• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
721
சூடாமணி:

ரூமிற்குள் வந்த மலர்விழியோ ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை நினைத்து பார்க்கலானாள்.மலர்விழி மஞ்சு இருவரும் சென்னையில் இருக்கும் அண்ணா யுனிவர்சிட்டியில் இன்ஜினியரிங் மூன்றாவது வருடம் படித்துக் கொண்டிருந்தனர்.

அந்த வருடம் கல்லூரியில் நடந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கவர்னர் வெற்றி நந்தன் வந்திருந்தார் அங்கு தான் மாறனை பார்த்தாள்.

ஏனோ தெரியவில்லை பார்த்த உடனே அவனை பிடித்து விட்டது.யார் என்றே தெரியாதவனை மானசீகமாக காதலிக்க தொடங்கினாள்.

நாலைந்து முறை அவனை அந்த கல்லூரியில் பார்த்திருக்க பிறகுதான் அவன் அதே கல்லூரியில் படித்த முன்னால் மாணவன் என்பது அவளுக்கு தெரிந்தது.ஆனால் கவர்னருக்கும் அவனுக்கும் என்ன உறவு என்று அவளுக்கு தெரியாமல் போய்விட்டது.

படிப்பு முடிந்தவுடன் எப்படியாவது அவனைப் பற்றி தெரிந்து கொண்டு தன் மனதில் உள்ள விருப்பத்தை சொல்லலாம் என்று காத்திருக்க பைனல் இயர் கடைசி வருடத்தில் கல்லூரியில் இருந்து டூருக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

முதலில் டெல்லியில் உள்ள தாஜ்மஹாலை பார்க்கலாம் என்று அங்கே போயிருக்க மஞ்சுவும் அவள், மற்ற தோழிகளோடு இரவு நேரத்தில் டெல்லியை சுற்றி பார்ப்பதற்காக செல்லும்போது அவர்கள் இருந்த ஹோட்டலுக்கு பின்னாடி மார்க்கெட் என்பதால் அங்கே போய் எதாவது சாப்பிடலாமென்று போனாளுங்கள்.

அங்கே வந்த போது அங்கங்கே மக்கள் கூட்டமாக நின்றுக்கொண்டு,அங்கு ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாகவும் போலீஸ் அங்கு உள்ளவர்களை அரஸ்ட் பண்ண வந்திருப்பதாக பேசிக்கொள்ள,இதை காதில் வாங்கிக் கொண்டு அந்த வீட்டை கடந்த போகும் மலர் திரும்பி பார்க்க கூட்டத்தில் மாறனும் ஒருவனாக அதில் வந்தான்.

இப்படி ஒரு சூழ்நிலையில் அவனை எதிர்பார்க்காதவளோ அதிர்ந்து போய் மஞ்சுவின் கையை இறுக்கமாக பிடிக்க, தோழியின் இறுக்கமான பிடியில் என்னடி என்றாள்.

அவன் அவன் என்க..மஞ்சுவோ யாரடி என்கவும் அங்கே பாருடி என்று மலர் சொல்ல,அங்கே இருந்த ஆண்களில் மாறனும் நின்று கொண்டிருந்தான்.

இவ்வளவு கேவலமானவனையா காதலிச்சிருக்கேன் என்று தோழியிடம் சொல்லி அழுதவள் அதன் பின்னர் டூரை முடித்துக் கொண்டு எப்படி வீட்டிற்கு வந்தாள் என்று தெரியவில்லை.

தன்னுடைய காதல் இப்படி போய்விட்டது என்று நினைத்த வருந்த,வீட்டில் கல்யாணம் ஏற்பாடு பண்ணவும் அவனை காதலித்த மனதால் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க எண்ணம் வரவில்லை.

வீட்டில் இருந்தால் தானே திருமணத்தைப் பற்றி பேசுவார்கள் என்று நினைத்தவள் அப்பா ஒரு மூணு வருஷம் வேலைக்கு போறேன் அதன்பிறகு கல்யாணத்தைப் பற்றி பேசுங்கள் என்று சம்மதம் வாங்கிவிட்டு மஞ்சுவும் அவளும் பக்கத்தில் இருக்கும் கல்லூரியில் வேலைக்கு போனார்கள்.

மூன்று வருடம் கடந்த பிறகு அவளின் கல்யாணம் பற்றி பெற்றோர்கள் பேச இனியும் சமாளிக்க முடியாது என்பதால் தான் இதற்கு சரி என்றாள்.ஆனால் மாறனே மாப்பிள்ளையாக வருவான் என்பதை எதிர்பார்க்கலை.அதைவிட அவன் போலீஸ்காரனாக இருப்பான் என்பது பேரதிர்ச்சி. அவசரப்பட்டு அத்தனை பேருக்கு முன்னாடி அவமானப்படுத்திட்டோமே என்று தன்னைத்தானே அறைந்து கொண்டு அழுதாள்.

