• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
703
சாலா எஸ்டேட் கோத்தகிரி:

காரையை ஒட்டிக் கொண்டிருந்த நிலமாறனுக்கு தன்னவளோடு அங்கு சுற்றி திறிந்த நினைவுகள் எல்லாம் வந்தது.எங்கடி இருக்கிற?ப்ளீஸ் என்னிடம் வந்துடு டி.நடைபிணமாக சுத்திட்டு இருக்கேன் டி என்று மனதிற்குள் பேசும்போது அவன் கண்கள் கலங்கியது...

அவன் அழுவதை காருக்குள் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த கருப்பு உருவமோ அவன் கண்ணீரை துடைக்க முயல, அதால் முடியவில்லை. ஐயோ ஆண்டவரே எனக்கு எதுக்கு இப்படி ஒரு நிலைமை கொடுத்தீங்க?

என்னுடைய சோட்டு அழுவுறானே அவன் கண்ணீரை என்னால துடைக்க முடியலையே என்று அந்த கருப்பு உருவம் கதறுவது காருக்குள் இருந்த பாட்டிக்கும் பேரனுக்கும் கேட்கவில்லை.

அப்போது அவனின் பின்னால் வரும் காருடைய ஹாரன் சத்தம் கேட்க கண்ணாடி வழியாக யார் என்று பார்த்தவனுக்கு அது கவியின் கார் என்பது தெரிந்து.

பாட்டி கவிதான் பின்னாடி வராள் என்கவும் அப்படியா?ஊரிலிருந்து அவள் எப்பொழுது வந்தாளென்று தெரியலையே?.ரொம்ப நல்ல பொண்ணு பா நம்ம குடும்பத்துக்கு ஏத்த மருமகள்.பணக்கார திமிர்லாம் கொஞ்சம் கூட இல்லையே என்று சொல்லிக் கொண்டிருக்க இதெல்லாம் கேட்ட கருப்பு உருவத்துக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது.

இன்னும் அவள் நடிப்பை நீங்க பார்க்கவில்லையே...அப்போது பாலுக்கும் கள்ளிக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்.என் சோட்டுவோட வாழ்க்கையில் இவளுக்கு இடமில்லையென்றதோ,ஏய்
நிலமாறா ஒரு முறை என்னை பாரென்றது.



கோத்தகிரி:

கவிக்கு அவர்களது எஸ்டேட்டை சுற்றி வரவே இரண்டு மணி நேரமானது. பின்னர் அங்கு நடக்கும் வேலைகளை பற்றி மேனேஜரிடம் கேட்டு தெரிந்து கொண்டவள்,காரை எடுத்துக் கொண்டு பக்கத்து எஸ்டேட்டான சாலா எஸ்டேட்டை நோக்கி சென்றாள்.

இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் இந்த சாலா ஸ்டேட் முதலாளி இந்த கவி தான் என்று கனவு உலகத்தில் மிதந்து கொண்டே அங்கு வந்தவள் காரை நிறுத்திவிட்டு ஆபீஸ் ரூம் உள்ளே வர அங்கே சாலா பாட்டியும் நிலமாறனும் வேலையாட்களுக்கான சம்பளத்தை மேனேஜரிடம் கணக்கு பண்ணி கொடுத்துக் கொண்டிருக்க நமஸ்காரம் பாட்டி என்றவாறு காலில் விழ நல்லா இருமா என்று ஆசிர்வாதம் பண்ணினார்.

இப்போ அப்பாவுக்கு எப்படி இருக்குமா என்க தந்தையை பற்றி கேட்ட உடனே உண்மையில் வருத்தப்பட்டவள் இதுவரைக்கும் எந்த முன்னேற்றமும் இல்லைங்க பாட்டி என்று கண்கலங்கினாள்.

வருத்தப்படாதே மா.சிவத்தோட நல்ல மனசுக்கு கடவுள் எதுக்கு இப்படி சோதிக்கிறார் என்று தெரியவில்லை. எல்லாம் ஒரு கெட்ட நேரம் தான்.

கூடிய சீக்கிரம் நல்லபடியா ஆகிடும் என்க,சரிங்க பாட்டி என்றவளின் பார்வையோ நிலமாறன் மேல்தான் இருந்தது.அவனோ அவளைப் பார்த்து சினேகமாக சிரித்து விட்டு வேலையில் மூழ்கினான்.

அவனின் பார்வை வைத்து இவளோ அது காதல் பார்வை என்று கனவு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவள் அங்கிருந்தே அந்த ஆபீஸ் ரூமையும் எஸ்டேட்டையும் சுற்றி பார்த்து பெருமூச்சு விட்டவள் சீக்கிரம் இதெல்லாம் என் கைக்குள்ளே வந்துடும்.

