• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
586
ஆதவனும் தன் பொற்க்கரங்களோடு உதயமானான்.... வழக்கம் போல் எழுந்த கதிர் இரவு பாட்டு கேட்டுக் கொண்டே தூங்கியதால் போனில் ஒரு பாயிண்ட் தான் சார்ஜர் இருப்பதை பார்த்து ரூமிற்குள் வந்தவன் மனைவியை பார்க்க அவளோ ரெஸ்ட் ரூமில் இருப்பது தெரிந்தது...

தனது போனை சார்ஜிங் போட்டு விட்டு கீழே வந்தவன் அங்கிருந்த வாஷ்பேஷனில் முகத்தை கழுவி வாய் கொப்பளிக்கவும் மகனிடம் சீதாவும் டீயை கொண்டு வந்து கொடுத்தார்.

அதை குடித்தவன் நான் வயலுக்கு போறோமா என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான். .

குளித்துவிட்டு வெளியே வந்தவள் உடைமாற்றிக் கொண்டிருக்கும் போது கதிரின் போனுக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது...

என்ன இவர் போன வச்சுட்டு போயிட்டாரா என்றவாறு அங்கிருந்து பார்க்க சார்ஜிங் ஏறுவது தெரிந்தது.

முதல் அழைப்பு கட்டாகவும் இரண்டாம் அழைப்பு வரவும் டிரஸ் மாற்றி முடித்தவள் வந்து போனை பார்க்க அதில் ட்ரூகாலரில் பார்வதி என்ற பெயர் வரவும் யோசனையோடு போன் எடுக்கலாமா வேண்டாமா என்று நினைத்தாள்.

இரண்டாம் முறையும் கட்டானது மூன்றாம் முறை அழைப்பு வரவும் அட்டென்ட் பண்ணி அவள் ஹலோ என்று சொல்வதற்கு முன்பே அந்தப் பக்கம் இருந்தவளோ ஏங்க நான் பார்வதி பேசுறேன்.

என்ன பொண்ணு பார்க்க இன்னைக்கு வராங்க ப்ளீஸ் தயவு செய்து வந்து என்ன கூட்டிட்டு போங்க என்று சொல்லி அவள் அழுவதை கேட்டு தாமரைக்கு கொலவெறி வந்தது.

10 மணிக்கு மாப்பிள்ளை வீட்டுல வராங்க ப்ளீஸ் நீங்க இல்லாமே என்னால வாழ முடியாது வந்து என்னை கூப்பிட்டு போங்க என்று மீண்டும் அவள் சொல்லி அழ தனது தொண்டையை சரி பண்ணிக் கொண்டவள் ஹலோ என்று சொல்லவும் போனில் பெண் குரல் கேட்க அந்த பக்கம் இருந்த பார்வதியோ யார் நீங்க இது அவர் நம்பர் தானே என்று கேட்டாள்.

தாமரையோ ஆமா உன்னுடைய பெயர் என்ன என்று கேட்க முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க எதுக்கு அவரு போன் நீங்க எடுத்தீங்க என்க...

ஆமா முதல்ல என்ன கேள்வி கேட்க உரிமையை உனக்கு யார் கொடுத்தது யார் நீ என்று தாமரை கேட்க நான் கதிரோடு காதலி என்று அவள் சொல்லவும் அப்படியா நான் கதிரோட பொண்டாட்டி என்று சொன்ன உடனே போன் கட் ஆனது.

அந்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்க பெருமூச்சு விட்டு தன்னை சரி பண்ணிக் கொண்டவள் போய் கதவை திறக்கவும் அங்கே கதிர் நிற்க செத்தடா இன்னைக்கு நீ என்று நினைத்தவள் உள்ளே வந்து கண்ணாடி முன் நின்று தலையை சீவிக் கொண்டிருந்தாள்...

என்னடி நைட் நல்லா நிம்மதியா தூங்கி இருப்பியே என்று கேட்டுக் கொண்டு வந்தவன் மனைவியை பின்னால் இருந்து அணைக்க அவன் கையை விலக்கி விட்டு திரும்பியவள் உங்களுடைய காதலியை இன்னைக்கு பொண்ணு பார்க்க வராங்களாம் உங்களை வந்து காப்பாற்ற சொல்லி போன்ல அழுகிறாள் என்றாள்...

