• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
640
வழக்கம்போல் தூங்கி எழுந்து குளித்து தயாராகி கீழே வந்த தாமரை வீட்டினர் பரபரப்பாக இருப்பதை பார்த்தவள் எதுக்கு எல்லாரும் இவ்வளவு பரபரப்பாக இருக்கிறார்கள்?

அப்படி என்ன விசேஷம்?

ஒரு வேலை கெஸ்ட் யாராவது வராங்களா என்று யோசனையோடு கிச்சனிற்கு போக அங்கே ராதா சீதாவோடு அவர்கள் பங்காளி வீட்டில் இருந்த இரண்டு மருமகள்களும் வேலை செய்து கொண்டிருந்தனர்..

வாங்கத்தை நல்லா இருக்கீங்களா என்று நலம் விசாரிக்க நாங்க நல்லா இருக்கோம் மா நீயும் எங்க பேர பிள்ளை நலமா என்றனர்..

எப்ப வந்தீங்கத்தை என்றவளுக்கு நாங்க வந்து கொஞ்ச நேரம் தான் ஆகுது மா...ராதா தாமரைக்கு குடிக்க அந்த பால குடு என்று சொல்லியபடியே தேங்காய் திருவி கொண்டிருந்தார்.

சரிங்க அக்கா என்றவர் தனது ஓப்படியார் முறையுள்ளவர் தாமரைக்காக கேழ்வரகு பாலை காய்ச்சி வைத்திருப்பதை எடுத்து சூடு சரியா இருக்கா என்று பார்த்து விட்டு மருமகளிடம் கொடுக்க அதை வாங்கியவள் ராகி மால்ட் என்க...

ஆமா...அக்கா தான் செஞ்சாங்க என்றார்.. அப்பொழுது பாப்பா என்று மயிலாவின் குரலை கேட்டு அதிர்ந்து போய் திரும்பிய தாமரை அம்மா நீங்க எப்போது வந்தீர்கள் என்கவும் நாங்கள் காலையிலேயே வந்துட்டோம் என்றார்..

எதேஏஏ வந்துட்டீங்களா அத்தையும் வந்துருக்காங்களா என்கவும் ஆமா.அக்கா கோயிலுக்கு போய் இருக்காங்க என்றவர் நல்லா இருக்கிறியாடா என்று கேட்க நான் நல்லா இருக்கேன் என்று இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக்கொண்டு இருந்தனர்.

என்ன விசேஷம் ஒன்னும் புரியலையே என்று யோசனையோடு இருந்த தாமரை, கணவன் கூப்பிடும் சத்தம் கேட்டு இதோ வரேன் என்று சொல்லிக் கொண்டு மாடிப்படி ஏறி ரூமிற்கு வந்தவளிடம் ஒரு கவரை நீட்டினான்..

என்ன மாமா என்று கேட்க இதை கட்டிக்கிட்டு ரெடியாகி கீழே வா என்கவும்,வெளியில போறோமா மாமா என்றாள்..

ஆமாம் ஒரு முக்கியமான விசேஷம் அதுக்காக நம்ம ரெண்டும் பேரும் கலந்து கொள்கிறோம் என்று சொல்ல இதை நேற்றே சொல்லி இருக்கலாமே என்க... ஏன்டி எப்ப சொன்னாலும் நீயும் நானும் தான் அதுல கலந்துக்கணும்.

அதான் இப்ப சொல்லிட்டேனே போ போ ரெடி ஆகி வா என்று சொல்லிவிட்டு ஈர தலையை துவட்டிக்கி கொண்டு கபோர்ட்டில் இருந்து அவனுக்கு தேவையான டிரஸ் எடுத்து போடலானான்...

