• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
711
சொல்லுங்க மிஸ்டர் வேதநந்தன் உங்களுக்கும் சந்திரிகாவிற்கும் என்ன தொடர்பு?என்க...அடேய் என்று பல்லை கடித்தவர் பின்னர் தனது நெற்றியை தடவி விட்டு,சந்திரிகா நம்ப எஸ்டேட்ல வேலை பார்த்த பொண்ணுதான்.நான் அவள மனசார விரும்பினேன். கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன் அந்த நேரத்துல தான் எனக்கு போலீஸ் ட்ரைனிங் போட்டிருந்தாங்க நான் ஹைதராபாத்துக்கு வந்துட்டேன்.

சரி ட்ரைனிங் முடிச்சிட்டு வேலையோட போய் அம்மாகிட்ட சொல்லி அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்னு பல கனவுகளோடு நானும் இருந்தேன். ட்ரைனிங்கும் முடிஞ்சுது முதல் போஸ்டிங் ஜம்மு காஷ்மீரில் போட்டுருந்தாங்க.

விஷயத்தை அம்மாகிட்ட சொல்ல நானும் ஆசையா ஊருக்கு போனால் நம்ம வீட்ல ஒரு ஒன்றரை வயசு பொண் குழந்தை நிலமாறனோடு ஓடியாடி விளையாடிக்கிட்டு இருந்துச்சு.

யாரோட குழந்தைமா என்று கேட்கும் போது சந்திரிகாவுடைய குழுந்தைனு அம்மா சொல்லவும் எனக்கு பேரிடி தலையில் விழுந்தது போல இருந்துச்சு .
சந்திரிக்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா என்று கேட்க ஆமாப்பா விபத்துல அந்த பையன் இறந்துட்டான்னு அம்மா சொன்னாங்க..

அதைக் கேட்ட உடனே நான் சந்திரிகாவை காதலிச்ச விஷயத்தையும்,அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுவதையும் சொல்ல அம்மாவும் அதை கேட்டு சந்தோஷப்பட்டார்கள்.சரி சந்திரிகா கிட்ட நானே இதை பத்தி பேசுறேன்னு சொன்னாங்க..

நானும் சரி மா என்று சொல்லிட்டு அங்க இருந்து ஜம்முக்கு போயிட்டேன் கொஞ்ச நாள் கழிச்சு அம்மா கிட்ட இருந்து போன் வந்தது.வீடு தீ பிடிச்சதில் சந்திரிகாவும் குழந்தையும் இறந்துட்டாங்கன்னு..

அதைக் கேட்டு நான் ரொம்ப உடைஞ்சு போயிட்டேன்.அதன் பிறகு அம்மா என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி எவ்வளவோ வற்புறுத்தினார்கள் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க தோணலை.
இதாலே அம்மாவுக்கும் எனக்கு சண்டை வந்தது. இங்க இருந்தா தானே கல்யாணத்தை பத்தி பேசுவீங்கன்னு சண்டை போட்டுட்டு வீட்டை விட்டு வந்துட்டேன்.அதன் பிறகு நான் ஊருக்கு போகவே இல்லையென்றார்.

இந்த டெரர் பேஸ்குள் இப்படி ஒரு காதல் மன்னனா என்று மாறன் கேட்க காதலிச்சு பாருடா அப்பதான் அதோட வலியும் சுகமும் தெரியும் என்றவர் பிறகே சந்திரிகாவின் பக்கத்தில் இருக்கும் போட்டோவை பார்த்தவர் இது இது நமது பக்கத்து எஸ்டேட் சதாசிவம் தானே என்வும் ஆமாம் அந்த அயோக்கியன் தான் என்றனர்..

சந்திரிகாவுக்கும் இவனுக்கும் என்னப்பா சம்பந்தம் இருக்கென்று அவர் கேட்க,நீயே டைரியை படிச்சு பாரு மாமா என்றான்.

வேதநந்தனும் மருமகன் சொன்னதைக் கேட்டு முழுவதுமாக படித்து முடித்து அதிர்ந்து போய் இருவரையும் பார்த்தவர் இவ்வளவு சம்பவம் நடந்திருக்கா?

ஓஓஓ காட்...

