• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
709
விக்டர் நினைவுகள்:

நான் உங்க பொண்ணு டாடி.கண்டிப்பா உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்.சொன்ன போல நேரில் வந்து உங்களை வந்து சந்திக்கிறேன் டாடி என்க,லவ் யூ டா செல்லம் மிஸ் யூ என்று விக்டர் கண்ணீரோடு சொல்ல அழாதீங்கப்பா..

நான் ஒன்னும் உங்களை விட்டு ஒரேடியாக போகலையே,போகவும் மாட்டேன்.என்றைக்கு இருந்தாலும் நான் மட்டும் தான் உங்களோட பொண்ணு என்க,எனக்கு இது போதும் டா என்றார்.

அதன் பின்னர் நாட்களும் ஓட வெரோனிகாவிடம் இருந்து இதுவரை எந்த ஒரு தொடர்பும் இல்லை.பியூலாவும் பொறுத்து பொறுத்து பார்த்தவர் மகளை பற்றி கேட்டு தொந்தரவு பண்ண ஆரம்பித்தார்.

மகளை பார்க்க போகலாம் என்றால் அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியாமல் எப்படி பார்ப்பது என்று விக்டர் கத்த...என்ன சொன்னீங்க என்று விக்டரின் சட்டையை பிடித்து கேட்க,அப்பொழுதுதான் அவள் கடைசியாக பேசிய விஷயத்தை எல்லாம் மனைவியிடம் விக்டர் சொல்ல, கோபம் வந்து கணவர் என்றும் பாராமல் பளார் பளாரென்று அறைந்தவர் என் பெண்ணை என்கிட்டே இருந்து பிரிச்சிட்டியே என்றவாறு மயங்கி விழுந்தார்.

அவரை தூக்கிக்கொண்டு காரில் ஏறியவர் பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ண அவருக்கு ஹார்ட் அட்டாக் என்று டாக்டர் சொல்ல ஏற்கனவே மகள் பற்றி எதுவும் தெரியவில்லை இப்பொழுது மனைவிக்கும் இப்படி என்று கேள்விப்பட்ட விக்டரோ இடிந்து போய் உட்கார்ந்தார்.

இருவரையும் தேற்றி வீட்டுக்கு கூப்பிட்டு வந்தது கலா தான்.பொறுத்தது போதும் என்று இருவரும் இந்தியாவிற்கு வந்தவர்கள் திருச்சியில் போய் பாதரிடம் வெரோனிகா வந்தாளா என்க, அவரோ இல்லையே என்றார்.

பின்னர் எங்கு தான் சென்றிருப்பாள் என்று அவர்களும் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை சுற்றுலா தளங்களிலும் தேடிப் பார்த்துவிட்டு போலீசில் கம்ப்ளைன்ட் பண்ணினர்.

அவர்களும் தேடிப் பார்த்துவிட்டு மிஸ்ஸிங் கேஸ் என்று சொல்லிவிட்டனர்.மகளை பற்றிய கவலையில் நாளுக்கு நாள் பியூலாவின் உடம்பு பாதிக்க எங்கே மனைவியையும் இழந்து விடுவோமோ என்று பயந்து போன விக்டர் ஜெர்மனி எம்பஸியில் போய் கம்பளைண்ட் கொடுத்ததாக அனைத்தையும் கண்ணீரோடு சொல்லி முடிக்க,கேட்ட மாறனுக்கும் நிலவனுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது.

அழுது கொண்டிருந்தவரை பேசி ஆறுதல் படுத்தியவர்கள் சார் ஒரு விஷயம் கேட்கிறேன் தப்பா நினைத்துக் கொள்ளாதீர்கள் என்று நிலவன் சொல்ல,சொல்லுங்க சார் என்றார்.

தாராளமா நீங்க எங்களை தம்பினே கூப்பிடலாம்.உங்களைவிட வயதில் சின்னவங்க தான் நாங்க என்கவும்,இருக்கட்டும் சார் உயர்ந்த பதவியில் இருக்கீங்க அதற்கான மரியாதை கொடுக்கணும்.

மனிதநேயத்துக்கு முன்னாடி மரியாதை ஒன்றும் பெருசு இல்லைங்க சார் என்று மாறன் சொல்ல,உண்மையான வார்த்தைங்க தம்பி என்றார்.

அதாவது உங்களோட டாட்டர் அந்த டைரியை எடுத்துட்டு இந்தியாவுக்கு வந்தாங்களானு தெரியுமா என்க,இல்லைங்க தம்பி.அன்று ரூம்கு எடுத்துட்டு போனாள்.

ரெண்டு நாள் கழித்து அந்த டைரியை என்கிட்ட கொடுத்துட்டா.இப்போ என்கிட்ட தான் இருக்கு என்கவும் அப்படிங்களா சார்...அந்த டைரியை நாங்க படிச்சி பாக்கலாமா என்றான்.

