• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
574
என் அண்ணனை ஏதும் சொல்லவில்லை என்றால் உங்களுக்கு தூக்கம் வராதே என்று பல்லை கடித்தாள்.

"ஆமாடி ஆமா "

எனக்கு வேண்டுதலை அதான் என்றவன் சரிடி செல்லம் உடம்ப பாத்துக்க சரியா சாப்பிடு உனக்கு தேவையான ஐட்டமெல்லாம் அங்க வாங்கி வச்சிருக்கேன் பாரு என்று அங்கிருந்த கபோர்டு காட்டி சொல்ல,சிரித்துக் கொண்டே செல்லமாக கணவனை பார்த்து முறைத்தாள்.

இல்லடி இது உனக்காக இல்லை நீ சொல்ற போல என் பிள்ளைக்கு பசி எடுக்கும்ல அதனால தான் என்றவன் வரட்டுமாடி என்று கேட்க சரி மாமா பார்த்து போயிட்டு வாங்க.போய் ரீச் ஆனதும் சொல்லுங்கள் என்க, எப்படியும் விடிய காலை தான் போய் சேருவோம்.முடிஞ்சா நாளைக்கு நைட்டு கிளம்பிடுவோம் இல்லனா மறுநாள் காலையில தான் வருவோம்.

ஒன்னும் அவசரம் இல்லை பகல்லையே வாங்க என்றாள்.சரிடி என்று மீண்டும் மனைவிக்கு பத்திரம் சொல்லிக்கொண்டு பேக்கோடு கீழே வந்தவன் வீட்டினரிடமும் சொல்லிக் கொண்டு வெளியே போய் காரில் ஏற இருவரும் அங்கிருந்து தேனுரை நோக்கி சென்றனர்.

தெருவைத்தாண்டி அந்த காட்டுப்பாதைக்குள் வர அப்பா அய்யனாரே எந்த காத்து கருப்பும் எங்க பின்னாடி வரக்கூடாது என்று சொல்லியபடியே தனது பையில் இருந்த அய்யனார் விபூதி பொட்டலத்தை எடுத்தவன் தனக்கும் பூசிக்கொண்டு வேலுக்கும் பூசினான்.

ஏண்டா மாப்ள நம்மளே பெரிய பேய் நமக்கு எந்த பேய் ஆட்டம் காட்டப் போகுது என்று வேலு சிரித்துக் கொண்டே சிறிது தூரம் செல்ல அங்கு தூரத்தில் எதுவோ நடந்து போவது போல் அவனுக்கு தோன்றியது.

கண்ணை சிமிட்டு விட்டு மீண்டும் பார்க்க மீண்டும் ஏதோ ஒரு உருவம் போவது போல் சில மீட்டர் தொலைவில் தெரிய மச்சான் என்று பதட்டமாய் கூப்பிட என்னடா என்றான்.

கொஞ்சம் முன்னாடி பாருடா என்று சொல்ல முன்னாடி என்னவாம் காட்டில் போய் என்னடா இருக்கும்?.அடேய் நல்லா பாருடா என்னமோ நடந்து போகுதுடா...

என்னடா சொல்ற என்று சொல்லுற?

கார கொஞ்சம் பொறுமையா ஓட்டுறேன் பாரு என்க கதிரும் அதேபோல் தூரத்தில் பார்க்க ஏதோ ஒரு உருவம் மட்டும் நடந்து போவது தெரிந்தது.

டேய் இன்னைக்கு அமாவாசை கூட இல்லையடா இதுங்க எதுக்குடா வந்திருக்கு?அறிவு கெட்ட நாயே அதான் அய்யனாரு விபூதி எடுத்து தடவி இருக்கோமே பிறகு என்ன பயம்..

ஏன்டா சொல்ல மாட்ட என்று முணவியவன்,காரை வேகமாக ஓட்ட முடிவெடுத்து அங்கே இங்கே பார்க்காமல் ஆக்ஸிலேட்டர் முழுவதுமாக ரைஸ் பண்ண புயல் போல அந்த இடத்தை தாண்டி வந்த பிறகுதான் அவர்களுக்கு இயல்பான மூச்சு வந்தது.

