• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
565
நீலகிரி:

இரவு 8:00 மணிக்கு எல்லாம் கோயம்புத்தூருக்கு வந்தவன் மனைவியை நேராக அங்கிருந்த பிரபலமான கடைக்கு அழைத்துப் போனவன் அவளுக்காக விதவிதமான துணிகளை வாங்க,செல்லாவோ எவ்வளவோ மறுத்து பார்த்தாள்.

அதை எல்லாம் அவன் சட்டை பண்ணவே இல்லை.இரண்டு பைகள் நிறையாக புடவைகளை வாங்கிக் கொண்டு வெளியே வந்தவன்,அடுத்ததாக நேரம் ஆகிவிட்டதை பார்த்து அங்கிருந்த ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துச் சென்றான்...

காலேஜ் படிக்கும் போது தோழிகளோடு ஹோட்டலுக்கு சென்றிருக்கிறாள் அதன் பிறகு இப்பொழுது தனது கணவனோடு போவதை நினைக்க இது நிஜம் தானா என்று எண்ணம் வராமல் இல்லை.

பின்னர் இருவரும் சாப்பிட்டு முடித்தவர்கள் மீண்டும் நீலகிரிக்கு கிளம்பினர்.சிறிது தூரம் சென்ற பிறகு வண்டியை ஓரமாக நிறுத்தியவன் இன்னொரு பேகில் இருந்த இரண்டு ஜர்க்கினை எடுத்து ஒன்றை அவளிடம் கொடுத்துவிட்டு அவனும் போட்டுக் கொண்டு பின்னர் பயணத்தை தொடர்ந்தனர்.

வீட்டிற்கு வரவே இரவு 11 மணிக்கு மேலானது. வாங்கிய பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் ரூமில் வைத்து விட்டு பிரஷ் ஆகி படுத்து விட்டனர்.

வழமைப்போல் விடியல் ஆரம்பமாக குளித்துவிட்டு தயாராகி கீழே வந்தவள் பூஜை ரூமுக்கு சென்று விளக்கேற்றி விட்டு கணவனுக்காக சமைக்கும் வேலையை தொடங்கினாள்.

அப்பொழுது மயிலா போன் பண்ணி இருவரையும் நல விசாரித்து விட்டு இன்னும் இரண்டு நாட்கள் சென்று வருகிறோம் என்று சொல்ல சரிங்கத்தை என்று சொல்லி வைத்தவள் சமையல் வேலையை பார்க்கலானாள். . .

மேலும் இரண்டு நாட்களும் மனைவியை விட்டு பிரியாமல் அவளோடவே ஈருடல் ஓர் உயிராய் மருது ஒட்டி இருக்க அவ்வப்போது செல்லாதான் இது நிஜமா இல்லை கனவாய் என்று தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

இரவு உணவை சாப்பிட்டு விட்டு அறைக்குள் வந்து படுத்திருக்கும் போது நாளையிலிருந்து வேலைக்கு போறேன் மாமா என்று சொல்ல,சரி டி என்றவன் நானும் கோயம்புத்தூர்ல பழைய மில்லில் நாளைக்கு ஜாயின் பண்ண வேண்டும் என்று சொன்னான்.

ம்ம் என்றவள் லஞ்ச் எடுத்துட்டு போறீங்களா என்று கேட்க அதெல்லாம் வேண்டாம். அங்கே கேண்டில் இருக்குடி சாப்பாடு எல்லாம் நல்லா இருக்கும் பிரச்சனை இல்லை.

ஏற்கனவே அங்க வேலை பார்த்துருக்கேன் இல்லையா என்றவன், ரெண்டு வாரம் டே ஷிப்ட் இரண்டு வாரம் நைட் ஷிப்ட் இப்படி மாறி மாறி தான் வரும், ஓஓஓ இவ்ளோ தூரம் டெய்லி போயிட்டு வருவதா மாமா என்றாள்...

அதற்காக என்ன பண்ண முடியும்?

நான் வேண்டுமானால் கோயம்புத்தூர்லயே பழைய போல ரூம் எடுத்து தங்கிக்கவா என்று கேட்க, அதுவும் நல்லது தான் மாமா...

அடி போடி..என் செல்ல பொண்டாட்டி விட்டுட்டு என்னாலெல்லாம் இனிமே தனியா இருக்க முடியாது புரியுதா எவ்ளோ நேரம் இருந்தாலும் நான் வீட்டுக்கு வந்துருவேன் என்க ஐ லவ் யூ மாமா என்று கணவனை அணைத்துக் கொண்டாள்.

