• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
640
அல்லி அல்லி என்று கூப்பிடும் செல்வியின் குரலை கேட்டு தன்னவனிடம் இருந்து விலகியவள் அங்கிருந்து வேகமாக ஓடிப் போனவள் மூச்சு வாங்கு செல்வியின் அருகில் போயிட்டு வந்துட்டேன் டி என்க...

வாடி..அடுத்தது நம்ம கிளாஸ்கு தான் ஹால் டிக்கெட் தராங்கள் என்று திட்டிக்கொண்டே செல்வி முன்னாடியே போக அல்லியோ திரும்பி பார்த்துக் கொண்டே அவள் பின்னாடியே சென்றாள்...

தலையை கோதி சிரித்துக் கொண்ட ஜானும் அங்கிருந்த பைக்கில் ஏறி வீட்டிற்கு போனான்.

ஹாலில் உட்கார்ந்திருந்த லாரன்ஸ் உள்ளே வரும் மகனை தான் முறைத்துப் பார்த்தார்.தந்தையின் பார்வை தன் மேல் இருப்பதை உணர்ந்து என்னவாம் என்றவாறு அவருக்கு எதிரில் இருந்தே சோபாவில் போய் உட்கார்ந்தான்...

அவசியம் இப்ப நீ லண்டன் போய் தான் ஆகணுமாடா என்றார்.அய்யோ அப்பாஆஆ...மூணு மாசம் ப்ராஜெக்ட் பல கோடி ரூபாய் வரும் என்க...ஏண்டா நமகிட்ட இல்லாத பணமா என்று லாரன்ஸ் கத்தினார்..

அந்த நேரம் அடேய் பனைமரம் இன்னும் என்னடா பண்ற என்றவாறு உள்ளே வந்த வேலுவோ அங்கிருந்த லாரன்ஸ் பார்த்துவிட்டு ஆத்தாடி மிலிட்டரி என்று வெளியில் ஓடப் போக டேய் வாடா இங்கு என்றார்.

என்ன மாமா என்கவும் ஏன் எருமை மாடுகளே,ரெண்டு எருமை மாடும் இந்த எருமை மாடு கூடத்தான் சுத்திட்டு இருக்கீங்க அவனை எதுக்குடா இப்போ வெளிநாடு அனுப்புறீங்க என்க...

வாய மூடுங்க மாமா எனக்கு கடுப்பு வந்துரும் சொல்லிட்டேன் என்க...என்னடா சொல்ற என்று லாரன்ஸ் முறைக்க, அய்யோ மாமா வெயில வந்தது கடுப்பா இருக்குன்னு சொன்னேன்..இருங்க அத்தை கிட்ட ஒரு டம்ளர் மோர் குடிச்சிட்டு வரேன் என்று கிச்சனிற்குள் போனவன் அங்க உன் புருஸ் கரகாட்டம் ஆடுறாரு...நீ சோறு ஆக்குறியேத்தை..

எப்படி தான் இந்த மனுஷன் கூட இத்தனை வருஷகாலமாய் குடும்பம் பண்ணுன என்று வேலு கேட்க,இதுக்கப்புறம் வேதனைப்பட்டு என்ன வேலு பண்றது என்று சிரித்தவர் மருமகனுக்கு ஜில்லென்று மோரை கொடுக்க வாங்கி குடித்துக்கொண்டு ஹாலில் வந்து உட்கார்ந்தவன் மாமா நீங்க கொஞ்சம் குடிக்கிறீங்களா?.
சூட்டுக்கு ரொம்ப நல்லது என்க...அடேய் துப்பாக்கி எடுத்தேன் எங்க சுடுவனு எனக்கே தெரியாது என்றார்..

யோசிச்சு நீங்க ஒரு முடிவு பண்ணுங்க. சரி வா எரும மாடு எவ்வளவு நேரம் தான் உனக்காக உட்கார்ந்து இருக்கிறது என ஜானை திட்ட...