கோத்தகிரி:

நேரமும் கடந்து செல்ல அடியாட்களுக்கு சமைத்து முடித்த சந்தரின் மனைவியோ அதில் தூக்க மாத்திரையை கலந்தவர் தம்பி நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குள் போய் ஒளிச்சுக் கொள்ளுங்கள்.

அவர்கள் சாப்பாடு எடுக்க வரும் நேரம் ஆயிடுச்சு என்கவும் அதே போல் மாறனும் நிலவனும் உள்ளே போய் ஒளிந்து கொண்டார்கள்.சிறிது நிமிடம் கடந்திருக்க என்ன பெருசு சாப்பாடு ரெடியா என்று இரண்டு அடியாட்கள் அங்கு வர ரெடி தான் தம்பி என்று பயந்து கொண்டே அவரும் சொன்னார்.

இன்னைக்கு என்ன சமைச்சிருக்க என்க,வெள்ளிக்கிழமை என்கவும் அதே சாம்பார் தான இன்னைக்கும் என்க ஆமாம் தம்பி என்றார்.

நல்லா சமைக்கிறங்குறதுக்காக தான் போனால் போகட்டும்னு விடுறோம். நாளைக்கு ஏதாவது கவுச்சி சமைச்சு வை என்று கண்டிப்போடு சொல்லவும் சரிங்க தம்பி என்று பயந்து கொண்டே சொன்னார்.பின்னர் அவனுங்கள் இருவரும் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு போனார்கள்.

ஒரு மணி நேரம் கடந்திருக்க தம்பி வாங்க போகலாம்.எப்படியும் அவங்க மயங்கிருப்பாங்க என்றவாறு வீட்டின் பின்பக்கம் வழியாக போனவர் நான் போய் யாராச்சும் சாப்பிடாம இருக்கிறார்களா இல்லை எல்லாரும் மயங்கிட்டாங்களானு பார்க்கிறேன் என்றவர் தற்செயலாக இருப்பது போல உள்ளே வந்தவர்போல தம்பி சாப்பாடு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று கேட்டுக் கொண்டே சந்தர் வந்து பார்க்க அவர்கள் 10 பேரும் மயங்கி கிடப்பது தெரிந்தது.

தம்பி சீக்கிரம் வாங்க என்று சொல்ல நிலவனும் மாறனும் துப்பாக்கி இருக்குதா என்று பார்த்துக்கொண்டே உள்ளே வந்தனர்.

சீக்கிரம் வாங்க தம்பி யாருக்காச்சும் மயக்கம் தெளிஞ்சுற போகுது. அதுக்குள்ள அந்த பிள்ளையை காப்பாத்துங்கள் என்று சொல்லிக் கொண்டே வேகமாக போனவர் அங்கே வலது பக்கம் இருந்து ரூமை திறக்க அது ஒரு சாதாரண பூஜை அறை போல் இருந்தது.

இது பூஜை அறை தானே என்க, அப்படித்தான் இருக்கும் என்று அங்கிருந்து சாமி போட்டோக்கள் இருக்கும் சுவற்றில் இடது பக்கம் இருக்கும் ஸ்விட்ச் போர்டு பட்டனை ஆன் பண்ண சாமி போட்டோக்கள் இருக்கும் சுவர் விலகியது.

அதற்குள் படிக்கட்டுகள் இருக்க, சீக்கிரம் வாங்க தம்பி என்று அவர் முன்னே வழியை காட்டி செல்ல இருவரும் அதன் உள்ளே செல்ல அதுவோ கீழே சென்றது.வேகமாக போய் அங்கிருந்த பெட்டியை திறந்து விட அதில் கை கால்கள் கட்டப்பட்டு வெரோனிகா மயங்கி கிடந்தாள்.

சீக்கிரம் என்று அவளைத் தூக்கப் போன மாறனோ தனது தம்பி காதலித்த பெண்ணை தான் தொடுவதாக என்று தயங்க, அவனின் தயக்கத்தை புரிந்து நிலவன் தூக்க அவளின் சுவாசம் சீராக இருப்பது தெரிந்தது.

பசியில் தான் மயங்கியிருக்கா போல என்றவன் அந்தப் பெட்டியை பழையபடி பூட்டிவிட்டு இருவரும் பாதாள கதவை சாத்திவிட்டு ஹாலுக்கு வர அவர்கள் இன்னும் மயக்கத்தில் இருப்பது தெரிந்து வேகமாக வெளியேறி வீட்டுக்கு வந்தவர்கள் அங்கிருந்த பெட்டில் படுக்க வைத்து தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தும் மயக்கம் தெளியவில்லை.

