• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
622
ஏன் டி கைய வீசிக்கிட்டே போறதா?

முன்னாடியே சொல்லியிருந்தால் டவுனுக்கு போய் எதாவது வாங்கிட்டு வந்துருப்பேன் டி என்று வேலு திட்ட,அட ஆமாம் என்றாள்.

இந்த அறிவுலாம் உனக்கு எங்க இருக்க போகுது என்று திட்டிக் கொண்டே வரும் போது ஏரிக்கரையில் மீன் பிடிப்பது தெரிய வண்டியை ஓரமாக நிறுத்தியவன் பாக்கெட்டில் பணம் இருக்கா என்று பார்த்துக் கொண்டே நீ இரு வரேனென்று அவர்களிடம் சென்றான்.

இந்த மாமா எதுக்கு அவங்க கிட்ட போறாங்கள் என்று செல்வி யோசனையோடு பார்க்க சிறிது நிமிடத்தில் பண ஓலைகளால் மூடிய பை போல ஒன்றை எடுத்துக் கொண்டு மேலே வந்தவன் இதுல ஏரி மீன் இருக்கு வீட்டுக்கு எடுத்துட்டு போலாம் என்றவன் பெட்ரோல் டேங்கின் மேல் அந்த ஓலை கூடையை வைத்துவிட்டு வண்டியில் ஏறி உட்கார,செல்வி அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள். இருவரும் அங்கிருந்து செல்வியின் வீட்டை நோக்கி சென்றனர்.

மாமா பிள்ளைங்க இருக்காங்க அவங்களுக்கு எதுவும் வாங்காம போறது என்க...இந்த அறிவு மயிறு உனக்கு இப்ப தான் வேலை செய்யுமாடி...

ஒன்னு பண்ணு வீட்டுல போய் இந்த மீனெல்லாம் சமைச்சவை நான் டவுனுக்கு போயிட்டு ஏதாச்சும் வாங்கிட்டு வரேனென்று அதேபோல் அவளை வீட்டில் விட்டுவிட்டு வண்டி எடுத்துக்கொண்டு தேனூருக்கு போனவன் குழந்தைகளுக்கு தேவையான ஸ்நாக்ஸ் பழங்களையும் வாங்கிட்டு வீட்டுக்க வர செல்வியும் குழம்பு வைத்துவிட்டு மீனை பொறித்துக் கொண்டிருந்தாள்.
பின்னர் அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தனர்.

மகளும் மருமகனும் வருவதை பார்த்து வாங்க பா என்க,என்ன புதுசா நம்ம வீட்டுல வரதுக்கு வரவேற்பு என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்த ஊஞ்சலில் போய் உட்கார்ந்தவன் மிதுன் மித்ரா என்க..விளையாண்டு கொண்டிருந்தவர்களோ தனது மாமன் சத்தத்தை கேட்டு ஓடி வந்தார்கள் அவர்களிடம் தீனி இருக்கும் பையை கொடுத்தான்.

பின்னர் செல்வி எடுத்துட்டு வந்த மீனை வைத்து வட்டமாக உட்கார்ந்து சாப்பிட்டவர்கள் அங்கிருந்த முற்றத்திலே படுத்துக் கொண்டு டிவி பார்த்தபடி தூங்கி விட்டனர்.

என்றைக்கும் போல பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் நினைத்து ஒரு பக்கமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க..

தாமரைக்கு வேதாவிடமிருந்து போன் வந்ததால் அட்டென்ட் பண்ணி பேசிக் கொண்டிருக்கும்போது செல்லாவுக்கு இடுப்பு வலி வந்து விட்டதாகவும் ஹாஸ்பிடல் சேர்க்க பெண் குழந்தை பிறந்திருப்பதாக சொன்னார்.

அப்படி என்றால் நார்மல் டெலிவரி தானே என்கவும் ஆமா.நம்ப ஹாஸ்பிடல்ல தான்
மருதுவும் முருகாயியும் கூட இருக்காங்க.மயிலா துணி எல்லாம் துவைத்துக்கொண்டு இருக்கா என்றார்.

சரிங்க அத்தை என்று சிறிது நேரம் பேசிவிட்டு ஃபோனை வைத்தவள் குழந்தை பிறப்பு பற்றி சொல்ல, குழந்தைக்கு பதினாறு படைக்கும்போது போய் பார்த்துக் கொள்ளலாமா இல்ல அதுக்கு முன்னாடியே போகலாமா என்ற பேச்சு வந்தது.

