• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
711
டைரியின் தொடர்ச்சி:

சுந்தரின் அதிர்ச்சியை பார்த்தவர் திடீர்னு கல்யாணம் நடந்துச்சுப்பா அதான் சொல்ல முடியல என்கவும்,அப்படிங்களா மா.கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆகுது என்றவனுக்கு ஆறு மாதம் ஆகுது பா என்றார்.

ஆறு மாதமா என்று சுந்தர் அதிர..ஆமா தம்பி.யாரோ ஒரு பெண்ணை காதலிக்கிறேன் அவள் கூட வாழப்போறனு லெட்டர் எழுதி வச்சிட்டு போயிட்டான்.ஆறு மாசத்திற்கு முன்பு வந்தவன் அவன் காதலிக்கிற பொண்ணை பற்றி சொல்ல,அவங்க அப்பாவும் கல்யாணம் பண்ணி வச்சுட்டாரு.

இதைக் கேட்ட சுந்தருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.சதா எப்போ மா வருவான் என்று கேட்க,
அனேகமா இவ்வளவு நேரம் வந்துகிட்டு இருக்கணும். அவங்க போய் ஒரு வாரம் ஆகுது முந்தா நேத்து போன் பண்ணினான் இன்னும் ரெண்டு நாளில் கிளம்பி வந்துடுவாங்கன்னு சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

கார் சத்தம் கேக்குது சதா தான் வந்துட்டான் போல என்று சரளா சொல்ல சுந்தரோ உள்ளத்தில் இருக்கும் வெறியை மறைத்துக் கொண்டு இயல்பாக இருப்பது போல் இருக்க அம்மா என்றவாறு சதாசிவம் அவன் மனைவி சரோஜாவும் வர அங்கிருப்பவனை பார்த்த சதாசிவம் சுந்தர் எப்படா வந்த நல்லா இருக்கியா என்று சாதாரணமாக நண்பனை பார்த்து நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தான்.

உன் பணக்கார புத்தி காட்டிட்டியேடா நாயே,உன்ன போல எச்சக்கலைக்கிட்ட போய் நட்பு வச்சிருந்தனே என்னை எந்த செருப்பால அடிச்சாலும் புத்தி வராது என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவன் வலுக்கட்டாயமாக வரவைத்த சிரிப்பை சிரித்தவன் நல்லா இருக்கேன்டா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தேன்.

எனக்கு கல்யாணம்.அதான் பத்திரிக்கை கொடுத்துட்டு போகலாம் என்று வந்தேன் என்க அப்படியா என்றான்.மனமின்றி அவனிடம் பத்திரிக்கை கொடுத்தவன் சரிடா நான் கிளம்புறேன்னு சொல்ல இருப்பா சாப்பிட்டு போலாம்.இவ்வளவு தூரம் வந்திருக்க என்று சரளா சொல்ல வேண்டாம் மா கோயம்புத்தூர்ல சொந்தக்காரங்களுக்கு பத்திரிக்கை கொடுக்கிற வேலை இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.

ஒரு வழியாக ஊருக்குள் வந்து சேர்ந்த மகனின் முகத்தை பார்த்த அன்னம்மாள் என்னப்பா ஒரு மாதிரியா இருக்க என்க, எனக்கு ஒன்னும் இல்லம்மா பஸ்ல வந்தது சோர்வா இருக்குன்னு சொல்லி விட்டு சாப்பாடு வேண்டாம் என்று படுத்து விட்டான்.

மறுநாள் வீட்டின் வாடகை கொடுப்பதற்காக பணத்தை எடுத்துக் கொண்டு வந்த சந்திரிகாவோ உள்ளே பேச்சு குரல் கேட்டு தயங்கி நிற்க...

அய்யா சதாவை பார்த்தியா புள்ளை பொறந்ததை சொன்னியா? ஏன் வரலையாம் என்று அன்னம்மாள் கேள்விகளை எடுக்க அந்த கம்னாட்டி பயலை பத்தி பேசாதம்மா.அப்பாவி பொண்ணுக்கு துரோகம் பண்ணிட்டான் மா என்றான்.

என்னய்யா சொல்ற என்க..ஆமா மா அவன் அங்கு ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த பொண்ணு கூட சந்தோஷமா இருக்கிறான் மா என்று தலையில் அடித்துக் கொண்டு சுந்தர் அழுக இதைக் கேட்ட சந்திரிகாவோ மயங்கி போய் பொதீரென்று விழுந்தாள். ஏதோ விழும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த சுந்தர் அங்கு சந்திரிகா மயங்கி கிடப்பதை பார்த்து அம்மா அம்மா என்று கத்தினான்.

