• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
609
கதிரோ ரூமில் தயாராகிக் கொண்டிருந்த மனைவியை தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவள் தூங்கி எழ காலை 7:00 மணி ஆனதால் நான் இருந்து கூப்பிட்டு வருகிறேன் நீங்களாம் போங்கள் என்று சொல்லிவிட மற்றவர்கள் மண்டபத்திற்கு வந்து விட்டனர்.

ஒரு வழியாக தூங்கி எழுந்தவள் மணியை பார்த்து நேரமாயிடுச்சா என்று பதறி எழ ஏய் எதுக்குடி இப்படி எந்திருக்கிறாய் என்று அங்கிருந்து கதிர் கத்திய பின்னரே நேற்று இரவு நடந்ததெல்லாம் அவளுக்கு நினைவுக்கு வந்தது.

எதுவும் சொல்லாமல் கதவை திறந்து வெளியே வந்து படியில் ஏறி மேலே இருக்கும் ரூமிற்கு போனவள் வேகவேகமாக குளித்துவிட்டு வெளியே வர கதிரோ கட்டில் மேல் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்தான்.

இந்த மனுஷன் என்ன இப்படி உட்கார்ந்து இருக்கிறார் நம்ம எப்படி டிரஸ் மாத்துறது என்று யோசனையாக என்னடி என்னமோ புதுசா நான் பாக்குற போல பண்ற சீக்கிரம் ரெடி ஆகுது என்றான்.

தாமரையோ பல்லை கடித்துக் கொண்டு கணவனை பார்க்க அது தான் நேத்து நைட்டு சமாதானமா ஆயாச்சு என்று சிரித்துக் கொண்டே சொல்ல வெட்கம் கெட்ட மனுசனே அந்த நேரத்தில் உங்களுக்கு இது ரொம்ப முக்கியமா என்று கேட்கும் போது அவளுக்கும் வெட்கம் வந்தது.

அந்த நேரம் மட்டும் இல்லை செல்லம் எல்லா நேரமும் எல்லாமும் தேவை தான் என்று எழுந்து வந்தவன் டவலை கட்டிக் கொண்டு வந்து நிற்கும் மனைவியை அணைக்க அய்யோ மாமா நான் குளிச்சிட்டேன் உங்க பனியன் ஈரமாகுதே பாருங்க என்க..

ஆகட்டும் டி..உன்ன விட இது என்ன பெருசா என்று மனைவியின் தோள்பட்டையில் முத்தம் வைக்க இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் இருவரும் பேசிக் கொள்வதால் அந்த நிகழ்வை ரசித்தனர்.

மன்னிச்சிடு செல்லம் தெரியாம பண்ணிட்டேன் கண்டிப்பா உன்னை விட வேற யாரும் எனக்கு பெருசு கிடையாது இத்தனை நாள்ல நான் ஒன்னும் புரிஞ்சுகிட்டேன் இப்ப என் இடத்துல நீயும் அதே போல போட்டோ எடுத்திருந்தால் கண்டிப்பா கொலவெறி ஆயிருப்பேன்டி என்க.

தாமரையோ அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை.அமைதியா இருக்காதடி சத்தியமா என்னால தாங்க முடியல. நாலு அரை வேண்டுமானால் அரைஞ்சுக்கடி அதை விட்டுட்டு இப்படி உன் புருஷன் கிட்ட பேசாம இருந்து கொள்ளாத தாமரை சத்தியமா என்னால நிம்மதியாக இருக்க முடியலடி என்று இறுக்கமாக அணைத்துக் கொண்டு செல்ல அதற்கு தாமரை எந்த பதிலும் சொல்லவில்லை.

என்னடி நான் சொல்லிட்டு இருக்கேன் நீ அமைதியா இருக்கிறேன் என்க...என்ன சொல்லணும் நீங்க எதிர்பார்க்கிறீங்க?

ஏன் உங்க நிம்மதிக்கு என்ன கேடு என்றாள்.இனிமே இப்படி பண்ண மாட்டேன் இந்த ஒரு முறை மன்னித்துவிடு என்றான் இப்ப நான் கல்யாணத்துக்கு கிளம்பணுமா இல்லை கிளம்ப வேணாமா என்று கேட்க நீ மன்னித்துட்டேன் என்று சொல்லிட்டு கிளம்பு டி எனக்கு மனசு திருப்தியா இருக்கும் இல்லையா.