சீக்கிரம் ஆம்புலன்ஸிற்கு போன் பண்ணு சைரன் சத்தம் இல்லாமல் வர சொல்லுடா என்று மாறன் சொல்ல,அதேபோல் நிலவன் கால் பண்ண சிறிது நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்து நின்றது.

அக்கம் பக்கத்தில் வீடு எதுவும் இல்லாததால் மற்றவர்களுக்கு அங்கு நடப்பது ஏதும் தெரியாமல் போய்விட்டது.அவளை தூக்கிக்கொண்டு போய் ஆம்புலன்ஸில் படுக்க வைத்தான்.

தம்பி சீக்கிரம் சீக்கிரம் இங்கிருந்து போயிடுங்க,எங்கள் மேல சந்தேகம் வராது நீங்கள் போங்க என்க,ரொம்ப நன்றி சார்.உங்களை அப்புறம் பார்க்கிறோம் என்று சொல்லிவிட்டு அவர்களும் வண்டியை எடுத்துக்கொண்டு ஆம்புலன்ஸ் பின்னாடியே சென்றனர்.

கோத்தகிரியில் இருக்கும் மருத்துவமனையில் அவளை அட்மிட் பண்ண குறைவான பல்சும்,லோ பீபியா இருக்கு அதனால தான் அவங்க மயங்கி இருக்காங்க என்று சொல்லிய டாக்டர் அதற்கான இன்ஜெக்ஷனை போட்டுவிட்டு இவங்க யார் என்று கேட்க இருவரும் போலீஸ் என்றதும் சரி என்று டாக்டர் அங்கிருந்து சென்று விட்டார்.

உடனே தனது ஃபோனை எடுத்த மாறன் விக்டருக்கு கால் பண்ணி உடனடியாக கோத்தகிரிக்கு வர சொல்ல தம்பி என் பொண்ணு கிடைச்சுட்டாளா என்கவும் ஆமா சார் எங்களோட சாலா பேலஸ்க்கு வந்துடுங்க என்றான்.

இரண்டு மணி நேரம் கடந்துருக்க மயக்கம் தெளிந்து கண்களை திறந்தவளோ தான் ஹாஸ்பிடலில் படுத்துருப்பதை பார்த்து பதறி எழுந்தவள் யார் நம்மளை காப்பாத்திருப்பா என்று யோசனையோடு கதவை திறக்க அந்த நேரம் மாறனும் நிலவனும் உள்ளே வந்தனர்.

இருவரையும் பார்த்தவள் அண்ணா நீங்களா என்று அதிர, எங்களை உனக்கு தெரியுமா என்று மாறன் கேட்க தெரியும் ணா.நீலு உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்கிறார் போட்டோவையும் எனக்கு காமிச்சிருக்கிறார் என்றாள்.

இதில் புர்கா இருக்கு என்று அவளிடம் ஒரு கவரை நீட்ட,அவளும் அதை வாங்கி போட்டுக் கொள்ளவும் இருவரும் அவளோடு வெளியே வந்தனர்.

நான் வண்டியை எடுத்துட்டு போறேன். நீ கார்ல கூப்பிட்டு வந்துடுடா என்று சொல்லிக்கொண்டு மாறன் புல்லட்டில் செல்ல வாடகை காரில் ஏறி நிலவனும் வெரோனிகாவும் சாலா பேலஸ் நோக்கி சென்றனர்.

பெட்டில் படுத்திருந்த பியூலாவிடம் நம்ம பொண்ணு கிடைச்சுட்டா சீக்கிரம் வா நம்ப கோயம்புத்தூர் கிளம்பணும் என்க,நிஜமாவா என்று அவரும் பதறியடித்து எழுந்து கேட்க ஆமாம் பியூலா என்றார்.

சீக்கிரம் என்று இருவரும் தயாராகி மீனம்பாக்கம் ஏர்போர்ட்டுக்கு வந்தவர்கள் அங்கிருந்து கோயம்புத்தூருக்கு வந்து கோயம்புத்தூர் ஏர்போர்ட்டிலிருந்தே கார் எடுத்துக்கொண்டு கோத்தகரியில் இருக்கும் சாலா எஸ்டேட்டை நோக்கி வந்தார்கள்.

மாறன் அவர்களுக்காக காத்திருக்க காரில் இருந்து நிலவனும் புர்கா போட்ட யாரோ ஒரு பெண்ணும் இறங்கி வருவதை பார்த்த சாலா பாட்டி என்னவென்று யோசனையோடு இருந்தார்.

