• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
603
சென்னை:

என்னப்பா எல்லாரும் வந்துட்டீங்களா என்று கேட்டுக்கொண்டே தன்ராஜ் அந்த பஸ்ஸில் ஏற எஸ் ஆர் என்றனர்.ம்ம் என்றவாறு கையில் இருந்த லிஸ்ட்டில் உள்ள பெயர்களை படிக்க சொல்லி நிலவனிடம் கொடுத்தார்.

அவனும் படிக்க மாணவர்களும் எஸ் சார் எஸ் சார் என்று சொல்லிக் கொண்டே இருக்க இன்னும் மூவர் மட்டும் வரவில்லை என்பது தெரிந்தது.

எத்தனை முறை படிச்சு படிச்சு சொன்னாலும் நேரத்துக்கு வரணும்னு அந்த மூணு எருமை மாடுகளுக்கும் சுத்தமா தெரியாது என்று தன்ராஜ் திட்டிக் கொண்டிருக்கும் போது அவனுங்களும் பஸ்ஸில் ஏறியவனுங்கள் ரொம்ப புகழாதீங்க சார் என்க,திரும்பிப் பார்த்து முறைத்தவர் நீங்களாம் டாக்டர் என்று வெளியில் சொல்லிக் கொள்ளாதீங்கடா.

இந்த சேவையில் பஞ்சுவாலிட்டி ரொம்ப முக்கியம் ஒவ்வொரு நிமிஷமும் நீங்க தாமதிக்கிறது ஒரு உயிரை இழப்பதற்கு சமம் என்று செண்டிமெண்டாக பேச,ரொம்ப நெஞ்சை நக்காதீங்க சார் முடியல என்று அதிலிருந்த ஒருவன் சொல்ல வேணாம்டா கொலை வெறியில் இருக்கேன் அப்புறம் கடுப்பாயிடும் மரியாதையா போய் உட்காருங்கள் என்றார்...

இப்படி தூங்கிக்கொண்டு இருந்த பூனைக்குட்டியை சிங்கமா எழுப்பி விட்டுட்டீங்களேடா இதெல்லாம் நல்லாவா இருக்குன்னு நிலவன் அவர்களில் ஒருவனை பார்த்து கேட்க விடுடா நம்ம சார் தானே என்றான்.

பின்னர் கீழே இறங்கிய தன்ராஜ் மேனேஜ்மெண்ட் கிட்ட சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏற மருத்துவ மாணவர்களை ஏற்றிக்கொண்ட பஸ்ஸூம் வனிச்சூரை நோக்கி புறப்பட்டது.சிறிது நிமிடங்கள் வரை அமைதியாக வர எந்திரிச்சி நின்ற தன்ராஜ் என்னடா ஊமை ஆகிவிட்டீர்களா? என்கவும் ஆமா பேசினாலும் உங்களுக்கு குத்தம் பேசவில்லை என்றாலும் உங்களுக்கு குற்றம் என்று அதிலிருந்த மாணவன் ஒருவன் சொல்ல...அவ்வளவு நல்லவன் கிடையாதேடா நீங்கள்....

இவ்வளவு நேரம் நீங்க அடக்கி வாசிக்கிறேனென்றால் ஏதோ பெரிய சம்பவம் இருக்க போகுதுன்னு அர்த்தமென்று சிரித்தார்...

நீங்கதான் சார் எங்களை நல்லா புரிஞ்சிக்கிறிங்க என்று சொல்ல என்ன பண்றது கழுதை கெட்டா குட்டிசுவரு உங்கள போல எத்தனை பேரு பார்த்திருக்கிறேன் என்றார்.

அடேய் தடி பயலுங்களா உங்களுக்கு திரும்பவும் சொல்றேன் உங்க வாலுத்தனத்தை எல்லாம் அங்க வந்து காட்டாதீங்க...மெயினா பாலு கமல் விஷ்வா உங்களுக்காக தான் சொல்றேன் பார்த்துக் கொள்ளுங்கள் என்க..

அய்யோ சார் எங்கள பார்த்து என்ன இப்படி சொல்லிட்டீங்க என்று பதறினான்...

