• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
697
மன்னார்குடி:

பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பேத்தியை பார்த்தவர் இந்த கல்யாணம் முடியிற வரைக்கும் உன் வால சுருட்டி கிட்டு ஒழுங்கா இருக்கணும் புரியுதா?

ஏதாச்சு சொதப்பி இந்த சம்பந்தம் கைநழுவி போனது நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் என்று வேலன் கோவமாக சொல்ல,என்னைக்கு தான் நீங்க மனுஷனா இருந்தீர்கள் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட கவி சரிங்க தாத்தா என்றாள்.

ஹம் என்றவர் என்ன உன் முகம் சரியில்லையே?தாத்தாவை மனசுக்குள்ள திட்டுறியா என்று கேட்க கடவுளே இந்த தாத்தா கிட்ட மனசுல கூட பேச முடியலை என்ன கொடுமை இதெல்லாம் என்று நினைத்தவள் ஐயோ தாத்தா அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையென்றாள்.

எஸ் ஒன்னும் இருக்கக் கூடாது. உனக்காக தாத்தா எவ்ளோ பெரிய காரியம் பண்ணிருக்கேன் ஞாபகம் இருக்கா?.ஏனெனில் என் பேத்தி ராஜா வாழ்க்கை வாழணும் என்பதற்காக தான்.

நீ நல்லா இருந்தா எனக்கு சந்தோஷம் பெருமை தானே என்று வேலன் கேட்க,அதையெல்லாம் எப்படி தாத்தா என்னால மறக்க முடியும் என்று கேட்கும்போதே கவியின் உள்ளுக்குள் ஒரு திகில் பரவியது.

முகம் வெளிரி காணப்படும் பேத்தியின் முகத்தை பார்த்தவர் பயப்படுறியா?எதுக்கு தேவையில்லாத பயம்? நம்மளோட முதல் எதிரிய பயம் அதை வளரவே விட கூடாதுன்னு உனக்கு பலவாட்டி சொல்லிட்டேன் எங்களுக்கு அடுத்தது இந்த சொத்தை எல்லாம் கட்டி காப்பாற்ற போல ஆளு நீ மட்டும் தான் எவ்வளவு தைரியமாக இருக்கணும் என்கவும் சரிங்க தாத்தா என்றாள்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டு அங்கே வாசல் பக்கம் நின்றிருந்த கருப்பு உருவமோ,இப்போது தான ஆரம்பிச்சிருக்கேன்...உங்கள் ஆட்டத்தையும் பார்த்திரலாம் என்று கண்ணில் பழி வெறி மின்ன பார்த்துக் கொண்டிருந்தது....

கோத்தகிரி-சாலா எஸ்டேட்:

கதவை திறந்து உள்ளே வந்த வேலையாள் அங்கே சேரில் கம்பீரமாக உட்கார்ந்திருப்பவரை பார்த்து நிலன் தம்பி இன்னும் சாப்பிட வரலைங்க பெரியம்மா என்கவும்,அதை கேட்ட சாலாட்சி பாட்டி நான் பாக்குறேன்.
நீங்கள் சாப்பாடு எடுத்து வைங்களென்று கையிலிருந்த வரவு செலவு நோட்டை மூடி வைத்து எழுந்தவர் அப்பனே செந்தூர் முருகா ஏன் பா இப்படி ஒரு சோதனை?.

தெரிந்தும் தெரியாமலும் நான் எந்த பாவமும் பண்ணியதில்லையே பிறகு எதுக்கு இடி மேல் இடியாக என் தலையில் இறக்குறப்பா என்று அங்கே ஆளுயரத்தில் சுவற்றில் தொங்கி கொண்டிருக்கும் முருகனின் போட்டோவை பார்த்து பேசியவர், இன்னும் எனக்கு என்னவெல்லாம் வைத்திருக்க என்றவாறு கலங்கிய கண்ணை துடைத்துக் கொண்டு கதவை திறந்து வெளியே வந்தவர் படியில் ஏறி பேரனின் ரூமிற்கு முன்பு வந்து நின்று கதவை தட்டினார்.

சிறிது நொடிகள் சென்று கதவு திறக்கப் பட அங்கிருந்த பேரனை பார்த்தவர் வா கண்ணா சாப்பிடு என்றவாறு பேரனின் தாடி மண்டிய கன்னத்தை தடவிக் கொண்டு சொல்ல,ம்கும் என விரக்தியாக சிரித்தான்.

போனவளை நினைத்து இருக்கிறவர்களை கொல்வது எவ்வகை நியாயம் கண்ணா?

