• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
574
சீமக்கரை:

அண்ணா என்றவாறு கூப்பிட்டுக்கொண்டே பெருமாளின் பங்காளி உறவினரான கணேசன் வீட்டிற்குள் வர அவரை பார்த்து வள்ளி அப்பாயி வாயா கணேசா என்றார்..

சித்தி இதுல சீம்பாலு திரட்டல் இருக்கு. நம்ப மாடு கன்னு போட்டுருக்கு.மருமக மாசமா இருக்குன்னு ரேவதி கொடுத்தாள் என்று தூக்குவாளியை வள்ளி அப்பாயிடம் நீட்ட உன் தம்பி பொண்டாட்டிங்க இங்க தான் இருக்கிறார்களே கூப்பிட்டு குடுயா என்றார்..

சீதா என்று கணேசன் கூப்பிட இதோ வரேன் என்று ரூமியிலிருந்து வந்தவர் வாங்க மாமா அக்கா நல்லா இருக்கா கல்யாணத்துக்கு வேலை எப்படி போகுதென்றார்.

பொண்ணு படிப்பு ஏப்ரலில் முடியுதாமா.மே ல கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்றாங்க.அறிவும் ஏப்ரல் கடைசில டிக்கெட் போட்டு வரேன்னு சொல்லி இருக்கிறேன்..

ரெண்டு பேர் கல்யாணத்தை முடிக்கணும்னு நினைக்கிறேன் ஆனா எனக்கு தான் ஒரே வீட்டில் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்க மனசு வரலை மா. சொன்னாலும் உங்கக்கா கேட்க மாட்டேங்கிற என்று கணேசன் சொல்ல, அக்கா என்ன நினைக்கிறதுனா பின்னாடி ஒன்னுக்கொன்னு துணையாக இருக்கணும்னு நினைக்கிறாங்க போல மாமா என்கவாம்...

அது வாஸ்தவம் தான் மா. எல்லாரும் ஒரே போல இருப்பாங்க சொல்ல முடியாது வெவ்வேறு வீட்டில் இருந்தாலும் புதுசா நமக்கு ஒரு உறவு கிடைக்கும் அதை யோசிக்கணும்.
நாளைக்கு ஒன்னு ஒன்னு மன கஷ்டம் வந்தா நல்லா இருக்குமா? அதான் நான் யோசிக்கிறேன் என்றவருக்கு,அதுலாம் இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் புரிந்து நடத்துகிறாங்கதான்.

ஒன்னுக்கு பத்து வாட்டி எல்லாரும் போய் விசாரிச்சு தானே முடிவு பண்ணி இருக்கு அதெல்லாம் வருத்தப்படாதேய்யா.நம்ப அய்யனாரு துணை இருக்கும் போது எல்லாம் நல்லபடியாக நடக்கணுமென்று வள்ளி அப்பாயி சொல்லும் போது கோயிலுக்கு போயிருந்த ராதா, செல்வி தாமரை மூவரும் வீட்டிற்குள் வந்தவர்கள் அவரை பார்த்து வாங்க மாமா என்றனர்.

என்னப்பா வாலி என்று செல்வி அவரிடம் வர உம் பெரியா சீம்பால் பண்ணுனா கண்ணு அதான் டா என்று மகளிடம் கொடுக்க ஐஐஐ என்று வாங்கியவள் வாலியை திறந்து வாசம் பிடித்தாள்.

எம்மா தாமரை இது நம்ப ஊட்ல நடக்க போரிய பெரிய காரியம்.உன் கிட்ட ஒரு விசயத்தௌ சொல்லிட்டு போகலாம்னு வந்தேன் என்கவும்,சொல்லுங்க மாமா என்றாள்.

ஏதோ புடவையில பொண்ணு மாப்பிள்ளை படத்தை நெய்யுறாங்களாமே அதை போல உன் கொழுந்தன் பொண்டாட்டிக்கு வேண்டுமாம்.நான் சொன்னேன் எங்க குடும்பத்து மூத்த மருமகளுக்கு எல்லாம் தெரியும் எப்படி வேண்டும் சொல்லுங்கனு...

நான் போன்ல பேசணும் மாமானு அந்த என்று சொல்லிச்சு உன் நம்பர கொடுத்துட்டு வந்து இருக்கிறேன் சுதா எப்படியும் இன்னைக்கோ நாளைக்கே உனக்கு போன் பண்ணும் அது கிட்ட என்னன்னு கேட்டு தெரிஞ்சுக்க...