நீங்க மூணு பேரும் இருக்கிறதால் தான்டா எனக்கு பயமாக இருக்கு.எத்தனையோ செட் மாணவர்களை அனுபவத்துல பாத்துட்டேன்.ஆனா இந்த நாலு வருஷத்துல உங்களை போல அடங்காத பிடாரிங்களை என் வாழ்க்கையில் நான் சந்தித்ததே இல்லடா என்ற முறைத்தவர் சரி சரி போதும் உங்கள் வால் தனத்தை சுருட்டி வச்சதெல்லாம்...என்ஜாய் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு அவருக்கான சீட்டில் போய் உட்கார்ந்து கண்ணை மூடியவருக்கு அந்த ஊரிலிருந்த ஏதேதோ நினைவுகள் வந்தது.

நிலவனும் வீட்டுக்கு போன் பண்ணி கிளம்பி விட்டேனென்று சொல்லி விட்டு போனை வைத்தவனுக்கு மனம் ஏனோ குதூகலமாக இருந்தது.

மதிய உணவு சாப்பிட்டு விட்டு சென்னையில் இருந்து கிளம்பினர். நேரமும் கடந்து செல்ல இரவு உணவை மதுரைக்கு வந்து சாப்பிடும்போது இரவு பத்து மணி ஆனது.சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் பயணத்தை தொடங்கினர்.

நள்ளிரவுக்கு மேலே மதுரையிலிருந்து கிளம்பிய மெடிக்கல் காலேஜ் மாணவர்களும் வனிச்சூருக்கு வந்து சேர காலை ஆறு மணி ஆனது. பொதுவாகவே நிலவன் இரவு நேர பயணத்தை ரொம்ப ரசிப்பான் என்பதால் இரவு முழுவதும் தூங்காமலே பாட்டு கேட்டுக் கொண்டே வந்தான்.

வனிச்சூரில் இருக்கும் ஹோட்டலின் முன்பு பஸ்சை நிறுத்த மாணவர்கள் எல்லாம் கீழே இறங்கி அந்த சூழலை சுற்றி பார்த்து வியந்தவர்கள் அங்கிருந்த கடைக்குள் சென்று அவரவர்களுக்கு தேவையான டீ காபி என்று ஆர்டர் பண்ணி குடித்தனர்..

அரை மணி நேரம் சென்று இருக்க அந்த மலைப்பாதையை காட்டிய தன்ராஜ் அதில் உள்ளே போகணும் என்று டிரைவரிடம் சொல்ல, சரிங்க சார் என்று கேட்டுக் கொண்டு அவரும் அந்த பாதையில் பஸ்சை ஓட்டினார்...

எப்ப பாத்தாலும் வாகனங்கள் நிறைந்த ரோடுகளையும் ஓங்கி உயர்ந்த அப்பார்ட்மெண்ட்டையும் பார்த்த மாணவர்களுக்கு இங்கே சுற்றிலும் இயற்கை சூழ்ந்திருக்கும் இடத்தை ரசனையோடு பார்த்தனர்.

சீமக்கரை:

யோவ் உன்ன தான் கேட்கிறேன் மதியம் போன மனுஷன் நைட் ரெண்டு மணிக்கு வீட்டுக்கு வர.எங்க போய் சுத்திட்டு வர ஒழுங்கு மரியாதையா சொல்லு?.

அடியேய் செல்லம் உன் அண்ணன் கூடையும் கொழுந்தன் கூட தான் டி போனேன்.வேற எங்க போக போறேன் சொல்லு என்று கதிர் மனைவியை பார்க்க,சும்மா இந்த சமாளிக்கிற வேலை எல்லாம் என்கிட்ட காட்டாத. மரியாதையா சொல்லு எங்க போய் சுத்திட்டு வர நீனு என்று தாமரை கோபமாக கேட்க எங்கேயும் சுத்த போல டி செல்லம்..மேலூரில் திருவிழா அதை பார்க்க போயிருந்தேன் டி என்றான்.

எதேஏஏ மேலூர்லயா அது மதுரை கிட்ட இருக்கு தானே என்கவும் ஆமாடி அதுக்கு தான் சீக்கிரமா போய் விட்டோம் என்று பெருமையாக சொல்ல அப்படி என்ன திருவிழாவுக்காக ஊருக்கு முன்னாடி ஓடி போயிருக்க பாக்குறதுக்கு என்றாள்...