தாமரையும் கணவன் சொன்னது போல புது புடவை கட்டி பீரோவில் இருந்த நகைகளும் எடுத்து போட்டுக் கொண்டு கீழே வந்தவள் அங்கு தனது அம்மா வீட்டினரும் சொந்த பந்தங்கள் இருப்பதை பார்த்து வாங்க வாங்க எப்ப வந்தீங்க எல்லாரும் என்று கேட்க இப்பதான் வந்தோம் என்றனர்...

ஒரு பக்கம் 5 மாதத்துக்கு ஆன வளையல் போடுவதற்காக வள்ளி அப்பாயியும் அவருக்கு அக்கா முறையில் உள்ளவரும் முற்றத்தில் மணை போட்டு இரண்டு பக்கங்களிலும் குத்து விளக்கில் திரி போட்டுக் கொண்டிருக்க நம்ம வீட்டுல தான் விசேஷமா?. என்ன விசேஷமா இருக்கும்?ஒன்னும் புரியலையே என்று திரு திருவென்று முழித்தவள்,மற்றவர் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்லி பேசிக் கொண்டிருந்தாள்.

அரை மணி நேரம் கடந்து இருக்க தாமரை கதிர் என்று வள்ளி அப்பாயின் அக்கா கூப்பிட இதோ வரேன் அப்பாயி என்றவன் மனைவியை பார்த்து வா என்று சொல்ல நம்மை ஏன் கூப்பிடுகிறார்கள் என்று நினைத்தவள் கணவனிடம் என்ன என்று கேட்க வா என்று சொன்னான்..

என்னடா நடக்குது இங்க? .நம்மளும் இந்த வீட்ல தான் இருக்கோம் ஒண்ணுமே புரியலையே என்றவாறு அங்கே அலங்கரிக்கப்பட்டிருந்த இடத்திற்கு போக,அங்கே தட்டில் வளையலும் மற்ற பொருட்களை எல்லாம் இருப்பதை பார்த்தவள் நமக்கு சீர் செய்ய வந்திருக்காங்களா என்று தனது அப்பா வீட்டினரை திரும்பிப் பார்க்க அவர்களும் அவளைப் பார்த்து சிரித்தனர்...

கதிரு தாமரைக்கு பக்கத்துல உக்காந்து அந்த மாலை எடுத்து தாமரை கழுத்துல போடு, அம்மாடி தாமரை கதிருக்கு போட்டு விடு என்று சொல்லவும் அதேபோல் இருவரும் செய்தனர்.

முதல் ஆளாக குடும்பத்தில் மூத்தவர்களான வள்ளியும் அவரது அக்காவான காந்திமதி பாட்டி இருவரும் அங்கிருந்த சந்தனத்தை தொட்டு இருவர் கையிலும் தடவி விட்டு கன்னத்திலும் தடவி நெற்றியில் பொட்டு வைத்தவர்கள் அதே போல் குங்குமத்தையும் எடுத்து போட்டு வைத்துவிட்டு ஆளுக்கு ஒரு கையில் வளையளை போட்டவர்கள் அங்கிருந்த சாதத்தில் கொஞ்சம் அள்ளி தாமரைக்கும் கதிருக்கும் ஊட்டி விட்டு பூவும் மஞ்சளும் கலந்த அரிசியை அள்ளி இருவர் தலையிலும் தூவி ஆசிர்வாதம் செய்து கொண்டு சென்றனர்...

அதன் பின்னர் மற்ற சுமங்கலி பெண்களும் வரிசையாக வந்து அதேபோல் சடங்கை செய்தார்கள்...இதை எதிர்பாக்காத தாமரையோ சந்தோஷத்தில் கண்கலங்கி விட்டாள்.

வந்தவர்களுக்கெல்லாம் வீட்டிற்குள்ளேயே பந்தி பரிமாறினர்.அனைவரும் வயிறார சாப்பிட்டு விட்டு அவர்கள் கொடுத்த கிஃப்ட் பொருள்களோடு அங்கிருந்து சென்றனர்..