அதன் பிறகு நான்தான் இந்த சொத்துக்கு எஜமானி.என் இஷ்டம் போல வாழ்வேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் பாட்டி உங்களுக்கு நான் டீ போட்டு தரட்டுமா என்று பவ்யமாக கேட்க இருக்கட்டும் மா.
வா உட்காரு என தனக்கு பக்கத்தில் இருக்கும் இடத்தைக் காட்டி சொன்னார்.

அவளும் அமைதியான பெண்ணை போல் வந்து உட்கார்ந்து கொண்டாள். சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தவர்களுக்கு அதன் பிறகு நடிக்க முடியவில்லை.சரிங்க பாட்டி நீங்க வேலையா இருக்கீங்க நான் போயிட்டு வரேன் என்று சொல்லிக் கொண்டு வெளியில் வந்தாள்.

தனது கார் சாவியை விரலில் சுற்றிக் கொண்டே போக இனி இந்த கை கார் ஓட்டுமா என்று அவள் பின்னாடியே வந்து கருப்பு உருவமோ சூறாவளியை போல் காற்றை சுழல விட்டது.

என்ன இப்படி இருக்கு என்று தனது கண்களில் தூசி படாதவாறு மறைத்துக்கொண்டே காரில் போய் உட்கார இப்பொழுது காற்றும் நின்றது.

பின்னர் காரை ஸ்டார்ட் பண்ணி ஒட்டிக்கொண்டு அந்த மலைப்பாதையில் போனவள் திடீரென்று காரின் முன்னால் ஏதோ ஒரு உருவம் நிற்பது தெரிந்து அதிர்ந்து போய் பிரேக்கில் கால் வைப்பதாக நினைத்து ஆக்சிலேட்டரை முறுக்க வேகமாய் ஓட,அங்கிருந்த வளைவை பார்த்து காரை நிறுத்த முயல பதட்டத்தில் அவளால் எதுவும் செய்ய முடியாமல் போகவும் எதிரே இருந்த பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்துக்குள் ஆனது.

இதை பார்த்த கருப்பு உருவம் வெற்றி சிரிப்போடு காற்றில் மாயமானது.

தூரத்தில் வந்த காரில் இருந்தவர்கள் இதை பார்த்துவிட்டு போலீசிடம் சொல்ல அவர்கள் வந்து காப்பாற்றும் போது பலத்த அடிபட்டு கவி மயங்கி போய் கிடந்தாள்.அவளை ஹாஸ்பிடலில் சேர்த்தனர்.

பதறி அடித்து ஹாஸ்பிட்டலுக்கு ஓடிவந்த சரோஜாவோ மகளை பார்த்து கண்ணீர் வடித்தார்.

நான்கு மணி நேரம் சென்ற பிறகு ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்த டாக்டர் அங்கே அழுது கொண்டிருந்த சரோஜாவை பார்த்தவர் ஆப்ரேஷன் நல்லபடியாக முடிஞ்சிடுச்சு மா ஆனால் என்கவும் சொல்லுங்க டாக்டர் என்ன ஆச்சு என் பொண்ணுக்கு என்று கதறினார்...

பள்ளத்துல உருண்டு விழும் போது கார் கண்ணாடி அவங்க வயிற்றில் ஆழமாக குத்தியிருக்கு.அதனால் கர்ப்பப்பையை எடுக்க வேண்டியதாகிட்டு.

அதுமட்டுமில்லாமல் வலது பக்க கையில் 3 விரல் துண்டாக்கிட்டு.
கண்ணாடி கிளாஸ் துண்டுகள் அவங்க முகத்தில் அங்கங்கே குத்தி சிதைத்ததால் இனிமேல் அவங்களோட பேஸ் கொஞ்சம் விகாரமாக தான் இருக்கும்.

அப்புறம் மா கழுத்து எலும்பு உடைஞ்சிருக்கு மயக்கம் தெளிந்த பிறகு தான் அவங்களால் பேச முடியுமா இல்லையானு தெரியும்.

நல்லவேளை கண்ணுக்கு எதுவும் ஆகலை.காயம் எல்லாம் குணமான பிறகு நீங்க வேணா பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக் கொள்ளுங்கள் மத்தபடி அவங்க எழுந்து நடக்க கண்டிப்பாக மூணு மாசத்துக்கு மேலாகும் என்றார்.

கடவுளே நான் யாருக்கு என்னப்பா தீங்கு செஞ்சேன்?ஏன் தான் என் வாழ்க்கையை இப்படி சித்திரவதை பண்ணி கொல்ற ஒரேடியா என் உசுர எடுத்துக்க வேண்டியது தானே...

