• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
634
விடிந்தால் 16 ஆம் நாள் காரியமென்பதால் அதற்காக ஆளுக்கொரு வேலையை பார்த்தனர்.

நேரமும் கடந்து செல்ல இரவு எத்தனை பேருக்கு சமைக்க வேண்டும் என்று தவசிப்பிள்ளை கேட்க அதற்கு பதில் சொல்லும் போது வாசலில் ஆட்டோ வந்து நிற்க அதிலிருந்து மருது அவன் மனைவி குழந்தையோடு இறங்கினான்.

தாமரை போய் குழந்தையை தூக்க அவளும் ம்மா என்று தாவினாள்.
வா செல்லா என்று கையை பிடிக்க..
நம்ப வீட்டில் எதுக்கு கா வரவேற்பு மற்றவர்களை கவனி என்றவள் ஆட்டோவிலிருந்த பேகை எடுத்துக் கொண்டு உள்ளே போனவள் இரண்டு மாமியாரையும் நலம் விசாரித்து விட்டு கலா பாட்டியிடம் போய் கையை பிடிக்க..
அவரோ மகன் மருமகளை நினைத்து கலங்கினார்.

ஒரு வழியாக கலா பாட்டியை தேற்றினாள்.பின்னர் உறவினர்களும் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.

முதல் தூக்கம் முடிந்ததும் பந்தி பரிமாறினர்.

நேரமும் கடந்து செல்ல தாமரையோ முற்றத்தில் இருக்கும் கம்பிகளின் இடைவெளியில் தெரியும் இருண்ட வானத்தை பார்த்துக் கொண்டிருக்க, மற்றவர்களோ அங்கங்கே படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்

புரண்டு படுத்த மருதுவோ தற்செயலாக பார்க்க தாமரை மட்டும் மர தூணின் மேல் சாய்ந்து உட்கார்ந்திருப்பது தெரிய இவள் தூங்காம என்ன பண்றாள்?ஒரு வேளை உட்கார்ந்து கொண்டே தூங்குறாளா என்று முணவியவன் எழுந்து அவளிடம் வந்தவன் ஏய் தாமரை தூங்காம என்னடி பண்ற என்க...

திடிரென்று கேட்கும் குரலால் அதிர்ந்து திரும்பியவள் நீ தூங்கலையா என்கவும் ம்ம் வேண்டுதலை என்றவன் அவளின் பக்கத்தில் சிறிது இடைவெளி விட்டு உட்கார்ந்து கொண்டு என்ன பிரச்சனை?

ஆளே வித்யாசமா இருக்க?

இல்லை அது இது னு மழுப்பாதே என்று கோவமாக மருது சொல்ல...

நண்பனை பார்த்து விரக்தியாக சிரித்தவள் பின்னர் நடந்ததையெல்லாம் சொல்ல.. மருதுவோடு அங்கு படுத்திருந்த சீதா மற்றும் பெருமாளும் அதையெல்லாம் கேட்டு அதிர்ந்தனர்.

சொல்லி முடித்தவளின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோட, வந்த ஆத்திரத்தை கையை மடிக்கி போக்கியவன்,இதுக்கு தான் சொல்வாங்க விளையாட்டு வினையமாகும் ஜாக்கிரதைனு..

சரி விடு..

ஏதோ ஒரு கோவத்தில் பேசிட்டார் டி.மனசறிந்து சொல்ல வழியில்லை என்க.. நீயும் அதே இனமாச்சே.என்றைக்காவது செல்லா இப்படி உன்னிடம் சொல்லி காட்டிருக்காளா என்க,மருதுவோ இல்லை என்று தலையசைத்தான்

ஏய் தாமரை...

இதையெல்லாம் சீரியஸா எடுக்காதே .