இப்பொழுது வீட்டினர் மட்டும் இருந்தனர். சொல்லவே இல்லையேம்மா என்று தாமரை கேட்க, நாங்கதான் அன்னைக்கே வந்தோமே மா...வீட்ல சொல்லியிருப்பாங்கன்னு இருந்தோம் என்று பார்வதி சொல்ல இதுவரைக்கும் யாருமே ஒரு வார்த்தை சொல்லவே இல்லை ம்மா என்றாள்.

சரி உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான் நான் சொல்ல வேணாம் என்று சொன்னேன் என்று கதிர் சொல்ல அவளோ கணவனை முறைத்து பார்த்தாள்...

அதுக்குன்னு இப்படியா என்று கேட்க சர்ப்ரைஸ் என்றாலா என்ன?.இது தானடி என்க..ம்ம் நல்லா இருந்தது மாமா என்று சிரித்துக் கொண்டே சொல்லியவள் மேலும் சிறிது நேரம் அவர்களும் இருந்து பேசி விட்டு அங்கிருந்து சென்று விட அத்தை நான் போய் வேற புடவை கட்டிக்கவா?.
இவர் வேற ஏதோ பங்க்ஷனுக்கு போறேன்னு சொல்லி இந்த புடவை கொடுத்துட்டாரு கசகசன்னு இருக்கு என்கவும் அவளின் நிலைமையை புரிந்து கொண்டு ராதாவும் பார்த்து போ தாமரை...

புடவையை தூக்கிட்டு நட என்று சொல்ல சரிங்கத்தை என்றபடியே முன்பக்கம் கொசுவத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டே மாடியில் இருக்கும் தனது அறைக்குள் வந்து கதவை தாழ்ப்பாள் போட கதவு தட்டும் சத்தம் கேட்டது...

அதானே தாழ்ப்பாள் போட்டதும் அந்த கரடி மனுஷன் வந்துருவாரு என்று சிரித்துக் கொண்டே கதவைத் திறக்க அங்கிருந்த கதிரோ என்னடி மனசுக்குள்ளே திட்டு இருப்பியே வந்துட்டான்னு சரிதானே என்றான்..

இல்லையே நான் ஒன்னும் அப்படி எல்லாம் திட்டவே இல்லையே உங்களுக்கு அப்படி தோனி இருக்கும் போல என்கவும் ஏய் உன் மானங்கெட்ட மைண்டு எப்படி எல்லாம் யோசிக்கணும் எனக்கு தெரியும்டி என்றவன் மனைவியின் இரண்டு கைகளை பிடித்து பார்க்க....

விதவிதமான வண்ணங்களில் இருக்கும் வளையல்களைப் பார்த்து அதற்கு முத்தமிட்டவன் அழகா இருக்கடி என்று சொல்லி மனைவியோடு சேர்ந்து விதவிதமான போட்டோக்கள் எடுத்து தள்ளிவிட்டு அங்கிருந்து கண்ணாடியின் முன்பு போய் நிறுத்தியவன் பாரு இந்த கோலத்தில் என் பொண்டாட்டி எம்புட்டு டக்கரா என்க....

தாய்மையின் பூரிப்பில் தான் அழகாய் இருப்பது தெரிந்தது. ..


சீமக்கரை...

இந்த சர்ப்ரைஸ் உனக்கு புடிச்சிருக்கா டி செல்லம் என்று கேட்க உண்மையிலேயே நான் இதை எதிர்பார்க்கவே இல்லை மாமா..
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொல்லி கணவனை அணைத்துக் கொள்ள இப்படி ஏதாச்சும் நடந்தா தான் புருஷனை கட்டி பிடிக்கணும்னு உன்னோட ரூல்ஸ் புக்ல இருக்காடி என்றான்...

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே என்றாள்...பின்ன தினமும் கட்டிப்புடிச்சு நாலஞ்சு முத்தத்தை கொடுத்தா நீ என்ன தேஞ்ஜா போயிடுவடி என்க...