அதாவது செல்லம் நம்ம மேலூர் மேகலா இருக்கிறாளே அவ டான்ஸ் இருக்கே அட அட ரொம்ப வருஷம் ஆகுதுடி பார்த்து.சரி பங்கு வேற நாளைக்கு ஊருக்கு போறேனா, இந்த விஷயம் கேள்விப்பட்டோம் எங்களுக்கு தெரிஞ்ச பிரண்டு எல்லாம் அங்க மேலூர்ல இருக்குறானுகளா அவனுங்களும் வாங்கடா என்று கூப்பிட்டானுங்க அதனால தான் போனோம் டி.பத்து வருஷத்துக்கு முன்னாடி பார்த்த போல இப்பவும் அப்படியே இருக்கிறாள் எப்படித்தான் மெயின்டன் பண்றானு தெரியலைடி..

கடைசியா ஜானு லண்டன் போறதுக்கு முன்னாடி நான் உன் நொண்ணன் ஜானு மூணு பேரும் போனோம் டி அப்போ 18 வயசு பருவம் இல்லையா ரொம்ப அழகா இருப்பா டி அவளுக்கு மேக்கப் துளி கூட தேவை கிடையாது...
இருந்தாலும் அந்த அழகுக்கு இன்ன ரெண்டு இஞ்சி ஏத்தி ஒரு சிலுப்பு சிலுப்புவா பாரு அட அட என்ன டான்ஸ் தெரியுமா விடிய விடிய ரசிக்கலாம் என்று சொல்லிவிட்டு மனைவியை பார்க்க அங்க தாமரையோ கொலை வெறியில் நின்றாள்..

ஆஹா.....

ரொம்ப ஓவரா பேசிட்டோம் போலயே சும்மாவே இவள் லெப்ட் ரைட் வாங்குவாள்.நம்ம வேற மேகலாவ பத்தி ஓவரா பேசிட்டோமே வச்சு செய்யப் போறாளே...சரி சமாளிப்போம்.அழகை ரசிப்பதுக்கு தானே செல்லம் ஆண்டவன் கண்ணை கொடுத்திருக்கிறான்...

எதையும் கலைநயத்தோடு பார்த்துட்டு கடந்து வந்தரனும் மற்றபடி மேகலா என்ன உன் மாமா வாழ்க்கையில வந்து வாழ போறாளா சொல்லு தாமரைக்கு மட்டும் தான் இந்த கதிரின் மனசுல இடம்,வாழ்க்கைலயும் இடம்..இந்த வருஷம் ஆடி முடிச்சவள் இதோட அடுத்த வருஷம் அவங்க ஊர் திருவிழாவுக்கு மட்டும்தான் ஆடுவாள். வேற எந்த ஊருக்கும் போக மாட்டாள்.
போனாக்க நல்ல பேரும் புகழும் கிடைக்கும் ஆனா அந்த பொண்ணு அவ புருஷன் கூட மட்டும் தான் ஆடுவா தெரியுமா? புருஷன் பொண்டாட்டி தான் அங்க ஜோடியாக ஆடுவார்கள்...

நம்ம கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் சொல்ற போல சிவாஜி பத்மினி ஜோடி போல தான் அவங்க ஜோடி இருக்கும் என்று பேசிக்கொண்டே போக தாமரையோ பொருத்து பொருத்து பார்த்தவள் படாரென்று கதிரின் நெஞ்சிலே ஒரு அடியை வைத்தாள். ..

சுள்ளென்று அடி விழ முகத்தை சுருக்கியவன் ஏண்டி செல்லம் எதுக்கு இப்ப மாமாவ அடிக்கிறடி...

ஏண்டா உனக்கு எவ்வளவு திமிரு இருந்தாக ஆட்டம் பார்க்க போனதில்லாமல் அடுத்தவன் பொண்டாட்டியை இவ்வளவு ரசிச்சிட்டு இருக்க,அப்போ உன் மனசுல எப்படிப்பட்ட எண்ணம் இருக்கும் சொல்லுடா என்றாள்..

அய்யய்யோ செல்லம் தப்பா நினைக்காதடி மாமா கலையை மட்டும் தான் ரசிப்பேனே தவிர அந்த கலைக்கு சொந்தமானவளை ரசிப்பது கிடையாது...