கதிர் உன் மேல உயிரையே வச்சிருக்கார் டி அது உனக்கு தெரியலையா?.யோசிக்காமல் பேசிட்டார் அதை விட்டு தள்ளு.. ஏன் இப்படி பேசுனனு சண்டை போடுறதை விட்டு குடி மூழ்கின போல இருக்க..
ஒழுங்கா வந்து படு டி.. வா என்று மருது எழ தாமரையோ எதுவும் சொல்லாமல் அங்கு தூங்கிக் கொண்டிருந்த தனது அத்தையின் பக்கத்தில் போய் படுத்துக் கொண்டாள்..

விடியலோ சேவலின் கூவலோடு தொடங்கியது..

ஒரு பக்கம் காலை டிபனுக்காக சமையல் வேலை ஆரம்பமானது.
பண்டாரம் வந்ததும் பூஜைக்கு ஆயத்தம் பண்ண அவர் கேட்பதை செல்லா எடுத்து கொடுத்தாள். பின்னர் அதற்கான சங்குகள் முடிந்தது.

மதிய உணவு பரிமாற வந்திருந்த உறவினர்கள் மற்றும் ஊர்காரர்கள் கையில் கிடைத்த பணத்தை மொய் வைத்து சாப்பிட்டு சென்றனர்.

எல்லாம் முடிய மாலையானது.

சரி நாம கிளம்பளாமா டி என தாமரையிடம் கதிர் கேட்க, அங்கிருந்த வீட்டினரை பார்த்தவள் மாமா..என் தம்பிக்கு ஒருத்தி வரும் வரை நான் இங்கு தான் இருக்க போறேன் என்றாள்.

மருமகள் இதை தான் பண்ணுவாள் என்பது இரவு மருதுவிடம் அவள் பேசியதை வைத்தே பெருமாள் மற்றும் சீதாவிற்கு புரிந்து விட்டது.

தாமரை பேசியதை கேட்ட வேதா, என்ன பேசுற?அதான் நான் இருக்கேனே நீ போய் புருஷன் வீட்டில் வாழும் வழியை பாருயென மருமகளை முறைத்தார்.

ஏன் அத்தம்மா உங்களுக்கு இருக்கிற அதே பொறுப்பு உரிமையும் எனக்கும் இந்த வீட்ல இருக்கு தானே என்கவும் அதற்கு அவரால் எதுவும் பதில் சொல்ல முடியவில்லை.இருந்தாலும் நீ போய் அங்கே இரு நான் இருக்கேன் இல்ல, ஏன் இந்த அத்தையால எதுவும் பண்ண முடியாதா என்க...

எத்தனை காலம் தான் கஷ்டப்பட்டுக்கிட்டே இருக்க போறீங்க??நீங்க உக்காருங்க பொறுப்பை நான் எடுத்துக்கிறேன் என்றாள்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கதிருக்கோ மனைவியின் மேல் ஆத்திரம் வந்தது.ஏதோ 16 நாள் வரைக்கும் இவ அப்பா வீட்டுல இருந்துட்டு வரட்டும்னு நினைச்சா இவ என்ன தம்பி கல்யாணம் வரைக்கும் இங்கே இருக்கிறேன் என்று சொல்கிறாள்? யாரை கேட்டுட்டு இந்த முடிவு எடுத்தாள் என்று மனைவியை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது, அக்கா நீ போய் உன் குடும்பத்தை பாரு. அத்தை நீங்க நீலகிரிக்கு போங்க தாத்தா பாட்டியை என்னால பாத்துக்க முடியும்.அதற்கான தெம்பு எனக்கு இருக்கிறது என்று சிவா சொல்ல..டேய் நீ சும்மா இருடா உனக்கு என்னடா தெரியும் என்று அவனை தாமரையும் வேதாவும் அதட்டினார்கள்.

மாமா தாத்தா அம்மாச்சி என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை என்று தாமரை உறுதியாக சொல்லவும் தாமரை என்று பல்லை கடித்த கதிர் ரூமுக்கு வா என்றான்.

அத்தனை பேர்களுக்கு முன்னாடியே என்னால் வர முடியாது என்கவும், உன்னை வாடினு சொன்னேன் என்று பல்லை கடிக்க, என்னால முடியாதுன்னு சொல்லிட்டேன் இப்ப என்ன பண்ண போறீங்க என்று எதிர்த்து நின்றாள்.

