கல்யாணம் பண்ற ஐடியா எனக்கு சுத்தமா இல்லை என்கும் போது மீண்டும் அவனுக்கு கால் வர,வைபரேஷனில் இருந்த போனை எடுத்து பெயரை பார்க்க அவனது அப்பா என்று தெரிந்தது.

பல்லை கடித்துக் கொண்டு அட்டென் பண்ணியவன் ஏன்பா கல்யாண சோறு திங்க ஆசை இருந்தால் நீயும் உன் பொண்டாட்டியும் தினமும் கோயில்ல போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு சமைத்து திங்க வேண்டியதுதானே..

அப்படி இல்லலனா உங்கள் மகளுக்கு உங்க நொச்சான் மவனை கட்டி வச்சிங்களே,அவங்களுக்கு பிறந்த புள்ளைகளுக்கு வரன் தேடி அலைய வேண்டியது..

அதுவும் இல்லையா நீங்கள் பெத்த இன்னொரு தடிமாடுக்கு பொண்ணு பாருங்கள்.அதை விட்டு எப்போ பார்த்தாலும் கல்யாணம் பண்ண பொண்ணு பார்த்தேன் புண்ணாக்கு பார்த்தேனென்று என் உசுரை ஏன் வாங்குறீங்கள் என்று கத்தினான்.

சில நொடிகள் வரை அந்த பக்கத்திலிருந்து எந்த சத்தமும் வராமல் போக,தகப்பா இருக்கியா இல்லையா?என்க,மகனின் பேச்சை கேட்டு கண்ணை முடி தனது காதில் விரல் விட்டு குடைந்தவர்,மாறா பொண்ணு வீட்டில்தான் இருக்கோம் டா.இந்த புள்ளைய பார்க்க நல்லா லட்சணமாக இருக்கு பா என்றார்...

அப்பா பேசியதை கேட்டவன் ஓஓஓஓ...அப்போணா நீயே ரெண்டாவதாக கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே என்று மாறனும் கடுப்பில் சொல்ல..என்னப்பா செய்ய என் தலையெழுத்து ஒரு மச்சான் போலீஸ் இன்னொரு மச்சான் ஆளுநர்.

ரெண்டு கல்யாணம் பண்ணினால் லா பேசியே என்னை தூக்கி உள்ள தள்ளிடுவானுங்களேயென மாறனின் அப்பா மதிவாணன் சொல்ல,ஓஓஓஓ இதுதான் உனக்கு பெரும் கவலை போல..ஏன்யா நீ ஒரு வாத்தியாரு,நீயே இப்படி பேசினால் உன் கிட்ட படிக்குறவனெல்லாம் என்ன லட்சணத்தில் வளருவானுங்களென்று பல்லை கடித்தான்.

ஹா ஹா ஹா என்று சிரித்தவர் உங்க ரெண்டு பேருக்கும் ஜாதகம் பார்த்தோம் பா.ஒன்பது பொருத்தம் இருக்குடா.

எங்கம்மாவோட கடைசி ஆசை உனக்கொரு கல்யாணத்தை பண்ணி பார்க்கணுமென்பது என்று கவலையாக சொல்ல,ஆச்சி என பல்லை கடித்தவன் சரி பேசி முடிங்களென்று சொல்லி போனை வைத்துவிட்டு தனது தாய்மாமனாகிய கமிஷ்னரை பார்த்தவன் ஆஹ குடும்பமே சேர்ந்து ஏற்கனவே பேசி முடிவு பண்ணிட்டீங்க அப்படி தானே என்றான் டெல்லியின் அசிஸ்டெண்ட் கமிஷ்னரும் அண்டர் கிரவுண்ட் சிபிஐ ஆபிசரான இளமாறன் ஐபிஎஸ்...

தனது புல்லட்டில் ஏறியவனோ கடுகு போட்டால் பொறிந்து விடும் போல முகத்தை வைத்துக்கொண்டு அரைமணி நேரத்தில் சாம் வில்லாவிற்கு வந்தவன் வண்டியை நிறுத்தி விட்டு படியில் ஏறி பர்ஸ்ட் ப்ளோருக்கு போய் நாலாவது வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினான்...

