• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
606
சென்னை:

சேகர் ஊருக்குள் போவதற்கு முன்பு வலது பக்கமாக ரோடு போகும் அதில் போ.. கோயில் ஒன்று தெரியும் அங்கு நிறுத்து சேகரென்று டிரைவரிடம் தன்ராஜ் சொல்ல,சரிங்க சாரென்றார்.

அதேபோல போல சிறிது நிமிடங்கள் சென்று ரோடு பிரிய, அந்த பாதையில் பஸ்ஸை வளைத்து ஓட்டிச் சென்று அங்கிருந்த கோயில் திடலில் நிறுத்தினார்.

சுற்றியும் ஓங்கி உயர்ந்த மலைகளாக இருக்க,அதன் நடுவில் கோயிலும் அதற்கு எதிரே திடலும் வீடு ஒன்று இருப்பதை பார்த்து இங்கவா நாம தங்க போகிறோமென்று அதிர்ந்தனர்.

பஸ்ஸிலிருந்து கீழே இறங்கிய தன்ராஜ் நேராக குளத்திற்கு சென்றவர் அதில் தலை முழ்கி கரையேறி கோயிலை நோக்கி சென்றார்.

மாணவர்களோ அவரை விசித்திரமாக பார்க்க எதையும் கண்டு கொள்ளாமல் பூட்டியிருந்த கதவு வழியாக உள்ளே இருக்கும் தெய்வத்தை பார்க்க கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

ஒரு நாள் இரண்டு நாளில்லை இதோ 30 வருடங்களுக்கு பின்னர் தங்களது குல தெய்வமான மலையம்மனை கண்ணீரோடு பார்த்தவருக்கு கடந்த கால காயங்கள் நினைவடுக்கில் வந்து சென்றது

சீமக்கரை:

மாப்பி ரொம்ப புகழாதே மாப்பி எனக்கு வெக்க வெக்கமா வருது என்று வேலு சொல்ல,வேணாம்டா மரியாதை கெட்டு போயிடும் ஏற்கனவே செம கடுப்புல இருக்கிறேன்.அது எப்படி டா நாயே எல்லாரும் ஒரே நேரத்தில் தான் வந்தோம் நீ மட்டும் எப்படி நேரத்தோடு எழுந்து வந்து உன் தங்கச்சி கிட்ட நல்ல பேரு வாங்கிட்ட என்கவும், அது ராஜ ரகசியம் மாப்பி..வெளியில சொல்ல முடியாது என்றான்.

இருக்கட்டும் டா இருக்கட்டும் எனக்கு நேரம் வரும் அப்ப தூக்கி போட்டு உன்னை மிதிக்கல உன் தங்கச்சி புருஷன் நான் இல்லடா என்று கதிர் சொல்ல போ மாப்பி ரொம்ப காமெடி பண்ணிட்டு இருக்க எனக்கு சிப்பு சிப்பா வருது என்றான்.

வரும்டா வரும் வாயை உடைப்பேன் ஒரு நாளைக்கு,அன்னைக்கு நீ எப்படி சிரிக்கிறனு நானும் பார்க்கிறேன் என்றவன் சரி வண்டியை எடு அந்த தடிமாடு என்ன நிலைமையில் இருக்குன்னு தெரியல.மிலிட்டரி வேற ஓவரா கத்துக்கிட்டு இருக்கும்.. நம்ம பங்குக்கு கொஞ்சம் எரிய நெருப்பில் பெட்ரோல் ஊத்தலாம் என்று கதிர் சொல்லு டபுள் ஓகே மச்சி..

உன்னையும் உன் பங்காளியையும் லெப்ட் ரைட் வாங்குறது எனக்கு அல்வா சாப்பிடுவது போல..அதை போய் நான் விடுவேனா டா என்று சொல்லிவிட்டு வேலுவும் வண்டியை ஸ்டார்ட் பண்ண,பின்னாடி வந்து உட்கார்ந்த கதிரோ வேலுவின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தான்.

