• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
709
டைரியின் தொடர்ச்சி:

அது வந்து நான் என்ன சொல்ல வரேன்னா என்று சதாசிவம் பேச தயங்க சின்னய்யா சீக்கிரம் விஷயத்தை சொல்லுங்க பாட்டி வேற என்னை காணும்னு தேடுவாங்க.
நேரம் ஆகுது நான் வீட்டிற்கு போகணும் என்று தைரியத்தை வர வைத்துக் கொண்டு சந்திரிகா சொல்ல,உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறேன் என்று சதாசிவம் விஷயத்தை சொல்ல அதை கேட்டவளோ அதிர்ந்து பின்னர் அவனை நிமிர்த்து பார்த்து முறைத்தாள்.

அவனோ அவளை இமைக்காமல் காதலோடு பார்த்தவன் நிஜமா தான் சொல்றேன் என்க, எனக்கு அதுபோல எண்ணமெல்லாம் கிடையாது.இனி இப்படி என்கிட்ட பேச வந்தீங்கள் மரியாதை கெட்டுவிடும் என்று சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள்.

சதாசிவமும் படித்து முடித்துவிட்டு வந்து எஸ்டேட் பொறுப்பை எடுத்துக் கொள்ள தினமும் பக்கத்து எஸ்டேட்டிற்கு வேலைக்கு போகும் சந்திரிகாவை பின் தொடர்ந்து தனது காதலை சொல்ல மட்டும் மறக்கவில்லை.

அவளும் முடியவே முடியாது என்று திட்டி விட்டு கண்டு கொள்ளாமல் இருக்க அவனும் தனது முயற்சியில் இருந்து தளரவில்லை.

ஒரு நாள் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று சிவம் மயங்கிய கீழே விழ, அதே இடத்தில் அவரின் உயிரும் போய்விட்டது.

தாத்தாவின் இறப்போ சந்திரிகாவை வெகுவாக பாதித்தது.நினைவு தெரிந்த நாளிலிருந்து தாத்தாவாக இருந்தது விட தந்தையாக இருந்தது தான் அதிகம். அந்த ஜீவன் இப்பொழுது இல்லையே என்று நினைத்து வருத்தப்பட்டு ஒடுங்கிப் போனாள்.

தானும் கண்ணை மூடுவதற்குள் பேத்தியை ஒருவன் கையில் ஒப்படைத்திடனும் என்று வைராக்கியத்தோடு பாப்பத்தியும் உள்ளுக்குள் இருக்கும் வேதனையை மறைத்துக் கொண்டு நடமாடியவர் தெரிந்தவர்கள் இடத்தில் மாப்பிள்ளை கிடைத்தால் சொல்லுமாறு சொல்லி வைக்க இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சதாசிவமும் மறுநாள் சந்திரிகா வேலைக்கு வராளா என்று பார்க்க அவளோ உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் வீட்டில் இருந்து விட்டாள்.

பின்னர் ஒரு முடிவு எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் சந்திரிகாவின் வீட்டின் தோட்டத்து வழியாக வந்தவன் கதவை தட்ட உள்ளே படுத்திருந்தவளோ அம்மாச்சி தான் என்று நினைத்துக் கொண்டு கதவை போய் திறந்தவள் அங்கு இருந்த சதாசிவத்தை கண்டு அதிர்ந்தவள் வேகமாய் கதவை சாத்த முயல...

எட்டி அவளின் கையை பிடித்தவன் ஏன் வேலைக்கு வரல என்ன ஆச்சு உனக்கு என கேட்கும் போதே அவள் கையிலிருந்த சூடு உடல் நிலை சரியில்லை என்பதை அவனுக்கு உணர்த்தியது.

செல்லம் உனக்கு என்னடி ஆச்சு என்று அவள் கன்னத்தை பிடித்து கேட்க இத்தனை நாள் வெறுப்பாக இருந்தவளுக்கு இந்த அன்பான பேச்சைக் கேட்டு முகத்தை திருப்பிக்க முடியவில்லை.

கீழே குனிந்து கொண்டு உடம்பு சரியில்லை என்று சொல்லவும் கையை விட்டவன் வந்த வழியிலே வேகமாக போனவன் அரை மணி நேரத்தில் அவளுக்கு தேவையான ஜுரம் மருந்தையும் சாப்பிடுவதற்காக பிரட்டையும் வாங்கிட்டு வந்து கொடுத்து சிறிது நேரம் இருந்தவன் நான் விளையாட்டுக்கு சொல்லவில்லை மா.