மகனின் குரலைக் கேட்டு வேகமாக வந்தவர் சந்திரிகாவை பார்த்து சீக்கிரம் போய் தண்ணி எடுத்துட்டு வா என்க சுந்தரும் ஓடிப் போய் தண்ணி எடுத்துட்டு வந்து கொடுக்க அதை சந்திரிகாவின் முகத்தில் தெளித்தார்.

சிறிது நொடியில் கண்ணைத் திறந்தவள் அன்னம்மாளின் மடியில் படுத்திருப்பதை பார்த்து பதறி எழுந்தவள் அண்ணா இவ்வளவு நேரம் நீங்க அம்மாகிட்ட சொன்ன விஷயம் எல்லாம் என்கவும்...

மறுத்து சொல்ல முடியாமல் சுந்தர் கீழே குனிந்து நின்றான். அண்ணா தயவு செய்து சொல்லுங்கள் என்று சந்திரிகா கெஞ்ச ஆமாமா அந்த பயல் கல்யாணம் பண்ணி ஆறு மாசம் ஆகுதுமா.
பொண்டாட்டி கூடு சந்தோஷமா வாழ்க்கையே வாழ்ந்துட்டு இருக்கான்.

அதைவிட கொடுமை ஒரு வார்த்தை கூட உன்னை பற்றி குழந்தைய பற்றி கேட்கவே இல்லம்மா.விருந்து சாப்பிட சொல்றான். அந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு நரக வேதனையா இருந்துச்சு எதுவும் சொல்லாம நான் வந்துட்டேன் என்றான்.

அதைக் கேட்டவளோ விரக்தியாக ஒரு சிரிப்பை சிரித்துவிட்டு அம்மா இந்தாங்கம்மா விட்டு வாடகை என்று கையில் பணத்தை திணித்துவிட்டு பக்கத்து தெருவில் இருக்கும் அவள் வீட்டிற்கு சென்று விட்டாள்.

வீட்டிற்கு வந்தவளின் முகத்தைப் பார்த்த பெண்மணி என்ன ஆச்சு தாயி என்க, என் வாழ்க்கையே நானே மண்ணள்ளி போட்டுக்கிட்டேன் மா என்று சதாசிவம் பற்றி சுந்தர் சொல்லியதை சொல்ல ஐயோ என்று கதரினார்.யாரும் இல்லாதவருக்கு சந்திரிகா மகளானாள்.பெத்த பொண்ணாகவே நினைத்து அவரால் அழ மட்டுமே முடிந்தது.

மறுநாள் சுந்தர் வீட்டிற்கு போனவள் ஒரு முடிவு எடுத்து இருக்கேன் என்க என்ன மா என்றனர். நான் ஊரோட போறேன் மா. அந்த துரோகியே அங்கு இருக்கும்போது நான் ஏன் ஓடி ஒளியனும் என்கவும்,சந்திரிகா சொல்வது சரி தான்.

நானே கொண்டு வந்து உன்னை விடுகிறேன் என்று சுந்தர் சொல்ல வேண்டாம் ணா.குழந்தையை தூக்கிட்டு நானே போகிறேன். எந்த சூழ்நிலையும் நான் இந்த ஊர்ல இருந்தேன்னு யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொல்ல ஏதாச்சும் ஒன்னுனால் அண்ணனுக்கு லெட்டர் போடு என்று மனமே இல்லாமல் சந்திரிகாவை குழந்தையோடு அனுப்பி வைத்தனர்.

கண்ணீர் எல்லாம் வத்தி போய் மனமும் மரத்துப்போனவளோ ஒன்னேகால் வயது குழந்தையோடு தான் பிறந்து வளர்ந்து குடிசைக்கு வந்தாள்.

அக்கம் பக்கத்தில் இருப்பவர்களோ குழந்தையோடு வந்த சந்திரிகாவை பார்த்து அதிர்ந்தவர்கள் எப்போ கல்யாணம் ஆச்சு?பாட்டி எங்கே என்று விசாரிக்க சில நாட்களுக்கு முன்னால் பாட்டியும் கணவரும் ஒரு விபத்தில் இறந்து விட்டார்கள் என்று சந்திரிகா சொல்ல அதை நம்பியவர்கள் அவளுக்கு வந்து ஆறுதலாக பேசி சென்றனர்.