சிறிது நொடியில் கதவு திறக்க எதிரே இருந்த உருவத்தை பார்த்தவனுக்கு இன்னும் கடுப்பு ஏற,அவனோ இவனை கண்டு கொள்ளாமல் விட்ட ஆட்டத்தை தனது இரண்டு வயது மகனோடு டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் லுங்கி டான்ஸ் பாட்டிற்கு ஆடவும்,மாறனோ அவனின் முதுகில் எட்டி ஒரு உதை விடவும் திரும்பி நின்று ஆடிக் கொண்டிருந்தவனோ அய்யோ என்றவாறு அங்கே சோபாவில் உட்கார்ந்திருக்கும் பெண்ணின் காலடியில் போய் விழுந்தான்.

இதுவும் புதுவித ஸ்டெப் போலயென்று நினைத்த குழந்தையோ,தனது தந்தையை போலவே தாயின் காலடியில் போய் விழவும்,மாறனோ தனது மருமகனின் செயலை கண்டு சத்தமாக சிரித்து விட்டான்.

தனது காலின் கீழே விழுந்து கிடக்கும் கணவனை பார்த்த இளமதி,மங்களம் உண்டாகட்டும் மகனே என்று தனது வலது கையை நீட்டி ஆசீர்வாதம் செய்ய..

மனைவியை முறைத்துக் கொண்டே அய்யோ என் இடுப்பு போச்சே என்றவாறு எழுந்த நிலவன் அங்கே சிரித்துக் கொண்டிருந்த தனது மச்சானை திரும்பி பார்த்து முறைத்தவன் ஏன் டா ஏன்?

உன் தங்கச்சிகாரி எல்லா வேலையும் செய்ய சொல்லி உசுர வாங்குறது போதாது என்று உன் பங்குக்கு நீயும் படுத்துறியே டா இதெல்லாம் நியாயமாடா என பாவமாக கேட்க...

யோவ் போலீஸ் என்னை தான் கட்டுவேனு ஒத்த காலில் நின்ன இல்லை அப்போ இதையெல்லாம் நீ அனுபவித்து தான் யா ஆகணுமென்ற இளமதி டீ எடுத்துட்டு வரட்டுமா ணா என்க,ஹம் என்றவன் சோட்டு என்று மருமகனை நோக்கி கையை நீட்டினான்.

நிலவன்-இளமதியின் புதல்வன் இளம்பரிதியோ மாமா என்று ஓடி வர மருமகனை தூக்கி சுற்றியவன்,ஏன் சோட்டு இன்றைக்கு உங்கப்பன் என்ன வேலை செஞ்சானென்று கேட்டுக்கொண்டே அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தான்.

குழந்தையோ அதோட பிஞ்சு விரலால் கன்னத்தில் தட்டி யோசிப்பதை பார்த்தவனுக்கு சிரிப்பு வர,ஹம் மாடில சவிதா ஆன்ட்டிகிட்ட உம்மா உம்மானு அப்பா சொன்னாங்களென்று குழந்தை வாயை மூடுவதற்குள் அய்யோ என்னும் நிலவனின் அலறல் சத்தம் கேட்டு மாறன் பார்க்க சில அடி தூரத்தில் சில்வர் சொம்பு ஒன்று தரையில் சுத்திக் கொண்டிருந்தது.

மிகச் சிறப்பு என்றவன் சோட்டு நம்ம போய் பேக்கிங் பண்ணலாம்.இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்ம பிஷ்ஷ்ஷ் போறோம் என்றவன் பிளைட் போல குழந்தைக்கு ஆக்சன் பண்ணி காட்ட, போகலாமே என்று குழந்தையும் குதுகலிக்க,நிலவனை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்த மாறன்,நடக்க வேண்டியதை இனிமே உன் அம்மா பார்த்துப்பா என்று சொல்லிக் கொண்டு குழந்தையோடு அவனது அறைக்குள் சென்றான்.