அடேய் ஒலக்க.கையாடா இது கருமம் புடிச்சவனே.இருடா அந்த மேகலா கூட செல்பி எடுத்த இல்ல என் தங்கச்சி கிட்ட சொல்லுறேன் என்று வேலு சொல்ல, ஏற்கனவே மேகலா பேரைக் கேட்டு தாண்டா அவ கொலை வெறியில் இருக்கிறா என்று சொல்லவும், அதைக் கேட்ட வேலுவோ அப்படியா மாப்பி...

சூப்பரூஊஊஊ...கேட்கவே ஆனந்தமா இருக்கேடா...அதோட இதுவும் சேர்ந்துக்கட்டும்...வளைச்சி வளைச்சி செல்பி எடுத்தியே அதையும் நான் சொல்றேன் என்று சொல்லும் போது கை தட்டும் சத்தம் கேட்க,இருவரும் திரும்பி பார்க்க அங்கே தாமரை தான் நின்று கொண்டிருந்தாள்...

யாத்தேஏஏஏஏஏ...

இன்னைக்கு உன் தங்கச்சி கிட்ட சிக்கி செத்தேன்டா என்று கதிர் சொல்ல,உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் மச்சி.ஏதோ கொஞ்சம் நஞ்சம் சேதாரம் இல்லாமல் இருந்தின்னாக்க என்ன வந்து பாருடா என்க...

ஏண்டா மானங்கெட்டவனே இவ்வளவு நல்ல எண்ணமாடா உனக்கு நாதாரி பயலே..மரியாதையா நீயும் கூடவா அவ கிட்ட என்னால தனியா வாங்கி கட்டிக்க முடியாது.

அவள் கூட செல்பி எடுக்கும்போது இந்த பயம் இருக்கணும்,நல்லா இளிச்சுக்கிட்டு எடுத்த.அப்ப எங்கடா போச்சு?ஒரு வார்த்தை என்ன கூப்பிட்டியாடா என்கவும் ஏண்டா இப்போ உன்னை கூப்பிடலங்குறது தான் பெருங் கவலையா? என்று கதிர் முறைக்க கண்டிப்பா மச்சி அதில் என்ன உனக்கு சந்தேகம் என்று கேட்டான்.

தாமரையோ எதுவும் சொல்லாமல் கதிரை பார்க்க ஹிஹி என்று சிரித்தவன் சொல்லு செல்லம் மாமா ஏதாச்சும் வாங்கிட்டு வரட்டுமா என்க, எதுவும் சொல்லாமல் அவள் பாட்டுக்கு தறி மெஷின் இருக்கும் ரூமிற்கு சென்று விட்டாள்.

தொலைஞ்சேன் டா...

வாய் திறந்து பேசினாலே முடியாது. இந்த லட்சணத்தில் உன் தங்கச்சி உம்முன்னு வேற போறா, இப்ப என்னடா பண்றது மாப்பி ஏதாச்சும் வழி சொல்லுடா என்கவும்,உன் போனை தூக்கி போட்டு உடை எல்லாம் சரியாயிடும் என்று வேலு சொல்ல ஏண்டா ஏன்?.அதுல எவ்வளவு போட்டோஸ் இருக்கு அத போய் இப்படி உடைக்க சொல்றியேடா என்று வருத்தப்பட, அதானே மேகலாவோட போட்டோ இருக்குன்னு சொல்லுடா அதனால தான் உனக்கு உடைக்க மனசு வரலை.உன்ன பத்தி எனக்கு தெரியாதாடா என்று வேலு முறைக்க, டேய் அவள் இன்னொருத்தன் பொண்டாட்டி டா. இப்படி தப்பா பேசாத டா என்று கதிர் பதற...

ஓஓஓஓ....ஏண்டா பத்து ரூபாய் பண கட்டை அவள் மேல மழை போல தூவும் போது இந்த வெங்காய பேச்சுலாம் எங்கடா போனது.எவளையாவது ஒருத்திய ரசிக்க முடியுதா டா..ரெண்டு கம்மனாட்டி பயலுகளும் உன் தங்கச்சி தான் உன் தங்கச்சி தான் ஊர் உலகத்துல இருக்கிற எல்லாரையும் தங்கச்சியாவே இருந்தா என்னடா அர்த்தம் என்று வேலு கடுப்பாக கேட்க...

