• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
627
நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் ஓடியது.லீவ் முடிந்து விட செல்வியும் நிலனும் கல்லூரிக்கு சென்று விட்டனர்.

தாமரையோ அவள் சம்பாதித்த பணத்தை வைத்து சீதாவுக்காக ஓவிய பள்ளி ஒன்றை ஆரம்பிக்க முடிவு பண்ண,அவள் நேரம் அவங்க ஊரிலேயே ஒரு இடம் விலைக்கு வர யாருக்குமே தெரியாமல் தனது தந்தையிடம் மட்டும் சொல்லி அதை வாங்கியவள் அங்கு பில்டிங் கட்ட ஏற்பாடு பண்ணினாள்.

மற்றவர்களுக்கு இது யார் வாங்கியது என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.தெரியாத ஆட்களை வைத்து வேலை நடப்பதால் என்ன அங்கு நடக்கப்போவது என்று யோசனையாகவே இருந்தனர்.

ஒரே மாதத்தில் பில்டிங் முழுமையாக அதன் திறப்பு விழா வரவும் சொந்த பந்தங்களை அழைத்துப் போக அந்த கட்டிடத்திற்கு எங்களை ஏன் மா கூப்பிட்டு போற என்று தாமரையிடம் கேட்டனர்.

பொண்டாட்டி எதோ பண்றாள் என்பது மட்டும் கதிருக்கு புரிந்தது. எல்லாம் காரணமாகத்தான் வாங்க என்று சொல்லி அழைத்து போனவள் பெரியோர்களின் கையில் கத்திரிக்கோலை கொடுத்த தாமரை ரிப்பனை கட் பண்ண சொன்னாள்.

அது போல் பிரகாசம் தாத்தவும் சிவசாமி தாத்தாவும் அவர்கள் மனைவியோடு இணைந்து கட் பண்ணி உள்ளே போக சீதா ஓவியப்பள்ளி என்ற போர்டை பார்த்ததும் சீதாவுக்கு அழுகையே வந்து விட்டது.

மருமகள் இப்படி ஒரு வேலை செய்வாள் என்பதை எதிர் பாக்காதவர் நேராகப் போய் தாமரையை அணைத்துக் கொண்டு கதறி அழ...எதுக்கத்தை அழுறீங்க?உங்களுடைய ஆசை இதுதானே...எந்த வயதில் வேணாலும் நமக்கு தெரிந்த வேலையை செய்யலாம் அது தவறே கிடையாது.

பிள்ளைகள் எல்லாம் உங்ககிட்ட ஓவியம் கத்துக்க ரொம்ப ஆர்வமா இருக்காங்க.ஸ்கூல் போற பிள்ளைகளுக்காக ஈவினிங் கிளாஸ்சும் சின்ன சின்ன பிள்ளைகள் வருவதற்காக பத்து மணிக்கு மேல தான் ஃபர்ஸ்ட் பேட்ச் ஆரம்பிக்க போறோம்.

நீங்க வீட்ல எல்லா வேலையும் முடிச்சிட்டே தாராளமா இதை பார்க்கலாம் என்கவும் தாமரை என்று ராதா போய் மருமகனின் கையைப் பிடித்தவர் உன்னை போல மருமகள் ஒவ்வொரு வீட்டுக்கு வந்தா போதும் மா என்று கண்கலங்கினார்.

உங்களுக்கு ஒன்னு சொல்றேன் கேப்பீங்களா அத்தை என்கவும் சொல்லுதா..மெடிசன் படிக்கணும்னு ஆசைப்பட்டீங்க..வயது போய் விட்டது வேறு ஏதாவது படிக்கிறீங்களா என்க..

தயக்கமாக அங்கிருந்த வீட்டினரை பார்க்க அவங்களை ஏன் பாக்குறீங்க உங்களுக்கு விருப்பம் இருக்கா இல்லையா அத மட்டும் சொல்லுங்க என்றாள்.

நம்ம போயிட்டோம்னா குடும்பத்தை யாரு பார்ப்பது என்று கேட்க உங்களுக்கு அந்த கவலை ஏன்?.
அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்கவும் சரி படிக்கிறேன் என்றார். படிப்பிற்கு வயது தேவை இல்லை அத்தை என்றவள் அவரை ஈவினிங் காலேஜில் படிக்க வைப்பதற்காக அப்ளிகேஷன் போட ராதாவும் அவருக்கு பிடித்த பாடமான பிஎஸ்சி physics எடுத்து படிக்க விரும்பினார்.