புருஷனும் அங்க முடமா கிடைக்க, பொண்ணு இங்க படுத்த படுக்கையாக இருக்கிறாளே.இதெல்லாம் பார்த்துட்டு நான் ஏன் இன்னும் உயிரோட இருக்கிறேன் என்று தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதார்.

சரளா பாட்டியோ மருமகளை தேற்ற முடியாமல் கண்ணீரோடு நிற்க,செய்த பாவத்தின் பலனை அனுபவித்து தானே ஆகணும் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார்

பாபநாசம்:

காரிலிருந்து இறங்கிய மதிவாணனும் வேதவள்ளியும் சிரித்த முகத்தோடு வீட்டிற்குள் போனவர்கள்,ஹாலில் உட்கார்ந்திருந்த தனது அம்மாவை பார்த்த மதி வேகமாக போய் தனது அன்னையின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டவர் அவரது கையை எடுத்து தனது கைக்குள் வைத்துக் கொண்டு நீ ஆசைப்பட்டு போலவே உன் பெரிய பேரோட கல்யாணம் நடக்க போகுதுமா.
நல்லபடியா பேச்சு முடிஞ்சிருச்சு வர 11-ம் தேதி நிச்சயதாரத்துக்கு நாள் குறிச்சிட்டு வந்திருக்கிறேன் என்க அதைக் கேட்டவரோ நிஜமாவா என்றார்.

ஆமா மா உன் பேரனும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டான் என்கவும் கடவுளே உன் சித்தம் என்றவர் கையோடு மாறனோட கல்யாணத்தை முடிச்சிடுப்பா என்கவும்,கண்டிப்பா மா என்றார்.

நேரத்திற்கு சாப்டீங்களா அத்தை என்று வேதவள்ளி கேட்க நான் சாப்பிட்டேன் நீங்க சாப்டீங்களா என்க,வரும் வழியில ஹோட்டல்ல சாப்பிட்டோமா.

அப்புறம் கோத்தகிரியில் சம்பந்தி வீட்டிலிருந்து போன் பண்ணாங்க மா ஏற்கனவே நிலமாறனுக்கும் அவங்க பொண்ணுக்கும் சம்பந்த பேசியிருந்தோம் இல்லையா... அந்த பேச்சு அப்படியே நிற்குது என்று கேட்டார்.

நான் தான் மாறன் கல்யாணம் முடிஞ்ச பிறகு,இவங்க கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு சொல்லியிருக்கேன் என்க,நல்லது பா. காலா காலத்தோடு அவங்கவங்களுக்கு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டியது நம்மளோட கடமை என்றார்.

நிச்சயதார்த்த நேரத்தில் அந்த கேஸ் இந்த கேஸ்னு கிளம்பிட போறான்.அது இல்லாம ஒரு நாள் பொண்ணு வீடு பாக்குறதுக்காக எல்லாரும் போயிட்டு வரலாம் என்று சொல்லிக்கொண்டு தனது ஃபோனில் இருந்து மகனுக்கு கால் பண்ண அந்த பக்கமோ மாறன் கட் பண்ணி விட்டு மொபைலை சைலண்டில் வைத்து விட்டான்.

விக்டர் பிளாஸ் பேக்...

குழந்தையின் பெயரை கேட்டு எங்கள் இருவருக்கும் இன்னும் பிடித்து விட்டது பாதர் இந்த குழந்தையை நாங்க தத்து எடுத்துக் கொள்கிறோம் என்க...

பாதர் அகஸ்டினோ அவர்களைப் பார்த்து சிரித்தவர் இந்த குழந்தையை யாரு கொண்டு வந்து கொடுத்தாங்கனு தெரியுமா என்கவும் யாருங்க ஃபாதர் என்று விக்டரும் யோசனையாக கேட்க சந்தர் தான் கொண்டு வந்து கொடுத்தான் என்றார்.

என்ன பாதர் சொல்றீங்க?

சந்தர் எங்க இருக்கான்?

எப்படி இருக்கான்?

அவனுக்கும் இந்த குழந்தைக்கும் என்ன சம்பந்தம் பாதரென்று விக்டர் பதற... இதோ வரேனென்று அவர் ரூமிற்குள் சென்றவர் கையில் ஒரு டைரியோடு வந்து விக்டரின் முன்னால் நீட்டியவர் குழந்தைக்கு சந்தருக்கும் என்ன சம்பந்தம் என்பது இந்த டைரியில் எழுதி இருக்கு இதை படித்து பார்த்துட்டு யோசித்து முடிவு பண்ணுங்க என்றார்.