உன் தாத்தா அந்த வயதில் என்னை விட்டு போன போது உன்னை போல நானும் இருந்திருந்தால் இன்று என் வம்சம் இருக்குமா? என் பிள்ளைகள் மூன்று பேரும் என்னவாகிருப்பார்கள்?
ஏன் எனக்கு வேதனை இல்லையா?என்று கோவமாக கேட்க,எதுவும் செல்லாமல் நிற்பவனை பார்த்தவர் வா சாப்பிடலாமென்று அங்கிருந்து செல்ல,அவனோ எதுவும் சொல்லாமல் அமைதியாக பாட்டியின் பின்னால் வந்தான்.

சுமதி,நிலனுக்கு டிபன் எடுத்து வை மா என்று சாலாட்சி பாட்டி குரல் கொடுத்தார்.தட்டில் பரிமாறப்பட்ட உணவு அவனுக்கு பிடித்தமானது தான்
ஆனால் தொண்டையில் இறங்காமல் எட்டிக்காய் போல கசந்தது.

கண்ணா இன்றைக்கு நம்ப எஸ்டேட்டில் சம்பளம் போடும் நாள்.சாப்பிட்டு கிளம்புற வழியை பாரென்றவர் மனதிற்குள் சில கணக்குகளை போடும் போது அவர் போனிற்கு கால் வரும் சத்தம் கேட்டு டீப்பாயின் மேலிருந்த போனை எடுத்தவர் அட்டென் பண்ணி சொல்லு மதி என்க...

அத்தை நல்லாயிருக்கீங்களாயென அந்த பக்கமிருந்து மதிவாணன் விசாரிக்க நல்லா இருக்கேன் பா.போன காரியம் என்னாச்சு பா?

இதாவது முடியுமா?.

சந்தோஷமான செய்திதான்.மாறனும் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிட்டாங்கத்தை.கையோடு நிச்சய தேதியையும் குறிச்சிட்டு வந்துட்டோம்.

"ரொம்ப சந்தோஷம் மதி"

எங்கே பெரியவனை போல இவனும் இருந்திடுவானோனு பயந்துட்டே இருந்தேன்.அந்த செந்தூரன் புண்ணியத்தில் நல்லது நடக்கப்போகிறது என்றவர் தனது மகள் வேதவள்ளியிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தவர் கண்ணா மாறனுக்கு கல்யாணம் முடிவாகியிருக்கு. வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி பொண்ணு வீட்டில் நிச்சயதார்த்தம் பா என்க,அப்படியா என்று சந்தோஷப்பட்டான்.

மூன்று மாதங்களுக்கு பிறகு பேரனின் முகத்தில் சிரிப்பை பார்த்தவருக்கு இந்த சிரிப்பு எப்போதும் உன்னிடம் இருக்கணும் கண்ணா என்க,மீண்டும் தனது கூட்டுக்குள் நத்தை போல சுருண்டவன் வேக வேகமாக சாப்பிட்டு எழுந்தவன் நான் ரெடியாகி வரேனென்று அவனது அறைக்குள் வந்தவன்,எங்க டி போன? உயிரே நானென்று சொன்னியேடி,பிறகு ஏன் விட்டுட்டு போன?.இந்த காதல் மயிறுலாம் வேண்டானு இருந்தேன் டி.என்னைக்கு உன்னை பார்த்தேனோ அன்னைக்கே உன் மேல பைத்தியமாகிட்டேன்.

உனக்கு என்ன பிரச்சனை டி?

எதோ என்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும்னு சொன்ன,அது தானே நீ என் கிட்ட பேசிய கடைசி வார்த்தை என்று கண்ணீரோடு சொல்லிக் கொண்டே தயாராகி கீழே வந்தவன் போகலாம் பாட்டியென்க,ஹம் கண்ணா என்றவாறு எழுந்தவர் பேரனோடு அவர்கள் எஸ்டேட்டை நோக்கி காரில் சென்றனர்.

சூடாமணி:

மலரு 11 ஆம் தேதி உனக்கு நிச்சயதார்த்தம்னு முடிவு பண்ணியிருக்கு.ஆனால் இதுவரை மாப்பிள்ளை பற்றி எதுவுமே நீ தெரிந்து கொள்ளவில்லையே மா என்று புகழேந்தி கேட்க,நீங்கள் எனக்கு கெடுதலா பா பண்ணிடப் போறீங்க நல்லது தானே பண்ணுவீங்க உங்களுக்கு புடிச்சிருக்கு இல்ல அது போதும் என்றாள்.

தனது மகளை நினைத்து கர்வப்பட்டவர் பார்த்தியாடி குமாரி,என் பொண்ணு ஒரே வார்த்தையில் சொல்லிட்டாள்.
நீ தான் என்னமோ புலம்பிட்டு கடந்த, இனி உனக்கு சந்தோஷம் தானே என்று மனைவியிடம் கேட்க,ஏங்க எனக்கு மட்டும் நம்ம புள்ளைக்கு நல்லது நடக்கணும்னு ஆசை இருக்காதா?