தாமரையை நினைத்து கதிருக்கு மட்டுமல்ல சொந்த பந்தங்கள் எல்லாருக்கும் ரொம்ப பெருமையாக இருந்தது.வீட்டிற்கு இதே போல் ஒரு மகளோ இல்லை மருமகள் இருக்க வேண்டும் என்று பொறாமைப்படாதவர்களே அக்கம் பக்கத்தில் இல்லை.

சீதாவோ காலையில் வேலையை முடித்துவிட்டு ஓவிய பள்ளிக்கு வந்துவிடுவார்.வரும்போது இரண்டு பேரப் பிள்ளைகளையும் அழைத்து வந்து விட,தாமரையும் வீட்டு வேலைகளோடு டிசைனிங் வேலையும் பார்த்துக் கொண்டாள். ஆண்களும் அவர்களுக்காக அனுசரித்துப் போக பழகிக் கொண்டார்கள்.

வளவன் நிலா திருமணத்திற்கு இன்னும் ஒரு மாத தான் இருக்கு என்பதால் அதற்கான வேலையில் குடும்பத்தினர் ஆளுக்கு ஒரு வேலையை பிரித்துக் கொண்டனர். நாட்களும் வேகமாக ஓட பந்தல் கால் ஊன்றி நலுங்கும் ஆரம்பமானது.

கதிருக்கு தான் மனைவி மேல் செம கடுப்பாக இருந்தது.கடந்த ஒரு மாதமாகவே கல்யாணத்தை காரணமாக சொல்லிவிட்டு கணவனை கண்டுக்காமல் இருக்க, கல்யாணம் முடியட்டும் அப்புறம் உன்னை பார்த்துக்கிறேன் டி என்று கரவம் கட்டிக் கொண்டிருந்தான்.

பொண் அழைக்கும் நாளும் வர தாமரையும் கதிரும் சில சொந்த பந்தங்கள் ஊர் முக்கியஸ்தர்களோடு தேனூரில் இருக்கும் நிலா வீட்டிற்கு பரிசம் போட புறப்பட்டனர்.

முக்கா மணி நேரம் பயணத்தில் தேனூருக்கு வந்தவர்களை நிலாவின் அப்பா அம்மாவும் வாசலில் நின்று வரவேற்து வீட்டுக்குள் அழைத்துப் போனார்கள்.

இரண்டு ஊர் முக்கியஸ்தர்களின் முன்னிலையில் பரிசம் போட்டுவிட்டு நிலாவை வரவைத்து அவளுக்காக கட்டிக்க எடுத்துட்டு வந்த புடவை மற்ற பொருள்கள் அடங்கிய தாம்பாளத்தை தாமரையும் கதிரும் இணைந்து கொடுக்க அதை நிலாவும் வாங்கிக் கொண்டு உள்ளே போனாள்.

அங்கிருந்த பியூட்டிஷனும் சிறிது நிமிடத்திலேயே புது புடவையை அவளுக்கு கட்டி விட்டு தயார் படுத்த பின்னர் மற்ற சம்பிரதாயங்களும் முடிந்த பிறகு நிலாவை மாப்பிள்ளை வீட்டினரோடு அனுப்ப அவளோ சொந்த பந்தங்களை கட்டிக்கொண்டு கதறி அழுதாள்.பின்னர் ஒரு வழியாக அவளை சமாதானப்படுத்தி அவளை அழைத்துக் கொண்டு சீமகரைக்கு புறப்பட்டார்கள்.

ஏம்மா பொண்ண அழைச்சிட்டு கிளம்பிட்டாங்களாம், இங்கு எல்லாம் ரெடியா இருக்கா என்று பெருமாள் கேட்க எல்லாம் ரெடியா தான் இருக்கு என்றனர்.

மாமா மாமா என்று ரூமில் ரெடியாகி கொண்டிருக்கும்போது செல்வி கூப்பிட, தலை சீவிக் கொண்டிருந்த வேலுவோ என்னடி என்று கேட்க ஒரு மாதிரியா இருக்கு மாமா.வாமிட் வர போல இருக்கு...

கொஞ்சமா தின்னா தானே?.

அப்பன் வீட்டில் விருந்துனு ஆட்டுக்கரிய தொண்டை வரைக்கும் அமுக்கினா வாந்தி வராமல் வேற என்னடி பண்னும் என்று பல்லை கடித்தான்.