என்னடி வாய் ரொம்ப நீளுது.அடிச்சேன் பல்லெல்லாம் உடைஞ்சிடும் என்க..

கதிர் என்று கத்திய பெருமாள் ஒழுங்கு மரியாதை வீட்டுக்கு போ நான் வந்து பேசுறேன் என்றார்.தந்தையின் கடுமையான குரலைக் கேட்டவன் எதுவும் சொல்ல முடியாமல் அங்கிருந்து சென்றான்.

இங்க பாரு தாமரை உனக்கு எந்த அளவுக்கு இந்த குடும்பத்து மேல அக்கறை இருக்கோ அதே அக்கறை எங்களுக்கும் இருக்கு.உனக்கு அம்மா என்றால் கவிதா என் கூட பிறந்தது.
ஒரு விதத்துல நீ சொல்றது வாஸ்தவம் தான் சிவாவுக்கு ஒரு குடும்பம் வேணும் அவளுக்குன்னு ஒருத்தி வந்த பிறகு உன் இடத்துக்கு நீ வந்து இருப்பதே மரியாதை சொல்றது புரியும்னு நினைக்கிறேன் என்க.

ம்ம் மாமா என்று தலையசைத்தாள்.

பின்னர் அவர்கள் வீட்டிற்கு சென்று விட ஏன் தாமரை உனக்கும் கதிருக்கும் ஏதாவது பிரச்சனையா என்று வேதா கேட்க அய்யோ அத்தம்மா ஏன் இப்படி இருக்கீங்க?நான் ஏன் மாமா கூட சண்டை போட போறேன் என்றாள்.

இத்தனை பேருக்கு முன்னாடி இப்படி பேசுகிறியே அதான் என்கவும்,நம்ம வீட்டில் இப்ப என்ன நடந்திருக்கு அத பத்தி யோசிக்கும். மற்றபடி எங்களுக்குள்ள ஒன்னும் பிரச்சனை இல்லை என்று சிரித்துக் கொண்டே சொல்லவும் மருமகளின் முகத்தை வைத்து அவரால் எதுவும் கண்டுபிடிக்கவில்லை..

எவ்வளவு கொழுப்ப பாரு இவளுக்கு..எல்லாருக்கும் முன்னாடி இப்படி எடுத்தெரிஞ்சு பேசிட்டு இருக்குறாள்? வீட்டுக்கு வாடி உன்ன கவனிச்சிக்கிறேன் என்று புலம்பிய கதிரோ குறுக்கும் நெடுக்குமாக முற்றத்தில் நடந்து கொண்டிருக்கு மற்றவர்களும் வீட்டுக்கு வந்தனர்.

அப்பொழுது வேகமாக வந்த பெருமாள் மகனின் கன்னத்தில் பளார் பளாரென்று அறைந்தார்.இதை எதிர்பார்த்த சீதாவைத் தவிர மற்றவர்களோ அதிர்ந்து போனார்கள்.

முத்துவோ அண்ணா என்ன பண்ற என்று வேகமாக வந்து பெருமாளின் கையைப் பிடித்து சத்தம் போட..

தோளுக்கு மேல வளந்த புள்ளைனா அப்படியே கண்டுக்காம போய்டுவேன் நினைச்சுட்டு இருக்கியா?

தோலை உறிச்சிடுவேன்...!

எதற்கு உன் பொண்டாட்டி அவங்க அப்பா வீட்ல தங்கி இருக்குன்னு முதல்ல தெரியுமா டா??என்னென்ன வார்த்தை எல்லாம் அந்த புள்ள கிட்ட பேசி இருக்க...

கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகுது உன் அம்மாளுங்க ரெண்டு பேரும் இதுவரைக்கும் எங்களை ஒரு வார்த்தை மத்தவங்க கூட சம்பந்தப்படுத்தி பேசி இருப்பாங்களா இல்ல கேட்டு இருப்பாங்களா?.

