• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
634
கனியூர்:

என்னது பொண்டாட்டியாஆஆஆ...அப்ப உண்மையிலேயே இவருக்கு கல்யாணம் ஆயிடுச்சா?அய்யோ...அண்ணன் பொய் சொல்லவில்லையா என்று அதிர்ச்சியோடு பார்வதி தனது ரூமிற்குள் உட்கார்ந்து கொண்டிருக்க அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

கண்ணிலிருந்து வரும் கண்ணீரை துடைத்துக் கொண்டு இயல்பாக இருப்பது போல் முகத்தை வைத்துக்கொண்டு போய் கதவை திறக்க அங்கே வர்ஷன் நின்று கொண்டிருந்தான்.

அண்ணா என்க, அவளை பார்த்தபடியே உள்ளே வந்தவன் என்னதான் பார்வதி உனக்கு பிரச்சனை சொல்லு?.

அண்ணா அது வந்து நான் என்று பம்மினாள்.

உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா சொல்லு? இன்னொரு பொண்ணோட புருஷன் வேணும்னு இப்படி நினைக்கிற? .நம்ம குடும்பத்தில் யாராச்சும் இப்படி இருக்காங்களா...இல்ல எந்த பொண்ணாவது தன் புருஷனை இன்னொருத்தவங்களுக்கு விட்டுக்கொடுப்பாங்களா சொல்லு ஏன் உனக்கு அது புரிய மாட்டேங்குது படிச்சிருக்க தானே உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா..

அண்ணா அவங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று நீங்க பொய் சொல்றீங்கன்னு இருந்தேன்ணா என்றாள்.

அட அறிவுகெட்ட முட்டாள். ..இதுல பொய் சொல்றதுக்கு என்ன இருக்கு சொல்லு.கதிருக்கு உண்மையிலே கல்யாணம் ஆகலனா நானே அவனுக்கு உன்ன பேசி கல்யாணம் பண்ணி வைப்பேன் இப்ப அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது.

பொண்டாட்டி கன்சீவா இருக்கானு அன்னைக்கு தானே உங்ககிட்ட சொல்லிட்டு போட்டோ கூட உன்கிட்ட காட்டுனேன்.அப்ப கூட உனக்கு நம்பிக்கை இல்லையா அண்ணனை பார்த்தா பொய் சொல்றவன் போல உனக்கு தெரியுதா என்கவும் அப்படி இல்லன்ணா...

அவரை நான் மனசார விரும்பிட்டேன்னா அதனாலதான் வேற கல்யாணம் என்னால பண்ணிக்க முடியாது....உலகத்தில் இருக்கிற எல்லோரோட காதலும் வாழ்க்கையில் வெற்றி பெற்றதா என்று பார்த்தால் அப்படி கிடையாது.

ஒரு சில காதல் சூழ்நிலையால் முறிஞ்சி போறது உண்டு தான்.அதுவும் நீ காதலிச்சது ஒரு சாதாரண பையனா இருந்தாலும் பரவாயில்லை. இன்னொரு பொண்ணோட புருஷனை காதலிச்சிட்டு இருக்கியே உன்னை எந்த செருப்பால அடிக்கிறது என்று கேட்கவும் வர்ஷனின ஒவ்வொரு கேள்வியும் பார்வதிக்கு கன்னத்தில் அறை வாங்கியது போல் விழுந்தது.

உன் பிரண்டு முதல்ல உன்கிட்ட சரியா பேசுறாளா?சொல்லு என்க... மலரோ கடந்த ஒரு வாரமாக தன்னிடம் பேசாதது யோசித்து பார்த்தவள் ஆமா ணா பேசுறதில்லை ..

ம்ம் ஏன் பேசறது இல்லை யோசித்து பார்த்தியா உன்னுடைய யோக்கியதை அப்படி...அப்பவே மலர் சொன்னாளே அந்த பையனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு யோசிக்காதன்னு ...

நீ என்ன பண்ணி இருக்கிற?

உன் பிரண்டுக்கே முதல்ல உன் செயல் பிடிக்கவில்லை.எல்லாருக்கும் இந்த விஷயம் தெரிஞ்சா என்ன நினைப்பார்கள் சொல்லு...இன்னும் அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியாது. அம்மாக்கு தெரிஞ்சா என்ன நடக்கும் யோசிச்சு பாரு என்கவும் அவளோ எதுவும் சொல்லாமல் கீழே குனிந்து அழுது கொண்டிருந்தாள்.