கணவன் சொன்னதைக் கேட்டு முறைத்து பார்த்தவள் நீ தானே நல்லா சாப்பிடு சாப்பிடு என்ற...ஏய் ஒல்லிக்குச்சி போல இருக்கேடி கொஞ்சம் தெம்பா இருந்தா தானே புருஷன சமாளிக்கிறதுக்கு சரியா வரும்னு சொன்னேன் என்று மனைவியை பார்த்து கண்ணடித்துக் கொண்டே வேலு சொல்ல...வெட்கமாக இல்லையா என்றாள்.

அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்க போய் கதவை திறக்கவும் என்ன ணா உன் பொண்டாட்டி இன்னுமா சிங்காரிக்கிறாளென்று அல்லி கேட்க, இல்லை டா.ஏதோ வாந்தி வர போல இருக்குன்னு சொல்றா என்க..

அப்படியா...இப்ப தான் அப்பத்தாவுக்கு எலுமிச்சை ஜூஸ் போட்டு கொடுத்து கொஞ்சம் பிரிட்ஜில் எடுத்து வச்சிருக்கேன் ணா.நான் போய் எடுத்துட்டு வரேன் ணா என்று கிச்சனுக்குள் போனவள் ஒரு டம்ளர் லெமன் ஜூஸ் எடுத்துட்டு வந்து செல்வி கிட்ட கொடுக்க அது குடித்த பிறகு அவளுக்கு கொஞ்சம் நல்லா இருப்பது போல் இருக்கவும் பொண்ண அழைச்சிட்டு வந்துட்டு இருக்காங்க வாடி சீக்கிரம் என்க..

இதோ என்ற சொல்லிக்கொண்டு இருவரும் படியில் இறங்கி கீழே வர தூரத்தில் வேட்டு சத்தம் கேட்டது.

நிலாவை அழைத்துக்கொண்டு சீமகரைக்கும் வந்து சேர்ந்தனர். தெருமுனையில் இருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு நடத்து தான் வரணும் என்பது சம்பிரதாயம் இருப்பதால் வேனில் இருந்து எல்லாரும் இறங்கினார்கள் நிலாவோடு அவளின் சொந்த பந்தங்களும் வந்திருந்தனர்.

பின்னர் வேட்டு சத்தம் மேள தாளத்தோடு வர அங்கே வழக்கம் போல் கல்யாண வீட்டில் மணமகளே மணமகளே வா வா என்று பாடல் ஒலித்தது.

சிறிது நிமிடத்தில் வீட்டின் முன்னால் வந்து நிற்க வழக்கமாக செய்யும் சம்பிரதாயங்களை ராதாவும் சீதாவும் செய்துவிட்டு நிலாவை அழைத்துக் கொண்டு பூஜை அறைக்குள் சென்றவர்கள் அங்கிருந்த விளக்கை ஏற்ற சொல்லி சாமி கும்பிட்டனர்.

பின்னர் அவர்கள் தங்குவதற்கான அறையை காட்ட அதில் போய் நிலா வீட்டினர் தங்கி கொண்டனர்.

வளவனோ எப்படியாவது தன்னவளை பார்த்து விடலாம் என்று தவித்துக் கொண்டிருக்க அதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை..

நேரமும் கடந்து செல்ல காலையில் முதல் முகூர்த்தத்திற்கு திருமணம் என்பதால் சீக்கிரம் அவளை படுக்க சொன்னார்கள்.

விடியலும் கிழக்கே உதயமாக எல்லாரும் எழுந்து திருமணத்திற்கு தயாரானார்கள்.வழக்கம்போல் அய்யனார் கோயிலின் முன்பு இருக்கும் பெரிய திடலில் கல்யாண பந்தல் மேடை அமைத்திருக்க சொந்த பந்தங்களும் தயாராகி சென்று வீட..
பியூட்டிஷன் வந்ததும் நிலாவை அலங்கரித்து ஒரு காரில் அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்கள்.

மணமேடையில் ஐயர் வழக்கமாக செய்யும் சடங்குகளை வளவனுக்கு செய்ய அவனும் அதே போல் செய்தவன் அவன் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து முடிக்க அடுத்தது நிலாவை வரவைத்து அவளை அவர் பெற்றோருக்கு பாத பூஜை செய்ய வைத்தனர்.