இரண்டு வருடமாக பூட்டியிருந்த வீடு பாழடைந்தது போல் இருக்க பக்கத்து வீட்டிலிருந்து தொடப்பம் வாங்கிட்டு வந்தவள் முதலில் வீட்டைக் கூட்டி சாணியால் மொழிகியவள், பக்கத்தில் இருக்கும் கடைக்கு போய் சமைக்கிறதுக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிட்டு வந்து சமைத்து குழந்தைக்கு முதலில் பசியாற்றியவள் புடவை எடுத்து அங்கிருந்த உத்தரத்தில் தொட்டில் கட்டி அதில் தூங்க வைத்தாள்.

நாளைக்கு என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து தரையிலே தனது முந்தானை விரித்து படுத்தவர்களுக்கு கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

மறுநாள் காலையில் எழுந்து வீடுவாசல் கூட்டி பாலை காட்சி குழந்தைக்கு கொடுத்தவள் அவளும் குளித்து குழந்தையும் குளிக்க வைத்து தயாராகி சாலா எஸ்டேட்டிற்கு சென்றாள்.

பெரிய வீட்டின் முன்பு போய் நின்று பெரியம்மா பெரியம்மா என்று கூப்பிட சாலாட்சி பாட்டியோ தனது 5 வயது பேரனான நிலமாறனுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தவர் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு உள்ள வாங்க என்றார்.

குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே வரும் சந்திரிகாவை பார்த்தவர் அம்மாடி சந்திரிகா என்க,நான் தான் பெரியம்மா என்றவள் பின்னர் பாட்டி இறந்ததை சொல்லி அழுதாள்.

பாப்பாத்திக்காக வருத்தப்பட்டவர் அழாதம்மா.இனிமே தான் நீ தைரியமா இருக்கணும்.உன்னோட கணவன் என்று கேட்கவும் அவரும் அந்த விபத்தில் இறந்து போயிட்டார் என்று மற்றவர்களிடம் சொன்ன கதையை அவரிடமும் சொன்னாள்.

அவளுக்கு ஆறுதலாக நாலு வார்த்தை பேசியவர் குழந்தையை வைத்துக்கொண்டு எஸ்டேட்டில் எப்படி வேலை பார்ப்பாய்? ஒன்னு பண்ணு நம்ப வீட்டில் சமைக்கிற வேலைக்கு வீட்டுக்கு வரியா என்கவும் சரிங்கமா என்றாள்.

அதே போல் குழந்தையை தூக்கிக்கொண்டு அந்த வீட்டிற்கு சமையல் வேலைக்கு வர ஆரம்பிக்க நிலமாறனுக்கும் விளையாட புது தோழி கிடைக்க சந்தோஷப்பட்டான்.

சுந்தருக்கு கல்யாணம் நாளும் நெருங்கி வர மன்னிச்சிடுங்க ணா. என்னால் வர முடியாது என்றும் சாலா எஸ்டேட்டில் வேலை கிடைத்ததையும் தங்களை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும்,ஒரு நாள் நீங்களும் அண்ணியும் இங்கு வாங்க என்று லெட்டர் எழுதி போட்டாள்.

மூன்று வேலை உணவும் பெரிய வீட்டிலேயே தாய் மகள் இருவருக்கும் கிடைத்து விடுவதால் பெரிதாக அவர்களுக்கு செலவு ஒன்றும் இல்லாமல் போனது.

நிலமாறனையும் தனது மகன் போல சந்திரிகா பார்த்துக்கொள்ள சாலா பாட்டியும் சந்திரிகாவை வேலைக்கார பெண்ணை போல் நடத்தவில்லை அந்த வீட்டில் ஒருவர் போலவே நினைத்தார் நாட்கள் ஓட வெரோனிகாவுக்கும் இரண்டு வயதானது.

முதல் நாள் இரவு பெய்த மழையில் நனைந்ததால் வெரோனிக்கு ஜுரம் வர குழந்தையை தூக்கிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு போனாள்.

குழந்தையை சோதித்த டாக்டர் ஃபீவர் தான் என்று சொல்லி ஊசி போட்டவர் பக்கத்தில் இருக்கும் மெடிக்கலில் மருந்து வாங்கிக்க சொன்னார்.