இந்த டாக்டர் பேமிலி உண்மையிலேயே ரொம்ப நல்ல குடும்பம் நல்ல விசாரிச்சிட்டேன் புரியுதா..உன் அண்ணியோட அண்ணனுக்கு ரொம்ப தெரிஞ்ச பையன் டாக்டர் ஃபீல்டுல...

நம்ம கண்ணு முன்னாடி பார்த்து வளர்ந்த பையன் எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது இன்னும் வேற என்ன எதிர்பார்க்கிற சொல்லு என்கவும் அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை.

இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துருவாங்க சும்மா எல்லாத்தையும் மூட்டை கட்டி போட்டுட்டு நல்ல பொண்ணா ரெடியா இரு என்று சொல்லி வெளியே சென்றான்...

சீமக்கரை:

சரிங்கத்தா அஞ்சாவது மாசம் வெறும் சோறு கொடுக்கிற போலயா இல்ல வளையலும் போடுறீங்களா என்று வள்ளி அப்பாயி கேட்க வளையல் போடுவது என்றனர்.

அப்போ மூன்று வாட்டி வளையல் போடணும் இல்லனா ஒரு முறை தான் பண்ணனும் அது நல்லா தெரியும் தானே உங்களுக்கு...

ம்ம் தெரியும்மா மூணுத்துக்கும் செய்யலாம் தான் இருக்கிறோம் என்று பார்வதி சொல்ல சரிம்மா உங்க இஷ்டப்படி உங்க மகளுக்கு சோறு கொடுங்க என்றார்.

இந்த விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடமும் பார்வதியும் கவிதாவும் சொல்ல அவர்களும் உங்கள் விருப்பமே என்று சிரித்துக் கொண்டு சொன்னர்.

எங்கே செல்விய காணும் என்று கவிதா கேட்டக உன் மருமவள் உள்ள ஓடி ஒளிஞ்சுக்கிட்டா என்று சொல்லிக் கொண்டே வேலு அவர்கள் இருவருக்கும் நடுவில் வந்து உட்கார்ந்து கொண்டான்.

பின்ன இப்படி முரட்டு பய போல இருந்தா ஒளியாமல் என்ன பண்ணும் கொஞ்சம் சிரிச்ச முகமா இருக்கணும் என்று கதிர் சொல்ல ஏண்டா என் மூஞ்ச பாத்தாடா முரட்டு பையன் போல இருக்கு...கரடி மேய்ஞ்ச போல இருக்கும் உன்னையே என் தங்கச்சி சகிச்சிக் கிட்ட குடும்பம் பண்ணும் போது உன் தங்கச்சி என் முகத்தை பார்த்து இருக்க மாட்டாளா என்கவும் ஏன்டா என் மொகரையா கரடி போல இருக்கு என்று அங்கிருந்த சொம்பு எடுத்து வேலுவின் மீது எறிந்தான்...

மேலும் சிறிது நேரம் இருவரும் அவர்களோடு பேசியிருந்து விட்டு நாங்க தாமரையை பார்த்துட்டு அப்படி வீட்டுக்கு கிளம்புறோம் என்று சொல்ல வாங்கத்தை நானும் வரேன் என்று கதிர் சொல்ல எப்பா பக்கத்துல தான் பொண்ணு இருக்கு நாங்க பாத்துட்டு போறோம்...

அப்படி என்ன அம்மாவும் பொண்ணும் ரகசியம் பேச போகிறீர்கள் என்று கேட்டான்.உனக்கு போய் என் தங்கச்சிய பாக்கணும்னு ஆசை இருந்தா பாருடா அதுக்கு எதுக்குடா என் அம்மாங்களை இப்படி எல்லாம் பேசுற என்று வேலு கேட்க நாதாரி பயலே எனக்கு இடைஞ்சல் பண்றதுக்கு வேற யாரும் வேணாம் நீ மட்டுமே போதும் என்று கதிர் பல்லை கடித்தான்.