கடைசி வரைக்கும் கூட இருந்து வாழ போறது நம்ப ஒன்னும் கிடையாது. அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறது பெற்றோரா நம்மளோட கடமை.

உனக்கு யார் மேலயாவது விருப்பம் இருந்தா சொல்லு அந்த பையன் கூடயே கல்யாணம் பண்ணி வைக்கிறோமேன்று நாமளும் பலமுறை கேட்டு விட்டோம்.

ஊர் உலகத்துல நடக்கிறது எல்லாம் நம்ம ஒன்னும் பாக்காம கண்ண மூடிகிட்டு இல்லையே.இது வாழ்க்கை பிரச்சனைங்க அவளுக்கு பிடித்த போல இருக்கணும்னு நினைக்கிறது ஒரு தாயா தப்பா என்கவும்,உன்ன நான் குறை சொல்ல குமாரி.

நல்ல குடும்பம் நல்ல பையன் கை நிறைய சம்பாதிக்கிறான் கௌரவமான வேலை ஆனா பையன பத்தி மலரு எதையுமே இதுவரைக்கும் தெரிஞ்சுக்கல என்பது தான் உனக்கு வருத்தம் அப்படித்தானே எங்கவும் ஆமாங்க என்றார்.

நீதான் மாப்பிள்ளை பத்தி தெரிஞ்சுக்கியேமா உன் அம்மா நிம்மதியா இருப்பாளே என்று மகளை பார்க்க,இருக்கட்டும் பா நீங்க ரெண்டு பேரும் நல்லபடியா விசாரிச்சிட்டிங்களே அது போதும் என்றவள் சரிப்பா நான் மஞ்சுகூட வெளியே போயிட்டு வரேன் என்கவும், சரி பார்த்து போஙாக என்கவும் மஞ்சுவும் அவர்களிடம் சொல்லிக்கொண்டு தோழியை முறைத்தபடி வெளியே போக மலரும் தனது ஸ்கூட்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

இருவரும் அவரவர் வண்டியை எடுத்துக் கொண்டு அவர்கள் வழக்கமாக செல்லும் அம்மன் கோயிலுக்கு போனாளுங்கள்.

நல்லதோ கெட்டதோ இருவருக்கும் நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்த அம்மன் கோயில் சன்னதியில் உட்கார்ந்து கொண்டுதான் இருவரும் பேசிப்பாளுங்கள்.

ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே வந்தவர்கள் கர்ப்பகிரகத்தில் இருக்கும் பேச்சியம்மனை கண்ணை மூடி வணங்கினார்கள்.

அம்மா தாயே இந்த திருமணம் நல்லபடியாக முடியணும் என்று மஞ்சு வேண்டிக் கொள்ள,மலரோ உனக்கு என்ன சித்தமோ அப்படியே செய்யு மா என்றாள்.

அய்யரும் தீபாரதனை தட்டோடு வர இருவரும் கண்களை திறந்து ஆரத்தி எடுத்து கண்ணில் வைத்தவளுங்கள் விபூதி குங்குமத்தை வாங்கிக் கொண்டு கோயிலை சுற்றி வந்து அவர்கள் வழக்கமாக உட்காரும் தியான மண்டபத்தில் போய் ஆளுக்கு ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்கள்

சென்னை:

நீண்ட வருடங்களுக்கு பிறகு காமாட்சியின் கைப்பக்குவத்தை ரசித்து சாப்பிட்டவர்களோ பெரிய ஏப்பத்தை விட்டுக்கொண்டு அங்கிருந்த சோபாவில் வந்து உட்கார்ந்தார்கள்.

அவர்களுக்கு எதிரே வந்து உட்கார்ந்த காமாட்சியோ மாறனை பார்க்க,எதுக்கு இப்படி பார்க்கிறாய் என்றான். பொண்ணு ரொம்ப நல்லா இருக்கு என்கவும்,மாமாவுக்கு இரண்டாவது கல்யாணம் பண்றதுக்கு என்ன ஒரு தாராள மனசு.உன்னை போல பொண்டாட்டி இருந்தால் ஊர் உலகத்தில் டைவர்ஸ் இருக்காதென்கும் மருமகனை முறைத்து பார்த்தவர் நான் உனக்கு சொன்னேன் என்றார்.

ஓ எனக்கா என்றவன்,அதான் குடும்பமாக ஒன்று கூடி என்னை கும்மி அடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்களே வேற என்ன பண்றது என்று கடுப்பில் சொன்னான்.

கல்யாணம் என்றால் ஏன்டா இவ்வளவு கடுப்பாகுற நீ? பெரிய மாமா கூட இருந்து நீயும் அவரை போல் ஆகலாம்னு இருக்கிறியா என்று கொஞ்சம் கோபமாகவே காமாட்சி கேட்க, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லத்தை என்றான்.