கண்டிப்பாக தம்பி.என் பொண்ணோட தேடலுக்காக இதில் ஏதாச்சும் குறிப்பு கிடைச்சா அது நல்ல விஷயம் தானே. என் மனசுக்கு அதை படிக்கணும்னு தோணலை.ஏன்னா மனசால அவளை எங்க பொண்ணா ஏத்துக்கிட்டோம். இன்னொருத்தவங்க பொண்ணுன்னு அதுல இருக்கிறதை தாங்குற சக்தி எனக்கும் என் மனைவிக்கும் சுத்தமா இல்லை.அதனாலதான் இந்த 23 வருஷமா அந்த டைரியை நாங்கள் பிரித்து கூட பார்த்ததில்லை.என்னோட பேங்க் லாக்கர்ல தான் அந்த டைரி இருந்துச்சு.

என் பொண்ணுக்காக தான் அதை வீட்டுக்கு எடுத்துட்டு வந்தேன் என்றவர் ஒரு நிமிஷம் என்று எழுந்து அங்கிருந்த ரூம் கதவை திறந்து உள்ளே போனவர் சிறிது நிமிடத்தில் கையில் ஒரு கவரோடு வந்தவர் இந்தாங்க தம்பி என்று நீட்ட அதை வாங்கிய நிலவன் சரிங்க சார்.இதை நாங்க படிச்சு பார்த்துட்டு உங்களுக்கு நாளைக்கு கொடுக்கட்டுமா என்றான்.

பரவாயில்லை தம்பி நீங்களே இதை வச்சுக்குங்க.என் பொண்ணை ஒப்படைக்கும் போது இந்த டைரியை நீங்களே அழிச்சுடுங்கப்பா எனக்கு என் பொண்ணு தான் முக்கியம்.இந்த டைரி முக்கியம் கிடையாது என்று கண்ணீரோடு சொன்னார்.

கலங்காதிங்க சார் என்றவன் கடைசியாக உங்க பொண்ணு இந்தியா வந்து சேர்ந்துட்டேன்னு கால் பண்ணினாங்களே அந்த நம்பர் இருக்கா என்கவும் ஹம் இருக்குங்க தம்பி என்றார்.

அப்போ இதை பற்றி நீங்க போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லலையா என்று மாறன் கேட்க,இல்லைங்க தம்பி.என் பொண்ணோட வாழ்க்கையில இவ்வளவு ரகசியம் இருக்கே.
இதை எப்படி நான் சொல்ல முடியும்.
அவளுடைய பிறப்பு ரகசியம் என்னனு எனக்கு தெரியாது.அதனால நான் இதை பற்றி எதுவுமே சொல்லவில்லை என்க சரிங்க சார் என்றான்.

பின்னர் தனது போனில் மகள் பேசிய நம்பரை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்திருந்ததை அவர்களிடம் காட்ட நிலவனும் அதை அவனது போனுக்கு அனுப்பி கொண்டான்.

ரொம்ப நேரம் ஆயிடுச்சு மேடம் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்க டேப்லெட் போட்டுருக்காங்கப்பா அதனால தானென்று வேதனையோடு சொன்னார்.

கவலைப்படாதீங்க சார் சீக்கிரமா உங்க பொண்ணை உங்க கிட்ட ஒப்படைக்கிறோம் என்று சொல்ல அப்படி நீங்க பண்ணிட்டீங்கனாக்க எங்க உசுரு இருக்கிற வரைக்கும் உங்களை நாங்கள் மறக்க மாட்டோம் தம்பி என்று கை கூப்பி கண்ணீரோடு விக்டர் சொல்ல...

அய்யோ சார் கையை இறக்குங்க என்றவனுங்களிடம்,இருங்க தம்பி காபி ஆர்டர் பண்றேன் என்கவும் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் சார். மேடமை கவனிச்சு பாருங்க நீங்களும் உடம்பை பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தானுங்கள்.

மதிய சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருக்கும் போது மாறனுக்கு கால் வந்தது.பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து பார்த்தவன் அட்டென்ட் பண்ணி சொல்லு தகப்பா என்க...

தம்பி ஒரு சந்தோஷமான விஷயம் என்று மதி சொல்ல,சந்தோஷமான விஷயம் உனக்குன்னு சொல்லு எனக்கு இல்லை.நேரடியாக விஷயத்தை சொல்லு என்றான்.

நீ எங்கப்பா இருக்கிற அத சொல்லென்று மதி கேட்க,நான் சன்னியானம் வாங்க இமயமலைக்கு போயிட்டு இருக்கேன் .நீயும் வரியா என்றான்.