ரொம்ப நடிக்காதீங்க உங்களை பற்றி எனக்கு தெரியாது என்று பல்லை கடித்தவள் இப்ப கல்யாணத்துக்கு கிளம்பனும் உன் கிட்ட என்னால போராட நேரம் இல்லை என்க...

ஒரு வார்த்தை சொல்லிட்டு போடி மாமா மனசு தாங்கலடி இது நினைச்சு எனக்கு பைத்தியம் பிடிக்குது என்றான்...யார் உனக்காக பைத்தியம் பிடிக்குது என்கவும் ஆமாம் டி செல்லம் எனக்கு தாண்டி பைத்தியம் பிடிக்குது என்றான்...

போய் நல்ல டாக்டரை பாருங்கள் என்றவள் இப்ப விடுங்க என் அண்ணன் கல்யாணத்துக்கு ரெடி ஆகணும் என்கவும் ரொம்ப ஓவரா தான் டி பண்ற என்று மனைவியின் கன்னத்தை நல்லா வலிக்கும்படி கடித்து விட்டவன் அவனும் ரெடியாக தாமரையோ கணவனை திட்டிக் கொண்டு தயாரானாள்.

ஜானை பார்த்த பிறகு தான் அல்லிக்கு உயிரே வந்தது.மேடையில் இருந்து வேகமாக இறங்கியவள் யாரையும் கவனிக்காமல் வேகமாக வாசலுக்கு போக டிரைவருக்கு பணத்தை கொடுத்துவிட்டு லக்கேஜோடு அலங்கரிக்கப்பட்ட கல்யாண பந்தலை நோக்கி வந்தவன் எதிரே வருபவளை பார்த்து மை டியர் பொண்டாட்டி வந்துட்டேன்டி எங்கவும் வேகமாய் வந்தவள் இருவருக்கும் ஒரு அடி இடைவெளி விட்டு நிற்க அவள் கண்கள் கலங்கி கண்ணீர் வடிந்து ஓடியது.

செல்லம் சீக்கிரமா உன் அண்ணன் இருக்கிற ரூமுக்கு வா என்று சொல்லிவிட்டு ஜான் அங்கிருந்து செல்ல சிறிது நொடிகள் சென்ற பிறகு அவன் சொல்லி சென்ற வார்த்தைகள் அல்லிக்கு புரிந்தது.

கண்களை துடைத்துவிட்டு அதேபோல் மேடைக்கு வந்தவள் யாராவது அவளை கவனிக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டு வேலுவின் அறைக்கு போக அங்கே ஜான் மற்றும் வேலும் இருந்தனர்.

மச்சான் ஒரு அஞ்சு நிமிஷம் யாரும் வராம பாத்துக்கடா என்று சொல்லி கதவை தாழ்ப்பாள் போட்டவன் அல்லியை இழுத்து இருக்கமாய் அணைக்க...

அடேய் மானங்கெட்ட பயலே என்னடா பண்ற என்று வேலு கத்த கொஞ்ச நேரம் கம்முனு இருடா என்றான்.

அடேய் யாராச்சும் வந்தாக்க என்னடா நினைப்பாங்க அண்ணன்காரன் டா நானு.என்னை என்னடா வேலை பாக்க சொல்ற என்கவும்,அவளுக்கு அண்ணனா இருந்தாலும் எனக்கு நீ மாமா தானே கொஞ்சம் மூடிகிட்டு இரேன்டா...

உன் தங்கச்சி முகத்தை பார்த்தாலே தெரியலையே அவளை சமாதானப்படுத்திட்டு வரேன் என்கவும் அல்லி தேம்பி தேம்பி அழுவது வேலுக்கு புரிந்து சரி சரி என் தங்கச்சிக்காக பார்க்கிறேன் என்ன பண்ணி தொலையறது என்று பல்லை கடித்துக் கொண்டே கண்ணாடியை பார்த்து தனது தலையை சீவ அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

எந்த கரடி என்று தெரியவில்லையே என்று ஜான் சொல்லிக்கொண்டு அல்லியை துரத்தி விட்டு கதவை திறக்க வேலுவை மேடைக்கு வர சொல்லிய கதிர் அங்கிருந்து ஜானை பார்த்து பங்காளிஈஈஈஈ....

