• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
579
சீமக்கரை

ஒரு மனுஷன் ஊருக்கு போனானே நல்லபடியா போய் சேர்ந்துட்டேன்னு ஒரு போன் பண்ணி விசாரிக்கிறானா பாரு?

இங்க இருந்தா மட்டும் தான் இல்லாத அக்கறை சக்கரை எல்லாம் பொழிஞ்சு தள்ளுவான் என்று தாமரையும் மனதிற்குள் திட்டிக் கொண்டு புடவைக்கு டிசைன் பண்ணிக் கொண்டிருக்கும்போது அவளுக்கு புது நம்பரில் இருந்து கால் வந்தது.

ட்ரு காலர்ல செக் பண்ண சுதா என்று வரவும் ஏற்கனவே கணேசன் தனது மருமகள் பெயரைச் சொல்லி அவள் கால் பண்ணுவாள் என்று சொல்லிச் சென்றதால் அந்த பொண்ணு தான் என்று எண்ணத்தில் கணேசன் மாமா சொல்லிட்டு போனார்களே அவங்க மருமகள் தான் போன் பண்ணுது என்று பக்கத்தில் ஆரி ஒர்க் செய்து கொண்டிருக்கும் தனது மாமியார்களிடம் சொல்ல அட்டென்ட் பண்ணுமா என்க...

ஸ்பீக்கரில் போட்டு ஹலோ என்க ஹலோ வணக்கம் நான் சுதா பேசுறன் என்றாள்.ஹம் சொல்லுங்கம்மா என்று தாமரை கேட்க இதுபோல எங்க மாமா மிஸ்டர் கணேசன் உங்க நம்பரை கொடுத்தாரு...

அவள் மிஸ்டர் கணேசன் என்று சொல்வதைப் கேட்ட தாமரையோ மௌனமாய் சிரித்துக்கொண்டாள்.

ஹம் சொல்லுங்க...ஆமாம் என்கவும் இதே போல புடவையில் என்னோட போட்டோ அவரோட போட்டோவும் முந்தாணையில் வர போல கேட்டேன் என்றவள் தாமரைக்கு ஏதோ டிசைனிங் தெரியாது என்பது போல அவள் இஷ்டத்துக்கு நெட்டில் படித்ததை வைத்து அப்படி வேணும் இப்படி வேணும் இது எப்படி செய்யணும் என்று சொல்ல, கேட்ட ராதாவுக்கும் சீதாவுக்கும் பயங்கர கோபம் வந்தது.

தாமரையோ அவர்களை அமைதியா இருங்கள் என்று மௌனமாய் சிரித்துக்கொண்டு சரி சரி என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்தில் அவளின் பேச்சை பொறுக்க முடியாத சீதாவும் எழுந்து போய் போனை கட் பண்ணி விட்டு இவளுக்கு அவசியம் புடவை செஞ்சுதான் கொடுக்கணுமா என்றார்.

அத்தை நம்மளோட திறமையை நாமளே வெளியில சொல்ல கூடாது.பார்த்து தெரிஞ்சுக்கட்டும்...ஏதோ ஆன்லைன்ல படிச்சிருக்கா போல என்கவும் படிச்ச பொண்ணுக்கு கொஞ்சம் கூட மரியாதை தெரியலன்னு நிரூபிச்சிட்டா...

ராதா சீதா இருவராலும் மாமாவுக்கு இப்படி ஒரு மருமகளா என்று கவலைப்படாமல் இருக்க முடியவில்லை ....


கனியூர்:

தோழிக்காக வாசலில் படபடப்போடு நின்ற சீதாவோ தூரத்தில் புல்லட்டின் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க அங்கே வர்ஷன் வந்து கொண்டிருந்தான்.

அய்யோ போச்சு...சின்ன மாமா வராங்களே..செத்தோம்டி என பதற்றமாய் நிற்கவும்,அத்தை வீட்டின் கேட் அருகே தன் மாமன் மகள் நிற்பதை பார்த்துக் கொண்டே வந்தவன் அவளின் எதிரே வந்து வண்டியை நிறுத்திவிட்டு எப்ப இருந்துடி உனக்கு புது டூட்டி போட்டுருக்காங்க?
சம்பளம் எவ்வளவு என்று அவளையும் பக்கத்தில் இருந்த இரும்பு கேட்டையும் பார்த்து சொல்ல...மாமா அது வந்து மாமா என்று சீதா தடுமாறினாள்.