ஆயிரம் தான் இருந்தாலும் மேகலா இன்னொருத்தன் பொண்டாட்டி டி அவள வந்து உன் மாமா கூட சேர்த்து வைத்து பேசாதே எனக்கு ஒரு மாதிரியா இருக்குடி என்கும் போது வாய மூடுடா மானங்கெட்டவனே...

நான் எங்கடா உன் கூட சேர்த்து வச்சு பேசினேன்? .நீ தாண்டா உன் கூட அவளை சேர்த்து வச்சு பேசுற மனசுல இவ்வளவு ஆசை இருக்கா உனக்கு என்க...

நமக்கு இந்த வாயால தான் வாஸ்து சரியில்லை என்று சொல்கிறோம் இருந்தாலும் மூடிக்கிட்டு சும்மா இருக்க மாட்டேங்குறோமே என்று முழித்தான்...

தங்கமே உன் புருஷனை இப்படி ஒரு வார்த்தை சொல்லாதடி ஒவ்வொரு வார்த்தையும் ஈட்டியால எனக்கு நெஞ்சுல பாயுற போல இருக்குடி என்க...உன் நடிப்பு எல்லாம் தயவு செய்து நிறுத்து என்னால முடியல மாமா என்றாள்..

நிஜமாவே திருவிழாவை பார்க்க தாண்டி போனேன் மேகலாவை ரசிக்கிறதுக்காக எல்லாம் மாமா சத்தியமா போகல என்கவும்,இதே கதையை சொல்லிட்டு இருக்கியே என்று கதிரின் முடிரை பிடித்து ஆட்ட எப்படி பேசினாலும் பாயிண்ட புடிக்கிறியேடி நான் என்ன தாண்டி சொல்றது...

ஐயோ தங்கம் அவசரப்பட்டு இதுக்காக உன் மாமா கிட்ட பேசாம எல்லாம் இருந்துடாதடி.நாலு அறை வேணாலும் அறைஞ்சிக்க..உன்கிட்ட பேசாம சத்தியமா என்னால இருக்க முடியாது என்றான்..

இதுவரை அமைதியாக இருந்த தாமரையோ கணவன் சொன்னதைக் கேட்டு அவனைப் பார்த்தவள் இப்ப எதுக்கு ஓவரா சோப்பு போட்டு இருக்கிற..பேசமாட்டேன்னு நான் சொல்லவே இல்லையே நீயாவே பில்டப் பண்ணிக்கிட்டு இருக்குறியே அப்போ உன்னோட ஆசை நான் உன்கிட்ட பேசாம இருக்கணும் அதுதானே?.

இப்படி ஒரு கேள்வி வரும் என்று எதிர்பார்க்காத கதிரோ எதேஏஏ என்று திருதிருவென முடித்தான்.

ஏன் போன எதுக்காக நீ அவளை ரசிச்சேன் எல்லாம் நான் உன்னை கேட்கல எங்க போறோன்னு சொல்லிட்டு போகலை என்று தான் நான் கேட்கிறேன்.கலையை ரசிப்பது தான் மனுஷனோட குணம் அதனாலதான் நமக்கும் மிருகத்துக்கும் வித்தியாசம் தெரியுது.

நான் கூட தான் ரசிப்பேன்...தாமஸ் இருக்கானே அட அட அந்த போலீஸ் கெட்டப்ல பிச்சு திங்கலாம் போல இருப்பான்..நம்ப ஆஷிப் இருக்கானே வாவ் அந்த வேஷ்டி சட்டைல வருவான் பாரு அல்டிமேட்.நம்ம டொவினோ...எல்லா கெட்டப்லையும் சூப்பரா இருப்பான் தெரியுமா என்க....தாமரை ஒவ்வொரு பெயராக சொல்ல சொல்ல கதிருக்கோ பத்தி கொண்டு போனது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
603
நம்ம முகுந்தன் பற்றி தெரியுமா என்கவும் அடியே ஒழுங்கு மரியாதையாக வாயை மூடு என்றவன் எட்டி மனைவியின் வாயை பொத்தியவன் உனக்கு எவ்வளவு திமிர் இறந்தா கண்டவனையெல்லாம் ரசித்து என்கிட்ட சொல்லுவடி...