உண்மையிலேயே நான் உன்னை காதலிக்கிறேன்.ஏழை பணக்காரன் அந்த வித்தியாசத்தை நான் பார்ப்பதில்லை தயவுசெய்து என் காதலை ஏற்றுக்கொள் என்று கெஞ்ச
பெண்ணின் மனமும் இளகியது.

பின்னர் இருவரும் யாருக்கும் தெரியாமல் அவர்கள் காதலை வளர்த்தனர்.நாட்களும் மாதங்களாக செல்ல அறசல் புறசலாக இந்த விஷயம் சதாசிவத்தின் அப்பா வேலனுக்கு தெரிய மகனுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பித்தார்.

இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட சதாசிவம் நள்ளிரவில் வீட்டை விட்டு வந்தவர் சந்திரிகாவை கூப்பிட, யாரென்று பாப்பாத்தி எழுந்து வந்தவர் அங்கு இருந்தவனிடம் சொல்லுங்கள் சின்னையா என்ன விஷயம் என்றார்.

அவரிடம் விஷயத்தை சொல்லவும் தலையில் இடி விழுந்தது போல் ஆனார். ஆனால் பேத்தியின் முகத்தில் இருக்கும் பரிதவிப்பை பார்த்தவர் கடவுள் விட்ட விதி இதுதான் போல எங்கேயாவது போய் வாழுங்கள் என்று கண்ணீருடன் ஆசிர்வாதம் செய்ய இரவோடு இரவாக அவர்கள் இருவரும் கோத்தகிரி விட்டு வெளியேறினார்கள்.

விடியலும் பலவித போராட்டங்களோடு ஆரம்பமானது.வேலன் இன்று மகனுக்கு பொண்ணு பார்க்க போக வேண்டும் என்று தனது மனைவி சரளாவிடம் சொல்லிக் கொண்டிருக்க சதா இன்னும் எந்திரிச்சு வரலையே என்றார்.

காய்கறிகள் லோடு ஏற்றிவிட்டு நைட்டு 11 மணிக்கு மேல தான் வந்தான்னு மேனேஜர் சொன்னாரு தூங்கிட்டு இருப்பான் போய் பாரு.10 மணிக்கு நல்ல நேரம் இருக்கு அந்த நேரத்தில் கிளம்பலாம் என்றவாறு காபியை குடித்துக் கொண்டிருக்க,சரளாவும் படியில் ஏறி மகன் ரூமிற்கு வந்து கதவை தட்ட அதுவோ வெளியே தாழ்ப்பாள் போட்டிருப்பது தெரிந்தது.

என்ன வெளியே பூட்டியிருக்கு என கதவை திறந்து உள்ளே போக அங்கே டிபாயின் மேல் மடிக்கப்பட்ட வெள்ளை காகிதமும் அதன் மேல் ஃப்ளவர் வாஷ் இருந்தது.

அதை எடுத்து என்னவென்று படிக்க எனக்கு பிடித்தவளோடு நான் போகிறேன் என்னை தேட வேண்டாம் என்று இருந்தது.அய்யோ சதாயென கத்திக் கொண்டு கீழே வந்தவர் கணவரிடம் லட்டரை நீட்டினார்.

படித்து பார்த்து கிழித்து போட்டவர் அவனை பத்தி தெரிஞ்சுதாண்டி கல்யாண ஏற்பாடு பண்ணுனேன். பக்கத்துல வேலை செய்ற அந்த பிச்சைக்கார நாயை உன் மவன் காதலிக்கிறான் டி.

பருவத்தில் பன்னி குட்டி கூட அழகாக தான் தெரியும்.என்னத்த காட்டி மயக்கினான்னு தெரியலையே என்று அசிங்கமாக பேச கணவரின் வார்த்தைகளை கேட்டு சரளாவுக்கு ஆத்திரமாக வந்தது.

கொஞ்சம் கூட உங்களுக்கு வெக்கமா இல்லையா இப்படியெல்லாம் பேசுறீங்களே என்க,உண்மைதானே சொன்னேன்.நான் வயசு பையனா இருக்கும்போது நீயும் இப்படிதாண்டி இருந்து என்னை மயக்குன என்க..

ச்சை என்று சொல்லிவிட்டு பூஜை அறைக்குள் போனவர் என் பையன் எங்க இருந்தாலும் நல்லபடியா இருக்கட்டும் கடவுளே நீங்கதான் அவனுக்கு புடிச்ச வாழ்க்கை கிடைக்க வழி செஞ்சுருக்கீங்க.அவன் ஆசைப்பட்ட போலயே குடும்பமா வாழட்டும் என்று வேண்டிக்கொண்டார்.