எத்தனையோ நாள் நடு சாமத்துக்கலாம் வீட்டுக்கு வந்து இருக்கேன் தெரியுமா இதுவரைக்கும் ஒம்மா அப்படி சந்தேகப்பட்டு பேசி இருப்பாளா?ஏன் பல நாளு வேலைக்காக வெளியூர் எல்லாம் போய் தங்கி இருக்கோம் நானும் என் தம்பியும்...எங்க அப்பா அம்மாவும் சரி சீதா-ராதா ஒரு வாரத்தை கூட தவறா நினைச்சது கிடையாது நினைக்க மாட்டாங்க ...

ஆனா நீ என்னென்ன பேசிருக்க என்று மருதுவிடம் தாமரை சொல்லிய விஷயத்தை எல்லாம் பெருமாள் சொல்லவும் அதைக் கேட்டு மற்றவர்களை விட கதிர் தான் பேரதிர்ச்சிக்கு உள்ளானான்.

அப்பா என்னப்பா சொல்றீங்க என்று தடுமாற்றத்தோடு கேட்க இன்னும் என்னடா சொல்லணும் என்று கையை ஓங்கியவர் உண்மையிலேயே அந்த மருது பையன கல்யாணம் பண்ணி இருந்தா தாமரை வாழ்க்கை எனக்கு தெரிஞ்ச ரொம்ப நல்லா இருந்திருக்கும்.தங்கமான பையன் தெரியுமா...

உனக்காக நீ இருக்கும் இடத்திலிருந்து அவ்வளவு நிறுத்தி நிதானமா அந்த பிள்ளைக்கு புத்தி சொன்னான்.அதைக் கேட்டு எங்க ரெண்டு பேருக்கும் ஒண்ணுமே சொல்ல முடியல

தண்ணி குடிக்க சீதாவை எழுப்பி கேட்டேன் எடுத்துட்டு வந்து தந்ததும் குடிச்சிட்டு அப்பதான் ரெண்டு பேரும் படுத்தோம்.வினிதா கிட்ட தாமரை பேசிட்டு இருந்ததால தான் சரி என்று நாங்கள் அமைதியாக இருந்தோம் ஆனால் அந்த புள்ள மனசு காயப்பட்டு இருக்குன்னு தெரியலை.பாவத்திலேயே பொல்லாத பாவம் எது தெரியுமா பொண் பாவம் தான்.

கொஞ்ச நாளு அமைதியாக இரு அதுக்குன்னு புள்ள பொண்டாட்டி பாக்காதனு நான் சொல்லல உன் கோபத்தை எல்லாம் சுருட்டிக்கிட்டு இரு மகன்னு கூட பாக்க மாட்டேன் தோல உரிச்சிடுவேன் சொல்லிட்டேன் என்றவாறு வளவன் பக்கம் திரும்பியவர் உனக்கும் தான் சொல்றேன்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
634
உன் அம்மாங்க தாமரைக்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்குறியோ அதே அளவு நிலாவுக்கும் கொடுக்கணும் புரியுதா வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு கண்ண கசக்கினா குடும்பம் நல்லா இருக்காது.

அம்மாடி நிலா உனக்கும் அதே தான் சொல்றேன் குடும்பம் என்றால் ஆயிரம் இருக்கும் அது எல்லாம் நம்ம வீட்டுக்குள்ள தான் பார்த்துக்கணும் புரியுதா.இது நம்ம வீடுன்னு நினைச்சுட்டா உனக்கு எந்த பாகுபாடும் தெரியாது நம்ப வாழ வந்த வீடு நினைச்சா உனக்கு சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் குற்றமா தான் தெரியும்.

நம்மளுடையது கூட்டு குடும்பம் நீயும் தாமரையும் எந்த அளவுக்கு நடந்துக்கறீங்களோ அதை பார்த்துட்டு தான் நிலவனோட பொண்டாட்டியும் நடந்துக்கும்.