மகன் சொன்னதை கேட்டவர் அடேய் நான் சம்சாரி டா என்றார்.தெரியுது இல்ல பின்ன எதுக்கு கேக்குற விஷயத்தை சொல்லு என்று கடுப்பில் கத்தினான்.

என்னப்பா வெயில்ல நிக்கிறியா ரொம்ப குளு குளுன்னு பேசுறியே என்கவும்..தகப்பாஆஆ என்று பல்லை கடித்தவன் நக்கல் பண்ண தான் கால் பண்ணுனியா?சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது உசுர வாங்கி தொலையிற, என்ன விஷயம் சொல்லப் போறியா இல்ல வச்சிட்டு போய் வேலையை பாரு என்றான்.

அது வந்து பா பொண்ணு வீட்டுல பேசி முடிச்சாச்சு என்கவும்,வாழ்த்துக்கள் தகப்பா.அதுக்குள்ள இரண்டாவது கல்யாணத்துக்கு ரெடியாயிட்டியா? உங்கள் தர்மபத்தினி எப்படி சம்மதித்தாங்கள்?.

அடேய் என்ன பேசவிடுடா என்று மதி கத்த சரி பேசி தொலை என்றான்.ஏப்ரல் 11ஆம் தேதி நிச்சயதார்த்தம் வச்சிருக்கோம் என்றார்.என்னாஆஆஆ 11ஆம் தேதியா?

ஆமா...எந்த கேஸ்லையும் இப்போதைக்கு இன்வால் ஆகாத. நிச்சயதார்த்தத்துக்கு நீ இல்லனாக்க எங்க மானம் காத்துல பறக்கும் புரியுதா என்று கொஞ்சம் கடுமையாக மதி சொல்ல தந்தையின் குரலில் உள்ள உஷ்ணத்தை புரிந்தவன் சரி வந்துடறேன் என்றான்.

அதை சிரித்துக் கொண்டே தான் சொல்லேன்டா என்றவருக்கு,ஏன் வாத்தி நீ என்ன லூசா?நாம என்ன வீடியோ காலிலா பேசிட்டு இருக்கோம்,நார்மல் கால் தானே,இதுல நான் சிரிச்சா உனக்கு தெரியுமா என்றான்.

மகன் சொன்னதை கேட்டவர் நீ போலீஸ்காரன் ஆவதற்கு பதில் லாயர் ஆகியிருக்கலாம் பா. எப்படி வளைச்சு வளைச்சு கேள்வி கேக்குற என் பிள்ளைக்கு எவ்வளவு அறிவு என்றார்.

உன் புகழ்ச்சியை கேட்க எனக்கு நேரமில்லை.அதான் விஷயத்தை சொல்லிட்டல்ல வை.நான் சோறு திங்கிறேன் என்க,சரிப்பா சரிப்பா என்று போனை வைத்தார்.

இரவு உணவை சாப்பிட்டு முடித்து விட்டு பரிதியிடம் சிறிது நேரம் விளையாட அவனும் களைப்பில் தூங்கி விடவும் குழந்தையை தூக்கிக் கொண்டு போய் பெட்டில் கடத்திய நிலவன் அங்கே இருந்த மனைவியை பார்த்து ஓய் பொண்டாட்டி மாமனுக்கு கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வருகிறேன் என்கவும் சரி என்ற இளமதியோ மடித்த துணிகளை கபோர்டில் அடுக்கி வைக்க மனைவியை பின்பக்கமாக அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் ஒரு முக்கியமான கேஸ் விஷயமா டிஸ்கஸ் பண்ண வேண்டியிருக்கு உனக்கு தூக்கம் வந்தா நீ தூங்கிடு செல்லம் என்க சரி மாமா என்றாள்.

உன்னை போல புரிந்து கொள்ளும் மனைவி போலீஸ்காரனுக்கு கிடைப்பது ரொம்ப லக்.அந்த விதத்தில் நான் ரொம்ப புண்ணியம் பண்ணிருக்கேன் டி என்று செல்லமாக தலையில் இடிக்க,யோய் மூடிட்டு போயா ஓவரா பண்ணுவ என்கவும் அடிப்பாவி ஒரே வாரத்தையில் மாமனை இப்படி காலில் போட்டு மிதிச்சிட்டியேடி என்றான்.

இதே டயலாக்கை கேட்டு கேட்டு எனக்கு காது புளிச்சிடுச்சு மாமா புதுசா ஏதாச்சும் சொல்லுங்கள் என்று சிரித்தாள்.சொல்றேண்டி பரிதிக்கு தங்கச்சி வேணுமா அதுக்கு தயாராக என்று சொல்லி சிரித்தவன் சரி செல்லம் என்று மாடியில் இருக்கும் ருத்ரனின் அறைக்குச் சென்றான்.