வேலனோ கையில் இருந்து பீங்கான் கப்பை கீழே போட்டு உடைத்தவர் வேகமாக வெளியே வந்து அங்கிருந்த டிரைவரிடம் காரை எடுக்க சொல்லி கோத்தகிரியில் இருக்கும் சந்திரிகாவின் வீட்டை நோக்கி வண்டியை ஓட்ட சொன்னார்.

அரை மணி நேரத்தில் குடிசை பகுதிக்கு வந்தவர் கார் உள்ளே போகாது என்பதால் தெருமுனையிலே நிறுத்திவிட்டு போய் அந்த வீட்ல இருக்கிற பாப்பாத்தியை கூப்பிட்டு வா என்றான்.

கூட வந்த அடியாள்களில் ஒருவனோ அந்த குடிசை பகுதியில் நடந்து போய் சந்திரிகா வீட்டின் முன்பு நின்று வீட்டில் யாரு வாங்க என்க...பாப்பாத்தியோ யாரு என்று வெளியே வந்தார்.

அவரைப் பார்த்தவன் ஐயா வரச் சொல்றாரு என கத்திட்டு போனான்.

இந்த ஆளுக்கு தெரிஞ்சிருச்சா என்னன்னு தெரியலையே என்று பாப்பாத்தி நடுங்கி கொண்டே வர தூரத்தில் வருபவர் காய்ச்சலில் இருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட வேலன் இந்த கிழவி கிட்ட என்னத்த கேக்குறது என்று யோசித்தான்.

நடுங்கிக்கொண்டே வந்த பாப்பாத்தி வணக்கங்க ஐயா என்று கையெடுத்து வேலனை பார்த்து கும்பிட,உன் பேத்தி எங்க இருக்கா என்று கேட்க என் பேத்தியா??வீட்ல சோறு ஆக்குறாயா என்கவும் அப்படியா போய் கூட்டிட்டு வா என்றான்.

பாப்பாத்தி பாட்டியும் அங்கிருந்து தனது குடிசைக்குள் வந்தவர் பேத்தியை அழைத்துக் கொண்டு வர சந்திரிகாவை பார்த்த வேலன் இவ இங்க இருக்கிறாள்?அப்ப இவன் யாரை கூட்டிட்டு ஓடி போனான்?.

நான் தான் மத்தவங்க பேச்சு கேட்டுட்டு என் மகனை தப்பா நினைச்சிட்டேனா? என் பையன் கோடீஸ்வரன் வீட்டு ராஜா. தராதரம் தெரியாம போயும் போய் இந்த பிச்சைக்கார குடும்பத்தில் உள்ளவளையா காதலிப்பான்?.

ஆளு கொஞ்சம் பார்க்க தளதளவென்று இருக்கிறாள்.அதனால தான் நானும் இவள் தான் அவளென்று நம்பிருக்கேன் என்று அவன் வயதுக்கு மீறியும் சந்திரிகாவை ரசித்துப் பார்த்தான்.

சந்திரிகாவோ வணக்கம் பெரியைய்யா.வர சொன்னிங்களே...ஆமா புள்ள வீட்ல கொஞ்சம் சுத்தம் பண்ற வேலை இருக்கு பெரியம்மா கூட வேலை செய்.
சின்னய்யாவுக்கு கல்யாணம் ஏற்பாடு நடக்குது என்க..அவளோ முகம் மாறாமல் செய்து கொடுக்கிறேன் என்கவும் இந்தா பணத்தை வைத்துக்கொள் என்று பாக்கெட்டில் இருந்த சிறிது பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு காரை எடுடா என்ற வேலனுக்கு ஒன்றுமே புரியவில்லையே.என்னடா நடக்காது என்று மண்டை காய்ந்தது.

வேகமாக வீட்டிற்குள் வந்த சந்திரிகா பாட்டி என்க...ஏத்தா எங்கேயோ போய் வாழுங்கன்னு சொன்னேனே எப்படி வந்த? சின்னையா எங்கே?என்றார்.

பின்னர் பாட்டியிடம் நடந்ததை சொல்ல தொடங்கினாள்.இருவரும் கோத்தகிரி விட்டு வெளியே வந்தவர்கள் சற்று தூரத்தில் போய் நின்று கொண்டு எதாச்சும் லாரி வருதா என்று பார்த்துக் கொண்டிருக்கும் போது சந்திரிகாவோ சின்னய்யா நான் ஒன்னு சொல்லுவேன் தப்பா நினைக்காதீங்க என்றாள்.