என்ன அர்த்தம் நீ பாசமலர் சிவாஜி டா என்கும் போது ஜானிடம் இருந்து அவர்களுக்கு கால் வந்தது. பங்கு தாண்டா போன் பண்றான் சீக்கிரம் கிளம்பு.பிறகு வந்து உன் தங்கச்சி கால்ல விழுந்து கெஞ்சி சமாதானப் படுத்துறேன் என்று சொல்ல,விதி மாப்பி விதி...இன்றைக்கு உனக்கு சனி பகவான் உச்சியில் நின்று தங்கச்சி உருவத்தில் ஊஞ்சலாட போகிறார்.

அதை தடுக்க வழியில்லை...நடப்பது நடக்கட்டும் என்று சொல்லி விட்டு இருவரும் அங்கிருந்து தேனூரில் இருக்கும் லாரன்ஸ் வீட்டை நோக்கி சென்றனர் நண்பனோடு பேசிக்கொண்டிருந்தாலும் சிந்தனை எல்லாம் தன்னவள் மீதே இருந்தது...

தன்னை சந்தேகப் பட மாட்டாள்.ஆனால் இதையெல்லாம் கேட்டு என்ன நினைக்கப் போகிறாளோ என்ற எண்ணமே அவனை யோசனை செய்ய வைத்தது.
.

மதுரை ஏர்போர்ட்:

அடியே இப்ப எதுக்குடி தேவை இல்லாம ஒப்பாரி வச்சிக்கிட்டு இருக்க?நான் என்ன திரும்பி வர மாட்டேனா என்று ஜான் பல்லை கடிக்க அல்லியோ அழுகையை மட்டும் நிறுத்தவில்லை.

கடவுளே சுத்தி எல்லாம் இவளோட சொந்தக்காரர்கள் இருக்கிறார்களே இவளை எப்படி சமாதப்படுத்துவது தெரியவில்லை என்று முணுமுணுத்தவன் செல்லம் மூணு மாசம் தான் ப்ராஜெக்ட் உன் அண்ணன் கல்யாணத்துக்கு எல்லாம் நான் வந்துருவேன் தயவுசெய்து என்னை நம்புடி என்றான்.

என்னன்னு தெரியல மாமா எனக்கு மனசு ரொம்ப ஒரு மாதிரியா இருக்கு என்று சொல்ல முதல் முதலாக தன்னவள் மாமா என்று அழைத்ததை கூட அவனால் அந்த நேரத்தில் ரசிக்க முடியவில்லை.

விட்டால் ஊர் வந்து சேர்ந்த வரைக்கும் அழுதுட்டு இருப்பாள் என்று நினைத்தவன் மற்றவர்களை பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் சிறிது இடைவெளி விட்டு அழுது கொண்டிருப்பவர்களை இழுத்து தன்னுடன் இறுக்கி அணைக்க வேலு அந்த நேரம் பார்த்து திரும்பியவன் அட மானங்கெட்டவனே எங்க அப்பா அம்மா இருக்காங்க டா...

நீ என்னடா வேலை பண்ணிட்டு இருக்க என்று பல்லை கடித்தவன் பின்னர் யாரும் அந்த பக்கம் திரும்பவிடாமல் இவன் முதுகு பக்கமாக மறைத்தபடி நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தான்.

அல்லி ப்ளீஸ் டிரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ இது என்னோட கனவு ப்ராஜெக்ட் ஒவ்வொரு முறையும் உன்கிட்ட இது விளக்கமா சொன்னாலும் இப்போதைக்கு புரியாது. இது முடிச்சுட்டு கண்டிப்பா நான் வந்துடறேன் புரியுதா?.

அப்படியோ போய்விட்டால் நீ என்னை விட்டுடுவியா இல்ல உன் மாமா தான் என்னை விட்ருவாரா சிண்டை பிடிச்சு இழுத்துட்டு வந்துடுவார் டி எங்க அப்பா என்று சொல்ல அதில் மனம் தெளிந்தவள் அடிக்கடி போன் பண்ணுங்க.இங்கு நான் காத்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்ல இந்த வாக்கை மட்டும் என்னால தயவு செய்து கொடுக்க முடியாது.

அங்கு வேலை அப்படி டி..நேரம் கிடைக்கும் போது நிச்சயம் நான் போன் பண்றேன் அதுக்குனு உனக்கு போன் பண்ணாம இருக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது சரியா...