உண்மையிலேயே பேய் பிசாசு எல்லாம் இருக்க மாப்பு என்கும் வேலுவின் காது அருகில் பே என கத்த பதறிப்போய் காரை நிறுத்தியவன் பிசாசு பிசாசு அறிவு கெட்ட பயலே என்னடா விளையாட்டு என்று கேட்க ஹம் சும்மா டா...எல்லாம் நம்ம பிரம்மை தான் என்றான். அப்படியா அப்ப பேய் பிசாசு எல்லாம் ஒன்னும் கிடையாதா என்கவும் இப்ப எதுக்கு இந்த ஆராய்ச்சி நமக்கு?என்கின்ற போது ஜானிடம் இருந்து கதிருக்கு போன் வந்தது .

பங்காளியே போன் பண்ணிட்டான் அட்டென்ட் பண்ணியவன் இதோ வந்துட்டு இருக்கோம்டா.இன்னொரு கால் மணி நேரத்துல வந்துடுவோம் என்று சொல்ல வாங்கடா எவ்வளவு நேரம் தான் நின்னுட்டு இருக்குது?

மிலிட்ரி என்னடா பண்றாரு என்கும் வேலுவிற்கு சாப்பிட்டு படுத்துட்டார்டா என்றான்.சரிடா என்று போனை வைத்தவன்,வண்டி நிறுத்துடா நான் ஓட்டுறேன் என்று சொல்ல ஏண்டா இவ்வளவு தூரம் ஓட்டிட்டு வந்த எனக்கு அங்க போக தெரியாதா என்கவும் கதிர் சிரிக்க..

சிரிக்காதேடா முண்டம் பத்திகிட்டு வருது என்று காரில் பிளேயரை ஆன் பண்ணிவிட்டு பயணத்தை தொடர ஜான் வீட்டிற்கு முன்பு போய் நிறுத்தவும் அவனும் காரின் பின் சீட்டில் ஏறி உட்கார்ந்தவன் சாப்டீங்களாடா என்க..

இல்லடா நீ சாப்பாடு எடுத்துட்டு வருவனு ரெண்டு பேரும் பட்டினியாக வரோம் என்று வேலு சொல்ல ,அட பாவத்தே...இப்பதாண்டா நான் பிரியாணி பரோட்டாவும் சிக்கன் கடாய் தந்தூரி சாப்பிட்டேன் டா.

நாசமா போனவனே...வாயை மூடு. தின்னதை சொல்லி வெறுப்பேத்தனுமா என்று பல்லை கடித்தான். பின்னர் மூவரும் அரட்டை அடித்துக் கொண்டு அங்கிருந்து கனியூரை நோக்கி பயணமானார்கள்.

நள்ளிரவு இரண்டு மணிக்கு எல்லாம் மதுரைக்கு வந்து சேர்ந்தவர்கள் அங்கே மூவரும் ஆளுக்கு ஒரு டீ குடிக்க பக்கத்தில் சூடாக இட்லி சுடுவதை பார்த்தவன் மச்சி சாப்பிடலாமா என்று ஜான் கேட்க எனக்கு வேண்டாம் என்க, வாடா நம்ம சாப்பிடலாம் என்று இவனை விட்டுட்டு இருவரும் அங்கே போய் இட்லி சாம்பார் சாப்பிட்டார்கள்.

தடிமாட்டு பயலுங்க எந்த நேரத்தில என்ன சாப்பிடணும்னு அறிவே கிடையாது ரெண்டு பயலுக்கும் என்று கதிர் திட்டிக் கொண்டான்.

ஜான் காரை ஓட்ட டிரைவர் சீட்டில் உட்காரவும் மதுரையில் இருந்து கனியூருக்கு ஏழு மணி நேரம்.. மூவரும் இல்லாத கதைகளை பேசிக்கொண்டு காலை 6 மணிக்கு எல்லாம் கனியூருக்கு வந்து சேர்ந்தனர்.