மாமன்தான் வந்துட்டேனே விஷயத்தை சொல்லுடி...எதுக்கு இங்க வாசலில் நின்னுட்டு இருக்க? வீட்டுக்குள்ள போக வேண்டியது தானே என்கவும் இவ்வளவு நேரம் அங்க அம்மா கிட்ட பேசிட்டு தான் வரேன் மாமா...

என்ன அம்மாட்ட பேசிட்டு வரியா பிறகு எதுக்குடி வாசல் நிக்கிற?.அது வந்து மாமா என்று உள்ளே பார்த்தாள்...ஏய் நான் என்ன கேட்டுட்டு இருக்கேன் நீ அங்குட்டு முழிக்கிற என்றான்.

அது பாரு உள்ள இருக்கா மாமா என்க...பாருவா அதுக்கு ஏன் நீ இங்கு நிக்கிற என்றவாறு வண்டியில் உள்ளே வந்தவன் சற்று தள்ளி கதிரோடு பார்வதி நிற்பது பார்த்து யோசனையோடு வந்தான்.

கதிரின் முகம் கோவமா இருப்பதை பார்த்து அங்கு வந்து வண்டியை நிறுத்த அந்த நேரத்தில் வர்ஷனை எதிர்பார்க்காத பாருவோ அண்ணா என்று அதிர...டேய் கதிர் என்னடா என்றான்.

மாமா மரியாதை இந்த புள்ளையை போக சொல்லுங்க??

என்ன டா ஆச்சு?

இந்த புள்ளை யார்னே தெரியல..எவ்வளவு தைரியம் பாருங்களேன் காதலிக்கிறேன். உன்ன தான் நினைச்சுட்டு இருக்கேன் கதை சொல்லிட்டு இருக்கு...

அதை கேட்ட வர்ஷனோ பார்வதியின் மேல் கோபம் வர நீ போடா நான் பார்த்திருக்கிறேன் என்றான்.மாமா சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது என்று கதிர் கொஞ்சம் பதட்டமா சொல்ல..அட அறிவு கெட்டவனே உன்ன பத்தி எனக்கு தெரியும் பாருவை பத்தியும் எனக்கு தெரியும் நீ போடா என்றான்.

தனது சித்தப்பா மகளை முறைத்துக் கொண்டே இருக்க அண்ணா அது வந்துணா என்று அவள் பயந்து கொண்டு வர்ஷனின் முகத்தை பார்க்க முடியாமல் சொல்ல நீ வீட்டுக்கு போ வந்து பேசுறேன் என்றான்.

விட்டால் போதும் என்று வேகமா அங்கிருந்து சென்று விட்டாள்.கதிருக்கோ அந்த பெண்ணின் வார்த்தை கேட்டு கோவம் வர என்ன இந்த காலத்து பொண்ணுங்க இப்படி இருக்கிறாங்க...யாருன்னே தெரியாதவன் மேலே எப்படி இவங்களுக்கெல்லாம் காதல் வருதுன்னு தெரியலையே என்று தலையில் அடித்துக் கொண்டு அங்கே பந்தல் அலங்காரம் செய்யும் இடத்தில் போய் நண்பர்களோடு இவனும் கலந்து கொண்டான்.

வீட்டிற்கு வந்த பார்வதியோ தனது ரூமுக்குள் போய் கதவை சாத்திக்கொண்டு சத்தம் இன்றி அழுதாள்.

சிறிது நேரம் சென்று வர்ஷனின் புல்லட் சத்தம் தங்களது வீட்டு வாசலில் கேட்டது. கதவை திறந்தவன் சித்தப்பா சித்தப்பா என்று கூப்பிட்டபடியே உள்ளே வர பார்வதியின் அப்பா சிவராமனும் வாப்பு என்று சொல்ல...உள்ளே வந்து உட்கார்ந்தவன் நம்ம டவுன்ல இருக்குற அந்த டாக்டர் பையன் இருக்காரே அந்த பையனுக்கு பார்வதியை பொண்ணு கேக்குறாங்க...ஏற்கனவே உன்கிட்ட சொன்னேனே என்னப்பா பண்ணலாம் முடிச்சிடலாமா என்க...சரி அப்பு ஜாதகம் ஒத்து வந்தா என்கும்போது கதவை திறந்து விட்டு வெளியே வந்தவள் அண்ணா என்று தயக்கமா கூப்பிட...
சொல்லு பாரு என்றான்.