எப்போடா வந்த என்றவாறு வந்து ஜானை அணைக்க இப்பதாண்டா வந்தேன். நான் ரெடியாகுறேன் நீங்க ரெண்டு பேரும் மேடைக்குப் போங்க என்று வேலுவை பார்த்து பாத்ரூம் பக்கம் பார்க்க சொல்லி ஜான் கண்ணை காட்டினான்

அவனை முறைத்தபடியே இப்பொழுது ஒன்னும் சொல்ல முடியாது என்று நினைத்துக் கொண்டு கதிர் பின்னாடியே வேலுவும் செல்ல கதவை தாழ்ப்பாள் போட்டு பாத்ரூம் கதவை வந்து தட்டவும் அல்லியும் வெளியே வந்தாள்.

அவள் முகத்தை பார்த்தவன் செல்லும் வேலை டி என்று சொல்லிக்கொண்டு மீண்டும் அணைத்து அவள் இதழில் புதைந்தவன் அங்கிருந்த மெத்தையில் சரிந்தான்.நொடிகளும் நிமிடங்களாக கடந்து செல்ல பின்னர் போதும் என்று விட்டவன் செல்லம் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாக்க என்ன வேணும்னாலும் நடக்கலாம் டி..

ப்ளீஸ் நான் கொஞ்ச நேரத்தில் வெளியில போறேன் பிறகு நீ வெளில வா என்று சொல்லிவிட்டு வேக வேகமாக தயாராகவும் அல்லியோ எதுவும் சொல்லாமல் பூனை போல் கதவை திறந்து வெளியே ஓடிவிட்டாள்.

தாமரையோ வேதா மயிலா இருவரின் நடுவில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்க ஸ்டேஜில் நின்று கொண்டிருந்த கதிரின் பார்வை அவ்வப்போது மனைவியை தான் தீண்டி சென்றது.

கணவனின் பார்வை தன்மேல் அவ்வப்போது படுவது புரிந்தாலும் தாமரை அதை சிறிதும் கண்டு கொள்ளவே இல்லை.

கொழுப்பெடுத்தவ கொஞ்சமாச்சும் பாக்குறாளா பாரு? இவள் வேற வர வர ரொம்ப அழகாகிட்டே போறாளே என்று கதிர் அங்க முணுமுணுத்தான்.

ரூமில் தயாரான ஜான், செல்லம் நான் போறேன் கொஞ்ச நேரம் கழிச்சு நீ வெளியில வா என்று சொல்லிவிட்டு கண்ணாடியில் தனது முடியை சரி பண்ண...

எந்த பேச்சும் இல்லாமல் போகவும் உன்னை தாண்டி சொல்றேன் இப்படி உம்மென்று இருந்தால் என்ன அர்த்தம்?

அதான் உன் மாமன் முத்தம் கொடுத்து சமாதானம் ஆகிட்டோமே இன்னும் என்னடி கோபம் என்று சொல்லி திரும்ப வெறும் ரூம் தான் அவனை பார்த்து பல்லை காட்டியது.

அடிப்பாவி எப்படி தப்பிச்சு ஓடினான்னு தெரியலையே என்று சிரித்துக் கொண்டு அங்கிருந்து மேடைக்கு வந்தான்.

ஐயரோ தாம்பாளத்தில் இருக்கும் தாலிக்கு பூக்கள் மஞ்சள் குங்குமம் தூவி மந்திரம் ஓதியவர் போய் எல்லார்கிட்டயும் ஆசீர்வாதம் வாங்கிட்டு வாங்க என்று சொல்லவும் ராதா அதை வாங்கிட்டு போய் சொந்த பந்தங்கள் எல்லாருக்கும் காட்ட அவர்களும் அதிலிருந்த அரிசியை அள்ளிக்கொண்டு தாலியை தொட்டு கும்பிட்டனர்.

பின்னர் மேடையில் இருக்கும் ஐயரிடம் வந்து தாம்பூல தட்டை கொடுக்க தம்பி தாலியை கட்டுங்க என்று சொல்லவும் தேங்காயின் மேல் இருந்த தாலியை எடுத்து தனது வலது பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் மாமன் மகளின் கழுத்தில் மூன்று முடிச்சு போட அண்ணா மூன்றாவது முடிச்சு நான் தான் போடணும் என்று அல்லி சொல்ல உன் அண்ணிக்கு மூணு முடிச்சு நானே போடுறேன்டா பாப்பா என்கவும் சரி ணா என்றாள்.