அப்படிங்களா மாமா செய்துட்டா போகுநு.முதல் முதல்ல நம்ம குடும்பத்து நல்ல காரியத்துக்கு பண்றேன் நல்லபடியா செஞ்சி தரேன் மாமா என்றவளை பார்த்தவர் கதிர் பொண்டாட்டி என்பதை விட அன்பழகன் மவள் கொக்கா என்று சிரித்தார்.இந்தாத்தா என்ன செலவானாலும் பரவாயில்லை என்று பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து நீட்ட ஏய்யா கணேசா என்னய்யா இதுலாமென்று பாட்டி கேட்க
.

மாமா அதுலாம் வேண்டாம் என்றே தாமரை சொல்ல,சொந்தம் வேற தொழில் வேறு.அதை கடைபுடிச்சதால் தான் நம்மால் இந்த ஊர்ல மரியாதையா வாழ முடியுது.எவனுக்கோ குடுக்க வேண்டியதை என் மருமவளுக்கு குடுத்துட்டு போறேன் என்றவர் சித்தி நீ வாங்கு உன் கைராசி உன் பேரன் பொண்டாட்டியால் நம்ப குடும்பம் தழைக்கணும்னு வேண்டி வாங்கென்று அவரிடம் நீட்ட அய்யனாரப்பன் தயவுல எல்லாம் நல்லதா நடக்கும்யா என்றார்.மேலும் சிறிது நேரம் பேசி இருந்து விட்டு அங்கிருந்து சென்றார்

ஏம்மா தாமரை மாமா சொல்லிட்டு போன போல நம்ப போட்டோவும் வச்சு புடவை தயாரிக்கலாமா என்று ராதாவும் சீதாவும் ஆச்சரியமாக கேட்க ஆமாங்க அத்தை முடியும்.

இப்ப அதுதான் ட்ரெண்ட்டு என்று சொல்ல அப்போ எங்களுக்கு உங்க மாமாவும் நாங்களும் இருக்கறது போல படம் வரைந்து புடவை செய்து தரியா முதல் முறையாக இருவரும் கேட்க இவ்வளவு தானே என்றவள் படியில் ஏறி மேலே சென்றவள் 3 பாக்ஸ் எடுத்துட்டு வந்து அப்பாயிக்கு ஒனும் இரண்டு அத்தைகளுக்கும் ஆளுக்கு ஒன்றை கொடுத்தவள் திறந்து பாருங்கள் என்றாள்.

என்னத்தா இது என்று ஆர்வத்தோடு முதலில் வள்ளி அப்பாயி புடவை திறந்து பார்க்க அவர் வயதுக்கு கட்டுவது போல் இருந்த புடவையின் முந்தாணையில் அப்பாயியும் பிரகாசம் தாத்தாவும் இருப்பது போல இருந்தது...

எப்பத்தா இது செஞ்ச என்க..இப்பொழுது சீதாவும் ராதாவும் அவர்கள் புடவையை ஆர்வமாக பிரித்துப் பார்க்க அவர் அவரை கணவர்களோடு இருப்பது போல முந்தானையில் செய்திருந்தாள்.

அவர்களும் அந்த முந்தானை மேல் தடவி பார்த்து கண்கலங்கி போனார்கள் சந்தோஷத்தில். ..

ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லவில்லையே என்று ஆச்சரியமாக கேட்க இதை நெய்து மூணு நாள் ஆகுதுங்கத்தை. சரி தமிழ் புத்தாண்டு வருது அன்னைக்கு சர்ப்ரைஸா உங்க மூணு பேருக்கு கொடுக்கலாம் என்று நினைத்தேன் அதுக்குள்ள நீங்களே கேட்டுட்டீங்களே என்று சிரித்தாளா.

வார்த்தையே இல்லை..இவ்வளவு திறமையான புள்ளைய வீட்டிலேயே வைத்திருக்கிறோமே என்று கஷ்டமா தான் இருக்கு என்று சொல்ல..அதுதான் மாமா எனக்காக தறி ரெடி பண்ணி கொடுத்து இருக்காங்களேத்தை.