பார்வதியும் கவிதாவும் சிரித்துக்கொண்டே அங்கிருந்து வெளியே வந்தவர்கள் பக்கத்தில் இருக்கும் ஷெட்டின் கதவை திறந்து உள்ளே போக அங்கே தாமரையோ தறியில் வேலையாக இருப்பது பார்த்து தாமரை என்று கூப்பிட மிசின் சத்தத்தில் அவளுக்கு எதுவும் கேட்கவில்லை.

பின்னர் பொறுமையாக போய் மகளின் தோளை தொட அவளோ யாரென திரும்பி பார்த்தவள் தனது அம்மாக்கள் இருவரும் நிற்பதை பார்த்து வாங்கமா எப்ப வந்தீர்கள் என்று கேட்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தோம்.

நீ எப்படி இருக்கிறாய் என்க..நல்லா இருக்கிறேன்மா...

ம்ம் என்ன வேலை போயிட்டு இருக்கு என்று பார்வதி கேட்க புதிதாக வந்த ஆர்டரை பற்றி சொல்ல எதுக்கு போட்டு ரொம்ப உடம்பை வருத்திக்கிற என்று இருவரும் மகளின் உடல் நிலையை பார்த்து கவலையோடு சொல்லு இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லம்மா சின்ன விஷயம் தான் என்று சிரித்தாள்...

வேலை செய் வேண்டாம் என்று சொல்லவில்லை உன் உடம்பையும் கவனித்துக் கொள் மா..எப்ப பாத்தாலும் மிஷின் சத்தத்தில் இருக்கிறியேடா...

அதெல்லாம் ஒன்னும் இல்ல மா. இது எனக்கு கஷ்டமான வேலை இல்லையே என்று சிரித்தாள்.சொன்னால் நீ என்ன கேட்கவா போற என்று பார்வதியும் கவிதாவும் செல்லமாய் முறைத்துக் கொண்டே சொன்னார்கள்...

மேலும் சிறிது நேரம் மகளோடு பேசி இருந்து விட்டு இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பினர்.அம்மாங்க இரண்டு பேரும் எதுக்கு வந்தோம்னு சொல்லவே இல்லையே என்னவாக இருக்கும் என்று யோசனையோடு தாமரை அங்கிருந்த கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தவள் சிங்கப்பூருக்கு அனுப்ப வேண்டிய டிசைனை வரைய ஆரம்பித்தாள்...

வரலந்து கொண்டிருக்கும்போது அவளுக்கு டிசம்பரில் நடக்க போகும் பேஷன் ஷோவின் ஞாபகம் வந்தது...

அப்போது டெலிவரி ஆகி எத்தனை மாசம் ஆகும் என்று கணக்கு பண்ணி பார்த்தாள்.இப்போ 5 மாதம் என்றால் மே ல டெலிவரி ஆய்டும் பரவாயில்ல குழந்தையும் ஆறு மாசம் ஆயிடும் நம்மளும் கொஞ்சம் உடம்பு தேறிடுவோம் என்று தனக்குள்ளே பேசிக்கொண்டே வேலையை பார்த்தாள்...

அப்பொழுது பின்னால் இருந்து இரண்டு கரம் அவளின் கழுத்தை பிடித்தது.திருட்டுப் பூனை இங்கு என்ன பண்ணுது என்று கேட்கவும். .

பால் இருக்கும் இடத்தை தேடி தானே பூனை வரும் என்றவன் ஆனால் நான் பூனை இல்லடி சிங்கம் டி என்றான்.

நீ சிங்கமா இரு கரடியா இரு எனக்கு என்னய்யா பட் நான் புலி என்று தாமரை சொல்ல ஓஓஓஓ கொட்டை எடுத்த புளியா? கொட்டை எடுக்காத புளியா என்று கேட்டு சிரிக்க என்ன சோக்கா எனக்கு சிரிப்பு வரும் போது சிரித்துக் கொள்கிறேன் என்று முறைத்து பார்த்தவள்..என்ன தொரை வயலுக்கு போகலையா அங்க உங்க காதலி வேற காத்திட்டு இருப்பாளே என்க...

ஆமா டி...

சொன்னாலும் கேட்க மாட்டுறாள் ..கட்டுனா இந்த இந்த கதிர் மாமாவ தான் கட்டுவேன்னு ஆறு வருஷமா ஒத்த கால்ல நிக்கிறா...