அப்ப அந்த பொண்ணு சதாசிவத்தை தேடி கோத்தகிரிக்கு போயிருக்கணும் இல்லையா என்க,அப்படி தான் இருக்கணும் மாமா.அதும் இல்லாம அந்த பொண்ணோட அப்பாகிட்ட பேசினோம்.அவர் சென்னை பிளைட்ல ஏத்திவிட்டேன் என்று சொன்னாரு.ஆனா அந்த பொண்ணு பெங்களூருக்கு வந்திருக்கு என்க..இது என்னடா புது குழப்பமா இருக்கு என்றார்.

ஆமாம் மாமா...உன் ஊருக்கு போனாதான் என்ன நடந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும்.எங்க ரெண்டு பேரையும் பார்த்து ரொம்ப வருஷம் ஆகுது இல்லையா.அங்கு இருப்பவங்களுக்கு அடையாளம் தெரியாது.

அதனால் நாங்க வேலை கேட்டு போற போல போறோம்.ஆமாம் நாங்க ரெண்டு பேரும் போலீஸா இருக்கிற விஷயம் அந்த வேலன் குடும்பத்துக்கு தெரியுமா என்றான்..

அது எப்படி டா தெரியாம இருக்கும்?

நிலமாறனுக்கு சதாசிவத்தோடு பொண்ணு கவியை தாண்டா அம்மா கல்யாணம் பண்ணலாம்னு சொல்லிட்டு இருக்காங்க என்க...

என்னப்பா சொல்ற என்று நிலவன் அதிர,ஆமாண்டா அப்படி தான் நான் கேள்விப்பட்டேன்.கணக்குப்பிள்ளை பரந்தாமன் தான் சொன்னாரு என்கவும்,ஆஹ இங்கு நடக்கிற விஷயத்தையெல்லாம் ஒட்டு கேட்டுகிட்டு தான் இருக்கியா என்றான்.

நாலு மாசத்துக்கு ஒருவாட்டி போன் பண்ணி பொதுவா எல்லாரையும் விசாரிப்பேன்.வேற ஒன்னும் இல்லை என்றவர் நம்ம நிச்சயதார்த்த பங்ஷன் இருக்கு.அதை முடிஞ்ச பிறகு அடுத்தது இத பத்தி என்ன ஸ்டெப் எடுக்கலாம்னு முடிவு பண்ணலாம் இப்ப நீங்க போய் படுங்க என்றவர் சந்திரிகாவை நினைத்து வேதனைப்பட்டார்.

விடியல் தொடங்கியது...காலை சாப்பாடு சாப்பிட்டவர்கள் பாபநாசத்தை நோக்கி சென்றனர் இவர்கள் வருவதாக போன் பண்ணி சொல்லிவிட வேதவள்ளியோ அனைவருக்கும் பிடித்த சாப்பாட்டை வேலையாட்களிடம் சொல்லி தயாராக வைத்திருந்தார்.

வந்தவரிடம் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருக்க மாறன் தனது பாட்டி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க நல்லா இருப்பா என்றார்.உடம்பு எப்படி இருக்கு பாட்டி என்கவும் நல்லா இருக்கு யா உன் கல்யாணத்தை பார்த்துவிட்டால் நிம்மதியா இந்த உசுரு போயிடும் என்கவும் ஏன் இப்படி சொல்ற என்று மாறன் கவலையாக கேட்க உடம்பு அப்படி இருக்குப்பா என்றார்.

வந்ததிலிருந்து தன்னிடம் ஒரு வார்த்தை கூட அம்மா பேசாமல் இருப்பதை பார்த்தவன் அம்மா என்று போய் அவரை தோளுடன் அணைக்க என்னை தொடாத டா என்று மகனின் கையை தட்டி விட்டார்.

பின்ன நான் தொடாமல் உன் புருஷன் தான் உன்ன தொடணுமா என்கவும் டேய் என்று வேதவல்லி பல்லை கடிக்க பின்ன என்ன?. ரெண்டு மூணு வருஷம் கழிச்சு பையன் வந்திருக்கிறானே ஆசையா கொஞ்சுறியா?அதை விட்டு இப்படி மூஞ்சியை தூக்கி வைத்துருக்கியே நல்லாவா இருக்கு என்று மாறன் கேட்க எத்தனை முறை உன்னை ஊருக்கு வா வான்னு சொல்றேன் உனக்கு வேலை தான் ரொம்ப முக்கியமா போயிடுச்சா என்று சத்தம் போட்டார்.