நான் கொடுத்தா என்னா நீங்க குடுத்தா என்ன மாமா...அது தான் ஐயா மறக்காம தினமும் கொடுக்குறீங்களே அது போதாதா எங்கவும்,ஏண்டி கொடுப்பதை விட வாங்குவதில் எவ்வளவு சுகம் இருக்கு சொல்லு...

ஆமா சுகமாக தான் இருக்கு என்று தாமரை சொல்ல அப்போ எனக்கும் வாங்கனுமென்று இருக்காதாடி என்று முறைத்துக் கொண்டே கேட்டவன் மனைவியின் கன்னத்தில் இருக்கும் சந்தனத்தை துடைத்து விட்டவன் சரி போய் டிரஸ் மாத்து...

புடவை ரொம்ப வெயிட்டா வேண்டாம் என்று சொன்னேன் ஆனா இதை பார்த்த உடனே எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு அதனால் தான் மதுரைக்கு போய் உனக்காக வாங்கிட்டு வந்தேன் என்கவும் அடப்பாவி புருஷா நானே புடவை தயாரிக்கிறவள்.எனக்காக கடையில போய் வாங்கிட்டு வந்திருக்க இதெல்லாம் அநியாயமா இல்லையா என்க...அதுக்காக உனக்கு கொடுக்க வேண்டிய சர்ப்ரைஸை உன்கிட்டயாவது சொல்லி ரெடி பண்ண சொல்லுவாங்க கூறுகெட்ட குப்பாயி என்றான்..

ஆமா நா குப்பாயி நீ குப்புசாமி என்று தாமரை சிரிக்க நோ டி நோ உன் மாமா கதிர் என்று முறைத்தவன் நீ என் செல்ல குப்பாயிடி என்றவன் சரி சரி போ போ என்க...

அதுக்கு முதல்ல நீங்க என்ன விடனும் அப்பதானே போக முடியும் என்றாள். நான் என்ன உன்னை புடிச்சி வச்சிருக்கேன் என்று சொல்ல, ஆமாய்யா நீ என்ன புடிச்சி தான் வச்சிருக்க உன் கண்ணுல கொஞ்சம் விளக்கெண்ணெய் ஊத்திட்டு நல்லா பாரு என்கவும்...

அப்படியா என்றபடி அங்கிருந்த கண்ணாடியில் பார்க்க அதில் அவனோ தாமரையை அணைத்தபடி நின்று கொண்டிருந்தான்..

ஏண்டி இப்படி கண்ண கசிக்கிட்டு இருந்தாக்க ரோட்ல போற வரவன் என்னமோ நான் உன்னை கெடுத்துட்ட போல நினைக்க மாட்டாங்களா என்று ஜான் சொல்ல,அழுது கொண்டிருந்த அல்லியோ நிமிர்ந்து பார்த்து முறைத்தவள் அதுக்கெல்லாம் நீ சரிவர மாட்ட...நீயே ஒரு துப்பு கெட்டவன் என்க...என்னடி இப்படி சொல்ற என்று ஜான் அதிர, உண்மையை சொன்னேன் உனக்கு அந்த அளவுக்கு எல்லாம் தைரியம் கிடையாது யா.அப்படி ஏதாச்சும் நினைத்த என் அண்ணனுங்க ரெண்டு பேரும் உன் தோலை உரிச்சிடுவாங்கைய்யா என்றாள்.

மணக்கண்ணில் வேலுவும் சிவாவும் அருவாளோடு ஓடி வருவதை நினைத்து பார்த்த ஜானுவோ ஐயய்யோ என்று தலையை உதரி அந்த நினைவை விரட்டியவன் செல்லம் மூன்று மாசம் தாண்டி...ப்ராஜெக்ட் முடித்து கொடுத்துட்டு நான் வந்துருவேன்.உன் அண்ணன் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை தோழனாக நான் சரியா வந்துருவேண்டி.