பின்னர் கூரப்புடவையை கொடுத்து கட்டிட்டு வர சொல்ல சிறிது நிமிடத்தில் அவளை அழைத்துக் கொண்டு தாமரையும் மேடைக்கு வந்தாள்.

தாம்பூளத்தில் இருக்கும் தாலியை சொந்த பந்தங்களிடம் காட்டி ஆசீர்வாதம் வாங்கிட்டு வர சொல்ல அதேபோல் தாமரையும் எடுத்துக் கொண்டு போய் எல்லாரிடமும் காட்டிவிட்டு வந்தாள்.

கெட்டி மேளம் முழங்க சொந்த பந்தங்களின் முன்னிலையில் நிலாவை தனது மனைவியாக மூன்று முடிச்சு போட்டு வளவன் ஏற்றுக் கொண்டான்.

பின்னர் மற்ற செய்முறை சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து நல்ல நேரத்தில் பொண்ணு மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தவர்கள் அங்கேயும் சம்பிரதாயங்களை முடித்துவிட்டு நிலா வீட்டுக்கு சென்றனர்.வளவனுக்கோ அங்கு இருப்பது அன்னீசியாக இருந்தது.

தம்பியை பற்றி தெரிந்ததால் அவனின் புல்லட்டை கதிரும் கொடுத்து அனுப்பி இருந்தான் பின்னர் வெளியில போயிட்டு வரேன் என்று நிலாவின் பெற்றோர்களிடம் சொல்லிக்கொண்டு வண்டியை எடுத்துக் கொண்டு டவுனுக்கு சென்று விட்டான்..

இரவு உணவும் தயாராக அதன் பின்னரே வளவன் வீட்டிற்குள் வர அவனுக்கு நிலாவே பரிமாறினாள். சொந்த பந்தங்கள் பக்கத்தில் இருப்பதால் அவளிடம் எதுவும் அவனால் பேச முடியவில்லை.

பின்னர்...

மாப்பிள்ளை உங்களுக்கு மேல ரூம் இருக்கு அங்க போய் படுத்துக் கொள்ளுங்கள் என்று நிலாவின் அப்பா சொல்ல சரிங்க மாமா என்றவன் தனது ஃபோனை எடுத்துக் கொண்டு விட்டால் போதும்டா சாமி என்று மாடிக்கு சென்று விட்டான்.

குழந்தைகள் இருவரும் தூங்கி விட அவங்க இங்கே இருக்கட்டும் நீ போ தாமரை என்று ராதா சொல்ல,அத்தை நைட்ல எந்திரிச்சு அழுதாங்கன்னா என்ன பண்ணுவீங்க என்றாள்.

ஏம் மா பால் தான் நம்ம கிட்ட எப்பவுமே சூடா இருக்குமே..ராதா போய் பிளாஸ்கில் எடுத்துட்டு வந்து வச்சுக்க நீ போ, உன் அத்தை பார்த்துப்பாளென்று முத்து சொல்ல,சரிங்க மாமா என்று தாமரையும் அங்கிருந்து மேலே வர கட்டில் மேல் உட்கார்ந்திருந்து கதிரோ மனைவியை முறைத்து பார்த்தான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
627
கணவனின் பார்வையை உணர்ந்தவள் கண்டுகொள்ளாமல் கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு கபோர்டை திறந்து நைட்டியை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூமிற்கு போனவள் களைப்பு தீர ஒரு குளியலை போட்ட பிறகுதான் இயல்பாக இருப்பது போல் இருந்தது.

முகத்தை துடைத்துக் கொண்டே வெளியே வந்தவள் அங்கிருந்து கண்ணாடி வழியாக கணவனைப் பார்த்து கதிரின் பார்வை மனைவியின் மேல் தான் இருந்தது.

எதுக்கு இப்படி பிடித்து வைத்த பிள்ளையார் போல உட்கார்ந்திருக்கிறீங்க என்கவும் நான் ஒருத்தன் புருஷன்காரன் இருக்கிறது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா டி?? ...

அங்கே டேபிள் மேல் இலையில் மடித்திருக்கும் பூவை பிரித்து தலையில் வைத்தவள் விளக்கை அணைத்து விட்டு நேராக வந்து கணவனின் கழுத்தை கட்டிக்கொள்ள அதிலேயே கோபதாபத்தை உதறிவிட்டவன் மனைவியை அணைத்துக்கொண்டு மெத்தையில் சரிந்தான்.