ஏன்டா இங்க நான் என்ன பேசிட்டு இருக்கேன் நீங்க ஊர் சுத்த போறீங்களே என்றார்.

என்ன மாமா விளையாடுறீங்களா? எங்கள பாத்தா என்ன ஊரு சுத்துறவன் போலயா தெரியுது என்கவும்,இத என் வாயில நான் வேற சொல்லனுமாடா?.
அப்படி இரண்டு துரையும் எந்த நாட்டு அதிபராக பார்க்க போறீங்கள்?.

போகும்போதே எங்க போறீங்கன்னு கேட்பது தப்புன்னு உங்களுக்கு தெரியாதா மாமா என்கவும் இதெல்லாம் நல்லா பேசுடா விளக்கெண்ண பயலே என்று பல்லை கடித்தார்.

அப்பொழுது ஹாரன் சத்தம் கேட்கவும் மச்சான் வந்துட்டான் சரி கொஞ்சம் வேலை இருக்கு நாங்க வெளில போயிட்டு வரோம் என்றவர்கள் அவர் பதிலை எதிர்பார்க்காமல் ஜானும் வேலுவும் வேகமாக வெளியே போய் கதிரின் காரில் ஏறிக்கொள்ள அப்பா இப்பதாண்டா மூச்சு விடுற போல இருக்கு...மிலிட்டரி கிட்ட மாட்டிகிட்டு படாத பாடு என்று சொல்லிய வேலு கொஞ்சம் ஏசிய ஆன் பண்ணு மச்சி முடியல என்றான். ..

ஏண்டி நான் ஒரு மனுஷன் பேசிட்டு இருக்கேன் கொஞ்சமாச்சும் தடிமாடுங்க என்னை மதிக்கிறீர்களா? அவனுங்க பாட்டுல கிளம்பி போறாங்களே என்று கிச்சன்ல இருக்கும் மனைவியிடம் சொல்ல,அதற்கு ஜூலியோ எல்லாரும் இருக்கும்போது கத்தாதீங்க என்றார்.

ஏண்டி எனக்கு என்ன பயமா? என்று லாரன்ஸ் முறைக்க யாருக்கு தெரியும் என்று சொல்லிக் கொண்டு சமையல் வேலை பார்க்க அதானே அவனுங்களுக்கு தானடி சப்போர்ட் பண்ணுவ என்று பல்லை கடித்துக் கொண்டு ஹாலில் வந்து உட்கார்ந்து கொண்டார்..

டிசைனிங் பண்ணிக் கொண்டிருந்த தாமரையின் போனுக்கு கால் வரும் சத்தம் கேட்க டேபிள் மேல் இருந்த போனை எடுத்து பார்க்கவும் அதில் அத்தை என்று வந்தது.

அட்டென்ட் பண்ணியவள் சொல்லுங்கத்தை..எப்படி இருக்கீங்க உடம்பு நல்லா இருக்கா மெடிசன் எல்லாம் ரெகுலரா எடுத்துகிறீர்களா என்று கேட்டாள்...

ஏஞ்சல் நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க என்னோட குட்டீஸ் எப்படி இருக்காங்க? என்க...

நல்லா இருக்காங்க அத்தை என்று சிரித்தாள்.அப்புறம் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்?.

ஓஓஓ சொல்லுங்கத்தை..ஏதோ பெரிய விஷயம் அதும் நல்ல விஷயம் போல இருக்கு என்கவும் ஆமாம் என்றவர் உங்க மாமா பூனால இருந்து வந்திருக்காரு என்றார்.

வாவ் நிஜமாவா என்றாள்....ஏய் போக்கிரி பொய் சொல்லாதே..என்கிட்ட நடிக்கிறியா அவர் வந்தது உனக்கு தெரியாதா என்கவும், சிரித்துக்கொண்ட தாமரையோ தெரியுமே என்றாள்.