முதல்ல நாங்க போய் பாத்துட்டு வரோம் பிறகு நீங்க 16க்கு போங்கள் என்று கதிர் தாமரையிடம் சொல்லிவிட்டனர் அதேபோல் மறுநாள் பெரியோர்கள் மட்டும் கிளம்பி நீலகிரிக்கு சென்று விட்டனர்.

தாமரையே குழந்தைகள் இருவரையும் தூங்க வைத்துவிட்டு கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்க பூனை போல் வந்தவன் மனைவியை பின்னால் இருந்து இறுக்கிப் பிடிக்க யோவ் என்னையா பண்ற...

எடுயா கையை...

வளவன் மாமா வந்தாலும் வந்துருவாருங்க என்க.அதெல்லாம் இப்ப வரமாட்டான் டி அவனுக்கு நைட் ஷிப்ட் சிவா கூட அங்க ஏரிக்கரையில் இருக்கிறான் பாத்துட்டு தாண்டி வந்தேன் என்றான்.

சரியான திருட்டு பூனை என்கவும் ஆமா டி.அப்புவும் பாப்பாவும் தம்பியோ தங்கச்சியோ கேக்குறாங்க அதுக்கு ஏற்பாடு பண்ணனும் சீக்கிரம் வாடி என்றான்.

குழம்பு கொதிக்க கொதிக்க இருக்கு. எடுத்து மூஞ்சில ஊத்தினேன் அப்புறம் தெரியும் என்க...மனைவி சொன்னதை கேட்ட கதிர் அடிப்பாவி என்னடி என் ஆசையில இப்படி மண்ணள்ளி போடுற என்க...ஆஆஆஆ என்று எரிகின்ற அடுப்பில் இருந்து விறகு கட்டையை எடுக்க கொலை கொலையென்று கதிர் அங்கிருந்து ஓடினான்.

வேலு வீடு:

அவசியம் இது தேவையா என்கும் மகனை முறைத்து பார்த்த செல்வம் ஏண்டா என் பொண்டாட்டி கூட வெளியில் போய் நாலு இடத்துல தங்கம்னு எனக்கு ஆசையா இருக்காதா?.காலம் முழுவதும் உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் பாதுகாப்பா நாங்கள் இந்த வீட்ல தான் இருக்கணுமா என்க..என்னப்பா இப்படி பேசுற என்றான்.

பின்னர் என்னடா கோயிலுக்கு போலாம்னு இருக்கோம்.ஒரு வாரம் நாங்க வெளில போறோம் சும்மா தொந்தரவு பண்ணி உசுர வாங்காதே புரியுதா...நல்லபடியா முடிச்சுட்டு ஒரு வாரத்துல நாங்க வருவோம்.ஓயாம போன் போட்டு நீ எங்க போறன்னு கேட்டுட்டு இருக்க கூடாது என்றவர் அடியே பார்வதி இன்னும் என்ன தாண்டி பண்ற நேரம் ஆயிடுச்சு...

இவளை கெளப்பிட்டு கூட்டிட்டு போறதுக்குள்ள எனக்கு தொண்டை தண்ணி ஆவி போயிடுமே என்கும் போது இதோ வந்துட்டேன் என்று கையில் பேகோடு அங்கு வந்த பார்வதி பார்த்து இருங்கப்பா போயிட்டு சீக்கிரமா வந்துடுறோம் என்க..சரி நல்லபடியா போய்ட்டு வாங்க என்றான்..

செல்வம் பார்வதி சிவசாமி-கலா பிரகாசம்-வள்ளி ஆறு பேரூம் சில கோயில்களை பார்ப்பதற்காக பிளான் பண்ணி அவர்கள் காரில் டிரைவரோடு புறப்பட்டனர்.

கசகசனு இருப்பதாக குளியல் போடலாம் என்று நினைத்து செல்வியோ ரூமிற்கு சென்றுவிட்டாள். வேலு டிவி பார்த்துக் கொண்டே சோபாவில் படுத்தவன் ஒரு வாரம் இவ கூட எப்படி இந்த வீட்ல இருக்கிறது?

சும்மாவே நம்மளை சோதிக்கிறாள். என்னென்ன படம் காட்ட போறான்னு தெரியலையே என்னும் போது ஐயோ என்று செல்வி கத்தும் சத்தம் கேட்க என்னடி ஆச்சு என்று பதறி அடித்துக் கொண்டு ரூமிற்கு ஓடியவன் அங்கே கீழே விழுந்து கிடப்பவளை பார்த்து எச்சில் விழுங்கினான்.