சத்தியமா நான் எதிர்பார்க்கவே இல்ல மாமா இது செய்து தருவார்கள் என்கவும் நீ வேற தாமரை எனக்கே என் மவனானு இன்னும் புரியவில்லை என்று வள்ளி அப்பாயி சொல்லவும் நல்லா கேட்டுக்கோ தாமரை...

பெத்த அம்மாவுக்கே மகனோட குணம் புரியல எங்களுக்கு எங்க இருந்து புரியுமென்று சீதா சொல்ல இதுதான் சாக்கு என்று அக்கா தங்கச்சி இருவரும் வேல் கம்பு தூக்கிட்டு வந்துருங்க ...

ஏன் தாமரை உம்மாளுங்களுக்கும் இதை போல என்று புடவை காட்ட, எல்லாருக்கும் தான் ரெடி பண்ணிருக்கேன் அப்பாயி என்று சிரித்தாள்..


அவன் அவன் ஒரே நேரத்துல நாலு பேருக்கு ரூட்டு விடுறான் அவனெல்லாம் நிம்மதியா இருக்கிறான் ஒருத்திய வெச்சுகிட்டு நான் படுற பாடு இருக்கே என்று புலம்பிக் கொண்டே நின்றிருந்த ஜான் என்னதான் பண்றாள்?

எப்போ இவளை கிளம்பி வர சொன்னேன் இன்னும் வராமல் இருக்கிறாளே என்று திட்டிக் கொண்டிருக்கும் போது தூரத்தில் அல்லி வருவது தெரிந்தது.

எப்பா ஒரு வழியா வந்தாளே என்று காரை ஸ்டார்ட் பண்ணி பண்ண வேகமாக வந்த அல்லி காரின் கதவை திறந்து உட்கார்ந்தவள் ஏங்க என்னை இப்படி இம்சை படுத்துறீங்க???

ஸ்கூலும் முடிஞ்சிடுச்சு இப்ப வந்தா யாராச்சும் எதுவும் கேட்க மாட்டாங்களா என்கவும் ஏண்டி கட்டிக்க போற என் கூட வெளியில் ஒரு நாளைக்கு வருது உனக்கு என்ன அவ்ளோ அக்கப்போரா இருக்ககு...

24 மணி நேரம் வீட்டில் தின்னுகிட்டு வயலில் தாண்டி சுத்திட்டு கிடக்குற என்க,அல்லியோ தன்னவனை முறைத்து பார்த்தாள்.

கோபப்படாத செல்லம் என்றவன் ஏதாவது சாப்டியா என்று கேட்க ம்ம் என்று சொன்னாள். என்ன சாப்ட என்கவும் இட்லி சாம்பார்...ஆமாம் நீங்க சாப்பிட்டீங்களா என்று அல்லிக் கேட்க பரவால்ல இப்பயாவது கேட்க மனசு வந்துச்சு நல்ல விஷயம் தான் என்றவன் காரை அங்கிருந்து மதுரை நோக்கி ஓட்டி சென்றான்.

வீட்ல என்னடி சொல்லிட்டு வந்தயென்று கேட்க நல்லவேளை இன்னைக்கு அந்த டான்ஸ் டீச்சர் வர சொல்லி இருந்தாங்களா அது தான் சொன்னேன். எனக்கு கொஞ்சம் பயமிவே இருக்கு இப்படி பொய் சொல்லிட்டு வரோமேயென அல்லி வருத்தமாக சொல்ல...

லவ் பண்ணாக்க இப்படியெல்லாம் புதுசு புதுசா பொய் எல்லாம் கண்டுபிடிக்கணும் டி என்று தன்னவளின் கன்னத்தை கிள்ளி சொல்ல முதல்ல ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுங்க என்று அவன் கையை தட்டி விட்டாள்.

தாமரை என்று கதிர் கூப்பிட இங்க தான் இருக்கேன் என்று சொன்னாள்.ம்ம் என்றவன் பால்கனிக்கு வர தாமரையோ தலை குளித்துவிட்டு முடியை வெயிலில் உலர்த்தி காய வைப்பது தெரிந்து.