நீ நல்லா எக்ஸாம் எழுது.என்னால் தினமும் போன் பண்ண முடியாது கொஞ்சம் புரிஞ்சிக்க சீக்கிரம் வந்துடுறேன்,இப்படி அழுது கொண்டே இருக்காதடி..

அப்போ ஒன்னும் பண்ணட்டுமா என்க, அவளோ என்னவென்றாள்.நான் உனக்கு ஒரு ஐடியா சொல்றேன் டி..

நான் திரும்ப இந்தியா வரவரைக்கும் நீ அதை நினைச்சுட்டு இருக்கலாம் என்கவும் அதற்கு அல்லியோ என்ன ஐடியா சொல்லு யா என்றாள்.

கொஞ்சம் கிட்ட வாடி காதில் சொல்றேன் என்றான்..அப்படி என்ன ரகசியத்தை இந்த மனுஷன் சொல்ல போறான் என்று அல்லியும் தனது காதை நீட்ட,நான் உனக்கு ஜூனியர் ஜான் கொடுத்துட்டு போறேன் டி. நான் வர வரைக்கும் நீ அவனை வளர்த்து வை என்கவும் என்னயா சொன்ன என்று தனது ஹீல்ஸ் காலால் ஓங்கி ஜானின் காலில் மிதிக்க ஐயோ என்று கத்தினான்..

யோ மானங்கெட்டவனே எதுக்கு இப்படி கத்துற என்று எட்டி ஜானின் வாயை பொத்தியவள் அக்கம் பக்கம் யாராவது வருகிறார்களா என்று பார்க்க,தன்னவளின் நெருக்கமோ ஜானுக்கு குதூகலத்தை கொடுக்க எட்டி அவளை இழுத்து தன்னோடு அணைத்தவன் அவள் இதழில் தனது இதழை புதைத்தான்.

சிங்கப்பூர்
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
640
:

விஷ்வா ப்ளீஸ் எதுக்கு இப்படி அழுகுறீங்க நான் உங்களை தப்பா நினைக்கவே இல்ல.ஏஞ்சல்(திமரை)எனக்கு எல்லாத்தையுமே சொல்லி புரிய வைத்தாள்...நீங்க என்ன தேடி வந்தீங்க எனக்கு அது போதும் விஷ்வா நீங்க என்ன ஏமாத்திட்டீங்கன்னு தான் நான் சூசைட் பண்ணிக்க போனேன்.

அங்கு அந்த ஜீசஸ் தான் தாமரையை அனுப்பி இருக்கிறார் இன்னைக்கு நான் வாழ்க்கையில இவ்வளவு உயரத்துக்கு இருக்கிறதுக்கு தாமரை தான் முதல் காரணம் தேவையில்லாமல் கில்டியா நீங்க ஃபீல் பண்ணாதீங்க..

விஸ்வநாதன் தனது அழுகை மட்டும் நிறுத்தவில்லை.ப்ளீஸ் விஷ்வா அழாதீர்கள் என்று பெட்டில் படுத்திருந்தவர் எழுந்து உட்கார்ந்து விஷ்வாவிடமிருந்து தனது காலை உருவிக் கொண்டு இறங்கி அவரை நோக்கி வரும்போது பலவீனமாக இருந்ததால் தடுமாறி கீழே விழப் போகவும் அதை பார்த்த விஷ்வாவும் ஓடி வந்து தாங்கி பிடித்தார்.

30 வருடங்களுக்குப் பிறகு கணவரின் பரிசம் தன்னை தீண்டியதை உணர்ந்த வினிதாவிற்கு கண்கள் கலங்கியது.

என்னதான் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தாலும் மனதுக்குள் அந்த காதல் இன்னும் அழியவில்லையே..விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்ந்த புருஷனை தொலைத்து விட்டு தானே நிற்கிறார். ..