அதன் பின்னர் அக்னியை சுற்றிவர சொல்ல வேலு செல்வி எழுந்து நிற்கவும் அவன் துண்டோடு இவள் முந்தானையை முடித்து போட்டு சுற்றிவர சொல்லிவிட்டு பின்னர் மெட்டியை போட்டு விட சொல்ல, தன்னவளின் கால்களை பிடித்து இடது கையில் வைத்தவன் பாக்கெட்டில் இருந்த மெட்டி எடுத்து அவள் கால்களுக்கு போட்டு விட மாமனின் ஸ்பரிசம் பட்டு செல்வியோ சிலிர்த்து போனாள்.

பின்னர் பெரியவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க சொல்ல அதேபோல் செய்யவும் பின்னர் மச்சான் முறை சீர்வரிசையை செய்ய வர ஜான் கதிர் வளவன் நிலவன் நால்வரும் மச்சான் முறைக்காக கைச்செயின் மோதிரம் செயின் என்று போட்டவர்கள் என் தங்கச்சி கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் வந்தது உடம்பில் எலும்பு இருக்காது என்று கதிர் சொல்ல,
என் பாப்பா கண்ணு கசக்குச்சின்னு தெரிஞ்சது மூஞ்சி மொகரையெல்லாம் இருக்கிற இடம் தெரியாம போயிரும் என்று ஜான் சொல்ல...

வளவனோ உடம்புல உசுரு மட்டும் தான் இருக்கு மாமா எந்த பார்ட்ஸ்ம் வேலை செய்யாது என்கவும் நிலவனோ என் அண்ணனுங்க சொல்லிட்டாங்க நான் ஒரே ஒரு இன்ஜெக்ஷன் தான் போடுவேன் என்றான்.

அட சண்டாள பாவிகளா இன்னைக்கு தான்டா எனக்கு கல்யாணம் ஆயிருக்கு அதுக்குள்ள என்னென்ன வார்த்தை பேசுறீங்க மரியாதையா நாலு பேரும் கீழே போங்கடா அயோக்கி பயலுகளா என்று வேலு முறைக்க மற்றவர்களோ அதை கேட்டு சிரித்து விட்டனர்.

பின்னர் வந்தவர்களை பந்திக்கு அழைத்து போய் உணவு சாப்பிட வைத்து அவர்களுக்கு கல்யாணத்தின் நினைவாக பரிசுகளையும் கொடுத்து அனுப்பினார்கள்.

எல்லா சம்பிரதாயம் முடிந்து நல்ல நேரத்தில் பொண்ணு மாப்பிள்ளையை வீட்டிற்கு அழைத்துப் போனவர்கள் பூஜை அறையில் விளக்கேற்ற சொல்லிவிட்டு பின்னர் பொண்ணு வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதால் நல்ல நேரத்தை பார்த்து பக்கத்து தெருவில் இருக்கும் செல்வி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆரத்தி எடுத்து மருமகனையும் மகளையும் வீட்டிற்குள் அழைத்து போனவர்கள் பால் பழம் கொடுத்தனர். செல்வி வேலுவை ரூமிற்கு அழைத்துப் போக சொல்லவும் வாங்க மாமா என்று சொல்ல நீ முன்னாடி போய் டிரஸ் மாத்திட்டு வா பிறகு நான் வரேன் என்று வேலு சொல்லி விட்டான்.

அதேபோல் செல்வியும் மேலிருக்கும் அறைக்கு போனவள் கட்டிருந்த பட்டுப்புடவை அவிழ்து விட்டு வேறு இலகுவான புடவையை கட்டிக் கொண்டு அல்லியோடு கீழே வர பிறகு மாடிக்கு போனவன் வழக்கம் போல் வேஷ்டி சட்டை போட்டுக் கொண்டு பட்டு வேஷ்டி சட்டையை அங்கிருந்த கொடியில் போட்டுவிட்டு வந்தான்.

இரண்டு நாள் இங்கு சம்பிரதாயமாக தங்கி விட்டு மூன்றாவது நாள் சீர்வரிசை மற்ற இனிப்பு வகைகளோடு வேலுவின் வீட்டிற்கு வந்தனர்.அன்று அவர்களுக்கு சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு பண்ணிருப்பதால் சமையல் செல்விதான் செய்ய வேண்டும் என்றனர்.