ஒழுங்கா எக்ஸாம் எழுது வந்துடுறேன் என்று சொல்லி அவளின் கண்ணை துடைத்து விட்டவன் தைரியமாய் இருடி என்றவாறு அவளின் கையை பிடித்தவாறு தனது வீட்டினர் இருக்கும் இடத்திற்கு வந்தான்.

பின்னர் அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டிருக்க சிறிது நிமிடத்தில் அவன் செல்வதற்கான பிளைட்டின் அறிவிப்பு வந்ததும் எல்லாரிடமும் தலையை அசைத்து விட்டு ஜான் செல்ல அவனுக்கு மனதிற்குள் அல்லியை விட்டு பிரிந்து போவது ஒரு வித வலியை தான் கொடுத்தது...
அதன் பின்னும் அவன் நல்லபடியாக பிளைட்டில் ஏறி விட்டான் என்பதை தெரிந்து வீட்டுக்கு கிளம்பினர்.

அதன் பின்னர் நாட்களும் வேகமாய் ஓட தாமரையோ எப்பொழுது மேகாலாவோடு கதிர் செல்பி எடுத்தான் என்று தெரிந்ததோ அன்றிலிருந்து அவனிடம் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டாள்.

கதிரும் மனைவியிடம் எவ்வளவோ மன்னிப்பு கேட்டுப் பார்த்து விட்டான் அவள் எதையும் காதில் வாங்கவே இல்லை.நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் ஓடியது.செல்வியும் அல்லியும் நல்லபடியாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை எழுதி முடித்தனர்.

ஜானும் சொன்ன போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் அல்லியிடம் போனில் பேசிக் கொண்டிருக்க கதிரோ மனைவியின் காலில் விழுந்து கெஞ்சியும் அவள் மனம் மட்டும் இறங்கவில்லை.

இன்னொருத்தி கூட போட்டோ எடுக்கும் அளவுக்கு பிடித்தம் என்றாள் இதை எந்த விதத்தில் சேர்ப்பது என்று அவள் மனதிற்குள் ஓர் எண்ணம் வந்தது. ஆனால் இருவரும் வீட்டில் இருப்பவர்களுக்கு தங்களது ஊடலை பற்றி தெரியாமல் பார்த்துக் கொண்டனர்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
606
தாமரைக்கும் ஏழாவது மாதம் நடந்து கொண்டிருக்க ஏழாம் மாதத்திற்கான சீரையும் சிறப்பாக செய்து முடித்தனர் இன்னும் ஒரு மாதத்தில் செல்வி வேலுவிற்கு கல்யாணம் என்பதால் வீட்டினரும் அந்த வேலையில் பிஸியானார்கள்.

அதோ இதோ என்று நாட்களும் வேகமாக செல்ல கல்யாணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது.

நிலவனும் மூன்றாவது வருட கடைசி செமஸ்டர் எக்ஸாமை எழுதிவிட்டு வீட்டிற்கு வந்தவன் அவன் பங்கிற்கும் கல்யாண வேலையை பார்க்கலானான்.
விடிந்தால் முகூர்த்த கால் ஊன்றுவதற்காக சொந்த பந்தங்களிடம் சொல்லிட்டு வந்திருந்தனர்.

கதிரவனும் கிழக்கே உதயமானது.. காலை 7 லிருந்து 8 மணிக்குள் சொந்தங்கள் சூழ முகூர்த்த கால் நட்டனர்.

பின்னர் சிலரோடு கல்யாண வளையல் போட செல்வியை அனுப்பி வைத்தனர்.இன்று முதல் நலுங்கு தாய் வீட்டினருடையது என்பதால் ஊருக்கே தடபுடலாக விருந்து வைத்தனர்.

தாமரையோ தனது ஏழுமாத வயிற்றை தூக்கிக் கொண்டு அவளால் முடிந்த வேலையை செய்ய மற்றவர்கள் அவளை ஓய்வெடுக்க சொல்ல இருக்கட்டுமென்று சொல்லி விட்டாள்.

அன்றைய பொழுது நன்றாகவே போனது.