மகளை அங்கிருந்த சேரில் உட்கார வைத்தவர் அம்மு இங்கேயே இரு அம்மா வந்துடறேன் என்று சொல்லிவிட்டு மெடிக்கலுக்கு சென்று சிறிது நிமிடத்தில் மருந்து வாங்கிட்டு வந்தவள் அங்கே குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டிருப்பவனை பார்த்து கொலை வெறி வந்தது.வேகமாய் வந்தவள் குழந்தையை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

தாயின் முகத்தை பார்த்த குழந்தையோ பயந்து போய் அழுக குழந்தையின் அழுகை சத்தத்தில் நிதானத்திற்கு வந்தவள் யாரு தூக்கினாலும் போகக்கூடாது என்று சொல்லிருக்கேன் இல்லையா ஏன் அவன் கிட்ட போன என்கவும் அவரு தான் மா வந்து என்ன தூக்கினார் என்று மழலை குரலில் குழந்தை சொல்லி அழ சரிடா தங்கம் என்று வாரி அணைத்தவள் குழந்தைக்கு மருந்தை கொடுத்து படுக்க வைத்தாள்.

நள்ளிரவு இருக்கும்போது கதவு தட்டும் சத்தம் கேட்கவும் எழுந்து போய் கதவை திறக்க உள்ளே வந்த சதாசிவம் அம்மு என்று அவளை அணைக்க வெறிகொண்டு அவனை விலக்கித் தள்ளியவள் பளார் பளார் என்று அவனை அறைந்தவள் த்தூஊஊ பொறுக்கி நாயே..நம்ப வச்சு துரோகம் பண்ணிட்டியேடா எதுக்குடா என் வீட்டுக்கு வந்த போடா வெளியிலே என்று அங்கிருந்த அருவாள்மனையை தூக்கிகொண்டு பத்திரகாளி போல் நின்றாள்.

சந்திரிகாவின் தோற்றத்தைப் பார்த்த சதாசிவத்திற்கு ஒரு நொடி பயம் வந்து அங்கிருந்து சென்றுவிட்டான் அதன் பின்னர் வந்த நாட்களில் சந்திரிக்கா தனியாக வரும்போது அவளிடம் பேச முயற்சி பண்ண இந்த விஷயம் வேலனுக்கு தெரிந்து விட்டது.

எதிரிய கூட மன்னித்து விடலாம் இந்த துரோகியே ஒரு நாளும் மன்னிக்க கூடாது என்று நினைத்துக் கொண்டு படுத்து இருந்தவளுக்கு தோட்டத்து பக்கம் ஏதோ ஆள் நடமாட்டம் சத்தம் கேட்பது தெரிந்து எழுந்து போய் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க அங்கே நிலவு வெளிச்சத்தில் நாலைந்து அடியாட்கள் கையில் மண்ணெண்ணெய் கேனோடு நிற்பது தெரிந்தது.

அதில் ஒருவன் அடேய் நான் போய் கதையை முடிக்கிறேன்டா நீங்க யாரும் வராம பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல சரிடா என்று இரண்டு பேர் தெருவில் நிற்க ஒருத்தன் தோட்டத்து கதவை திறந்து விட்டு உள்ளே வந்தவன் சிமிலி விளக்கின் வெளிச்சத்தில் கையில் அருவால்மனையோடு நிற்கும் சந்திரிகாவை பார்த்தான்.

அவனைப் பார்த்த சந்திரிகா அண்ணா நீங்களா என்க,தன்னை அண்ணா என்று உரிமையோடு அழைக்கும் பெண்ணை பார்த்து அதிர்ந்து போய் கையில் இருந்த அருவாளை கீழே போட்டான்.

வேகமாக வந்தவள் அண்ணா இப்ப எப்படி இருக்கு உன் காயமெல்லாம் சரியாயிடுச்சா என்று கேட்க அப்பொழுதுதான் சில நாட்களுக்கு முன்னால் தான் ரோட்டில் அடிபட்டு இருந்ததையும் யாரோ ஒரு பெண் ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்த விஷயம் அவனுக்கு நினைவு வர அப்போ என்னை காப்பாற்றியது நீயா என்க..
ஆமா ணா என்றாள்.