என்ன மச்சி மிஷன் ஸ்டார்ட் பண்ணலாமா என்கவும், அதுக்கு முன்னாடி அந்த பொண்ணு ஒரு நம்பர்ல இருந்து கால் பண்ணுச்சே அதை விசாரிக்க சொன்னேன் என்ன ஆச்சு?.

விசாரிச்சிட்டேன் டா. கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் டீட்டைல்ஸ் கிடைச்சது.அந்த நம்பர் பெங்களூர் பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் இருக்கும் பிசிஓ என்க....

வாட்....

என்னடா சொல்ற?

ஆமாடா..

"அங்குள்ள நம்பர் தான் "

"ஆனால் விக்டர் சென்னைக்கு வந்த இண்டிகோ பிளைட்டில் அனுப்பி வைத்ததா சொன்னாரே டா"

"எஸ்"

ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணுடா என்ற மாறன் தனது போனை எடுத்து அதிலிருந்த பங்கு என்ற நம்பருக்கு கால் அந்தப்பக்கம் அட்டென்ட் பண்ணியவனோ சொல்லு பங்கு என்க, ரஞ்சன் என்று மாறன் சொல்வதிலே அவன் வேலை விஷயமாக பேசுகிறான் என்பதை புரிந்து கொண்டான்.

நான் ஏர்போர்ட்டில் தான் இருக்கேன் என்கவும் ஹம் வெரோனிகா விக்டர், அக்டோபர் 24,2024 ல இந்தியாவுக்கு எந்த பிளைட்ல,எந்த ஸ்டேட்டிற்கு அங்கிருந்து வந்துருக்காங்க செக் பண்ணி சொல்லு.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
709
சரி 5 மினிட்ஸ் வெய்ட் பண்ணு டீடைல்ஸ் செக் பண்ணிட்டு சொல்லுகிறேன் என்று அழைப்பை துண்டித்தான்.

அதேபோல 5 நிமிடம் கடந்து ரஞ்சனிடமிருந்து கால் வந்தது. அட்டென்ட் பண்ணியவன் சொல்லு என்க,ஏர் இந்தியா பிளைட்ல பெங்களூருக்கு வந்துருக்காங்கடா என்றான்.

"சரிடா என்றான் "

மச்சி அந்த பொண்ணு பெங்களூருக்கு தான் வந்திருக்கு.சரி முதல்ல இதை படிச்சு பார்த்தா விஷயம் புரிஞ்சிடும் டா என்று சோபாவில் உட்கார்ந்து கொண்டு கவரில் இருந்த கருப்பு கலர் டைரியை எடுத்து முதல் பக்கத்தை ஓபன் பண்ண அதில் ஆணும் பெண்ணும் இணைந்திருக்கும் போட்டோ ஒன்று ஒட்டியிருந்தது.

கிட்டத்தட்ட அந்த போட்டோ எடுத்து எப்படியும் சில வருடங்களுக்கு மேல் இருக்கும்.அந்த புகைப்படம் பிளாக் அண்ட் ஒயிட்டில் இருந்தது. போட்டோவை பார்த்துவிட்டு அடுத்த பக்கத்தை திருப்பினர்...

அதில் ஜூலை மாதம் 5 ஆம் தேதி-1987 என்று எழுதியிருந்தது.

அதற்கு கீழே உள்ளதை படிக்கலானானுங்கள்.....

நான் தான் சந்திரிகா.கொஞ்ச நாளாவே எனக்கு இது போல நோட்ல எழுதணும்னு ஆசை.ஒரு நாள் பெரிய வீட்டுக்கு போயிருக்கும் போது அவங்க டிவியில் ஒரு படம் ஓடிக்கிட்டு இருந்ததா.

அதுல ஒரு அம்மா இப்படித்தான் அவங்க சின்ன வயசுல இருந்து நடந்ததெல்லாம் எழுதி வச்சிருந்தாங்க அதை பார்த்தவுடன் எனக்கும் ஆசையா இருந்துச்சா என் முகத்தை பார்த்த பெரியம்மா இந்த டைரியை கொடுத்தாங்க.அதனால் நானும் என் வாழ்க்கை பற்றி எழுத போறேனே ஜாலி ஜாலி.

நாளைக்கு என்னுடைய 14 வது பிறந்தநாள்.நான் சின்ன குழந்தையாக இருந்தபோது என்னோட அப்பாவும் அம்மாவும் ஏதோ விபத்தில் அடிபட்டு சாமி கிட்ட போயிட்டாங்களாம்.

அதன் பிறகு எனக்கு அம்மா அப்பா எல்லாம் என் தாத்தா சிவமும்,அம்மாச்சி பாப்பாத்தியும் தான்.இப்போது நான் கோவாமா இருக்கேன்.