நன்கு தூக்கத்தில் இருக்கும்போது திடீரென்று எழுந்த செல்வியோ வேகமாக ரெஸ்ட் ரூமிற்கு போனவள் கடகடவென்று வாமிட் பண்ணிட அந்த சத்தத்தில் தூக்கம் கலைந்த வேலுவும் என்னடி பண்ணுது என்கவும் வாமிட் மாமா...

புரண்டு படுத்து எழுந்தவன் சொம்பில் இருந்த தண்ணீர் குடித்துவிட்டு காலையில் ஹாஸ்பிடல் போகலாமா டி?

வாய் கொப்பளித்துவிட்டு வந்தவள் ஒன்றும் வேண்டாம் மாமா. சாப்பாடு தான் எதுவோ சேரல போல என்று சொல்லியவள் பெட்டில் சாய்ந்து உட்கார...

இரு டி...இஞ்சி மரப்பா இருக்கு எடுத்துட்டு வரேன் என்று கதவை திறந்து கிச்சனிற்கு போனவன் அங்கிருந்த டப்பாவை திறந்து இஞ்சி மரப்பா இருக்குதா என்று தேட அதில் ஒரு பாக்கெட் இருந்தது.

அதில் இரண்டு துண்டை எடுத்துட்டு வந்து செல்வியிடம் கொடுக்க,வாங்கி வாயில் போட்டுக் கொண்டே பெட்டில் படுத்தவளுக்கு ஏன் ஒரு வாரமாக இப்படி இருக்கு என்று யோசித்தவளுக்கு ஒரு வேளை அப்படி இருக்குமோ என்று பதறி எழ...

ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்தனவோ மனைவியின் செயலை பார்த்து ஏய் என்ன டி,எதுக்கு இப்படி ஆடுற?.

மாமா மாமா என்றவள் அடுத்த வார்த்தை பேச முடியாமல் தடுமாற,சொல்லு செல்லமென்று செல்வியின் கையை பிடித்து கேட்க, கணவனின் கையை பிடித்து தனது வயிற்றில் வைத்துக் கொண்டே,காதில் விஷயத்தை சொன்னாள்.

அதைக் கேட்டவனும் அதிர்ந்து போய் மனைவியை பார்க்க,கன்ஃபார்மா என்று தெரியவில்லை மாமா...

ஏய் நீ டாக்டர் தானே என்கவும் கணவனை மறைத்து பார்த்தாள். சரி சரி விடியட்டும் மெடிக்கல் போயிட்டு வரேன் என்று சொல்லி மனைவியை தோளோடு அணைத்து அவள் உச்சந்தலை முத்தம் பதித்தவன் சரி படு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கு யாருக்கும் தெரியாம நான் காலையில போயிட்டு வந்துடுறேன் என்றான்..இருவருக்கும் தூக்கமே வரவில்லை எப்போது காலை 5 மணி ஆகும் என்று காத்திருந்தனர்.

5 மணி அலாரம் அடித்ததும் வேகமாக எழுந்து ரெஸ்ட் ரூமிற்குள் போனவன் ப்ரஷாகி வெளியே வந்து ஹேங்கரில் இருந்த சட்டையை எடுத்து போட்டவன் செல்லம் நான் போயிட்டு வந்துடுறேன்.

"நீ ஒரு வேலையும் செய்யாத டி"

மாமன் வந்துடுறேன் என்றவாறு பைக்கில் ஏறி டவுனை நோக்கி பறந்து சென்றான். மனம் முழுவதும் ஒருவித பரபரப்போடு இருந்தது.

வேலுவும் மெடிக்கலின் முன்பு வந்து வண்டியை நிறுத்த கடைகாரரும் அப்போது தான் ஷட்டரை திறந்து உள்ளே போனார்.

என்ன வேலு?

இவ்வளவு வெள்ளனையா வந்துருக்க?

யாருக்கு என்ன?என்க...

அது வந்து ணா...

எல்லாம் நல்ல விஷயம்தான் என்கவும் அதில் புரிந்து கொண்டவர்,கிட் டை எடுத்துக் கொடுக்க சிரித்தபடி வாங்கியவன் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து நீட்டினான்..

உன் கையாலே அங்கு சாமிகிட்ட வச்சிட்டு போ வேலு என்று சொல்ல.. சரிணா என்றவன் அங்கிருந்த சாமி போட்டோக்களுக்கு முன்பு இருந்த மாடத்தில் பணத்தை வைத்துவிட்டு நான் வரேன் ணா என்று சொல்லிக் கொண்டு வண்டியை எடுத்துக் கொண்டு பறந்து வந்து சேர்ந்தான்.