டைரியை வாங்கி பியூலாவிடம் கொடுத்தவன் இந்த டைரியில் என்ன இருக்குன்னு இப்போதைக்கு எனக்கு தெரிய வேணாம்.

பியூலாவுக்கு இந்த குழந்தை ரொம்ப பிடிச்சிருக்கு இந்த நிமிஷத்திலிருந்து வெரோனிகா இந்த விக்டர் பியூலாவோட குழந்தை.சட்டப்படி இவளை நாங்க தத்து எடுத்துக்கிறோம் அதற்காக ஏற்பாடு பண்ணுங்கள் என்க காட் பிளஸ் யூ மை சைல்ட் என்று மூவரின் நெற்றியிலும் சிலுவை போட்டார்.

அதேபோல் இரண்டு நாளில் வெரோனிகாவை அவர்கள் மகளாக தத்து எடுத்தவர்கள் பாதர் அகஸ்டினிடம் சொல்லிக் கொண்டு சென்னைக்கு வந்தனர்.

அப்பொழுது ஜெர்மனியில் ஒரு புகழ் பெற்ற கல்லூரியில் ப்ரபோசர் வேலை வேகன்ஸி இருப்பதை இன்டர்நெட்டில் பார்த்த விக்டர் அதுக்கு அப்ளை பண்ண அவருக்கும் அங்கே ஜாப் கிடைத்துவிட்டது.

குழந்தையையும் மனைவியையும் இங்கு பத்திரமாக இருக்கு சொல்லி விட்டு ஜெர்மனிக்கு வந்தவர் யுனிவர்சிட்டியில் ஜாயின் பண்ணினார். பின்னர் வெரோனிகாவிற்கு பாஸ்போர்ட் அப்ளை பண்ணினார்கள்.

ஒரு நாள் பியூலா தனது மகளோடு பக்கத்தில் இருக்கும் பார்க்கிற்கு சென்றிருக்கும் போது பெண்மணி ஒருவர் மயங்கி விழுவதை பார்த்து இருவரும் ஓடிப்போனார்கள்.

தன்னிடமிருந்த தண்ணியை எடுத்து வெரோனிகா கொடுக்க மகளை பார்த்து சிரித்த பியூலாவோ அதை வாங்கி அவர் முகத்தில் தெளித்தார்.மயக்கம் தெளிந்து எழுந்து பெண்மணியோ ரொம்ப நன்றி மா.ரெண்டு நாளா சாப்பிடல அதனாலதான் மயங்கிட்டேன் என்கவும் வாங்கா கா.எங்க வீடு இங்க பக்கத்துல தான் இருக்கு சாப்பிடலாம் என்றாள்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
703
குழந்தையோடு அந்த பெண்மணியையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்த பியூலாவோ தட்டில் சாப்பாட்டை போட்டுக் கொடுக்க பசியில் இருந்தவர் வேகமாக சாப்பிட்டார்.நீங்க யாரு வீட்டுக்கு போகணும் சொல்லுங்கள் நான் கூப்பிட்டு போறேன் என்று கேட்க,எனக்கு அப்படி சொந்தமென்று சொல்லிக்க யாரும் இல்லம்மா.

இருந்த எல்லா சொந்தமும் ஒரு விபத்துல இறந்துட்டாங்க நான் மட்டும்தான் தரித்திரம் பிடிச்சவள் தப்பிச்சிட்டேன் என்று சொல்லி கண்கலங்க எங்களுக்கும் யாரும் இல்லை.எங்க கூடயே இருக்கீறீங்களா என்று கேட்க அவரும் அதற்கு சம்மதித்தார்.

என்னோட பெயர் கலா என்றவர் அவருடைய ஓட்டர் ஐடியையும் அவர் ஊர் அட்ரஸில் இருக்கும் ரேஷன் கார்டையும் தனது பையில் இருந்து எடுத்துக்காட்ட,அய்யோ அக்கா நான் உங்களை ஏதும் தப்பா நினைக்கவில்லையே என்று பியூலா பதற இருக்கட்டும் மா என்றார்.

பின்னர் இந்த விஷயத்தை விக்டரிடம் சொல்ல அவருக்கும் பாஸ்போர்ட் அப்ளை பண்ணினான்.

ஓரிரு மாதத்தில் பாஸ்போர்ட் வந்ததும் மகள் புதிதாக கிடைத்த சகோதரியோடு பியூலாவும் ஜெர்மனிக்கு வந்து சேர்ந்தார்.