பின்ன வேற ஏதாச்சும் காரணம் சொல்லு?

காதல் தோல்வியா? இல்லை யாரையாச்சும் மனசுல நினைச்சுகிட்டு இருக்கியா சொல்லு டா என்க இதை கேட்ட நிலவனோ இந்த சிடு மூஞ்சிக்கு காதலா என்று சத்தமாக சிரித்தான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
697
என்னடா நக்கலா?

"வாய ஒடைச்சிடுவேன்"

ஒழுங்கு மரியாதையா ஓடிடு என்றவன் நீங்க வாழ்க்கை கொடுத்த மகராசா எப்போ வருவார் அத்தை என்று கேட்கும்போது என்னடா சொன்ன என்றவாறு ஆளுநர் வெற்றி நந்தன் வீட்டுக்குள் வந்தார்.

சீக்கிரம் அந்த பைலை கொடுங்க மாமா தலைக்கு மேல எவ்வளவு வேலை இருக்கு என்க,ஏண்டா அப்ப நான் வெட்டியா இருக்கிறேனா என முறைக்க,யாருக்கு தெரியும்?

உங்க லட்சணத்தை தான் அங்கு வந்து பார்த்தேனே,அந்த செக்கரட்ரி கிட்ட இளிச்சிட்டு இருந்தியே என்றவன் தனது அத்தை பக்கம் திரும்பி சூதானமா உன் வாழ்க்கையை பார்த்துக்க,என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றவன்,அவரை நோக்கி கையை நீட்ட,மனைவியின் முறைப்பை பார்த்தவர் அடப்பாவி என தனது கையில் இருந்த பேகை தூக்கி அவனிடம் எறிந்தார்.

அதை கேட்ச் பிடித்தவன் கொஞ்சமாச்சு இவருக்கு பொறுப்பு இருக்கா? எவன்தான் போஸ்டிங் குடுத்தான் தெரியல என்றவாறு பேகை திறந்தவன் அதில் இருக்கும் ப்ளூ கலர் ஃபைலை எடுத்துக்கொண்டு வாடா நிலவா என்று சொல்லிக் கொண்டு கீழே இருக்கும் ஆபீஸ் ரூமிற்குள் செல்ல,பார்த்தியாடி உன் அண்ணன் மவனுக்கு நக்கலை?

ஊர் உலகத்துல இருக்கிறவங்க எல்லாம் என்ன பாத்து பயப்படுறாங்க அவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள் இந்த ரெண்டு பயலும் பாவத்துக்கு கூட மதிக்கிறதில்லை என்க....

யோவ் முதலில் உனக்கும் அந்த பொம்பளைக்கும் என்ன சம்பந்தம் அதை சொல்லுயா என்க, அடியேய் உன் அண்ணன் மவன் நமக்கு சிண்டு முடிச்சிட்டு போறான் டி என்றார்.

மாறன் பொய் சொல்லமாட்டான்.ஒழுங்கா உண்மைய சொல்லுங்கள் என்கவும்,ஆமா இவ அண்ணன் மவன் அரிச்சந்திரன் வாரிசு பாரேன்....

உன் புருஷன் ஸ்ரீராமன் டி என்க, கணவனை மேலிருந்து கீழாக பார்த்தவர் சொந்த வீட்டுக்குள் உங்களுக்கு மரியாதை ஒன்று தான் கேடு என்று காமாட்சி குரலை உயர்த்த, நீயே சொல்லிக்கொடுடி என்று பல்லை கடித்தவர் போ போய் சூடா டீ எடுத்துக்கிட்டு சாப்பிட ஏதாச்சும் கொண்டு வா என்றவாறு அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து கண்ணை மூடினார்.

ஆமா என்னமோ மூட்டை தூக்கிட்டு வந்து கலைத்த போல தான் என்று முணுமுணுத்துக் கொண்டு காமாட்சியும் கிச்சனிற்குள் சென்றார்.

ரூமிற்குள் வந்த மாறனும் நிலவனும் பைலில் உள்ள டீடைல்ஸை ஒரு முறைக்கு இரண்டு முறையாக மாறி மாறி படித்து முடித்தனர்.

ஜெர்மனி:

மனைவியிடம் சொல்லியது போல தயாரான விக்டர் காரை எடுத்துக் கொண்டு அவர் வேலை பார்க்கும் யுனிவர்சிட்டிக்கு சென்றார்.அரை மணி நேர பயணத்தில் அந்த யுனிவர்சிட்டிக்கு வந்தவர் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு அந்த யுனிவர்சிட்டின் கரஸ்பாண்டரை பார்ப்பதற்காக இரண்டாவது ப்ளோரில் இருக்கும் ரூமை நோக்கி செல்ல...