செல்வியோ அதற்குள் எழுந்து விடுவாசல் கூட்டி விட்டு குளித்து முடித்து கிச்சனில் டீ போட்டுக் கொண்டிருக்கவும் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே வந்தவன் செல்வி செல்வி என்க..கிச்சன்ல தான் இருக்கேன் மாமா, வாங்க என்றாள்.

ஏய் உன்னை யாராடி எந்திரிச்சு இதெல்லாம் பார்க்க சொன்னா என்கவும் ரொம்ப பண்ணாதீங்க என்று முறைக்க.. இந்தாடி என்று அவளிடம் கிட்டை கொடுக்க அதை வாங்கியவள் இதோ வருகிறேன் என்று ரூமிற்கு போனவள் சிறிது நிமிடங்கள் சென்று கதவை திறந்து வெளியே வர ஆர்வமாக வேலுவும் மனைவின் முகத்தை என்ன டி என்கவும்....

மாமா என்று எதுவும் சொல்லாமல் வேகமாக வந்து கணவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டவளுக்கு அழுகை வந்தது.

அடியேய் என்னன்னு சொல்லிட்டு அழு டி. எனக்கு ஒரே பரபரப்பா இருக்கு என்கவும் செல்வியோ எதுவும் சொல்லாமல் தேம்பி தேம்பி அழுக வீணா போனவளே விஷயத்தை சொல்லு டி எனக்கு ஒரே பதட்டமாக இருக்கு டி என்று கத்தினான்.

அவளோ எதுவும் சொல்லாமல் கணவனின் கையை எடுத்து தனது வயிற்றில் வைத்துக்கொள்ள கன்ஃபார்ம் தானே டி என்க...ஆமாம் என்று தலையை அசைத்தாள்...

யாகூஊஊஊ என்று கத்தியவன் மனைவியை தூக்கி சுத்த அந்த நேரம் கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் பட்டென்று கீழே இறக்கி விட்டான்.

செல்வி என்றவாறு பார்வதி வீட்டுக்குள் வர,எதுவும் சொல்லாமல் இருவரும் வேகமாக போய் பார்வதியின் காலில் விழ, அவரோ எதுவும் புரியாமல் நல்லா இருங்கப்பா என்று சொல்லியவர் என்ன விசேஷம் இன்னைக்கு என்கவும் அம்மா நீ பாட்டியாகிட்ட என்றான்.

என்னைய்யா சொல்ற என்று பார்வதிக்கு சந்தோஷத்தில் கண்கள் கலங்கியது.

ஆமாமா நீ பாட்டி ஆயிட்ட பாட்டி ஆயிட்ட பாட்டி ஆயிட்ட என்று தனது தாயின் தோளில் மேல் கையை போட்டுக் கொண்ட வேலு மூணு முறை சொல்ல அய்யனாரப்பா என்று கையை தூக்கி கும்பிட்டவர் என் வம்சத்தை தழைக்க வச்சிட்டியே உனக்கு கோடி நன்றி என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது செல்வமும் வீட்டிற்குள் வர அவரிடமும் விஷயத்தை சொல்லவும் தங்கள் வீட்டிற்கு புதுசாக வாரிசு வரப்போவது நினைத்து இருவருக்கும் தலைகால் புரியவில்லை.

தனது இடுப்பில் இருக்கும் பச்சை வாற் பெல்டை திறந்தவர் அதிலிருந்த கத்தையாக பணத்தை எடுத்து மருமகளுக்கு மூன்று சுத்தி சுத்தி செல்வி இந்தாத்தா என்று கொடுக்க எதுக்கு மாமா இதெல்லாம் என்றாள்.

மாமா கொடுக்கறது வேண்டாம் என்று சொல்லாதே செல்வி என்று சொல்லிய பார்வதி நீ உட்காரு என்று மருமகளை அங்கிருந்த சோபாவில் உட்கார வைத்துவிட்டு கிச்சனிற்குள் போனவர் தடபுடலாக காலையிலே விருந்து தயார் பண்ணினார்.