சீமக்கரைக்கு போனவர்களும் வந்துவிட அதேபோல் இருவரும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தனர். மருது காலையில் எட்டு மணிக்கு எல்லாம் வீட்டில் இருந்து கிளம்பி விடுவான் என்பதால் செல்லாவே அதிகாலையில் எழுந்து வந்து கணவனுக்காக தினமும் விதவிதமாக சமைத்து வைப்பாள்...

ஒரு மாதம் கடந்திருக்க இருவரும் அவர்கள் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தனர். அத்தை சம்பளம் என்று வேதா மயிலா இருவரிடமும் சொல்ல, அதிலிருந்து பாதியை முருகாயிக்கு அனுப்பு செல்லா என்று வேதா சொல்லவும் அவளோ ஆச்சரியமாக பார்தாள்.

மருமகளின் முகத்தைப் பார்த்த மயிலாகவும் வேதாமா சரியாக சொல்கிறாங்க.ஒரு பிள்ளையை பெற்று வளர்த்து அதுக்கு செலவு பண்ணி படிக்க வைக்கிறது சாதாரண விஷயம் அல்ல முருகாயியும் அண்ணனும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்கனு எங்களுக்கு தெரியும்மா என்றார்.

இனி இரண்டு வாரம் முழுவதும் நைட் ஷிப்ட் என்பதால் காலையில் செல்லாவை பள்ளிக்குக் கொண்டு போய் விடுவதாகும் மாலையில் அழைத்து வருவதாகவும் முதல் நாள் இரவே செல்லாவிடம் சொல்ல எதுக்கு மாமா...

நடந்து போற தூரம் தானே நான் போய்க்கிறேன் என்று சொல்ல இருக்கட்டும்டி.ஏண்டி நான் என்ன உன்னை கையிலே தூக்கிட்டு போறேன்னு சொல்றேன் என்றபடி மனைவியை கைகளில் எழுதியவன் 45 50 கிலோ தான் இருக்கிற.

இதெல்லாம் வெய்டா என்று மனைவியை தலைக்கு மேல் தூக்கி தண்டால் எடுப்பது போல் சொல்ல அது சரி என்று சிரித்தாள்....

சமையல் வேலையை முடித்துவிட்டு செல்லாவும் ஸ்கூலிற்கு கிளம்பி கீழே வர மருதுவும் பைக்கில் காத்திருக்க ஒருவித கூச்சத்தோடு பின்னாடி போய் செல்லா உட்கார வண்டியை அங்கிருந்து ஸ்கூலை நோக்கி ஓட்டி போக பிள்ளைளோடு நடந்து போய்க் கொண்டிருந்த பவிக்கு செல்லா வண்டியில் போவதை பார்த்து எரிச்சலாக வந்தது....

சீமக்கரை:

தாமரை என்றவாறு வேலு வீட்டிற்கு வர அண்ணே உள்ளதான் இருக்கிறேன் என்றாள். பாப்பா சாப்பாடு ஆயிடுச்சா டா??

ம்ம் ணா...ரெடியாக தான் இருக்கு எடுத்துட்டு போக வேண்டியதுதான் என்க,இரண்டு பைகளில் அங்கு தயாராக இருந்த சாப்பாடுகளை எடுத்துக் கொண்டு மீண்டும் வயலுக்கு சென்றான்.

காலையிலிருந்து தறி ரூமிற்கு போகாததால் இப்பொழுது போகலாமா என்று நினைக்கும் போது ஏதோ அவளுக்கு சோடையாக இருப்பது போல் தோண,அங்கிருந்த திண்ணையிலே தலகாணி எடுத்துப் போட்டவள் டிவி ஆன் பண்ணிவிட்டு தரையிலே படுத்து விட்டாள்.

வழக்கமாய் அவள் எப்போதும் பாடல் தான் விரும்பி கேட்பாள் என்பதால் அந்த சேனலை தேடி வைத்தவள் பார்த்து கொண்டே அப்படியே தூங்கிவிட்டாள்.

நேரமும் கடந்து செல்ல தோட்டத்தில் இருக்கும் பசுக்கள் கத்தும் சத்தத்தில் எழுந்தவள் மணியை பார்க்க மாலை 4.30 என்று காட்டியது.