அதைவிட இன்னொரு விஷயம் தெரியுமா மாறனுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருச்சு என்க...என்னங்கத்தை சொல்றீங்க அந்த சுடுதண்ணி வேற இஷ்டத்திற்கு இன்னும் கத்துமே?...

கொழுப்பு தான்..என் பையன பத்தி என்கிட்டே சொல்ற என்க,பாருடா என்ன விட இப்ப உங்களுக்கு பையன் தான் முக்கியமா போயிடுச்சு என்று செல்லமாக கோபப்பட்டாள்...

டேய் ஏஞ்சல் ஆயிரம் பேர் இருந்தாலும் என் ஏஞ்சல் போல யாருமே வராதுடா என்றவர் நடந்ததெல்லாம் சொல்லுவதை கேட்டவள் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்கத்தை என்றாள்.

நானும் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை...லீலாவை நினைத்தா தான் கவலையாக இருக்கென்று வினிதா சொல்ல...

அக்கா ரொம்ப நல்லவங்க அத்தை.நீங்க ஒன்னும் இதை நினைத்து கவலைப்படாதீங்க.அங்கிள் சொன்ன போல மதன் அண்ணா பேசி அக்காவுக்கு புரிய வைப்பாங்க...

அப்படி நடந்தால் நல்லது ஏஞ்சல்..உங்க மாமாவுக்கும் மனசுல ஒரு பெரிய குற்ற உணர்ச்சி இருந்துச்சி.

ஆமாத்தை உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன்னு நான் அங்கு இருக்கிற வரைக்கும் சொல்லிக்கிட்டே இருந்தாரு போன்ல பேசும்போது எல்லாம் இந்த வார்த்தை தான் சொல்லுவாரு...ஆனா சூழ்நிலை அப்படி இருக்கே ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக தன்னோட மனசுல இருக்கிறது சொல்ல முடியாமல் போயிடுச்சு..

இதுல யாரை குற்றம் சொல்லுவது சொல்லுங்க என்கவும் அதை நான் புரிஞ்சுகிட்டேன் டி. உங்க மாமா தான் ரொம்ப வருத்தப்பட்டு உடம்பு கெடுத்து விட்டார் என்றார்.

பார்ரா என்று சிரித்தவள்... வீட்டுக்காரர் மேலயும் ரொம்ப அக்கறையோ என்கவும் பின்னே இருக்காதா...
ஆயிரம் இருந்தாலும் என் புருஷன் ஆச்சே என்று வினிதா சொல்ல,அடேங்கப்பா இங்க என்னென்னமோ நடக்குதுடி தாமரை உனக்கு தான் ஒண்ணும் தெரியல என்று சிரித்தாள்...

மேலும் சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு வினிதா போனை வைக்க தாமரைக்கு அவர் சொன்ன விஷயத்தை கேட்டு சந்தோஷம் தாங்கவில்லை.

மறுநாள் ஜான் லண்டனுக்கு போவதால் இன்று மதிய உணவு நம்ம வீட்டில் தான் என்று எல்லாரையும் பெருமாள் வர வைத்திருந்தார்.

ஆண்கள் ஒரு பக்கம் அவர்கள் போன கதை வந்த கதை பேசிக் கொண்டிருக்க, பெண்களோ கிச்சனில் ஆளுக்கு ஒரு வேலையாக சமையல் வேலையில் பிஸியாக இருந்தனர்.

இதோட பத்து நாள் ஆகுது...தன்னவள் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று வருத்தமாக இருந்த வேலு எப்படியாவது இன்னைக்கு கெஞ்சி கூத்தாடியாவது அவளை சமாதானப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் செல்வியை தனியாக சந்திக்கும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தான்...

அல்லியும் செல்வியும் குரூப் ஸ்டடி பண்ணிக் கொண்டிருப்பது தெரியாமல் தன்னவளை இங்கே தேடிக் கொண்டிருந்தான்.எங்க தான் போனாள் நம்ப பொண்டாட்டி என்று புலம்பி கொண்டு வீட்டுக்குள் வர, அவனைப் பார்த்த வளவனோ ஏற்கனவே கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு இப்ப கன்ஃபார்ம் பண்ணிட்டேன் மாமா என்றான்..