அவருக்கு தெரிந்தவர்களோ எதிரில் வரும் விக்டரை பார்த்து வெரோனிகா பற்றி ஏதாவது தெரிந்ததா என்று விசாரிக்க இல்லை என்று வருத்தமாக சொல்லிய விக்டருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்றனர்.

படியில் ஏறி மேலே வந்தவர் அங்கிருந்த அட்டெண்டரிடம் சாரை பார்க்கணும் என்று சொல்ல சரிங்க சார் என்று உள்ளே போய் கரஸ்பாண்ட் சாமுவேலிடம் விஷயத்தை சொல்ல, வர சொல்லுங்கள் என்றார்.

சார் வர சொல்கிறார் என்று விக்டரிடம் சொல்ல உள்ளே போனவர் குட் மார்னிங் சார்.குட் மார்னிங் விக்டர்.வெரோனி பற்றி ஏதாவது தெரிந்ததா என்று சாமுவேல் கேட்க இல்லை என்று தலையசைத்தார்.

ஜீசஸ் என்றவர் சொல்லுங்க விக்டர் என்ன விஷயம்?நான் என்ன ஹெல்ப் பண்ணனும்?...சார் இந்த வேலையை நான் ரிசைன் பண்ணுகிறேன்.
ஒவ்வொரு நாளும் பியூலாவை சமாளிக்கிறது எனக்கு பெரும் போராட்டமாக இருக்குங்க சார் என்று கண்கள் கலங்கியபடி விக்டர் சொல்லவும், எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிவிட்டாரே என்று வருத்தப்பட்ட சாமுவேல் இதுக்கு எதுக்கு நீங்க வேலை ரிசைன் பண்ணனும்?.

தாராளமாக எத்தனை மாசம் வேணாலும் லீவு எடுத்துக்கோங்க.வெரோனி பற்றி தெரிந்த பிறகு நீங்க வந்து ஜாயின் பண்ணுங்க இதுக்காக எதுக்கு வேலை ரிசைன் பண்ணனும்?

நம்பிக்கையோடு இருங்கள் என்று ஆறுதலாக பேசியவர்,எப்போ வேணாலும் ஜாயின் பண்ணுங்க உங்களுக்காக இந்த யுனிவர்சிட்டி காத்துக்கொண்டிருக்கும் உங்களை போல நல்ல ப்ரொபஸரை இழக்க நாங்கள் விரும்பவில்லை என்று சாமுவேல் சொல்ல அரை மனதோடு சரிங்க சார் என்று சொல்லும் போது விக்டருக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது.

ஓகே சார் தேங்க்யூ என்று சொல்லிக் கொண்டு வெளியே வந்தவர் மொபைலை எடுத்து யார் என்று பார்க்க புது நம்பராக இருந்தது.அட்டென்ட் பண்ணி காதில் வைத்தார்.

சென்னை🔙ஜெர்மனி:

என்னடா ரிப்போர்ட் இது?

"வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்" என்கிற போல பாரின்ல இருந்து வந்தாங்க காணாமல் போய்ட்டாங்களென்று வெறும் மிஸ்ஸிங் கேஸ்னு எழுதி வைத்திருக்கிறார்களே, இதுதான் இவங்க வேலை பாக்குற லட்சணமா?என்று நிலவன் திட்டிக் கொண்டிருக்க...

மாறனோ ஏதோ யோசனையில் இருந்தவன் மீண்டும் அந்த பைலை திறந்து முதல் பக்கத்தில் இருக்கும் பெற்றோர்கள் என்ற பெயரில் விக்டர், பியூலா என்றும் அதில் இருக்கும் விக்டரின் காண்டாக்ட் நம்பரை பார்த்தவன் தனது போனை எடுத்து அந்த நம்பருக்கு கால் பண்ணினான்.

முதல் கால் கட்டாக இரண்டாவது கால் அட்டென்ட் பண்ணியதும் மிஸ்டர் விக்டர் என்ற குரல் கேட்க,எஸ் ஆம் விக்டர் ஹூ ஆர் யூ என்றார்.

ஆம் இளமாறன் கிரைம் பிரான்ச் டெல்லி என்கவும் ஓஓஓ சொல்லுங்க என்றார்.

சார் நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா உங்ககிட்ட சில விஷயங்கள் பேசணும் என்க,சார் இன்றைய ஒரு பொழுது பொறுத்துக்குறிங்களா?

ஏன்னா இன்னைக்கு நைட் நான் இந்தியாவுக்கு வரேன்.நாளைக்கு உங்களை மீட் பண்ணி பேசுறேன் என்கவும்,நான் சென்னையில் தான் இருக்கேன்னு மாறன் சொல்ல,அப்படியா சரிங்க சார் நான் சென்னைக்கு தான் வரேன்னு விக்டர் சொல்ல,சரியென்று சொல்லிவிட்டு ருத்ரனும் போனை வைத்தான்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நிலவன்,இதுல வேற ஏதோ விஷயம் ஒளிஞ்சிருக்க போல இருக்குடா மாறா. வெறுமனே இது ஒரு மிஸ்ஸிங் கேஸ் போல எனக்கு தோணலை என்கவும் எனக்கும் அப்படி தாண்டா தோணிட்டு இருக்கு.