ஐயோ என்று தனது நெற்றியில் அடித்துக் கொண்டவன் உன்னையும் குழந்தையும் கொல்றதுக்கு பெரியைய்யா எங்களை அனுப்பியிருக்கிறார்.நிச்சயமாக உங்களை ஏதும் பண்ண விட மாட்டேன் .அவங்க மூணு பேரையும் நான் பார்த்துக்குறேன் நீ குழந்தையோடு இங்கிருந்து எங்கேயாச்சும் போயிடுமா.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
711
இந்த நேரத்தில் நான் எங்க அண்ணா போவது என்று சந்திரிகா அழுகவும் சத்தம் போடாதே என்றவன் நான் ஒரு அட்ரஸ் தரேன் நீ அங்க போயிடு என்றவன் பின்னர் வேகமாக அங்கிருந்த பழைய புத்தகத்தில் அடுப்பு கரியால் சந்திரிகாக்கு அட்ரஸ் எழுதி கொடுத்தவன் அவங்களை நான் கூப்பிட்டு போறேன்.

நீ எப்படியாவது தப்பிச்சு போயிடுமா என்று பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து சந்திரிகாவின் கையில் திணித்துவிட்டு கதவை திறந்து வெளியே வந்தவன் சற்று தள்ளி நின்றவனிடம் ஏய் அவ முழிச்சிட்டு இருக்கா டா.

கத்தி ஊரை கூட்டினால் பிரச்சனையாடும்.நல்லா தூங்கட்டும் வாங்க என்று அழைத்துக் கொண்டு சென்றான்.சந்திரிகாவோ தூக்கத்திலிருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கிருந்த டிரங் பெட்டியில் தேவையானதெல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு சத்தம் இல்லாமல் தோட்டத்து வழியாக அந்த இருட்டில் குழந்தையோடு நடத்து மெயின் ரோட்டிற்கு வர அவள் நேரமோ என்னவோ அங்க ஒரு லாரி நின்றது.

அதில் ஏறலாமா என்று நினைக்கும் போது லாரியில் இருப்பவன் நல்லவனா கெட்டவனா என்று தெரியவில்லை.முதல் பஸ் வரும் வரை இங்கு யார் கண்ணிலும் படாமல் மறைந்து இருக்கலாம் என்று நினைத்தவள் அங்கிருந்த பஸ் ஸ்டாப்பிற்கு பின்னாடி விடிய விடிய குழந்தையோடு உட்கார்ந்திருந்தாள்.

முதல் பஸ் காலை 5 மணிக்கு என்பதால் இந்த நேரத்தில் கிராமத்தில் யார் வருவார்கள் என்று நினைத்தாள். அதேபோல் பஸ் வர குழந்தையோடு அதில் ஏறி உட்கார்ந்து கொண்டவள்.

கோயம்புத்தூருக்கு வந்து அங்கிருந்து குழந்தைக்கு குடிக்க பால் வாங்கி கொடுத்தவள் தானும் ஒரு டீயை குடித்துவிட்டு திருச்சிக்கு பஸ் ஏறினாள். கண்ணீர் கணக்கில்லாமல் வழிந்து ஓடியது. ஏன் ஆண்டவன் தனக்கு இப்படி ஒரு வாழ்க்கையை கொடுத்தான் என்று கடவுளை திட்டாமலும் இருக்கவில்லை.

மதியம் 2:00 மணிக்கு எல்லாம் திருச்சிக்கு வந்தவள் அங்கிருந்த ஆட்டோக்காரரிடம் அட்ரஸ் காட்டி இங்கு போகணும் என்று சொல்ல வாம்மா என்று அழைத்துக் கொண்டு பவுல் காப்பகத்துக்கு வந்து சேர்ந்தான்.

இதுதாம்மா என்க ரொம்ப நன்றி ணா என பணத்தை கொடுத்துவிட்டு குழந்தையோடு டிரங்க் பெட்டியை எடுத்துக்கொண்டு உள்ளே போக பாதர் அகஸ்டினோ அங்கிருந்த குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருக்கவும், இவளோ பாதர் என்று போய் கூப்பிட்டாள்.

குழந்தையோடு வருபவளை பார்த்தவர் நீங்க எல்லாம் போய் விளையாடுங்கள் என்று சொல்ல அவரிடம் வந்தவள் சந்தர் அண்ணன் அனுப்பி வைத்தார் என்கவும் சந்தரின் பெயரைக் கேட்ட பாதரோ அவன் எங்கேமா இருக்கான் என்று கேட்க அண்ணா கோத்தகிரியில் உள்ள எஸ்டேட்டில் வேலை செய்வதாக சொன்னாள்

இவங்கலாம் தாய் இல்லாத பிள்ளைகள்.நீ குழந்தையோடு இருக்கும்போது அவர்களுக்கும் தாய் இல்லையே என்ற ஏக்கம் வரும் மா.நான் உனக்கு பக்கத்தில் வேலை வாங்கி தரேன் தெரிஞ்சவங்க வீடு ஒன்று வாடகைக்கு இருக்கு அங்கு தங்கிக் கொள் என்று பாதர் சொல்ல அவளுக்கும் அது சரி என்று பட்டது.