கனியூர்:

நேராக மித்ரன் வீட்டிற்கு செல்ல அங்கு ரஞ்சித் வயலுக்கு செல்வதற்காக வந்தவர் கார் உள்ளே வருவதை பார்த்து வாங்கப்பானு மூவரிடமும் நலம் விசாரித்துக் கொண்டிருக்கும் போது மித்ரனும் வெளியே வர அண்ணா என்று போய் அவனை அணைத்துக் கொண்டார்கள்.

வாங்கடா எல்லாரும் எப்படி இருக்காங்க என்று அவனும் நலம் விசாரித்துக் கொண்டே மூவரையும் வீட்டிற்குள் அழைத்துப் போக அங்கே மித்ரனின் அம்மா காஞ்சனாவும் இவர்களை பார்த்து வாங்கப்பு ...

கதிரு மருமவ எப்படி இருக்காளென்க நல்லா இருக்காம்மா என்றவன் தாமரை கொடுத்து அனுப்பிய புடவையை தனது பையில் இருந்து எடுத்து இதோ உங்களுக்கு கொடுத்தாள் மா என்று சொன்னான்.

சரிய்யா...டீ எடுத்துட்டு வரேன் குடிச்சிட்டு போய் கொஞ்ச நேரம் மேல படுங்க என்று சொல்ல,முதல்ல படுக்குறோம் அத்தை பிறகு ஏதாவது இருந்தால் குடிக்கிறோம் என்று வேலு சொல்லவும் ஐயா காலைல வெறும் வயிற்றில் படுக்காதீங்க..

ஒரு வாய் குடிச்சிட்டு போங்க என்றவர் உள்ளே போய் மூவருக்கும் சூடாக காபியை கொண்டு வந்து கொடுக்க குடுத்துவிட்டு மித்ரனோடு மாடிக்கு சென்றவர்கள் அவர்களுக்காக ஒதுக்கி இருந்த ரூமில் போய் படுத்து விட்டனர்.

ஏய் பார்வதி நான் சொல்றதை கேளுடி ஏற்கனவே அந்த அண்ணன் திட்டி அனுப்பிட்டாங்க .திரும்பவும் எதுக்கு உனக்கு இந்த வேலை என்று சீதா கேட்க..தெரியலடி இரண்டு வருஷமா எனக்கு அவர் ஞாபகமா தான் இருக்கு என்றாள்.

இந்த ரெண்டு வருஷத்துல அந்த அண்ணனுக்கு கல்யாணம் ஆகி இருந்தாலும் இருக்கலாம் டி எதுக்கு தேவையில்லாத வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்கு என்று சீதா திட்ட அதெல்லாம் எனக்கு தெரியாதுடி...

அவங்களைத் தவிர வேறு யாரையும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதுடி இந்த ரெண்டு வருஷத்துக்கு பிறகு அவங்களை நான் பார்க்க போறேன் நீ எதுமே சொல்லாத என்று சொல்லிக்கொண்டு பார்வதியும் மித்ரனின் வீட்டை நோக்கி சென்றாள்.

தூங்கி எழுந்து மூவரும் குளித்துவிட்டு கீழே வர அங்க மீராவோ தனது மகன் மிதிலேசுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தவள் அவர்களைப் பார்த்து வாங்க அண்ணா என்று பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தாள்.

மூவரும் காலை டிபனை அங்கு சாப்பிட்டவர்கள் சரி நாங்க வர்ஷன் மாமா வீட்டுக்கு போய் வருகிறோம் என்று சொல்லிக்கொண்டனர்.

கதிரோ மாடிக்கு போய் தாமரை ரஞ்சிதத்திற்காக கொடுத்த புடவையை எடுத்துக் கொண்டு வர பின்னர் மூவரும் அங்கிருந்து பக்கத்து தெருவில் இருக்கும் வர்ஷன் வீட்டிற்கு சென்றனர்.

அங்கே ரத்தினமோ யாரோ இருவரோடு பேசிக் கொண்டிருப்பது தெரிந்து டேய் மீசாடா என்று வேலு சொல்ல சும்மா இருடா மாமா காதில் விழுந்திட போகுது என்று ஜான் சொல்ல, உன் மாமாக்கு பாம்பு காதுடா...