என்னம்மா என்க..இப்போதைக்கு கையில ஒரு வேலையும் இல்ல,எங்க போயி நம்ம வாழுறது?உங்க அப்பாவுக்கு தெரிஞ்சாக்க என் பாட்டியை கொன்னுடுவார்.
எனக்கென்று இருக்கிறது அவங்க ஒரு ஜீவன் தான்.நீங்க வேணும்னா ஒரு வேலையை போய் தேடி வச்சுக்கோங்க பிறகு என்ன வந்து கூப்பிடுங்க பாட்டியுடன் நானும் வரேன் என்கவும் சந்திரிகா சொல்வது சரி என்பது புரிந்தாலும் தனக்காக அப்பா பணக்கார வீட்டில் சம்பந்தம் பேசி முடித்து விடுவார் என்பது புரிந்தவன் சரி அப்ப நீ வீட்டுக்கு போயிடு..

என் கூட படிச்ச நண்பன் இருக்கான் அவன் மூலமாக வேலை ஏதாவது ஏற்பாடு பண்ணிட்டு இன்னும் ஒரு மாசத்துல உனக்கான லெட்டர் யார் மூலமாவது கொடுத்து அனுப்புகிறேன் என்க..

அழுது கொண்டே சதாசிவத்துக்கு தலையை அசைத்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்த்து விட்டாள்.பேத்தி சொன்னதை கேட்ட பாப்பாத்தி தங்கமே என் உயிருக்காக உன் வாழ்க்கையே இப்படி பண்ணி வச்சிட்டியா..
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
709
சின்னையா நல்லவரு.ஆனா பெரியைய்யா உங்களை வாழ விட மாட்டாரே நான் என்ன பண்ணுவேன் என்று அழுதார். கொஞ்ச நாள் அமைதியா இரு பாட்டி அவர் ஒரு வேலைக்கு போகட்டும் பிறகு எல்லாத்தையும் பார்க்கலாம் என்றாள்.

சதாசிவமோ அவன் கூட கல்லூரியில் படித்த நண்பனான சுந்தர் அரியலூர் பக்கம் கருணாகரநல்லூர் என்னும் கிராமத்தில் இருப்பது தெரியுமென்பதால் அங்கிருந்து கோயம்புத்தூருக்கு வந்தவன் அரியலூருக்கு வந்து சேர மாலை ஆனது ஏற்கனவே நண்பன் வீட்டிற்கு வந்திருக்கிறான் என்பதால் சிரமம் இல்லாமல் போனது.

வாடா சதா எப்படி இருக்க?

வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா என்க, நண்பனின் சோர்ந்த முகம் ஏதோ பிரச்சனை என்று உணர்த்தியது.

பின்னர் பரஸ்பரம் நல விசாரித்தவர்கள் குளிச்சிட்டு வாப்பா சாப்பிடலாம் என்று சுந்தரின் அம்மா அன்னம்மாள் சொல்ல,கால் மணி நேரத்தில் சுத்தமாகி வந்தவனுக்கு சுட சுட சாதத்தையும் மீன் குழம்பையும் பரிமாற வேக வேகமாக அள்ளி சாப்பிடவும் புறையேறியது.

நண்பன் சாப்பிடும் வரை உட்கார்ந்து இருந்தவன் அவன் எழுந்ததும் நாங்க ரெண்டு பேரும் ஏரிகரை வரைக்கும் போயிட்டு வரோம் மா என்க சரிப்பா என்றார்.

இருவரும் அவர்கள் வீட்டுக்கு பின்னாடி இருக்கும் வீராணம் ஏரி கரையை நோக்கி சென்றனர்.சிறிது நிமிடங்கள் அமைதியாக வந்து சுந்தர் சொல்லுடா என்ன பிரச்சனை என்க..சதாசிவம் சந்திரிகாவை காதலித்ததையும் வீட்டுக்கு தெரிந்தது அவர் அப்பா கல்யாணம் ஏற்பாடு பண்ணுவது பின்னர் அவளோடு ஓடி வரலாமென்று முடிவு பண்ணியது,பின்னர் அவள் திரும்பி வீட்டிற்கு சென்றது வரை சொல்லி முடித்தான்.

உங்க அப்பாவை பத்தி தான் தெரிஞ்ச விஷயமாச்சே சரி விடு கவலைப்படாதே நம்ம பக்கத்து ஊருல அடுத்த வாரம் புதுசா காலேஜ் ஒன்னு ஓப்பன் பண்றாங்க.