ஏன் தெரியுமா ரெண்டு தீபாவளியா எனக்கு புது துணி வாங்கி தரலை.இந்த பிறந்தநாளுக்கு துணி வேண்டும்னு ரெண்டு நாளா அழுறேன் என்று எழுதிக் கொண்டிருக்கும் போது ஏ புள்ள அம்மு ஓடியா ஓடியா என்கும் தாத்தாவின் குரல் கேட்டு டைரியை மூடி அடுக்கு பானைக்கு பின்னால் ஒளிய வைத்து விட்டு வெளியே வந்தாள்.

பேத்தியின் முகத்தை பார்த்தவர் இந்தா என்று பையை நீட்ட,கண்களில் ஆர்வம் மின்ன அதை வாங்கிய சந்திரிகா என்ன தாத்தா இதுவென்று திறந்து பார்க்க உள்ளே பச்சை கலரில் ரோஸ் கலர் பார்டர் வைத்த பாவாடையும்,ரோஸ் கலரில் பப்பு கை வைத்த சட்டையும் இருக்க,தாத்தா என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்தவள் அய்யோவென வயிற்றை பிடித்துக்கொண்டு சுருண்டு உட்கார்ந்தாள்.

சுருண்டு உக்காந்த பேத்தியை பார்த்த முதியவர் அனுபவஸ்தர் என்பதால் நிலைமையை புரிந்து கொண்டு வேகமாய் எந்திரிச்சு வெளியே போனவர் பக்கத்து வீட்டின் வாசலில் நின்று ராதா ராதா என்று கூப்பிட பெரியவரின் குரலை கேட்டு தோட்டத்தில் இருந்தவர் இதோ வரேன் சித்தப்பா என்று வாசலுக்கு வந்தார்.

அங்கிருந்த சிவத்தைப் பார்த்து சொல்லு சித்தப்பா என்க,அம்மாடி உன் மருமக வயித்த புடிச்சிட்டு உக்காந்துடுச்சு.கொஞ்சம் வந்து என்னான்னு பாரு. உன் சின்னாத்தாள் பெரிய ஊடு வரைக்கும் போயிருக்கிறாள் என்கவும் அப்படியா என்று வேகமாக பக்கத்து வீட்டுக்கு போனவர் அங்கே உட்கார்ந்து இருந்த சந்திரிகாவிடம் என்னடி பண்ணது என்க,அத்தை அடி வயிறு வலிக்கிறதென்றாள்.

அப்படியா என்று தோட்டத்து பக்கம் கூட்டிட்டு போய் அவள் ஆடையை சோதிக்க பெரிய மனுஷியானது தெரிந்தது.

பின்னர் தோட்டத்து கதவின் ஒரு பக்கமாக அவளை உட்கார வைத்து பாதுகாப்பாக உலக்கையும் அருவாளையும் வைத்தவர் அம்மு பயப்படாம இங்கயே இரு டி.

அத்தை இதோ வந்துடுறேன் என்று சொல்லிக் கொண்டு தனது வீட்டிற்கு வந்தவர் அங்கிருந்த சிவத்திடம் சித்தப்பா நம்ப அம்மு பெரிய மனுஷயிகிவிட்டாள்.சீக்கிரம் போய் சின்னமாக கூட்டிட்டு வா நான் கூட இருக்கிறேன் என்கவும் சரித்தா என்று சொல்லிக்கொண்டு பெரிய வீட்டை நோக்கி போனவருக்கு தனது மகன் மருமகள் நினைவு வர கண்கள் கலங்கியது.

வேகமாக எட்டி நடை போட்டு சென்றவர் பெரிய வீட்டின் வாசலில் நின்று கொண்டு பாப்பாத்தி பாப்பாத்தி என்று கூப்பிட,வலது பக்கம் சந்தில் உளுந்தை புடைத்துக் கொண்டிருந்த பாப்பாத்தி கணவரின் குரல் கேட்டு இங்க தான் இருக்கேன் வாயா என்று குரல் கொடுக்க மனைவியின் குரல் வந்த திசையை நோக்கி சென்றவர் அங்கே இன்னும் சில பெண்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அம்மு பெரிய மனுசியாயிடுச்சு சீக்கிரம் வா மா என்றார்.

பேச்சியத்தா என்றவாறு கையில் இருந்த முறத்தை கீழே வைத்து விட்டு எழுந்தவர் இருயா பெரியம்மா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துடறேன் என்று சொல்லும்போது வீட்டிற்குள் இருந்து இவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த சரளா அங்கு வந்தவர் நீ போய் அம்முவை பாரு என்று பணத்தை நீட்ட அதை வாங்கியவர் ரொம்ப நன்றிமா என்று சொல்லிக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.