குளித்துவிட்டு டவளோடு வெளியே வந்தவள் மேட்டில் கால் வைக்கும் போது வழுக்கி வீட கீழே விழும் போது தொடைக்கு மேலே ஏறி டவள் ஏறியிருக்க மனைவியின் அரைகுறை நிர்வாண கோலத்தை பார்த்தவனுக்கு ஒன்னும் சொல்ல முடியவில்லை.

யோவ் மாமா என்னையா வேடிக்கை பார்த்துட்டு இருக்கு வலிக்குது வந்து தூக்கிவிடு என்று செல்வி கத்த,அவள் குரலை கேட்ட பிறகு சுதாரித்தவன் பார்த்து வரமாட்டியா டி என்று கீழே விழுந்து கிடப்பவளை ஒரு கையால் தூக்கிவிடும் போது மனைவியின் உடம்பில் இருக்கும் ஈரமோ சில்லென்று அவன் கை வழியாக ஏற ஆண் மகனுக்கு ஒன்னும் சொல்ல முடியவில்லை.

மனைவியை பார்த்தவன் எதுவும் சொல்லாமல் பட்டென்று அவள் உதட்டோடு தனது உதட்டை பொறுத்தி ஒரு கையால் அவளை இறுக்கமா பிடித்துக் கொண்டு போய் அந்த மெத்தையில் சரிந்தான்.

திருமணம் ஆகி ஒரு வருடமாகியது. ஆனால் கணவனாக அவளிடம் தாம்பத்திய ரீதியில் எந்த உரிமையும் அவன் இதுவரை எடுத்துக் கொள்ளவில்லை.இன்றோஓஓ...
அவனும் மனிதன் தானே உணர்ச்சிகள் உள்ளவனாச்சே, தற்போது அவனால் அவனை கட்டுப்படுத்தி கொள்ள முடியாமல் மனைவியை ஆளுகை செய்தான்.

இப்படி ஒரு சூழலில் இருவரும் உடல் ரீதியாக இணைவோம் என்பது எதிர்பார்க்காத செல்வியோ கணவன் கொடுக்கும் வலிகளையும் சுகமாக தாங்கிக் கொண்டாள்.

மாமா...

ம்ம்...

மாமாஆஆஆ....

"சொல்லுடி"

பசிக்கிது...

ஆமாம் எனக்கும் தான் என்றவாறு தனது நெஞ்சில் மேல் தலை வைத்து படுத்திருப்பவளை இறுக்க...

அய்யோஓஓஓஓ... என்று செல்வி அலறுவதை ரசித்தவன் சரி போய் சாப்பாடு எடுத்து வை டி..

அதுக்கு முதலில் என்னை விடனுமென்று செல்வி முறைக்க...

ம்ம் என்றவாறு அணைத்த கரங்களை விலக்க,வேகமாக எழுந்தவள் பின்னர் தன் நிலை புரிய அய்யோ என்று மீண்டும் படுத்துக் கொள்ள...

"ஹா ஹா என்று சிரித்தான் "

மாமா என்று சினுங்க...

இரு நான் போய் சாப்பாடு எடுத்து வருகிறேன் என்று சொன்னவன் அருகில் கிடந்த வேஷ்டி எடுத்து கட்டிக் கொண்டு கதவை திறந்து வெளியே போனவன் சிறிது நிமிடத்தில் ஒரு தட்டில் சாப்பாடு குழம்பு ஊற்றி எடுத்துட்டு வந்தான்.

அதற்குள் செல்வியும் டிரசை மாற்றிக் கொண்டு உட்கார்ந்திருக்க உன்னை யாருடி டிரஸ் போட சொன்னாங்க என்று என்று மனைவியை பார்த்து மார்க்கமாக சிரித்தவன் சரி சாப்பிடு என்றான்.

பின்னர் இருவரும் சேர்ந்து சாப்பிட்டு முடித்ததும் நான் போய் பாத்திரங்களை கழுவி வச்சிட்டு வரேன் என்று கிச்சன் பக்கம் போனவள் பின்னர் வேண்டாம் என்று திரும்பி வந்து விட்டாள்.