என்னதான் பண்றது சொல்லு அதான் நானும் யோசிச்சு ஒரு முடிவு பண்ணி இருக்கிறேன் என்று மனைவியை பார்த்துக் கொண்டு சொல்ல..அப்படி என்ன சார் யோசித்து இருக்கீங்க சொல்லுங்க பார்க்கலாம் என்றாள்.

பேசாமல் அந்த வெள்ளை பன்னியையும் ரெண்டாவதா கட்டி கிட்டா என்ன சொல்ற டி...தாராளமா கட்டிக்க எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்க...என்னடி ஒரு பொண்டாட்டியா அப்படி எல்லாம் பண்ண கூடாதுன்னு சண்டை போடறது இல்லையா டி.

தமிழ் ல ஒரு நல்ல டயலாக் இருக்கு மாமா என்றாள்..ம்ம் என்னடி டயலாக் சொல்லு கேட்போம்...ஒருத்தனுக்கு எழுந்து நடக்க வக்கு இல்லையாம் அவனுக்கு எட்டு பொண்டாட்டியாக்கும்...

அடிப்பாவி என்னடி உன் புருஷனை பார்த்து இப்படி சொல்ற என்று அதிர்ச்சியோடு கேட்க உன் மொகரைக்கு நானே பெரிசு இதுல தேவி வேற போயா என்றாள்...

அம்புட்டு நம்பிக்கையாடி உன் புருஷன் மேல என்கவும் உன் மேல எனக்கு நம்பிக்கை கிடையாது என்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சிரித்தாள்...

உன் மேல நம்பிக்கை இருக்கறதுக்கு நான் தேவியை இரண்டாவது கல்யாணம் பண்ணாததுக்கு என்னடி சம்பந்தம் இருக்கு...

ஏன்னா இங்க இருக்கிறது நான் தானே அப்ப நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாதா என்று சொல்லவும் கவுத்துட்டாளே என் பொண்டாட்டி கவுத்துட்டாளே என்று மனைவியின் கன்னத்தை பிடித்தவன் லவ் யூ டி செல்லம்...

லவ் யூ டூ மாமா...

இந்த நம்பிக்கை தான் ஒரு கணவன் மனைவிக்கு தேவையானது அது மட்டும் இருந்தா போதும் உலகத்தில் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் சமாளித்து விடலாம்டி...

ஹம் கண்டிப்பாக மாமா அதில் என்ன சந்தேகம்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
634
இரண்டு வருஷமா சிங்கப்பூர்ல நான் எத்தனையோ பேர் கூட பேசி இருக்கேன் பழகி இருக்கன் வேலை விஷயமா அவங்க கூட வெளியில எல்லாம் போக வேண்டியது வந்திருக்கு அதெல்லாம் பாத்து இதுவரை நீ ஒரு வார்த்தை கூட கேட்கலையே...

எனக்கு என் பொண்டாட்டி எப்படி என்று தெரியும் அந்த எண்ணம் தான மாமா உனக்கு இருந்துச்சு என்று கேட்க ஆமாடி உன் மனசுல நான்தான் இருக்கிறேன் என்று எனக்கு நல்ல தெரிஞ்சது எப்ப தெரியுமா ? நம்ம ஃபர்ஸ்ட் நைட் அப்ப நான் உனக்கு சிங்கப்பூர் போறதுக்கு விசா டிக்கெட் எல்லாம் கொடுத்தேனே அன்னைக்கு நைட்டு நீ அழுதுட்டு படுத்து இருந்த பாத்தியா அப்போதான் எனக்கு தெரிஞ்சது...

மனசு உன்ன போக வேணாம்னு ஒரு பக்கம் தடுக்க முடிவு பண்ணுச்சு இருந்தாலும் உன் கனவு நிறைவேற்றனும்ங்கறதுக்காக நான் அனுப்பிவிட்டேனே தவிர இந்த நிமிஷம் வரைக்கும் உன் மேல எனக்கு துளி அளவு கூட சந்தேகம் கிடையாது தாமரை.

உன்னை சந்தேகப்பட்டா அதைவிட கேவலமான செயல் வேறு ஒன்றும் இல்லை என்று சொல்ல நிஜமா மாமா என்று கணவனை எழுந்து நின்று இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்...