எழுந்து போய் தோட்டத்தில் பார்க்க அங்கே பசு தண்ணீர் குடிக்கும் குண்டானோ கீழே சாய்ந்து கிடப்பது தெரிந்தது. அதற்கு தண்ணீர் தாகம் என்பதை புரிந்தவள் வாலியில் தண்ணீரை மொண்டு போய் அந்த குண்டானை நிமிர்த்தி அதில் ஊற்ற பசுவும் தனது தாகத்தை தணித்துக் கொண்டது.

பின்னர் வீட்டிற்கு வந்தவள் பிரஷ் ஆகிவிட்டு வயலுக்கு போனவர்களுக்காக காத்திருக்க அவர்களும் வந்து சேர்ந்தனர்.

கதிரோ தனது மனைவி முகத்தைப் பார்த்தவன் ஏன் சோகமா இருக்கிறாள் வழக்கம்போல் இல்லையே என்று யோசனையோடு குளித்து வெளியே வர தாமரையும் டீயோடு ரூமிற்குள் வந்தாள்.

தலையை துவட்டிக் கொண்டே போய் கதவை தாழிட்டவன் என்ன ஆச்சுடி ஒரு மாதிரியா இருக்க என்று கேட்க இல்லையே நல்லா தானே இருக்கிறேன் என்றாள்.

அப்படியா...பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே உடம்பு ஏதாவது சரியில்லையா என்று அவள் கன்னம் நெற்றி கழுத்து என தொட்டு பார்த்தவன் அப்படியே இடுப்பில் கைய வைக்க கணவனை முறைத்து பார்த்தாள்.

எல்லா இடத்திலும் சூடா இருக்கான்னு செக் பண்ணனும் இல்லையாடி என்றபடி மனைவியை தன்னோடு இறுக்கி அணைத்தவன் மதியம் சாப்பிட்டியா என்று கேட்க அப்பொழுது தான் அவள் சாப்பிடாத விஷயம் ஞாபகத்துக்கு வந்தது.

அச்சச்சோ நான் தூங்கிட்டேன் என்க,அடியே அறிவு கெட்டவளே சாப்பிட்டு தூங்க வேண்டியது தானடி என்ன அப்படி உனக்கு ஞாபக மறதி என்று இடுப்பிலே கிள்ளி வைக்க அய்யோஓஓ மாமா கையா இது கத்திரிக்கோலா என்று கத்தினாள்.

நேரத்துக்கு ஏற்ற போல என்றவன் மனைவியை இரண்டு கைகளிலும் தூக்கி சுத்த ஐயோ தலை சுத்துற போல இருக்கு மாமா இறக்கி விடு என்று அவன் கழுத்தை கட்டிக்கொண்டு சொல்ல மனைவி பரிசமோ கணவனுக்கு கிளர்ச்சியூட்ட... கண்ட்ரோல்டா கதிர் கண்ட்ரோல் இரவு பார்த்துக் கொள்ளலாம் என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டான்...

ஐயோ விடுங்க டீ எடுத்துட்டு வந்தா நீங்க என்ன என்ன வேலை பண்றீங்க என்று தாமரை சினுங்க ஏண்டி இப்போ என்னடி பண்ணிட்டேன்??

இப்படி கடிச்சு வச்சேனா என்று அவள் கன்னத்தை கடித்தான் இப்படி கிள்ளினேனா என்று அவள் இடுப்பில் கிள்ளினான் இல்லை இப்படி முத்தம் கொடுத்தேனா என்று அவள் உதட்டில் முத்தம் கொடுக்க தாமரையோ கால்களை உதறி இறங்க முயன்றாள்.

சூழ்நிலை உணர்ந்தவன் பின்னர் கையில் இருந்து மனைவியை கீழே இறக்கி விட்டு அவள் புடவையை சரி பண்ணி விட இதற்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்றாள்...

ஏன்டி வேற எதுக்கு குறைச்சல் சொல்லு பாக்கலாம்??

அடிக்கடி இந்த வார்த்தையை சொல்றியே உன் புருஷன் ஆண்மகன் இல்லையா என்று கேட்க யோவ் நான் என்ன பேசுறேன் நீ என்ன பேசுற என்று தாமரை முறைக்க...