அதேபோல் பக்கத்தில் இருக்கும் பாலக்கரையில் குடிசை வீடு வாடகைக்கு கிடைக்க மகளோடு அங்கு போய் தங்கியவள் பக்கத்தில் இருக்கும் காய்கறி கடைக்கு வேலைக்கு சேர்ந்தாள்.இதோடு டைரி முடிந்திருந்தது....

இனி....

டைரியை படித்து முடித்த நிலவனுக்கும் மாறனுக்கும் சந்திரிகவை நினைத்து வேதனையாக இருந்தது.அதோடு சதாசிவத்தின் மேல் கொலை வெறி வந்தது.

ஏன் மச்சி இதுக்கு அப்புறம் சந்திரிகா எங்க போனாங்கன்னு எந்த விஷயமும் தெரியலை.பாதருக்கு விஷயம் தெரியும் எங்கோ ஒரு மூலையில் அவங்க உயிரோடு இருக்கலாம் இல்லையா என்க...நானும் அதைப்பற்றி தாண்டா யோசிக்கிறேன் என்றான்.

அப்ப நம்ம உடனடியாக கிளம்பி திருச்சியில் இருக்கும் பாதரை பார்த்தால் ஏதாச்சும் குளு கிடைக்கும்.சோ காலையில் கிளம்பிடலாம் என்றனர்.

அதேபோல் அதிகாலையிலே தயாராகியவர்கள் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிக் கொண்டு மீனம்பாக்கம் ஏர்போர்ட்டுக்கு வந்தவனுங்கள் திருச்சி செல்லும் பிளைட்டில் ஏறினர்.சில மணி நேரத்தில் திருச்சிக்கு வந்து சேர்ந்தவர்கள் ஆட்டோவில் ஏறி பவுல் ஆசிரமத்தை நோக்கி சென்றனர்.

அரை மணி நேரத்தில் அந்த ஆசிரமத்திற்கு வந்தவர்கள் டிரைவருக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு இருவரும் உள்ளே போக வயது மூப்பின் காரணமாக பாதர் அவர் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதாக ஒருவர் சொல்ல, நாங்க ரெண்டு பேரும் ரொம்ப தூரத்தில் இருந்து வந்திருக்கிறோம்.

பாதரை கண்டிப்பாக பார்க்கணும் என்று இவனுங்களும் சொல்ல, இருங்க நான் போய் கேட்டுவிட்டு வருகிறேன் என்றவர் பாதர் கிட்ட விஷயத்தை சொல்ல சிறிது நிமிடத்தில் வெளியே வந்தவர் பாதர் உங்களை வர சொல்லுகிறார் என்றார்.

இவனுங்களோ அங்கிருந்த கெஸ்ட் ஹவுஸிற்குள் சென்றவர்கள் கதவை தட்டி விட்டு வணக்கம் பாதர் என்று உள்ளே போக அங்கிருந்த ஈசி சேரில் சாய்ந்து உட்கார்ந்து இருந்தவர் காட் பிளஸ் யூ சொல்லுங்கள் என்றார்...

பின்னர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள் டைரியை படித்ததை சொல்லி சந்திரிகாவை பற்றி விசாரிக்க ஜீசஸ் என்ற பாதர் சந்திரிகா இப்பொழுது உயிரோடு இல்லை என்று சொல்லவும் என்ன பாதர் சொல்றிங்க என்று இருவரும் அதிர,நடந்ததை இருவரிடம் சொல்ல தொடங்கினார்

சந்திரிகா இங்கு வந்து இரண்டு மாதம் கடந்திருக்க அவளை தேடி சந்தர் வந்தான்.பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டிருக்கும் போது குழந்தை எங்கே என்க...

சர்சில் விட்டுருப்பதாக சொல்லவும் சரினு இருவரும் பேசிக்கொண்டு சர்ச்சை நோக்கி வரும்போது ஒரு லாரி ஒன்று வேகமாக வந்து இருவரையும் அடித்து தூக்க சந்திரிகாவோ அங்கிருந்த போஸ்ட் மரத்தின் மீது மோதி விழுந்ததால் அவள் உயிர் அதே இடத்தில் போனது.சந்துரு வலது பக்கத்தில் இருக்கும் மணலில் விழுந்ததால் சிறு காயத்தோடு தப்பித்தான்.