என்னடா என்க...இல்லை நீ பைத்தியமானு நினைச்சுட்டு இருந்தேன் கன்ஃபார்ம் நீ பைத்தியம் தான் என்கவும் மானங்கெட்டு போயிடும் மரியாதை போடா..
இருக்கிற கடுப்பில் நீ வேற எரிச்ச மூட்டாத என்று சொல்லிக் கொண்டு கிச்சனுக்கு போகும்போது இன்னும் அந்த ரசத்தையும் அப்பளத்தையும் பொறித்து விட்டால் சாப்பாடு கொடுத்துடலாம்...தாமரை அல்லிக்கு போன் பண்ணி ரெண்டு பேரையும் சாப்பிட வர சொல்லு என்கவும் அது வேலுவின் காதில் விழுந்தது...

ஓ அங்க இருக்கிறாளா என்றவன் ரைட்டு அங்க போயிட வேண்டியதுதான் என்று அப்படியே பேசிக்கொண்டே வெளியில் வந்தவன் யாராவது தன்னை கவனிக்கிறார்களா என்று பார்க்க அவர்களோ பேச்சில் தீவிரமாக இருக்கவும் வண்டியை எடுத்துக்கொண்டு தனது சித்தி வீட்டை நோக்கி சென்றான்...

சிறிது நிமிடத்திலேயே வீட்டின் முன்னால் வந்து வண்டியை நிறுத்திவிட்டு அல்லி அல்லி என கூப்பிட்டுக் கொண்டு வீட்டிற்குள் வர...படித்துக் கொண்டிருந்தவர்கள் காதில் வேலுவின் குரல் விழவும், அண்ணா இங்க ரூம்ல தான் இருக்கிறேன் வா ணா என்றாள்.

செல்வியோ கையில் இருக்கும் புத்தகத்தில் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்க வாசல் படியில் வந்து நின்றவன் சாப்பிட வரலையா டா என்க..

அம்மா சொல்லுச்சு ணா..
ரெடி ஆன பிறகு போன் பண்றேன் என்கும் போது வீட்டில் இருக்கும் போனுக்கு கால் வர இதோ அக்காவே பண்ணிடுச்சு ணா என்று அட்டென்ட் பண்ணியவள் சொல்லுக்கா என்க சாப்பிட வாங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்..

செல்வி இரு நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்துடுறேன். இப்படியே வந்தேனா உன் அண்ணன் ஓவரா ஓட்டி உசுர வாங்கிட்டு வாரு என்று சொல்லிவிட்டு தனது ரூமிற்கு சென்றாள்.

இப்பொழுது செல்வியும் வேலுவும் தான் அங்கு இருந்தனர்.நேராக அவளை நோக்கி வந்தான். செல்வியோ உக்காந்த வாக்கில் இருந்தாளே தவிர நிமிரவில்லை.

நெருக்கமாய் வந்து நின்றவன் எட்டி அவள் கையை பிடித்து இழுத்து நிறுத்தியவன் அங்கிருந்து சுவற்றில் சாய்த்து இன்னும் உனக்கு கோபம் போகலையா என்று தன் வருங்கால மனைவியின் உதட்டை பிடித்து திருக அவளோ வலியில் முகத்தை சுளித்தவள் தனது கைகளால் மாமனை தள்ள ஒரு இஞ்ச் கூட வேலுவை நகர்த்த முடியவில்லை...ஓஓஓ விஜயசாந்தினு நெனப்பாக்கும் என்று சொல்லி சிரித்தான்...