மன்னார்குடி:

நள்ளிரவு.....

தேக்குமர கட்டிலில் படுத்துக்கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளுக்கு வேண்டும் வேண்டும் என்ற குரல் எதோ பாதாளத்தில் இருந்து கேட்பது போல இருக்கவும்,தூக்கத்திலிருந்தவாறு இடது பக்கம் திரும்பி படுத்தவளை ஜன்னலுக்கு வெளியே நின்ற உருவமோ கண்களில் கொலைவெறி மின்ன,பழிவாங்க நேரம் பார்த்து காத்துக் கொண்டிருந்தது...

அப்பொழுது அனலான காற்று தன் மேல் படுவதை தூக்கத்திலிருந்தவள் உணர என்ன இதுயென்று அரை விழிகள் திறந்தவாறு நெற்றியை தடவியவள்,பேன் சுற்றுதா என்று பாதி திறந்த விழிகள் மூலமாக பார்க்கும்போது,கோர பற்கள் நீண்டிருக்க வாயெல்லாம் ரத்தமாக அவள் கழுத்தை பிடிக்க வருவது போல கைகளை அவளை நோக்கி நீட்ட,அரண்டுபோய் கட்டிலிலிருந்து கீழே விழுந்தாள்.

மகளின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த சரோஜாவோ பதறி அடித்து எழுந்து வந்து கவி கவி என்று உள் பக்கமா பூட்டியிருக்கும் ரூம் கதவை தட்ட அதில் நிகழ்விற்கு வந்தவள் மாம் என்று வேகமாக போய் கதவை திறக்க உள்ளே வந்தவரோ என்னடி ஆச்சு?

எதுக்கு இப்படி கத்துன?.

அம்மா அம்மா என அடுத்த வார்த்தை பேச முடியாமல் அரற்றியவள் தாயின் பின்னால் போய் ஒளிந்து கொண்டு, சீலிங் பேனை நோக்கி கையை நீட்டினாள்.

மகளின் உடல் நடுங்குவதை வைத்து, கவி ரொம்ப பயந்திருக்கிறாள் என்பது புரிந்த சரோஜா அவள் கை நீட்டிய திசையில் பார்க்க பேன் தான் சுற்றிக் கொண்டிருந்தது.

ப்ச்..... கண்ட நேரத்துல கண்ட கண்ட படம் பார்க்காத,புக் படிக்காதன்னு சொன்னா என்னைக்குடி கேட்டு தொலைகிற அறிவு கெட்டவளே...

தினமும் உன் கூட இதே தலைவலியா இருக்கு.எத்தனை வாட்டி சொல்றேன் பேய் படம் பார்க்காத பேய் கதை எல்லாம் படிக்காதன்னு என்னைக்காச்சும் கேக்குறியா என்று திரும்பி நின்று மகளை பார்த்து சரோஜா கத்த...
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
694
ஏற்கனவே பயத்தில் நடுங்கி கொண்டிருந்தவளோ தனது தாய் திட்டுவதை கேட்டு அது வந்துமா என்க...

நாளைக்கும் இந்த வேலை நடந்தது உன்னை இழுத்துக் கொண்டு போய் சுடுகாட்டில் தான் டி பாய் போட்டு படுக்க வைப்பேனென்று சொல்லியவர் ஒழுங்கு மரியாதையா படுத்து தூங்குடி.
தினமும் இப்படி உயிரை வாங்கிட்டு இருக்க என்றவாறு ஹ்ஹாஆ என்று கொட்டாவி விட்டுக் கொண்டு அவரது ரூமிற்குள் சென்றவர் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு படுத்து தூங்கினார்.

என்னடி கவி நடக்குது இங்க?

ஒருவேளை நம்ப அம்மா சொன்ன போல புக் படித்தது தான் கனவா வந்திருக்கும்.அதனால் தான் தேவை இல்லாம பயந்துட்டோம்.இருந்தாலும் தினமும் இதே வேலை பண்றதை பார்த்து அம்மாவுக்கு வர வர ரொம்ப கோவம் வருது.