இப்போது பேசுனது நல்லா விழும் பாரு என்று சொல்லிக் கொண்டே அவர்களிடம் சென்றனர்.அவரும் கேட் திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி மூவரையும் பார்த்தவர் எலேய் வாங்கப்பு என்று தனது பெரிய மீசை தடவிக் கொண்டே சொன்னவர் ரஞ்சிதம் யார்னு வெளியே வந்து பாரு என மனைவிக்கு குரல் கொடுத்தார்...

பின்னர் மூவரிடமும் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருக்க வெளியே வந்த ரஞ்சிதமோ மூவரையும் முறைக்க.....ஹி ஹி ஹி என சிரித்தானுங்கள்.

அத்தை எப்படி இருக்கீங்க என்று கதிரும் ஜானும் விசாரிக்க எனக்கென்னப்பு நல்லா குத்துக்கல்லு போல தான் இருக்கேன் என்றார்.

அத பாத்தா நல்லாவே தெரியுதும்மா அப்பா உங்களை நல்லா காப்பாத்திட்டு வராரு என்று வேலு சொல்ல...வேலு என்று ரஞ்சிதம் பல்லை கடிக்க ரத்தினமோ ஹா ஹா ஹா என்று சத்தமாக சிரித்து விட்டார்.

அங்க என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு என்று கணவனை பார்த்து ரஞ்சிதம் முறைக்க ஒன்னும் இல்ல ஒன்னும் இல்லம்மா...கூப்பிட்டு உள்ள போ என்றவர் மற்றவர்களிடம் பேச ஆரம்பிக்க வாங்கப்பு என்று வீட்டுக்கு கூப்பிட்டு போனவர் 3 பேர் தலையிலும் மாறி மாறி கொட்டு வைக்க அய்யோ வலிக்குது வலிக்குது என்ற கத்தினானுங்கள்..

முதல்ல இவனை முடிச்சுட்டு வரேன் ஏன்டா நிச்சயதார்த்தம் பண்ணியே ஒரு அப்பா அம்மா இங்க கல்லு போல இருக்கிறோமே ஒரு வார்த்தை கூப்பிடனும்னு தோணுச்சா என்க...

அய்யா அம்மா திடீர்னு தான் முடிவு ஆயிடுச்சு அண்ணே கிட்ட சொன்னேன் மா என்கவும் ரிது சொன்னான் தான் கண்ணு என்றார்.

அப்புறம் கதிரு ...தாமரை எப்படி இருக்கு மாசாமாசம் ஒழுங்கா செக்கப்புக்கு போகுதா என்று கேட்க நல்லா இருக்காத்தை. இப்ப அஞ்சாவது மாசம் தானே நடக்குது எங்கவும் ஆமாங்கத்தை என்றான்.

ம்ம்....ஜானு அப்பாவுக்கு இப்ப உடம்பு எப்படிப்பா இருக்குன்னு விசாரிக்க நல்லா இருக்காங்க என்றான். பின்னர் அவனுங்களும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டிருக்கும் போது கோயிலுக்கு போயிருந்த வர்ஷன் அவன் மனைவி ஷாலினி இரட்டை குழந்தைகளான இஷான் இஷிதாவோடு உள்ளே வந்தனர்..

குழந்தைகளோ இவர்களை பார்த்துவிட்டு ஓடிவந்து அணைத்துக் கொண்டார்கள் பின்னர் அவர்களிடமும் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தனர்.

சரி அப்பு வாங்க காலை சாப்பாடு சாப்பிடலாம் என்க...இல்லைம்மா அங்கே அம்மா கொடுத்தாங்க சாப்பிட்டு தான் வந்தோம் என்றானுங்கள்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
574
எப்படா கிளம்புனீங்க எப்ப வந்து சேர்ந்தீங்கனு வர்ஷன் விசாரிக்க நைட் கிளம்பினோம் மாமா, ஏழு மணிக்கு வந்தோம் என்றான்.

பின்னர் அவர்கள் தொழிலை பற்றி பேச்சு திரும்பியதும் ரஞ்சிதமோ இவர்களுக்காக மதிய உணவு சமைக்க போக இவர்கள் சிறிது நேரம் பேசி இருந்து விட்டு வேண்டாம் என்று அங்கு பங்க்ஷன் நடக்கும் இடத்தில் உதவி செய்கிறோம் என்று சொல்லிவிட்டு சென்றார்கள்.