என்னடி. .என்னமோ திருமணம் வீட்ல பாத்திரம் வெளக்கிர போல பாஞ்சு போன,அடிச்ச பந்து போல உடனே திரும்பி வருகிற என்க..இல்ல இல்ல காலையிலே செஞ்சிக்கிறேன் என்று வந்து பெட்டில் படுத்து விட்டாள்.

சரி டி என்று அவள் அருகில் வந்து படுத்தவன் செல்வி செல்வி என்க... ம்ம் என்றாள்.

அது வந்து என வேலு இழுக்க...

"என்ன சொல்லு மாமா"

நீ படிச்சு முடிச்ச பிறகுதான் இதெல்லாம் நமக்குள்ள நடக்கும் நினைச்சிட்டு இருந்தேன்.ஆனால் இப்படி நடந்து விட்டது.மாமாவை தப்பா நினைச்சுக்கிறியா என்கவும் போடா என்றாள்.

அடிப்பாவி என்னடி இப்படி என்க..

யோவ் லூசு மாமா, புருஷன் பொண்டாட்டிக்குள்ள தானே நடந்துச்சு விளக்கெண்ணெய் விளக்கெண்ணெய் என்று வேலுவின் தலையில் கொட்ட இல்லை நீ படிச்சிட்டு இருக்கியே திடீர்னு குழந்தை வந்துருச்சுன்னா என்ன பண்றது என்கவும்...

வந்தா பெத்துக் கொள்கிறேன் பிறகு படிக்கிறேன் என்றாள். நிஜமா தானே என்கவும் ஆமா இதுல என்ன சந்தேகம் என்று சொல்ல அப்போ ரைட்டு என்று சொல்லி விளக்கை அணைத்தான்..

அதிகாலை சேவல் சத்தம் கேட்டு கண் விழித்த செல்வியோ தன்னை அணைத்து படுத்திருக்கும் மாமனின் கையை எடுத்து விட்டு பொறுமையாக எழுந்து ரெஸ்ட் ரூமிற்கு போனவள் குளித்து முடித்துவிட்டு புடவையை கட்டிக் கொண்டு கதவைத் திறந்து ஹாலுக்கு வந்தவள்.

பின்னர் தொழுவத்திலிருந்து சாணம் எடுத்து வந்து வாசல் தெளித்து கூட்டி கோலத்தை போட்டு உள்ளே வந்தவள் பால் கரக்க சொம்பு,வெண்ணெய் டப்பாவோடு தொழுவதற்கு போனவள் தேவையான பாலை கரந்து விட்டு கண்ணு குட்டிக்கு குடிக்க விட்டு உள்ளே வந்தாள்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
622
பாலை அடுப்பில் வைத்துவிட்டு வீட்டைக் கூட்டி துடைத்து பூஜை அறையை சுத்தம் பண்ணவும் அங்கே டிகாசமும் பாலும் கொதித்து ரெடியாக இருந்தது.

கதிர் வீடு:

சிரித்துக் கொண்டே தாமரை வேலையை பார்க்க பூனை போல் திரும்ப வந்த கதிர் மனைவியின் வெறுமையான இடுப்பில் நன்கு கிள்ளி விட்டு சிட்டாக பறந்து விட்டான்.

வலியில் ஆஆஆ என்று கத்தும் போது வீட்டிற்குள் வந்த வளவன் அத்தை மகளின் குரல் கேட்டு தாமரை என்னாச்சித்தா என்று பதறி ஓடி வந்தான்.

எப்பொழுது தாமைரையின் கழுத்தில் கதிர் தாலி கட்டினானோ அன்றிலிருந்து அத்தை மகளை ஆத்தா என்று தான் கூப்பிடுவான்.

என்னத்தா என்க...

ஒன்னும் இல்லை மாமா தெரியாமல் பாத்திரத்தில் கையை வச்சிட்டேன் அது சுட்டுருச்சி என்றாள்.

பார்த்து செய்வதில்லையாத்தா என்றவன் நீ போ மீதி வேலை நான் பார்க்கிறேன் என்று வலுகாட்டாயமாக தாமரையை வெளியே அனுப்பிவிட்டு மீதம் இருந்த வேலையை வளவன் பார்க்க...

ஐயோ மாமா எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சு குழம்பு இறக்கிட்டு அப்பளம் தான் பொறிக்கணும் நீ போ மாமா நான் செய்கிறேன் என்றாள்.