சரி சரி விடு அதான் உனக்கு புடிச்ச புள்ளைய கல்யாணம் பண்ணிக்க போறேன் வேற என்ன வேணும் என்க,அதுக்காக தான் போனால் போகட்டும்னு மன்னிச்சு விடுறேன் என்று மகனை அணைத்து முத்தமிட்டவர் வேலை எல்லாம் எப்படி இருக்கு?ரொம்ப கஷ்டமான வேலை எல்லாம் இழுத்து போட்டுக்காதீங்க என்க,இதை உன் அண்ணன் கிட்ட சொல்லு என்கிட்ட சொல்லி என்ன புண்ணியம் என்றான்.

நிச்சயதார்த்த நாளும் வந்தது.

மாலை ஆறு டூ எட்டு நிச்சயதார்த்த நேரம் என்பதால் சொந்த பந்தங்களோடு இரண்டு பஸ்ஸில் ஏறிக்கொண்டு சூடாமணி நோக்கி புறப்பட்டனர்.நிச்சயதார்த்தம் ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர். அவரவருக்கான அறையில் இருவரும் தயாராகினர்.

கவர்னர் வருவதால் போலிஸ் பாதுகாப்பும் அங்கு கெடுபிடியாக இருந்தது.மஞ்சுவுக்கு இதையெல்லாம் பார்த்து மாப்பிள்ளை யாரா இருக்கும் என்று யோசனையாக,வெளியே இருந்த போர்டில் போய் பெயரை பார்த்தவள் இளமாறன் ஐபிஎஸ் என்று இருக்கவும் எதேஏஏஏ போலீசாஆஆஆ...

அடிப்பாவி போலீஸ்காரன் பொண்டாட்டியாடி நீ என்று சிரித்துக் கொண்டே தோழியின் அறைக்குள் வர அங்கே பியூட்டிஷனும் அவளுக்கு அலங்காரம் பண்ணி கொண்டிருந்தார்.

மாப்பிள்ளை யாரு தெரியுமா என்கும் போது பொண்ணை மேடைக்கு கூப்பிடுறாங்க என்று அவளின் பெரியப்பா மருமகள் வந்து சொல்லவும் மலர்விழியும் மஞ்சுவோடு மேடைக்கு வர, அவளுக்கானா புடவை மற்ற பொருட்கள் உள்ள தாம்பாளத்தை வேதவள்ளியும் மதிவாணனும் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு ரூமிற்குள் வந்து தயாரானாள்.

சிறிது நிமிடங்கள் கடந்திருக்க அங்கிருந்த ஐயரே பொண்ணு மாப்பிள்ளையை வர சொல்லுங்க நல்ல நேரம் ஆரம்பிக்க போகுது என்றார்.

முதலில் இளமாறன் மேடைக்கு வந்தான்.அதன் பின்னர் மலர்விழி வர டேய் மாப்பு தங்கச்சியை பாருடா என்கவும் இளமாறன் திரும்பிப் பார்க்க அங்கே அழகு பதுமை போல் வருபவளை பார்த்து ஒரு நொடி அசந்து போனான்.

மாப்பு ஜொல்லு வடியுது வாய மூடுடா என்று நிலவன் சொல்லிய பிறகே அவள் பக்கம் இருந்து வலுக்கட்டாயமாக பார்வையை திருப்பியவன் சும்மா பார்த்தேன் டா.நீ ஓவராக பண்ணாத என்றான்.

என்ன சமாளிக்கிறியாக்கும் உன் முகர கட்டையில தான் நல்லா தெரியுதே என்று நிலவனும் சிரித்தான்.

இளமாறனை பார்த்த மஞ்சுவோ இவனா என்று அதிர்ந்து போய் தோழியிடம் சொல்ல போவதற்குள் மலர்விழியோ மேடைக்கு சென்று விட்டாள்.தம்பி மாலை எடுத்து பொண்ணு கழுத்தில் போடுங்கள் என்க..

மாறனும் தாம்பாளத்தில் இருந்த மாலை எடுத்து கீழே குனிந்து கொண்டு நிற்பவளின் கழுதில் போட்டு விட்டான் அம்மாடி நீயும் எடுத்து போடுமா என்க அவளும் எடுத்தவள் அவனை நிமிர்ந்து பார்க்காமல் எட்டி மாறனின் கழுத்தில் போட,மோதிரத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்றார்.