அவளை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தவன் பாட்டி இப்போதைக்கு இந்த பொண்ணு இங்க இருக்கிற விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் என்க சரிப்பா.ஆமாம் யார் இந்த பொண்ணு என்கவும் எல்லாம் உனக்கு ரொம்ப வேண்டியவங்க தான் என்று சொல்லிய மாறன் சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க என்றான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
721
மதிய சாப்பாடு ரெடியா தான் இருக்கு இதோ எடுத்துட்டு வர சொல்றேன் என்று அங்கிருந்து போனவர் கிச்சனில் இருந்த வேலையாளிடம் ஒரு ஆள் சாப்பிடற அளவுக்கு பேக் பண்ண சொன்னார்.

அதே போல அவரும் பேக் பண்ணி கொடுக்க அதை வாங்கிக் கொண்டவர் கெஸ்ட் ரூம் கதவை தட்ட,புர்காவோடு கதவை திறந்தவள் அங்கு சாலா பாட்டி நிற்பதை பார்த்து பாட்டிமா என்று தனது முகத்தை மூடியிருந்த துணியை விலக்க அவளைப் பார்த்தவர் வெரோனிகா என்று அதிர்ந்து போனார்.

ஆமா பாட்டி நானே தான் என்று அவரை அணைத்துக் கொண்டு கதறி அழுதாள்.

எங்கம்மா போன?

என்ன ஆச்சு?

உனக்கு ஏதாவது பிரச்சனையாக இருந்தா எங்க கிட்ட சொல்லிருக்கலாமே என்க,அவளோ எந்த பதிலும் சொல்ல முடியாமல் அழுதாள்.

சரி முதல்ல நீ சாப்பிடு வா என்றவர் அங்கிருந்த தட்டில் சாப்பாட்டை போட்டு கொடுக்க அவளோ வேக வேகமாக அள்ளி சாப்பிட்டாள்.அந்த நேரம் கதவை தட்டிக் கொண்டு நிலவனும் மாறனும் உள்ளே வந்தனர்.

இருவரையும் பார்த்து அவள் எழுந்து நிற்க,சாப்பிடுமா என்ற நிலவன் அப்பாயி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் என்றான். ஹம் சொல்லு கண்ணா என்றார்.

இன்னைக்கு நாள் நல்லா இருக்கா என்க,ஆமா கண்ணா நல்லாருக்கே. முகூர்த்த நாள் அதும் இல்லாமல் பிரதோஷம் வேறு என்க...அப்படியா நீங்க ஒரு முக்கியமான காரியம் பண்ணனுமே என்றான்.

சொல்லு கண்ணா என்ன பண்ணனும் என்க,நிலமாறனுக்கும் இந்த பெண்ணுக்கும் இப்பயே கல்யாணம் நடக்கணும் என்க..என்னப்பா சொல்ற?
நீலுக்கு தான் கவி கூட கல்யாணம் பேசி முடிச்சிருக்கே என்கவும் அது நீங்க பேசினீங்க.நம்ப நீலு விரும்புவது வெரோனிகாவை அதும் இல்லாமல் என நெற்றியைத் தடவியவன் நமது குடும்பத்தோட வாரிசு வெரோனிகா வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கு என்கவும், என்னாஆஆஆ என்று அதிர்ந்து போய் எழுந்தார்.

அவளோ எதுவும் சொல்ல முடியாமல் கீழே குனிந்து கொண்டு அழுதாள்.

அம்மாச்சி என்று பாட்டியின் தோளைத் தொட்ட மாறன் வெரோனிகா கேஸ் விஷயமாதான் நாங்க ரெண்டு பேரும் இங்க வந்தோம்.இதுல நிறைய விஷயம் இருக்கு அதெல்லாம் இப்ப உங்ககிட்ட சொல்ல முடியாது.

நல்ல நேரம் பாருங்கள் நம்ப குழந்தை என்க, பெருமூச்சு விட்டவர் நல்ல நேரத்துக்கு இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு பா என்றார்.

அது போதும் என்கும்போது காலையில் அண்ணன் சொல்லியபோல இரண்டு மாலையோடு வந்த நிலமாறன் அண்ணா என்று கூப்பிடுவது கேட்டது.நீலு வந்துட்டான் வாம்மா என்று அழைத்தது போனார்கள்.

எல்லாரும் இங்கு வாங்க என்று வேலையாட்களையும் மாறன் கூப்பிட நிலமாறனோ என்ன அண்ணன் இப்படி பண்ணுது என்று யோசனையோடு இருந்தான்.

அப்பொழுது பாட்டியின் பின்னால் வருபவளை பார்த்து வெரோனி என்று அதிர,எதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம் சீக்கிரம் பூஜை அறைக்கு வா என்கவும்,அவனும் அவளைப் பார்த்த சந்தோஷத்தில் கண்ணிலிருந்து வடியும் கண்ணீரோடு அண்ணன் சொல்லியது போல் பூஜை அறைக்கு வந்தான்.