இனி இப்படி சொல்லுவியா என்று அவள் கன்னத்தை பல் பதிய நன்கு கடித்தவன் உன் கிட்ட பலவாட்டி சொல்லி இருக்கிறேன் என்னை தவிர நீ வேற எவனையும் ரசிக்க கூடாது என்று அப்படியே இருக்கும்போது எவனுங்களோ தாமஸ் நவீனு முகுந்தன் இன்னொருத்தன் பேரு சொன்னியே ஆஷிப்பு எவண்டி இவனுங்க.இவனுங்கையெலாம் எங்கடி பார்த்து என்று கொலவெறியில் கேட்க ஏன் நான் கலையை ரசிக்க கூடாதா?.

உனக்கு மட்டும் தான் ஆண்டவன் கண்ணு கொடுத்திருக்கிறானா எனக்கு கண்ணு கொடுக்கலையா என்று அடக்கப்பட்ட கோபத்தில் தாமரை கேட்கவும் அதுக்காக நான் ரசிக்கறதும் நீ ரசிக்கிறது ஒன்னாயிட முடியுமாடி...

சொல்லுடி...

ஆம்பள ஆயிரம் பண்ணுவாண்டி பொம்பளைங்க எப்படி கண்டவனை ரசிக்கலாம் என்கவும் தன்னை பிடித்திருந்த கையை தட்டி விட்டவள்,அது என்ன தப்பு பண்றதில் ஆம்பள பொம்பளைன்னு...யாரு பண்ணாலும் தப்பு தப்பு தானே என்று கணவனை பார்க்க செத்தடா என்று சொல்லிக் கொண்டான்...

சரி சமாளிப்போம் என்றவன் செல்லம் யாரு தப்பு பண்ணினாலும் தப்பு தப்பு தான் அதில் ஆண் பெண் கண்டிப்பா வித்தியாசம் கிடையாது உன் மாமா தப்பு பண்ணினாலும் அவனை நீ விளக்கமாத்தில் அடிக்கலாம் என்றான்.

ஓ என்றவள் ரூமை சுற்றிப்பார்க்க அங்கே மூளையில் தொடப்பம் கிடப்பது கண்ணில் பட்டது மனைவியின் பார்வை போன திசையில் கதவிடம் பார்க்க ஆத்தாடி அடிக்கிறதுக்கு நம்மளே ஆயுதம் எடுத்து கொடுக்கிறோமே...

செல்லம் ஒரு பேச்சுக்கு சொன்னேன் டி உடனே மாமாவ இப்படி அடிக்கலாமா அது தப்பு இல்லையே என்கவும் முதல்ல மூடு வாய.நேரம் ஆயிடுச்சு. நீ தான் வேலை வெட்டி இல்லாதவன்.அடுத்தவன் பொண்டாட்டி ஆடுறது குதிக்கிறது பார்த்துட்டு ரசிச்சிட்டு இருப்ப நான் ஒன்னும் அப்படி இல்லையே என்றவள் எதுவும் பேசாமல் போய் பெட்டில் படுத்து விட்டாள்.

கதிரு உன் பொண்டாட்டி அமைதியா போய் படுத்தவே அடுத்ததா உனக்கு ஆப்பு ரெடியா இருக்குனு அர்த்தம் விடாத..காலில் விழுந்து மன்னிப்பு கேளு என்று மனசாட்சி சொல்லியது.

இவ்வளவு நேரம் நின்னுகிட்டே பேசினியே கால் ரொம்ப வலிக்கும் டி மாமா கால் அமுக்கி விடுறேன் என்று சொல்லிக்கொண்டே மனைவியின் காலை பிடித்து விட தாமரையோ எதுவும் சொல்லாமல் அமைதியாக படுத்திருந்தாள்..

சிறிது நிமிடத்தில் அவள் தூங்கி விட அவனோ மனைவியின் கால்களை அமிக்கு கொண்டு ஏதாச்சு பேசுவாள் என்று காத்திருக்க நிமிடங்கள் கடந்து சென்றே மனைவி தூங்கியது தெரிந்து கையை உதறியவன் காலைல என்ன காத்திருக்கோ வாங்குவோம்.வேற வழி, ஆட்டம் பாக்க போனோம் இல்லையா அப்போ அதுக்கான பலனை அனுபவித்து தான் ஆகணும் என்று புலம்பி கொண்டு ரெஸ்ட் ரூமிற்குள் சென்றவன் ப்ரஷாகிவிட்டு பெட்டின் இன்னொரு பக்கம் படுத்து விட்டான்..