செல்லம் மாமா ஏதோ தெரியாம பேசிட்டேன் மன்னிச்சிடுடி உன்கிட்ட பேசாம எனக்கு பைத்தியம் பிடிச்ச போல இருக்குடி...எத்தனை அடி வேணும்னாலும் அடிச்சிக்கோடி.ஆனா இப்படி அமைதியாக இருந்து என்னை கொல்லாதே.. சத்தியமா என்னால முடியல என்று வருத்தமாக செல்வியிடம் வேலு கெஞ்சி கொண்டிருக்க அவளோ முறைத்து பார்த்தாள்..

என்னடி உனக்கு அடிக்கணுமா சரி இந்தா அடிச்சிக்கோ என்கவும் அவனிடம் இருந்து சற்று ஒரு அடி தள்ளிப் போய் நின்றவள் அல்லி வராளா என்று எட்டி பார்த்துவிட்டு தனது மாமனை ஓங்கி நாலு அறை அறைந்தாள்.

இப்படி செல்வி அறைவாள் என்பதை எதிர்பார்க்காத வேலு ஒரு பேச்சுக்கு சொன்னா செஞ்சுட்டாளே சண்டால சிறுக்கி என்று மனதிற்குள் திட்டிக் கொண்டான்

வேலுவை அடித்தவளோ வேகமாக தனது மாமனையே கட்டிக்கொண்டு எப்படி மாமா என்கிட்ட போய் இப்படி ஒரு கேள்வியை உன்னால் கேட்க முடிந்தது நீ என் உசுருன்னு இன்னமுமா அது உனக்கு புரியலையா என்று கதறி அழுதாள்.

தன்னவள் அழுவதை தாங்காதவன் அவள் கன்னத்தை துடைத்து விட்டு எண்ணற்ற முத்தங்களை பரிசாக கொடுத்தவன் தங்கச்சி வர்றதுக்குள்ள இங்க இருந்து நான் போய்டுறேண்டி இல்லன்னா தப்பா நினைச்சுக்கும்டி...

சரி சீக்கிரம் ரெண்டு பேர் சாப்பிட வாங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்....

நள்ளிரவு கடந்தும் கணவன் வீட்டிற்கு வராததை பார்த்த தாமரையோ செம வெறியில் இருந்தாள்.

மதியம் கிளம்பி போனவன் தான் இன்னும் வீட்டுக்கு வந்து சேரவில்லை எங்க தான் இந்த மனுஷன் போனான் வரட்டும் என்று திட்டிக் கொண்டிருக்க அவள் போனிற்கு கால் வந்தது.

எடுத்துப் பார்க்க அவள் புருஷனாக இருக்கவும் அட்டென்ட் பண்ணியவள் சொல்லுங்க என்க பால்கனி கதவைத் திறடி இங்கதான் நின்னுட்டு இருக்கேன் என்றான்.

எழுந்து போய் கதவைத் திறக்க உள்ளே வந்து தாழ்ப்பாள் போட்டவன் செல்லம் சாப்டியா டா இவ்ளோ நேரம் தூங்காம இருக்க லைட் எரிஞ்சிட்டே இருக்கே என்க..

ஆமா நீ எங்க போன திடீர்னு கிளம்பி போன??திருட்டு பய போல இந்த நேரத்துக்கு வீட்டுக்கு வரியே இதெல்லாம் நல்லாவா இருக்கு என்று முறைத்தாள்...
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
640
சென்னை மெடிக்கல் காலேஜ்:

பேராசிரியர் தன்ராஜ் வகுப்பில் இருந்த மாணவர்களை பார்த்தவர் இன்னைக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்றதாக இருந்தேன் இல்லையா என்கவும் அவர்களும் எஸ் சார் என்றனர்.

அதாவது பத்து நாள் மெடிக்கல் கேம்பாக நம்ம ஒரு மலை கிராமத்துக்கு போக போறோம்.வர சனிக்கிழமை நைட் நம்ம எல்லாரும் கிளம்பணும்.அதுக்கு தேவையான எல்லா ஏற்பாடும் பண்ணிக் கொள்ளுங்கள் என்கவும் ஹேய் சூப்பர் என்று எல்லாரும் கத்தினர்..