மித்ரன் வீட்டுக்கு வந்த பார்வதியோ தனது கண்களால் தன்னவனை அலசி தேட அவன் அங்கு இருப்பது போல் தெரியவில்லை...

வாடியம்மா அண்ணன் மகளே இன்னைக்கு தான் உனக்கு அத்தை வீடு கண்ணு தெரிந்ததா என்று காஞ்சனா கேட்க அத்த வீட்டுக்கு சும்மா சும்மா வர முடியுமா?.ஏதாச்சு காரியம் இருந்தா தான் வருவார்கள் என்று சொன்ன பார்வதி எங்கேயாவது தன்னவன் கண்ணில் படுகிறானா என்று தேட மறக்கவில்லை.நேரமும் கடந்து சென்றதே தவிர அவள் யாரை தேடி வந்தாலோ அவனோ இருப்பது போல் தெரியவில்லை.

பின்னர் சிறிது நேரம் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தவள் ஏமாற்றத்துடன் வெளியே செல்ல அப்பொழுதுதான் அவர்கள் மூவரும் உள்ளே வர ஏய் அண்ணா வறாங்கடி என்று பார்வதியின் தோழி சொல்லவும் இரண்டு வருடங்களுக்கு பிறகு தன்னவன் எதிரே வருகிறான் என்பதை கேட்டு நிமிர்ந்தவள் ஆசை தீர அவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டே வந்தாள்.

அவள் யாரை ரசித்துப் பார்க்கிறானோ அவனோ நண்பர்கள் இருவரிடம் பேசிக் கொண்டு அவளை கடந்து சென்றான்.

தன்னைத் தாண்டி போகுபவனையே ஆசை தீர பார்த்தவள் நம்ம வந்த காரியம் என்ன நம்ம பாட்டுக்கு போயிட்டு இருக்குமே என்று நினைத்து பின்னர் அப்படியே நின்றவள் எக்ஸ்க்யூஸ்மி என்று கூப்பிட பேசியபடி சென்று கொண்டிருந்த நண்பர்கள் மூவரும் யாரென்று திரும்பி பார்க்க, உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று அவள் யாரை இரண்டு ஆண்டுகளாக மானசீகமாக காதலிக்கிறாளோ அவனிடம் சொல்ல அவனும் தனது கூறிய பார்வையால் அவளை பொறுமையாக கேள்வி குறியோடு பார்த்தான்.

அவனின் பார்வையின் வீச்சு தங்க முடியாமல் பெண்ணவளோ கொஞ்சம் தடுமாறி தான் போனாள்.சொல்லுங்க என்கிட்ட பேசுறதுக்கு உங்களுக்கு என்ன என்று கேட்க கொஞ்சம் தனியா பேசணும் என்று சொல்லவும் யார்ரா இந்த பொண்ணு என்று மற்ற இருவரும் அவன் காதில் கேட்க தெரியலடா...

என்னன்னு பேசிட்டு வா நாங்க முன்னாடி போறோம் என்று வேலுவும் ஜானும் அங்கிருந்து செல்ல கதிரோ எதிரில் நிற்பவளை பார்த்தவன் சொல்லுமா யார் நீங்க என்ன வேண்டும் என்று கேட்டாள்.

என்னை உங்களுக்கு ஞாபகம் இல்லையா என்று கேட்க இல்லம்மா உங்களை யாருன்னு எனக்கு தெரியல என்கவும் காதல் கொண்ட பெண்ணவளோ கொஞ்சம் உடைந்து தான் போனாள்.

அதாவது இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இங்கு நீங்க வந்து இருந்தீங்களே அப்போ அந்த மாடுகிட்ட இருந்து என்னை காப்பாற்றினீங்களே ஞாபகம் இல்லையா ?

அப்பொழுதுதான் கதிரும் அவள் சொன்னதை யோசித்துப் பார்க்க இரண்டு வருடத்திற்கு முன்பு காய்கறி பணத்தை மொத்தமாக வாங்கிக் கொண்டு அப்படியே ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு வருமாறு வர்ஷனும் மித்ரனும் நண்பர்கள் மூவரையும் வரச் சொல்லி கூப்பிட்டிருந்தார்கள்..