மூன்றாம் நாள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை வைத்துக்கொண்டு சந்திரிகாவிற்கு வழக்கமான சடங்குகளை செய்து வீட்டிற்குள் அழைத்து வந்தனர்.

நாட்களும் அதன் போக்கில் ஓட பத்தாவது பரிட்சையும் எழுதி முடித்தவள் தாத்தா பாட்டியுடன் எஸ்டேட்டிற்கு வேலைக்கு செல்ல தொடங்கினாள். பேத்தியை வீட்டில் தனியாக விட்டுட்டு போகவும் மனம் வரவில்லை யாரை நம்பி விடுவது என்று எண்ணத்தில் கையோடு அழைத்துக் கொண்டு சென்றனர்.

நாட்களும் ஓட மேற்கொண்டு மேற்படிப்பு படிக்க வேண்டும் என்றாள் பஸ் ஏறி பக்கத்து ஊரான மன்னார்குடிக்கு தான் செல்ல வேண்டும் என்பதால் சந்திரிகாவே வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

இரண்டு வருடங்கள் கடந்திருக்க ஒரு நாள் எஸ்டேட்டில் வேலை செய்து கொண்டு வீட்டிற்கு வரும்போது ஒரு நிமிஷம் என்று குரல் கேட்டு திரும்பிப் பார்த்தவள் அங்கிருந்தவன் யாரென்று கண்டு கொண்டாள்.

ஐயையோ சின்னய்யா எதுக்கு நம்மள கூப்பிடுகிறார்கள் என்று உள்ளுக்குள் யோசனையாக இருக்க,சந்திரிகா ரொம்ப நாளா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சுட்டு இருந்தேன் இன்னைக்கு தான் நீ தனியா வந்த..அது வந்து என்று தொண்டையை கணைத்துக் கொண்டு சதாசிவம் தயங்க,ஐயோ என்னவா இருக்குன்னு தெரியலையே நாம வேலையில தப்பு பண்ணிட்டோமோ என்று கீழே குனிந்து கொண்டே திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தாள்.

கோத்தகிரி:

கவிக்கு விபத்து நடந்ததை கேள்விப்பட்ட உடனே சாலா பாட்டியும் நிலமாறனும் ஹாஸ்பிடலுக்கு வந்து விட்டனர்.

கவியின் நிலைமையை கேள்விப்பட்டவர்களுக்கு வருத்தமாக இருந்தது.நிலவனுக்கோ சக தோழிக்கு அடிபட்டால் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு தான் அவனுக்கு கவியை நினைத்து கவலையாக இருந்ததே தவிர கல்யாணம் பண்ணிக்கொள்ள போகிற பொண்ணு என்ற எண்ணத்தில் அவனுக்கு வேற எந்த உணர்வும் வரவில்லை.

அப்பொழுது வெரோனிகா என்ற பெயரை கேட்டவன் வந்துட்டியாடி என்று திரும்பிய நிலமாறன் அங்கிருந்து வேகமாக செல்ல பாட்டி சரோஜாவிடம் பேசிக் கொண்டிருப்பதால் பேரனை கவனிக்கவில்லை.

வெரோனி என்று கூப்பிட்டுக் கொண்டு அந்த ஃப்ளோரில் பைத்தியக்காரன் போல் தேடி அலைந்தான்.மீண்டும் வெரோனிகா என்ற குரல் கேட்டு திரும்பி பார்க்க அங்கு மூன்று வயது பெண் குழந்தையோ அம்மா என்னை பிடி என்று ஓடிவந்தது.

இந்த குழந்தையின் பெயர் தானா,அப்போ என்னோட வெரோனிகா இல்லையா என்று தனது நெஞ்சில் கையை வைத்தவன் எங்கடி போன? பைத்தியக்காரன் போல உனக்காக தேடி அலைஞ்சிட்டு இருக்கேன் டி வந்துடு டி கண்ணம்மா.

இனி குடிக்க மாட்டேன் டி.நீ சொன்னதெல்லாம் கேக்குறேன்டி என்று மண்டியிட்டு முகத்தை மூடிக்கொண்டு கதறினான்.

அவனின் கதறலை பாதாள சிறையில் அடைக்கப்பட்டிருந்தவள் உணர்ந்தாள் போல நிலன் நான் இங்கதான் இருக்கேன் நிலன் எனக்கு ரொம்ப பயமா இருக்கு.ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க என்று கதறிக் கொண்டிருந்தாள்.

வேலனுக்கும் சதாசிவத்திற்கும் கவிக்கு இப்படி விபத்து ஏற்பட்டு விட்டது என்பதை சொல்ல,தாத்தாவோ இடி விழுந்த போலானார்.மனதில் போட்டு வைத்த அத்தனை திட்டமும் தவிடு பொடியானதை கேட்டு என்ன பண்ணுவது என்று புரியவில்லை.