வாழ்க்கையும் அவர்களுக்கு வசந்த காலமாக இருந்தது.ஒரு நொடி கூட தத்து குழந்தை என்று எண்ணம் அவர்களுக்கு வரவில்லை.

வருடங்களும் ஓட வெரோனிகாவோ தனது பள்ளி படிப்பு முடித்துவிட்டு கல்லூரி படிப்பை விக்டர் வேலை பார்க்கும் யூனிவர்சிட்டியில் படித்து முடித்தவள்,நண்பர்களோடு லண்டனுக்கு சுற்றுலா சென்றிருந்தாள்.

ஆறு மாதங்களுக்கு முன்பு:

கடந்த சில மாதங்களாகவே தனது கணவர் ஏதோ ஒரு யோசனையோடு இருப்பதை பியூலாவும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். என்னவா இருக்கும்?.வேலையில் ஏதாவது பிரச்சனையோ என்று அவரும் மனதில் வைத்துக் கொண்டு விக்டரிடம் கேட்கவில்லை.

மகளை அவளின் நண்பர்களோடு பிளைட் ஏற்றிவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். என்னாச்சு விக்டர் நானும் கொஞ்ச நாளா பாத்துட்டு இருக்கேன் ஏதோ ஒரு யோசனைல இருக்கீங்களே என்று தனது அருகில் படுத்திருந்த கணவரிடம் பியூலா விசாரிக்க நானும் ஒரு விஷயத்தை பற்றி தான் யோசிக்கிறேன் மா என்றார்.

அதுதான் என்ன விஷயம் சொல்லுங்கள் என்க,ஏஞ்சல்கிட்ட நம்ம உண்மையை சொல்லலாம்னு எனக்கு கொஞ்ச நாளா தோணிகிட்டே இருக்கு பியூலா.நீ என்ன சொல்ற என்கவும் அதைக் கேட்ட பியூலா இதுக்கு நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன் அவ என்னோட பொண்ணு தான் என்று கத்தினாள்.

"ஐயோ பியூலா"...வெரோனிகா நம்மளோட பொண்ணு தான் அதுல எந்த மாற்றமும் கிடையாது புரியுதா?யாரோ ஒருவர் இந்த விஷயத்தை சொல்லி அவளுக்கு தெரியறதுக்கு முன்னாடி,நம்மளே சொல்றது நல்லது இல்லையா?.

அது எப்படிங்க இந்தியாவில் எங்கையோ ஓரிடத்தில் நடந்த விஷயம் அவங்களுக்கு தெரிய போகுதென்று பியூலாவும் கோவமாக கேட்டார்.

மனைவியை முறைத்து விட்டு என்ன குருட்டுத்தனமா பேசிட்டு இருக்க என்று கோவப்பட்டவர் நாம ஒன்னும் வாழ்க்கை முழுவதும் ஜெர்மனியிலே செட்டிலாக போறது கிடையாது,அது உனக்கு தெரியும் தானே என்று விக்டர் கேட்க ஆமா அதுக்கு என்ன என்றார்.

நான் எல்லாம் யோசிச்சிட்டேன்.வெரோனிகாவோட பிறப்பை நாம் தெரிஞ்சுக்கலை.ஆனால் அவ தெரிந்து கொள்வது நல்லது தானே மா என்கவும்,இதில் எனக்கு கொஞ்சம் கூட சரின்னு படல வேண்டாங்க.

இப்படி பண்ணாதீங்க என்று பியூலா கெஞ்ச,விக்டரோ தனது முடிவில் இருந்து மாறவில்லை.இதனாலே கடந்த ஒரு மாதமாக கணவன் மனைவி இருவருக்கும் இந்த விஷயத்தில் மனஸ்தாபமும் சண்டைகளும் வந்து கொண்டிருந்தது.

கலாவிற்கு முன்னால்,கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக இருப்பது போல் இருந்தாலும் தங்களது அறைக்குள் இருவரும் இந்த விஷயத்தை பற்றி பேசி சண்டை போடாமல் ஒரு இரவு கூட இருந்ததில்லை.

நாட்களும் ஓட வெரோனிகாவும் டூரை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தவளோ அங்கு பார்த்த விஷயத்தை எல்லாம் சொல்லி சந்தோஷப்பட பியூலாவோ தனது மகளை புதிதாக பார்ப்பது போல் பார்க்க தாயின் பார்வையை உணர்ந்தவள் என்ன மாம் இப்படி பாக்குற என்றாள்.

ஒன்னும் இல்லை என்று தலையை அசைத்த பியூலா சரி வாடா முதல்ல சாப்பிடலாம் என்கவும் நீண்ட நாட்களுக்கு பிறகு வீட்டு சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிட்டாள்.