எதே காதலிய பொண்ணு பார்க்க வராங்களா என்னடி உளறிட்டு இருக்கு நல்லா தானே இருக்க?உன் மண்டையில் எதாவது அடிபட்டு இருக்கா என்று கேட்டான்...

ஆமா நான் பைத்தியம் தான்..உங்களுக்கு நான் அப்படிதான் தெரியுவேன் மாமா என்றவள் உங்கள் ஆருயிர் காதலி பார்வதி தான் போன் பண்ணி அழுகிறாள் என்க...

பார்வதி போன் பண்ணி அழுகிறாளா அவளுக்கு எப்படி என் நம்பர் தெரிந்தது என்று அதிர்ச்சியா கேட்டான்...

ஏன்டா இது நான் கேட்க வேண்டிய கேள்வி நீ என்னையே கேட்கிறாயா என்று கோபமாக கேட்டாள்.

அடியே என்னடி விஷயம்???எதோ புரியாம நீ சொல்லிக்கிட்டு இருக்குற என்ன நடந்துச்சு சொல்லு என்கவும் பின்னர் அவனுக்கு வந்த கால் பற்றி சொல்ல அய்யோஓஓஓஓ என்று தலையில் கையை வைத்தவன் இவளை என பல்லை கடித்தவனுக்கு போன் கண்ணில் பட்டது.....

சார்ஜிங் ல இருந்த தனது ஃபோனை எடுத்தவன் வர்ஷனுக்கு உடனே கால் பண்ணி மாமா அந்த புள்ள என்னதான் மாமா நினைச்சுட்டு இருக்கு சும்மா உயிரை வாங்கிட்டு இருக்கு என்க...என்னடா சொல்ற என்று கேட்க பின்னர் பார்வதி போன் பண்ணி தாமரையிடம் பேசியது சொல்ல நீ விடு நான் பாத்துக்குறேன் என்று சொல்லிவிட்டு அவன் ஃபோனை வைத்தான். ..

அடியே செல்லம் எந்த நாதாரி பையன் எனக்கு சூனியம் வச்சானே தெரியலடி இப்படியெல்லாம் என் வாழ்க்கையில் நடக்குது...சத்தியமா என் பொண்டாட்டி நீதாண்டி அவளுக்கு நான் நம்பர் தரவே இல்லடி என்று சொல்ல,நான் அதை பற்றி கேட்கவே இல்லையே? என்றாள்...

சுத்தம் நானா தான் உளறி உளறி மாட்டிக்கிறேனா என்றவன் உன் மாமன பாத்தாக்க மயங்கி போறாளுங்களே அம்புட்டு அழகா இருக்கிறேனா சொல்லுடி????

கணவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள் தொடப்பத்துக்கு பட்டு குஞ்சம் கேட்குதாம் என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்றாள்...

அதை கேட்டவனோ என்னடி இப்படி சொல்லிட்டு போற என்று போய் மனைவியின் தோளை பிடிக்க பின்ன என்ன...

இந்த காட்டானுக்கு போய் இவர்களெல்லாம் சுத்தி சுத்தி வராங்களே அதை நினைத்து சிரிப்பா வருது...

நான் ஏன் கவலைப்பட போறேன் சொல்லு இது முரட்டு முட்டாபீசு எனக்கு மட்டுமே சொந்தம் என்பது எனக்கு தெரியாதா என்று சொல்ல..ஏண்டி இத்தனை நாளா கோவமா இருந்தியேடி என்றான்...

நான் கோவமா தான் இருந்தேன் தவிர அது தேவி கிட்ட பேசினதை ஏன் சொல்லவில்லை என்கிறதால தான்..மத்தபடி சந்தேகம் எல்லாம் எனக்கு கிடையாது புரியுதா போயா என்று கணவனின் கையை தள்ளிவிட்டு அங்கிருந்து கதவை திறந்து கீழே போனாள்.

அடக்கடவுளே என் பொண்டாட்டி சந்தேகப்பட்டு எல்லாம் என் மேல கோபப்படலையா இது தெரியாம நான் வேற தேவதாஸ் ரேஞ்சிக்கு கவலைப்பட்டுக் கொண்டிருந்தனே....