அவ்வளவுதானே அதை நான் பாத்துக்குறேன் நீ போய் அண்ணனை சாப்பிட வர சொல்லு போ என்று அனுப்பி விட,தாமரையும் பல்லை கடித்துக் கொண்டு குழந்தைகள் தூங்கும் ரூமிற்குள் வந்தாள்.

கதிரோ ஒன்றும் தெரியாது போல் அமைதியாக கட்டிலில் படுத்திருக்க கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு வந்தவளோ கணவனை சரமாரியாக அடிக்க ஏய் ஏய் போதும் டி என்று சிரிக்க அதுவோ மேலும் ஆத்திரம் வந்தது.

இவர்கள் போட்ட சத்தத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளும் அழ எல்லாம் உன்னால தான் மாமா வந்தது என்று திட்டிக் கொண்டு தொட்டிலை ஆட்டி விட்டாள்.

போய் சாப்பிடுங்க அதை விட்டு என் மொகரையை ஏன் பாக்குறீங்க?.

நானும் சாப்பிட தான் டி தவியா தவிக்கிறேன்.நீ தான் டி தர மாட்டேங்குற என்கவும் அதில் வெகுண்டவள் குழந்தைகளுக்கு இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து ஓங்கி ஒன்று கதிரின் தோள் பட்டையில் வைக்க ஆஆஆ என்று கத்தினான்.

யோவ் என்றவாறு கணவனின் வாயை பொத்த மனைவியின் வயிற்றோடு இறுக்கி தனது தலையை வைத்தவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க மாமா என்றாள்..

சரி போறேன் என்றவன் கதவை திறந்து வெளியே போக வளவனோ முற்றத்தில் சமைத்த பாத்திரங்களையும் சாப்பிடுவதற்கு தட்டு தண்ணீர் எல்லாம் நேரடியாக எடுத்து வைத்திருப்பது தெரிந்தது.கையை கழுவிட்டு வந்து உட்கார வளவனும் டிரசை மாற்றிக் கொண்டு வந்தான்.

தாமரை வரலையா ணா என்க...

தொட்டில் ஆட்டிட்டு இருக்காள்.நாம சாப்டலாம் வருவாளென்று தம்பிக்கு அதில் சாதத்தை அள்ளி வைக்க வளவன் அதன் மேல் குழம்பை ஊத்திக் கொண்டான்.

டிவி பார்த்துக் கொண்டே அவர்கள் சாப்பிடும் போது தாமரையும் அவர்களோடு வந்து இணைந்து கொண்டாள்.

அண்ணா நாளைக்கு ஷிப்ட் முடிச்சிட்டு நான் திருச்சிக்கு போறேன்.பரத்தோட நிச்சயதார்த்தம் என்க... சரி டா.சிவா வரானா என்று கதிர் கேட்க ஆமாணா என்றான்.

மாமா டிரஸ் அயர்ன் பண்ணனுமா என்று சாப்பிட்டுக் கொண்டே தாமரை கேட்க இல்லத்தா.வேஷ்டி சட்டை தான் போட போறேன்.சட்டையை அம்மா அயர்ன் பண்ணி தான் வச்சிருக்கு.

செல்வியை வர சொல்லிக்க...

அண்ணன் வயலுக்கு போய்ட்டா தனியா புள்ளைங்களை எப்படித்தா பார்ப்ப என்கவும்,விடியலில் அத்தை வந்துடுவாங்க மாமா..பிரச்சனை இல்லை.உன் அண்ணன் இம்சை தான் தாங்க முடியாது என்று மனதிற்குள் சொல்ல கதிருக்கு புரையேறியது.

தண்ணி தான் இருக்கே எடுத்து குடிக்க வேண்டியது தானே என்று தாமரை சொல்ல மனைவியை முறைத்து பார்த்தவன் நீதானடி என்னை திட்டுன என்றான்.

ஆமா எனக்கு வேற வேலை கிடையாது உங்கள திட்டிகிட்டு இருக்க தான் பொழப்பு பாருங்கள் என்றாள்.

பின்னர் சாப்பிட்ட பாத்திரங்கள் எல்லாம் அவள் கழுவி வைக்க வளவன் போய் ரூமில் படுத்து விட்டான்.நான் வயலுக்கு போயிட்டு வரேன் என்று கதிர் அங்கிருந்து சென்றுவிட தாமரையோ குழந்தைகள் எழுந்ததும் அவர்களுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு அவர்களோடு விளையாடிக் கொண்டிருக்க நேரமும் கடந்து சென்றது.