அவளை நோக்கி கையை நீட்ட, நீண்ட விரல்களை பார்த்தவள் எதுவும் சொல்லாமல் சாவி கொடுத்த பொம்மை போல் அவன் விரலில் பட்டும் படாமலும் மோதிரம் போட,தம்பி நீங்க போட்டு விடுங்கள் என்க,தனது இடக்கரத்தை தயங்கியபடி அவன் முன்பு நீட்டியவளின் இடது கையை பிடித்தவன் பஞ்சு போன்ற விரல்களின் மென்மையில் மாறனின் மனம் ஒரு நொடி ஆடி தான் போனது.

விரலில் மோதிரம் போட போக அவளோ கீழே குனிந்து கொண்டே இருக்கவும் நீ நிமிர்ந்து பார்க்காமல் இந்த மோதிரத்தை நான் போட மாட்டேன் என்று இளமாறனும் அப்படியே நிற்க சிறிது நொடி சென்று நிமிர்ந்து பார்த்தவளோ நீயா என்று அதிர்ந்தாள்.

அதற்குள் இளமாறன் அவள் கையில் மோதிரத்தை போடவும் அதில் சுய நினைவுக்கு வந்தவள் நோஓஓஓஓ என்று கழுத்தில் கிடந்த மாலையை கழட்டி தூக்கி எறிந்தவள் பொறுக்கி ராஸ்கல் உனக்கு நான் கேக்குதாடா என்று எட்டி இளமாறனின் சட்டையை பிடித்து கத்த,அங்கிருந்தவர்களோ என்னடா நடக்குது என்று அதிர்ந்து போனார்கள்...

அய்யோ அப்பா இவன் சரியான பொம்பள பொறுக்கி பா.இவனையா எனக்கு மாப்பிள்ளையா பார்த்திருக்கீங்கள் என்று கத்த,ஸ்டாப் இட் என்ற குரல் கேட்க அந்த இடம் குண்டு ஊசி போட்டால் சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதியானது.

குரல் வந்த திசையில் அனைவரும் பார்க்க அங்கே சாலாட்சி பாட்டியும் நிலமாறனும் நின்று கொண்டிருந்தனர்.வேகமாக மேடை ஏறி வந்தவன் மாறனின் சட்டையை பிடித்து நிற்கும் மலர்விழியை ஒரு பார்வை பார்த்தவன் ஒழுங்கு மரியாதையா கையை எடுங்க என்றான்.

அவன் குரலில் இருந்த கோவமோ மலர்விழிக்கு பயத்தை கொடுக்க பட்டென்று கையை எடுத்தாள்.எதுவும் சொல்லாமல் அவளை ஒரு தீப் பார்வை பார்த்தவன் தனது அண்ணனின் சட்டையை தட்டி விட்டு என்ன நடக்குது இங்க?.யாரை பார்த்து என்ன வார்த்தை பேசுறீங்க?.இன்னொரு வார்த்தை பேசினீங்க என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்று கையை நீட்டி எச்சரிக்க,மலர்விழி ஏம்மா இப்படி நடத்துக்குற என்று புகழேந்தி கத்தினார்...

அய்யோ அப்பா இவன் ஒரு பொம்பளை பொறுக்கி பா...இவன் என்று தயங்கியவள் கண்ணை மூடி திறந்து விட்டு 5 வருஷத்துக்கு முன்பு டெல்லியில் ஒரு வீட்டில் பிராஸ்டியூட் கேஸ்ல போலீஸ் அரெஸ்ட் பண்ணும்போது இவனை நாங்கள் பார்த்தோம் என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

அவள் சொன்னதை கேட்ட இளமாறன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி விசிறி எறிந்தவன் பக்கத்தில் இருந்தவளை பார்க்க அந்த பார்வையே அவளுக்கு நடுக்கத்தை தந்தது.

பின்னர் அங்கிருந்த தனது அப்பா அம்மாவை ஒரு பார்வை பார்த்தவன் வேகமாக இறங்கி மண்டபத்தில் இருந்து வெளியேறினான்.

என்ன சொன்னீங்க?

திரும்ப சொல்லுங்கள் என்று நிலமாறன் கேட்க ஏன் இத்தனை பேருக்கு காதில் விழுந்தது உங்களுக்கு விழவில்லையா
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
711
உங்க அண்ணனை டெல்லியில் ஒரு ரெட் லைட் ஏரியாவுல நான் பார்த்தேன்.
நான் மட்டும் பாக்கல என் பிரண்டு அங்க நிக்கிறாளே மஞ்சு அவளும் பார்த்தா போதுமா என்க,ஷட் அப் என்று கையை ஓங்கியவன் பொம்பளைன்னு பாக்குறேன் இல்லன்னு வச்சுக்க வெட்டி போட்டுருவேன்.