என்னைக்கு விளக்கமாற்றால் விலாச போறாங்கன்னு தெரியலையே என்று புலம்பியவள் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு,அவளது அறையில் இருந்த மினி பிரிட்ஜை திறந்து உள்ளே இருந்த ஐஸ்வாட்டரை எடுத்து கடகடவென்று குடிக்க,ஜன்னல் ஓரமாய் நின்ற உருவமோ அவள் தொண்டையை பார்த்துக் கொண்டே வேண்டும் வேண்டும் என்று முணுமுணுத்தது...


தண்ணீரை குடித்து முடித்து பிரிட்ஜில் வைத்து விட்டு திரும்பிய கவி தற்செயலாக ஜன்னலை பார்க்க,அங்கு கோர முகத்தோடு ஓர் உருவம் நிற்பதை பார்த்து கத்த போனவள் பின்னர் ஒரு கையால் தனது வாயை மூடிக் கொண்டு கண்ணை மூடியவள் சிறிது நொடிகள் சென்ற பிறகு கண்களை திறந்து ஜன்னலை பார்க்க இப்பொழுது அங்கு யாருமே இருப்பது போல் தெரியவில்லை.

கடவுளே ஏன் தான் நமக்கு இப்படியெல்லாம் தோணுதோ ஆண்டவா என்று தலையில் தட்டிக் கொண்டவள் வேகமாய் போய் அந்த ஜன்னலை இழுத்து தாழ்ப்பாள் போட்டுவிட்டு பெட்டில் வந்து படித்து கண்ணை மூட பயத்தில் அவளுக்கு அவ்வளவு எளிதாக தூக்கம் வரவில்லை.எப்படியோ உருண்டு புரண்டு ஒரு வழியாக தூங்கினாள்.

வெண் புடவை போல் பனிமூட்டம் போர்த்தியிருக்க ஊசியை போல உடலை துளைக்கும் குளிரோடு விடியலும் ஆரம்பமாகியது...

வழக்கம்போல் எழுந்த சரோஜாவோ குளித்து தயாராகி பூஜை அறைக்கு வந்தவர் அங்கு விளக்கேற்றி பூஜையை முடித்து வெளியே வர வேலைக்கார பெண்மணியும் அவருக்கான இஞ்சி டீயை கொண்டு வந்து கொடுக்கவும் அதை வாங்கிக் கொண்டு அங்கிருந்த சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டவர்,காலையில் என்ன டிபன் பண்ண வேண்டும் என்று ஆர்டர் கொடுக்க வேலைக்கார பெண்மணியும் சரிங்க அம்மா என்று கேட்டுக் கொண்டு கிச்சனிற்குள் சென்றார்.

டீயை குடித்து முடித்தவர் கையோடு எடுத்துட்டு வந்திருந்த கந்த சஷ்டி கவசத்தை படிக்க ஆரம்பித்தார்.

தினமும் அவர் செய்யும் செயல் என்பதால் மற்ற வேலையாட்களோ அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.

ஒரு வழியாக தூங்கி எழுந்த கவி, ரெப்ரஷாகி ஹாலுக்கு வர அங்கே அவளின் தாத்தா வேலன், பாட்டி சரளா,அவளின் தம்பி கவின் அவளுடைய அம்மா சரோஜாவும் காலை டிபனை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

குட் மார்னிங் என்றவாறு அவளும் அங்கிருந்த சேரில் போய் உட்கார பேத்தியை ஒரு பார்வை பார்த்த வேலனோ மீண்டும் சாப்பிடும் வேலையை பார்த்தார்.

தாத்தாவின் பார்வையில் இருக்கும் கண்டிப்பை உணர்ந்தவளோ பொட்டி பாம்பை போல் அடங்கி கொள்ள, வேலைக்கார பெண்மணியோ அவளுக்கும் டிபனை பரிமாற அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.