கணவரின் முகத்தை பார்த்த சரளா செஞ்ச பாவம் நமது பிள்ளைகளை தாங்கிட்டு.கொஞ்ச நஞ்ச பாவமா பண்ணிருக்க..

படுபாவி என் கண்ணு முன்னாடியே என் அப்பாவை கொன்னு என்னை கல்யாணம் பண்ணி இந்த சொத்தை அபகரிச்சிட்டியே அப்பையும் உனக்கு இந்த பணத்தாசை விடலையா? நீ பண்ணிய பாவம்தான் நான் பெத்த ஒத்த புள்ளைக்கு இன்னைக்கு கை கால் போச்சு,அதைவிட இன்னும் என்ன பாவம் பண்ணி தொலைஞ்சனு தெரியலையே இன்னைக்கு என் பேத்திக்கு இந்த நிலைமை வந்துட்டு என்க...

என்னடி வாய் ரொம்ப நீளுது, கொன்னு புதைச்சிடுவேன் என்க,நீ எல்லாம் மனுஷனா?பணம் பணம்னு அலையுறியே உனக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்லையா?.இன்னும் யாருக்காக தான் நீ சம்பாதிக்கிற என்க,எனக்காக தாண்டி சம்பாதிக்கிறேன்.ஒரு வேளை சோத்துக்கு இந்த கோத்தகிரியில் நாயை விட கேவலமா அலைஞ்சேன் டி.

கோடீஸ்வர வீட்டுல பொறந்து தங்கத்தட்டுல சாப்பிட்ட உனக்கு என்னடி தெரியும் பணத்தோட அருமை? என்னை போல பிளாட்பார்ம்ல படுத்துகிட்டு ஒரு வாய் கஞ்சாவது கிடைக்காதான்னு காத்துட்டு இருந்திருந்தால் அந்த அருமை தெரிந்திருக்கும் டி.மரியாதையா உங்க அப்பா கிட்ட பொண்ணு கேட்டேன் குடுக்கல அதனால தான் கொன்னேன் அதுக்கு என்ன பண்ண சொல்ற?

உன் அம்மாவையும் கொலை பண்ணிடுவேன் சொல்லி தான் உன்னை கல்யாணம் பண்ணினேன்.உனக்கு ஒன்னும் கசந்து போன போல தெரியலையே சந்தோஷமா தானே வாழ்ந்த.

வேற விதி என்று அழுதவர் ஒன்னே ஒன்னு சொல்றேன் செஞ்ச பாவத்துக்கு கடவுள் உனக்கு தண்டனை கொடுக்க ஆரம்பிச்சிட்டார்.ஆனா ஒரு பாவமும் அறியாத என் பேத்திக்கு இப்படி ஒரு நிலையா?.

மனைவி சொன்னதை கேட்டு ஹா ஹா என்று சிரித்தவர் ஆமா ஆமா உன் பேத்தி பாவமே பண்ண மாட்டாள் நீ போ என்க,எனக்கு மட்டும் உங்ககிட்ட பேசணும்னு ஆசையா?. உங்களை பார்க்கவே எனக்கு சுத்தமா விருப்பமில்லை.எங்கே சரோஜாவுக்கு உங்களோட கடந்த காலம் தெரிஞ்சுடுமோ என்கிற பயத்துல தான் இத்தனை வருஷம் நானும் அமைதியாக இருந்தேன் என்க, தெரியும்டி தெரியும்.

வயசானதால என்னால ஒன்னும் பண்ண முடியாது நினைக்காத அருவாளை எடுத்தேன்னு வச்சுக்க 50 பேரை வெட்டுவேண்டி என்று தையல் போட்ட கையை தூக்கி சொல்ல அவரின் செயலில் சுள்ளென்று வலிக்கவும் ஆஆஆ என்று பெட்டின் மைல் கையை வைத்தார்.

பாபநாசம்:

உன் பையனால் பொண்ணு வீடு பாக்குறதுக்கு எல்லாம் வர முடியாதாம். நிச்சயதார்த்தத்துக்கு வரேன்னு சொல்லிட்டான் இப்ப என்ன பண்றது என்று மனைவியிடம் கேட்க...

கணவர் சொன்னதைக் கேட்ட வேதவள்ளி இது தெரிஞ்ச விஷயம் தானே நிச்சயதார்த்தம் அப்போவாது வருவானா வரமாட்டானா என்றார்.