அப்புறம் உங்க வால்தனத்தை எல்லாம் அங்க வந்து காட்டக்கூடாது ரொம்ப கட்டுப்பாடு மிகுந்த ஊர் சொல்லிட்டேன் கிராமத்து பொண்ண சைட் அடிக்கிற வேல வெச்சிகிட்டீங்கன்னாக்க அங்கே இருக்கிற பெருசுங்க ஒட்ட நறுக்கிடுவாங்க...அப்புறம் என்னால காப்பாத்த முடியாது என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

சார் நாங்க எல்லாம் அப்படியா என்று அதில் ஒருவன் கேட்க,உங்களை பற்றி தெரிந்ததால் தாண்டா சொல்றேன் என்றவர் மீண்டும் வகுப்பை நடத்த ஆரம்பித்தார்.

நேரமும் கடந்து சென்றது அன்றைய தினத்திற்கான எல்லா வகுப்பும் முடிந்த பிறகு சிலர் ஹாஸ்டலுக்கும் டேஸ்காலர்ஸ் வீட்டை நோக்கியும் சென்றனர்.

கேண்டனில் உட்கார்ந்து இருந்த அனுவைப் பார்த்த அவளின் தோழியோ ஏண்டி நானும் பார்த்துக்கொண்டே இருக்கேன் கொஞ்ச நாளா ரொம்ப அமைதியாயிட்டியேடி...

என்ன பிரச்சனை டி?

நிலவன் உன்னுடைய காதலை ஒத்துக்கவில்லையா என்க...வேதனையோடு நிமிர்ந்து பார்த்த அனுவோ நிலவனின் அப்பா பேசியதை எல்லாம் சொன்னாள்.

அதைக் கேட்டு தோழி கீதாவோ நான் தான் அப்பவே சொன்னேன் இல்லையாடி நீ எங்க சொன்னா கேக்குற...

அவன் ஒரு நல்ல பிரண்டா தான் பழகுறான்.நீ தான் தேவை இல்லாம மனசுல ஆசையை வளர்த்துக்கிட்ட...சரி விடு என்று தோழியின் மனதை மாற்ற வேறு பேச்சை பேசிக்கொண்டு கேண்டினில் இருப்பதில் தேவையானதை ஆர்டர் பண்ணி சாப்பிட்டு முடித்த இருவரும் ஹாஸ்டல் நோக்கி சென்றனர்...

ஹாஸ்டலுக்கு வந்த நிலவன் போனை எடுத்து வீட்டிற்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல எந்த ஊர் என்று பெருமாள் கேட்கவும் அவனும் ஊர் பெயரை சொல்லவும் அந்த ஊரா என்று அதிர்ந்தார்.

ஏங்கப்பா என்று கவலையோடு நிலவன் கேட்க...டேய் நம்ப செல்லத்துரை அன்பரசன் அந்த ஊரு தான்டா...கதிர் கல்யாணத்தப்போ வந்தாங்களேடா என்க...சரிங்கப்பா என்றான்..

அவனோ நேர்ல போய் நான் பார்க்கிறேனபா என்க கண்டிப்பாக பாருப்பா என்றவர் இந்தா உன் அம்மாளுங்க கிட்ட பேசு என்று போனை கொடுத்துவிட்டு தனது வேலையை பார்க்க சென்றார்...

மற்றவர்களும் நிலவனிடம் ஃபோன் பேசி முடித்தவர்கள் அம்மா செல்வி கிட்ட போன குடுங்க என்க...அதை வாங்கியவளிடம் நலன் விசாரித்து விட்டு இன்னும் ரெண்டு நாள் தான்டா இருக்கு...எல்லாத்துக்கும் தயாராக இருக்கிறியா என்க...நல்லா படிச்சிட்டேன்ணா. கவலைப்படாத நல்ல மார்க் தான் வாங்குவேன் என்கவும் பார்க்கலாம் பாக்கலாம் என்றான்...