ஐயோ அத்தை இருங்க நானும் வரேன் என்று செல்வி வர அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ கம்முனு உட்காரு என்று சொல்லிவிட்டு டிபனோடு இரண்டு வித இனிப்பையும் செய்து முடித்தவர் வேலு நீ செல்வி சாப்பிடுங்க நானும் அப்பாவும் எங்க வீட்டுக்கு போயிட்டு வரோம் என்று செய்த கேசரியையும் சர்க்கரை பொங்கலையும் இரண்டு டப்பாவில் எடுத்துக்கொண்டு பக்கத்து தெருவில் இருக்கும் தனது அப்பா வீட்டிற்கு கணவரோடு வேகமாக வந்தார்.

சீதாவும் தாமரையும் காலை சாப்பாட்டுக்கு களியையும் தொட்டுக்கொள்ள கருவாட்டு குழம்பையும் செய்து முடித்தவர்கள் டைனிங் டேபிள் கொண்டு வந்து வைக்க பார்வதியும் செல்வமும் உள்ளே வர வாங்கப்பா வாங்கம்மா என்றாள்.

அத்தை மாமா எங்க என்கவும் உள்ள தான் பாட்டி இருக்காங்க அப்பா...சரி என்ற செல்வம் தனது மாமனார் மாமியார் இருக்கும் ரூமிற்கு வந்தவர் அத்தை என்க...வாயா செல்வம் உட்காரு என்று சொல்லவும் ஒரு நல்ல விஷயத்தை சொல்றதுக்கு தான் வந்தோம்.....

அப்படியா!!!

சொல்லுய்யா என்க...நம்ம வீட்டுக்கு வாரிசு வரப்போகுது என்றதும் அய்யனார் அப்பா...நிசமா தானே சொல்ற ?. ஆமா அத்தை...செல்வி முழுகாம இருக்கு என்றார்.

ஆத்தா...நல்ல செய்தி சொல்லி இருக்கிற....என் அண்ணனோ அண்ணியோ இல்லை அப்பா அம்மா இவங்க நாலு பேர்ல ஒருத்தவங்க தான் என் குடும்பத்துக்கு வர போறாங்களே என்று சொல்லும்போது சந்தோஷத்தில் வள்ளி அப்பாயிக்கு கண்கள் கலங்கியது.

பின்னர் வீட்டில் இருந்ததை எல்லாம் அப்படியே மூடி வைத்துவிட்டு பக்கத்து தெருவில் இருக்கும் செல்வியை பார்க்க கிளம்பி விட்டனர்.

செல்வமும் பார்வதியும் இன்னைக்கு மதிய சாப்பாடு நம்ம வீட்டுல தான் என்று சொல்லிவிட்டு...வண்டியை எடுத்துக் கொண்டு டவுனுக்கு போனார்.

தனது வீட்டினரை பார்த்து செல்விக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது.பின்னர் எதுவும் சொல்லாமல் அவள் கையை பிடித்து வாழ்த்துக்கள் சொல்லினர்.

தாங்கள் மகளே இன்னும் சிறுபிள்ளை என்று நினைத்துக் கொண்டிருக்கிற அவளோ ஒரு குழந்தைக்கு தாயாக போகிறாள் என்பதை நினைத்து ராதாவுக்கும் சீதாவுக்கும் சந்தோஷத்தில் அழுகை வந்தது.

மதிய விருந்தை பேசிக்கொண்டே தடபுடலாக செய்து முடித்து ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் போது இப்பவே சொல்லிடுரேன் என்ன குழந்தை பொறக்குதோ அது தான் என் புள்ளைங்களுக்கு ஜோடி...

நீங்கள் எல்லாரும் அதற்கு சாட்சி என்று கதிர் சொல்ல, அடேய் நான் ஒருத்தன் இருக்கேன் டா என்று ஜான் முறைக்க...

அடபாவிகளா....

உங்க அக்கப்போருக்கு அளவில்லையாடா? என்று வேலு திட்ட...

எங்களை மீறி நீ வெளியில் சம்பந்தம் பண்ணிடுவியா?.

தோளை உறிச்சிடுவோம் டா என்று ஜான் சொல்ல... நல்லா சொல்லு பங்கு என்று கதிர் மீசையை முறுக்க... கொலைகார பாவிங்களா....வந்து சேர்ந்துருக்கானுங்க பாரு கெரகம் புடிச்சவனுங்களென்று வேலு திட்டினான்...

தொடரும்..
 
Active member
Joined
May 9, 2025
Messages
146
Just for fun yarum sollalaya no marriage with in the relatives 😜😜
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top