புதுசா வர்றவங்களுக்கு நம்ம குடும்பத்தை பத்தி தெரியாது உனக்கு ஓரளவுக்கு சிவா எல்லாத்தையும் சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன் நியாயமான விஷயத்துல வாயை திறந்து கேள்வி கேட்கணும் பெரியவங்க சின்னவங்கறது அடுத்த விஷயம் புரியுதா என்கவும் சரிங்க மாமா என்றாள்.

அடுத்த வாரத்தில் தானே நீ வேலைக்கு போகணும் என்க..ஆமா மாமா என்கவும் வளவா இதுக்கப்புறம் உனக்கு நைட் ஷிப்ட் வேண்டாம் நீ எழுதி கொடுத்துடு பர்ஸ்ட் ஷிப்ட் செகண்ட் பாரு நாளைக்கு பேட்டரியில் பேசிடு புரியுது தானே என்று மகனை பார்க்க,சரிங்க பா என்றான்..

ம்ம் போய் அவங்க வேலையை பாருங்க என்றவாறு மகன் பக்கம் திரும்பியவர் இதுவே கடைசியா இருக்கட்டும் என்க.

ஐயா போதும் விடு என்று பிரகாசம் சொல்ல,பின்ன என்ன பா. ஆம்பளைனா எதுல வீரத்தை காட்டுவது சொல்லு பொம்பளையா நோகடிக்கிறதுக்கா?.சொல்லி புரியவைங்க என்று சொல்லிக்கொண்டு தனது ரூமிற்கு சென்று விட சீதாவும் ராதாவும் அயர்ந்து போய் தரையில் உட்கார்ந்து விட்டனர்.

கதிருக்கோ கேட்ட விஷயத்தில் ரொம்ப அவமானமாக இருந்தது தாமரை இந்த 16 நாட்களாக தன்னிடம் முகம் கொடுத்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதற்கான காரணம் அப்பா அம்மா இறந்து விட்டதால் அந்த கவலையில் இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டிருக்க...தான் பேசிய வார்த்தைகள் தான் என்பது புரிய உடைந்து போய் விட்டான்.

எதுவும் சொல்லாமல் படியில் ஏறி ரூமிற்கு வந்தவன் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு தனது ஃபோனில் இருந்து தாமரைக்கு கால் பண்ண அந்த நம்பர் பிளாக் பண்ணிருப்பதாக சொல்லியது.

உடனே மனைவியை பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மனம் துடிக்க பால்கனி கதவை திறந்து இறங்கியவன் தனது புல்லட்டை எடுத்துக் கொண்டு அத்தை வீட்டை நோக்கி சென்றான்.

அங்கிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது அக்கா உனக்கு மாமாவுக்கும் ஏதாச்சும் பிரச்சனையா மறைக்கிற தானே என்று அல்லி கேட்க..
ஏன் டி இப்பதான் அத்தை கிட்ட சொன்னேன் இல்ல ஒன்னும் இல்லன்னு ஏன் நீயும் இப்படி கேக்குற?

அப்ப நானும் இங்கே வந்துடுறேன் அக்கா. அண்ணன் கல்யாணம் நடக்கிற வரைக்கும் என்கவும்,அல்லிஈஈஈ எனக்கு கோபத்தை முட்டாதே.ஏற்கனவே உன் அக்காகாரி அடம் புடிச்சிருக்கா இப்ப நீயும் வந்திருக்கிறாயா என்று வேதா முறைக்கவும் அத்தை நீங்க ரெண்டு பேரும் இருக்கீங்களே நான் மட்டும் அங்கே என்க..

என்னடி பைத்தியமா நீ?

ஜூலி உடம்பு சரியில்லாதவங்க அவங்களையும் கவனிக்கணும் இல்ல அப்பப்போ நீ வந்துட்டு போ உன்னை யாரு வேண்டாம்னு சொல்ல ஆனால் இங்கே தங்கி இருக்கணும்னு நினைக்காத அது நல்லதுக்கு இல்லை உனக்கு அங்க பொறுப்பு இருக்கு புரியுதா..