மறுநாளும் வந்தது.இன்று வேலுவின் வீட்டில் முகூர்த்தக்கால் ஊன்றி காப்பு கட்டு நிகழ்ச்சி இருப்பதால் அவர்கள் வீட்டில் எல்லாரும் ஒன்று கூடினர்.

நல்ல நேரத்தில் முகூர்த்த கால் ஊன்றி வேலுக்கு காப்பையை கட்டி முடிக்க தாய் மாமன் நலுங்குக்காக லாரன்ஸ் முத்து பெருமாள் மூவரும் சொந்த பந்தங்களையும் கூட்டிக்கிட்டு எண்ணற்ற சீர்வரிசியோடு ஊர்வலமாக வேலுவின் வீட்டை நோக்கி வந்தனர்.

வந்தவர்களை பார்வதி செல்வம் கவிதா அன்பழகன் தம்பதியினர் வரவேற்து வீட்டுக்குள் அழைத்துப் போனார்கள் பின்னர் முதல் நடுங்கை தாய்மாமன் வீட்டினரை ஆரம்பிக்க சொல்ல மூத்தவராக சீதாவே முதலில் தொடங்கி வைத்தார்.

ஒற்றைப்படையில் நலுங்கை வைத்தவர்கள் பின்னர் வேலுயை குளித்திட்டு வர சொல்ல வேலுவிற்கு அண்ணி முறை உள்ளவர்கள் தான் முதலில் அரப்பு தேய்த்து விட வேண்டும் என்பதால் சிலர் சேற்றை அள்ளி பூசி விட அந்த இடமே கேலி கிண்டல்களோடு சிரிப்பு சத்தமாக இருந்தது.

வீட்டினர் அனைவருக்கும் ஜான் இன்னும் வரவில்லையே என்ற ஒரு வருத்தம் தான் தவிர மத்தபடி பங்க்ஷன் எல்லாம் சிறப்பாகவே போய்க்கொண்டிருந்தது அதோ இதோ என்று ஏழு நாள் நலுங்கும் முடிந்து எட்டாவது நாள் பொண்ணழைப்பிற்கான நாளும் வந்தது.

கல்யாணத்தை அய்யனார் கோயில் திடலில் வைப்பதாக முடிவு பண்ணி இருந்ததால் அங்கே பந்தல் அலங்காரங்களை கதிரும் சிவாவும் பார்த்துக் கொண்டார்கள்.

இரண்டு வீட்டிலும் காலையிலே வாழைமரத்தை கட்டி பாட்டு ஒலிக்க விட ஊருக்குள்ளே எங்க திரும்பினாலும் இரண்டு வீட்டின் பாட்டு சத்தம் தான் கேட்டுக் கொண்டிருந்தது.

மனதிற்குப் பிடித்த தனது அத்தை மகனோடு கல்யாண நடக்கப்போகிறது என்று இத்தனை நாள் சந்தோஷத்தில் இருந்த செல்விக்கு கடந்த இரண்டு நாட்களாக இந்த வீட்டை விட்டு போகப் போகிறோமே என்பதை நினைத்து கவலை வந்துவிட்டது.

பக்கத்து தெருவில் தான் அத்தை வீடு என்றாலும் நம்ம வீடு என்று அடிக்கடி வர முடியாது என்ற எண்ணம் வராமலும் இல்லை.

உள்ளூரில் தான் கவிதாவும் பார்வதியும் கல்யாணம் பண்ணி இருக்கிறார்கள் அவர்களும் வெளி ஊரில் இருப்பது போல தான் நடந்து கொள்வார்கள் அப்ப நம்மளுக்கும் இதான் நிலைமை என்று நினைத்தவளுக்கு அழுகையாக வந்தது.

அத்தைகள் இருவரையும் செல்விதான் கிண்டல் பண்ணுவாள் உள்ளூரில் இருந்து கொண்டு வீட்டுக்கு வர முடியலையா என்று இப்பொழுது தான் அவளுக்கும் பிறந்த வீடாக இருந்தாலும் அளவோடு இருந்தால் தான் மரியாதை என்பது புரிந்து..