என் அண்ணன் யாரு தெரியுமா?

டெல்லி சிட்டியோட அசிஸ்டெண்ட் கமிஷனர்..இன்னொரு வார்த்தை தப்பாக உங்க வாயிலிருந்து வந்தது நான் மனுஷனா இருக்க மாட்டேன் என்றவன் அங்கிருந்த தனது தந்தையை பார்த்து என்ன மாதிரி குடும்பத்தில் சம்பந்தம் பேசிருக்கீங்க?.
உங்களுக்கு வந்து வச்சிக்குறேன் என்று பல்லை கடித்தவன் தனது அண்ணன் போன திசையில் ஓடினான்.பிறகே சுதாரித்த நிலவன் மாறா என்று ஓட..

என்னங்க நடக்குது?.

என் பையனை இத்தனை பேருக்கு முன்னால் உங்க பொண்ணு கேவல படுத்திடுச்சே என்று மதி கேட்க,எனக்கும் ஒன்னும் புரியலையே என்று சொல்லிய புகழேந்தி அம்மாடி நீ என்ன பேசுற?

மாப்பிள்ளை எப்படிப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர் தெரியுமா?இவர் அசிஸ்டன்ட் கமிஷனர் மா.அவங்க அப்பா திருச்சி மெடிக்கல் காலேஜோட டீன். சின்ன மாமா தமிழ்நாட்டுக்கு கவர்னர்.அவரோட பெரிய மாமா டெல்லியோட கமிஷனர்.இப்படி எல்லாரையும் கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திட்டியே என்றார்...

என்னப்பா சொல்றீங்க என்றவள் அப்பொழுது தான் எதிரே நிற்கும் ஆளுநர் வெற்றி நந்தனை பார்த்து எதுவும் சொல்ல முடியாமல் வாயடைத்து நிற்க வேதவள்ளியும் மதிவாணனும் அமைதியாக மேடையில் இருந்து இறங்கி கீழே செல்ல மற்றவர்களும் அவர்கள் பின்னாடியே வந்தனர்.

அடக்கப்பட்ட கோபத்தை பெருமூச்சு விட்டு வெளியேற்றிக் கொண்டிருந்த மாறனின் தோளை தொட்ட நிலமாறன் அண்ணா எப்படி இருக்க என்றான்.

திரும்பி தம்பியை பார்த்தவன் நீ என்ன டா என்னமோ பொண்டாட்டி செத்தவன் போல இப்படி தாடியும் மீசையுமான கோலம்.பிசினஸ்மேன் போலயா இருக்க?என்கவும்,தனது அண்ணனின் பழைய கம்பீரம் திரும்பி வந்ததை பார்த்தவன் அது ஒன்னும் இல்ல ணா என்று தயங்க ஒன்னும் இல்லன்னா எதுக்கு இப்படி பரதேசி கோலத்தில் இருக்குற சொல்லு? என்ன நடந்துச்சு?

எதாவது பிரச்சனையா என்கவும் எதுவும் சொல்லாமல் நிலமாறன் கீழே குனிந்து நிற்க,அங்கு வந்த நிலவன்,மச்சி எதுவா இருந்தாலும் நம்ம வீட்ல போய் பேசிக்கலாம்.பர்ஸ்ட் இங்க இருந்து கிளம்பலாம் என்றான்.

ஆளாளுக்கு அவர்களுக்கு வாய்க்கு வந்தபடி பேச அதையெல்லாம் கேட்டு டென்ஷனானவன் இந்த மயிருக்கு தான் கல்யாணம் கருமாதிலாம் வேணான்னு நிம்மதியா டெல்லியில் இருந்தேன்.

புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து என் மானத்தை வாங்கிட்டீங்க சந்தோஷம் தானே உங்களுக்கு என்று தாய் தந்தையை பார்த்து கத்தி விட்டு எப்படி வந்தீர்கள் என்று தம்பியிடம் கேட்க,நம்ப கார்ல தான் வந்தோம் என்றான்.