பார்க்க தானே போற என்று செல்வியும் சொல்ல சரி சரி நல்ல மார்க் வாங்கினா சந்தோஷம் தான்.அப்ப என்னையும் உன்னை போல வெளி ஊர்ல காலேஜ் படிக்க அனுப்ப சொல்லு என்று செல்வி கேட்க..அது மாமா கையில தான் இருக்குடா.நீ ஆசைப்பட்டாய் என்றால் கண்டிப்பாக மாமா உன்ன படிக்க வைப்பாங்கடா பாப்பா...

அதெல்லாம் பற்றி நீ கவலைப்படாதே என்று தங்கையிடம் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்த நிலவனும் அப்பாடா என்று பெட்டில் படுத்தவனுக்கு இன்று பிராக்டிகல் என்பதால் ரொம்ப நேரம் நின்று கொண்டே இருந்ததால் கால் எல்லாம் வலியாக இருக்கவும் கண்களை மூட சிறிது நிமிடத்திலே தூங்கி விட்டான்..

சிங்கப்பூர்:

மாம் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் என்று மாறன் சொல்ல,ஹம் சொல்லுப்பா என்றார்.

உங்க கிட்ட வேலை பார்க்கிற அந்த ரோஸியை இன்னைக்கு அந்த விக்டரோட ஆபீஸ்ல பார்த்தேன் மாம்.ஏதோ தாமரை இங்கு வரமாட்டான்னு சொன்னதால அவன் ஒன் குரோஸ் அவளுக்கு பணம் கொடுத்ததா போன்ல பேசிட்டு இருந்தாள்...சம்திங் ராங் மாம்..எனக்கு ஆரம்பத்தில் இருந்து அவள் மேல சந்தேகமா தான் இருக்கு.லீலா கிட்ட நான் பலமுறை இன்ஃபார்ம் பண்ணி இருக்கேன் என்க...

வினிதாவோ சிரித்துக் கொண்டு அவ விக்டரோட ஸ்பைனு எனக்கு தெரியும் மாறா,தமிழ்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க தெரியுமா கண்ணா...
ஆயிரம் பேர் சேர்ந்து மறைத்தாலும் ஆதவனை ஒருபோதும் மறைக்க முடியாதுனு..அது போல தான் நம்மளோட திறமையை நம்மை தவிர வேற யாராலும் தடை பண்ண முடியாது.

அந்த விக்டர் இந்த முறையாவது காம்பட்டீஷன்ல வின் பண்ணலாம் என்று நினைக்கிறான்.நல்ல மனமும் எண்ணமும் இருந்தால் வெற்றி என்னைக்கும் நம்மளோட வரும்.
ரோஸி நினைச்சுட்டு இருக்கா எனக்கு எந்த விஷயமும் தெரியாதுன்னு அவளோட வயசு என்னோட அனுபவத்துல பாதி.அப்போ எத்தனை பேர்களை நான் பார்த்திருப்பேன் என்க சரிங்க மாம்..நான் அதுக்காக தான் வந்தேன்.

இங்கு வந்த பிறகுதான் இவ்வளவு விஷயங்கள் எல்லாம் எனக்கு தெரிஞ்சிருக்கு.அதுவும் ஒரு விதத்தில் நல்லது என்று பேசிக் கொண்டிருக்கும் போது வெளியே போயிருந்த கோமதியின் லீலாவும் வீட்டிற்கு வந்தனர்

அங்கே தனது மாமனார் மாமியார் இருப்பதை பார்த்த லீலா நீங்க எப்ப வந்தீங்கள் என்க..நாங்க காலையிலேயே வந்துட்டோம் மா.