எதேஏஏ யோவாஆஆ???என்னடி இப்படி பேசுற வாங்க போங்க ஆரம்பித்து அப்புறம் வா போ வந்துச்சு அடுத்தது மாமான்னு இருந்துச்சு இப்ப யோவ்ள வந்து நிக்குது அடுத்தது டா தான் போல என்க...
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
565
அதை சரியா சொல்ல முடியாது எப்போ எப்படி வேணாலும் கூப்பிடுவேன் அது என்னுடைய இஷ்டம் என்றாள்.சரிடி செல்லம் நீ எப்படி வேணாலும் கூப்பிடு உனக்கு இல்லாத உரிமையா??

என்ன எல்லாருக்கும் முன்னாடி கொஞ்சம் பார்த்து கூப்பிடு உன் புருஷனுக்கு ஒரு மரியாதை இருக்கு அது காத்துல பறந்துடும் என்கவும் அதனை யோசித்து முடிவு பண்ணுவேன் என்றாள்.

டீ வேற ஆறி போய்டுச்சே.இதை கீழே போன என்னை பத்தி என்ன நினைப்பாங்க???

ஏய் ஒன்னும் நினைக்க மாட்டாங்க எல்லாம் நம்மள வயச தாண்டி தானே வந்திருப்பாங்க...ம்கும் உங்களுக்கு தான் கொஞ்சம் கூட கூறே இல்லையே..

ஆமாடி உனக்கு அஞ்சு கிலோ அறிவு வளர்ந்து போய் இருக்குன்னு ஆஸ்கார் அவார்டு கொடுக்கலான்னு அமெரிக்காவில் பேசிட்டு இருந்தாங்க நானும் காதில் வாங்கினேன் என்று கதிர் கிண்டல் பண்ண தாமரையோ தனது கணவனை அதிசயமாக பார்த்தாள்.

மனைவியின் பார்வையை கண்டு என்னடி என்று புருவத்தை தூக்கி கேட்க நீங்க இப்படி எல்லாம் பேசுவியா மாமா என்க...ஏண்டி நான் ஊமையா இல்லை மௌன விரதமா இல்ல வாயில புண்ணா இல்ல தொண்டையில் கட்டியா இல்ல வாந்தி வருதா என்று அவன் அடுக்கிக்கொண்டே போக ஐயோ நிறுத்துங்க நிறுத்துங்க நிறுத்துங்க...

நீங்க நல்லாவே பேசுறீங்க பத்து பட்டிமன்றத்தில் பேசி பதக்கம் வாங்கி இருக்கீங்கன்னு பத்து ஊர்ல சொன்னாங்க என்று தாமரையும் சொல்லிக்காட்ட நீயும் நல்லா தான் டி பேசுற...

இந்த ஜாடிக்கேத்த மூடி நீதான்டி என்று திரும்ப மனைவியை இறுக்கமாக அணைத்தவன் லவ் யூ டி என்கவும் என்னமோ ஆயிடுச்சு...வர வர ஒரே ரொமான்ஸ் மூடுல தான் இருக்கீங்க என்றாள்.

என் பொண்டாட்டி கிட்ட நான் ரொமான்ஸ் பண்ணாபல் வேற யாருகிட்ட பண்ண என்றவாறு மனைவியை பின் பக்கமாய் அணைத்தவாறு அவள் தோள் பட்டையில் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க, அதை தேவி காவினு ஒருத்தி சுத்திட்டு திரிவாளே அவ கிட்ட போக வேண்டியது தானே என்று தாமரை கோபமாக கேட்க ஏண்டி இப்ப அந்த புள்ளைய பத்தி பேசுற?

அதே வீணா மனசுல ஆசையை வளர்த்துக்கிட்டு கஷ்டப்படுது சம்பந்தம் இல்லாம நம்மளோட வாழ்க்கையில எதுக்கு அந்த புள்ளைய பத்தி இழுக்குற என்று கேட்டவுடன் தாமரைக்கு தனது தவறு புரிந்து சாரி மாமா என்றாள்.

சாரி எல்லாம் இப்படி கேட்க கூடாது இப்படி கேக்கணும் என்று மனைவியின் கன்னத்தை செல்ல கடித்துக் கொண்டே சொல்ல, அப்படியா இப்ப பாருயா என்று கணவனின் கன்னத்தில் பல் பதிய நன்கு கடித்து வைக்க ஆஆஆஆ ராட்சசி ஏன் டி இப்படி என்று...

அம்மா தாயே தெரியாம சொல்லிட்டேன் டி நீ போ என்று மனைவியின் தோளை பிடித்து திருப்பிவிட அந்த பயம் இருக்கட்டும் என்று சிரித்துக் கொண்டே அங்கிருந்து கீழே சென்றாள்.