மகளை பார்த்த சிவராமனும் ஏற்கனவே உனக்கு நாலஞ்சு வரனை உன் அண்ணன் கூட்டிட்டு வர நீயும் இல்லாத காரணத்தலாம் சொல்லி தட்டி கழிச்ச...இப்ப நம்ம கண் முன்னாடியே இருக்கிற பையன்..நல்ல குடும்பம் என்கவும் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்றாள்.

ஒவ்வொரு மாப்பிள்ளையும் நீ தட்டி கழிச்சிட்டு இருந்தா என்ன தான் அர்த்தம்?சொல்லு என்று சிவராமன் கேட்கவும் அவளோ கொஞ்சம் தைரியத்தை வர வைத்துக் கொண்டு நான் ஒருத்தங்களை காதலிக்கிறேன்பா என்று சொல்ல...
வேகமாக எழுந்தவர் மகளை ஓங்கி அறைய போக சித்தப்பா என்று வந்து அவரை தடுத்தான்.

என்னடா பேசிட்டியா என வேலு கேட்க யாருகிட்ட என்று திருப்பி கதிர் கேட்கவும் தனது மச்சானை முறைத்து பார்த்தான்.

பங்காளி யார் இந்த பொண்ணு அது உன்கிட்ட அப்படி தனிப்பட்ட முறையில் பேசுவதற்கு என்ன விஷயம் இருக்கு என்று ஜானும் இப்பொழுது கேட்க யாருக்கு தெரியும் என்றான்.

கதிரின் பதிலைக் கேட்ட இருவருக்கும் செம கடுப்பு வந்தது.அறிவு கெட்ட பயலே யாருனு தெரியாத பிள்ளை கிட்ட தான் இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தியா என்க..

அந்த பிள்ளை கிட்ட தான் இவ்வளவு நேரம் நான் பேசிட்டு இருந்ததை நீ பார்த்தியா டா?.

டேய் மாப்பி வர ஆத்திரத்துக்கு செவுட்டில் மிதிப்பேன் சொல்லிட்டேன் ஒரு ஆணியும் புடுங்க வேணாம் எவகிட்ட நீ பேசினா என்ன பேசலைனா என்ன என்று தனது வேலையை வேலு பார்க்க அப்படி எல்லாம் விட முடியாது என்ற ஜான் டேய் எங்களுக்கு தெரியாமல் யார் இது என்க..உண்மையிலேயே அந்த புள்ள யாருன்னு தெரியலையே..

தெரிஞ்சா தானே பங்காளி சொல்ல முடியுமென்றவனை முறைத்து விட்டு அவனும் வேலுவை போல திரும்பி கொண்டான்.

சிறிது நிமிடங்கள் சென்று அந்த பொண்ணு லவ் பண்ணுறேனு சொல்லுதுடா என்க...இவனுங்களோ நண்பன் சொல்வதை கண்டுக் கொள்ளாமல் அங்க அலங்காரம் செய்து கொண்டிருந்த ஆட்களுக்கு தேவையானதை எடுத்து கொடுத்தனர்.

நண்பர்கள் இருவரும் கண்டு கொள்ளாமல் அவர்கள் வேலையை பார்ப்பதை பார்த்த கதிரோ பழிக்கு பழி வாங்குறீங்களாடா...உங்ககிட்ட தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்டா..

உனக்கு வேலை இல்லனாக்க போய் மத்த வேலையை பாரு எங்களை வேலை செய்ய விடு என்று கடுப்பாக வேலு சொல்ல அந்த அளவுக்கு போயிட்டியா டா.

நீ என்ன வேணா நெனச்சுக்கோ தங்கச்சி புருஷன்னு பாக்குறேன் இல்லனாக்க வாயிலேயே மிதிப்பேன் என்று கதிர் சொல்ல அதேதாண்டா நானும் சொல்றேன். என் தங்கச்சி புருஷன் என்பதால் தான் பார்க்கிறேன் இல்லனா எட்டி உன் சங்குலையே மிதிப்பேன் என்றான்.