ஆமாடி செல்லம் நீ நினைத்திருந்தால் மருதுவ கூட கல்யாணம் பண்ணி இருக்கலாம் ஆனா உன் மனசுக்குள்ள அப்படி ஒரு எண்ணமே வரல என்னை பார்த்து தானே உன் மனசுக்குள்ள சலனம் வந்துச்சு உன்னால இல்லன்னு சொல்ல முடியுமா?.

எனக்குலாம் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே உன்ன பார்த்து எனக்கு ஒரு மண்ணு ஃபீலிங் வரலையே என்றாள்...

அப்படியா எங்க உன் மனசாட்சி தொட்டு சொல்லு என்னை பார்த்து உனக்கு எந்த ஃபீலிங்கும் வரலை ஒரு நிமிஷம் கூட நீ என்னை நினைத்து பார்த்ததே இல்லை என்று சொல்லுடி பார்க்கலாம்..

ஒன்னும் இல்லையே நான் ஏன் உன்னை நினைத்து பார்க்க போறேன் என்று வேறு பக்கம் திரும்பி மௌனமாய் சிரித்தாள். ..

அடியே மொச புடிக்கிற நாய மூஞ்ச வெச்சு கண்டுபிடிச்சிடலாம் டி அந்த ஏரிக்கரையில் விழுந்து எந்திரிச்சி அப்படியே படில ஏறி போகும்போது தாமரைனு நான் கூப்பிட்ட பிறகு ஒரு பார்வை பார்த்தியே திங்கிற போல அந்த பார்வை என்னால மறக்க முடியுமா என்று கேட்கவும் அடப்பாவி நல்லாதான் கவனிச்சு இருக்கியா என்று சொல்ல லேசர் கண்ணுடி உன் மாமனுக்கு....

சரி சரி ரொம்ப குழைய வேண்டாம், எனக்கு வேலை இருக்கு போய் உங்கள் வேலையை பாருங்க என்று சொல்ல எனக்கு கொடுக்க வேண்டிய கோட்டாவை கொடு நான் போறேன் என்றான். ..

மாமா என்று பல்லை கடித்தவள் தொழில் நடக்கிற இடத்தில் வந்து என்ன வேலை பண்ணிட்டு இருக்க?

ஏய் புருஷன் பொண்டாட்டி கெஞ்சல் முத்தம் கித்தம் இதெல்லாம் கொடுக்கக்கூடாதுன்னு இருக்காடி என்று சொல்லி மனைவியின் உதட்டில் ஆழமாய் ஒரு முத்தத்தை கொடுத்தவன் அவள் அடிப்பதற்குள் அங்கிருந்து வேகமாய் ஓடிவிட்டான்.


மாமாஆஆஆ... வீட்டுக்கு வந்து தான் ஆகணும் அப்ப இருக்கு உங்களுக்கு என்று சொல்ல எதா இருந்தாலும் இப்பயே குடுடி அப்ப கொடுத்தாலும் இப்ப கொடுத்தாலும் நான் தானே வாங்க போறேன் என்று குரல் கேட்டது.

இன்னும் நீங்க போகலையா என்று தாமரை அங்கிருந்து வர...ஏய் எதா இருந்தாலும் பேச்சு பேச்சா இருக்கட்டும் மனுஷன் கிட்ட வராதே அப்புறம் நல்லா இருக்காது சொல்லிட்டேன் என்று கதவு மறைவில் நின்று கொண்டு கதிர் சொல்ல சரியான மீசை வச்ச ஆம்பளையா இருந்தா என் முன்னாடி வந்து நில்லுயா என்றாள்...

என்னடி சொன்ன என்ற கதிர் தனது வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு அவள் முன்னே வந்து நின்று தனது மீசையை முறுக்கி காட்டியவன் என்ன பார்த்த ஆம்பளயான்னு சொல்ற என்று அவள் வயிற்றின் மேலே விரல்களால் கோடு போட்டு இதிலேயே தெரியலையா டி உன் மாமன் மதுரை வீரன் உன் மனசுக்கேத்த சூரன் அந்த ஏரிக்கரையில் இறுக்கிப்பிடித்த வசீயக்காரன் நான் தான் என்று பாட்டு பாட...யோய் வெட்கமே இல்லையே மாமா என்று சிரித்தாள்...