அப்புறம் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்க,சொல்லுங்க மாமா என்றாள்.சில விஷயத்தை நம்ப ஏத்துக்கிட்டு அதன்படி கடந்து போகணும் மா.ஏன் எதுக்குன்னு ஆராய்ச்சி பண்ணுனா சிலது நல்லதாக முடியும் சிலது மன கஷ்டத்தில் தான் முடியும் மதன் கிட்ட சொல்லி உன்கிட்ட இந்த விஷயத்தை சொல்லலாம் என்று தான் நானும் நெனச்சிட்டு இருந்தேன்.

ஆனா அவன் வந்து சொல்றதுக்கு முன்னாடி நாங்களே உன்கிட்ட சொல்லிறது நல்லது என்று எனக்கு தோணுச்சு.

உனக்கு இதுவரை தெரியாத ஒரு விஷயம் என்கவும் சம்பந்தி நானே சொல்கிறேன் என்று விஸ்வநாதன் சொல்ல,இருக்கட்டும் சம்பந்தி.யார் சொன்னா என்ன என்றவர் பின்னர் வினிதா விஸ்வநாதன் இருவரின் உறவே பற்றி சொல்ல அதைக் கேட்டவளும் அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

சிறிது நொடிகள் வரை அவளிடம் இருந்து எந்த ஒரு பேச்சும் வராமல் போக மகளின் தோளை தொட்டவர் அப்பாவை கேவலமா நினைக்கிறியா என்கவும் நிச்சயமா இல்லைப்பா.

எனக்கு கோவமா இருக்கு ஏன் இப்படி ஒரு துரோகியா இருந்து இருக்கீங்க என்று தனது தந்தையின் கையை தட்டி விட்டவள் மேடம் என்று கூப்பிட வந்தவள் நோ மாம் என்று போய் வினிதாவை அணைத்துக் கொண்டாள்...

அப்பா கண்டிப்பா உங்களுக்கு பெரிய துரோகம் தான் பண்ணி இருக்காரு இந்த விஷயத்துல நான் அப்பாவ மன்னிக்கவே மாட்டேன் என்று மாறன் போல லீலாவும் சொல்லி அழ...

நோ டா மா...அப்படி எல்லாம் இல்லை கண்ணா.விஷ்வாவை நான் என்னைக்குமே தப்பா நினைக்க மாட்டேன் என்றவர் நீனும் அப்பாவை அப்படி எல்லாம் பேசக்கூடாது.
பெரியவங்களுடைய வாழ்க்கை முடிஞ்சு போயிடுச்சு புரிகிறதா இருக்கிற வரைக்கும் சந்தோஷமா வாழ்ந்துட்டு போகணும் என்றார்.

டாட் நான் ஒரு முடிவெடுத்து இருக்கேன்
ஊர் உலகத்துக்காக வாழ்ந்த வரைக்கும் போதும் இருக்கிற நாளிலாவது நமக்காக வாழுமே என்று கோமதியை பார்த்துக்கொண்டு விஸ்வநாதன் சொல்ல அவரும் கண்ணை மூடி சரி என்றவர்.

நேராக வினிதாவிடம் போய் அவர் கையை பிடித்துக் கொள்ள அந்த பிடி என்ன சொல்லியதோ தெரியவில்லை அமைதியாக இருவரும் அணைத்து கொண்டனர்.

அப்பாடா எப்படியோ எல்லாம் சுமூகமாக முடிந்தது இதை சிறப்பாக கொண்டாடுவோம் என்று லீலாவின் மாமியார் சொல்ல கண்டிப்பாக நானே எல்லாருக்கும் சமைக்கிறேன் என்று சந்தோஷமாக லீலா கிச்சனுக்குள்ள போக இரு நானும் வரேன் என்று கோமதியும் அவர் பின்னாடியே சென்றார். ..

தொடரும்… .
 
Active member
Joined
May 9, 2025
Messages
151
Engha pa ponnangha andha 3 musketeers.? Lotus is pregnant se needs extra TLC from Kathir,avangha erandu perayum nalla Pessoa vingha
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top