வினிதாவின் கண்ணை பார்த்த விஸ்வநாதன் உன் மனசுல நான் இல்லன்னு சொன்னியே..ஒருபோதும் சொல்ல முடியாது வினிதா..அதேபோலத்தான் என்னாலும் அதுக்காக கோமதிக்கு துரோகம் பண்ணல...

சட்டப்படி தான் உன்னை கல்யாணம் பண்ணினேன் என்றவாறு வினிதாவின் கழுத்திற்குள் மறைந்திருந்த தாலிச் செயினை எடுத்து வெளியே போட்டார்.

அந்த நேரம் பார்த்து கதவு தட்டும் சத்தம் கேட்க யார் என நான் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்த பெட்டில் வினிதாவை உட்கார வைத்துவிட்டு கதவை திறந்து வெளியே போனவர் அங்கிருந்து லென்ஸ் வழியாக பார்க்க மாறன் நின்று கொண்டிருந்தான்.

மாறனா என்று ஒரு நொடி அதிர்ந்தவர் பின்னர் கதவை திறக்க உள்ளே வந்தவனோ தந்தையை பார்த்து அதிர்ந்து போனவன் அப்பா நீங்க எப்ப வந்தீங்க என்று கேட்க காலைல தான்ப்பா வந்தோம் என்றார்.

இருவரின் பேச்சு குரல் கேட்டு வினிதாகும் கதவை திறந்துவிட்டு தடுமாறி வர என்ன பண்ற என்று மகன் இருக்கிறதையும் மறந்து போன விஷ்வாவோ நேராக போய் வினிதாவை தாங்கி பிடிக்க மாறனுக்கு அவர்கள் இருவரையும் பார்த்து ஏதோ சரியில்லை என்பது புரிந்தது.

விஷ்வா என்ன பண்ற?மாறன் இருக்கிறான் பார் என்று அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்ன பிறகு தான் விஷ்வநாதனும் தனது மகன் அங்கு இருக்கிறான் என்பதை உணர்ந்தார்..

என்னைக்கா இருந்தாலும் அவனுக்கு தெரிய வேண்டிய விஷயம் தானே வினிதா என்று சொல்வது மாறனின் காதில் நன்கு விழுந்தது.

நீ எதுக்கு இப்ப வந்த?அதான் நான் பாக்குறேனே சொல்லிட்டு தானே வந்தேன் என்றவர் மகனிடம் திரும்பி இதோ வரேன் பா என்றவர் வினிதாவை உள்ளே படுக்க வைத்து விட்டு கதவை சாத்திக்கொண்டு வெளியே வந்தவர் இங்கு வா மாறாயென அங்கிருந்து சோபாவை காட்டியபடி அவரும் உட்கார்ந்தார்.

அவனும் எதுவும் சொல்லாமல் சிறிது இடைவெளி விட்டு தந்தையின் அருகில் உட்கார,இத்தனை வருஷம் உன்கிட்ட சொல்லாத ஒரு விஷயம் இருக்கு என்றவர்,தனக்கும் வினிதாவுக்கும் என்ன உறவு என்றும் அவர்கள் வெளிநாட்டில் படிக்கும் போது காதலித்தது சட்டப்படி கல்யாணம் பண்ணிக் கொண்டது...

பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்த போது அவர் தந்தையின் உடல் நிலை சரியில்லாமல் போனதால் கோமதியை கல்யாணம் பண்ணியதையும் கோமதியிடம் எல்லா விஷயத்தையும் சொல்லியது அதன் பின்னர் வினிதாவை தேடி வந்தது அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லாமல் போக...
25 வருடங்களுக்குப் பிறகு தாமரை மூலமாக வினிதாவை பற்றி தெரிந்தது என எல்லாத்தையும் மகனிடம் சொல்லி முடித்தார்

தந்தையின் மூலமாக அவரின் இருண்ட பக்கத்தில் கேட்ட மாறனுக்கு என்ன சொல்வது என்று ஒண்ணுமே புரியவில்லை...