பொண்டாட்டி கிட்ட இறங்கி போறவனும் வெட்கம் சூடு சொரணை எதிர்பார்க்காதவனும் புருஷனே கிடையாதுடி...புருஷன் பொண்டாட்டிக்குள்ள என்ன வெட்கம் வேண்டிக் கிடக்கென்றான்.

என்னமோ ஆச்சி நல்லா தான் இருந்த..கனியூருக்கு போயிட்டு வந்ததிலிருந்து ஒரு மார்க்கமா தான் இருக்கு என்று சொல்லவும் ஆமா டி இன்னைக்கி பார்வதி வேற பொண்ணு பார்க்க வராங்களாம்...

பாவம் என்னை நெனச்சு கண்டிப்பா ஃபீல் பண்ணுவாள் என்று கதிர் சொல்ல என்னைய்யா சொன்ன என்று மண்டி போட்டு இருப்பது வசதியாக இருக்க கதிரின் தலையில் நங்கு நங்கு என்று மோதிர விரலாலே கொட்டினாள்...

சிங்கப்பூர்

லிப்டில் ஏறி 27 ஆவது மாடிக்கு வந்தவள் அங்கிருந்த ரிசப்ஷன் கேர்ள் கிட்ட விக்டர் பார்க்கணும் என்க...ஒன் மினிட் என்று சொல்லியவள் போன் பண்ணி சார் உங்களை பார்க்க ரோஸி மேடம் வந்துருக்காங்க..ஹம் உடனே உள்ள அனுப்புங்கள் என்றான்

கதவை திறந்து கொண்டு தெனாவட்டாக உள்ளே போனவள் அங்கிருந்த மேனேஜிங் டைரக்டர் ஜான் விக்டர் எங்கும் பெயர் பொறுத்திருந்த கதவின் முன்னால் வந்து தனது விரல்களால் இரண்டு தட்டு தட்டி விட்டு கதவை திறந்து உள்ளே போனாள்...

உள்ளே வருபவளை கால் மேல் கால் போட்டு லேசர் பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தான் சிங்கப்பூரில் பேர் சொல்லும் படி இருக்கும் டிசைனர் விக்டர்.

உட்காரு என்று தனது முன்னே இருக்கும் சீட்டை காட்டி சொல்ல அவளும் உட்காருந்தாள்...

ஹம் சொல்லு ரோசி என்ன விஷயம் என்று கேட்க விக்டர் இப்ப நான் சொல்ல போறது உங்களுக்கு ரொம்ப ஹேப்பியான விஷயம்...

ஹேய் முதல்ல நீ சொல்லு அது ஹாப்பியா சேடானு நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னான். ..

அதாவது டிசைனர் லோட்டஸ் மேடம் கன்சீவா இருக்குறாங்க சோ அவங்களால எப்படி பேஷன் பரைடில் கலந்து கொள்ள முடியும் என்று கேட்க வாட் என்று அதிர்ந்து போய் தனது சேரை தள்ளிக்கொண்டு டேபிள் முன்னே வந்தான்...

எஸ் மிஸ்டர் விக்டர் தாமரை இப்போ பைவ் மந்த் கன்சிவா இருக்காங்க தமிழ்நாட்டு பெண்களுக்கு குழந்தைகள் செண்டிமெண்ட் தானே அப்போ ஏதாவது ஸ்டுப்பிட்ட ரீசன் சொல்லி தாமரை நிச்சயமா இங்கே அனுப்ப மாட்டாங்க..

சோ இந்த முறை நாம நினைச்ச போல நீங்க தான் வின் பண்ண போறீங்க இந்த வருஷத்தோட பாப்புலர் டிசைனர் வின்னர் லிஸ்டில் உங்கள் பெயர் தான் முதலாவதாக இருக்கப் போகுது என்று சொல்ல அவள் சொல்வதைக் கேட்க கேட்க விக்டருக்கு வானத்தில் பறப்பது போல் இருந்தது...

எப்படிப்பட்ட குட் நியூஸ் சொல்லியிருக்க தெரியுமா என்று எழுந்து வந்தவன் ரோசியின் கைபிடித்து இழுத்து தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்...