கார் சாவியை குடு என்க,நீ உட்காரு ணா. நான் டிரைவ் பண்றேன் என்றான். திரும்பி தம்பி ஒரு பார்வை பார்க்க எதுவும் சொல்லாமல் தனது பாக்கெட்டில் இருந்த கார் சாவி எடுத்து கொடுக்க அதை வாங்கிய மாறன் வேகமாக போய் அங்கே பார்க்கிங்கில் இருந்த காரை எடுத்துக் கொண்டு வர சாலாட்ச்சி பாட்டியும் நிலமாறனும் அதில் ஏற,நீங்க போங்க நான் வரேன் என்று சொல்லிய நிலவன் மற்றவர்களை அவர்கள் வந்த பஸ்ஸில் ஏற்றிவிட்டு அவனுங்க வந்த காரை எடுத்துக் கொண்டு கோத்தகிரியை நோக்கி சென்றான்.

எதுவும் சொல்லாமல் வீட்டுக்கு வந்த ராஜகுமாரியோ அமைதியாக நிற்கும் மகளை பார்த்தவர் பளார் பளாரென்று ஓங்கி அறைந்தவர் எத்தனை வாட்டி சொன்னேன் மாப்பிள்ளை பத்தி தெரிஞ்சுக்க தெரிஞ்சுக்க தெரிஞ்சுக்கனு...

பெரிய புடுங்கி மாதிரி எல்லாம் உங்களுடைய விருப்பம் உங்களுடைய விருப்பம் சொல்லிட்டு இத்தனை பேருக்கு முன்னாடி அந்த பையனை இப்படி அவமானப்படுத்திருக்கியே என்ன இதெல்லாம்?.பெத்த ஒரு பொண்ணாலே குடும்பம் மானமே இன்னைக்கு சந்தி சிரிச்சிடுச்சி.

அது இருக்கட்டும் உனக்கு இந்த பையனை எப்படி தெரியும் அதை முதலில் சொல்லு என்க,மலர்விழியோ எதுவும் சொல்லாமல் அழுது கொண்டே ரூமிற்குள் ஓடிப்போய் கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள்.

மாறா என்று சாலாட்சி பாட்டி கூப்பிட்ட பிறகே தனது வேகத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக காரை ஒட்டியவனுக்கு சற்று முன்னால் நடந்த நிகழ்வுகள் கண் முன்னால் வந்து சென்றது.

இத்தனை பேருக்கு முன்னாடி இப்படி அவமானப் படுத்திட்டாளே என்று அதையே நினைத்துக் கொண்டவன் அழகு இருக்கிற இடத்தில்தான் ஆபத்து இருக்கும் என்பது போல இன்னைக்கு நிரூபிச்சுட்டியேடி.

ஒரு நிமிஷம் உன்னை பார்த்து நானும் என்னை மறந்தேனே அதற்கான தண்டனை தானா என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டவன் கோபத்தை டிரைவிங்கில் காட்ட அவர்கள் கோத்தகரிக்கு வந்து சேரும் போது விடியற்காலை ஆனது.

சரி கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுங்க பிறகு மத்ததை பேசிக்கொள்ளலாம் என்று சாலாட்சி பாட்டி சொல்ல பாட்டி மணி 5 ஆயிடுச்சு இதுக்கு அப்புறம் படுத்து என்ன தூங்குறது என்று சொல்லிக்கொண்டு நிலமாறனை பார்த்த மாறன் மேலே ரூமுக்கு வா என்று சொல்லிவிட்டு செல்ல..

உன் அண்ணன் இன்வெஸ்டிகேஷனை ஆரம்பிச்சுட்டான் டா எதா இருந்தாலும் உண்மையை சொல்லி தொலைடா என்று நிலவன் சொல்ல,என்னய்யா நக்கலா என்று நிலமாறன் முறைக்க,மேலே போனால் தெரிஞ்சுடும் வா மாப்பி என்று தனது சின்ன மச்சான் தோளில் கையை போட்டு அழைத்துக் கொண்டு மாடியில் இருக்கும் ரூமிற்குள் சென்றான்.

அங்கிருந்த ஷோபாவில் கால் மேல் கால் போட்டு,தனது இரண்டு கைகளையும் நீட்டி வைத்து உட்கார்ந்து இருக்கும் தோரணையை பார்த்த நிலமாறனுக்கு தனது வாயிலிருந்து உண்மையை வாங்காமல் அண்ணன் விடமாட்டான் என்பது புரிந்து தலையை குனிந்து கொண்டு நின்றான்.

நீலு என் பொறுமையை சோதிக்காதே?

எதுக்கு இப்படி இருக்க?

என்ன நடந்துச்சு சொல்லு என்கவும் அண்ணா அது வந்து நான் என்கும் போதே நிலமாறனுக்கு அழுகை வந்தது.

டேய் என்று அதட்ட...