ஒழுங்கு மரியாதை நாளைக்கு காலையில் கிளம்பி ஜான் கூட உன் வீட்டுக்கு போற வழிய பாரு.அவங்கவங்க இருக்க வேண்டிய இடத்தில் இருப்பதே மரியாதை என்கவும் சரிங்கத்தை என்று அரை மனதாக தலையசைத்தாள்..

வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வந்த கதிரோ தாமரை தாமரை என்று கூப்பிட்டுக் கொண்டே வர ரூமில் துணி மடித்துக் கொண்டிருந்தவளோ கணவனின் குரலைக் கேட்டு எஃகு போல இறுகிப்போய் நின்றாள்.

கதிரின் பதட்டமான முகத்தை பார்த்த வேதா என்னாச்சு பெரியவனே? ஏதாச்சும் பிரச்சனையா?

ஒனும் இல்லை மா...

உன் மருமகள் எங்கே?

தோ ரூம்ல தான் இருக்கிறா என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்து திண்ணையில் உட்கார்ந்திருக்கும் தாய் தகப்பனோடு உட்கார்ந்து கொள்ள..

குழந்தைகளோ அங்கே ஒரு பக்கம் அல்லியோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்தவாறு மனைவி இருக்கும் ரூமிற்குள் போனவன் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு அங்கே துணி மடித்துக் கொண்டிருப்பவளை பின்பக்கமாக இறுக்கி அணைத்தவன் தெரியாமல் அப்படி பேசிட்டேன் டி..

சத்தியமா மனசறிஞ்சு பேசவே இல்லடி இப்படி பேசின விஷயம் கூட எனக்கு ஞாபகமே இல்லை லட்சுமியோடு நீ தப்பா பேசுனியா அதை சத்தியமா என்னால தாங்கிக்க முடியல..
செல்வி எப்படியோ அதே போல தான் லட்சுமி என் கூட பிறந்தவளாக தான் நினைக்கிறேன்...

என்னையும் அவளையும் இணைச்சு பேசனியா எனக்கு ஒரு மாதிரி கோவம் வந்துடுச்சு மத்தபடி நான் மனசு வந்து அப்படி சொல்லுலடி உன்னை போய் அப்படி சந்தேகப்பட்டு நான் பேசுவேனா?.சொல்லு டி என்கவும் கையில் இருந்த துணியை கட்டில் மேல் எறிந்தவள் தன்னை அணைத்து நிற்பவனை உதறி தள்ளிவிட்டு நின்றாள்..

அவளை பார்க்கவே கையில் வேலாயுதம் மட்டும்தான் இல்லை அவ்வளவு கனல் அவள் கண்ணில் இருந்தது. ..

எதுவும் பேசாமல் அங்கிருந்த வாசலை நோக்கி கையை காட்டியவள் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்...

மனைவியின் செயலை பார்த்தவனுக்கு மனம் ரொம்ப வலித்தது...

தன் முகத்தைக் கூட அவள் பார்க்க விரும்பவில்லை என்பது அவள் வேறு பக்கம் திரும்பி நிற்பதிலே தெரிந்து கொண்டவன் எந்த அளவுக்கு அவள் மனம் காயப்பட்டு இருக்கும் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஏய் தயவு செய்து என்னை மன்னித்துவிடு டி.சத்தியமா உன் மேல நான் சந்தேகப்படல டி எதோ ஒரு இதுல சொல்லிட்டேன் டி.

அவளோ ஆலமரம் போல அசையாமல் அப்படியே நிற்கவும் எவ்வளவு நேரம் கெஞ்சினான் என்று அவனுக்கே தெரியவில்லை.கதவு தட்டும் சத்தம் கேட்டு போய் அவன் கதவை திறக்க அங்கே குழந்தைகள் இருவரும் உள்ளே ஓடி வந்து அப்பா என்று அவன் கால்களை கட்டி கொண்டனர்...

அதன் பின்னர் நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் ஓடியது..காலையில் இங்கு வீட்டு வேலையை முடித்தவள் தறி நெய்வதற்காக அங்கு போய் வேலையை முடித்துவிட்டு வந்துவிடுவாள்.