என்னடி அதுக்குள்ள குளிச்சிட்டியா என்று கேட்கவும் ஏன் நேரம் காலம் பார்த்துதான் குளிக்கணும்னு ஏதாவது சட்டம் இருக்கா என்க..இல்லடி தனியாக கஷ்டப்படுவியே உனக்கு நான் ஹெல்ப் பண்ணலாம்னு ஒரு நல்ல எண்ணத்தில் மாமா கேட்டேன். அது பொறுக்கலையா நல்லதுக்கு இந்த உலகத்தில் காலமில்லை என்று சொல்லும் கணவனை முறைத்து பார்த்தவள்,நீங்க என்ன குளிக்க வைப்பீங்க அப்படித்தானே எங்கவும். ஆமாண்டி இதுல என்ன சந்தேகம் மாமா உன்னை எத்தனை வாட்டி குளிக்க வைச்சிருக்கேன் என்று சொல்லு வாயை மூடுங்க என்று சிரித்தாள்.

ஏண்டி இப்படி...நான் என்ன தப்பா சொல்லிட்டேன் இப்படி என்னை அமைதியாக சொல்கிறாயே..
எத்தனை முறை உனக்கு சோப்பு என்று சொல்ல வர ஐயோ சாமி நீங்க கிளாஸ் எனக்கு எடுக்க வேணாம் இப்ப எதுக்கு என்னை தேடிட்டு வந்தீங்க அதை மட்டும் சொல்லுங்க என்றாள்.

நாளைக்கு மித்ரன் அண்ணன் பையனுக்கு பேர் வைக்கிறாங்க இல்லையா என்கவும் ஏற்கனவே அவர்களைப் பற்றி தாமரையிடம் சொல்லி இருந்ததால் அப்படியா எனபவளுக்கு ம்ம், உன் நொண்ணன்,ஜான், நான் மூணு பேரு தான் போறோம் என்றான்...

காத்திருந்தேன்...காரில் போய்க் கொண்டிருக்கும் போது ஜானின் போனிற்கு கால் வர ப்ளூடூத்தை ஆன் பண்ணியவன் சொல்லுடா என்க...எங்கடா போயிட்டு இருக்க என்று கதிர் கேட்க விண்வெளிக்கு போயிட்டு இருக்கேன் என்றான்.

சரி எங்க வேணாலும் போய் தொலை. நைட் நம்ப கனியூருக்கு கிளம்பனும் ஞாபகம் இல்லையா என்கவும் அதெல்லாம் நல்லா ஞாபகம் இருக்குடா.

விசா ரெனிவல் பண்ணனும் அதுக்காக மதுரை வரைக்கும் போயிட்டு இருக்கேன் என்றான்.

நீ பாஸ்போர்ட் ரெனிவல் பண்ண போற சரி,கூட உன் பொண்டாட்டி எதுக்கு வராள் என்கவும் அதிர்ந்து போய் காரை நிறுத்தினான்.

அவ எங்கடா இங்கே என்க,ரீல் அந்து போயிடுச்சுடா நாயே என்று சொல்லவும் அவளுக்கும் பாஸ்போர்ட் அப்ளை பண்ணா தான்டா போறேன.

அதுதான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னேனே என்கவும் ஆமாம் பங்காளி.அதை மறந்துட்டேன் சரி சரி சீக்கிரம் வந்து சேருங்கள் என்று சொல்லி கதிர் போனை வைத்தான்.

இப்பொழுது தாமரையோ தனது கணவனை முறைத்து பார்த்தவள் அல்லி ஜான் மாமா கூட போயிருக்கிறாளா என்க,பாஸ்போர்ட் விஷயமா நான் தாண்டி கூப்பிட்டு போக சொன்னேன்.

இப்போ உங்க வீட்ல சொன்னா உடனே அனுப்பிடுவீங்களா என்கவும் அதுவும் சரிதான் என்றாள்.

அப்புறம் டி பொண்டாட்டி வேற என்ன விசேஷம் என்க...துரை இப்பதான் பாரினிலிருந்து வந்திருக்கிறார் நலம் விசாரிக்கிறார்.

ஏண்டி வீட்ல இருந்தா விசாரிக்க கூடாதுன்னு சட்டமா இருக்கா?என் பொண்டாட்டியை தான் விசாரிக்கணும் பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டியவா நான் கேட்கிறேன்???

ஓஓஓஓ அய்யாவுக்கு இந்த எண்ணம் வேற இருக்கா என்றவளை பார்த்தவன் ஒருத்தியை கரெக்ட் பண்றதுக்கு எனக்கு தொண்டை தண்ணி வத்தி போச்சு. இதுல இன்னொருத்தன் பொண்டாட்டியை நான் எங்க இருந்து பார்க்கிறது போடி ....