அது வந்து ணா நான் ஒரு பொண்ணை காதலிச்சேன்.அவள் காணாமல் போய் மூணு மாசம் ஆகுது என்க...என்ன காணா போயிட்டாளா?.

"ஆமா ணா"

எங்க போனாளென்று தெரியலை.அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது ணா.செத்துடலாம் போல இருக்கு என்று அழுதான்...

அதைக் கேட்ட நிலவன் பளாரென்று நிலமாறன் செவிட்டில் இரண்டு அறையை விட்டவன் என்னடா வார்த்தை இது என்க..

ஷிட் என்று தனது தாடியை தடவிய மாறன் என்னடா இப்படி சொல்ற, இந்த ஊர் பொண்ணு தானே கண்டு பிடிக்கலாம் என்கவும்,இந்த ஊரு இல்ல ணா பெங்களூர் என்றான்.

எதேஏஏ...பெங்களூர்ல இருக்குற பொண்ணு கூட உனக்கு எப்படி பழக்கமாயிடுச்சு என்கவும்,இரண்டு மாதமா எனக்கு செக்கரட்டிரியாக வேலை பார்த்துகிட்டு இருந்தாளென்றான்.

அப்படியா...ஒருவேளை அவங்க அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சு பிரச்சனையாகிருக்கும் என்று மாறன் சொல்ல,அதற்கு வாய்ப்பு இல்லை ணா.

அவளுக்கு அப்பா அம்மா யாருமே இல்லை.ஆசிரமத்தில் வளர்ந்தவள் என்க,நிலமாறன் சொன்னதைக் கேட்ட இருவரும் என்னடா சொல்ற?.அந்த பொண்ணு போட்டோ,வேற டீடைல்ஸ் இருக்கா என்றனர்..

இதோ ணா என்று தனது ரூமிற்கு சென்றவன் அங்கிருந்த போட்டோவை எடுத்துட்டு வந்து மாறனிடம் நீட்ட,அதை வாங்கி பார்த்தவனோ வெரோனிகா என்று அதிர,என்னடா சொல்ற என்று நிலவனும் அண்ணன் தனது காதலியின் பெயரை சொல்வதைக் கேட்டு இவளை உனக்கு தெரியுமாணா என்று நிலமாறனும் அதிர்ந்து போனான்.

டேய் இந்த பொண்ணை உனக்கு எப்படி தெரியும்?

அவளை எங்க மீட் பண்ணின?

இந்த பொண்ணு எங்க தங்கிருந்துச்சி என்று கேள்விகளை அடுக்கினான்.

நிலமாறனோ தனது அண்ணனின் பதற்றத்தை பார்த்து அண்ணா ரிலாக்ஸ்.எதுக்கு இப்படி ரியாக்ட் பண்ற?என்றவாறு தோளை தொட....

"ஊப்"

டேய் என்னை விடு. முதல்ல வெரோனிகா எங்க?அதை சொல்லுடா?என்று தம்பியை பிடித்து உலுக்கினான்.

மாறாஆஆஆ...

என்ன பண்ணுற என்று நிலவன் கத்த, பிறகே தனது செயல் புரிந்து தனது நெற்றியில் தட்டிக் கொண்டவன் ஊப் என்று பெருமூச்சு விட்டு சாரிடா சாரிடா என்று தனது தம்பியின் சட்டையை சரி பண்ணினான்.

இருவரையும் பார்த்த நிலமாறன் மாமா என்ன ஆச்சு நீயாவது சொல்லு?எதுக்கு அண்ணா இப்படி ரியாக்ட் பண்ணுது என்கவும் நான் சொல்றேன் டா நீ உட்காரு என்ற நிலவன் பின்னர் வெரோனிகாவின் கேஸ் பற்றி இதுவரை அவர்கள் தெரிந்து கொண்டதையெல்லாம் சொல்ல கேட்ட நிலமாறனோ அதிர்ச்சியில் உறைந்து போனான்.

மாமா நீ சொல்றதெல்லாம் என்று தடுமாற்றமாக நிலமாறன் கேட்க, உண்மையை தான் டா சொல்லிக்கிட்டு இருக்கேன்.அந்த கேஸை தான் நானும் உன் அண்ணனும் ஹேண்டில் பண்றோம்.

அவங்க பேரன்ட்ஸ் ஜெர்மனி எம்பசில போய் கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்க டா. இது வெளியே தெரிந்தால் நம்ப நாட்டுக்கு கெட்ட பெயர்.உனக்கு என்ன தெரியுமோ அதை மறைக்காமல் எங்களிடம் சொல்லுடா என்றான்.