ஆதவனும் கிழக்கே உதயமானது...

வழமை போல அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.இன்று 12 ஆம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் ஆரம்பம் என்பதால் காலையிலே எழுந்து குளித்து தயாராகிய ராதா, சீதா, செல்வி மூவரும் அவர்கள் குலதெய்வமான அய்யனார் கோயிலுக்கு போனவர்கள் கோயிலை கூட்டி கழுவி விட்டு எடுத்து போன பழங்களை வைத்து சூடம் ஏற்றி வணங்கி விட்டு வீட்டிற்கு வர ஏழு மணிக்கு ஊதும் பாங்கு சத்தம் கேட்டது..

நேரமும் கடந்து செல்ல செல்வியும் சாப்பிட்டு தயாரானவள் வீட்டினரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு வெளியே போக வளவனும் வண்டியில் காத்திருக்க தங்கையை அழைத்துக்கொண்டு போக சிவாவும் அல்லியோடு வந்தான்.

பேசிக்கொண்டே ஸ்கூலுக்கு வந்தனர்.

நல்லா எழுதுங்களென்று இருவரும் சொல்லிட்டு வேலைக்கு போனார்கள்...

தூங்கி எழுந்த கதிரோ பெட்டில் மனைவியை தேட வெறுமையாக இருக்கவும் எழுந்து சோம்பல் முறித்து விட்டு போனில் மணியை பார்த்தவன் என்ன மணி 10 ஆஆஆஆஆ என்று அதிர்ந்தான்.

பின்னர் வேகவேகமாக குளித்து தயாராகி கீழே வர..அங்கே வேலுவோ வள்ளி அப்பாயிடம் உன் பேரனுக்கு கல்யாணம் ஆகி குழந்தையும் வர போகுதே கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்க செல்லம்?மணி என்ன ஆகுது இன்னும் அந்த எருமை மாடு தூங்கிட்டு இருக்கு..இத போல சோம்பேறி புடிச்ச பயலுக்கு என் தங்கச்சியை கட்டிக் கொடுத்திருக்கோமே என்னத்த சொல்வது என்க...

அதைக் கேட்டுக் கொண்டே வந்த கதிரோ கொலவெறியில் தனது மச்சானையும் முறைத்துக் கொண்டே ஊஞ்சலில் உட்கார்ந்தான்...

அப்பாயியோ தனது பெரிய பேரனை பார்த்தவர் என்னய்யா அப்பு உடம்பு எதாச்சும் சரி இல்லையா என்கவும் அந்த நேரம் பார்த்து டிவியில் ஒத்த ரூபாய் தாரேன் ஒரு உனப்பு தட்டும் தாரேன் என்று பாட்டு ஓட கிச்சனிலிருந்து வெளியே வந்த தாமரையோ இன்னும் கொஞ்சம் வால்யூமை அதிகமாக வைக்க மனைவியின் செயல் புரிந்து கதிரோ திருத்திருவென்று முழித்தான்...

செத்தான் சிவனாண்டி என்று சொல்லிக் கொண்டு வேலு சிரிக்க எட்டி மிதிச்சேன் மூஞ்சு மொகரைலாம் பேந்துட்டு போயிடும் என்க...

நான் சிரிச்சா உனக்கு எங்கடா பத்திகிட்டு போகுது நாயே என்றவன் செல்லம் இங்க ஒரே அக்கினி மூளையா இருக்கு எரிச்ச தாங்க முடியல..வா அங்கு போய் உட்காரலாம் என்று பாட்டியோடு எழுந்து போய் டிவியின் முன்னால் இருக்கும் சோபாவில் உட்கார்ந்து கொண்டான்.

அம்மா டி ஏதாச்சு குடுப்பியா குடுக்க மாட்டியா என்று கதிர் குரல் கொடுக்க மகனின் குரல் கேட்டு எட்டிப் பார்த்த சீதாவும் பின்னர் டீ எடுத்துட்டு வந்து கொடுத்தார்.