மாமா இருக்கும் போது நீ ஏன் கஷ்டப்படுற என்றபடி அவள் கையில் இருந்த துண்டை வாங்கி மனைவியின் நீல கூந்தலை துவட்டி விட்டவன் வாசனை கும்முனு இருக்குடி...

ஏண்டி அந்த ஷாம்பு எல்லாம் போட்டு குளிக்க மாட்டியா என்று கேட்கவும் இல்லை என்றாள். இயற்கையாகவே பெண்களின் கூந்தலுக்கு மணம் இருக்கு என்பது உன்னுடைய முடி வாசனை வச்சு தான் நானும் உண்மையிலேயே தெரிந்துகொண்டு என்கவும் என்ன சார் ஒரே லவ் மூடுல இருக்காரு போல...

கண்டிப்பாக அதில் என்ன சந்தோஷம் என்று மனைவியை கையில் ஏந்த ஐயோ மாமா காலைல என்ன விளையாட்டு இது???
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
574
இதுக்கெல்லாம் எதுக்கு டி கால நேரம் என்று சொல்லிக் கொண்டு உள்ளே தூக்கிட்டு போனவன் ட்ரெஸ்ஸிங் டேபிள் அருகில் போய் பொறுமையாக இறக்கிவிட்டு பேனை ஆன் பண்ணி முடி காய வைக்க உதவி பண்ணினான்.

கணவனின் செயல்களை பார்த்தவள் லவ் யூ மாமா என்க ஏதாச்சும் செஞ்சா மட்டும்தான் லவ் யூ சொல்லணும்னு சட்டம் இருக்கா டி என்ற முறைத்தபடியே கதிர் கேட்க,நானாவது அப்பப்போ சொல்றேன்.அது கூட உங்களால சொல்ல முடியல என்கவும் இத நான் சொல்லியா தெரியணும் என்றான் .

இந்த ஈன வெங்காயத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல போயா என்றவள் இரண்டு பக்கமும் முடியை கிளிப் போட்டு நுனி முடியை முடித்து போட்டவள் சரி நான் கீழே போறேன் நீங்க வாங்கள் என்று சொல்லிவிட்டு பொறுமையாக படியிறங்கி கீழே வந்தாள்.

வழக்கமான வேலைகள் வீட்டில் நடந்து கொண்டிருக்க நேரமும் கடந்து சென்றது. மதுரைக்கு போன ஜானோ அவனுக்கும் ரினிவல் பண்ணி கொண்டு அல்லிக்கும் பாஸ்போர்ட் அப்ளை பண்ணிவிட்டு மாலை வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.அல்லியோ பய்ந்து கொண்டே விட்டிற்குள் வர அவள் பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை.

ரூமில் தயாரானவன் அங்கே தன்னையே முறைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் மனைவியை பார்த்து கண்ணடித்துவிட்டு என்னடி இப்படி குறுகுறுன்னு பார்க்கிறது என்று கேட்டான்.

உங்கள பார்த்தா பங்ஷனுக்கு ரெடியாகுற போல தெரியலையே ஏதோ பொண்ணு பார்க்க தயாராகிற புது மாப்பிள்ளை போல இருக்கு என்று தாமரை சொல்ல,எனக்கு எங்க அதுக்குலாம் கொடுத்து வச்சிருக்கு சொல்லு???

என் கிரகம் நீ வந்து என் வாழ்க்கையை புடிச்சிட்ட.அவன் அவன் நாலஞ்சு ஃபிகரை உஷார் பண்ணி ஜாலியா என்ஜாய் பண்றான் எனக்கு எங்கடி நேரம் இருக்கென்று சொல்ல பக்கத்தில் இருந்த தலகாணியை தூக்கி கணவன் மேல் எறிந்தாள்.

ஹா ஹா என்று சிரித்தவன் அங்கே பெட்டின்ன் மேல் உட்கார்ந்து இருக்கும் மனைவியிடம் வந்து இரண்டு கைப்பிடியிலும் கையை வைத்து குனிந்தவன்,உலக அழகியே வந்தாலும் என் கண் உன்னை தவிர வேற யாரையும் ரசிக்காதடி.