இரவு டிபனை சீக்கிரம் செய்து முடிக்கவும் வளவன் எடுத்துக் கொண்டு வேலைக்கு கிளம்பி விட்டான்.

குழந்தைகள் இருவரும் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருக்க தாமரையோ தனது லேப்டாப்பில் மெயில் செக் பண்ணிக் கொண்டிருந்தாள்.

நேரமும் கடந்து செல்ல கதிர் இன்னும் வீட்டுக்கு வர காணும் என்ன இவ்வளவு நேரம் ஆகுது என்று மணியை பார்த்தவள் தனது போன் எடுத்து கணவனுக்கு கால் பண்ண அதுவோ வீட்டுக்குள் கேட்கவும் திரும்பி பார்க்க கதிரும் வந்தான்.

என்னடி மாமாவ பாக்காம இருக்க முடியல என்கவும் அப்படி ஒரு வெங்காயமும் கிடையாது.நீ ஓவரா கற்பனை பண்ணிக்காத என்றவள் குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்.

அங்க போரிலேயே குளிச்சிட்டேன் டி. வயல்ல சேட ஓடுச்சு அதனாலதான் இவ்வளவு நேரம் ஆயிடுச்சு என்று சொல்லிக்கொண்டு மாடிக்குப் போய் துணியை மாத்திட்டு வர தாமரை டிபன் எடுத்து வைத்தாள். பின்னர் குழந்தைகளுக்கு ஊட்டி விட்டு அவர்களும் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

தாமர ஒரு விஷயம் சொல்லணும் டி என்க, ஹம் என்ன..குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு வா நான் சொல்றேன் என்கவும் எனக்கு காது கேட்கும் எப்ப வேணாலும் சொல்லுங்க...

கொஞ்சம் சீரியசான விஷயம் டி என்றான் திரும்பி கணவனை பார்த்து முறைக்க ச்சி மாமா அதுக்கெல்லாம் கூப்பிடல இது வேற விஷயம்.கள்ளி எப்ப பாத்தாலும் அதே ஞாபகம் தான் என்று பொண்டாட்டி கன்னத்தில் குத்த பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்தவளோ தட்டை எடுத்து ஓங்கி அடிக்க போக சரியான ரவுடி பொம்பளையா இருக்கிறாளே என்று சொல்லிக்கொண்டு ஓடி வந்தான்.

குழந்தைகளுடன் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்களோ தூங்கி வழிவதை பார்த்தவன் இரண்டு பேரையும் தூக்கிக்கொண்டு மாடியில் இருக்கும் ரூமிற்கு போனவன் பெட்டில் படுக்க வைத்து தட்ட சிறிது நிமிடத்திலேயே தூங்கிவிட்டார்கள்.

தாமரை எல்லாத்தையும் முடித்துவிட்டு வீட்டை பூட்டிக்கொண்டு இரண்டு டம்ளரில் பால் எடுத்துக் கொண்டு மேலே வந்தவள் தூங்கிட்டாங்களா மாமா எங்க ஆமாண்டி என்றான்.

அவனுக்கு ஒன்று கொடுத்துவிட்டு அவளும் குடித்துக் கொண்டு மாமா என்ன விஷயம் என்க..தேவி என்கிட்ட பேச வந்தாள் டி..

ஓஓ முன்னால் காதலியா என்னவாம் என்றாள். ஏய் முன்னாள் காதலி இந்நாள் காதலி எல்லாம் சொல்லாதடி அவ தேவி அவ்வளவு தான் என்க...சரி விஷயத்தை சொல்லு..

அது வந்து என்று இழுக்க சொல்லி தொலையா என்ன உன்னை மறக்க முடியாமல் சாமியாராக போகப்போறாளா என்க..

ஏய் பக்கத்துல இருந்த போலவே பேசுறியே டி...

உனக்கே கல்யாணம் பண்ணி ஏழு கழுதை வயசாயிடுச்சு ரெண்டு புள்ளையும் பொறந்திடுச்சு இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருந்தா என்ன அர்த்தம் அவளுக்கு என்ன 32 33 வயசு இருக்குமா?

உன் மாமனுக்கு 35 ஆகுது அப்ப அவளுக்கு 32 33 ஆகும் எவளுக்கும் இங்கு இங்கு இடம் கிடையாது உனக்கு மட்டும் தான் இந்த மாமா வாழ்க்கை கொடுப்பேன் என்க..அப்படியா என்றாள்.