வேக வேகமாக குடித்தவன் மனைவியை தேடி தறி இருக்கும் ரூம் கதவை திறந்து போக அங்கு தாமரையோ வீடியோ காலில் வினிதா கூட பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது...சிறிது நிமிடங்கள் நின்று பார்க்க தாமரையும் போனை வைப்பது போல் தெரியவில்லை.சரி பழி வாங்கணும்னு முடிவு பண்ணிட்டாள் என்று முணுமுணுத்துக் கொண்டு வெளியே வர அங்கிருந்து வேலூவோ என்ன மச்சி தங்கச்சி லெப்ட் ரைட் வாங்கிட்டு போல..நாலு அஞ்சு விளக்குமாறு பிஞ்சு கிடக்கு ரொம்ப காயமாடா என்று சிரிக்க, டேய் வேண்டாம் உன்னை உதைக்கிற மூடுல நான் இல்ல மூடிட்டு போடா என்றான்.

தேனூர்:

ஒரு வாரமா உடம்பு சரியில்லை ஆனால் ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லவே இல்ல...தினமும் மூச்சுக்கு முன்னூறு முறை மாமா மயிரானு மெசேஜ் பண்ண மட்டும் தெரியுதே இதை சொல்ல அறிவில்லையாடி என்று தனக்கு எதிரே நிற்பவளை பார்த்து வளவன் கேட்க...

சாதாரண பீவர் தான் இதுக்கு ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்கறீங்க என்கவும் அப்படியா சாதாரண விஷயமா அப்ப எது நடந்தாலும் இப்படித்தான் மூடி மறைத்து கொண்டு இருப்பியா என்று திட்டிக்கொண்டு அங்கிருந்து சுவற்றில் நிலாவை சாய்த்து கைகளை அணையாக வைத்தவன் காய்ச்சல்ல பாரு உடம்பு எப்படி இளைத்து போய் இருக்கிற எனக்கு தெரியாதடி என் பொண்டாட்டி எப்படி இருப்பா என்று கேட்டுக் கொண்டே அவளோடு உரசி கொண்டு நிற்க எதுக்கு இப்படி பண்ணிட்டு இருக்கீங்க தள்ளிப் போங்கள் என்றாள்.

ஏய் என் பொண்டாட்டி கூட நான் இருப்பேன்டி எவண்டி என்ன கேட்க முடியும் என்க...ஐயோ சாமி உங்களை யாரும் கேட்க மாட்டாங்க.அதுக்குன்னு இப்படியா ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கூட்டிட்டு வந்து இவ்வளவு அக்கப்போர் பண்றீங்களே உங்களை எப்படி தான் நான் சமாளிக்க போறேன்னு தெரியலையே என்று புலம்பினாள்.

அது உன் பாடு டி..அதை பத்தி எனக்கு தெரியாது இவன்தான் வேணும்னு ஒத்த கால்ல நின்ன இல்ல அப்ப நீ அனுபவிச்சு தான் ஆகணும் டி நிலா என்று சிரித்துக்கொண்டே தன்னவளின் கன்னத்தில் பல் பதிய கடித்து முத்தமிட்டவன் இனி எதா இருந்தாலும் என்கிட்ட சொல்லணும் புரியுதா எங்க, ஐயோ புரியுது சாமி.

ஏன் தான் இப்படி வெறி கொண்ட போல கடிக்கிறீங்க இப்படி பல்லு தடத்தோட போனால் வீட்ல இருக்குறவங்க என்ன நினைப்பாங்க என்கவும் உன் புருஷனோட செல்ல கடினு சொல்லுடி அப்பதான் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைப்பாங்க என்று சிரித்துக் கொண்டே வளவன் சொல்ல அடப்பாவி என்றாள்...

ஆமாடி பாவி இல்லடி உன் மாமா அப்பாவிடி என்று தன்னவளை இடையோடு வளைத்து நெஞ்சோடு அணைத்தவன் லவ் யூ நிலா என்கவும் என்னடா நடக்குது என்று நிலாவோ அதிர்ச்சியாக பார்த்தாள்.

தொடரும்…
 
Active member
Joined
May 9, 2025
Messages
137
Enna brothers errandu perum pona Jen at hula Rajapallyam dogs ah ?
I really enjoyed reading about the description of Dance lady.really funny
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top