லாரி டிரைவரை அங்கே இருந்தவர்கள் அடித்து போலீஸ் ஸ்டேஷன் ஒப்படைத்து விட்டதாக அழுது கொண்டே என்கிட்ட நடந்ததை சொன்னான்.

கேட்ட எனக்கும் வேதனையாக இருந்தது.போஸ்ட்மார்ட்டம் பண்ணிய சந்திரிகாவின் பிணத்திற்கு ஒரு அண்ணனாக ஈமச்சடங்கு செய்தவன் அவள் குடியிருந்த வீட்டிற்கு வந்து என்ன இருக்குது என்று பார்க்க ஒரு ட்ரெங்கு பெட்டியும் அதில் கொஞ்சம் நகைகளும் பணமும் ஒரு கவரில் சுற்றிய டைரியும் இருந்தது.

இதில் வேற யாராவது சந்திரிகாவுக்கு சொந்தக்காரர்கள் இருக்கிறார்களா அவர்களை குழந்தையை ஒப்படைக்கலாம் என்று நினைத்தவன் அந்த டைரியை எடுத்து படித்திருக்கான்.

தனது 14 வயதிலிருந்து திருச்சிக்கு வந்த வரை நடந்த அத்தனை சம்பவங்களையும் சந்திரிகா அந்த டைரியில் எழுதி இருப்பதை படிச்சுட்டு அந்த பெட்டியை என்கிட்ட வந்து கொடுத்துவிட்டு போனவன் தான் இதோ 23 வருஷம் ஆகுது இதுவரை சந்தர் பற்றி எதுவுமே தெரியலை என்று வருத்தமாக சொன்னார்.

ஏங்க பாதர் கேட்கிறோம் என்று தப்பா நினைச்சுக்காதீங்க அந்த டைரியை நீங்க படிச்சு பார்த்தீங்களா என்று மாறன் கேட்க இல்லப்பா சந்தர் என்கிட்ட சொல்லிட்டு போனது என்னன்னா சந்திரிகாவை தேடி யாராவது வந்தால் அவர்கள் மேல உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அப்போது அவங்க கிட்ட கொடுத்து இந்த டைரியை படிக்க சொல்லுங்கன்னு சொன்னான்.

விக்டரும் பியூலாவும் இங்கே வளர்ந்தவர்கள். அவர்கள் வெரோனிகாவை தத்து எடுத்துக்க முடிவு செய்த பிறகுதான் அந்த டைரியை விக்டர் கிட்ட நான் கொடுத்தேன் என்றார்..

விக்டரும் அந்த டைரியை படித்து பார்க்கவில்லை என்று சொல்லவும் என்ன என்று பாதர் அதிர ஆமாம் பாதர் அவர்களுக்கும் இதில் என்ன எழுதி இருக்கிறது என்று தெரியாது. நாங்கள் தான் படித்தோம் என்றனர்.

வெரோனிகா அப்பா யாருன்னு தெரிஞ்சுதா என்க,சமூகத்தில் பெரிய இடத்தில் இருக்கும் ஒரு துரோகி தான் என்று நிலவன் சொல்ல ஜீசஸ் என்றவர் அவரவர்களுக்கான பாவத்தின் சம்பளத்தை அனுபவிப்பார்கள் என்கவும் சரிங்க பாதர் மிக்க நன்றி.

உங்களுக்கு வேற ஏதாச்சும் தெரிஞ்சால் மறக்காமல் எங்களுக்கு சொல்லுங்கள் என்று இருவரும் போன் நம்பரை கொடுத்துவிட்டு வந்தவர்கள் அடுத்தது என்ன பண்ணலாம் என்று யோசிக்கும்போது வேதவள்ளியிடமிருந்து போன் வந்தது.

அட்டென்ட் பண்ணவும் நாளன்னைக்கு நிச்சயதார்த்தம். ஞாபகம் இருக்கா இல்லையா என்று மகனிடம் கத்தினார்.

ஊப்ப் என்ற பெருமூச்சு விட்டவன் வேறு என்னமா என்க..தமிழ்நாட்டில் தான் இருக்கிற,உன்னை பெத்த தாயை பார்க்கணும்னு உனக்கு எண்ணம் வரவில்லையே என்று சொல்லிவிட்டு கோவமாக போனை வைத்து விட்டார்.