இவர்களும் இங்கு வர திருவிழாவை என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கும்போது கதிருக்கு அசாமில் இருந்து அவனது பெரியத்தை போன் பண்ணும் பண்ண பேசிக்கொண்டே வந்தவன் அங்கு ஸ்பீக்கர் சத்தத்தில் ஏதும் கேட்காதால் சற்று தள்ளி நின்று பேசினான்...

அப்பொழுது இரண்டு பெண்கள் சற்று தள்ளி இருந்த வயலில் ஓடி வர அவர்களை ஒரு மாடும் துரத்தி வருவதை பார்த்தவன் ஃபோனை கட் பண்ணி விட்டு வேகமாக ஓடியவன் அந்த மாட்டின் கொம்பை பிடித்து நிறுத்தி அந்த பெண்களை காப்பாற்றினான்.

ஆனால் அந்தப் பெண்களை பெரிதாக கண்டுகொள்ளாமல் பார்த்து போங்கமா என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வந்து விட்டான்.

ஆமா ரெண்டு பொண்ணு இல்லையா...அதில் நீங்க ஒரு ஆளாமா என்க ஆமாம் என்று பார்வதி தலையாட்ட சொல்லுங்கம்மா நல்லா இருக்கீங்களா?

இப்ப என்ன பண்றீங்களென அவன் சாதாரணமாக விசாரிக்க பார்வதிக்கோ ரெக்கை இல்லாமல் வானத்தில் பறப்பது போல் இருந்தது.

இங்கே உள்ள ஸ்கூல்ல தான் டீச்சர் வேலை பார்க்கிறேன் என்றாள்.நல்லதுமா வீட்ல அப்பா அம்மா நல்லா இருக்காங்களா என்று பொதுவாக அவன் விசாரிப்பது போல் அவளிடம் விசாரிக்க அவளோ பட்டென்று இரண்டு வருஷமா உங்களை தான் நினைச்சுட்டு இருக்கேன.

நீங்கள் இல்லாத வாழ்க்கை எனக்கில்லை ஐ லவ் யூ என்றாள்...

நீலகிரி:

சனி ஞாயிறு ஸ்கூல் விடுமுறை என்பதால் தாமதமாகவே தூங்கி எழுந்த பவி பிரஷ் ஆகிவிட்டு வெளியே வர அங்கே அவளது மாமியாரும் மாமனார் டைனிங் டேபிள் உக்காந்து பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

பின்னர் கிச்சன் உள்ளே போனவள் அங்கிருந்த வேலையாரிடம் டிபன் காபி கேட்க அவரும் ரெடியா தான் இருக்குங்க அம்மா என்று சொல்லவும் என்னுடைய ரூமிற்கு அனுப்புங்க என்றவள் பெரியவர்களிடம் வந்து இரண்டு பேரும் சாப்டீங்களா என்று கேட்க நாங்க சாப்பிட்டோமா.

முரளி தான் சாப்பிடாமல் காலையில் எஸ்டேட் போய்ட்டான் என்க அப்படியா என்றவள் பின்னர் கிச்சனிற்குள் சென்று எனக்கும் அவருக்கும் டிஃபனை கட்டுங்க எடுத்துட்டு போகிறேன் என்று சொல்ல அவருக்கு இது ஆச்சரியமாக இருந்தது.

அதேபோல் சிறிது நிமிடத்தில் டிபனையும் பாக்சில் கட்டி பையைக் கொண்டு வந்து கொடுக்க குழந்தையை மாமனார் மாமியாரிடம் விட்டுவிட்டு சாப்பிடு கொண்டு போவதை பார்த்து அவர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

மருமகளாக அவள் பெரிதாக இதுவரை அந்த வீட்டில் எந்த வேலையும் செய்ததில்லை இன்று கணவனுக்காக சாப்பாடு எடுத்துட்டு போவது நினைக்க எப்படியோ மாற்றம் வந்தால் நல்லது தான் என்று நினைத்துக் கொண்டனர்.