இரவு உணவை ராதாவும் சீதாவும் கிச்சனில் செய்து கொண்டிருக்க அங்கு சென்ற தாமரைக்கு ஒரு மாதிரியாக இருந்தது.ஆனால் மருமகளின் முகம் வாட விடாமல் தாமரை அந்த சட்னி அரைச்சிடுமா என்று ராதா சொல்ல சரிங்கத்தை என்றவளும் அவர்களுடன் சேர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்தாள்.

அப்பொழுது சாம்பார் கொதித்துக் கொண்டிருக்க அந்த வாசனையில் மீண்டும் தாமரைக்கு வயிற்றை பிரட்டிக் கொண்டு வந்தது.

அட என்னடா இது காலையிலும் இப்படித்தான் இருந்துச்சு இப்பவும் இப்படி இருக்கே என்று தனக்கு மனைவியாள் சட்னி அரைத்து வேற பாத்திரத்தில் மாற்றி விட்டு அங்கே காய்கறி கூடையில் இருந்து இஞ்சி துண்டை கொஞ்சம் உடைத்து வாயில் போட்டுக் கொண்டாள்.

அம்மா பசிக்குது என்றவாறு நிலவன் வாசலில் வந்து நிற்க இதோ ஆயிடுச்சி நிலவா என்று தாமரை சொல்லவும் சரிங்கண்ணி என்றவன் எனக்கு ஒரு ஆம்லெட் போடுங்கண்ணி என்க சரி அப்பு என்றவள் அதற்காக வெங்காயம் பச்சைமிளகாயை பொடியாக வெட்டி ஆம்லெட்டிற்காக முட்டையோடு கலக்கி ஓரமாக வைத்தாள்.

அம்மா சாப்பிடலாமா என்று இப்பொழுது வளவன் குரல் கொடுக்க அப்பாவி வர சொல்லிடு என்று சீதா சொல்ல சரிமா என்று அவன் போகும் இவர்கள் இருவரும் சமைத்தது கொண்டு போய் அங்கே முற்றத்தில் தரையில் வைக்க எல்லாரும் வந்து வட்டமாக உட்கார்ந்து கொண்டனர்.

தாமரை எல்லாருக்கும் சூடாக ஆம்லெட் போட்டு கொடுக்க செல்வி வாங்கிட்டு போய் எல்லாரும் தட்டில் வைத்துவிட்டு அவளும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

வழக்கமா இரவு நேரத்தில் அனைவரும் தரையில் உட்கார்ந்து கொண்டு டிவியை பார்த்தவாறு சாப்பிடுவது அந்த வீட்டின் வழக்கமாக இருந்தது. ..

அவர்களெல்லாம் சாப்பிட்டு முடித்த பின்னர் இவர்கள் மூவரும் உட்கார இட்லியை பிய்த்து சாம்பாரில் தொட்டு வாயில் வைத்தவளுக்கு மீண்டும் வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வாமிட் வர தட்டை கீழே வைத்துவிட்டு வாயை மூடிக்கொண்டு வாஷ்பேஷனருகில் சென்றவற் மீண்டும் வாந்தி எடுத்தாள்.

என்ன ஆச்சு தாமரை என்றவாறே தட்டை கீழே வைத்து விட்டது மருமகளிடம் வந்து இருவரும் கேட்க,தெரியலைங்கத்தை.காலையிலும் இப்படித்தான் இருந்துச்சு இப்பயும் இப்படித்தான் இருக்கு என்று சோடையாக சொல்ல...

சின்னப்பு சின்னப்பு என்க ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருந்த நிலவனோ தனது அம்மாவின் சத்தம் கேட்டு வேகமாக கிச்சனிற்கு வந்தவனிடம் தாமரை வாமிட் பண்ணி அதை சொல்ல என்ன ஆச்சுங்கண்ணி என்றவன் தாமரையின் கையை பிடித்து பார்த்து அப்படி போடு. ..

ஹேய்.....ரெண்டு பேரும் பாட்டியாகிட்டீங்கம்மா என்று சொல்லி குதித்தான்...

நிலவன் சொன்னதைக் கேட்டு தாமரையோடு சீதா ராதாவும் சந்தோஷத்தில் கண்கலங்கினர்.