மற்றவர்களோ சாப்பிட்டு எழுந்து செல்ல கவியோ பல்லை கடித்துக் கொண்டு சாப்பிட்டு முடித்தவள் என்னுடைய பூஸ்ட் எங்கே என்க,மேடம் இங்குதான் இருக்கின்றது என்று அவள் குடிக்கும் கப்பில் பூஸ்ட்டை கொண்டு வந்து டேபிளின் மேல் வேலையாளும் வைக்க,ஹம் நீங்கள் போங்களேன்றவள் தாத்தாவின் பார்வை எங்கேயாவது தன் மேல் படுகிறதா என்று சுற்றி பார்த்துவிட்டு சாப்பிட்ட தட்டிலே கையை கழுவியவள் சற்று தள்ளி நின்ற வேலைக்கார பெண்மணியிடம் தட்டை எடுக்குமாறு கண்ணசைவில் சொல்ல அவரும் தலையசைத்துக் கொண்டே அவள் முன்னால் இருந்த தட்டை எடுத்துச் செல்ல சவகாசமாக சேரில் சாய்ந்து உட்கார்ந்தவளோ பூஸ்ட்டை ரசித்து குடிக்கலானாள்.

பின்னர் வலது பக்கமிருக்கும் இரண்டாவது அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே போக, பக்கவாதத்தில் ஒரு பக்கம் கை காலை இழந்து படுக்கையிலிருக்கும் அவளின் தந்தையான சதாசிவத்திற்கு அவளின் அம்மா சரோஜாவோ லிக்யூடான உணவை கண்கலங்க ஊட்டிக் கொண்டிருந்தார்.

அவரின் நிலையை பார்த்து அங்கே கபோர்ட்டின் மேல் உட்கார்ந்திருந்த கருப்பு உருவமோ கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.

உள்ளே வந்தவளோ இப்போ அப்பாவுக்கு எப்படிம்மா இருக்கு என்று கேட்க,கணவருக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்த சரோஜாவோ இதுவரைக்கும் எந்த முன்னேற்றமும் இல்லை கவி என்கவும்,சரியாயிடுமா என்று தந்தைக்காக வருத்தப்பட்டவள்,சுவற்றில் மாட்டியிருக்கும் தனது அப்பாவின் கம்பீரமான போட்டோக்களை பார்த்துக் கொண்டே வரும் போது கபோர்டின் மேலிருந்த கருப்பு உருவமோ கையில் கத்தியோடு வாயை நீளமாக திறந்து கொண்டு அவளை குத்த வருவது போல் இருக்க அம்மாஆஆஆ என்று கத்தி விட்டாள்...

சூடாமணி:

தனது கணவரின் முகத்தை பார்த்த வேதவள்ளி இந்த முறையாவது உங்க பையன் சம்மதம் சொன்னானா?இல்லையா?என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்க,ஹம் ஓகே சொல்லிட்டான்.

கையோடு நிச்சயதார்த்த நாளையும் குறிச்சிடலாம்.உன் பையன் மனசு மாறுவதுக்குள்ள சட்டு புட்டுன்னு இந்த கல்யாணத்தை முடிக்கிற வேலையை தான் நம்ம ரெண்டு பேரும் பார்க்கணும் என்று மதி சொல்ல,நீங்க சொல்வது உண்மையா என்று அதிர்ச்சியா கேட்க..

அடியேய் பொண்ணு வீட்ல இருக்கோம் டி.எல்லாரும் நம்மை தான் பாத்துட்டு இருக்காங்க பாரு டி என்று மதி சொல்லவும்,அதன் பிறகே இருக்கும் இடம் வேதவள்ளிக்கு புரிய,அவர்களை பார்த்து சினேகமாக சிரித்தார்.

பொண்ணின் அப்பா அம்மாவான புகழேந்தி-ராஜகுமாரி இருவரும் இவர்களை தான் யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் பார்வையை புரிந்து கொண்ட மதிவாணன்,சம்பந்தி எங்கள் பையன் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டான்.நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறித்து விடலாம் என்று சொல்ல, அவர் சொல்லியதை கேட்டு அவர்களுக்கும் சந்தோஷம் தாளவில்லை.