பேரண்ட்ஸா என்று அதிர...

"ஆமா டா"

நீ சொல்லு என்க..

"சரி மாமா" என்று சொல்ல தொடங்கினான்.

என்னோட பிரண்ட் வசந்த் பெங்களூர்ல இருக்கானே,அவனுடைய கல்யாணத்தை முடிச்சிட்டு திரும்பி ஊருக்கு வர நான் பஸ் ஸ்டாப்பிற்கு வந்தேன்.பஸ் நைட் 11 மணிக்கு அங்கிருந்து மூவ் ஆகும் போது தான் வெரோனிகா என்னோட பக்கத்து சீட்டில் வந்து உட்கார்ந்தாள்.

வேற சீட் மாறி உட்காரலாம்னு பார்த்தால் சீட் எதுவுமே காலி இல்லை.சரின்னு நான் கண்ணை மூடி தூங்கிட்டேன்.

விடியற்காலை கோயம்புத்தூருக்கு வந்து பஸ் நிற்க, கண் விழித்து பார்த்தால் இவள் தூங்கிட்டு இருக்காள்.பிறகு கீழ இறங்கும் போது நம்ப எஸ்டேட் பெயரை சொல்லி எப்படி போகணும்னு டிரைவர் கிட்ட இவள் கேட்டதை நானும் காதில் வாங்கினேன்.

நான் அங்க தான் போறேன் வாங்கணு சொல்ல,என்னை அவள் நம்பவில்லை.நோ தேங்க்ஸ்னு சொல்லிட்டாள்.

சரினு நானும் நம்ப கார்ல ஏறி வீட்டுக்கு வந்துட்டேன்.பிறகு கிளம்பி ஆபிஸ் போயிட்டேன்.அன்றைக்கு தான் செக்கரட்டரிக்கான இன்டர்வியூ இருந்துச்சு.நேரமும் ஆக இவள் தான் முதலாவதாக உள்ளே வந்தாள்.என்னை பார்த்து அவள் ஷாக் ஆக நான் தெரியாத போல இருந்துட்டேன்.

ஆஹ அவளையே செலக் பண்ணிட்ட அப்படி தானே டா என்று நிலவன் கேட்க...

மாமாஆஆ என்று முறைத்தான்..

சரி நீ கண்டினியூ பண்ணென்றான்.

கடைசி ரவுண்டிலும் வெரோனிகா தான் தேர்வானாள்.இங்கிலீஷ் பேசுறது,டைப்பிங் ஸ்கில்ஸ் ஜி கே னு எல்லாத்திலுமே அவளோட பர்பாமன்ஸ் நல்லா இருந்ததால அவளை தான் செலக்ட் பண்ணினேன்.நம்ப கெஸ்ட் ஹவுஸ்லையே குடி வந்துட்டாள்.

ஏனோ அவ கூட பேசி பழகும் போது சின்ன வயசுல நம்ம வீட்டுல அம்முன்னு ஒருத்தி இருப்பாளே நான் கூட உங்களிடம் சொல்லி இருக்கேனே அவ கூட இருக்கிற போல எனக்கு அந்த பீலிங்ஸ் வந்துட்டு இருந்துச்சு. ரெண்டு மூணு வாரம் போயிருக்கும் போது அவளை மனசார நேசிக்கிறதை உணர்ந்து அவகிட்ட சொன்னேன்.

அவளுக்கும் என் மேல விருப்பம் இருந்ததால என்னோட காதலை அவள் ஏத்துக்கிட்டா.பாட்டியோ நாங்க ரெண்டு பேரும் ஃபிரண்ட் இருப்பதாக நெனச்சிட்டு இருந்தாங்க.

ஒரு பிசினஸ் மீட்டிங்கிற்கு சென்னைக்கு நானும் வெரோனிகாவும் போயிருந்தோம் அங்கு பார்ட்டியில் கலந்துகொண்ட போது ட்ரிங்க்ஸ் கொஞ்ச அதிகமா எடுத்துக்கிட்டு ரூம்க்கு வந்த நானு வெரோனிகா கிட்ட தப்பா நடந்து கொண்டேன் என்கவும்,இதுவரை தனது தம்பி பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்தவனோ வேகமாக எழுந்து வந்து பளார் பளார் என்று அவன் பங்குக்கும் நாலு அறையை விட்டான்.

தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top