எவன் தான் இந்த கல்யாணத்தை கண்டுபிடித்தானோ,அந்த பண்ணாடை மட்டும் கையில் கிடைத்தான் என்று வாய்க்கு வந்த போல திட்டினான்...

அவர்களுக்கான பிளைட்டிற்கு நேரம் ஆகுவதால் இருவரும் ஏர்போர்ட்டுக்கு போனவர்கள் பிளைட்டில் ஏறி சென்னைக்கு வர இரவு எட்டு மணி ஆனது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
711
பின்னர் அவர்கள் பைக் எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் வர அங்கே வேதநந்தனும் வெற்றிநந்தனும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்கள்.

தற்செயலாக வாசல் பக்கம் திரும்பிய காமாட்சி இருவரையும் பார்த்து ஏப்பா அங்கையே நிக்குறீங்க வாங்கள் என்றார். அதில் சுதாரித்தவர்கள் உள்ளே வந்து எப்ப வந்தீங்க என்று அவரிடம் விசாரிக்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் என்றார்.

பின்னர் பொதுவாக பேசிக்கொண்டு இருக்க அவர்களை சாப்பிட கூப்பிடவும் கையை கழுவிட்டு வந்து அவர்கள் உட்கார இளமதியும் காமாட்சியும் டிபனை பரிமாறினர்.

சிறிது நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்க மாறன் நிலவன் கம் டு மை ரூம் என்றவாறு கீழே இருக்கும் தனது ரூமிற்குள் வேத நந்தன் செல்ல, நான் போய் அந்த பைலை எடுத்துட்டு வரேன் நீ போ என்று சொல்லிய மாறன் மேலே உள்ள தனது ரூமிற்குள் சென்றான்.

பின்னர் கதவை தட்டி விட்டு உள்ளே வர அங்கிருந்த வேதநந்தன் சிட்டவுன்,கேஸ் எந்த கட்டத்தில் இருக்கு என்க,இதுவரை அவர்கள் கேள்வி பட்டதை எல்லாம் சொன்னவர்கள் விக்டர் சொல்லியதை சொல்லாமல் அவரிடம் டைரியை நீட்ட..

மகனிடம் இருந்த டைரியை வாங்கிய வேதநந்தன் யோசனையோடு முதல் பக்கத்தை ஓப்பன் பண்ணியவர் அதிதிலிருந்த போட்டோவை பார்த்துவிட்டு சந்திரிகாஆஆஆஆஆ என்று அதிர்ந்து போனவரின் கையிலிருந்த டைரியோ கீழே விழுந்தது.

மச்சி உன் அப்பா என்ன டா இப்படி அதிர்ந்து போறாரு?இந்த சந்திரிகாவுக்கும் உன் அப்பாவுக்கும் ஏதாவது லிங்க் இருக்குமோ என்று மாறன் கேட்க நிலவனோ தனது அத்தை மகனை முறைத்து பார்த்தான்.

என்னை முறைச்சு என்ன புண்ணியம்?

உன் அப்பா மொகரக்கட்டைய பாரு என்று மாறன் பல்லை கடிக்க அப்பா அப்பா என்று நிலவன் கூப்பிட்ட பிறகு சுதாரித்தவர் கலங்கிய கண்களை துடைத்து கொண்டு இந்த டைரி எப்படி உங்க கையில வந்துச்சு?.யார் கொடுத்த என்று கேள்விகளை அடுக்க,அதற்கு மாறனோ முதல்ல உனக்கும் இந்த போட்டோல இருக்குற பொம்பளைக்கும் என்ன தொடர்புன்னு சொல்லு மாமா?பிறகு நான் விஷயத்தை சொல்லுறேன் என்றான்.

மருமகனை பார்த்து முறைத்தவர் டேய் நான் உன் மாமன் டா என்னையே கேள்வி கேட்கிறயா என்க,சூழல் அப்படி.நீ மாமா தான் யார் இல்லைன்னு சொன்னா? கேட்ட கேள்விக்கு முதல்ல விஷயத்தை சொல்லு என்க,மிஸ்டர் இளமாறன் நான் உனக்கு மேல் அதிகாரி என்கவும் இருந்துட்டு போ யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை.

உனக்கும் இந்த சந்திரிகாவுக்கும் தொடர்பு இருந்துருக்கு.அதில் பிறந்த பிள்ளை தானே வெரோனிகா என்று மாறன் கேட்க,அடப்பாவி என்று அதிர்ந்து போன வேதநந்தனை பார்த்தவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top