அடியே வெள்ள பன்னி தேவி உனக்கு இருக்குடி ஒரு நாளைக்கு கண்டிப்பா கச்சேரி என்று சொல்லும்போது திரும்பவும் கதவை திறந்து கொண்டு தாமரை வர இது அவள் காதில் விழ ஏன் ஐயா நீ என்னதான் நினைச்சு கிட்டு இருக்கிற அவளுக்கு கச்சேரி இருக்குன்னு எந்த அர்த்தத்தில் நீ பேசுற எனக்கு தெரிஞ்சு ஆகணும் என்று சொல்ல...

ஆண்டவா ஏன்பா என்ன இப்படி சோதிக்கிற ஒரே ஒரு பொண்டாட்டி கட்டிகிட்டு நான் படுற பாடு இருக்கே சத்தியமா முடியல அய்யனாரே என்றான்....
ஓஓஓஓ என்னை மட்டும் கல்யாணம் பண்ணிக் கொண்டது துரைக்கு ரொம்ப குடைச்சலா இருக்கோ...வேணும்னாக்க அந்த தேவி-பார்வதி இன்னும் வேற எவளாவது வாய்க்கால்,காட்டு மேட்டில திரிவாளே அவளையும் கட்டிக்கிட்டு தசரதன் போல நூறு பொண்டாட்டியோட குடும்பம் பண்ண வேண்டியதுதானே?..

யாரு வேண்டான்னு சொன்னா என்று தாமரை கேட்க எந்த பக்கம் போனாலும் கேட் போடுறாளே. ...என் பொண்டாட்டி ஃபுல் ஃபார்முலா இருக்கா...

கதிர் நீ வாங்கி தாண்டா ஆகணும் உன் வாய் தான் விணைனு எத்தனை வாட்டி சொன்னாலும் நீ திருந்த மாட்ட என்றான்..

என்ன அங்க முணுமுணுப்பு?நான் கேட்டதுக்கு இன்னும் நீங்க பதிலே சொல்லவில்லையே அப்படி என்ன அவளுக்கு கச்சேரி பண்ண போறீங்க?

மனைவியை பார்த்தவன் அவ கல்யாணத்துக்கு ஆர்கெஸ்ட்ரா பண்ணலாம்னு இருக்கேன் டி.உன் அண்ணா பாட்டு பாட நான் டான்ஸ் ஆட நீங்க எல்லாம் வேடிக்கை பார்க்க நல்லா இருக்கும் கொஞ்சம் யோசிச்சு பாரு என்று சொன்னவுடனே இருக்கும் மனநிலையை மறந்து தாமரை சத்தமாக சிரித்து விட்டாள்...

மனைவி சிரித்த பிறகுதான் கதிருக்கும் மனதும் கொஞ்சம் இயல்பானது.இந்த நேரத்தில் இப்படி தேவையில்லாத டென்ஷனெல்லாம் மனசுல ஏத்திக்காதடி...அது உனக்கும் நல்லது இல்ல வயிற்றில் இருக்கும் நமது குழந்தைக்கும் நல்லதில்லை என்றவாறு மனைவியின் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சொல்ல,நான் ஏன்யா டென்ஷன் எடுத்துக்க போறேன்?. உன்னை டென்ஷனாக்குறதுக்கு தான் நான் பிறந்து வந்திருக்கிறேன் என்க..அடிப்பாவி நான் தாண்டி தேவையில்லாம டென்ஷன் ஆயிட்டு இருக்கேன்...

அடச்சை இது தெரியாம போச்சே என்க..யோவ் நீ உடனே பேச்சை மாத்தாத அந்த தேவிக்கு என்ன கச்சேரி அதை சொல்லு...

அடியேய்...இல்லடி அவள் நல்லதுக்கு தாண்டி சொன்னேன் அதை இப்படி ரெக்கார்ட் பண்ணி உனக்கு அனுப்புனிருக்கா பாரேன்...அன்னிக்கு நான் அவகிட்ட பேசும் போது போன் கையில் இருந்தபோல பார்க்கவே இல்லையே டி..நல்ல வெள்ளை பணியார போல கும்முன்னு நின்னுகிட்டு புடவை முந்தாணி தான் ஒரு கையால திருவி கிட்ட நின்னா போல என்க...

எதேஏஏஏஏ என்றவள் கணவனின் சட்டையை கொத்தோடு பிடித்தவள் அந்த அளவுக்கு ஆழமா உன்னிப்பா கவனிச்சு இருக்கீங்க அப்படித்தானே என்று கேட்க...என்னடி எப்படி சொன்னாலும் மடக்கி மடக்கி கேள்வி கேட்கிற..இப்படி எல்லாம் கேள்வி கேட்டா உன் புருஷன் ரொம்ப பாவம்டி...
இவன் அப்பாவி பையன் வாயில்லா பூச்சிடி..நீ கிழிச்சு போட்ட கோட்ட உன் புருஷன் தாண்டுவானா சொல்லு?.