வேகன்ஸி நிறைய இருக்கு.நானும் அதுக்கு தான் அப்ளை பண்ணிருக்கேன் நீயும் அதுக்கு அப்ளை பண்றியா கண்டிப்பா வேலை கிடைக்கும் என்கவும் சரிடா என்றான்.பின்னர் ஒரு வாரம் கடந்திருக்க சதாசிவம் சுந்தர் இருவருக்கும் அதே கல்லூரியில் வேலை கிடைத்தது.

இந்த விஷயத்தைப் பற்றி சந்திரிகாவிற்கு தெரிவிக்க நினைத்தவன் அவளுக்காக லெட்டர் எழுதி அவனின் பள்ளி நண்பன் ஒருத்தன் கோத்தகிரியில் இருக்கிறான் அவனது விலாசத்திற்கு அனுப்பியிருந்தான்.

அவனுக்கு சந்திரிகாவை சதாசிவம் காதலிக்கிற விஷயம் தெரியும். லெட்டரை வாங்கி படித்தவன் அதை கொண்டு போய் சந்திரிகாவிடம் கொடுக்க யாருக்கும் தெரியாமல் கடிதத்தை படித்துப் பார்த்தவள் அம்மா மாரியாத்தா ஒரு நல்ல வழி காட்டிட்ட தாயே என்று நெஞ்சின் மேல் கடிதத்தை வைத்துக் கொண்டு சத்தமின்றி அழுதாள்.

இரண்டு மாதம் கடந்திருக்க வேலனும் சுற்றுவட்டாரத்தில் எல்லாம் மகனை தேடி விட்டார்.ஆனால் சதாசிவம் இருக்கும் இடம் பற்றி தெரியவில்லை.

சந்திரிகாவோ எப்பொழுதும் போல் பக்கத்தில் இருக்கும் சாலா எஸ்டேட்டுக்கு வேலைக்கு போயிட்டு வருவதால் அவள் மேலயும் சந்தேகம் இல்லாமல் போய்விட்டது.

அன்று வேலை முடிந்து வரும் போது சந்திரிகாவை வர புதன்கிழமை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் டா என சுந்தரிடம் சொல்ல அவனும் சரிடா..ஏற்கனவே பேசி வச்சது தானே நானே போய் கூப்பிடுறேன் .

நீ கோயம்புத்தூர் பஸ் ஸ்டாண்டில் மட்டும் யார் கண்ணுலயும் படாம இரு என்று சுந்தர் சொல்ல,அதேபோல் இருவரும் சுந்தரின் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு கோத்தகிரிக்கு வந்தனர்.

சுந்தரோ சந்திரிகாவின் வீட்டிற்கு வந்தவன் விஷயத்தை சொல்ல ஏற்கனவே அவனைப் பற்றி சதாசிவம் சொல்லியிருப்பதால் பாட்டியும் பேத்தியும் தங்கள் சொந்தக்காரர் பெங்களூரில் இருப்பதாகவும்,அங்கு கொஞ்சநாள் தங்கிட்டு வரோமென்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்லிக் கொண்டு சுந்தரோடு புறப்பட்டனர்.

சந்திரிகாவின் அம்மா வழி உறவுகள் பெங்களூரில் இருக்கிறார்கள் என்பது பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியும்.

உள்ளுக்குள்ள கொஞ்சம் பயமாக இருந்தது.எங்கே சந்தேகம் வந்து விடுமோ என்று,பின்னர் மூவரும் கோயம்புத்தூர் பேருந்து நிலையத்துக்கு வந்தனர்.

மறைந்திருந்து பார்த்த சதாசிவத்திற்கு தன்னவளிடம் பேச வேண்டும் என்று தவிக்க,சுந்தரோ பஸ்ஸில் ஏறும் வரைக்கும் கொஞ்சம் அமைதியாக இருடா என்று வரும்போது சொல்லி வைத்திருந்ததால் பல்லை கடித்துக் கொண்டு காத்திருந்தான்.

அரை மணி நேரத்தில் அரியலூர் செல்லும் பஸ் வர இவர்கள் மூவரும் ஏறியதும் பஸ்ஸும் புறப்பட அதில் ஓடி வந்து ஏறியவன் தனியாக உட்கார்ந்திருந்த சுந்தரின் பக்கத்தில் உட்கார,ஹப்பாடா வந்துட்டியாடா..
எங்கடா ஆளே காணுமோனா நினைச்சுட்டு இருந்தேன் என்பவனிடம் நான் இருப்பது அவளுக்கு தெரியாது தானே என்க, இல்லடா தங்கச்சிக்கு தெரியாது என்றான்..