இந்த மனசுலையும் நினைப்பிலும் இடம் பிடித்த ஒரே பிடாரி நீதான் என்க, எதேஏஏ பிடாரியா என்று அவனின் மீசையை பிடித்து இழுக்க ஆஆஆஆ ராட்சசி வலிக்குதுடி விடுடி என்று கத்தினான்.

போனா போகட்டும்னு விடுறேன். ராட்சசி இப்படி எல்லாம் பண்ணுவான்னு தெரியாதா என்கவும் ராட்சசி இன்னும் நிறைய பண்ணலாமே என்று மனைவியின் உதட்டை பிடித்து திருகிக் கொண்டு சொல்ல,இப்பொழுது தாமரை கத்த அவள் முகம் சுணுங்குவது கூட பொறுக்க முடியாமல் மனைவியின் உதட்டை விட்டு அவள் கண்ணத்தை பிடித்த ஆட்டினான்.

ஏன் மாமா எப்ப பார்த்தாலும் இந்த கன்னத்தை பிடித்து இப்படி ஆட்டிட்டு இருக்க...பாரு தினமும் உன்னால பன்னு போல வீங்கி போய் இருக்கு என்கவும், நல்ல கொழு கொழுன்னு இருக்குடி .

இத பாக்கவே நம்ப நாயர் கடையில் ஊறவைத்திருக்கிற பணியாரம் போல இருக்கு என்கவும் தின்னி முண்டமே கம்பேரிசனை பாரு என்று பல்லை கடித்தாள்.

அடிப்பாவி திருட்டுத்தனமா நைட்ல வாங்கிட்டு வந்து கொடுக்கிறேன் நீ நல்லா முக்கு முக்குனு முக்கிட்டு இப்ப என்ன தின்னி மாடுன்னு சொல்றியா டி என்று முறைத்துக் கொண்டு கேட்க ...

நான் என்ன எனக்காகவா சாப்பிடறேன் வயித்துல இருக்க உங்க பிள்ளைக்காக தானே சாப்பிடுறேன்.இனிமே எனக்கு எதுவுமே வேண்டாம் .வாங்கிட்டு வராதீங்க பட்டினி கிடந்தா கிடைக்கட்டும் உங்க புள்ள...

வீட்ல இருக்கறதை நான் சாப்பிடுறேன் என்று சொல்ல இந்த டயலாக்கை சொல்லி நம்பல மடக்குறாளே என்று முனுமுனுத்தவன் ஓகேடி...

மாமா ரெடி ஆகட்டுமா என்று மனைவியின் கையைப் பிடித்து எழுப்பி நிற்க வைத்து அவளை அணைத்தவன் எண்ணற்ற முத்தங்களை பரிசாக கொடுக்கும்போது வேலுவோ கீழே இருந்த காரில் இருந்து ஹாரன் அடித்தான்.

அதானே உன் கரடி பய அண்ணனுக்கு நான் சந்தோஷமா இருந்தா பொறுக்காதே.எங்கிருந்தாலும் நாரதர் வந்துருவான் என்று திட்டினான்.

நீலகிரி:

ஏன் மாமா அதான் நாலு நாள் தொடர்ந்து லீவு வருதே போய் தாமரை அக்காவ பார்த்துட்டு வந்துடலாமா என்று செல்லா கேட்க,நானும் அது தாண்டி நினைச்சுட்டு இருக்கேன்...

கன்சீவா இருக்கா போன்ல பேசுனதோட சரி.இப்போ தான் எனக்கு மனசு நிம்மதியா இருக்குடி என்றான் மருதையன்.

கணவன் சொன்னதை கேட்டவன் காதலி கன்சீவாக இருப்பதை கேள்விப்பட்ட உடனே கேட்ட உடனே அய்யாவால தாங்க முடியல போலவென்று சிரிக்க எட்டிக் குருத்தில் உதைச்சேன் இடுப்பு எலும்பெல்லாம் உடைந்து போய்விடும்டி.