வாழ்த்துக்கள் அண்ணி என்று சொல்லியவன் அங்கிருந்து வராண்டாவிற்கு வந்தவன் அப்பா ஒரு சந்தோஷமான விஷயம் நீங்க தாத்தா ஆகிட்டீங்க...அண்ணா நீ அப்பாவாகிட்ட என்று கதிரை போய் கட்டிபிடிக்க என்னடா சொல்ற என்று அவர்களும் சந்தோஷத்தில் திகைத்து போயினர்.

ஆமா அண்ணி கன்சீவாக இருக்கிறார்கள் என்கவும் வள்ளி அப்பாயி எழுந்து தனது பேத்தியிடம் சென்றவர் என் குலத்தை தழைக்க வந்த மகராசி நல்லா ரெட்ட புள்ளையா பெத்து இந்த சிறிக்கி மடியில போடு என்று பேத்தியை கிள்ளி முத்தம் கொடுத்தார்.

வேகமாய் வந்தவன் மனைவியை பார்த்து வாசலிலே நின்று கொண்டிருக்க அவளுக்கோ எல்லாரையும் பார்க்க வெட்கமாக இருந்தது.

இருவரின் நிலையை உணர்ந்து மற்றவர்களும் அங்கிருந்து விலகி செல்ல நாலே எட்டில் வந்து மனைவியை இழுத்து இறுக்கி அணைத்துக் கொண்டான்.

சில நிமிடங்கள் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நம்ப ரூமிற்கு போகலாமா என்று கதிர் கேட்க எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்தாள்.

சரி வா என்று அவளோடு மேலே வந்தவன் கதவை தாழ்ப்பாள் போட்டு மனைவியை கையில் தூக்கியவன் எண்ணற்ற முத்தங்களை அவளுக்கு பரிசாக கொடுத்துவிட்டு அவளோடு போய் அங்கிருந்து சேரியில் உட்கார்ந்து அமைதியாக தன் நெஞ்சோடு அவளை அணைத்துக் கொண்டு கண்ணை மூட அவன் கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்து அவள் முகத்தில் விழுந்தது.

அந்த நீரின் ஸ்பரிசத்தில் நிமிர்ந்து பார்க்க கணவனின் அழுகை புரிய என்னாச்சு மாமா ஏன் உனக்கு பிடிக்கலையா என்று பாவமாக கேட்க அடி போடி கூறுகெட்டவளே...

இது சந்தோஷத்துல வரும் கண்ணீர்டி நமக்கு வாரிசு வரப்போகுதடி என் செல்ல பொண்டாட்டி...நான் தான் வந்தவுடனே கேட்டேனேடி என்ன ஆள் ஒரு மாதிரியா இருக்கனு??

எல்லாரும் சொல்ற போல முன்ன பின்ன செத்தா தான் சுடுகாடு தெரியும் போல,இதுக்கு முன்ன பத்து பெத்து அதோட அறிகுறி எல்லாம் எப்படி இருக்குன்னு தெரியும் பாருங்களேயென்று முறைத்தாள்.

தன் மனைவி சொன்னதைக் கேட்டவன் பத்து புள்ள தானே பெத்துட்டா போகுது. மாமா எதுக்கு இருக்கேன்டி என்று தனது மீசையை முறுக்கிக் கொண்டு கதிர் சொல்ல போயா என்று கணவனின் நெஞ்சில் வெட்கத்தோடு சாய்ந்து கொண்டாள்.

சரி நாளைக்கு காலையிலேயே போயிட்டு டாக்டர் பாத்துட்டு வந்துடலாம?

சரி மாமா என்றவளிடம் கன்ஃபார்ம் பண்ணிட்டு அதுக்கப்புறம் அங்க அத்தைக்கு சொல்றியா என்க,அப்ப நிலவன் டாக்டர் இல்லையா மாமா என்று கேட்க அடியேய் ஏண்டி இப்படி என்று சிரித்தவன்,ஏதோ டெஸ்ட் எல்லாம் பண்ணுவாங்களே அத வச்சு சொல்றேன் டி என்றான்.

நல்லா சமாளிக்கிறாயா என்று சிரித்தவளை பார்த்தவன் உனக்கு என்ன வேணும் கேளடி மாமா வாங்கி தரேன் என்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

மனைவியை கீழே இறக்கி விட்டவன் போய் கதவை திற என்க,தாமரையும் போய் கதவை திறக்க அங்கே சீதாவோ ஒரு தட்டில் இரண்டு வாழைப்பழமும் ஒரு நீட்டு டம்ளரில் பாலோடு நின்றவர் இந்தா தாமரை...எதுவுமே சாப்பிடாம வந்துட்ட.