மாலை 6 மணிக்கு எல்லாம் அரியலூர் பேருந்து நிலையத்தில் வந்து பஸ்ஸும் நின்றது எல்லாரும் இறங்கிவிட இவ்வளவு நேரம் பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டே வந்தது கைகள் எல்லாம் பாட்டிக்கு வலித்தது.

டீ குடிக்குறீங்களா என்று சுந்தர் கேட்க குடிக்கலாம் பா என்றார்.

பின்னர் அங்கிருந்து டீக்கடைக்கு கூப்பிட்டு போக அவர்கள் பின்னாடியே வந்த சதாசிவம் சந்திரிகாவின் அருகில் வந்து நிற்க ஏதோ ஒரு உணர்வில் திரும்பி பார்த்த சந்திரிகாவோ அங்கிருந்தவனை கண்டதும் கண்கள் கலங்கியது.

பின்னர் இருவரிடமும் நலம் விசாரித்தான்.டீ குடித்து முடித்தவர்கள் கருணாகரநல்லூர் செல்லும் பஸ்ஸுக்காக காத்திருந்தனர்.

அவர்கள் ஊருக்கு இனிமேல் கடைசி பஸ் 8 மணிக்கு தான் என்பதால் இரவு டிபனை அங்கிருந்த ஹோட்டலில் வாங்கிக்கொண்டு பஸ்ஸில் ஏறி ஒன்றரை மணி நேரத்தில் ஊருக்குள் வந்து சேர்ந்தனர்.

வந்தவர்களை சுந்தரின் அப்பாவும் அம்மாவும் நல விசாரித்து பேசிக் கொண்டிருந்தனர்.பின்னர் அவர்களுக்காக பக்கத்து தெருவில் இருக்கும் அவர்களின் இன்னொரு வீட்டை தங்குவதற்கு ஏற்பாடு பண்ணிருக்க அதில் போய் பாட்டியும் பேத்தியும் தங்கி கொண்டனர்.

புதன்கிழமையும் வர அங்கிருந்த அம்மன் கோயிலில் இருவருக்கும் ஊர்காரவர்கள் முன்னிலையில் கல்யாணம் முடிய மணமக்கள் அவர்கள் வாழ்க்கையை தொடங்கினர்.

இரண்டு மாதம் கடந்திருக்க ஒரு நாள் தலை சுற்றுவது போல் இருப்பதாக சந்திரிகா சொல்லவும் பாட்டியோ தனது பேத்தியின் கையைப் பிடித்து பார்த்தவர் என் மகன் தான் உன் வயித்துல வந்து பிறக்க போறான் என்கவும் அதைக் கேட்டவளோ சந்தோஷத்தில் கண்கலங்கி விட்டாள்.

சதாசிவம் மனைவி கர்ப்பமா இருப்பதை கேள்விப்பட்டு ரொம்ப சந்தோஷப்பட்டான்.நாட்களும் அவர்களுக்கு சந்தோஷமாகவே செல்ல ஐந்து மாதம் நடந்து கொண்டிருக்கும் போது வயது மூப்பின் காரணமாக பாட்டியும் படுக்கையிலே அவர்களை விட்டு சென்றார்.

மகனை முடிந்த அளவுக்கு தேடி பார்த்த வேலன் இனிமே அவனை வர வைக்க இன்னொரு வேலை தான் பண்ணனும் என்று நினைத்தவன்,மகனே சதா உன்னை காணாமல் உனது அம்மா மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறாள்.

அவள் உயிர் பிரிவதற்குள் எங்கிருந்தாலும் வந்து விடுப்பா என்று சரளா ஹாஸ்பிட்டலில் இருப்பது போல போட்டோவோடு பேப்பரில் விளம்பரம் கொடுத்தான்.

வழக்கம் போல எழுந்தவன் சைக்கிளை எடுத்துக் கொண்டு பக்கத்து தெருவில் இருக்கும் கடைக்கு போய் பால் மற்றும் தினசரி பேப்பர் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.

பசும்பாலை காய்ச்சியவள் அவளுக்கு மட்டும் தனியாக பால் எடுத்துக் கொண்டு கணவனுக்கு டீ போட்டு எடுத்து போய் கொடுக்க, பேப்பரை படித்துக் கொண்டிருந்தவன் மனைவியிடமிருந்து டீயை வாங்கி குடித்தபடி பக்கத்தை திறக்க அதில் இருந்த விளம்பரத்தை பார்த்து அதிர்ந்து போய் கையிலிருந்த டம்ளரை கீழே போட்டான்.