மாலையை கீழே வை என்று சொல்லிவிட்டு பாட்டி சாமிகிட்ட வேண்டி ரெண்டு பேருக்கும் எடுத்து கொடுங்கள் என்க,விதி இப்படித்தான் நடக்கும் அதை யாரால் மாற்ற முடியும் என்று நினைத்தவர் அங்கிருந்த தங்களது குல தெய்வத்திடம் வேண்டியவர் மாலையை எடுத்து பேரனுக்கும் வெரோனிகாவுக்கும் கொடுக்க இருவரும் மாற்றிக் கொண்டனர்.

தாம்பாளத்தில் இருந்த அவர்கள் குடும்பத்தாலியை எடுத்து கட்டச் சொல்ல நிலமாறனும் தனது காதலின் கழுத்தில் சந்தோஷமாக மூன்று முடிச்சு போட்டான்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு தன்னவனை பார்த்தவள் நீலு என்று அடுத்த வார்த்தை பேச முடியாமல் கத்தி கதறினாள்.

இருவருக்கும் தனிமை குடுக்க வேண்டி, நீலு உன் ரூமிற்கு கூட்டிட்டு போ என்று சொல்லிவிட்டு தனது போனை எடுத்துக் கொண்டு வேதநந்தனுக்கு கால் பண்ணிய மாறன் நடந்த விஷயங்கள் எல்லாத்தையும் சொல்லவும்,ஹம் என்றவர் இந்த கேஸில் யாரை அரெஸ்ட் பண்ணனுமோ பண்ண சொல்லி அவரும் உத்தரவிட்டவர் சட்டப்படி அதற்கான உத்தரவு கடிதத்தையும் அவனுக்கு மெயில் பண்ணினார்.

மேலே இருக்கும் தனது அறைக்குள் வந்த நிலமாறன் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு வெரோனி என்று அவளை இறுக்கமாக அணைத்து கொண்டவன் எண்ணற்ற முத்தங்களை அவளுக்கு பரிசாக கொடுத்தான்.

என்ன விட்டுட்டு நீ எங்கடி போயிருந்த?.

நான் இனிமே குடிக்க மாட்டேன் டி என்ன மன்னிச்சிடுடி நீ எது சொன்னாலும் கேட்கிறேன்.நீ இல்லாமல் இத்தனை நாளும் செத்துக்கிட்டு இருந்தேன்டி என்க,நீலு என்னை யாரோ அடைத்து வைத்திருந்தார்கள் என்று கதறிக்கொண்டு சொன்னாள்.

என்ன சொல்ற டி?

யாரு உன்னை இப்படி பண்ணியது என்று கோவமாக கேட்க,கவியும் அவளுடைய தாத்தாவும் தான் என்றாள்.
அப்படியா என்று நிலமாறன் அதிரும்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

மனைவியின் கண்ணை துடைத்துவிட்டு கதவை போய் திறக்க அங்கே விக்டரும் பியூலாவும் நின்றனர்.அவர்கள் யார் என்று தெரியாததால் யோசனையோடு பார்க்க என்னோட பொண்ணு வெரோனிகா என்று பரிதவிப்போடு பியூலா சொல்லவும் தன் தாயின் குரலை கேட்டவள் அம்மா என்றாள்.

அதைக் கேட்டு வேகமாக உள்ளே வர தனது தாயைப் பார்த்தவளோ அம்மா என்று கட்டிக்கொண்டு அழ..அந்த இடமே உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்தது.

என் கண்ணே நீ எங்க போயிட்ட?
அப்பா அம்மா மேல ஏதாச்சு கோவமா என்று இருவரும் கேட்டு அழ, இல்லை மா என்ன மன்னிச்சிடுங்க.நான் தான் தப்பு பண்ணிட்டேன் என்று அவளும் அழுதாள்.

அப்பொழுது உள்ளே வந்த நிலவனும் மாறனும் தொண்டையைக் கணக்க அழுது கொண்டிருந்தவர்கள் நிமிர விக்டர் போய் அவர்கள் இருவரின் கைய பிடித்துக் கொண்டு சொன்ன போல என் பொண்ணை கண்டு பிடிச்சு கொடுத்துட்டீங்கள் தம்பி.என் உசுரு இருக்கிற வரைக்கும் உங்களை மறக்க மாட்டேன் தம்பி என்று அழுதார்.

இது எங்களோட கடமை சார்.அது இல்லாமல் இப்பொழுது வெரோனிகா எங்க வீட்டோட மருமகள் என்கவும் என்ன தம்பி சொல்றீங்க என்று இருவரும் அதிர்ந்தனர்.

என் தம்பியும் உங்க பொண்ணும் காதலிக்கிறார்கள்.கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தான் கல்யாணம் ஆயிடுச்சு சூழ்நிலை அப்படி...அதாவது உங்கள் பொண்ணு கன்சிவ்வா இருக்கிறாள் என்கவும் வேகமாக திரும்பிய பியூலா மகளின் கன்னத்தில் பளார் பளாரென்று அறைந்தார்.