நேரமும் கடந்து சென்றது மதிய உணவை சாப்பிட ரஞ்சிதம் கூப்பிட உள்ளே போனவனுங்கள் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

பின்னர் ஹாலியில் உட்கார்ந்து பொதுவாக பேசிக் கொண்டிருக்க நேரமும் கடந்து செல்ல தூரத்தில் இருக்கும் உறவினர்களாம் வர ஆரம்பிக்கவும் சரிப்பா ஃபங்ஷனுக்கு ரெடியா ஆகலாம் என்று ரஞ்சித் சொல்லவும் அவரவர் அறைக்கு சென்றனர்.

நண்பர்கள் மூவரும் மேலே வந்தவர்கள் குளித்து தயாராகி கீழே வர நேரமும் கடந்து சென்றது.வண்ண விளக்கு அலங்காரத்தில் அந்த பேலஸே பளபளப்பாக ஜொலித்தது. ..

அழைத்தவர்கள் எல்லாம் வந்ததும் மித்ரன் மீராவின் புதல்வனான மிதிலேஷ் முதல் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட வந்தவர்களோ பரிசு பொருட்களை கொடுத்து சென்றனர்.

வந்தவர்களை வர்ஷனும் மற்றவர்களும் சாப்பிட அழைத்து போய் கவனித்து அனுப்ப பங்க்ஷனும் நல்லபடியாக முடிந்தது.இவனுங்கள் சாப்பிட்டு முடிக்கவே இரவு பதினொன்று ஆனது.

நாங்கள் கிளம்புறோம் என்று சொல்ல ஏன்பா நைட்ல...இருந்துட்டு நாளைக்கு போகலாமென்று மற்றவர்கள் சொல்ல நைட்ல டிராவல் பண்ணா விடிய காலமாக போய் சேர்ந்துடுவோம் என்று சொல்லிவிட்டு மூவரும் அங்கிருந்து புறப்பட்டார்கள் .

காரை நான் ஓட்டுகிறேன் என்று கதிர் சொல்ல எதையாவது பண்ணி தொலை என்று முணு முணுத்த வேலுவோ பின்னாடி சீட்டில போய் படுத்து விட ஜான் முன்னாடி சீட்டை சாய்த்து படுத்து விட்டான்.

கதிரோ இருவரையும் முறைத்து கொண்டு காரை ஓட்ட...இரண்டு தடிமாடும் மதியத்தில் இருந்து ஒரு வார்த்தை கூட பேசலையே என பல்லை கடித்துக் கொண்டு ஓட்டியவனுக்கு மதியம் வர்ஷன் பேசியது ஞாபகம் வந்தது.

மதியம் சாப்பிட்டு ஓய்வாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க வர்ஷனிடம் இருந்து கதிருக்கு கால் வர சொல்லு மாமா என்க கதிர் கொஞ்சம் வெளியில வாடா என்கவும் இதோ மாமா என்று சொல்லிக்கொண்டு போக வர்ஷனோ தனது புல்லட்டில் உட்கார்ந்து இருந்தான்.

பின்னர் அவனை ஏற்றிக் கொண்டு அவர்களது பார்ம்ஹவுஸிற்கு போனான். பார்வதி வீட்டில் நடந்ததை சொல்ல தொடங்கினான்

சிவராமன் சத்தம் போட சித்தப்பா கொஞ்சம் அமைதியா இரு.எதுக்கு இப்படி கத்துற அக்கம்பக்கெல்லாம் கேட்டா என்ன நினைப்பாங்க என்க...

அண்ணா எனக்கு தெரியாது...நான் அவரைதான் மனசார காதலிக்கிறேன். அவர் கூட தான் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் இல்லை என்றால் எனக்கு கல்யாணமே வேண்டாம் என்றாள்.

சொல்லுறதை கேளு பாரு கோவத்தை மூட்டாத...ஒழுங்கா வீட்ல பார்க்கிற மாப்பிள்ளை கல்யாணம் பண்ணிக்க..

முடியாதுணா..
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
579
காதலிக்கிறது என்ன குற்றமா என்று கேட்க காதலிக்கிறதை குற்றம் கிடையாது ஆனால் இந்த பையன் நமக்கு வேண்டாம் என்று சொல்லவும்..