இதில் ரொம்ப பாதிக்கப்பட்டது யார் என்றால் வினிதா தான்.ஆனால் இப்படி ஒரு வலி தனது வாழ்க்கையில் இருப்பதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தனது லட்சியத்தில் முன்னேறி இன்று உலகம் அறிந்த நம்பர் ஒன் டிசைனராக இருக்கிறாரேயென அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

சிறிது நிமிடம் அமைதியாக இருந்த மாறனோ,இவ்வளவு பெரிய துரோகத்தை பண்ணிட்டு எப்படிப்பா உங்களால் மட்டும் குடும்பம் குட்டின்னு சந்தோஷமா வாழ முடிஞ்சது?. சரி 25 வருஷமா தான் உங்களுக்கு தெரியலை போகட்டும்...தாமரை வந்து சொன்னாளா அதன் பிறகாவது முடிவெடுத்து அம்மாவ நம்ம கூட கூப்பிட்டு வரணுன்னு ஏன்பா உங்களுக்கு தோணவே இல்லை என்று கேட்க மகனின் கேள்வியோ சாட்டையடி போல் விஸ்வநாதனுக்கு விழுந்தது.

ஏங்கப்பா ஊரு உலகம் சமூகம் என்ன நினைக்கணும் தான் கவலைப்பட்டீங்களே தவிர ஒரு பெண்ணோட மனசு எந்த அளவுக்கு வேதனை படும் என்பதை நீங்க யோசிக்கவே இல்லைங்களேப்பா..

இந்த விஷயத்தில் உங்களை நான் மன்னிக்கவே மாட்டேன் என்றவன் வினிதாவின் ரூமிற்கு போக எழ,அங்கே வினிதாவோ கண்ணீரோடு நின்று கொண்டிருந்தார்...

இவர்கள் இருவரும் பேசியதையெல்லாம் அவரும் கேட்டுக் கொண்டே தான் இருந்தார்..

மாறா நீங்க ரெண்டு பேரும் பேசுறத நான் ஒட்டு கேக்கணும் எனக்கு ஆசை இல்லப்பா.அப்பாவ நீ தப்பா நினைச்சு ஏதாச்சு சண்டை போடுவியோ என்பதால் தான் நான் வந்து நின்னுட்டு இருந்தேன் கண்ணா...ஆனா என்னுடைய இடத்தில் இருந்து நீ எனக்காக பேசியிருக்க பாரு இத நான் எதிர்பார்க்கவே இல்லை என்று மாறனை நோக்கி கையை கூப்பினார்...

ஐயோ மாம் என்ன பண்றீங்க என்று ஓடி வந்தவன் வினிதாவின் கையை பிடித்து கீழே இறக்கியவன் புருஷன் தான் இல்லம்மா புள்ள நான் கல்லு போல உசுரோட தான் இருக்கேன் என்று சொல்லவும் வினிதாவோ அதிர்ந்து போய் மாறனை பார்க்க ஆமாமா இனிமேல் நீங்க தனியா இருக்க வேண்டாம்...

நான் வாங்குன வீட்ல என் அம்மாவா என் கூட இங்கு இருக்கலாமே தப்பு இல்லையே எங்கவும் கண்ணா உன் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்று சொல்லி தேம்பி அழுதவர் லீலாக்கு இது தெரியாது..

வேறு இடத்துல கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கோம் நம்ம குடும்ப விஷயம் எல்லாம் அவங்க வீட்டுக்கு தெரிஞ்சுதுனாக்க அது ரொம்ப தவறா போய்விடும் என்க...

அப்படியெல்லாம் நாங்கள் தப்பா நினைக்க மாட்டோம் என்ற குரல் கேட்டு மூவரும் திரும்பி பார்க்க அங்கே லீலாவின் மாமியார் மாமனார் நின்றனர்.