ஆமாம் அதில் என்ன சந்தேகம் டி?.

நம்ப முடியாது எந்த புத்துல எந்த பாம்பு இருக்குன்னு சொல்லிக் கொண்டு ரெஸ்ட் ரூமிற்குள் சென்றவள் சிறிது நிமிடத்தில் பிரஸ் ஆகி வந்து இரவு விளக்கை மட்டும் ஆன் பண்ணிவிட்டு லைட்டை ஆப் பண்ணியவள் பெட்டில் வந்து படுத்தி விட்டாள்.

கதிரும் எட்டி மனைவியை பார்க்க என்ன என்றாள்.ஒன்றும் இல்லை டி..ஒன்னும் இல்லன்னா எதுக்கு எட்டி பாத்துட்டு இருக்கீங்க படுங்க என்று திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

ஜான் வீடு:

இன்னும் இவ என்னதான் பண்றா?கடவுளே இவளை கட்டிக்கிட்ட நான் படுற பாடு இருக்கே முடியல என்று திட்டிக் கொண்டவன் ரூமிற்குள் போய் பார்க்க அல்லி இன்னும் தயாராகிக் கொண்டிருப்பது தெரிந்தது.

எவ்வளவு நேரம் தாண்டி ரெடி ஆவ? அந்த நாலு முடி அள்ளி கட்டிட்டு வருவதற்கு உனக்கு இவ்வளவு நேரமா என்கவும்...இது நாலு முடியா என்றவள் முறைக்க சரி சரி உனக்கு நீட்ட முடி தான் தாயே.நைட்ல டிராவல் பண்ணும் கிளம்படி என்று கெஞ்சவும் போலாம் போலாம் அத்தை மாமா விட்டுட்டு போறது மனசு வரல தெரியுமா என்கவும் ஐயோ ஆத்தா திரும்ப ஆரம்பிக்காத சாமி...

உன் மாமனாரே மனசு வந்து உன்ன கூட்டிட்டு போக சொல்லிருக்காரு இதுதான் சந்தர்ப்பம் புரிகிறதா நம்ம ஒன்னும் பிக்னிக் போகல அவங்களையும் கூட்டிட்டு போறதுக்கு ஹனிமூன் போறோம்டி கொஞ்சமாவது மனுஷனை புரிஞ்சுக்க என்கவும், நீங்கதான் புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க என்று கண்ணை கசக்கினாள்...

இங்க பாருடி அடிச்சேன்னு வச்சுக்க மூஞ்ச மொகரைலாம் பேத்துக்கும் சொல்லிட்டேன் ஒழுங்கு மரியாதையா சீக்கிரம் வா நான் போய் காரில் இருக்கேன் என்று பல்லை கடித்துக் கொண்டு அங்கிருந்து கீழே வர..ஏன்டா மணி என்ன ஆகுது இன்னும் கிளம்பாம இருக்கீங்க என்று லாரன்ஸ் கேட்க...
உன் மருமக வரமாட்டேங்குறா நான் என்ன பண்றது என்று கடுப்பில் கத்தினான்.

போற இடத்துலையும் அந்த புள்ள கிட்ட இப்படி எதற்கு எடுத்தாலும் எரிஞ்சு விழாத புரியுதா,கேட்டதெல்லாம் வாங்கி கொடு சின்ன புள்ள என்கவும் நான் மட்டும் என்ன 100துக்கு கிழவனா. என்றான்.

அறிவு கெட்டவனே உன்னை விட சின்ன புள்ள தான்டா என்று மகனை முறைக்க நீ பெத்த புள்ள பின்ன அறிவுகெட்ட தனமாக தான் இருக்கும் பின்ன புத்திசாலியாக இருக்கும் என்று முணவியவன் அம்மாவை ஒழுங்கா பாத்துக்கப்பா..

என் பொண்டாட்டிய எனக்கு பார்த்துக்க தெரியும் உன் பொண்டாட்டி முதல்ல ஒழுங்கா கூட்டிட்டு போயிட்டு வாடா வந்துட்டான் விளக்கெண்ணை எனக்கு பாடம் எடுப்பதற்கு என்று தனது மீசையை லாரன்ஸ் முறுக்கி விட, என்னை டேமேஜ் பண்றதுக்கு நீ அப்பாவா பொறந்துருக்க என்று பல்லை கடித்தான்...

தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top