குழந்தைகள் மட்டும் அங்கேயும் இங்கும் என்று மாறி மாறி தங்கி கொண்டனர். நாட்கள் வாரங்களை தாண்டி மாதங்களாக ஓடியது.முதல் வருட திவசமும் வந்தது.பெற்றவர்களுக்கு திதி கொடுத்தவர்கள் ராமேஸ்வரத்திற்கு சென்று அங்கு உள்ள நீரில் மூழ்கி கோயில் தரிசனம் பண்ணி விட்டு வீட்டிற்கு வந்த பிறகு சிவாவிற்கு பொண்ணு பார்க்கும் வேலையை தாமரை தொடங்கினாள்..

உள்ளூரிலே அவர்கள் சொந்தத்தில் பெண் இருப்பதை தெரிந்து ஒரு நாள் சொந்த பந்தங்களோடு பொண்ணு கேட்டு அவர்கள் வீட்டிற்கு செல்ல அவர்களுக்கும் சிவாவிற்கு கொடுக்க மறுப்பதற்கான எந்த காரணமும் இல்லாததால் சம்மதித்தனர்.பின்னர் துரிதமாக அதற்கான வேலையை ஆரம்பித்தனர்.

இந்த இடைப்பட்ட மாதங்களில் செல்விக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

அல்லி ஏழு மாதம் கர்ப்பமாக இருக்க அவளுக்கும் வளையல் காப்பு பங்க்ஷன் வைத்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்..

ஆனால் மறந்தும் அவள் கதிரை பற்றி யோசிக்கவே இல்லை..

கடந்த ஒரு வருடங்களாக நாள் தவறாமல் மனைவியை வந்து பார்ப்பதும் அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான்.

அவள்தான் பாறையாக இறுகிவிட்டாளே..பிறகு எங்கு இருந்து இலகுவது.இருந்தாலும் அவன் முயற்சியை கைவிடவில்லை இந்த விஷயம் தெரிந்த ஜானும் வேலுவும் நண்பனை சராசரியாக அடித்துவிட்டனர்..

சிவாவின் கல்யாண நாளும் வந்தது..

தெய்வமான பெற்றவர்களின் ஆசிர்வாதத்தோடு சொந்த பந்தங்கள் சூழ அவனின் கல்யாணமும் சிறப்பாக முடிய விருந்து அது இது என்ற ஒரு வாரம் கடந்து சென்றது.

அப்பொழுது வீட்டில் இருந்த தாமரையை பார்த்து வேதா தாமரை உன்னுடைய கடமை முடிஞ்சிருச்சு.இனி நீ போய் உன் புருஷன் வீட்டோட வாழ்கிற வேலையை பாரு என்று கடுமையாக சொல்லவும் வேதாவை பற்றி தெரிந்ததால் தாமரையும் தனது அறைக்குள் சென்றவள் மனமே இல்லாமல் துணிகளை மடித்து வைத்து பேக்கிங் பண்ணினாள்.

அவளையும் குழந்தைகளையும் சிவா கொண்டு வந்து தனது மாமா வீட்டில் விட்டவன் அங்கிருந்த கதிரை பார்த்து நீங்கள் ஏதோ சொல்லி இருக்கீங்க மட்டும் தெரியுது.இல்லன்னா எங்க அக்கா ஒரு வருஷமா பல்லு கடிச்சுக்கிட்டு அந்த வீட்ல இருக்காது.

பிரச்சினை புருஷன் பொண்டாட்டி கூட இருக்கிறது.அதில் நான் தலையிட மாட்டேன் ஆனால் எங்க அக்கா கண்ண கசக்குனாக்க நான் எப்பவும் போல அமைதியா இருப்பேன்னு மட்டும் நினைக்காதீங்க என்று கடுமையாக சொல்லிவிட்டு யாரையும் பார்க்காமல் அங்கிருந்து சென்று விட்டான்..