அந்த பையன் கெட்டவனாக இருந்தால் நீங்கள் எல்லாம் பழக்கம் வச்சுக்க மாட்டீங்க அது எனக்கு நல்லா தெரியும் அண்ணா..நம்மள விட வசதி குறைவா இல்லை வேறு ஜாதியா என்று அவள் இஷ்டத்துக்கு பேச மகளின் பேச்ச கேக்க கேக்க சிவராமனுக்கு கொலைவெறி வந்தது...

இப்படி ஒரு பொண்ணே வேணாம் அடிச்சு கொல்லனும் போல இருக்குது சின்னவனே நீ விடு என மகளை அடிக்க போக...பார்வதி ரொம்ப என் பொறுமையை சோதிக்காதே..

நாங்க பாக்குற மாப்பிள்ளை கல்யாணம் பண்ணிட்டு நல்லபடியா குடும்பம் குட்டியா வாழுற வழியை பாரு என கொஞ்சம் கடுமையாகவே வர்ஷன் சொல்ல, முடியாதுணா.

நீங்களும் என்னை புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க நான் அவரை கல்யாணம் பண்றதுல என்ன கஷ்டம் என்கவும்... அறிவு கெட்ட முட்டாள்...

இன்னொரு பொண்ணோட புருசன் தான் வேண்டும் என்றால் உன்னை என்ன பண்ண என்று கத்தினான்.

அடிப்பாவி....

காதலிக்கிறதே தப்பு இதில் இன்னொரு பொண்ணோட புருசன் வேண்டும் என நிக்கிறியே நீ இருப்பதோடு செத்து தொலை சனியனே என்று மகளை அடித்தார்.

தந்தை அடித்த வலியை விட தன் காதலித்தவன் ஏற்கனவே கல்யாணமானவன் என்று தனது அண்ணன் சொல்லியதை கேட்டு தான் பார்வதிக்கு நெஞ்சை பிளப்பது போல இருந்தது..

அண்ணா நீங்கள் என்ன சொல்றீங்களென்று அவள் கண்ணீருடன் கேட்க உண்மையை சொல்லிக்கிட்டு இருக்கேன்...

இன்னும் கொஞ்ச நாள்ல அவனுக்கு குழந்தை பிறக்கப் போகுது மரியாதையா இந்த காதலை தூக்கி மூட்டை கட்டி வச்சிட்டு அந்த டாக்டர் பையன கல்யாணம் பண்ணிக்கிட்டு போற வழிய பாரு...

இல்லன்னா நானே வெட்டி பொதைச்சிடுவேன் என்று சொல்லிவிட்டு சித்தப்பா பாத்துக்க என்று சொல்லி அங்கிருந்து வந்துட்டேன் டா என்று நடந்ததை கதிரிடம் வர்ஷனும் சொல்லி முடித்தான்...

வர்ஷன் சொன்னது எல்லாம் கேட்டு அதிர்ந்து போனவன் என்ன மாமா இப்படி இருக்கு இந்த பொண்ணு?.

விடுடா...

ரொம்ப நல்ல பிள்ளை தான் இப்படி ஒரு எண்ணத்தோடு இருக்குன்னு தெரியாம போய்விட்டது. தாமரையோடு உனக்கு கல்யாணம் ஆகலைனா கண்டிப்பா பாருவை நானே உனக்கு கல்யாணம் பண்ணி வைத்திருப்பேன் என்று சொல்ல...ஐயோ மாமா இது மட்டும் உன் தங்கச்சி காதில் விழுந்துச்சு என்னை உயிரோட சமாதி கட்டிடுவா என்று சொல்ல அது என்னவோ வாஸ்தவம் தான் என்று சிரித்தான்.

எப்படியாவது இந்த பிள்ளையை சரிகட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழுற வழியை பார்க்க சொல்லுங்க மாமா என்க அதெல்லாம் பாத்துக்கலாம் என்றவன் இப்ப கூட அது நம்பவே இல்ல டா உனக்கு கல்யாணம் ஆன விஷயத்தை...

போன்ல உன் கல்யாண போட்டோ இருந்தது காமிச்சேன் நல்லாவேலை கேலரியில் இருந்துச்சி...காமிச்ச பிறகுதான் அமைதியாச்சுடா...