என்னாச்சிங்க என்று சந்திரிகா பதற அம்மா எங்கம்மா என்று கண்ணீரோடு வார்த்தை தடுமாறியவன் மனைவியிடம் பேப்பரை நீட்ட அதை வாங்கி பார்த்தவளும் அய்யோ என்றானாள்.

பின்னர் கண்ணிலிருந்து வழியும் கண்ணீரை துடைத்தவள் நீங்க உடனே கிளம்புங்க என்று கணவனை துரிதப்படுத்த சதாசிவமோ வேகமாக தயாரானவன் மனைவியை இங்கு விட்டு செல்ல மனமில்லை.

இருந்தும் ஏனோ அழைத்து போகவும் மனம் இடம் தராததால் சுந்தர் வீட்டினரிடம் அவளை நன்கு கவனித்து கொள்ளுமாறு சொல்லி விட்டு அங்கிருந்து கோத்தகிரிக்கு கிளம்பிச் சென்றான்.

சதாசிவம் ஊருக்கு போய் நாட்கள் வாரங்களாய் கடந்து மாதங்களும் ஆனது. ஆனால் இதுவரை அவனிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை சந்திரிகாவிற்கு உள்ளுக்குள் ஒருவித பயம் இருந்து கொண்டு இருந்தது.

சுந்தர் போய் நேரில் பார்த்து வருகிறேன் என்று சொல்ல அதற்கு வேண்டாம் என்று மறுத்து விட்டாள்.எப்படி இருந்தாலும் சதாசிவம் அவளை தேடி வந்து விடுவான் என்று நம்பிக்கையோடு காத்திருக்க சந்திரிகாவிற்கு ஒன்பதாவது மாதம் நடந்து கொண்டிருந்தது.

சந்திரிகாவோ சுந்தரின் தோட்டத்திலே வேலை செய்து அதில் வரும் வருமானத்தை வாழ்க்கையில் நடத்திக் கொண்டிருந்தாள்.யாரும் சுந்தரோடு இணைத்து தவறாக பேசக்கூடாது என்பதில் கவனமாக பார்த்துக் கொண்டாள்.

உள்ளுக்குள் வேதனை இருந்தாலும் சந்திரிகா வெளியில் ஒருபோதும் காட்டிக்காமல் தைரியமாக இருப்பது போல் நடமாடினாள்.

ஒரு நாள் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது சந்திரிகாவுக்கு இடுப்பு வலி வரவும பக்கத்து வீட்டில் இருந்த பெண்மணியே அவளை அழைத்துக் கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போய் சேர்க்க விடியற்காலை 5.10 க்கு அழகான பெண் குழந்தையும் சந்திரகாவிற்கு பிறந்தது.

மூன்றாம் நாள் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.குழந்தையும் பிறந்து விட்டது போனவனை இன்னும் காணுமே என்று சுந்தர் கோவமாக திட்ட,அவர் சூழல் என்னவென்று தெரியலையே ணா..
கண்டிப்பாக தேடி வருவார் ணா அந்த நம்பிக்கை எனக்கு இருக்கென்று சந்திரிகா உறுதியாக சொன்னாள்.

அவளுக்கு துணைக்கு இருக்கும் பெண்மணியாள் வேதனை படவே முடிந்தது தவிர வேறு எதுவும் பண்ண வழியில்லை.பதினாறாம் நாள் கையில் கிடைத்ததை வைத்து சாமிக்கு படைத்து விட்டு"வெரோனிகா"என்று மகளுக்கு பெயர் வைத்தாள்.

அதோ இதோ என்று நாட்களும் ஓட குழந்தைக்கு முதல் பிறந்தநாளும் வந்து விட்டது.ஆனால் சதாசிவம் வந்த பாடலில்லை.

அந்த நேரத்தில் சுந்தருக்கு கல்யாணம் ஏற்பாடு நடக்க,இது தான் வாய்ப்பு என்று மனதிற்குள் ஒரு முடிவை எடுத்தவன் கல்யாண பத்திரிகை எடுத்துக் கொண்டு கோத்தகிரியில் இருக்கும் வேலன் எஸ்டேட்டிற்கு வர,அங்கிருந்த வேலையாளோ,அவர்கள் பக்கத்து ஊரான மன்னார்குடியில் இருக்கும் பங்களாவிற்கு குடி போய் ஒரு வருடம் ஆகிறது என்றான்.