இத்தனை பேருக்கு எப்படி செல்வி மட்டும் தனியா சமைக்கும் என்று கவிதாவும் பார்வதியும் சொல்ல எம்மா ஊருக்கே உன் மருமகள் சமைப்பா என்று வேலு சொல்ல செல்வியோ அங்கிருந்த கணவனை பார்த்து முறைத்தாள்.

பின்னர் அவள் சாமிக்கு படைப்பதற்காக சர்க்கரைப் பொங்கல் பாயசம் எல்லாம் செய்யவும் கவிதாவும் பார்வதியும் அவளோடு இணைந்து கொண்டனர்
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
609
சொந்த பந்தங்கள் எல்லாம் மதிய சாப்பாட்டிற்கு அழைத்திருப்பதால் எப்படியும் 50 பேர் வருவார்கள் என்பது புரிந்து அதற்கு ஏற்ற போல எல்லாத்தையும் சமைத்து முடிக்கவும் கூப்பிட்டவர்களும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

பின்னர் வேலுவும் செல்வியுமே இலை போட்டு அவர்களுக்கு பரிமாறினர் அந்த சம்பிரதாயமும் நல்லபடியாக முடிந்து மற்றவர்கள் எல்லாம் வீட்டுக்கு சென்று விட்டனர்.

கட்டில் மேல் படுத்திருக்கும் மனைவியை பார்த்த கதிரோ என்னடி செல்லம் என்க...ரொம்ப அரிக்குது மாமா. அம்மாச்சி சொல்றாங்க சொரியக்கூடாதுனு...

ஆமாண்டி குழந்தைக்கு காயம் வரும்னு சொல்லுவாங்க.இரு பவுடர் போட்டு விடுறேன் என்கவும் ஐயோஓஓஓஓ உன் ஒத்தாசை எனக்கு தேவையில்லை சாமி பவுடர் மட்டும் எடுத்து கொடு நான் பூசிக்கிறேன் என்க மாமா அதெல்லாம் ஒண்ணுமே பண்ண மாட்டேன் என்கவும் உன்னை பற்றி எனக்கு தெரியாதா என்று முறைக்க...

நிஜம் நான் ரொம்ப நல்லவண்டி நம்புடி என்றவாறு அங்கிருந்து நைஸில் பவுடரை எடுத்துட்டு வந்து மனைவியின் புடவை விலக்க யோவ் என்னய்யா பண்ற என்றாள்.

உனக்கு தாண்டி அரிப்பு வருதுன்னு சொன்னியே அதுக்கு தாண்டி பூசி விடுறேன் வேற ஒன்னும் செய்ய மாட்டேன்டி என்று சொல்லிவிட்டு வயிற்றை மூடியிருந்த புடவையை விலக்கி அதன் மேல் பவுடரை தூவியவன் பொறுமையாக சுற்றியும் தடவி விட தாமரைக்கு இதமாக இருந்தது.

அரைமணி நேரம் கடந்த இருக்கும்…ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் என் முதல் இரவு என்று பாடி கொண்டு பெட்டில் மல்லிகை பூவை தூவிக் கொண்டிருந்த கதிரை தாமரையோ கொலவெறியில் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மனைவியின் பார்வையை உணராதவனோ மாமே ஒரு நாள் மல்லிகப் பூ கொடுத்த பாடலை பாடிக்கொண்டு தூவி முடித்து அப்பாடா செட் பண்ணியாச்சு...

இனிமேல் என் பொண்டாட்டி வர வேண்டியது தான் நான் கோதாவில் இருக்க வேண்டியதான் என்று சொல்லிக் கொண்டு திரும்ப அங்கே இடிப்பில் கையை வைத்துக்கொண்டு முறைத்து நிற்கும் மனைவியை பார்த்தவன் வாடி செல்லம் வாடி செல்லம் மாமாவே உன்னை கூப்பிட்டு வர இருந்தேன்.

அதற்குள் மாமா மனசு புரிஞ்சு நீயே வந்துட்ட பாத்தியா உண்மையிலேயே நீதான் சிறந்த மனைவி டி.எப்படி டி செட்டிங் சூப்பரா இருக்கா....