மதிவாணன் சம்பந்தி என்று அழைத்ததிலேயே அவர்களுக்கு உள்ளம் குளிர்ந்து விட்டது.கண்டிப்பாக சம்பந்தி கையோடு நாள் குறித்து விடலாம் என்றனர்.

ஹாலில் உட்கார்ந்து இவர்கள் பேசுவதையெல்லாம் தனது அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த மலர்விழியோ யாருக்கோ விதியென ஜன்னலை பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள்.

தனது தோழியை முறைத்துக் கொண்டிருந்த மஞ்சுவோ அடியேய் மலரு..உன்னோட கல்யாணம் பற்றிய பேச்சு தான் டி வெளியே ஓடிட்டு இருக்கு. நீ இப்படி பிடித்து வைத்த பிள்ளையார் போல் உட்கார்ந்து இருந்தால் என்னடி அர்த்தம்?

இன்னும் அவனைதான் நினைத்துக் கொண்டிருக்கிறாயா என்று கடுப்பில் கேட்க,அந்த கேள்வியில் திரும்பிய மலர்விழி இன்னொரு முறை அவனை பற்றி என்கிட்ட பேசினால் அதுதான் நீயும் நானும் பேசுற கடைசி நாளாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டு மீண்டும் பழைய போல திரும்பி உட்கார்ந்து கொண்டாள்.

குமாரி அந்த காலண்டரை எடுயென்று புகழேந்தி சொல்ல,இதோங்களென்று எழுந்து போய் சுவரில் மாட்டியிருக்கும் காலண்டரை கழட்டி எடுத்துட்டு வந்து கணவர் முன்பு நீட்ட,அதை வாங்கியவர் பின்னாடி உள்ள முகூர்த்த நாளை பார்த்துவிட்டு ஏப்ரல் 11ஆம் தேதி சுப முகூர்த்த நாளாக இருக்கிறது.

அன்று பங்குனி உத்திரமும் வருது.நம்ப புள்ளைங்க நிச்சயதார்த்தத்தை அன்றே வைத்துக் கொள்ளலாமா என்று கேட்க ஆஹா ரொம்ப நல்ல நாள் தாராளமா அன்னைக்கே வைத்துக் கொள்ளலாம் என்று மதிவாணன் தம்பதியினரும் சொன்னார்கள்.

அப்புறங்க,இப்போதைக்கு பையன் டெல்லியில் இருக்கிறான்.அவன் இங்கு வந்த பிறகு அவனோடு என் பொண்ணு, மாப்பிள்ளை,சொந்த பந்தங்களை கூட்டிட்டு ஒரு நாளைக்கு பொண்ணு வீடு பார்க்கிறதுக்காக நாங்க வருவோம் என்று மதிவாணன் சொல்லவும் அதைக் கேட்ட மலர்விழியின் அப்பாவோ தாராளமா வாங்க,அதுதானே முறை என்றார்.

பின்னர் நிச்சயதார்த்தத்தை பற்றி பேசி முடித்தவர்கள் சரிங்க சம்பந்தி அப்போ நாங்க கிளம்புறோம்.நாங்க இங்கு வர்றதுக்கு ஒரு வாரத்திற்கு முன்னாடியே உங்ககிட்ட விஷயத்தை சொல்லி விடுவோம் என்க...
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
694
புகழேந்தியும் அவர்கள் சொல்வதை கேட்டு சரிங்க என்றவர் மனைவியை பார்க்க,கணவரின் பார்வையை உணர்ந்தவர் மலரு மலரு என்று ராஜகுமாரி கூப்பிடவும் ஊமை போல உட்கார்ந்திருந்தவளோ அமைதியாக வெளியே வந்தாள்.

மருமகளை பார்த்து சிரித்தவர்களோ சரி மா நாங்க போயிட்டு வரோம் என்க,இதுவரை இருந்த மனநிலையை ஒதுக்கி வைத்தவள் சிரித்த முகத்தோடு அவர்களை பார்த்து தலையசைத்தாள்.