விடியலும் வெரோனிகாவிற்கு பெரிய குண்டை வைத்துக் கொண்டு தொடங்கியது.

செமஸ்டர் ஹாலிடேஸ் என்பதால் விக்டரும் வீட்டில் தான் இருந்தார்.இன்று மகளிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்று உறுதியாக இருக்க,பியூலாவோ தனது கணவனிடம் பார்வையால் வேண்டாம் என்று கொஞ்ச,அவரோ நான் பார்த்துக்கிறேன் நீ அமைதியாக இருயென்றார்.

எப்படி இதை தடுத்து நிறுத்துவது என்று பியூலாக்கு ஒன்னும் புரியவில்லை தூங்கி எழுந்து பிரஷ் ஆகி கீழே வந்த மகளை பார்த்த விக்டர்,ஏஞ்சல் இன்னைக்கு நீ நான் அம்மா மூணு பேரும் வெளியே போகலாமா என்க, ஓகே டாட்.

ஆன்ட்டி வரலையா என்று கலாவை கேட்கவும்,எனக்கு தான் கால் ரொம்ப வலிக்குது டா. நீங்க போயிட்டு வாங்க என்றார்.

அதே போல் காலை டிபனை முடித்துக் கொண்டு மூவரும் ரைன் ஆற்றங்கரைக்கு வந்தனர்.வெக்கேஷன் சீசன் என்பதால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளின் கூட்டமாக இருந்தது.

ஒருவழியாக இடம் தேடி உட்கார்ந்து கொண்டு ஓடும் ஆற்று நீரை பார்த்துக் கொண்டிருக்க,ஏஞ்சலென்று விக்டர் கூப்பிட, ஆற்றை பார்த்துக் கொண்டே சொல்லுங்க டாடி என்றாள்.

பியூலாவோ விக்டரின் கையை வேண்டாம் என்று பிடிக்க அவரோ மனைவியின் கையை தட்டிக் கொடுத்தார்.

மீண்டும் ஏஞ்சல் என்று விக்டர் கூப்பிட இங்க தான் டாடி இருக்கேன் சொல்லுங்க என்று திரும்பி பார்க்க அவளின் முன்னால் ஒரு பார்சலை நீட்டினார்.

வாவ் கிப்ட்டா டாடி என்றவாறு வாங்கியவள் அதன் மேலிருந்த பட்டனை ஓபன் பண்ண உள்ளே எதோ ஒரு பொருள் பட்டு துணியால் சுற்றப்படிருந்தது.அதை வெளியே எடுத்தவள் பிரித்துப் பார்க்க அதன் உள்ளே கருப்பு நிற டைரி ஒன்று இருந்தது.

என்ன டாடி இது?.

உங்க ரெண்டு பேரோட காதல் கதையா என்று கண்ணை சிமிட்ட,தனது மகளின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி இதை படித்து முடித்தவுடன் இருக்குமா என்று வேதனையோடு பியூலா பார்த்தாள்.

அவர்கள் இருவரும் அமைதியாக இருப்பதை பார்த்துவிட்டு ஓகே ஓகே நானே படித்து தெரிந்து கொள்கிறேன் என்று சிரித்தவள் முதல் பக்கத்தை ஓப்பன் பண்ணப் போகும்போது மகளின் கையை பிடித்து தடுத்து விக்டர் அதற்கு முன்னாடி டாடி உன்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லணும் டா.

இது கேட்ட பிறகு நீ ஒன்னும் தப்பா நினைக்கக்கூடாது.எதுவுமே மாறல. எல்லாம் அப்படியே தான் இருக்கு சரியா என்கவும்,என்ன டாடி இப்படி குழப்பிட்டு இருக்கீங்க விஷயத்தை சொல்லுங்க என்றாள்.

கண்களை மூடி திறந்தவர் மகளிடம் தங்களை பற்றியும் அவளை தத்தெடுத்த விஷயத்தையும் சொல்லி முடிக்க கேட்டவளின் கண்ணிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்து ஓடியது.

இத்தனை வருடங்களாக தனது அப்பா அம்மா என்று நினைத்திருக்க,இன்று அது உண்மை இல்லை என்கவும்,கேட்டவளுக்கோ பெரிய இடி ஒன்று தலையில் விழுந்தது போல் இருந்தது.

மகளின் கண்ணில் இருந்து வழிந்தோடும் கண்ணீரை எட்டி துடைத்த பியூலாவோ உன் அப்பா ஒரு பைத்தியம்.இப்படி தான் ஏதாச்சும் உளறிட்டு இருப்பாரு.