என்னடி பேச்சு இது என்று மருது கொஞ்சம் கோவமா கேட்க ஐயோ மாமா சும்மா கிண்டலுக்கு சொன்னேன் என்றாள்.கிண்டலுக்கு கூட இப்படி ஒரு வார்த்தையை இனிமே என்கிட்டசொல்லாத செல்லா. கதிரோட பொண்டாட்டியாக இருந்தவள் அவன் குழந்தைக்கு அம்மாவாக போறா நீ விளையாட்டா சொல்ற விஷயம் யாரு காதிலாவது விழுந்துச்சு வெச்சுக்கோ அது தாமரையோட வாழ்க்கைக்கு தான் பிரச்சனை.

இனிமே இந்த விஷயத்தில் விளையாடுவது வேண்டாம்டி என்று கண்டிப்போடு சொல்ல சாரி மாமா என்றவள் அப்போ எனக்கு ஒரு உண்மையை சொல்லு மாமா...தாமரை அக்கா மேல இருந்த காதல் உனக்கு போய்விட்டதா என்று கேட்க இதுக்கு நான் உண்மைய சொல்லனுமா? பொய் சொல்லனுமா? எதை நீ எதிர்பார்க்கிற சொல்லுடி என்றான்.

கணவனை முறைத்து பார்த்தவள் உண்மைய சொல்லுங்க அது போதும் என்க,தாமரை மேலிருந்த காதல் எனக்கு சாகுரவரை போகாதுடி.ஆனால் எப்போ அவள் இன்னொருத்தனுக்கு மனைவி ஆனாளோ அப்பவே என் மனசில் அவளை பற்றிய எண்ணத்தை வளரவிடலை. அவளை நினைச்சிட்டு உன்கூட குடும்பம் பண்ணல.அவள் முடிஞ்சி போன அத்தியாயம்.மனசார உன்ன மட்டும்தான் நினைச்சிட்டு உன் கழுத்துல தாலி கட்டுனேன். என் உசுருல நீ மட்டும் தான்டி கலந்துருக்க அதுக்காக நெஞ்சை பொளந்துலாம் உன்கிட்ட காட்ட முடியாது. ஆனால் ஐ லவ் யு டி என்றான்.

கணவனின் மனம் முன்பே உணர்ந்தாலும் அவன் வாயால் தனக்கான உரிமை பற்றி கேட்கும்போது செல்லாவிற்கு கொஞ்சம் கர்வமாக இருந்தது.ஆனாலும் உலகத்திலே எவ்வளவு முரட்டுத்தனமான காதல் சொன்ன ஒரே புருஷன் நீங்கதானே இருப்பீங்க மாமா என்று செல்லா சிரிக்க,என்னடி பண்றது இந்த முயல் குட்டிக்கு ஏத்த முரட்டு பீசா உங்க அத்தை என்ன பெத்து வச்சிருக்காங்களே அது மேனுஃபேக்சரிங் டிஃபெக்ட் என்னால் ஒன்றும் பண்ண முடியாது என்று சொன்னான்.

இன்னும் நீங்க பேசுறது என்னால நம்பவே முடியல மாமா நீங்க தானா என்று இப்படியென ஆச்சரியமாக சொல்லிக் கொண்டிருக்க மனைவியின் அருகில் வந்தவன் அவளை தன்னோடு இறுக்கி அணைத்து அவள் கன்னத்தில் நன்கு பல் பதியும் போல் கடித்து வைக்க அந்த வலியில் ஆ என்று கத்தியவள், அதான் வாரத்துக்கு அஞ்சுநாள் கறி சாப்பிடுறீங்களே பிறகு எதுக்கு என்ன கடிச்சு வச்சீங்க என்று கேட்க...

நீதானடி நம்ப முடியலன்னு சொன்ன அதான் நிரூபித்து காட்டுகிறேன் என்று சொன்னான்.

அதுக்கு இப்படித்தானா என்று கோபப்பட்டு தனது கன்னத்தை தேய்க்க வேற எப்படி பண்ணனும் நீயே சொல்லுடி பண்ணிடலாம் என்று ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டு மனைவியை சொல்ல அய்யய்யோ சாமி என்ன விட்டுருங்கயென்று அவனிடமிருந்து திமிரி விலகியவள் கதவை திறந்து வெளியே ஓடினாள்.

ஹா ஹா என்று சிரித்தவன் நைட்டு இங்க வந்து தானடி ஆகணும் அப்ப பார்த்துகிறேன் என்று சொல்லி சிரித்தான்.

தொடரும்…
 
Active member
Joined
May 9, 2025
Messages
124
Nice that you added the trending in Saree business
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top