நேரத்தை வீணாக்காத வா வா பத்தே காலில் இருந்து நல்ல நேரம் ஆரம்பிக்கிறதாம் என்கவும் மானங்கெட்டவனே உனக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்லையா என்ன பேச்சு பேசுற என்றாள்...

ஏண்டி நல்ல பேச்சு தானடி...யோவ் இதோ ரெண்டு மூணு மாசத்துல குட்டிகள் வரப்போறாங்கள் என்று திட்ட அதுக்கு என்னடி?. உன் அண்ணன் மட்டும் அங்க கொண்டாடுறான் நான் கொண்டாட கூடாதா அப்படி என்ன உலகமாக தப்பு நான் பண்ணிட்டேன்?

என் பொண்டாட்டி கூட தான கொண்டாடுறேன் இது எவன்டி கேக்க முடியுமா என்று அவன் லாஜிக் பேச மரியாதை கெட்டுப்போயிடும் ஒழுங்கா அந்த பூவெல்லாம் எடு சொல்லிட்டேன்.
இல்லன்னா இங்கு என்ன நடக்கும் என்பது எனக்கே தெரியாது என்றாள்.

உனக்கு தெரியாது செல்லம் மாமாவுக்கு தெரியும் என்ன நடக்கும்னு நீ ஏன் கவலைப்படுற வா வா பால் எடுத்துட்டு வந்துட்டேன் என்று சொல்ல விளையாடாதீங்க என்று முறைத்தாள்.

விளையாட தாண்டி கூப்பிடுறேன் எங்கடி வர என்கவும் ஆஆஆஆ என்று கத்தினாள்.

ஐயோ செல்லம் இப்படி எல்லாம் கத்தாதடி நம்ம பிள்ளைக்கு ஆகாதடி என்று மனைவியின் வயிற்றை பிடிக்க நீ பண்றதுல எனக்கு ரொம்ப பிபி ஏறுது மாமா தயவு செய்து இந்த கோமாளித்தனத்தை எல்லாம் பண்ணாது.

எனக்கு அவ்வளவு வெறி வருது என்கவும் செல்லம் இல்லடி நீனும் இந்த கல்யாண வேலையில ரொம்ப அலஞ்சியா அதனால டென்ஷனா இருப்ப.உன்னை கூல் பண்றதுக்காக பூ மெத்தையை ரெடி பண்ணி இருக்கேன் நல்லா உருண்டன்னு வச்சுக்க மனசு நிம்மதியா இருக்கும் பூவோட வாசனை உனக்குள்ள போனாக்க அது நம்ம பிள்ளைகளுக்கு நல்லது தானே என்கவும் நீ ஒன்னும் அவ்வளவு நல்லவன் கிடையாதே...

உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியுமே என்றாள்.என்னடி மாமாவை இவ்வளவு தப்பா புரிஞ்சுகொண்டு இருக்கிறாய் நான் அப்படி எல்லாம் பண்ணவே மாட்டேன் டி .

இந்த நேரத்தில் போய் உன்னை கஷ்டப்படுத்துவேனா நான் சொல்லு என்க யாரு நீயா என் வாயில நல்லா வண்ட வண்டையா வந்துரும் ஆனா கெட்ட வார்த்தையில் திட்டி எனக்கு பழக்கமில்லை அதுக்காக பார்க்கிறேன் என்று முறைத்தாள்.

அய்யோ செல்லம் அப்படி எல்லாம் நினைக்காதே உனக்கு மாமா வெந்நீர் ரெடியா வச்சிருக்கேன் கை கால் எல்லாம் கொஞ்சம் நல்லா கழுவிட்டு நைட்டி மாத்திட்டு வா பார்க்கலாம் போ போ என்று மனைவியை அழைத்துக் கொண்டு போனவன் ரெஸ்ட் ரூமை திறந்து உள்ளே அனுப்பிவிட்டு கதவை சாத்தினான்.

கணவனை நினைத்து சிரித்தவள் அடேய் கேடி மாமா உன்ன பத்தி எனக்கு தெரியாதா யார்கிட்ட உன் வேலையை காட்டுற.