என்னமோ நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டவன் அந்த அட்ரஸை வாங்கிக் கொண்டு மெயின் ரோட்டிற்கு வர பஸ்ஸும் வந்தது.அதில் ஏறிய சுந்தர் அரைமணி நேர பயணத்தில் மன்னார்குடிக்கு வந்து இறங்கியவன் அங்கிருந்த குதிரை வண்டிகாரரிடம் சதாசிவம் வீட்டை விசாரிக்க பக்கத்தில் தான் இருக்கிறது.

வாங்க என்று சுந்தரை அழைத்துக்கொண்டு அந்த பெரிய பங்களாவின் முன்பு வந்து நிறுத்தியவன் இது தான் என்க,கீழே இறங்கியவன் வண்டிக்கு காசை கொடுத்து விட்டு அங்கிருந்த பெரிய கதவை திறந்து உள்ளே போனான்.

யாரோ ஒரு இளைஞன் வருவதை வீட்டிலிருந்து பார்த்த சரளா வேலையாளிடம் யார் என்று விசாரிக்க சொல்ல சதாசிவம் நண்பன் என்றும் பத்திரிகை வைக்க வந்ததை சொல்ல வேலையாளும் விஷயத்தை கேட்டு வந்து சொன்னான்.

அதைக் கேட்டவர் உள்ளே கூப்பிட்டு வாங்க என்க,பெரியம்மா வர சொல்றாங்க உள்ளே வாங்க என்று வேலையாளும் சுந்தரிடம் வந்து சொல்ல தயக்கத்தோடு உள்ளே வந்தவன் அங்கிருந்து சரளாவை பார்த்து வணக்கங்கம்மா.

என் பெயர் சுந்தர் சதாசிவத்துகூட திருச்சியில ஒன்னா படிச்சோம் என்கவும் அப்படியாப்பா உட்காரு என்று பரஸ்பரம் நலம் விசாரித்தவர் வேலையாளிடம் டீ கொண்டு வந்து கொடுக்க சொன்னார்.

வீட்டை சுற்றி பார்த்த சுந்தர் எங்கேயாவது சதாசிவம் கண்ணில் படுகிறானா என்று அந்தப் பேலஸில் தேட,பாட்டி மற்றும் வேலையாட்களை தவிர வேறு யாரும் அங்கு இருப்பது போல் தெரியவில்லை.

டீ குடிப்பா என்று சொல்ல எடுத்துக் குடித்து முடித்தவன் சதாவை பார்க்கணும் மா என்க,அமைதியாக சிரித்தவர் சதா இப்ப ஊர்ல இல்லையேப்பா என்றார்.

அப்படியா மா வேலை விஷயமா ரொம்ப தூரம் போயிருக்கானா என்று கேட்க வேலை விஷயமா போகலை பா.அவன் பொண்டாட்டி கூட சுற்றுலா போயிருக்கான் பா என்று சொல்லி அவர் சிரிக்க,கேட்ட சுந்தருக்கு இடி விழுந்தது போலானது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
709
சூடாமணி:

மதிவாணன் வேத வள்ளி தம்பதியினர் நெருங்கிய சொந்த பந்தங்களை அழைத்துக் கொண்டு பொண்ணு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.வந்திருந்த சொந்த பந்தங்களுக்கு தனது மருமகளை வேதவள்ளி காட்ட பொண்ணு நல்லா பாக்க லட்சணமா தான் இருக்கு.

மாறனுக்கு ஏத்த பொண்ணு என்று பேசிக்கொண்டனர் பின்னர் அவர்கள் மதிய உணவு ஏற்பாடு பண்ணிருக்க விருந்து சாப்பிட்டவர்கள் நல்ல நேரத்தில் அங்கிருந்து கிளம்பினர்.

நிச்சயதார்த்தத்திற்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கு என்பதால் அதற்கான வேலையில் இரண்டு வீட்டினரும் இறங்க பொண்ணுக்கு புடைவை எடுக்க வேண்டுமே ஞாயிற்றுக்கிழமை நாள் நல்லாருக்கு அன்றைக்கு போகலாம் என்று பேசினது போல பொண்ணுக்கு நிச்சயதார்த்த புடவையும் மற்ற பொருட்களை எல்லாம் வாங்கி வந்து சேர்ந்தனர்.

அதோ இதோ என்று நாட்களும் ஓடியது விடிந்தால் நிச்சயதார்த்தம்.

தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top