யாரு நீயா?.

நான் கிழிச்ச கோட நீ தாண்ட மாட்ட?இத வந்து ஓடுற தண்ணில தான் எழுதி வைக்கணும் நீ ஊருக்கு குதிச்சிட்டு போன கதை இப்பதானே வெளியில வருது எங்கவும் ஸ்சூஊஊ விடமாட்டேங்குறாளே இந்த கதையை...

அடியே நான் பர்த்டேக்கு தாண்டி போனேன் அங்கே எனக்கு பின்னாடி பார்வதினு ஒருத்தி சுத்திட்டு இருப்பாள்னு நான் என்னடி கனவா கண்டேன்?.தெரியாத்தனமா அந்த ரெண்டு பொண்ணையும் மாடுகிட்ட இருந்து காப்பாத்துனேன்...ஆனா பாரேன் ஒரு பொண்ணுக்கு இந்த ஃபீலிங் வரல இவளுக்கு மட்டும் எப்படி வந்துச்சுடி?.

கணவன் சொன்னதை கேட்ட தாமரையோ தனது இடுப்பில் கையை வைத்து முறைத்து பார்த்தவள் ஓ இன்னொருத்திக்கு பீலிங் வரலைனு தான் இப்ப இவ்வளவு கவலை உனக்கு அப்படித்தானே....

ஆஹாஆஆஆஆ கதிரி நீ செத்தடா. ..

செல்லம் இனி உன் மாமா ஒரு வார்த்தை வாயை திறந்து பேசினால் நீ வாயிலேயே அடி டி என்கவும்,அப்படியா என்றாள்...ஆமாம் அப்படி தாண்டி என்று தனது வாயை மூடிக்கொண்டான்.

அப்பொழுது தாமரைக்கு கால் வரவும் போனை எடுத்துப் பார்க்க அதில் பூனாவிலிருந்து விஸ்வநாதன் பண்ணுகிறார் என்பது தெரிந்து அங்கிள் தான் என்று சொல்லிக் கொண்டு அட்டென்ட் பண்ணியவள் பேசிக்கொண்டு பால்கனிக்க போக இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்...
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
586
பின்னர் சிங்கப்பூருக்கு போகும் கதையை விஸ்வநாதன் சொல்ல ஆன்ட்டி எப்படி ஒத்துக்கிட்டார்கள் என்று கேட்க,அன்று நடந்தது எல்லாம் விஸ்வநாதனும் தாமரையிடம் சொன்னார்.

சரிங்க அங்கிள்...நல்லபடியா போயிட்டு வாங்க...எப்போ ஃப்ளைட் என்று கேட்கும் போது இன்று இரவு தான் என்கவும், சரிங்க அங்கிள் என்று மேலும் சிறிது நேரம் அவர் மனைவியுடனும் பேசிவிட்டு போனை வைத்தவள் கதிரிடம் வந்து விஷயத்தை சொல்ல...

யாரோட வாழ்க்கை எப்படி போகும்னு கணிக்க முடியலடி...பாரேன் எங்கேயோ ஒரு மூலையில் இருந்து நீயும் நானும் வாழ்க்கையில் ஒன்று சேரனும் என்று ஆண்டவன் எழுதியிருக்கான் பாரேன்...

ஆனாலும் முதன்முதலில் வந்து மேல மோதுனியே எப்பாஆஆஆஆ செம ஹாட்யா இருந்தடி என்று சொல்லி மனைவியை தன்னோடு இறுக்க ஐயோ மாமா வயிறு....எதுக்கு இப்படி புடிச்சி இறுக்குற?வலிக்குது என்க... ஓ சாரி சாரி வயித்துல குட்டி இருக்கிறது தெரியாம பண்ணிட்டேன் டி...

உனக்கு ஞாபகம் எப்படி இருக்கும்?.உனக்கு தான் ரெண்டு பேரை பற்றி பெருங்கவலையா இருக்கேயா...அவளுக்கு கல்யாணம் பண்றதா இல்ல இவளுக்கு கல்யாணம் பண்றதானு...அப்போ உனக்கு எப்படி என்னை பற்றிய ஞாபகம் இருக்கும் சொல்லு என்கவும் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடி ...