அதெல்லாம் வந்துருவான்.வராம எங்க போய்ட போறான்.வரும் ஞாயிற்றுக்கிழமை நல்ல நாளாக இருக்கு அன்னைக்கு நம்ம சொந்த பந்தங்களுடன் போயிட்டு பொண்ணு வீடு பார்த்துட்டு வந்துடலாமா என்கவும் சரிங்க என்றவர்.

பின்னர் நெருங்கிய சொந்தங்களின் வீட்டிற்கு நேரில் சென்று பொண்ணு வீட்டிற்கு போவதற்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்திட்டு வந்தார்கள்.

தனது பெரிய மச்சானுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்ல கல்யாணத்துக்கு வந்து விடுகிறேன் என்று வேத நந்தன் சொல்லி விட, சரிங்க மச்சான் இரண்டு நாளைக்கு முன்னாடியே உங்க மருமகனை அனுப்பி வையுங்கள் என்று மதி சொல்ல...

என்னாயா கிண்டலா?.

என்னமோ உன் மவுனை தூக்கி நான் இடுப்புல வச்சுக்கிட்டு திரியிற போல பேசுற,அவன் அங்க தானே இருக்கான் என்று வேதநந்தன் சொல்லவும்,என்னா இங்க இருக்கிறானா?. என்ன மச்சான் சொல்ற என்று மதி அதிர ஆமா யா.மாறனும் நிலவனும் தமிழ்நாட்டுக்கு வந்து நாலு நாள் ஆகுதே என்றார்.

அதைக் கேட்டவர் என்ன என்று மீண்டும் அதிர்ந்து போக ஆமா ஆமா கொஞ்ச நாள் தமிழ்நாட்டில் தான் இருக்க போறானுங்கள்.கையோடு கல்யாணத்தை முடிச்சே அனுப்பி வைங்க என்கவும்,அயோக்கிய பய மவன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்று மதி திட்ட, அவங்க அப்பனை போல திருட்டு புத்தி என்று வேதநந்தன் சிரித்தார்.

எதேஏஏஏஏ!
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
709
யோவ் என்னய்யா நக்கலா என்கவும் பின்ன என்னய்யா நீ எல்லாம் என்ன அப்பா?மவன் எங்க இருக்கான்னு கூட தெரியல உனக்கு வாத்தியார் வேலை ஒன்னு தான் கேடு என்று வேதநந்தன் கேட்க என்ன பண்றது என் தலையெழுத்து உன் குடும்பத்தில் சிக்கி சீரியழியணுமென்று இருக்கே என்றார்.

ஹாஹா என்று சிரித்தவர் என் தங்கச்சி தான் வேணும்னு ஒத்த கால நின்னல்ல அப்போ அனுபவிச்சு தான் ஆகணும் என்றார்.

ஆமா நான் ஒத்த கால்ல இமயமலையில் இருந்து தவம் பண்ணிட்டு இருந்தேன் இந்த ஆளு வந்து பார்த்தாரு என்று மதி பல்லை கடிக்க அப்படியா அப்போ என் தங்கச்சியை நீ ஒன்னும் ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணலை அப்படி தானே?.

ஆமா...அதுல என்ன சந்தேகம்.போனா போகட்டும் நம்ப மாமன் மவளாச்சே என்று தான் வாழ்க்கை கொடுத்தேன் அதில் என்ன சந்தேகம் என்றார்.

அம்மாடி வள்ளி உன் புருஷன் சொல்றதை நல்லா கேட்டுக்கோ என்க,நான் கேட்டுக்கிட்டு தான் ணா இருக்கிறேன் என்று மனைவியின் குரல் கேட்ட பிறகே மதி அதிர்ந்து போய் திரும்பி பார்க்க அங்கே வேதாவோ கணவரை முறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்...

என் உசுர வாங்குவதற்குனே வந்து எனக்கு மச்சானா பிறந்து தொலைந்து இருக்க வையா என்று போனை வைத்துவிட்டு மனைவின் பக்கம் திரும்பியவர் சும்மா உன் அண்ணன் கிட்ட விளையாண்டேன் மா. நீ தான் என் உசுரு உனக்கு தெரியாதா என்க வேதவள்ளியோ எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும் கேட்டியாக சங்கதியை உன் மகன் தமிழ்நாட்டுல தான் இருக்கிறான் என்றார்

என்னங்க சொல்றீங்க என்று கோவத்தை விட்டு வேதவள்ளி கேட்க ஆமாண்டி உன் அண்ணன் தான் சொல்றாரு.வந்து நாலு நாள் ஆகுதாமே ஒரு வார்த்தை கூட உன் மகன் சொல்லவில்லையே பாரு என்கவும் அப்போ வேலை விஷயமாக வந்திருக்கிறான் அதனால் தான் சொல்லலை போல என்க..

இப்ப பாருடி என்று மகனுக்கு கால் பண்ணினார்.. அதுவோ சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.


தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top