"நான் தாண்டி உன் அம்மா" இவரு தாண்டி உன் அப்பா என்று அழ தனது தாயின் அழுகுரலை தாங்க முடியாத வெரோனிகாவோ,ஆயிரம் பேர் வந்து சொன்னாலும் நீங்க தான் என் மாம், இவங்கதான் என்னுடைய டாடி இது மாறாது என்று அவரை அணைத்துக் கொண்டாள்.

எங்கே மகள் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவாளோ என்று விக்டர் பயந்து போயிருக்க அதற்கு நேர்மாறாக அவளுடைய அணுகுமுறை இருப்பதை பார்த்தவர் மனதுக்குள் நிம்மதி அடைந்தார்.

ஆனால் தனது மனம் சுக்குநூறாக உடைந்து போனதை வெளிக் காட்டாமல் வெரோனிகா இருப்பதை அவர் உணரவில்லை.

சரிப்பா வீட்டுக்கு போகலாமா என்று சாதாரணமாக எழுந்தவள் சிரித்துக் கொண்டே முன்னே செல்ல விக்டரும் பியூலாவும் பின்னாடி நடந்து வந்தனர். முன்னாடி செல்பவளின் கண்ணில் இருந்து கண்ணீர் ஆராய் வடிந்து ஓடுவது பின்னாடி வருபவர்களுக்கு தெரியவில்லை:

ஒரு மாதம் கடந்திருந்தது.வெரோனிகா எப்போதும் போல தான் இருந்தாளே தவிர அவளிடம் இருந்து ஒரு சிறு மாற்றமும் இல்லை.

ஒரு நாள் மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது டாடி என்று வெரோனிகா கூப்பிட சொல்லுடா ஏஞ்சலென்றார்.

எனக்கு இந்தியா போவதற்கு ஆறு மாசம் டூரிஸ்ட் விசா எடுத்துக் கொடுங்க என்க,அவளிடமிருந்து இப்படி ஒரு கோரிக்கை வரும் என்பதை எதிர் பார்க்காததால் அதிர்ந்து போய் பார்த்தனர்.

"சுற்றி பாக்க தான் போறேன்" வேற ஒன்னும் இல்லை என்று தெளிவாக சொல்லியவளோ சாப்பிட்டு எழுந்து போனாள்.

பியூலாவோ இதற்கு சம்மதிக்கவே இல்லை.விக்டரோ மகளுக்கும் மனைவிக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு படாத பாடுபட்டார்.கடைசியில் வெரோனிகாவின் பிடிவாதம் தான் வெற்றி பெற்றது.

அதேபோல் டூரிஸ்ட் விசாவும் கிடைக்க அவள் இந்தியாவிற்கு செல்ல வேண்டிய நாளும் வந்தது.ஏர்போர்ட்டுக்கு போவதற்காக கீழே இறங்கி வர தாய் மட்டும் இன்னும் வராமல் ரூமிற்குள் இருப்பதை பார்த்து கதவை திறந்து உள்ளே போனவள் மாம் என்க...

கடைசியா சொல்றேன் இப்ப நீ போனால் இனிமேல் என்கிட்ட பேசவே கூடாது.நானும் உன்னிடம் பேச மாட்டேன் என்று மகளின் பயணத்தை தடுத்து நிறுத்த முயற்சி பண்ண அவளோ சாரி மாம்.போயிட்டு சீக்கிரம் வந்து விடுவேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

விக்டர் தான் ஏர்போர்ட்டுக்கு போய் மகளை அனுப்பிவிட்டு வீட்டிற்கு வந்தார்.பியூலாவோ ரூமை பூட்டிக் கொண்டு வெளியே வரவே இல்லை. விக்டரும் எவ்வளவோ கதவை தட்டி பார்க்க என்ன தொந்தரவு பண்ணாதீர்கள் என்று சொல்லிவிட்டார்.

நேரமும் கடந்து செல்ல இரவு 8 மணிக்கு விக்டரின் போனிற்கு லேண்ட் லைன் நம்பரிலிருந்து கால் வர இந்தியா கோடு என்பதால் அட்டென் பண்ணியவர் ஏஞ்சல் என்க எஸ் டாடி.நான் இந்தியா வந்துட்டேன்..

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் உங்க கிட்ட சொல்லணும்.நானா உங்களை தொடர்பு கொள்ளும் வரைக்கும் நான் எங்கே இருக்கேன்னு ஆராய்ச்சி பண்ணாதீங்க.