இது குடிச்சிட்டு வாழைப்பழத்தை சாப்பிட்டு படுமா என்று கொடுத்துவிட்டு சென்றார். தாமரையும் பழத்தை சாப்பிட்டு பால் குடிக்காமல் மாமா இதை நீயே குடிச்சிடாமென்றாள் ஏய் ஒழுங்கு மரியாதையா குடி டி என்று அவளை மிரட்டி குடிக்க வைத்தவன் சரி படுக்கலாம் என்க...

இருடி...இப்பதானே சாப்பிட்டுருக்க கொஞ்ச நேரம் உட்காரு என்றான்.ம்ம் என்றவள் சாயந்திரம் காய்ந்த துணிகளை எடுத்துட்டு வந்து அங்கு சேரில் போட்டு இருப்பதை பார்த்து அதை எல்லாம் மடித்து வைத்தாள்.

கட்டில் மேல் உட்கார்ந்து இருந்தவன் அங்கே அழகு பதுமையாய் நிற்கும் மனைவியை காதல் பொங்க பார்த்து ரசித்துக் கொண்டிருக்க கணவனின் பார்வையோ குறுகுறுப்பை உண்டாக்கியது என்ன இப்படி பாக்குறீங்க என்று கேட்க என் பொண்டாட்டியை நான் பார்க்கிறேன் டி என்று சிரித்தான்.

பின்னர் லைட்டை ஆஃப் பண்ணிட்டு வந்து கட்டிலில் படுக்க மனைவியை தனது கையணைவில் படுக்க வைத்தவன் அவள் வயிற்றில் மேல் கையை வைத்து எத்தனை குட்டி பெத்துக்கலாமென்றான்...

எதேஏஏஏஏ அதுக்குள்ள எத்தனை குட்டியா என அவள் அதிர,ஆமாண்டி எப்படியும் உனக்கு ஒன்னு எனக்கு ஒன்னு. அவங்க ரெண்டு பேருக்கு ரெண்டு ரெண்டு ஒரு ஆறு புள்ள கணக்கு பண்ணலாமே என்க...

ஆறு பிள்ளையாக அட போயா...ஒரு புள்ள தான் என்றவளுக்கு செல்லாதடி செல்லாது ஒன்னுக்கு ஒன்னு துணைக்கு இருக்கணும் புரியுதா.என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது பையனா இருந்தா அவனுக்கு துணைக்கு ரெண்டு பொண்ணா இருந்தா அவங்களுக்கு துணைக்கு 2 சப்போஸ் மூணு பொண்ணு பொறந்தது நாலாவது ஒரு பையன் பெத்துக்கணும் என்கவும் அடப்பாவி மாமா என்று கண்களை விரித்தாள்.

அடியேய் மக்கு கடைசி காலம் வரைக்கும் நம்ம அவங்க கூடவே வரப்போவது கிடையாது.பொண்ணும் பையனும் அவங்களோட மனக்கஷ்டத்தை சந்தோஷத்தை சொல்றதுக்கு கூட பிறந்த உடன்பிறப்புன்னு ஒன்னு வேணும்...

தாமரையோ ஆமாம் அதுவும் சரிதான் என்றாள்.அதுக்கு தான் சொல்றேன் பஸ்ட் ரெண்டு ரெட்ட புள்ள பார்த்துக்கலாம் அதுக்கப்புறம் அவங்களுக்கு ரெண்டு பேருக்கு துணைக்காக ரெண்டு ஓக்வ் என்பவனிடம், இது என்ன வயிரா இல்ல மிஷினா என்று முறைத்தவளை உன்னை ஹெல்த்தியாக்க வேண்டியது மாமனோட வேலை டி என்று சிரித்தான்.

இரவு விளக்கின் வெளிச்சத்தில் மனைவியின் முகம் ஒருவித அழகை கொடுப்பதை ரசித்தவன் மேலும் சிறிது நேரம் மனைவியை கலாட்டா பண்ணிக்கொண்டு சரி தூங்கு தூங்கு காலையில ஹாஸ்பிடல் போகலாம் என்று எட்டி நைட் லேம்பையும் அணைத்து அவளை இறுக்கி அணைத்தபடியே உறங்க தொடங்கினான்.

தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top