இது வேறயா என்று கதிர் சிரிக்க ஆமாடா என்றான்.

பின்னர் ஃபார்ம்ஹவுஸை சுற்றி பார்த்துவிட்டு இருவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.நடந்த நிகழ்வுகளில் மூழ்கிருந்தவன் எதிரே இருக்கும் போர்டை பார்க்க மதுரை மாநகராட்சி தங்களை வரவேற்கிறது என்று இருக்க மதுரைக்கு வந்துட்டோமா என்று மணியைப் பார்த்து அதிகாலை 3 என்று காட்டியது.

சரி டீ ஒன்று குடிக்கலாம் என்று டீக்கடையை பார்த்துக் கொண்டே போய் பிரேக் அடித்து நிறுத்த தூங்கிக் கொண்டிருந்த இருவரும் பதறியடித்து எழுந்து என்னடா ஆச்சு என்க...பள்ளத்தில் கார் இறங்கிட்டுடா...

அதை கேட்ட இருவரும் அய்யோ என அலறினார்கள் கதிரோ மௌனமாய் சிரித்துக்கொண்டு கதவை திறந்து வெளியேற பிறகுதான் அவர்கள் இருவருக்கும் நண்பன் பொய் சொல்லி இருக்கிறான் என்பது புரிந்தது.

பன்னாடைப்பயல் எதில் விளையாட்டு பாரேன் என திட்டிக்கொண்டு அவர்களும் காரில் இருந்து இறங்கியவர்கள் தண்ணீரை வாங்கி வாயை கொப்பளித்து முகத்தை கழுவிக்கொண்டு ஆளுக்கு ஒரு டீ குடித்தனர்.

காரை நான் ஓட்டுறேன் என்று ஜான் போய் டிரைவர் சீட்டில் உட்காரவும் இப்பொழுது கதிர் கொஞ்சம் சாய்ந்து படுத்தான்.

பனமரம் எந்த பன்னாட பயல் ரேடியோ செட்டை நம்ப காரில் இருந்து திருடிட்டு போனது என்று கேட்க... என்னடா உளறிட்டு இருக்க இங்க தான்டா இருக்கு என்றான்...

பின்ன சவுண்டு வச்சு தொலையேன்டா ..

கொஞ்சம் வால்யூமை அதிகமாக வைக்கவும் அதில் நான் தேடும் செவ்வந்திப் பூ என்று கூட பாட்டு ஓட வேலுவும் அந்த குரலோடு இணைந்து பாடவும் மனசுல பெரிய இளையராஜானு நெனப்பு என ஜான் சொல்லவும் இருவரும் ஆமாடா என்றான்.இருவம் கலாட்டா பண்ணி பேசிக் கொண்டே வந்தனர்.

கதிர் கண் மூடி படுத்திருந்தாலும் தூங்கவில்லை என்பது தெரிந்தது.
காலையில் 8:00 மணிக்கு எல்லாம் தேனூருக்கு வந்து சேர்ந்தனர்.

ஜானை அங்கு வீட்டில் விட உள்ளே வாங்கடா என கூப்பிட பரவால்ல இருக்கட்டும் போய் ஒரு குளியலை போட்டு ஒரு தூக்கத்தை போட வேண்டும் என்று சொல்ல...

அடப்பாவி நீ தான் நல்லா தூங்குனியா டா. அட நாயே எங்கடா தூங்கினேன்??சும்மா கொஞ்ச நேரம் கண்ணை மூடி தியானம் பண்ணுனேன் என்றான்.

வெளியே வந்த ஜூலியோ உள்ள வாங்கப்பா கொஞ்சம் டீ குடிச்சிட்டு போகலாம் என்று சொல்ல உன் கையால சுடுதண்ணி குடிக்கணும்னு இருக்கு கொண்டுட்டு வாத்தை என்று வேலு சொல்ல,மருமகனை பார்த்து செல்லமாக முறைத்துக் கொண்டு உள்ளே போனவர் ரெடியாக இருந்த காட்சிய பாலில் மூன்று கப் காஃபியை கலந்து எடுத்துட்டு வந்தார்.