அதாவது அந்த பொண்ணு எதுக்கு இந்தியாவுக்கு வந்தாங்கன்னு அவங்க அப்பா அம்மா போலிஸ் கிட்ட சொல்லவே இல்லை.ஒருவேளை யார் கூட வந்தாங்க?ஏற்கனவே இந்தியாவுக்கு வந்துருக்காங்களா அப்படின்னு எந்த டீடைல்ஸுமே இல்லை.

வெறுமனே இந்தியாவுக்கு வந்திருக்காங்க இந்தியாவில் எந்த ஸ்டேட்டிற்கு வந்தாங்கணும்னு இல்லை.ஏதோ மொட்டை தாத்தா குட்டையில விழுந்த கதை போல இருக்கென்றான்.

சரி இந்த கேஸை ஹேண்டில் பண்ணிய போலிஸ்காரருக்கு கால் பண்ணு என்க,மாறனும் இன்ஸ்பெக்டர் பன்னீருக்கு கால் பண்ண அதுவோ உபயோகத்தில் இல்லை என்று வந்தது.

என்னடா ஆச்சு?

கால் போகலைடா.அந்த சத்யா கிட்ட கேட்கலாமென்றவன் போனில் இருந்த சத்யாவின் நம்பருக்கு கால் பண்ண அந்த பக்கம் அட்டென் பண்ணியவன் குட்ஈவ்னிங் சார் என்க,ஹம் குட்ஈவ்னிங் சத்யா.

இன்ஸ்பெக்டர் பன்னீருக்கு கால் பண்ணினால் போகலையே என்க, சார்... அவர் ஆக்ஸிடன்டில் இறந்து போய் 3 மாதம் ஆகுதென்றான்.

என்ன சொல்றீங்க என்க...

ஆமாம் சார்.டூட்டியில் இருக்கும் போது தான் இந்த விபத்து நடந்திருக்கென்றான்.ஓஓஓஓ அவர் எந்த ஊரென்க,மன்னார்குடி சார்.கோத்தகிரிக்கு பக்கத்து ஊரென்றான்.

ஓகே என்று போனை வைத்தவன் அங்கே டிராவில் இருந்த பேனாவை எடுத்து நோட்டில் ஏதேதோ கோட் வேர்டில் எழுதியவன் வெரோனிகா எங்கே?என்று முடித்தான்.

அதை பார்த்த நிலவன் நாளைக்கு விக்டரை மீட் பண்ணினால் நமக்கு எதாவது குளு கிடைக்கும்.சோ வா வெளியே போகலாமென்க ம் என்றான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
697
அக்கா பத்ரமா இருங்களென்க நம்ப பாப்பாவோடு வாங்க தம்பி.என்னை பற்றி கவலை வேண்டாம். நல்லபடியாக போயிட்டு வாங்களென்க சரிக்கா என்ற விக்டரும்,பியூலாவும் அங்கிருந்த டாக்ஸியில் ஏறி ஏர்போர்ட்டிற்கு வந்தவர்கள் அவர்களுக்கான பிளைட் வந்ததும் அதில் ஏறினர்.

அதிகாலை 5 மணிக்கெல்லாம் மீனம்பாக்கம் ஏர்போர்ட்டிற்கு வந்து சேர்ந்தனர்.பின்னர் செக்கிங்கை முடித்து விட்டு அவர்கள் புக் பண்ணியிருந்த ஹோட்டலுக்கு சென்றனர்.

"நேரமும் யாருக்கும் காத்திருக்காமல் ஓடியது"

நேற்று பேசிய மாறனின் நம்பரை தேடி எடுத்து கால் பண்ணிய விக்டர்,எங்கே மீட் பண்ணலாமென்க,அவனோ உங்களுடைய விருப்பமென்றான்.

நீங்கள் தப்பா நினைக்கலை என்றால் நாங்கள் இருக்கும் ரூமிற்கு வர முடியுமா என்க,ஷ்யூர் என்றவன் ஹோட்டல் பெயரை கேட்டு வைத்தவன் நிலவனிடம் விஷயத்தை சொல்ல,சரி நம்ப புல்லட்டில் போகலாமென்க, மாறனோ வேண்டாம்."மெட்ரோல போகலாம்"என்க..சரியென்று அவர்கள் கன்னை எடுத்து காலில் சுற்றியிருந்த பேன்டிற்குள் மறைத்து வைத்து விட்டு கீழே வந்தனர்.