ஆடு நனைய ஓணான் ஏன் அழுவது என்று தெரியாத அளவுக்கு நான் தற்குறி இல்லை.வரேன் உன் சேட்டையை இன்னைக்கு நான் பார்க்க தானே போறேன் என்று மனதிற்குள் பேசிக்கொண்டே ப்ரஷாகி வெளியே வர அங்கே கதிரோ கட்டில் மேல் உட்கார்ந்து கொண்டு வலது கையில் மல்லிகை பூவை சுத்திக்கொண்டு வாசம் பிடித்துக் கொண்டிருந்தான்.

அவன் தோரணையை பார்த்தவர்களுக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டு கோபமாக இருப்பது போல் முகத்தை வைத்தவள் நேராக கண்ணாடி முன்னால் சென்று தலையை சீவியவள் விளக்கு அணைச்சிடு மாமா என்க கண்டிப்பாக செல்லம்...

சீக்கிரம் வாடி என்று கதிர் சொல்ல நீ எங்க வரவணு எனக்கு தெரியாதா என்று அவனை பார்த்து நினைத்தவள் சரி மாமா நீ கீழ படு. எனக்கு ரொம்ப அசதியா இருக்கு நான் கட்டில் மேல் படுத்துகிறேன் என்றாள்.

ஐயோ செல்லம் ஒரு வாரமா கல்யாணத்துக்கு அலைஞ்சதுல உடம்பு எல்லாம் ரொம்ப வலிக்குதுடி என்று உடம்பை முறுக்கி காட்டி சொல்ல அப்படியா...

சரி மாமா ஒன்னும் பண்ணு நீ மெத்தையில் படுத்துக்க நான் தரையில் படுத்துகிறேன் என்று பெட்ஷீட்டை தரையில் விரிக்க கெட்டது என் குடி என்று பதறி எழுந்து வந்தவன் அவள் கையில் இருந்ததை வாங்கி தூக்கி எறிந்தவன் ஒழுங்கு மரியாதையா வந்து பெட்ல படுடி உனக்காக மாமா இவ்ளோ நேரமா காத்திட்டு இருக்கேன்.

நீ என்னடி என் நெஞ்சில் இவ்வளவு பெரிய குண்ட தூக்கி போடுற?இந்த பிஞ்சு நெஞ்சு தாங்காது செல்லம் என்று மனைவியை அழைத்துக்கொண்டு போய் கட்டிலில் படுக்க வைத்தவன் அவனும் கண்களை மூட பால் யாரு குடிப்பதாமென்றாள்.

அட ஆமா அத நான் மறந்துவிட்டேன் என்று எழுந்தவன் டேபிள் மேல் இருந்த சொம்பை எட்டி எடுத்து அதை மூடி இருந்த கிளாஸில் ஊற்றி மனைவியிடம் ஒரு டம்ளரையும் மீதத்தை குடித்து முடித்தவுடன் வாய் தொட செல்லம் இந்த பாரு என்று மனைவியின் வாய் ஓரமிருக்கும் பால் துளிகளை துடைக்க போக எனக்கு கை இருக்கு நீ அடங்கு என்றாள்.

வேலு வீடு:

சுமங்கலி பெண்கள் ஒற்றை படை எண்ணிக்கையில் செல்விக்கு நலுங்கு வைத்து முடிக்க வேலுக்கு அண்ணி முறை உள்ள பெண்ணோ செல்வி கட்டிக்க வேண்டிய புடவை மற்ற பொருட்கள் அடங்கிய தாம்பாலத்தை அவளிடம் நீட்டினார்.

அதை வாங்கிக் கொண்டவள் ஒருவித பயத்தோடு பக்கத்தில் இருக்கும் ரூமிற்கு சென்று குளித்து அதை கட்டிக் கொண்டு தயாரானாள்.

இரவு சாப்பாடு இருவருக்கும் ஒன்றாக பரிமாறியவர்கள் பூஜை ரூமுக்கு அழைத்துப் போய் பெற்றோர்கள் காலில் விழ சொல்லவும் அவர்கள் விபூதி குங்குமத்தை பூசி விட்டனர்.

பின்னர் எல்லாரும் அங்கிருந்து பின்னாடி இருக்கும் வீட்டிற்கு சென்றுவிட செல்வியிடம் சில விஷயத்தை அந்த பெண்மணி சொல்லிவிட்டு போக அவளோ பயந்து கொண்டு சரிக்கா சரிக்கா என்று தலையை ஆட்டினாள்.

தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top