வாசல் வரை வந்து புகழேந்தியம் ராஜகுமாரியும் அவர்களை வழி அனுப்பி வைக்க காரில் ஏறியவர்களோ போயிட்டு வரோம் என்று சொல்லிக்கொண்டு அங்கிருந்து அவர்கள் ஊரான பாபநாசத்தை நோக்கி சென்றனர்.

கொலோன்-ரைன் ஆற்றங்கரை,ஜெர்மனி:

கண்ணுக்கு முன்னால் ஓடும் ஆற்றையும்,மின்விளக்கின் வெளிச்சத்தில் தெரிகின்ற கட்டிடங்களை விட்டுவிட்டு,அதற்கு அப்பால் இருக்கும் கருமையான இருட்டை பார்த்துக் கொண்டிருந்த பியூலாவின் மனமும் அந்த இருட்டை போல தான் இருளடைந்தது இருக்கிறது.

ஹேய் பியூலா இன்னும் கொஞ்ச நேரம் இங்கு இருந்தாலும் இந்த குளிரில் நடுங்கியே செத்து போய்டுவோம் டி. பிளீஸ் எந்திரிச்சி வா நம்ப வீட்டிற்கு போகலாமென்று மனையின் தோளை அணைத்துக் கொண்டு விக்டர் சொல்ல...

கணவனின் வார்த்தைகள் காதில் விழுந்தாலும் பியூலாவோ தனது நிலை மாறாமல் தூரத்து இருட்டை வெறித்தபடியே இருந்தார்.

அந்த நேரம் பார்த்து விக்டருக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்கவும்,ப்ச் என்றவாறு தனது ஜெர்கினுள் இருந்த போனை எடுத்து பெயரை பார்த்தவர்,இந்தியாவில் இருக்கும் ஜெர்மனி எம்பசி என்பது தெரிந்ததும் உடனே அட்டென் பண்ணியவர் சொல்லுங்க சார். என் பொண்ணை பற்றி எதாவது நியூஸ் கிடைத்ததா?

அவள் எங்கே இருக்காளென்று தெரிந்து விட்டதா என்று கேள்விகளை அடுக்க,ரிலாக்ஸ் மிஸ்டர் விக்டர்.சீக்கிரம் உங்கள் மகளை பற்றி தெரிந்துவிடும்.

உங்கள் மகளுடைய கேஸை சிபிஐ கிட்ட ஒப்படைச்சாச்சி.விரைவில் உங்கள் தேடலுக்கு பதில் கிடைக்கும்.அதை பற்றி சொல்ல தான் உங்களுக்கு கால் பண்ணினேன் என்க...

ஓஓஓஓ..தேங்க்யூ சார் என்று சொல்லி அழைப்பை துண்டித்தவர் மை டியர் வெரோனி எங்க தான் போன?

உன்னை காணாமல் நாங்கள் தவிப்பது தெரியலையா?

வேண்டாம் வேண்டாமென்று உன் அம்மா சொன்னாளே,இந்த முட்டாள் தான் அவள் பேச்சை கேட்காமல் உன்னை இந்தியாவிற்கு அனுப்பி தப்பு பண்ணிட்டேனே என்று கதறி அழுதார்.

விக்டரின் அழுகுரல் கேட்டு கல்லு போல உட்கார்ந்திருந்த பியூலா,எதுவும் சொல்லாமல் எழுந்து நின்று கணவனை பார்த்தார்.

நன்கு விவரம் தெரிந்த வயதிலிருந்து தனக்கான தேடலையும் காதலையும் எந்த கண்களில் கண்டு பூரித்து போனாரோ,அதே கண்கள் கடந்த ஆறு மாதங்களா எந்த உணர்ச்சியையும் காட்டாமல் வெறுமையாக இருப்பதை பார்த்த விக்டருக்கு,எண்ணற்ற அம்புகள் நெஞ்சத்தை துளைப்பது போல இருந்தது.