இருவரையும் பார்த்த வெற்றி நந்தன் ஏண்டா போலீஸ்காரன் போலயாடா இருக்கீங்க?

என்னமோ காட்டு கொறவன் போல முடியும் தாடியும் பாரென்று திட்ட,பேன்சி டிரஸ் காம்படிஷன்ல கலந்திருக்கோம் அதானென்றவன் அத்தை டிபனென்க, ரெடி தான் மாறா.

உன் மாமா அங்க வெட்டியா உட்கார்ந்து கொண்டு பத்தாவது முறையாக இன்றைய பேப்பரை எழுத்து கூட்டி படிச்சிட்டிருப்பார்.அவரையும் கூப்பிட்டு வாயென்று கிச்சனிலிருந்து குரல் கொடுத்தார்.

தனது அத்தை சொன்னதை கேட்ட மாறனோ பங்கம் பங்கமென்று சிரிக்க,வெற்றி நந்தனோ பல்லை கடித்து முறைத்தார்.

இருவரும் சாப்பிட்டு கிளம்பியவனுங்கள் மெட்ரோவில் ஏறி மீனம்பாக்கம் வந்தானுங்கள்.
அங்கிருந்து ஹோட்டலுக்கு நடந்து செல்லும் தூரம் என்பதால் இருவரும் பேசிக்கொண்டு ஹோட்டலுக்கு வந்தவர்கள் விக்டருக்கு கால் பண்ண அவர் ரூம் நம்பரை சொன்னார்.

ரிசப்ஷனிலும் எங்கள் ரூமிற்கு இருவர் வருவார்கள் அலோவ் பண்ணுங்களென்று சொல்லியிருந்தார்.

அதேபோல் இவனுங்கள் வந்து விசாரிக்க உள்ளே போக சொல்லவும் லிப்ட்டில் ஏறி மூன்றாவது ப்ளோருக்கு போனானுங்கள்.
.

சென்னை:

மேலே வந்தவனுங்கள் ரூம் நம்பர் 206க்கு வெளியே இருந்த காலிங்பெல்லை அழுத்த கதவும் திறக்க,இருவரின் தோற்றத்தை பார்த்த விக்டர் யார் நீங்கள்?

என்ன வேண்டும்?என்க...

மிஸ்டர்.விக்டர் என்று மாறன் சொல்ல,குரலை உணர்ந்தவர் அவனின் தோற்றத்தை வித்தியாசமாக பார்த்தார்.

என்ன நம்பிக்கை வரலையாயென்று சிரித்தவன் தனது ஐடி கார்டை காட்ட, அதன் பிறகே அவர்கள் உள்ளே வர வழி விட்டு உட்காருங்கள் சார் என்று அங்கிருந்த சேரை காட்டினார்.

ஹம் என்றவாறு உள்ளே வந்தவர்கள் தனது போலிஸ் புத்தியால் அந்த ரூமை பார்வையால் அலசி விட்டே சேரில் உட்கார்ந்தானுங்கள்.

இவ்ளோ பெரிய ரூம்ல இந்த ஆள் மட்டுமா இருக்கிறார் என்று நிலவன் சுற்றி பார்க்க அவன் பார்வையை உணர்ந்தவர் என்னுடைய வொய்ப் அந்த ரூமில் இருக்கிறாங்க என்றார்.

ஓகே மிஸ்டர் விக்டர் நேரடியா விஷயத்துக்கு வரேன் நடந்தது என்ன? எதையுமே மறைக்காம நீங்க சொல்றதை வச்சு தான் உங்க பொண்ணு எங்க இருக்காங்கன்னு என்னால கண்டுபிடிக்க முடியும்.

இங்கு இருந்த டீட்டைல்ஸில் எங்களுக்கு ஒன்னுமே திருப்திகரமா இல்ல வெறும் மிஸ்ஸிங் கேஸ் மட்டும் தான் இருக்கு.

சோ நீங்க சொல்றதை வைத்து தான் அடுத்த ஸ்டெப் எங்களால மூவ் பண்ண முடியும் என்க,விக்டரோ தனது நெற்றியை தடவி யோசிக்க,சின்ன விஷயமாக இருந்தாலும் தயங்காம சொல்லுங்களென்றான்.

விக்டர் அமைதியாக இருப்பதை பார்த்த நிலவன் சார் ஆக்சுவலா உங்க பொண்ணு ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு வந்தாங்கன்னு உங்களுக்கு நல்லா தெரியுமா?

எந்த ஸ்டேட்டுக்கு வந்தாங்கனு எந்த ஒரு தடயமும் இல்லை.எங்க விசாரணைக்கு நீங்க ஒத்துழைப்பு கொடுத்தா தானே உங்க பொண்ணு இருக்கிற இடத்தை எங்களால் கண்டுபிடிக்க முடியும்?எதுவுமே இல்லாமல் நாங்க என்ன சார் பண்ண முடியும் நீங்களே கொஞ்சம் யோசித்து பாருங்களென்றான்.