நீ என் உசுருடி உன்ன போய் மறந்து மாமா எப்படி வாழ்வேன் சொல்லு பாக்கலாம்?.

போதும் போதும் நீ போட்ட சோப்பு வரைக்கும்.. விடுயா எனக்கு வேலை இருக்கு என்று சொல்ல..அப்போ நான் வேல வெட்டி இல்லாதவனாடா?.

அதான் பார்த்தால் நல்லா தெரியுதே உன் வேலை எதில் கவனமாக இருக்கு என்றவள் தன்னை சீண்டூம் கணவனின் விரல்களை பார்த்து சொல்லிக்கொண்டு அங்கிருந்து சென்றாள்...

ரொம்ப டேமேஜ் பண்றா என் பொண்டாட்டி என சிரித்துக்கொண்டே ரெஸ்ட் ரூமிற்குள் சென்றான்...

காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த பெருமாள் போனிற்கு கால் வரும் ரிங்க்டோன் சத்தம் கேட்டது.

ராதா கொஞ்சம் அந்த போனை எடு என்று சொல்லவும் இருப்பா நான் எடுத்துட்டு வரேன் என்று படித்துக் கொண்டிருந்த செல்வி போய் போனை எடுத்து பார்க்க,அதில் சின்னவன் என்று வர அப்பா சின்ன அண்ணன் தான் போன் பண்ணுது என்க அட்டென்ட் பண்ணு என்றார்...

அட்டென்ட் பண்ணிய செல்வி ஹலோ கம்பவுண்டர் சார் என்ன பண்றீங்க என்க....

எதேஏஏஏஏ கம்பவுண்டராஆஆஆ என்று சொல்ல...ஆமாண்டா எட்டாங்கிளாஸ் படித்தவர்களுக்கும் எழுத படிக்க தெரியுது எம்பிபிஎஸ் படிக்கும் உனக்கும் எழுத படிக்க தெரியுது....
இதுல பெருசா என்ன வித்தியாசம் வந்துர போகுது?.அதேபோல கம்பவுண்டரும் ஊசி போடுறாரு நீயும் ஊசி போடுற என்றாள்...

அய்யனாரப்பா மாமா எப்படி தான் உன்னை சமாளிக்க போறாரோ பாவம் என்றான்...

அது மாமாவோட தலையெழுத்து விதி ரொம்ப வலியது என்று சொல்லி சிரித்தாள்....

அது தெரிஞ்ச விஷயம் தானே டி...

சரி அது இருக்கட்டும் நீ எப்படி இருக்க வாலு?

எக்ஸாம் வர்ற திங்கள் தானே என்க...

ஆமாம் அதான் படிச்சிட்டு இருந்தேன் போன் வந்துச்சினு அப்பா எடுக்க சொன்னாங்க என்றாள்..

எதேஏஏ படிக்கிறியாஆஆஆஆ...

அய்யோ அய்யனாரே என் தங்கச்சிக்கு என்ன ஆச்சினு தெரியலையே நல்லா இருந்த பிள்ளை திடீர்னு படிக்கிறேன்னு சொல்லுதே...

தனது அண்ணனின் கிண்டலை கேட்டு அண்ணாஆஆஆ என்று கத்த.... ஹா ஹா ஹா.... ஏய் வாலு போனை அப்பா கிட்ட கொடு என்றான்...

அந்த நேரம் கீழே வந்த கதிர் படிக்காம என்ன உனக்கு போன் வேண்டி கிடக்கு என்க... நிலவன் அண்ணன் தான் ணா என்க...

அப்படியா குடு என்று தங்கையிடமிருந்து போனை வாங்கியவன் நிலவா எப்படி டா இருக்க?.படிப்பெல்லாம் எப்படி போகுது என்க நல்லா இருக்கேன் ணா. நீ எப்படி இருக்க அண்ணி நல்லா இருக்காங்களா?.ஏன்னா உனக்கு காலையிலிருந்து போன் பண்ணிட்டு இருக்கேன் லைன் கிடைக்கவில்லை சுவிட்ச் ஆஃப் சுவிட்ச் ஆப்னு வருது...