விதியா இல்லை தனது மனதின் சதியா??என்று வழக்கம் போல மனதிற்குள் நினைத்து மறுகியவர்,வா மா என்றவாறு வடியும் கண்ணீரை கூட துடைக்காமல் முன்னே நடந்து செல்ல,ஊசியாய் உடலுக்குள் ஊடுருவும் குளிரோ மரத்து போன என்னை என்ன செய்து விட முடியுமென்ற எண்ணத்தில் பியூலாவும் கணவரின் பின்னாடியே சென்றார்.

பதினைந்து நிமிட நடை பயணத்தில் புரொபசர்.விக்டர் என்ற நேம் போர்டு இருந்த கேட்டை திறந்து உள்ளே போனவர் வீட்டின் பெல்லை அழுத்த சிறிது நொடியில் கதவும் திறக்க அங்கிருந்த பெண்மணியோ பியூலாவை வேதனையாக பார்த்தார்.

உள்ளே வந்த பியூலாவோ விக்டர் என்க,நீண்ட மாதங்களுக்கு பிறகு தன்னவள் தன்னை அழைப்பதை கேட்டவனோ என்னடா என்றவாறு மனைவியை பார்க்க,நான் இந்தியாக்கு போகணும்.என் பொண்ணு இல்லாத வீட்டில் என்னால் இருக்க முடியலை.பிளீஸ் நம்ப வீட்டுக்கு என்னை கூப்பிட்டு போங்கலென்று கண்ணீரோடு கேட்க..

மனைவியின் கண்ணீரை துடைத்தவர் கண்டிப்பா போகலாம் மா.நாளைக்கு காலேஜிற்கு போய் என் வேலையை ரிசைன் பண்ணிட்டு வரேன்.பிறகு ரெண்டு பேரும் இந்தியாக்கு போகலாமென்றவர் வா கொஞ்சம் சாப்பிடு.

"டேப்லட் போடணும் மா".

நாளைக்கு உன் பொண்ணு வந்து எங்கம்மாவை ஏன் சரியா கவனிக்கவில்லை என்று சண்டை போடுவாளென்க,அந்த வார்தைகளை கேட்ட பியூலா,அக்கா டிபன் கொடு.

ஏஞ்சல் வரும் போது நான் தெம்பா இருக்கணும் கா.இல்லன்னா உங்க கிட்ட தான் சண்டை போடுவாள் என்று பேசிக்கொண்டே அங்கிருந்த வாஸ்பேசனில் கையை கழுவிட்டு போய் டைனிங் டேபிளின் முன்னால் உட்கார,இதைக் கேட்ட அந்த பெண்மணியோ அப்பா முருகா நீ தான் துணையென்று வந்த கண்ணீரை தனது முந்தானையால் துடைத்துக் கொண்டு இயல்பாக இருப்பது போல் முகத்தை வைத்தபடி பியூலாவுக்கு டிபனை பரிமாற,அக்கா நீங்களும் உட்காருங்க.

விக்டர் எங்கக்கா என்கவும்,தம்பி ரூமுக்கு போயிருக்குமா.நீ சாப்பிட்டுகிட்டு இரு பியூலா,தம்பி வந்துடும் என்றார்.

ரூமிற்குள் வந்த விக்டரோ சுவற்றில் மாட்டியிருக்கும் மகளின் போட்டோவை போய் தடவியவர்,எங்கடா இருக்கிற? ஏதாச்சும் அப்பா மேல உனக்கு கோவமாடா?மன்னிச்சுடுடா சீக்கிரம் வந்துடுடா.நீ இல்லாம இந்த வீடு வீடாகவே இல்லை என்று மௌனமாக கண்ணீர் வடித்தார்

அந்த நேரம்....ஆயிரம் மயில்களுக்கு அப்பால் இருக்கும் இந்தியாவின் கோத்தகிரியில் உள்ள கே.வி எஸ்டேட்டின் பாதாள அறைக்குள், கைகால் கட்டப்பட்டு வாய்விட்டு அழ முடியாமல் படுத்திருக்கும் 23 வயது அழகு பதுமையான வெரோனிகாவோ டாட்,நிலன்,மாம் பிளீஸ் என்னை காப்பாற்றுங்களென்று உள்ளுக்குள் கதறினாள்.

தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top