அவர்களை பார்த்த விஸ்வநாதனோ சம்பந்தி என்று அதிர்ந்து கூப்பிட, தெரியலங்க ஏதோ எங்களுக்கு மனசு ஒரு மாதிரியா இருந்துச்சு..

நாங்களும் வினிதாவை பார்க்கலாம்னு தான் இங்க வந்தோம்.இங்கு வந்த பிறகு கதவு திறந்து இருந்துச்சா உள்ள வரலாமென்று நினைக்கும்போது தான் நீங்க மாறன் கூட பேசிட்டு இருந்ததெல்லாம் நாங்க கேட்டோம்.
எங்களுக்கு இதுல ஒன்னும் கௌரவ குறைச்சல் இல்லை நீங்க ஒன்னும் திருட்டுத்தனமா குடும்பம் பண்ணிக்கிட்டு இல்லையே..சட்டப்படி வினிதா உங்களோட மனைவியை என்பதை யாரால் மறுக்க முடியும் என்றவர்,மாப்பிள்ளை உன்னோட அம்மாவ நீ தான் கவுரவப்படுத்தனும் .

அது சம்பந்தி செய்ததற்கு ஈடாகும் என்று என்னால சொல்ல முடியாது ஆனால் எனக்கு தோணுவது நான் சொல்றேன் பா என்க.. நிச்சயமாக ஆன்ட்டி..நீங்க என்ன நினைப்பீங்க என்று தான் எனக்கு இவ்வளவு நேரம் யோசனையாக இருந்தது என்று கையை கூப்பினான். அப்படி சொல்லாதே இதே சூழ்நிலைல என்னோட அப்பாவும் இருந்தாங்க.

எல்லாரோட வாழ்க்கையிலும் ஒரு ரகசியம் இருக்கத்தான் செய்யும். அன்னைக்கு என்னுடைய அம்மாவும் வினிதா மேடம் நிலைமையில தான் இருந்தாங்க.

ஆனா அவங்க டீச்சரா இருந்ததால வாழ்க்கையில் முன்னேற முடிஞ்சது இல்லையென்றால் தமிழ்நாட்டில் எங்க அம்மாவை மத்தவங்களோட அனுதாப பேச்சுக்கும் குத்தல் பேச்சுக்கும் தற்கொலை பண்ணி இருப்பாங்க.

நானும் அனாதையாக எங்கேயாவது பிச்சை எடுத்துட்டு இருந்திருப்பேன்னு தெரியாது.இவளோட அப்பாவும் எங்க அம்மாவும் நண்பர்கள்.

அவரால் தான் சிங்கப்பூருக்கு வந்தாங்க அவங்க டீச்சர் என்பதால் இங்கேயும் ஒரு நல்ல வேலை கிடைச்சது என்னைய வளத்தாங்க நானும் இன்னைக்கு ஒரு சமூகத்தில் ஒரு நிலையாக இருக்கிறேன்.

உங்களுடைய கஷ்டம் என்னாலையும் புரிஞ்சிக்க முடியுது ஆனால் லீலா தான் இதை எப்படி ஏற்றுப்பாள் என்று எனக்கு தெரியவில்லை.அதை மதன்ட்ட சொல்லி நான் புரிய வைக்கிறேன் என்றார்.

சம்பந்தி உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதுனே தெரியவில்லை என்று விஸ்வநாதன் கையை கூப்ப விடுங்க சம்பந்தி நம்ம எல்லாம் ஒரே இடத்தில் தான் இருக்கிறோம். உங்களோட வலியை என்னால புரிஞ்சுக்காம இருக்க முடியுமா என்றார்...

தொடரும்…
 
Active member
Joined
May 9, 2025
Messages
151
Happy to know the world has changed about this type of marriage,but wait for Leila’s thoughts
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
640
🤩🤩😁😁😁😍😍😍அவளும் எதாவது நல்லதா சொல்லுவானு நம்புவோம் 🤩🤩🤭🤭🤭நம்பிக்கை தானே வாழ்க்கை 😁😁😁
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top