ஆமா டா ஆப் ஆகிட்டு..அதான் சார்ஜிங் போட்டுருந்தேன் என்க....அண்ணா ஒரு சந்தோஷமான விஷயம் ணா....

ஹம் சொல்லுடா என்ன...

இந்தியன் டீம்ல என்னை செலக்ட் பண்ணிருக்காங்கணா என்க....அப்படியா என்று சந்தோஷத்தில் கதிர் கத்த மற்றவர்களோ என்னாச்சு என்று அங்கு வந்தவர்கள் கதிர் போன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து செல்வியிடம் என்ன விஷயம் என்று கேட்க தெரியவில்லை..நிலவன் அண்ணா தான் போன் பண்ணுச்சு என்ன சொல்லுச்சுன்னு தெரியலையே என்றாள்...

சரிடா அப்பா கிட்ட பேசு என்று அங்கே என்னவோ ஏதோ என்று யோசனையோடு இருந்த பெருமாளிடம் போனை கொடுக்க அவரிடம் பேசியவன் விஷயத்தை சொல்ல,ரொம்ப சந்தோஷப்பா என்றவர் இந்தா உன் அம்மாளுங்க கிட்ட பேசு என்று போனை கொடுத்தார்...

மற்றவர்களிடம் பேசியவன் விஷயத்தை சொல்ல எல்லாருக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை...அந்த நேரம் மச்சான் மச்சான் என்று வீட்டுக்குள் வந்த வேலு என் மச்சான் இந்தியன் டீம்ல செலக்ட் ஆகிட்டானே டிரீட் இல்லையா என்க...

செல்வியோ தனது வருங்கால கணவனை பார்த்து மௌனமாய் சிரித்துக்கொண்டு ரூமிற்குள் சென்று விட்டாள்...

வேகமாய் போகும் தன்னவளை பார்த்த வேலு ஏன் இங்க இருந்தாக்க இத்தனை பேருக்கு முன்னால் கடித்து தின்னு விடுவேனோ இப்படி பாய்ஞ்சு ஓடுகிறாளே என்று பல்லை கடித்தான்...

ஐயனாரப்பா நீ தான்பா என் பிள்ளைங்களுக்கு துணையாக இருக்கணும் என்று சொல்லிய வள்ளி அப்பாயி ஐயா நம்ப அய்யனாருக்கு ஒரு சூடத்தை ஏத்திட்டு வந்துடுப்பா என்று சொல்ல சரிமா என்றார் பெருமாள்.

அப்பொழுது கவிதாவும் பார்வதியும் உள்ளே வர இருவரையும் பார்த்து வாங்கத்தா என்ன அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் ஒன்னா வந்துருக்கீங்க என்றார் வள்ளி அப்பாயி..

ஏம்மா எங்க வீட்டுக்கு நாங்க வரக்கூடாதா என்று பார்வதி கேட்க அய்யோ ஆத்தா எப்ப வேணாலும் வாங்கத்தா...ஒரு காலமும் என் வாயில அப்படி வராது என்று பதற்றமாக வள்ளியப்பாயி சொல்ல அம்மா சும்மா கிண்டலுக்கு தான் மா அக்கா சொல்லுது என்றார் கவிதா.

அண்ணி டீ என்று ராதா இருவருக்கும் கொண்டு வந்து கொடுக்க இருவரும் எடுத்துக் கொண்டனர்.அவர்களிடமும் நிலவன் செலக்ட் ஆன விஷயத்தை சொன்னார்கள் அவர்களுக்கும் சந்தோஷம் தாங்கவில்லை ...

அம்மா அதாவது நாங்க எதுக்கு வந்தோம்னா நாளைக்கு அம்மாவாசை வருது அதுல இருந்து 5ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை தாமரைக்கு ஐந்தாம் மாசத்துக்கு சோறு கொடுக்கலாம் என்று நானும் என் தங்கச்சியியும் முடிவு பண்ணிருக்கோம் என்று பார்வதி சொல்ல,நல்ல விஷயம் ஆத்தா தாராளமா செய்யுங்க என்றார்.

ஆமா மா முன்னாடியே வந்து சொல்லிட்டு போகலாம்னு வந்தோம் திடீர்னு நாங்க வந்துட்டாக்க அப்புறம் நீங்க ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாதா என்று பேச்சு வரக்கூடாது இல்லையா...அதுக்கு தான் என்கவும் உங்க மகளுக்கு செய்றீங்க இதுல நாங்க சொல்றதுக்கு என்ன இருக்கு?என்ன செய்யணுமோ தாராளமா சொல்லுங்க ஏற்பாடு பண்ணிடலாம்த்தா...