அய்யோ பியூலா என்ன பண்ணுற என்ற விக்டர் மனைவியின் கையை பிடித்து தடுக்க,பெற்றோர்களை பார்க்க முடியாமல் அவமானத்தில் கீழே குனிந்து கொண்டாள்.

இதுல யாரையும் தப்பு சொல்லி ஒன்னும் ஆகபோறது இல்லை.இப்படி தான் நடக்கணும்னு இருக்கு இதை நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியனுமா என்று நிலவன் கேட்டான்.

தனது மகளுக்கு நல்ல குடும்பத்தில் வாழ்க்கை கிடைத்திருக்கிறதை நினைத்து சந்தோஷப்பட்டவர்கள் பின்னர் அவர்கள் திருமணத்தை ஏற்றுக் கொண்டனர்.

வெல் என்ற மாறன்,என்ன நடந்துச்சுன்னு இப்ப நீ தான் சொல்லணும்?

எப்படி நீ அவங்க கையில சிக்கின?
ஏன் சென்னைக்கு வரேன்னு சொல்லிட்டு பெங்களூர் பிளைட்ல வந்த? இதற்கான எல்லா கேள்விக்கும் நீ தான் பதில் சொல்லணும் வெரோனிகா என்று கடுமையாக மாறன் கேட்க...

உங்களுக்கு நான் சொல்றேணா,அதற்கு முன்பு ஆர்த்தியை காப்பாற்றணும் நீலு என்க,ஆர்த்தி இறந்து போய் திரி மந்த் ஆகுது என்றான்.

என்னாஆஆஆ...

அவளை கொன்னுட்டாங்களா என்று வெரோனிகா அதிர...இதை கேட்ட நிலமாறன் ஏய் அவ கார் ஆக்ஸிடன்டில் இறந்துட்டாளென்றான்.

இல்லை....என்று கத்தினாள்.

வெரோனி...

என்னாச்சு??

எதுக்கு இப்படி கத்துற என்று நிலமாறன் கேட்க நீலு நீலு ஆர்த்திக்கு ஆக்சிடெண்டாக வாய்ப்பே கிடையாது. என்னை எங்கையாவது தப்பிச்சு போக சொல்லிட்டு அவள் நடந்து தானே போனாள்.பின்ன எப்படி அவளுக்கு ஆக்சிடென்ட் நடந்திருக்கும் என்றாள்...

ஆஆஆஆ....
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
721
என்று கத்திய மாறன்... என்ன நடந்தது என்று ஒழுங்காக முதல்ல சொல்லித் தொலை.உன்னுடைய கேஸ் எந்த அளவுக்கு இழுத்துட்டு போகுது தெரியுமா என்று பல்லை கடித்தான்.

மாறா கொஞ்சம் அமைதியாக இருடா என்று நிலவன்,வெரோனிகா எதுக்கு இப்படி கத்துற?

நீ எதுவும் சொல்லாமல் உன் இஷ்டத்திற்கு கத்திட்டு இருந்தால் சட்ட விரோதமாக இந்தியாவில் தங்கியிருக்கனு உள்ள தூக்கி வச்சிடுவேன்.

உன்னுடைய கேஸ் தான் இதுவரை எங்க வாழ்க்கையில் தலைவலியாக வந்ததே.... முதல்ல என்ன நடந்துச்சுன்னு நீ சொல்லப் போறியா இல்ல உன்னை ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரிக்கணுமா என்று ஒரு போலீஸ்காரனாக கண்டிப்போடு கேட்க..

நிலவன் தோரணையே நிச்சயமாக தூக்கி லாக்கப்பில் போடுவான் என்பதை வெரோனிகாவிற்கு சொல்ல அதில் கொஞ்சம் பயம் வந்தது.

பின்னர் அவளது அப்பா அம்மாவை சங்கடமாக பார்க்க,இவ்வளவு தூரம் இறங்கி வந்து உன்னை கண்டு பிடித்தவர்களுக்கு நீ யாரென்ற ரகசியம் தெரியாமலா இருக்குமென விக்டர் கோபமாக கேட்க,குற்ற உணர்ச்சியுடன் அவரை பார்த்தாள்.

நீலு என்று பல்லை கடித்த மாறன் மரியாதையா உன் பொண்டாட்டியை நடந்தது என்னன்னு சொல்லி தொலைய சொல்லு.என் பொறுமைக்கும் ஒரு அளவிருக்கு அப்புறம் நான் போலீஸ்காரனா விசாரிக்கிற போல் ஆயிடும் அந்த அளவுக்கு போக வேண்டாம் என்று நினைக்கிறேன் என்றான்.