ஒரு வருடங்களுக்குப் பிறகு வீட்டிற்குள் வந்த மருமகளை பார்த்த சீதாவும் ராதாவும் எதுவும் சொல்லாமல் அவள் கையைப் பிடித்துக் கொள்ள அவளும் அமைதியாக இருந்தாலும் கண்ணீர் மட்டும் வடிந்து ஓடியது.

ராதா போயிட்டு மருமகளுக்கு டீ எடுத்துட்டு வா.அவளுக்கு தான் ரொம்ப பிடிக்குமே என்கவும் இதோ என்று கண்ணை துடைத்துக் கொண்டு சென்றவர் சிறிது நிமிடத்தில் அவளுக்கு பிடித்தமான இஞ்சி டீ எடுத்து வந்து கொடுக்க அவளும் வாங்கி குடித்தாள்..

நேரமும் கடந்து செல்ல இரவு உணவு உணவை முடித்துவிட்டு மேலே ரூமிற்கு போய் தானே ஆகணும்.எவ்வளவு நேரம் தான் கீழையே சுத்தி கொண்டிருப்பது என்கும் நிதர்சனம் புரிந்தது.

தன்னை நிதானம் பண்ணிக்கொண்டு படியிலேறி மேலே வந்தவள் கதவை திறந்து உள்ளே வர அங்கே குழந்தைகள் இருவரும் பெட்டில் தூங்கியது தெரிந்தது...

கதவை சாத்தியவளை இரண்டு வலிமையான கரம் இறுக்கி அணைக்க ஒரு வருடங்களுக்கு பிறகு கணவனின் அணைப்பை உணர்ந்தவர்களுக்கு அழுகை தான் வந்தது.

சத்தம் இன்றி தாமரை தேம்பித் தேம்பி அழுக இன்னும் மனசு இறங்கலையாடி?மன்னித்துவிடுடி..இன்னும் எவ்வளவு தாண்டி கெஞ்ச முடியும் சொல்லு?.சத்தியமா என்னால முடியலடி என்றான்.

இடைப்பட்ட நாட்களில் கதிர் மிகவும் உடைந்து போயிருக்கிறான் என்பது எல்லாரும் சொல்லி அவளும் காதில் கேட்க...ஆனாலும் மனசு மட்டும் ஏனோ இறங்கி வர முரண்டு பிடித்தது.

கணவனின் இறுக்கமான அணைப்பே தன்னை எவ்வளவு அவன் தேடி இருக்கிறான் என்பது அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.எப்படி இருந்தாலும் இனி இதுதானே நமது வாழ்க்கை..இதை விட்டு எங்கே போக முடியும் என்று நிதர்சனம் புரிந்தவள் ஒரு வருடங்களுக்குப் பிறகு வாயை திறந்தவள் போதும் மாமா என்க..

இன்னொரு முறை சொல்லடி..

போதும் மாமா என்றாள்..

இன்னொரு முறை சொல்லுடி...

பிளீஸ் போதும் மாமா என்கும் போதே மனைவியை தன் பக்கம் திருப்பி அவள் உதட்டை சிறை பிடித்தவனோ அங்கிருந்த தரையிலே மனைவியோடு சரிந்தான்..

ஒரு வருடங்களுக்கு பிறகு தற்பொழுது தன்னறையில் தனது ஆளுகையில் இருக்கும் மனைவியை ஆசை தீர முத்தமிட்டு இத்தனை நாளும் இருந்த மனச்சுமையையும் கவலை கண்ணீருக்கெல்லாம் அவளையே மருந்தாக எடுத்துக் கொண்டான்.

நேரமும் கடந்து செல்ல கணவனின் செயல்கள் முரட்டுத்தனமாக இருந்தாலும் அது அத்தனையும் தன் மீதான காதல் தானே என்பதை உணர்ந்தாள்.இருவரும் கூடி கலைத்து படுக்கும்போது கிழக்கே சூரியனும் உதயமாவதற்கு ஆயத்தமானான்...

தொடரும்…
 
Active member
Joined
May 9, 2025
Messages
149
Indha oru varushathulla andha Lakshmi kadha enna achu?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top