அதேபோல் அவள் வீட்டினருக்கு இந்த கவலை இல்லாமல் இல்லை.அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தனர் பார்வதி சிந்து கவிதாவுக்கு பிறகு செல்வி தான் அந்த வீட்டுக்கு பெண் வாரிசு.

ஒற்றைப் பெண் என்பதால் எல்லாருக்குமே அவள் மீது பாசம் அதிகம் அதுவும் பெருமாளை விட முத்துக்கும் ராதாவுக்கு தான் செல்வி என்றால் உயிர்.

முத்துவோ ராதா என்ற வீட்டுக்குள் வருவதை விட செல்வி என்று கூப்பிட்டுக் கொண்டே தான் வருவார்.

நேரமும் கடந்து செல்ல பரிசம் போட்டு பொண்ணழைப்பதற்காக கவிதாவும் அன்பழகனும் பரிசகட்டு கூடையோடு ஊர் தலைவர்கள் சிலரோடு செல்வியின் வீட்டிற்கு மேளதாளம் முழங்க வந்தனர்.

வந்தவர்களை எல்லாரையும் வரவேற்து உக்கார வைக்க பின்ன நல்ல நேரத்தில் செல்வியை வரவைத்து பொண்ணழைப்பிற்கான புடவை மற்றும் சீர் வரிசை பொருட்கள் அடங்கிய தட்டை கொடுக்க அவளோடு அல்லியும் கூட வந்து வாங்கிக் கொண்டு ரூமிற்கு போனார்கள்.

பியூட்டிஷனும் அங்கே தயாராக இருக்க பின்னர் செல்விக்கு அந்த புடவையை மாற்றி கட்டிவிட்டு தயார் படுத்தினர்.

பின்னர் நல்ல நேரத்திற்கு அழைத்துப் போக தயாராக செல்வியோ எல்லாரையும் கட்டிக்கொண்டு அழுதாள் ஒரு வழியாக மகளை சமாதானப்படுத்தி தங்கை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

எல்லாரும் அங்கே சென்று விட நேரம் ஆனதால் தாமரை மட்டும் வீட்டில் இருந்து கொண்டாள்.சிறிது நிமிடம் வரை அத்தை வீட்டில் இருந்த கதிர் மனைவி இங்க தனியாக இருப்பாள் என்பது தெரிந்து உடனே அங்கு வந்து விட்டான்.

தாமரையோ சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க தண்ணீர் தாகம் எடுப்பது போல் இருக்கும் கையை ஊன்றி எழுந்து கிச்சனுக்கு போக அங்கு தரையில் தண்ணீர் இருப்பது தெரியாமல் காலை வைக்க வழுக்கி விழப் போக அந்த நேரம் உள்ளே வந்த கதிரோ மனைவி விழப்போவதை பார்த்து தாமரை என்ற ஓடி வந்து மனைவியை அணைத்தான்.

ஒரு நிமிடம் தாமரைக்கு உயிரே போய்விட்டது.பயத்தில் அவளுக்கு வேர்த்து விட உடல் நடுவதை கதிரால் உணர முடிந்தது.

அதிர்ந்து போயிருக்கும் மனைவியின் உதட்டோடு தனது வலிமையான உதட்டை பதித்து ஆழ்ந்த முத்தத்தை கொடுத்தவன் சிறிது நேரம் சென்று மனம் இல்லாமல் குனிந்து மனைவியை தூக்கிக்கொண்டு கீழே இருக்கும் ரூமிற்கு போனவன் அங்கிருந்த பெட்டில் படுக்க வைத்து விட்டு கதவை சாற்றி விட்டு உள்ளே வந்தான்.

தாமரையோ அதிர்ச்சியில் அப்படியே தான் உறைந்து போயிருந்தாள்.ஒன்னும் இல்லடி அதான் வந்துட்டேனே எங்கவும் மாமா என்றவாறு கணவனின் சட்டையை கொத்தாக பிடிக்க அவள் பயந்து போய் இருப்பது நன்கு உணர்ந்தவன் ஒன்னும் இல்லடி ஒன்னும் இல்லடி...

நான் தான் இங்க இருக்கேனே என்று சொல்ல தாமரையும் இன்னும் நடுங்கிக் கொண்டே கணவனின் சட்டையை இறுக்கமாக பிடிக்க இப்பொழுது மனைவியின் பயத்தை போக்குவது தான் முதல் வேலை என்பதை புரிந்தவன் மனைவியோடு அந்த கட்டிலில் சரிந்தான். ..