தனது அண்ணனின் கோபத்தை பற்றி நன்கு தெரிந்த நிலமாறன் மனைவியின் அருகில் போயிட்டு ப்ளீஸ் வெரோனி உனக்கு என்ன தெரியுமா சொல்லு ரொம்ப சீன் கிரியேட் பண்ணாத எனக்கே எரிச்சலா வருது என்று தன்னவளை முறைத்துப் பார்த்தான்.

சரி நான் சொல்கிறேன் என்றாள்..

அதாவது அந்த டைரியை படிச்சிட்டு எனக்கு என்னை பெத்த அம்மாவ பாக்கணும்னு ஒரு எண்ணம் இருந்துச்சு பிறகு நான் மறுநாள் அந்த டைரி எடுத்துட்டு போய் ஃபுல்லா ஜெராக்ஸ் எடுத்துட்டு ரெண்டு நாள் கழிச்சு அப்பா கிட்ட கொண்டு வந்து கொடுத்துட்டேன்.

அதன் பிறகு வேலன் எஸ்டேட் பற்றி நான் நெட்ல செக் பண்ணும் போது தான் ஆர்த்தி கவி இவர்களைப் பற்றி தெரிஞ்சது என்னமோ தெரியல எனக்கு ஆர்த்தியை பாக்கமலே புடிச்சுருச்சு.

பேஸ்புக்ல போய் அவள் இருக்கிறாளானு செக் பண்ணி பார்க்க ஆர்த்திக்கும் அதில் அக்கவுன்ட் இருப்பது தெரிஞ்சது. உடனே நான் பிரண்ட் ரெக்யூஸ்ட் கொடுத்தேன் அவளும் அக்சப்ட் பண்ணிக்கிட்டாள்.

கொஞ்ச நாளில் நானும் அவளும் க்ளோஸ் பிரண்ட் ஆயிட்டோம் அப்ப பேமிலி பத்தி பேசும்போது தான் அவ வளர்ப்பு பொண்ணுன்னு சொன்னாள்.

ஆனா நான் ஜெர்மனியில் இருக்கிற விஷயத்தை அவள்கிட்ட சொல்லல. அந்த சதாசிவத்துக்கிட்ட எங்க அம்மாவ பத்தி தெரிஞ்சுக்கணும்னாக்கா அதுக்கு நேர்ல போய் தான் ஆகணும் அப்ப அங்க போறதுக்கு ஏதாச்சும் எனக்கு வேலை வேணுமே நினைச்சு பக்கத்துல எதாவது வேலை கிடைக்குமா?நான் ஆசிரமத்தில் இருக்கிறதா சொன்னேன்.

அப்பதான் அவ சொன்னா எங்களுக்கு பக்கத்து எஸ்டேடான சாலா எஸ்டேட்ல செக்கரட்டரி தேவைப்படுறாங்கனு...

நான் இந்தியா வரதுக்கு முடிவு பண்ணி அப்பாகிட்ட சொன்னேன் ஆனா அப்பாவுக்கு தெரியாம நான் ஜெர்மனியில் இருந்து என் பிரண்டு மூலமா பெங்களூருக்கு டிக்கெட் எடுத்து தனியா வைத்திருந்தேன்.

அப்பாவும் என்ன ஏர்போர்ட்ல விட்டுட்டு போயிட்டாங்க அதுக்கு அப்புறம் நான் பெங்களூர் வர பிளைட்ல ஏறி வந்தேன்.

அங்கிருந்து ஆர்த்திக்கு லேண்ட்லைன் நம்பர் இருந்து கால் பண்ணும் போது தான் அவ கோத்தகிரிக்கு வர சொல்லி அட்ரஸ் சொன்னா நானும் கோத்தகிரிக்கு வந்த பிறகு அவ என்னை மீட் பண்ண வரும்போது அந்த நியூஸ் பேப்பரை கொடுத்தாள்.

அதுபடியே நானும் அங்கு போனேன் இன்டர்வியூல செலக்ட் ஆயிட்டேன் கெஸ்ட்ஹவுஸை பாட்டி எனக்கு கொடுத்தாங்க.

எப்படி அந்த சதாசிவத்தை மீட் பண்றதுன்னு எனக்கு பலத்த யோசனை. ஏன்னா அவர் எப்பவுமே பிசினஸ் விஷயமா வெளியில் தான் இருப்பாருன்னு ஆர்த்தி சொல்லிருக்கிறாள்.

நீலுவை பார்த்த உடனே பிடிச்சிருச்சு இரண்டு பேரும் லவ் பண்ணினோம். அப்பா அம்மா கிட்ட சொல்லி முறைப்படி கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருந்த நேரத்துல தான்,கம்பெனி மீட்டிங்க்காக நானும் நீலும் சென்னை போக வேண்டியது ஆயிடுச்சு.