ரோசி உனக்கு என்ன கிப்ட் வேணும் கேளு உடனே கேளு இந்த பில்டிங் வேணுமா சொல்லு வேற ஏதாவது வேணுமா நான் உடனே உனக்கு தரேன் நீ எப்படிப்பட்ட நியூஸ் சொல்லி இருக்குன்னு தெரியுமா...

ஓ..காட் எட்டு வருஷமா இதுக்காக தான் நான் காத்துட்டு இருக்கேன் இந்த முறையை அந்த விகே வை நான் தோற்கடித்தே ஆகணும் என்னோட டிசைன் தான் பெஸ்ட் டிசைன் உலகம் முழுவதும் பாப்புலர் ஆகணும் என்றான்...

எஸ் நிச்சயமா நடக்கும் விக்டர் என்று சொல்லவும் ஒன் மினிட் ஒன் மினிட் என்றவன் தனது டிராவை திறந்து அதில் இந்த செக் எடுத்தவன் ஒரு கோடி ரூபாய்க்கு அமௌன்ட் எழுதி கையெழுத்து போட்டு இந்தா டி என்னுடைய ஸ்மால் கிப்ட் என்று ரோசியிடம் நீட்டினான்...

முதல் முறையாக இவ்வளவு பணத்தை பார்த்தவர்களுக்கு மயக்கம் வராத குறைதான் இருந்தாலும் தன்னை சமாளித்துக் கொண்டவள் ஓ மை காட் ...

நான் என்ன நம்முடைய பிரண்ட்ஷிப்பிற்காக தானே இதை பண்றேன் காசுக்காக பண்றேனா என்று கோபமாக கேட்க ஐ நோ பேபி உன்ன பத்தி எனக்கு தெரியும் பட் என்னோட மனதிருப்தியாக ப்ளீஸ் எடுத்துக் கொள் என்று விக்டரும் குழைந்தபடியை சொல்ல ஓகே உனக்காக வாங்கிக்கிறேன் என்று கண்ணில் ஆர்வம் மின்ன அதை வாங்கியவள் தன ஹேண்ட் பேக்கில் வைத்துக்கொண்டு ஓகே நான் ரொம்ப நேரம் இருக்க முடியாது...

அந்த லேடிக்கு உடம்பு சரியில்லை மெடிசன் வாங்குவதாக சொல்லிட்டு நான் வந்தேன் ஓகே பாய் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே வந்தவள் லிப்டில் ஏறும் போது இன்னொருத்தனும் அவளோடு ஏறியவன் இவ என்ன இங்கு?..லீலாவோட ஆபீஸ்ல தானே ஒர்க் பண்றாள் என்று யோசனையோடு வந்தான் லீலாவின் அண்ணன் மாறன்...

மாறனுக்கு சந்தேகமாக இருக்கவும் அந்த நேரம் பார்த்து ரோசி தனது போன் எடுத்தவள் யாருக்கோ கால் பண்ணி விக்டர் ஒரு கோடி பணம் கொடுத்துட்டான்...

தாமரையால் இங்கு வர முடியாதுனு நான் சொன்னேன் ...சொன்னதை கேட்டு சந்தோஷத்தில் குதிச்சிட்டு இருக்கான் என்ற பிறகு தான் மாறனுக்கு விஷயம் புரிந்தது சம்திங் ராங் என்று நினைத்தவன் அமைதியாக தனது போனை எடுத்து அவளுக்கு தெரியாமல் அவளை போட்டோ எடுத்துக் கொண்டவன் அதை தனது தங்கைக்கு அனுப்பி இது உங்க ஆபீஸ் வேலை பார்ப்பவள் தானே என்கவும் ஆமா ணா ரோசி என்று லீலாவும் உடனே பதில் சொல்லி இருந்தாள்.

ஓகே நான் உடனே அங்க வரேன் நீ எங்கே இருக்கிறாய்?

நான் ஆன்ட்டி கூட தான் ணா இருக்கிறேன் என்று சொல்ல ஓகே இன்னும் ஒரு ஹாஃப் அன் ஹவர்ல நாங்க வரேன் என்றான்…

தொடரும்…
 
Active member
Joined
May 9, 2025
Messages
147
Going good
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top