வீட்டிலிருந்து பத்து நிமிடம் தொலைவு தான் அவர்கள் எஸ்டேட் என்பதால் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது இரண்டு பெண்கள் பேசுவது அவள் காதில் நன்கு விழுந்தது.

நல்ல மனுஷனுக்கு இப்படி ஒரு பொண்டாட்டி கிடைக்கக்கூடாது நமக்கு கிடைச்சிருக்க வேண்டிய வாழ்க்கை இவ நடுவுல வந்து தட்டி பறித்து விட்டாள் என்று ஒருத்தி சொல்லு இப்பயும் ஒன்னு கெட்டு போகலைடி..

எறும்பு ஒரு ஊரு கல்லு தேயாமையா போய்விடும் இரண்டாவதாக கட்டி அந்த எஸ்டேட்டுக்கு மருமகள் ஆகி காட்டுறேன் என்று சொல்ல அங்கே நிறைய பெண்கள் இருந்ததால் யார் பேசிக் கொள்கிறார்கள் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

முரளியை பற்றி தான் பேசுகிறார்கள் என்பது மட்டும் பவிக்கு புரிய என் புருஷனை பங்கு போட வந்துட்டீங்களா டி என்று பல்லை கடித்து கொண்டு யாரை திட்டுவது என்று தெரியாமல் நேராக அங்கிருந்து ஆபீஸ்க்குள் செல்ல அங்கே முரளியும் சிஸ்டமில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க பவி சாப்பாடு எடுத்துட்டு வந்து இருக்க வாவ் வாட் எ சப்ரைஸ் செல்லம் என்க...நீங்க சாப்பிடாம வந்துட்டீங்கன்னு கிச்சன்ல சொன்னாங்க.

அதனாலதான் உங்களுக்கும் எடுத்துட்டு வந்தேன் என்றாள். பரவாயில்லையே புருஷன் மேல உனக்கு இந்த அளவுக்கு அக்கறை இருக்கு என்று கேட்க தாம் கணவனை இப்படி கண்டுகொள்ளாமல் இருப்பதால் தானே கண்டவள் எல்லாம் தனது வாழ்க்கையை பங்கு போட நினைக்கிறார்கள் என்பது செருப்பால் அடித்தது போல் பவிக்கு புரிந்தது...

இனி புருஷனுக்காக நேரத்தை தான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தவள் இனி சனி ஞாயிறு நானும் உங்க கூட ஸ்டேட்டஸ் வரேன்ங்க என்னும் மனைவியின் அருகில் வந்து அவள் கன்னத்தை தொட்டு உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?

உடம்புக்கிடம்பு ஏதாவது சரியில்லையே செல்லமென்க இப்பொழுது பவியோ கணவனை முறைத்து பார்த்தவள்
என்ன கிண்டலா என்க...இல்லடி நானே எஸ்டேட்டுக்கு வா என கூப்பிட்டாலும் நீ வர மாட்டியே...

அதிசயமா இருக்கு என்கவும் இனி எல்லாம் நடக்கும் அதை தாங்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று பவியும் சிரித்துக் கொண்டே சொல்ல இருவருக்கும் அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்த அந்த நினைவுகள் வந்து சென்றது...

நாளைக்கு என்ன நாள் ஞாபகம் இருக்கா என்று பவி கேட்க நாளைக்கு என்ன டி வெள்ளிக்கிழமை என்கவும் நாளைக்கு பிப்ரவரி 14 என்றாள்.

ஓ அப்படியா என்றவன் மனுஷனுக்கு எங்கடி அதெல்லாம் ஞாபகம் இருக்கும்போது 1008 பிரச்சனை தலைக்கு மேலே இருக்கு என்று சொல்லிக்கொண்டு மனைவியிடம் இருந்து விலகிப் போனவன் அங்கிருந்து ட்ராவை திறந்து ஒரு சிறு கிப்ட் எடுத்துட்டு வந்து அவளின் முன்பு நீட்டி அட்வான்ஸ் வேலண்டைன்ஸ் டே விஷஸ் மை டியர் செல்ல பொண்டாட்டி என்று சொல்ல பவியோ முரளியின் செயல்களில் விழி விரித்து நின்றாள்.

தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top