சென்னையில் மீட்டிங் முடிச்சுட்டு நாங்க வந்துட்டோம் ஒரு மாசம் போயிடுச்சு அப்பதான் திடீர்னு நான் மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டேன் அப்போ ஆர்த்தியும் நானும் பார்க்குக்கு போயிருந்தோம்.

அவதான் தண்ணி தெளிச்சு எழுப்பிட்டு என்ன என்ன ஆச்சுன்னு கேட்கும் போது மார்னிங் சாப்பிடல அப்படின்னா அவள்ட்ட சொல்லிட்டு அந்த இடத்தில் வெரோனிகா தயங்க,மாறனோ,சரி ஓகே அடுத்தது என்ன ஆச்சு என்றான்.

வீட்டுக்கு வந்துட்டு எப்பவும் சந்திக்கிற அந்த பார்க்குக்கு வர சொல்லி நீலுக்கு போன் பண்ணிட்டு,நான் வீட்ல இருந்து போயிட்டு இருக்கும்போது தான் ஆர்த்தி எனக்கு போன் பண்ணுனா.

என்னனு கேக்கும்போது இங்கே இருந்து எப்படியாவது நீ தப்பிச்சு போயிடு உன்னை கொலை பண்றதுக்காக தாத்தாவும் கவியும் ஆள் ஏற்பாடு பண்ணி இருக்காங்க இதை நான் அவங்களுக்கு தெரியாம ஓட்டு கேட்டுட்டேன்.

இந்த விஷயம் தெரிஞ்சாக்க என்னையும் விட மாட்டாங்க நீ தப்பிச்சு போயிடு நீங்கள் காதலிக்கிற விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சுருச்சுன்னு சொன்னாள்.

நான் பாதி தூரம் வந்துட்டேன் திரும்ப நான் வீட்டுக்கு வரும்போது ஒரு கார் ஒன்னு வேகமாக வந்து என் பக்கத்துல நின்னுது பயந்து போய் நான் விலக அந்த கார்ல இருந்து இறங்கி வந்த இரண்டு அடியாட்கள் என்ன புடிச்சி அந்த காருக்குள்ள தள்ளி விட..அங்கு உள்ளார இருந்த வேலன் என் முகத்தில் ஒரு கட்சிப் வைக்க கொஞ்ச நேரத்துல நான் மயங்கிட்டேன்.

அதன் பிறகு நான் கண் முழிச்சு பார்க்கும்போது ஏதோ ஒரு அறையில் இருக்க போல தெரிந்தது எனக்கு முன்னாடி கவியும் அவங்க தாத்தாவும் உக்காந்து இருந்தாங்க அவங்க கண்ணுல அவ்ளோ கொலை வெறி வந்துச்சு.

அவ வேகமா வந்து என் கன்னத்துல மாறிமாறி அறைஞ்சவள் அந்த எஸ்டேட்டோட ஓனர் நான் தான்.நிலமாறனை எப்படி நீ காதலிக்கலாம்?

நீ உயிரோட இருந்தா தானே எனக்கு இடைஞ்சல்னு துப்பாக்கி எடுத்து என்ன ஷூட் பண்ண வரும் போது அந்த வேலன் தான் வேண்டாம் இவளை இங்கேயே அடைச்சு வைக்கலாம் உங்க கல்யாணம் முடிஞ்ச பிறகு வெளியில விடலாம் என்று சொல்லிட்டு போயிட்டாரு.

அதன் பிறகு ஒருவேளை சாப்பாடு மட்டும் தான் எனக்கு கொடுத்துட்டு அங்கு பூட்டி வச்சிருந்தாங்க பகல்ல மட்டும் அந்த அறையைத் திறந்து வைத்திருப்பார்கள் இருட்டுல அந்த பெட்டிக்குள்ள வச்சி பூட்டிருவாங்க என்று அழுதுகொண்டே அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

அப்போ அந்த சதாசிவத்தை நீ மீட் பண்ணவில்லையா என்று மாறன் கேட்க இல்லை..அந்த தூரோகியை இதுவரைக்கும் நான் பார்க்கவே இல்லையென்றாள்.

அவர்களோடு அங்கு கண்ணுக்கு தெரியாமல் இருந்த கருப்பு உருவமும் இதைக் கேட்டு கண்ணீர் விட்டது..

நல்ல வேளை நீ உயிரோடு இருக்கியே என்று வெரேனிகாவின் கன்னத்தை தொட அழுது கொண்டிருந்தவளோ ஆர்த்தி என்னை காப்பாற்ற போய் உன் உயிர் போயிடுச்சே... மன்னிச்சிடு டி என்று கதறினாள்.

விடமாட்டேன்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top