ஜீசஸ் என்றவர் கண்டிப்பா உன்கிட்ட எல்லாம் சொல்றேன் அது மூலமா நிச்சயமா என் பொண்ணு கிடைக்க வாய்ப்பு இருக்கென்றால் அது சொல்றதுக்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றவர் சொல்ல தொடங்கினார்....

விக்டர் கடந்த காலம்...

பவுல் காப்பகம் திருச்சி;

பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளும்,ஆதரவற்ற முதியோர்களையும் சேர்த்து கிட்டத்தட்ட 250 பேர் அந்த காப்பகத்தில் இருந்தனர்.

அங்கு தான் நான் பியூலா,சந்தர் மூவரும் வளர்ந்தோம்.அனாதையான எங்களுக்கு நாங்கள் மூவரும் உறவாக மாறினோம்.

பாதர் அகஸ்டின் அடிக்கடி சொல்லும் வாக்கியமோ படித்து நல்ல வேலைக்கு போனால் வாழ்க்கை நல்லா இருக்கும் என்று..அதையே வேதவாக்காக எடுத்துக்கிட்டு நாங்க மூணு பேரும் நல்லா படிக்க ஆரம்பித்தோம்.

பியூலா என்ன விட ரெண்டு வயசு சின்னவள்.சந்தரும் நானும் ஒரே கிளாஸ்.ஸ்கூல் படிப்பு முடிச்சுட்டு திருச்சியில் இருக்கும் காலேஜ்ல நாங்கள் படிப்பை தொடர,ஒரு நாள் பிரேக் ஹவர்ல வெளியில போன சந்தர் அதுக்கப்புறம் வரவே இல்லை.

பாதரும் அவனை எங்கெங்கியோ தேடினார்.அவனை பற்றி எந்த செய்தியும் கிடைக்கலை.நானும் படிச்சு முடிச்சிட்டு வெளியில வர எனக்கும் சென்னையில வேலை கிடைச்சது.

அப்பதான் நான் பியூலாவை கல்யாணம் பண்ணிக்க விரும்புறதை பாதர் கிட்ட சொன்னேன்.ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பிச்சோம்.ஆனா அதை சொல்லிக்கவில்லை.

பாதரும் சர்ச்சில் முறைப்படி எனக்கும் பியூலாவுக்கும் கல்யாணம் பண்ணி வச்சார்.நாங்களும் எங்க வாழ்க்கையை சென்னையில் தொடங்கினோம். பியூலாவும் சில மாதத்தில் கன்சீவ் ஆனால்.எங்க வாழ்க்கையும் சந்தோஷமா போயிட்டு இருந்துச்சு எங்களுக்காக ஒரு புது உறவு வரப்போவதை நினைச்சு எல்லை இல்லாத சந்தோஷத்துல மிதந்தோம்.

பத்தாவது மாசத்துல டெலிவரிக்கு அட்மிட் பண்ணி இருக்கும்போது தான் திடீர்னு பியூலாக்கு வலிப்பு வந்துடுச்சு. அதில் குழந்தையை காப்பாற்ற முடியலை.

அதிலிருந்து ரெண்டு பேரும் தேரி வர்றதுக்கே எங்களுக்கு ஆறு மாசத்துக்கு மேலானது.அடுத்த குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்று சமாதானப்படுத்த மீண்டும் இன்னொரு இழப்பை என்னால் தாங்கிக்க முடியாது.முன்பு போல வலிப்பு வந்துடுமோனு பியூலா பயந்தவள் நம்ம ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாம்னு சொல்ல அதுவும் எனக்கு நல்லதா தோணுச்சு.

சரி என்று மறாவது வாரம் நானும் இவளும் நாங்க வளர்ந்த பவுல் காப்பகத்துக்கு போயிருந்தோம்.அங்கு போய் பாதர் கிட்ட விஷயத்தை சொல்லிட்டு இருக்கும் போது குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பியூலா வெளியே ஓடிப்போய் பார்க்க ரெண்டு வயசு குழைந்தை ஒன்று அழுதுட்டு இருக்கவும்,இவ குழந்தையை தூக்கினதும் குழந்தையும் அழுகையை நிறுத்திடுச்சு .

அந்த குழந்தையை அவளுக்கு ரொம்ப பிடிக்வும் இந்த குழந்தையை நம்ம தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று என்கிட்ட சொன்னாள்.எனக்கும் அந்த குழந்தையை ரொம்ப பிடிச்சிருச்சு குழந்தையோட பேரு என்னன்னு பாதர் கிட்ட கேட்க அவரோ"வெரோனிகா" என்றார்.

தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top