என்னோட மொபைலை அங்கு நம்ம வீட்ல தான் விட்டுட்டு வந்துருக்கேன் என்க,என்ன டா சொல்றயென்று விக்டர் அதிர்ந்து போக சில விஷயங்களை தெரிந்துகொண்டு உங்ககிட்ட நான் வந்துடுறேன் பா.என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கு தானே என்கவும் கண்டிப்பாக டா.அதனால் தான் அவ்வளவு தூரம் உன்னை தனியாக அனுப்பி வைத்தேனென்றார்.

சூடாமணி:

இன்னும் எவ்வளவு நேரம் தாண்டி இந்த சன்னதியில் உட்கார்ந்திருப்பது?என்னனு சொல்லி தொலைய வேண்டியது தானே என்று மஞ்சு கோவப்பட,வேலையை ரிசைன் பண்ணிட்டு கல்யாணம் பண்ணி குடும்பஸ்திரியாகப் போறேன்.
இதுதான் என்னுடைய முடிவு என்று மலர்விழி சொல்ல அதைக் கேட்ட மஞ்சு நல்ல விஷயம் தான் வேண்டான்னு சொல்லலை.வேண்டா வெறுப்புக்காக கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லாதடி என்றாள்.

இல்ல மஞ்சு நான் நல்லா யோசிச்சு தான் முடிவு எடுத்துருக்கேன்.வீட்டில் ரெண்டு மூணு வருஷமா கல்யாணத்தை பற்றிய பேச்சு போயிட்டு தான் இருக்கு நான்தான் வேலைக்கு போய் அத பத்தி பேசுங்கப்பான்னு சொன்னேன் டி.

அவங்களுக்குன்னு இருக்குறது நான் மட்டும் தானடி.மகளுக்கு கல்யாணம் பண்ணி பாக்கணும்னு அப்பா அம்மாவுக்கு இருக்கிற ஆசை நியாயமானது தானே என்க..

அடியே நான் அத பத்தி ஒன்னுமே சொல்லலடி.உன்னை கல்யாணம் பண்ணிக்க வேணான்னு என்னைக்காச்சும் நான் சொல்லிருக்கேனா?.

நான் எதை கேட்கிறேன் என்பது உனக்கு தெரியும் தானே என்க,ஆமா மஞ்சு என் மனசுல இப்போதைக்கு எந்த எண்ணமும் கிடையாது.அப்பா அம்மாவுக்காக இந்த வாழ்க்கையை நான் ஏத்துக்க போறேன் என்றாள்.

இப்ப கூட அந்த வீணா போன பரதேசி பயலை மறந்துட்டேன்னு உன் வாயில வரல இல்ல என்று திட்ட கண்ணை மூடி திறந்த மலரோ இனிமே அதை பற்றி தயவுசெய்து பேசாதடி என்று நொந்து போய் சொன்னாள்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
703
எழுந்து வந்து தோழினின் கையைப் பிடித்த மஞ்சு கண்டிப்பா பேசமாட்டேன்.நீ சந்தோஷமா இருந்தா எனக்கும் சந்தோஷம் டி என்கவும்,அப்போ வா ரெண்டு பேரும் ஒரே வீட்டில் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாமென்றாள்..

"நல்லாதான் இருக்கு"

மாப்பிள்ளைக்கு தம்பி இருக்காங்களான்னு விசாரிச்சியா என்கவும் எனக்கு எப்படி தெரியும் என்றாள்.தோழியின் பதிலை கேட்டவள் என்னடி சொல்ற??மாப்பிள்ளையோட பேராவது தெரியுமா என்க,இல்லடி நான் எதுவுமே கேட்டுக்கலை டி...ஓஓஓ எவ்வளவு நல்ல பொண்ணா இருக்கடி.

ஒன்னும் அவசரம் இல்லை மாப்பிள்ளையோட பேரு பத்திரிகைல போடுவாங்க இல்ல அப்போ தெரிஞ்சுக்கோ என்று மஞ்சு முறைக்க, இதுவும் நல்லா தானே இருக்கு என்று மலர்விழி சிரிக்க இருக்கும் டி இருக்கும் என்று சில பல கலாட்டக்களை செய்து கொண்டு கோவிலில் இருந்து வீட்டிற்கு கிளம்பினர்.

தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்த மலரின் மனசாட்சியோ உண்மையிலேயே மனதார தான் இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதிக்கிறியா என்று கேட்க,அவளோ ஆமாம் என்றாள்.

பொய் சொல்லாதே,அவன் உன் மனதில் இல்லவே இல்லன்னு உன்னால சொல்ல முடியுமா என்கவும் ஆமா என் மனசுல அவன் கிடையாது."அவன் செத்துப் போய் ஐந்து வருஷம் ஆகுதென்றாள்"...

தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top