நேரமும் கடந்து செல்ல தாமரை தூங்கிவிட்டதை உணர்ந்தவன் ஆடைகளை சரி பண்ணிவிட்டு போர்வையால் போர்த்தி விட்டு மனைவியின் நெற்றியில் முத்தமிட்டவன் நான் இருக்கும்போது உன்னை அப்படியே விட்டு விடுவேனாடி என்று சொல்லும் போது கதிருக்கும் கண்கள் கலங்கியது.

ஒருவேளை யாரும் இல்லாத நேரத்தில் கீழே விழுந்து இருந்தால் என்ன ஆவது என்பதை நினைக்கவே அவனுக்கு நெஞ்சை பிளப்பது போல் இருந்தது.

வேட்டு சத்தம் மேள தாளத்தோடு செல்வியை அழைத்து போக மணமகளே வா என்று பாடல் ஒலிக்க விட கவிதா ஆரத்தி எடுத்துட்டு வந்து மருமகளுக்கு சுத்தி விட்டு நெற்றியில் பொட்டு வைத்து உள்ளே அழைத்துப் போய் சாமி ரூமில் விளக்கேற்ற சொல்லி மற்ற சம்பிரதாயங்களை முடித்துவிட்டு அங்கு இருக்கும் இன்னொரு அறைக்குள் செல்வியை அனுப்பி வைத்தனர்.

அவளோடு இருந்த அல்லிக்கு சிந்தனைகள் எல்லாம் தன்னவன் மேலில் தான் இருந்தது.கடந்த ஒரு வாரமாக ஜானிடம் இருந்து ஒரு போன் இல்லை மெசேஜ் இல்லை கல்யாணத்துக்கு வந்து விடுவேன் என்று சொன்னார் இன்னும் வரவில்லையே என்று தனக்குள் இருக்கும் கவலையை வெளியே காட்டிக் கொள்ள இயல்பாக இருப்பது போல் நடித்துக் கொண்டிருந்தாள்.

நேரமும் கடக்க அனைவரும் தூங்கிவிட்டனர் அங்கே மண்டப அலங்காரத்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து வேலுவோ தன்னவள் வீட்டிற்கு வந்து விட்டால் என்பதை நினைக்கவே மனசுக்கள் மத்தாப்பு சத்தம் கேட்டது. ..

விடியலும் அழகாய் ஆரம்பமாக காலை 7:30 ல் இருந்து 9 முகூர்த்தம் என்பதன் அதற்காக எல்லாரும் தயாராகிக் கொண்டிருந்தனர் .

செல்வியை அலங்காரப் பண்ணி முடித்து விட்டு அங்கே கோயிலுக்கு அழைத்து சொல்ல வந்திருந்தனர் செல்வியோடு அல்லி சொந்தக்காரர் இருவரும் காரில் ஏற திருமணம் நடக்க போகும் இடத்தை நோக்கி சென்றனர்.

மணவரையில் வேலுவோ அவனுடைய அப்பா அம்மாக்கு பாத பூஜை செய்து முடிக்கவும் அவனுக்கு பட்டு வேஷ்டி துணியை கொடுத்து கட்டிட்டு வர சொல்லிக் கொடுக்க அவனோ பக்கத்து ரூமுக்கு செல்ல பின்னர் செல்வி வரவைத்து அவர்கள் பெற்றோருக்கு பாதை பூஜை செய்ய சொல்ல, ராதாவையும் முத்து இருவருமே பாத பூஜைக்கு பெருமாள் போக சொன்னார்.

எல்லா சடங்கு முடித்த பிறகு பின்னர் அவளுக்கும் கூரப்புடவை கட்டிட்டு வர சொல்லி அனுப்பி வைக்க, தன்னவன் இன்னும் வந்து விட மாட்டானா என்று ஏக்கத்தோடு வாசல் பக்கம் திரும்பிய அல்லி அங்கே கார் ஒன்று வந்து நிற்பதை பார்க்க அதிலிருந்து ஜான் இறங்கி வந்தான்...

தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top