இவனுங்களும் காரிலிருந்து இறங்கி உள்ளே போய் சோபாவில் உட்காரவும் ஆளுக்கு ஒன்று கொடுக்க அந்த நேரம் வாக்கிங் போக வந்த லாரன்ஸ் இவர்கள் மூவரையும் பார்த்துட்டு வாங்கப்பா எப்ப வந்தீங்க என்று கேட்க நாங்க வந்து எப்படியும் 31 வருஷம் இருக்கும் மாமா என வேலு சொல்ல அவரோ முறைத்துப் பார்த்தார்.

ஏன்டா நாயே இப்படி என்று ஜான் பல்லை கடிக்க மிலிட்டரி குசும்ப பாரேன் இப்பதானே வந்திருக்கோம்...
நாம அங்கிருந்து பாஞ்சியா வர முடியும் கேட்கிறார் பாரு கேள்வி என்று சொல்ல அங்கே என்னடா முணுமுணுப்பு என்று உட்கார்ந்து கொண்டே காலில் ஷூ போட்டார்.

ஏன் மாமா வாக்கிங் எல்லாம் எத்தனை மணிக்கு போகணும் என்று வேலு கேட்க அது என்ன ஒரு அஞ்சு மணிக்கு போகலாம் என்றார்.

இல்ல காலை 8 மணிக்கு போறீங்களே இதுதான் உங்க மிலிட்டரி பஞ்சுவாலிட்டி என்க,துப்பாக்கி எடுத்தேண்டா சுட்டு தள்ளிடுவேன் என்றார்.

ஒரு தோசை சுட துப்பு கிடையாது இவரு துப்பாக்கியால சுட போறாரா என்று ஜூலி செல்ல இவனுங்க மூவரும் சத்தமாக சிரித்து விட, லாரன்ஸோ மனைவியை முறைத்து பார்த்தார்.

அதில் மேலும் எண்ணெய் ஊற்றுவது போல் என்னத்தை சொல்ல வேலு...நேற்று சாப்பிட்டு இருக்கும் போது ஒரு தோசை ஒன்னு கொண்டுட்டு வாங்கன்னு சொன்னேன்.

உலக மேப்பில் இருக்கிற அத்தனை டிசைனையும் உன் மாமா ஊத்தி எடுத்துட்டு வந்தாரு. இங்க பாரு உங்க கிட்ட காட்டுறதுக்காகவே அத நான் போட்டோ எடுத்து வச்சிருக்கேன் என்க...

அடிப்பாவி என்று லாரன்ஸ் அதிர...

வேகமாக உள்ளே போய் தனது போனை எடுத்துட்டு வந்தவர் அதில் இருந்த போட்டோவை ஓபன் பண்ணி காட்ட ஏன் மாமா ஒரு தோசை கூட தெரியல நீங்க எல்லாம் மிலிட்டரி காரரா என்று கேட்டான்.

அடேய் நான் என்னடா மாஸ்டராடா தோசை சுட இட்லி ஊத்த பரோட்டா போட கத்துகிறதுக்கு.நான் மேஜர்டா என்று தனது மீசையை தடவ...ம்கும் யாருக்கு தெரியும் என்று சிரித்தான்.

மேலும் அவரை சிறிது நேரம் கிண்டல் பண்ணிக்கிட்டு கதிரும் வேலுவும் ஊரை நோக்கி சென்றனர்.

வழக்கம்போல் வீட்டில் அவரவர் வேலையை செய்து கொண்டிருக்க காரை நிறுத்திவிட்டு உள்ளே இறங்கி வந்த கதிரை பார்த்து வள்ளி அப்பாயி வா அப்பு என்க வந்துட்டனே என்று சொல்லிக் கொண்டே வந்தவன் அவர் பக்கத்தில் உட்கார்ந்தான்.

எல்லாரும் அங்க நல்லா இருக்காங்களா அப்பு? ம்ம் எல்லாரும் நல்லா இருக்காங்கன்னு பதில் சொல்லி கொண்டே மனைவியை தேடியவன் என்னம்மா இன்னும் உங்கள் மருமகள் வரலையா என்று கேட்க...

வரட்டுமே பொறுமையா அப்படி என்ன பொல்லாத வேலையா இந்த வீட்ல கிடக்கு என்று சீதா சொல்லிக் கொண்டிருக்கும் போது தாமரையும் குளித்து தயாராகி கீழே வந்தாள்.


தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top