அம்மா இது நாங்க செய்ய வேண்டிய முறை நீங்க எல்லாம் ஒன்னும் செய்ய வேண்டாமே என்று பார்வதி சொல்ல இருக்கட்டும் த்தா என்று சிரித்தார்..

ஏம்மா ஊர் வழக்கம் உங்களுக்கு தெரியாதம்மா என்றார் கவிதா. ..

எங்க தாமரையை காணும் என்று கேட்க அந்த புதுசா ஒரு ஆர்டர் வந்திருக்கே அந்த வேலையில உம்மவ வேலையில் பிசியா இருக்குறாள். ..

போட்டு உடம்பு ரொம்ப வருத்தாதன்னு சொன்னாலும் எங்க காதில வாங்குற என்று கதிர் சொல்ல...புடிச்ச விசயம் தானே கண்ணு தாராளமா செஞ்சிட்டு போகட்டுமே..உடம்பு முடியுற வரைக்கும் செஞ்சிட்டு போகபோகுது அதுக்கப்புறம் மேல உன் மவன் பொறந்த பிறகு உன் பொண்டாட்டி ஓய்வா தான இருக்க போறா என்று அப்பாயி சொல்ல எல்லாவற்றுக்கு நீ மடை அடைச்சுக்கிட்டு இரு அப்பாயி என்று முறைத்தான்...

நீலகிரி...

மருமகள் உண்டான விஷயத்தை கேள்விப்பட்டதிலிருந்து மயிலாவையும் வேதாவையும் கையில் பிடிக்க முடியவில்லை என்று மூக்கையன் கிண்டல் பண்ணிக் கொண்டிருக்க செல்லாவும் மௌனமாக சிரித்துக் கொண்டிருந்தாள்.

இருவரும் மாறி மாறி மருமகளுக்கு அது இது என்று நினைத்ததெல்லாம் செய்து கொடுக்க அவளால் தான் சாப்பிட முடியவில்லை. ..

அம்மா நானும் அந்த வீட்டில் இருக்கிறேன். என்னையும் கொஞ்சம் கவனியுங்கள் என்று மருது சொல்ல ஆமா இவன் தான் மாசமா இருக்கான் பாரு என்று முறைத்தவர் சுண்ட காட்சிய பாலில் குங்குமப்பூவை போட்டு கலந்து எடுத்துட்டு வந்தவர் குடி செல்லா என்று மருமகளிடம் நீட்ட டம்ளரை பார்க்கவே அவரளுக்கு பகீர்னுது இருந்தது.

பால் பிடிக்காது இருந்தாலும் மாமியாரின் அன்பான உபசரிப்பை தட்டிக் கழிக்க முடியாமல் கடந்த இரண்டு மாதமாக பிடிக்காத பாலை குடித்துக் கொண்டிருக்கிறாள்.

மனைவியின் முகத்தை வைத்து அவளுக்கு பிடிக்காது என்பது புரிந்தாலும் இப்பொழுது உடலுக்கு இது நல்லது தானே என்று மருதுவும் எதுவும் சொல்லவில்லை.

கண்ணை மூடி அவள் குடிப்பதை பார்த்து மற்றவர்களுக்கு சிரிப்பாக இருந்தது. அது பால் தான் டி. ஏன் தான் இப்படி முகத்தை சுளிச்சுகிட்டு குடிக்கிற உன் மகன் தெம்பா வரணும்னு தானே டி அம்மா கொடுக்குது என்றான்...

தொடரும்… .
 
Active member
Joined
May 9, 2025
Messages
128
Kudos to you author,wonderful funny conversation Lotus and Sun. I really enjoyed reading. A small suggestion, there are 2 characters with same name. Maybe for ammas name you can add her daughter name in the brackets.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
586
Kudos to you author,wonderful funny conversation Lotus and Sun. I really enjoyed reading. A small suggestion, there are 2 characters with same name. Maybe for ammas name you can add her daughter name in the brackets.
🤩🤩🤩😍😍பார்வதி😁😁😁... ஒருத்தி கதிரை ஒன் சைடு லவ் பண்றது... இன்னொரு பார்வதி கதிர் அத்தை வேலுவுடைய அம்மா..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top